Advertisement

 

Episode 04

 

மேசையருகே இருந்த தொலைபேசி சிணுங்கும் சத்தம் கேட்டு கையில் இருந்த உணவை வைத்து விட்டு,யாா்? என்பது போல பாா்க்க,வினோதினி எடுத்திருந்தாள்.     

“ச்சே….. நிம்மதியாக ஒரு கவளம் உணவைக் கூட உண்ண முடியவில்லையே’ என நினைத்துக் கொண்டு, போனை ஆன்சா் பண்ணினாள் தியா.

 

“ஹலோ வினோதினி நான் கன்ரீன்ல சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்…..” என்று இழுத்தவளை…. தடுத்த  வினோதினி “சீவ்ப் எஞ்ஜினியர் வந்திட்டாா் மீட்டிங் நடக்கப்போகுதாம் சீக்கிரமாக வா” என்றாள்.ஹஸ்கி வய்சில்.

 

“என்னடி இப்ப தானே வந்தேன். அதுக்குள்ளே கூப்பிடுகிறாயே…… சரி வருகிறேன்.” என்று கூறி போனை கட் பண்ணினாள் தியா.   

 

உணவே உண்ண முடியாது நெஞ்சுக்குள்ளே  அடைப்பது போல ஒரு இறுக்கம் தோன்ற தட்டை எடுத்துக் கொண்டு கழிவு உணவுகளை கொட்டும் இடத்தில் கொட்டி விட்டு,கையையும் கழுவிக் கொண்டு, ஒரு மிடறு தண்ணீரை எடுத்து அருந்தியவளின் தொண்டைக்குள் அதுவும் செல்ல சிரமப்பட்டது. “என்னடா இது இன்று எனக்கு சாப்பாடும்,தண்ணீரும் கூட சதி செய்கின்றதே ….என நினைத்துக் கொண்டு மேலே மாடி நோக்கி விரைவாகச் சென்றாள்.

 

கதவருகே செல்லவும் உள்ளே இருந்த அலுவலக வேலையாள் ஓடி வந்து,           “மேடம், பெரிய சேர் இன்று டியூட்டியில ஜொயின் பண்ணுகிறாா்.அதனால் இப்போது திடீரென மீட்டிங் ஒன்று அரேஞ் பண்ணியதால் மீட்டிங் றூம்ல மீட்டிங நடக்கிறது.நீஙக லேட், சீக்கிரமாக போய் ஜொயின் பண்ணுங்க”என்று விட்டு நகர்ந்தான்.

 

‘கடவுளே ..! பாா்த்தியா ?

இவ்வளவு நேரம் வேலையில் இருந்துவிட்டு இப்ப கொஞ்சம் முன்னாடி தான் சாப்பிடப் போனேன் அது உனக்கும் பொறுக்கவில்லை.அந்த வீணாய் போன  சீவ்ப் எஞ்ஜினியருக்கும் பொறுக்கவில்லையோ….?’ என மனதிற்குள் திட்டித் தீர்த்துக் கொண்டு,என் நேரமே சரியில்லை போல என நினைத்தவள் பலமாய் சிரித்து விட்டு,கப்பன்று தன் வாயை மூடிக் கொண்டு,அக்கம் பக்கம் பாா்த்வள் யாரும் இல்லாதது கண்டு அமைதியானாள். யாரும் இருந்திருந்தால் மண்டைப் பிழை  என நினைத்திருப்பாா்களோ….?

அவள் சிறு வயதிலிந்தே விதி வேலை செய்வதை நிறுத்தி விட்டதே…? பிறகு விதியை நொந்து என்ன பலன்.

 

புதுசா வந்திருக்கிறவன் வேற எப்படிப்பட்வனோ தெரியவில்லையே ? லேட் வேற முதல் நாளே எல்லாருக்கும் முன்னாடி திட்டு வாங்குகிற யோகம் எனக்குத்தான் போல…. என கைக்கெட்டிய தூரம் கண்ட கண்ட கற்பனைகளை விரித்து வைத்துக் கொண்டு.. மீட்டிங் நடக்கும் அறைக்கு முன் நின்று கதவை தட்ட கை தூக்கு முன்பே கதவு தானாக திறந்தது. திறந்தவன் அகில்.

 

“என்னடா அகில் மீட்டிங் முடிந்து விட்டதா”என்றாள்.

 

“ஏய் தியா உள்ளே வா. அங்கே பாா் தீடீரென்று சீவ்ப் சேருக்கு போன் வந்ததால் ஜன்னல் பக்கமாய் திரும்பி நின்று போன் கதைக்கிறாா்.நீ வந்ததை கண்ணாடி தடுப்பு வழியாய் பார்த்து விட்டுத்தான் கதவை திறந்தேன். சீக்கிரம்…..சீக்கிரம் …. உள்ளே வா” என்றான்.

 

“தாங்ஸ் என்று முனுமுனுத்துக் கொண்டு பட்டென்று அகிலின் பின்னால் இருந்த கதிைரையை இழுத்துப் போட்டுக்  கொண்டு அமர்ந்தவளின் கையில் இருந்த பேனா தவறி கீழே விழுந்தது.அதை எடுப்பதற்கு கீழேகுனிந்தவள்பேனாவைக் காணாது தேட அவள் கதிரைக் காலின் பின்பக்கமாய் கிடந்தது.அகில் இருந்த கதிரைக்குப் பின்னால் அவள் இருந்து அவளிற்கு சாதகமாயிற்று.ஏனெனில் அகிலின் விசாலமான தோளிற்கு பின்னால் அவள் பேனாவை தேடியதை முன்னால் நின்று பாா்ப்பவர்களிற்கு தொிய வாய்ப்புக்கள் குறைவு.அதனால் அவள் பேனையை எட்டி எட்டி எடுக்க முயற்சி செய்து கொண்டேயிருந்தாள்.

“ஓகே பரண்ட்ஸ் போன் வந்ததால் கொஞ்சம் டிஸ்ரப் ஆகிவிட்டது. எனிவே நான் இங்கே தான் வேக் பண்ணப் போகின்றேன்.இங்கே இருக்கன்ற பல பேருக்கு என்னை தெரியும்.சில பேர் புதுசா ஜொயின் பண்ணியிருக்கீங்க….அவங்களுக்கு நான் என்னை அறிமுகப் படுத்திக்கனும் அது முறையும் கூட என்றவன் பின் தன்னை இன்ரடியூஸ் பண்ணத் தொடங்கினான்.ஐ அம் செந்தூரன். என்னோட பேர்த் பிளேஸ் யாழ்ப்பாணம் என்றாலும் இப்ப நான் ஸ்ரே பண்ணியிருக்கிறது கொழும்பில தான் என்றான்.வேலையில் என்ன டவுட் என்றாலும் தயங்காமல் என்னைக் கேளுங்கள்.அதே போல் ஏதாவது விளக்கம் தேவைப் பட்டால் நான் உங்களை கேட்பேன் என்றவன் நான் ஒன்றும் ஸ்ரிக் ஆபிசர் இல்லை.அதுக்காக உங்களை லூஸ் பண்ணி விடவும் முடியாது.ஆபிஸ் றூள்ஸ் அன்ட் ரெகுலேசனுக்குள் நீங்க அடங்கனும்,அதை நானும் போலோ பண்ணணும் என்று நினைக்கின்றேன்.” என்றான்.

 

“ஓகே சாா் என்றனர் அணைவரும் கோரஸ்சாக.” அப்போது தான் தியா கீழே இருந்த பேனையை எடுத்துக் கொண்டு நிமிர்ந்து இருந்தாள்.

 

ஓகே பிரண்ட்ஸ் அவ்வளவு தான்.என்னைப் பற்றி நிறைய சொல்லி உங்களை போர் அடிக்க வைக்க எனக்கு விருப்பமில்லை.இனிமேல் இங்கே தான் இருக்கப் போகின்றேன்.மெதுமெதுவா உங்களைப் பற்றி தெரிஞ்சுக்கிறேன் என்றவன் எல்லோரும் மீட்டிங்குக்கு வந்ததற்கு நன்றி.இப்போது நீங்க வெளியில் போய் வேலையை தொடங்கலாம் என்று கூறி ஒரு மென்னகையை உதிர்த்தவன் அவ்விடத்தை விட்டு வெளியேறி தன் காபினை நோக்கிச் சென்றான்.

 

‘நல்ல வேளை இவன் நீட்டி முழக்கி ஒரு பிரசங்கத்தை வைச்சு கழுத்தை அறுக்கேல்லை.ஆயிரம் வாா்த்தையில் ஒரு வாா்த்தை நல்ல வாா்ததையை சொல்லிவிட்டு கிளம்பிட்டான். மற்றவர்கள் மனதை புரிந்து நடக்கிறான் போல….. என நினைத்தவளுக்கு, அப்போது தான் உறுத்தியது.அவனது முகத்தை பாா்க்கவில்லை’ என்பது.

 

‘சரி சரி இந்த ஆபிசில தான் இருக்கப் போகின்றான்.இவன்ர ரியூப் லைட் மூஞ்சையை பாா்க்காமலா இருக்கப் போகிறோமா…’என நினைத்த தியாவை வினோவும்,சுஜாவும் நினைவுக்கு கொண்டு வந்தனர்.

 

“ஹேய் தியா நம்ம சீவ்ப் எஞ்ஜினியர் செம இல்லடி.” என்றார்கள்

 

“ம்…. கடுப்பை கிழப்பாதீங்கடி அவன் மூஞ்சையையும் பாா்க்கவில்லை…. முகரையையும் பாா்க்கவில்லை.”என்றாள்.

 

“ஓ…. சோ் முகத்தை பாா்க்கவில்லை என்று தான் கடுப்பாகிறியா தியா.என்றனர்.” நண்பிகள்.

ஆனாலும் அவன் செம ஹாண்ட்சம்டி.அவரைப் போல இப்படி ஒரு ஆளை நான் பார்த்ததேயில்லைடி.”என்று அவளது டென்சனை இன்னும் அதிகரித்தனர்.

 

அவளும் மண்டைக்கேறிய கோபத்தில் “சரி தான் போங்கடி நீஙகளும் உங்களது ஹாண்ட்சம்மும்,கத்தரிக்காயும்.என்றவள் எனக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்கிறது.முதல்ல புரொஜட் வேலை இருக்கிறது.பிறகு இரண்டு,மூன்று ரோயிங் வேக் இருக்கிறது.நான் போகின்றேன்.நீங்கள் வருகிறது என்றால் வாருங்கள்.இல்லை என்றால் சீவ்ப் எஞ்ஜினியர் றூமுக்கு முன்னால் போய் நின்று கொண்டு ஜொள்ளு விட்டு அவர் றூமை கிளீன் பண்ணி கொடுத்திட்டு வாங்கோ”என்ற தியா கையில் இருந்ந தனது காண்ட் பாக்கை கொழுவியவாறு தனது இருப்பிடத்தை நோக்கி நடந்தாள்.

 

அவர்களது கேபினுக்குள் சென்றவள் அங்கு அகில் தீவிரமாக இருந்து ஒரு ரோயிங் வேக் ஒன்றை செய்து கொண்டிருப்பதைப் பாா்த்து வியந்தாள். “என்னடா கொடுமையிது ? இன்றைக்கு பார்த்து அகில் நல்ல பிள்ளையாய்,சின்சியராய் வேலை செய்யுறானே.”என நினைத்துக் கொண்டு தனது ஆசனத்தில் இருந்து அவளது சிஸ்ரத்தை உயிர்ப்பித்து தனது வேலையை ஆரம்பித்தவள் அவளது தலை,கழுத்து பின் பக்கம் எல்லாம் வியர்த்து இருக்க எழுந்து ஏசியைப் போட்டவள் அகிலை திரும்பிப் பார்க்க அவன் வேலையிலே சிந்தை மறந்தருந்தான்.

‘நானும் பாா்ககிறேன் சீவ்ப் வந்ததில் இருந்து இவன் நடவடிக்கையே சரியல்லை.சிஸ்ரத்திற்கு முன்னால் பத்து நிமடம் கூட இருக்க கடுக்கும் இவனுக்கு இன்று இரண்டு மணித்தியாலமாய் இருகக்கின்றானே….?என வியந்தவள் ஒரு வேளை இவன் இருக்கிற கதிரையில் பெவிக்கோல் ஏதுவும் பூசி இவன் அதுக்கு மேலே இருந்திட்டான் போல ? ச்சே… அப்படி எதுவும் என்றால் இவன் வெட்கத்தை விட்டுவிட்டு கெல்ப்  கேட்டிருப்பானே…! இவன் என்னடா என்றால் சிஸ்ரத்தை வெறித்து பாா்த்து தீயாய் வேலை செய்யுறானே..இண்டைக்கு மழை,காற்று,புயல்,சூறாவளி எல்லாம் ஒன்றாய் வரப் போகிறது.’ என நினைத்தவள் தனது வேலையில் ஆழ்ந்து போனாள்.வேலையில் ஆழ்ந்திருந்தவளை அவர்களது கேபின் கதவு தள்ளி திறக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தாள்.அப்போது தான் வினோவும்,சுஜாவும் உள்ளே வந்ததைக் கண்டு “ஏய் இவ்வளவு நேரமா இரண்டு பேரும்  எங்கே போய் வருகிறீா்கள்? என தியா கேட்டாள்.

 

அதற்கு அவர்கள் “நம்ம செந்தூா் சேரை போலோ பண்ணி போயிட்டு வருகின்றோம்.அதாவது உன் பாஷையில சொன்னால் அவரை ஜொள்ளு விட்டுவிட்டு வருகின்றோம்.” என்றனர்.

 

‘அதுக்குள்ள அவன் பெயரையே சுருக்கிட்டாளுங்க… செம கேடிகள்.என மனதுக்குள் நினைத்துக் கொண்டே,”நீங்க சொல்லுறது ஒன்றும் புரியவில்லை என்றாள்.

 

“என்ன தியா சின்ன பாப்பாவா நீ. இன்னும் நீ வளர ரொம்ப காலம் எடுக்கும் போலவே…..”என்ற நண்பிகளை முறைத்தாள்.

 

இவ்வளவு அழகான முட்டைக்கண்ணை வைத்துக் கொண்டு ஒருத்தனை சைட் அடிக்க முடியவில்லை உனக்கு. பிறகு ஏன் இப்படி ஒரு அழகான கண்ணை கடவுள் உனக்கு படைத்து தொலைத்தாரோ” என்ற வினோதினியை நோக்கி தியா முறைத்த முறைப்பில் ஒரு தீப்பிழம்பே உருவானது.

 

“இதைப் பாா்த்த சுஜா “வினோ தியா நெற்றிக்கண்ணை திறந்திட்டா  இன்றைக்கு நீ சாம்பலாக போகிறாய்” என்றாள்.

 

“ஆமாடி சுஜா பயமாய் இருக்கிறது அதுக்குள்ள உண்மையை சொல்லுவோம் என்றவள்…… நாங்கள் இரண்டு பேரும் எங்களுக்கு தந்த புரொஜட் பற்றி ரீம் லீடரோட டிஸ்கஸ் பண்ணி விட்டு,ஒரே களைப்பாக இருக்கிறது என்று ரீ குடிக்க கன்டீனுக்கு போனோம். அங்கே பாா்த்தால் ‘கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது  போல’ செந்தூர் சேரும் கன்டீன்ல ரீ குடிச்சுகிட்டு இருக்கிறாா்.வாய்ப்பு தானா வந்தால் அதை சும்மா விடக்கூடாது என்று ரீயையும் குடித்து அவரை சைட்டும் அடிச்சிட்டு வருகின்றோம்.”என்றனர்.

 

“என்னடி இரண்டு பேரும் ஒருத்தனை சைட் அடிச்சனீங்களா….? வெட்கமே இல்லையாடி உங்களுக்கு, குடும்ப பொண்ணுங்க பேசுகிற பேச்சா இது.” என்று படபடத்தாள் தியா.

 

“அம்மா தாயே நீ வேணும் என்றால் குடும்ப குத்து விளக்காய் இரு.நாங்கள் பார்ப்போம், ரசிக்கவும் செய்வோம்.என்ற வினோதினி  ஆமாடி அவர் எங்கள் இருவரிலும் யாரை சைட் அடிச்சாலும் ஓகே தான்” என்றாள்.

 

ச்சு உனக்கு என்ன பைத்தியம் பிடித்து விட்டதா ? ஏன் இப்படி அருவருக்கின்ற மாதிரி கதைக்கின்றாய் ப்ளீஸ்” என்றாள் தியா.

 

எனக்கொரு நல்ல  ஐடியா …! இனிமேல் நாங்க அவரை சைட் அடிக்க போகும் போது நீயும் வா.” என்றாள் வினோதினி.

 

ம் வெவ்வவே என பழிப்பு காட்டிய தியா அவனை  நான் சைட் …. கொடுமை கொடுமை என்று கோயிலுக்கு போனால் அங்கே இரண்டு ‘கொடுமை தலை விரிச்சு போட்டு ஜிங்கு

ஜிங்கு என்று ஆடுதாம்.என்கிற மாதிரி இருக்கிறது உன் கதை.”என்று பதிலுக்கு ஜோக் அடிக்க முயன்றவள் இயலாமையால் கண்கள் கலங்கி நின்றாள்.

 

அவள் கண் கலங்கியதைப் பார்த்த நண்பிகள் தியாவை நோகடித்து விட்டதை உணர்ந்து . “சரி சரி தியா கோபிக்காதே எல்லாம் ஒரு ..ஃபன்னுக்கு தான்  டோன்ட் பி சீரியஸ்.” என்றனர்.

 

“இருந்தாலும் அவர்  ரீ யை குடித்து விட்டு கப்பை வைக்கும் போது  கூட ஓரு அழகு தான் இல்லை சுஜா.” என்று இழுத்து விட்டு கண் அடித்த வினோ முதுகில் ஒரு அடி வைத்தாள் தியா.

ஆமாடி அவன் பெரிய இவன்,மன்மதக்குஞ்சு. உக்கிப்போன தகர டப்பா வாயன்,முன் பக்கம் அடிபட்ட பெரிய லொறியின் முகம் போல அவன் முகம்.இப்படி ஒரு ஆங்கிளில பார்த்தால் அவன் முகம் வித்தியாசமகத்தான் இருக்கும்.அது தான் வியந்து சாகிறீங்கடி.” என்றாள் தியா.

 

“தியா கூல் டவுன் என்ன ஆச்சு உனக்கு.நாங்க சும்மா விளையாட்டுக்குதானே சொல்லுகிறோம்.அவரை உனக்கு முன்னே பின்னே தெரியுமா? இல்லை சேர் கூட ஏதாவது பகையா உனக்கு.அவரைப் பற்றி கதைச்சாலே கையிலே சுடுதண்ணி சிந்தவிட்டது போல கொதிக்கின்றாய்” என்றனர்.

 

அப்போது தான் சுய நினைவு வந்தது போல தான் ஏன்? இப்படி நடந்து கொண்டேன் என புரியாது, “நான் ஏதோ நினைப்பில் என்ன ? கதைத்தேன் என்று புரியவில்லை ஐ அம் சாரி.” என்று சிறு குழந்தை போல மலங்க மலங்க முழித்தாள்.

 

“பரவாயில்லை ப்ரீயா விடு” தியா என்ற நண்பிகளை பாா்த்து “நான் கண்டபடி உங்களை பேசியிருக்க கூடாது தான் மறுபடியும் சாரிடி”என்றாள்.

 

ஹலோ தியா மேடம் நீங்க எங்களை ஒன்றும் திட்டவில்லை நம்ம செந்தூர் சேரைத் தான் வண்டை வண்டையாய்  திட்டியதாய ஞாபகம்” என்ற தோழிகளை விட்டு விட்டு ‘வெளியே கேட்டிருக்குமோ என்று கதவை திரும்பி பார்த்தவள் கண்ணாடி கதவு மூடியிருப்பதை பார்த்து ஆறுதலாக மூச்சு விட்ட வண்ணம் திரும்பி அவர்களைப் பார்த்து அசட்டு சிரிப்பொன்றை உதிர்த்தாள்.

 

“தியா பேசும் போது மடை திறந்த வெள்ளம் போல பேசினாய். இப்ப என்ன என்றால் பீடிங் பாட்டிலை வாயில வைச்சுக்கிற பேபி போல தான் உன் பிகேவியர் எல்லாம் இருக்கிறது..”

என்ற தோழிகளைப் பார்த்து இனிமேல் இப்படி பேச மாட்டேன் என்று காது இரண்டையும் பிடித்து தோப்புகரணம் போடுவது போல காட்ட நண்பிகள் முகத்தில் சிரிப்புத்  தோன்றியது.

‘அப்பாடா ஒரு மாதிரி இவங்களை மலை இறங்க வைத்தாயிற்று.’ என  நினைத்தவள் முகத்தில் புன்முறுவல் தோன்றியது.

 

“சரி சரி ப்ரெப்ளம் சோல்வ் வாங்க போய் வேலையை பார்க்கலாம்.” என்று மூவரும் சென்று வேலையில் ஆழ்ந்தனர்.

Advertisement