Advertisement

Episode 05

 

வேலையில் ஆழ்ந்து போயிருந்தவர்களை அவர்களது காபினுக்குள் இருந்த ரெலிபோன் மணி அடிக்கவும்,வேலையிலிருந்து கலைந்த அகில் போனை ஆன்சர் பண்ணினான்.எதிர் பக்கம் இருந்து என்ன தகவல் வந்ததோ “ஓகே ஓகே சேர் உடனடியாய் வருகின்றேன்.”

என்றவன் தனது கைப்பேசியையும்,பென்ட்ரைவையும் எடுத்துக் கொண்டு கிளம்பியவனை “அகில் ரொம்ப தூரமாய் போகிறாயா?” என்றாள்.

“இல்லை சுஜா நம்ம செந்தூா் சேர்ட காபினுக்கு தான்.உடனே வரனுமாம்,ஏதோ முக்கிய வேலையாம்”.என்றான்.

 

“சரி சரி சீக்கிரமாய் போடா.” என்றவள் தனது வேலையை கவனிக்கத் தொடங்கினாள்.

விரைவாக சென்ற அகில் செந்தூாின் காபின் வாசலில் கதவைத் தட்டி, “மே ஐ கமின்”

என்றான்.

“யா கம்மிங்” என்றது செநதூரின் குரல்.

உள்ளே வந்த அகில் “குட் ஆப்ரனூன் சேர்.” என்றான்.

“குட் ஆப்ரனூன் அகில்.உட்காரு, உன்கிட்ட முக்கியமான ரோயிங் பற்றி பேச வேண்டும்.நாளைக்கு ஈவினிங்க்குள்ளே அனுப்ப வேண்டும் என்று மெசேஜ் பண்ணியிருக்கிறார்கள்.பத்து ரோயிங் நீ மட்டும் தனியே கான்டில் பண்ணுவியா? இல்லை இன்னுமொரு ஸ்ராப் தேவையா?” என்றான்.

 

இல்லை சோ் நாளைக்கு ஈவினிங் அனுப்ப வேணும் என்றால் கொஞ்சம் கஸ்ரம் தான் சேர்.” என்றான்.

அப்போது இங்கே இருக்கின்ற ஸ்ராபில யாா்? நன்றாக ரோயிங் வேக் பண்ணுவாங்க ..? அவங்களை சீக்கிரமாய் கூப்பிடு அகில்.”என்றான் செந்தூா்.

“ஒகே சேர்.” ஒரு பொண்ணு இப்போது புதுசாக வேலைக்கு சேர்ந்திருக்கிறா? அவங்களை கூப்பிடுகின்றேன்.” என்றான்.

“சரி அகில் ஸ்பீடாக கூப்பிடு நாளைக்கு கட்டாயம் சென்ட் பண்ண வேண்டும்.

பி சீரியஸ்.” என்றான்.

“அந்த பொண்ணுக்கு தான் சேர் போன் பண்றேன் சேர்.” என ஓகே க்குயிக் என்றான் செந்தூர்.

 

ட்டிங் போய்க்கொண்டிருந்தது… அகில் மனதக்குள்ளே ‘தியா போனை ஆன்சர் பண்ணு.’ என நேர்ந்தவனை சோதிக்காது தியா போனை ஆன்சர் பண்ணினாள்.

 

ஹலோ அகில் ஏன்? போன் பண்ணுகிறாய். ஏதாவது பிரச்சனையா ? என்று படபடத்தாள.”தியா.

“அவசரமாய் வா தியா.” என்றான்.

“எங்கே வரவேண்டும்.எங்கே இருக்கிறாய”.என்ற தியா உடனடியாக கதிரையில் இருந்து  எழுந்தாள்.

 

“செந்தூா் சேர்ட காபினுக்குள்ளே வா”.என்றவன் போனை துண்டித்தான்.

 

“என்னது” என அவள் பேசியது காற்றோடு தான்.அதற்குள் அகில் போனை கட் பண்ணியிருந்தான்.  

‘என்னது..! இவன் ஏன்? என்னை  கூப்பிடுகின்றான்’.என மனதுக்குள் நினைத்துக் கொண்டு வந்தவள் நண்பிகளை கூட கவனிக்காது வெளியே சென்று செந்தூரின் காபின் கதவை தட்டி “மே ஜ கமின் சோ்.” என்றாள்.

“யெஸ் கமன்.” என்ற குரலைக் கேட்டு உள்ளே வந்தவளை பார்த்த அகில் “இவ தான் அந்தப் பொண்ணு தியா”.என்றான்.

கம்பியூட்டர் திரையை பார்த்துக் கொண்டிருந்த செந்தூர் கஸ்யுவலாக நிமிர்ந்தவன் அவளைக் கண்டு கண்களை சிமிட்டாது அப்படியே இருந்தான். அதாவது ‘பார்த்ததும் பரவச நிலையில்’ அல்லவா அவன் இருந்தான். அவனது மனசுக்குள் இருந்த பொிய மலையளவு துன்பம் மாறி பஞ்சுப்பொதியாய் எடை குறைந்து கொண்டிருந்தது.

ஏனெனில் அவன் முன் நின்றது அவனுடைய மனைவி தியா அல்லவா..?

இவனை பதிதாய் பார்பது போல தியா வணக்கம் கூறினாள்.

“சேர் நான் சொன்ன பொண்ணு இவங்க தான்.வேலையில் படு சுட்டி,அத்துடன் வேலையும் செம நீட்.”என்றான் அகில்.

 

அகிலின் கதையைக கேட்டு தன்னை சுதாகரித்துக் கொண்ட செந்தூா் ‘இவனெல்லாம் என் பொண்டாட்டியைப் பற்றி சேர்டிபிக்கட் குடுக்க அதை நான் கேட்கிற நிலமையில் இருக்கின்றேன்.இந்த கொடுமை உலகத்திலே எவனுக்கும் வரக்கூடாது  சாமி.’ என மனதுக்குள் நினைத்துக் கொண்டு அகிலைப் பார்த்து புன்னகைத்தான். அப்படி சிரிப்பதற்கு அவன் சிரிக்காமலே இருந்திருக்கலாம்.

 

தியா அவனைப் பார்த்து “என்னை எதுக்கு சேர் கூப்பிட்டீர்கள் ஏதாவது வேலையா ?”என்றாள்.

அவனை வெறுப்பாக பார்த்தாலும், ஏன்? அவனை திட்டினால்,அடித்தால் கூட அவன் விரும்பி வாங்கியிருப்பான். அவள் தெரியாதது போல பேசவும் மனம் ஊமையடி வாங்கியது.என் பெயரைக் கூடவா மறந்திருப்பாள். அவள் நீண்ட நேரமாக நிற்பதை உணர்ந்தவன் அவளது  வேலை என்ன என்று கூறி அனுப்பி விட்டு,தனது கண்களை இறுக்கமாக மூடி திறந்வன் முகத்தில் எண்ண முடியாதளவு துயர ரேகைகள் சூழ்ந்திருந்தன.

 

அவள் மறுபடியும் “சேர் நான் என்னுடைய இடத்தில் இருந்ததே ரோயிங் வேக் பண்ணட்டுமா?” என்றாள்.

நோ தியா இங்கே என் காபின்லேயே இருந்து வேக் பண்ணுங்க ….. அகிலும் இப்ப  இங்கே தான் வருவான்.இரண்டு பேருக்கும் டிஸ்ரபன்ஸ் இல்லாமல் இருக்கம். அத்தோடு இந்த வேக்கில சில டவுட்ஸ் கிளியர் பண்ண வேண்டி வரலாம்…..என அவன்  இழுக்க, அவள் “ஓகே சேர் நோ ப்ரொப்ளம்.நான் அந்த சைட்ல உட்கார்ந்து வேலை செய்கின்றேன் சேர்.” எனக் கூறியவள் ‘லப்டப்’ ஜ உயிர்ப்பித்து தனது வேலையில் ஆழ்ந்தாள்.

 

‘ம்… இவளை பக்கத்திலே வச்சு பார்பதற்கு எத்தனை சொல்ல  

வேண்டியிருக்கிறது.’ என யோசித்தவனின் யோசனைக்கு இடையூறாக அகிலும் தனது ‘லப்டப்’ புடன் உள்ளே வந்து வேலையை தொடங்கினான். மூவரும் அவரவர் வேலையில் ஆழ்ந்தாலும் செந்தூரின் மனம் வேலையில் நிலை கொள்ளாது கற்பனையில் மூழ்கியது மட்டுமல்லாது பார்வை தியாவை நோக்கியும் சென்றது. நல்ல வேளை தியாவும்,அகிலும் வேலையில் ஆழ்ந்திருந்தனர்.

இதனால் அவனை அவர்கள் கவனிக்கவில்லை.இதனை சாக்காக வைத்து தன் முன்னே இருப்பவன் தன் கணவன் என்று அறியாமல் இருக்கும் தன் மனைவியை சைட் அடித்துக் கொண்டிருந்தவனை அவனது செல்போன் நினைவுலகிற்கு கொண்டு வந்தது. போனை ஆன்சர் பண்ணிக் கொண்டு,அகிலிடம் சைகையில் வெளியே போய் கதைப்பதாக கூறி கதவை திறந்து வெளியேறினான்.

செந்தூர்  வெளியேறியதை தொடர்ந்து அகில் தியாவிடம் பேச்சு கொடுத்தான்.

“ஏன் தியா சேர் பேர்சனல் ஹேல் என்று போகிறாரே.. அவருக்கு கேர்ள் பிரண்ட்

இருக்குமோ…?” என்ற அகிலை முறைத்தாள் தியா.

 

“அவருக்கு கேர்ள் பிரண்ட் இருந்தால் என்ன? இல்ல பொண்டாட்டி தான் இருந்தால் உனக்கென்னடா.” என்றாள்.

 

“சேர் செம ஹாண்ட்சம்மா இருக்கிறாரே…. லவ்வில விழாமலா இருப்பார்.”

 

‘அவனே சும்மா இருந்தாலும்,இவன் அவனை லவ்வில விழுத்தாமல் விட மாட்டான் போலவே….’ என மனதுக்குள் நினைத்த தியா அகிலிடம்  “எவ்வளவு வேலை இருக்கிறது அதை விட்டு விட்டு,சேரைப் பற்றி துப்பறியுற வேலை வேற,உனக்கு இதெல்லாம் தேவையாடா? என்றாள்.

 

“தியா ஊரில இருக்கிற நாலு நல்லது கெட்டதை அறிந்து வைத்திருக்க வேண்டும்.அப்படி என்றால் தான் நாலு போ் நம்மை மதிப்பார்கள்.” என அகில் பீலா விட்டான்.

 

எது? இது நல்ல விசயமா…அப்ப சோ் போன் கதைத்து விட்டு வருவார். அப்போது உன் டவுட்டை அவரிடமே கேட்டு கிளியர்

பண்ணலாமே..! என்றாள்.

 

“என்னை கேவலப் படுத்துகிறதில் உனக்கிருக்கிற சந்தோசம் உலகத்தில யாருக்கும் இருக்காது.”தியா.

 

“என்கிட்ட அவமானப் பட்டுக் கொண்டே இருக்கனும் என்றது எழுதப்படாத வதி.” என்ற தியா நாலரை மணி அடிக்கவும் தனது வேலையை முடித்துக் கொண்டு தனது  ‘லப்டப்’ஐ சட் டவுன் பண்ணினயவள் அகிலை நோக்கி “அகில் நான் நாளைக்கு வந்து மிகுதி வேலையை செய்கினறேன்.”

என்றாள்.

 

“ஓகே தியா நீ போ நான் இன்னும் ஒரு மணி நேரம் கழித்து தான் கிளம்ப வேண்டும். இமிடியேட்டா நாளைக்கு அனுப்ப வேண்டிய ரோயிங்ஸ் அதனால் கொஞ்ச வேலையை இப்போது முடித்து விட்டு மிகுதியை நாளைக்கு பார்க்கலாம்.” என்றான் அகில்.

 

“அகில் அப்படியென்றால் நானும் கொஞ்ச நேரம் இருந்து வேலை பார்க்கவா” என்றாள்.

 

“வேண்டாம்.நீ போ பிறகு இருட்டி விடும்,அப்புறம் தனியாகத் தான நீ போகவேண்டி வரும்.” என்றான் அக்கறையுள்ளவனாக.

 

“சரி அகில்  நான் கிளம்புகின்றேன்.” என்றவள் ‘லப்டப்’பையும் கைப் பையையும் எடுத்துக் கொண்டு,அலுவலக பிங்கர்பிறிண்டில் விரலை ஒற்றி எடுத்து விட்டு அலுவலகத்தை விட்டு வெளியேறினாள்.

 

தனது அலுவலை முடித்துக் கொண்டு செல்போனை பான்ட் பொக்கட்டுக்குள்ளே வைத்துக் கொண்டு வந்த செந்தூர் தியாவின் இடம் காலியாக இருந்ததைக் கண்டு திகைத்து நின்றான். ‘ச்சே…. போன் கதைக்க போன கொஞ்ச நேரத்துக்குள்ளே எஸ்கேப் ஆகி விட்டாள். என்னை யாா?் என்று தெரிந்து தான் போனாளோ..?’  என்று மனதுக்குள்ளே நொந்த வண்ணம், அகிலுடன் மெதுவாக பேச்சுக் கொடுத்தான்.

 

“ஏன் அகில் தியா போய்விட்டாளா?” என்றான்.

“யெஸ் சேர் போய்விட்டாள்.லேட் ஆனால் தனியாக போக வேண்டும்.அதனால் இப்போது கொஞ்சம் முன்னாடி தான்

கிளம்பினாள்.” என்றான் அகில்.

 

“ஓகே ஓகே ரொம்ப தூரத்தில் இருந்து வருகின்ற பொண்ணு போல”… என்று கதை வாங்கும் நோக்கோடு பேச்சை இழுத்தான்.

 

“இல்லை சேர் ஒரு அரைமணி நேரம் எடுக்கும் என்று நினைகின்றேன்.பைக்கில வருகிறது என்றால் பத்து நிமிடம் எடுக்கும்.” என்றான்.

 

ஓகே அகில் தியாக்கு சொந்த இடம் எது? இங்கே வீடு இருக்கிறதா? இல்லை ரென்டுக்கு ஏதாவது இடத்திலே இருக்கிறாளா?” என்று செந்தூா் அகிலைக் கேட்டான்.

 

அவளோட சொந்த இடம் யாழ்ப்பாணம் தான். இப்ப வேலை கொழும்பில் கிடைத்திருக்கின்றதனால் இங்கே ஒரு வயசான பாட்டி வீட்டில் ரென்ட்க்கு இருக்கிறதாக இங்கே வந்த ஸ்ராட்ல சொன்னதாக ஞாபகம் சேர்.மற்றையது என்னனெ்றால் தியா இருக்கின்ற இடத்திற்கு பஸ் அரைமணிக்கொரு தடவை தான் வரும்.” என்றான் அகில்.

 

ஆமாம் அகில் இப்போது காலம் ரொம்பவே கெட்டுக் கிடக்கிறது.பொண்ணுங்க பாதுகாப்பாக போனால் கூட ஏதோ ஒரு வகையில் ஆபத்து அவர்களை நோக்கி வந்த வண்ணம் தானே

இருக்கிறது.”

என்று கூறிக் கொண்டு இருக்கையில் சார்ந்து அமர்ந்து கொண்டு, “எத்தனை ரோயிங் இப்ப வரைக்கும் இருக்கிறது” என்றான்.

 

சேர் நான் இரண்டு முடித்து இப்போது தான் மூன்றாவது தொடங்குகின்றேன்.தியா மூன்று ரோயிங் புல்லா முடிச்சிட்டு தான் போறா

சேர்.” என்றான் அகிலன்.

 

“ஓ ரியலி வெரிகுட் எனக் கூறிக்கொண்டு,அவள் பென்ரைவில் கொப்பி பண்ணி வைத்திருந்ததை எடுத்து தனது ‘லப்டப்’ பில் போட்டு ஆராய்ந்தவன் கண்களிற்குள் எந்த பிழையும் தெரியவில்லை.”

ம் ரொம்ப பிர்லியண்ட் தான் போல என் பொண்டாட்டி என மனதுக்குள் மெச்சியவன் அதனை  தன் கம்பியூட்டரிலும் சேவ் பண்ணிக் கொண்டவன் அகில் வேலை செய்வதை பார்த்த செந்தூர், “ அகில் ரைம் ஆகிறது பாா். இன்று நீ செய்த வேலை போதும்டா…. நாளைக்கு காலையில வந்து மிகுதி வேக்கை முடிக்கலாம்.” என்று கூறிக் கொண்டு தனது ‘லப்டப்’ ஐ அணைத்தான்.

 

“ஓகே சோ் நானும் கிளம்பி விட்டேன்.என்று அகிலும் தனது ‘லப்டப்’ ஐ தூக்கிக் கொண்டு கிளம்பியவனை தடுத்த செந்தூர் “அகில் உன்னை ட்ராப் பண்ணணுமா?”என்றான்.

இல்லை சேர் எனக்கு பைக் இருக்கிறது.” என்று கூறி கிளம்பினான் அகில்.

 

அகிலும் கிளம்பி போய் விட செந்தூரும் கிளம்பி கீழ் தளத்திற்கு காா் பார்க்கிங்கிற்கு சென்றவன் தனது காரை ஓட்டமெட்ரிக்காய் ஓப்பன் பண்ணி விட்டு காரில் ஏறாமல் காரையே வெறித்துப் பாா்த்துக் கொண்டிருந்தான். காா் வாங்கும் போது அதை வாங்கிய விதம் என்ன? அதை கையாளும்  போது கூட எவ்வளவு இதமாக கையாளுவான்.இன்று அதை வெறிக்கின்றான் என்றால்,அதற்கு காரணம். அவனது மனைவி இன்று பஸ்சுக்கு கூட நேரம் கட்டி சென்று வருகறாள்.தான் ஏசிக் காரில் இதமாக சென்று வருவதை எண்ணி சுயபச்சாபத்தில் கழிய…. அவன் காரை வெறுத்து என்ன? பயன் அவனை அல்வா அவன் வெறுக்க வேண்டும். காா் பாா்க்கிங்கில் கடைசி ஆளும் தமது வாகனத்தை எடுத்துச் செல்லவும் தான் இருட்டிய பிறகும் தான் இருப்பதை உணரந்தவன் காருக்குள் ஏறி காரை ஸ்ராட் பண்ணியவன் எல்லாம் நல்ல படியாக மாறவேண்டுமென கடவுளை மனதார வேண்டிக் கொண்டவன் காரை எடுத்தான்.

 

அவனது வீடும் அரைமணி நேரத்தில் செல்லக் கூடிய தூரம் தான் இருப்பினும் அவன் இருக்கும் மனநிலையில் இப்போது வீட்டுக்கு போனால் வீட்டில் இருப்பவர்களுடனும் பேச முடியாது.அவனும் நிம்மதியாய் இருக்க முடியாது. என நினைத்தவன் நேரடியாக பீச்சுக்கு காரை விட்டவன் கடற்கரையில் காரை நிறுத்தி விட்டு சீற்றில் உட்கார்ந்த வண்ணம் கண்ணாடியை ஏற்றி விட்டுக் கொண்டு சீற்றை சாய்ந்தவாக்கில் சரித்து விட்டு அதன் மேல் சாய்ந்து கொண்டான். கையை தலைக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டு கண்ணை மூடியிருந்தவன் கண்களுக்குள் கடந்த கால நினைவுகள் சூறாவளியாய் சுழன்றடித்தது. தூரத்தில் எங்கேயோ கேட்ட காரின் கோன் சத்தத்தில் திடுக்கிடலுடன் நிமிர்ந்தவன் கண்கள் இரத்தமென சிவத்து விழியோரங்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.கடந்து சென்ற கவலைகட்கெல்லாம் இன்றே அழுது தீர்த்தால் அவன் மனச் சுமை குறையுமா? அழுது புரண்டாலும் தியா பட்ட துயரையும், அவமானத்தையும் அவனால் போக்கமுடிந்தால் …….? எவ்வளவு நன்றாக இருக்கும்.செய்யக் கூடாத தவறுகளை எல்லாம் செய்தது அவனும், அவனது குடும்பத்தாரும் தான். ஆனால்  அவர்கள் யாரும் எந்தக் குற்றவுணர்வுமின்றி இருக்க,அவள் மட்டும் ஒற்றையில் நின்று தனியாய் தவிக்கிறாளே….!

கடந்த இரண்டு வருடங்களாக அவன் அவளைப் பற்றி ஏதோ ஒரு தகவல் அறிந்து கொண்டு தான் இருக்கிறான்.இன்று அவளை பார்த்ததில் ஒரு வகை சந்தோசம் என்றாலும், அவள் இருக்கும் கோலத்தைப் பார்த்தால்  அவனது நெஞ்சில் சூட்டுக் கோலை வைத்தது போல் எரிகிறதே…? இந்த எரிச்சலுக்கான மருந்தை அவன் தேடினால் இன்னும் ரணம்ரணமாய் வலிக்கிறதே..என்ன செய்து மீள்வது அதாவது அவளை தன்னிடம் மறுபடியம் கொண்டு வருவது என உச்சகட்ட ஐடியாக்கள் எல்லாவற்றையும் மனதுக்குள்ளே போட்டுக் கொண்டவனின் மனம் மறுபடி சோா்வு நிலைக்கே சென்றது. கார் ஸ்ரேரங்கில் தலை வைத்து படுத்தவன் அப்படியே தூங்கி விட்டான். நீண்ட நாட்களுக்கு பிறகு, கொஞ்ச நேரம் என்றாலும் நிம்மதியான தூக்கம். இந்த நிம்மதி அவன் வாழ்வில் தொடருமா…..?

கடைசியாக இரண்டு வருடத்தில் வெளிநாட்டில் இருந்த போது அவள் கொஸ்ரலில் இருந்தே தனது இரண்டாவது பட்டப் படிப்பையும் முடித்தது வரை அறிந்திருந்தவன் அதன் பின் அவள் எங்கிருக்கறாள் என்று வலை வீசி தேடிக்கொண்டிருக்கும் போதே,இன்று அவள் அவன்  கண்முன்னே கண்முன்னே அவனது ஆபிசிலே காணவும் கனவு போல தோன்றியது என்றாலும் இது அவனது கடந்து போன இரண்டு வருட தவத்திற்கு கிடைத்த பலன் என்றே சொல்லாம். இருந்தாலும் அவன் வணங்கும் தாய் அவனை நிச்சயம் காப்பாற்ற வேண்டும் என நினைத்துக் கொண்டு காரை வீடு நோக்கிச் செலுத்தினான்.

 

Advertisement