Advertisement

EPISODE 3

“தம்பி கண்ணா எழும்புப்பா..? இன்னும் ரெஸ்லெஸ்சாக இருக்கிறியா..?” என்று முதுகில் கைவைத்து எழுப்பிய அன்னையின் மடியில் தலையை வைத்து படுத்தான். நிா்மலா, காா்த்திகேயனின் கடைசிப் புதல்வன் கதையின் நாயகன் செந்தூரன்.

 

“நோ மம்மி கொஞ்ச நேரம் கண்ணை மூடிக் கொண்டு படுக்கிறேன்” என்றான்.

 

“இல்லை நீ எழும்பு, முதல்ல பிரஸ் பண்ணு” அப்புறமாய் அப்பா வெளியில இருக்கிறார்.பெரியஅண்ணா,அண்ணி,அக்கா,அத்தான் அவர்களின் பிள்ளைகள் அது தான் உன் பெறாமக்கள்,  மருமக்கள் எல்லாரும் உன்னைப் பார்க்கிறதுக்கு வெளியில வெயிட் பண்ணுகிறாா்கள். நீ என்ன? என்றால் தூங்கு மூஞ்சி போலதூங்கிக் கொண்டிருக்கிறாய்.” எண்டு அலுத்துக் கொண்டாா்.

 

“அம்மா.” என்று பெட்டில் இருந்து துள்ளி எழுந்தவன்.

 

“முதல்லயே எழுப்பியிருக்கலாம் இல்லை.” என்று கூறிக் கொண்டு குளியலறைக்குள் சென்று மறைந்தான்.

 

ப்ரஸ்அப் ஆகிக் கொண்டு வெளியே வந்தவனை, சகோதரனும்,அண்ணியும் அவர்களுடைய மக்களும்,அக்காவும்,அத்தானும்,அவர்களது பிள்ளைகள் என அத்தனை பேரும் சூழ்ந்து கொண்டு நலம் விசாரித்தனர்.

 

அவன் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தான் ஏன் எனில் இரண்டு வருடங்களுக்கு பிறகு   சகோதரர்களையும்,அவா்களது துணைகளையும்,அவர்களது குழந்தைகளையும்

கண்டதில் அவனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியே….! “மாமா,சித்தப்பா”  என்று குழந்தைகள் அவனைக் கட்டிக் கொண்டனர்.

 

“டேய் நான் இங்க தான் இருக்கப் போகின்றேன். இப்ப என்னை கொஞ்ச நேரம் ஆபிசுக்கு போன் கதைக்க விடுங்கடா.” என்றான்.

 

“சரி போ மாமா”என்றான் ஒரு மருமகன்.

 

சற்று பெரியவனான மூத்த மருமகன் “ஐயோ மாமா நீ அத்தை கூட போனில கடலை போடுற வயசில இப்பவும் ஆபிஸ் ஆபிஸ் எனஅதைக் கட்டிக்கிட்டு அழுகிறீங்க என்றவனை அவனது தாய் செந்தூரின்  தமக்கை அடக்கினாள்.

 

“டேய் அவன் உன் மாமன். என் தம்பி கிட்ட இப்படியா மரியாதை இல்லாமல் கதைப்பாய்”என்றாள்.

 

“நோ மம்மி மாமாவும் நாங்களும் பிரண்ட்ஸ் மாதிரி நீ டோன்ட் வொர்றி..” என்றான் மகன்.

 

“என்னவோ போங்கடா நீங்களும் உங்க மாமனும், இந்தக்கால பொடிசுகளோட கதைச்சு மனுசர் மீளவும் முடியுமோ?” என அரற்றிய வண்ணம் தமக்கை சென்று விட்டாள்.

 

அவன் நம்முடைய செந்தூர், பாசக்காரன். பண்பானவன், ஒரு காலத்தில்முரட்டு கோபகாரன், எல்லோர் மனதையும் கொள்ளை கொள்ளும்கொள்ளைக்காரன் எந்த இடத்தில் எப்படி வாழ வேண்டும் என வாழத் தெரிந்தவன், அவன் ஒரு ரசிகன், கம்பீரமானவன் என்று சொன்னால் குறைவில்லை. உயரத்தில் உயர்ந்தவன் மற்றவர் உள்ளத்தை உணர்பவன்.

 

ஆனால் அவளின் மனதை உணரவில்லை……. அத்தனைக்கும் அவன் தொட்டு தாலிகட்டிய மனைவி அவள். அவளது மனதை உணர்ந்து கொள்ள தவறியவன்.

 

ஆபிசுக்கு போன் போட்டு பன்னிரெண்டு மணிக்கு வருவதாய் கூறினான்.

அதைக் கேட்ட தாய் “இரண்டு வருசமா ஊரில் இல்லை, இப்போ தான் வந்தாய் வந்தவுடன் போக வேண்டுமாடா? என்னடா?” என்றாா்.

 

“இப்ப உன்னைப் பார்க்க எண்டு அண்ணா,அண்ணி அக்கா, அத்தான் பிள்ளையள் எண்டு, வந்திருக்கிறாா்கள். நீ என்னடா என்றாால் வேலை என்று கிளம்புகிறாய்.” என்று தாய் அங்கலாய்த்தார்.

 

“இல்லை அம்மா இப்ப என்னோட  ‘எஸ்எஸ்’ கென்ராக் ஆபிசுக்கு போகின்றேன்.”என்றான். ஆம் இவன் அரசாங்கத்தில் பணிபுரிந்தாலும் சொந்தமாக ‘எஸ்எஸ்’ கென்ராக் கம்பனி ஒன்று வைத்திருக்கிறான். அதாவது வீடுகள் கட்டுவதுபெரிய பில்டிங் கட்டுவது, சொப்பிங்மால், தியேட்டர் என இவனது வேலை மிகப் பெரியது.

 

“ம்க்கும் பிறகு எப்பதான் வீட்டுக்கு வருவாய் தம்பி” என்றார் தாய்.

 

“பன்னிரண்டுக்கு வேலையில் சைன் பண்ண வேண்டும் அம்மா, அதனால் இப்போது  என் தனிப்பட்ட வேலையை என் நண்பன் அசோக் பார்த்திட்டு இருக்கான். அவனைப் போய் பார்த்து பேசி விவரம் கேட்கனும் பிறகு தான் அம்மா நான் என்னோட வேலையில போய் சேரனும் அதனால் இப்போ நான் பை மா”  என்றான்.

 

“நேர்த்தியாக உடை அணிந்து வெளியே வந்தவன் வீட்டில் இருந்த அனைவரிடமும் விடை பெற்றான்.

 

“ஓகே ( அண்ணா,அண்ணி,அக்கா, அத்தான்,பேபிஸ், அம்மா, அப்பா) என்று அனைவரிடம் கூறி, இனி நைட்டுக்கு பார்க்கலாம்” என வெளியே சென்று அவனது காரினை கதவை திறந்து காரினை ஸ்ராட் செய்து வெளியே எடுத்தான்.

 

‘வெளிக்கேற் வரை வந்து வழியனுப்பிய அனைவரிடமும் மீண்டும் ஓகே பை ஐ வைத்து விட்டு வண்டியை நேரடியாக நண்பன் அசோக் இருக்கும் இடத்தை நோக்கி கிளம்பினான்.

 

அவன் நீண்ட காலத்தின் பின் தாய் மண்ணில் காரில் செல்கிறான் என்பதே புத்துணர்வைக் கொடுத்தது. அவன் இயற்கையின் ரசிகன். வீதியோரம் பட்டுப்போய் நிற்கும் மரங்களைக் கூட ரசிப்பவன் அப்படிப்பட்டவன் மனிதில் புத்துணர்வு இருந்தாலும் நீண்ட அமுக்கம் ஒன்று அமுங்கி இருக்கின்றது என்றால் யாரும் அறியமாட்டார்கள். அதுவும் இந்த வெளிநாட்டுக்கு சென்று கடைசி இரண்டுவருடமும் அவன் மனம் ரணமாய் காய்கின்றதே…! வெளியே சொல்ல ஆறுதல் தேட நினைக்க அவனது முரட்டு ஈகோ சண்டித்தனம் செய்கிறதே.

 

‘உறக்கம் என்ற

ஓன்று

இல்லை என்றால்

பலர்

இங்கு

பைத்தியமாய்

திரிவார்கள்…..

 

என்று யாரோ கூறியது எத்தனை உண்மை. வெளிநாட்டில் கூட படிப்பு போக வேலை வேலை என்று ஓடுவானே…! வேலை நேரம் போனால் உறக்கம் தானே அவனது மனதை கொன்று தின்றும் வேதனைக்கு மருந்து.

 

இங்கு வந்த பின் ஏனோ…? மனம் சந்தோசம் அடைகிறது போல ஒரு உணர்வு ….! அந்த சந்தோசம் நிலைக்குமா…?

 

வண்டி தானாகவே வரவேண்டிய இடத்திற்கு வந்ததும் பிறேக் போட்டு நின்றதை உணர்ந்து நடப்புலகிற்கு வந்தவன். தன்னை சுதாகரித்துக் கொண்டு காரை விட்டு இறங்கி தனது அலுவலகத்திற்குள் நண்பனைக் காணச் சென்றான்.

 

அவனை வாசல் வரை வந்து வரவேற்ற நண்பனை மகிழ்வுடன் எதிர்கொண்டான் செந்தூர்.

 

அசோக்கிடம் தொழில் விவகாரம் மற்றும், இப்போது என்ன? பில்டிங் கட்டுமானப் பணியில் நடைமுறையில் இருக்கிறது. இனிமேல் எந்த புறொஜெட் செய்ய வேண்டும் என தகவல்களை கேட்டுக் கொண்டிருந்தவனை பின்புறமாக அனைத்தது ஒரு கை. அவன் திரும்பிப் பாராது தன் கையை பின்னே திருப்பி அவனைக் கட்டியிருந்த உருவத்தை முன்னே மெதுவாக இழுத்தான். முன்னே இழுத்து அந்த சின்ன உருவத்தை அவன் தலைக்கு மேலே தூக்கிப் போட்டு பிடித்த வண்ணம்  “ஏய் குட்டி இப்படி வளர்ந்துவிட்டாய் கண்ணா” என்றான் செந்தூர்.

 

“அங்கிள் என்னை எப்பிடி கண்டு பிடித்தீர்கள்.” என்றது மழலை.

 

“மஹீம் என்னை பின்பக்கமாக தாக்குவதற்கு இந்த  இடத்தில்  சின்னக் குட்டியை உன்னை தவிர யாருக்கு தைரியம் என்று கூறியவன் குழந்தையை தூக்கிய வண்ணம் காருக்கு சென்று அதற்குள் இருந்து சாக்லட் வகையை குட்டிப் பையனுக்கு எடுத்துகக் கொடுத்தான்.  விழிவிரிய அதை வாங்கியதும், அவனை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டது நண்பன் அசோக்கின் குழந்தை.

 

சாக்லேட்டை வாங்கியவுடன் தனது வேலை முடிந்து விட்டது என நழுவி ஓடிய குழந்தையைப் பார்த்து சிரித்த வண்ணம்  அசோக்கைப் பார்த்து, டேய் மச்சான் உன் பையன் பிழைச்சுக்குவாண்டா. பாரு காரியம் நடந்தவுடன் எப்பிடி நழுவுறான் பார்’ என்றான்.

 

‘ஆமாண்டா அவன் யாரு? என் பையன்”என்றான் அசோக். அதன் பின் ஒரு மணித்தியாலத்திற்கு மேல் வேலை விடயமாக கதைத்த பின், சரிடா நான் ஆபிசுக்கு போக வேணும் அப்புறம் உன்னை சந்திக்கிறேன்’ என்று நண்பனிடம் கைகுலுக்கி விடைபெற்றான்.

விடைபெற்று காரில் ஏறியவன் காரை ஆபிஸ் நோக்கி செலுத்தினான். கை தன் பாட்டில் ரேடியோ எப்.எம்மை முறுக்கி விட அது பாட்டிற்கு வஞ்சகமின்றி தன் வேலையை தொடர்ந்தது.

 

உன் ஞாபகம்

நெஞ்சில் வந்தாடுதே…..

ஓயாமலே என்னைப் பந்தாடுதே…..

உன் பூ முகம் கண்ணில் நின்றாடுதே…..

நான் கொஞ்சவே என்னை மன்றாடுதே……

படித்தால் இனித்திடும் புதினம்…….

உன்னை நான் மறப்பது கடினம்…….

அலையாய் தொடர்நதிடும் நினைப்பு…….

வலைக்குள் தவித்திடும் தவிப்பு……

 

என எஸ்.பி.யின் குரல் காற்றோடு கலந்தது…. அவன் மனது போலவே….. பாட்டுக்கள் அவன் மனதிலிருந்த பெரியமலையொன்றை பஞ்சுப் பொதியாக்கிக் கொண்டிருந்தது. எந்த நினைப்பில் இருந்தாலும் வரவேண்டிய இடம் வந்ததுமே கால்கள் பிரேக்கை பிடிக்க, கைகள் கியரை மாற்றியதும் எஞ்சினை அணைத்து விட்டு, தன்னை நிதானப்படுத்திக் கொண்டு நீண்ட நாளுக்கு பின் தான் பணிபுரியும் அலுவலகத்திற்குள் செல்லுவதற்கு தயாரானான்.

 

ஆபிசுக்குள்ளே சென்று கீழ் தளத்திற்கு போய் அங்கே பணியில் இருந்த காவலாளி அவனை என்ன? என்பது போல பார்க்க தான் யார்? ஏன்று தகவல் தெரிவித்து விட்டு அவன் லிப்ற் பட்டனை தட்டி விட்டு நிற்க, லிப்ற்ரும் அவனைக் காக்க விடாது வாயை திறந்து அவனை உள்ளே எடுத்துக் கொண்டது.

இதனைத்தையும் பார்த்துக் கொண்டு நின்ற காவலாளி, இந்த சேர் எந்த தம்பட்டமும் அடிக்காமல் சாதாரணமாய் செல்கிறாரே… என்ற வியந்த வண்ணம் மேலே தளத்திற்கு அறிவிப்பதற்காக தொலைபேசியை கையில் எடுத்தார்.

 

மேலே அவன் வருவதாக அறிவிப்பு வழங்க தொலைபேசியை எடுத்த வாட்ச்மேன் முன்னாடி இருந்த பெரிய வாயில் அருகே இன்னுமொரு கார் வந்து கோன் அடிக்கவும், அவன் தொலைபேசியை வைத்து விட்டு, கார் உள்ளே வருவதற்கு கதவை திறப்பதற்காக ஓடினான். அதன் பின் அவன் உயர் அதிகாரி மேலே செல்லும் விடயத்தை சொல்ல மறந்து தனது வேலையில் ஆழ்ந்து விட்டான் காவலாளி.

 

அலுவலகத்தினுள் சென்ற செந்தூர் யாரையும் காணாது திகைத்தவன் விழிகள் தானாகவே கையில் கட்டியிருந்த கடிகாரத்தை நோக்கியது. மணி பன்னிரெண்டு இருபதைக் காட்டவே, அது மதிய உணவு நேரம் என்பதால் தான் யாரையும் காணவில்லை என்று உணர்ந்து கொண்டு வெளியே போடப்பட்டிருந்த பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு தனது மொபைலை உயிர்ப்பித்துக் கொண்டு அதிலே மூழ்கினான்.

 

நேரம் இருபது, இருபத்தைந்து நிமிடங்களை தாண்டிய நிலையில், உணவினை முடித்துக் கொண்டு, சுஜாவும், வினோவும் மாடிப்படிகளில் ஏறிக் கொண்டிருந்தவர்கள் மேலே பெஞ்சில் இருந்த இளைஞனை கண்டார்கள்.

 

“வினோ மேலே பாருடி யார..? ஹாண்ட்சம்மா ஒருத்தன் இருந்து கொண்டு மொபைலை நோண்டிக்கொண்டு இருக்கிறாண்டி.”

 

“ம்ம் ஆள் பார்க்கிறதுக்கு நல்லாத்தான் இருக்கின்றானேடி. நம்ம ஆபிசுக்கு தான் வந்தானோ…? தெரியவில்லை…” என்றாள் வினோ.

 

“எதுக்கு வந்தான் என்று யாருக்கு தெரியும்.     என்றாள் சுஜா.

அவன் எதுக்கு   வந்தவனோ.? இல்லையோ…? ஆக ஆள் மொத்தத்தில் செமயா இருக்காண்டி. நம்ம ஆட்கள் இப்பிடி யாராவது சைட் அடிக்கிற மாதிரி இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்” என்றாள் வினோ.

 

“நம்ம அகில் இருக்கின்றானேடி” என்றாள் சுஜா.

 

“ஆமாண்டி அவனை நாங்க சைட் அடிக்கலாமா? வேண்டாமா? ஏன்று யோசிக்க முன்னமே அவன் எல்லாப் பொண்ணுங்களையும் சைட் அடிச்சு முடிச்சிட்டு, எந்தப் பொண்ணு நல்லா இருக்கு எண்டு வேற விமர்சனம் கேட்பான் அந்த வீணாப்போன விளக்குமாறு” என முடித்தாள் மற்றவள்.

 

“என்ன வினோ நம்ம நண்பனையே கரிச்சுக் கொட்டுறாய்.” என வியந்தாள் சுஜா.

 

“அது தான் சொல்லிவிட்டியே அவன் நண்பன் என்று அத்தோட அவன் கதையை விடுடி” என்றாள் மற்றவள்.

 

“அது சரி நாம தியாவை கன்டீன்ல இருந்து விட்டு விட்டு வந்துட்டோம் போல, அவ நம்மளை காணவில்லை என்று தேடுறாளோ…? தெரியவில்லை” என்று கூறினாள் சுஜா.

 

“இல்லடி, அவ கீழே கன்டீன்ல, இனிமேல் தான் சாப்பிடப் போகின்றாள் என்று நினைக்கிறேன். அவள் லேட்டாத் தான் சாப்பிட வந்தாள் தெரியும் தானே” எனக் கூறினாள்.

 

“சரி வாடி அவ வருவா தாங்கள் மேலே போகலாம் டி” என்றாள்.

 

“சரி வா சீக்கிரம் போகலாம்” என்று கதைத்த வண்ணம் உள்ளே வந்தவர்கள் வெளியே பெஞ்சில் இருந்தவனை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டு அவர்அவர் ஆசனத்தில் அமர்ந்து கணணிகளை உயிர்ப்பித்து வேலையை ஆரம்பித்தனர்.

இரு பெண்களும் வருவதை நிமிர்ந்து பார்த்து விட்டு தலை கவிழ்த்து மறுபடியும் மொபைலை நோக்கினான்.

 

அகில் மேல்மாடிப் படிகளில் ஏறி விசில் அடித்துக் கொண்டு வந்தவனின், வாய் விசிலடிப்பதை நிறுத்தி விட்டு வெளி பெஞ்சில் அமர்ந்திருந்தவன் மேல் விழுந்தது. ‘இவர் நம்ம செந்தூர் சேர் அல்வா…?  இவர் ஏன? வெளி பெஞ்சில் இருக்கிறார்.’ என மனதிற்குள் நினைத்த வண்ணம் அவனருகே சென்றான்.சென்றவன்  “சேர் நீங்க ஏன்? இங்க உட்கார்ந்து இருக்கீங்க?” என்று கேட்டான்.

 

திடீரென அவனருகே குரல் கேட்கவும் சாதாரணமாக நிமிர்ந்து பார்த்தவன் முகத்தில் சிறு புன்னகை தோன்றியது.

 

“அகில் நீ இங்கே தான் இப்பவும் இருக்கிறியா? நான் நீ ரான்ஸ்பர் வாங்கி யாழ்ப்பாணத்துக்கு போய்விட்டியோ…. என நினைத்தேன்” என்றான்.

 

“இல்லை சேர் இன்னும் இரண்டு வருடம் இங்கே தான் குப்பை கொட்டனும்” என்றான். “சேர் அதை பற்றி பிறகு பேசலாம் நீங்க காலையில வருவீங்க எண்டு ஆபிசில எல்லாரும் எதிர்பார்த்திட்டு இருந்தோம் நீங்க இப்ப வந்ததும், இல்லாமல் யாரோ போல வெளியில இருக்கிறீா்களே…” என்றான்.

 

“இல்லை அகில் லஞ்ச் ரைம் அதுதான் வெளியே இருந்தேன். எல்லாரும் வந்த பிறகு உள்ளே போகலாம்’ என்றான் செந்தூர்.

“ஓகே சேர் இப்ப சொல்லுங்க பயணம் எல்லாம் எப்படி? போச்சுது” என்றான் அகில்.

 

“ம் பைன் அகில்”என்றான் மற்றவன்.

 

“சரிசேர் நீங்க வந்தது எங்களுக்கு எவ்வளவு சந்தோசம் சேர் என்றவன், இன்று றீஜினல் மனேஜர் லீவு சேர்” என்றான்.

 

“ஆமாம் அகில்,நேற்றே சேர்க்கு நான் போன் பண்ணினேன் அவர் சொன்னவர் இன்று லீவு” என என்றான்

 

“ஓகே சேர் எனிவே வெல்கம் சேர், என்று கைகுலுக்கி அவனை வரவேற்ற அகில், சேர் நாங்கள் உள்ளே போவம், பொதுவாய் எல்லாரும் உள்ளே வந்திருப்பாா்கள்” என்று கூறி எழுந்தான்.

 

“சரி அகில் நாங்கள் உள்ளே போவோம் போன பிறகு உடனடியா எல்லா ஸ்ராபையும் நான் மீற்பண்ண அரேஞ் பண்ணு”என்றான்.

 

“ஓகே சேர். நான் போய் அரேஞ் பண்ணகினறேன்.” என்று விட்டு அகில் செல்ல, அவன் பின்னே செந்தூரும் தனக்கென்று ஒதுக்கப்பட்ட அறைக்குள் சென்றவன், தனது இடத்தைச் சுற்றிப் பார்த்தான். எல்லாப் பொருட்களும் மனதை சிதறவிடாத வண்ணம் நேர்த்தியாய் அடுக்கப்பட்டிருந்தது. ஏசி முதற்கொண்டு மேசை விரிப்பு , பூஜாடி கம்பியூட்டர் என அனைத்தும் கவர்ந்தன அவனை.

 

‘ம் யாரோ ரசிகனாயிருப்பான் போல இவ்வளவு நல்லா நம்ம ரூமை டெக்கரேட் பண்ணி வைச்சிருக்கான்.  என நினைத்தவண்ணம் நின்றவனை ரூம் கதவு தட்டும் சத்தம் நினைவுலகிற்கு கொண்டு வந்தது. அத்துடன்  .”சேர் மே ஜ கம்மிங்” என்ற அகிலனின் குரலும் கேட்டது. “யெஸ் கமின்” என்றவன் உள்ளே வா அகில் என்று அழைத்து  “வட்ஸ் த மாட்டா்” என்றான்.

 

“சேர் நீங்க அரேஞ் பண்ணின மீட்டிங்குக்கு எல்லோரும் வந்தாச்சு என நினைக்கிறேன். நீங்க வாறீங்களா?” என்றான்.

 

“ஓகே போகலாம்” என எழுந்து வெளியே மீட்டிங் ஏற்பாடு செய்த நவீன வசதி கொண்ட மீட்டிங் ஹாலுக்குள் சென்றான்.

 

அவன் உள்ளே செல்ல அனைவரும் எழுந்து விஷ் பண்ணியதுடன் பொக்கேயும் கொடுத்தனர்.

 

“எனிவே எல்லோருக்கும் ரொம்ப நன்றி. நான் செந்தூர், இனிமே நம்ம ஆபிஸ்ல நான் தான் உங்களிற்கு புதுசா வந்திருக்கிற சீவ்ப் எஞ்ஜினியர் உங்கள் எல்லாரையும் சந்தித்ததில் சந்தோசம்” என்றான்.

 

கொழும்பில் அவனது அலுவலகத்தில் தியாவை அவன் காண்பானா …..?

 

 

Advertisement