Advertisement

Episode  02

 

யாழ்ப்பாணத்தில் தனியார் கம்பனிகள் கைவிட்டு என்றும் அளவே இருந்தது. இருக்கின்றது, என்கின்ற நிலையில் யாழ்ப்பாண தமிழர்கள் பெரிதும் கல்விப்புலமுடையவர்களாகவும், அரசவேலை வாய்ப்பை விரும்பிச் செய்பவர்களாகவும் எப்போதும் இருந்து வருகின்றனர். அந்த வகையில் தியாவும் இன்று செல்லப் போகும் இன்ரவியூவும் அரசாங்கமும், தனியாரும் சேர்ந்து  செமிகவர்மென்டுக்குள்ளே உள்ள நிறுவனம் ஒன்றில் தான் வேலை செய்யப் போகிறாள்.  இங்கே சம்பளமும் கொஞ்சம் அதிகமாய் இருக்கும் என்ற காரணத்துக்காகவே  இந்த இடத்தை அவள் தேர்ந்தெடுத்ததும்.

நேரம் எட்டு மணி என்றதும் கொண்டு செல்ல வேண்டிய சேட்டிபிக்கட்டுக்கள், எல்லாவற்றையும் பைல் கவரில் போட்டு பைக்குள்ளே எடுத்து வைத்து விட்டு உடைமாற்றிக் கொண்டு அவளது அறையினுள்ளே இருந்த முருகன் படத்திற்கு முன் நின்று மானசீகமாக மனதுருகி  ‘முருகா என் அப்பனே’ நான் இதுவரை எதையுமே உன்னைக் கேட்டதே இல்லை. ‘முருகா இந்த வேலை எனக்கு எவ்வளவு முக்கியம் எண்டு தெரியும் தானே? நான் இந்த வேலையில் தெரிவாகிடனும் அதுக்கு நீ தான் உதவி செய்யனும்’ என்றவளின் கண்கள் கலங்கியிருந்தன. முருகன் படத்தின் முன் இருந்த திருநீற்றையும், குங்குமத்தையும் எடுத்து அவள் நெற்றியில் கோடிழுத்துக் கொண்டு கதவைப் பூட்டிக் கொண்டு வெளியே வந்து, செருப்பை மாட்டிக் கொண்டு பஸ்ரான்ட் நோக்கிப் புறப்பட்டாள்

 

வெளியேவீதிக்கு வந்ததும் இயற்கை அன்னை தன் கரங்களில் ஒன்றான தென்றலை சிலுப்பி விட்டு அவள் கண்களை துடைக்க வைத்தாள். இந்த இயற்கைக்கு தான் எத்தனை சக்தி…! மனங்களில் இருக்கும் ரணங்களைக் கூட ஒரு நிமிடம் மறக்க வைத்து விடுகிறதே… எனும் போதே அவள் மனமும் இலவம் பஞ்சாய் இலகுவாயிற்று.

 

பஸ் நிறுத்த்தில் நின்று செல்பவர்கள், வருபவர்களை பார்த்துக் கொண்டு தூரத்தில் பஸ் வருகிறதா? என்றும் தன் தலையை நீட்டி எட்டிப் பார்த்துக் கொண்டவளின் நம்பிக்கை வீண் போகவில்லை. தூரத்தில் பஸ் வந்து கொண்டிருந்தது.

 

பஸ் அருகிலே வரவும் பஸ்சுக்கு கை நீட்டியவள், பஸ் நின்றதும் பஸ்சிலே ஏறி தூரமாக காலியாய் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு சான்றிதழ் உள்ள பையையும் அவளது ஹாண்ட பாக்கையும் எடுத்து மடியில் வைத்துக் கொண்டு இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்தவளின் விழிகளில் இரண்டு விடயங்கள் தென்பட்டன. ஓன்று தாய் ஒருவர் தனது மகளை மடியினில் வைத்து கொஞ்சிக் கொண்டிருந்ததும் மற்றையது ஒரு இளவட்டப்பயல் அவன் காதலியை சைட் அடித்துக் கொண்டிருந்ததும்.

இவையும் ஒரு வித அன்பின் வெளிப்பாடே,

 

வாழ்க்கையின்

ஆகச்சிறந்த

பொக்கிஷம் என்பது

சரியான நேரத்தில்

கிடைக்கப் பெறும்

ஆறுதலும்

மாறுதலும் தான்…!

 

அவள் வாழ்வில் தான் எந்தவொரு நிமிடமும் ஆறுதலும் இருந்ததில்லை, மாறுதலும் இருந்ததில்லையே…?

 

எத்தனை முறைதான் இல்லாததை நினைத்து ஏங்குவது.

இனிமேல் என்னைக் கடந்து போனவற்றை நினைத்து ஏங்குவதை விட்டுவிட்டு காலத்தின் போக்கில் நாமும் போவோம் என நினைத்தவளின் மனம் சிறிதும்

சாந்தியடையவில்லை.

 

யாழ்ப்பாண பஸ் ஸ்ராண்டுக்குள் பஸ் சென்றதும் அவள் இறங்கிக் கொண்டு அவளது அலுவலகம் நோக்கிச் செல்ல வேண்டிய பஸ்சில் ஏறினாள்.

 

அடுத்த பத்தாவது நிமிடம் பஸ் அவள் செல்ல வேண்டிய அலுவலகத்தின் முன் இறக்கிச் சென்றது. இறங்கியவர்களின் பாதம் முன் செல்ல தயங்கியது. அவள் நின்ற இடத்திலே நின்று இறைவனை வேண்டிக் கொண்டு முன்நோக்கி நடந்தாள்.

 

உள்ளே சென்று அமர்ந்திருந்திருந்து, சுற்றிலும் விழிகளை சுழல விட்டவள். ஆங்கே அவளைப் போலவே எட்டுப் பேர் இன்ரவியூக்கு வந்திருந்தனர். இவர்களை ஜெயித்து நான் வேலையில் அமர்வேனா… என்று கேட்ட மனதின் ஓசயை அடக்கிக் கொண்டு நினைவுக்கு வந்தவளின் முன்னே, அலுவலக பையன் வந்து நின்றான்.

 

“தியா என்று யார்? இருக்கிறீர்கள்” உள்ளே வரவும் என்றான்..

 

அவள் எழுந்து உள்ளே சென்று முறையாக வணக்கம் கூறி இருக்கையில் அமர்ந்தாள். இருபது நிமிடம் சரமாரியான கேள்விகள். தலை விறுவிறுத்தது அவளிற்கு, இருந்தும் அத்தனை கேள்விகளையும் எளிதாயும், துணிச்சலுடனும் மேற்கொண்டாள்.

 

அந்த நிறுவன தலைமையதிகாரி “ஓகே தியா உங்க மெயிலுக்கு நாங்க பதில் அனுப்புகிறோம். இப்போது நீங்க போகலாம்” என்றார்.

 

நன்றி கூறி வெளியே வந்தவள் பஸ்நோக்கி பயணமானாள்..

 

தியாவிற்கு வேலை கிடைக்குமா?…….

 

தியாவின் வாழ்வில் மாறுதல்கள் வருமா…?

 

அன்று இரவு அவள் மெயில் செக் பண்ணும் போது அவளிற்கு அவள் இன்ரவியூக்கு சென்று வந்த அலுவலகத்தில் இருந்தும் மெயில் வந்திருந்தது. அதில் தியா வேலைக்கு தெரிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அவள் இன்னும் இரண்டு தினங்களிற்குள் வந்து அலுவலகத்தில் இணைந்து கொள்ள வேண்டுமெனவும் அவளது பணி கொழும்பு என்ற இடத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

‘கடவுளே முருகா,வல்லிபுரமாயவா’ இந்த இடத்தில் இருந்து எனக்கொரு முடிவும், மாற்றமும் தந்ததற்கு நன்றி என மனமுருகி தியானித்தாள்.

 

அவள் அன்றே தனது பெட்டி படுக்கைகளை மூட்டை கட்டி வைக்க ஆரம்பித்தாள். கொழும்பில் அவளுக்கு அவளுடன் படித்த நண்பி சசி இருந்தாள். அவர்கள் இருவரும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போதே உற்ற நண்பிகள். அவள் மூலம் தங்குவதற்கு இடமும் பார்த்து விட்டாள். சரியாக வேலையில் சேர்வதற்கும் முதல் நாள் தனது விடுதியை காலி செய்து கொண்டு நண்பி பார்த்துக் கொடுத்த இடத்திற்கு சென்றவளின் மனம் ஆறுதலுற்றது.

அங்கே ஒரு வயதான பெண்மணி மட்டுமே இருந்தாள். அவரது கணவன் இறந்து விட்டார். பிள்ளைகள் வெளிநாட்டில் என்று கூற அவளிற்கு அந்த இடம் பிரியமானதாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாய் தோன்றியது.

 

அடுத்த நாள் அவள் சரியாக எட்டு மணிக்கு அலுவலகம் கிளம்பினாள். அங்கே அவளுக்கான இடத்தை காண்பித்து “இது தான் உங்கள் இடம். உங்களது வேலை கணினி பக்க வடிவமைப்பு செய்தல்” என்று கூறினார்கள். அவளது விரும்பிய தொழில் என்றமையால் முதல் நாள் தனது வேலையை ஆரம்பித்தாள்.

 

முதல் நாளே அலுவலகத்தில் அவளது திறமைமேல் அதிகாரிகள் நம்பிக்கை வைக்கும் வண்ணம் சிறப்பாக கொடுக்கப்பட்ட வேலைகளை செய்தது மட்டுமன்றி அவளருகில் இருக்கும் வினோதினி, அகிலன், சுஜாதா ஆகியோரிடமும் நட்புடன் புன்னகைத்தாள்.

 

அவள் வேலைக்கு சேர்ந்து இரண்டு மாதகாலமாகின்றது. எண்ணெய் தடவிய இயந்திரம் போல சீராகச் சென்றது. அவள் வாழ்க்கை அன்றும் வழமை போல அவளள் கம்பியூட்டரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது அகிலன் அறக்கப்பறக்க ஓடி வர அவனைப் பார்த்த தியா..!

 

“ஏய் அகிலன் ஏண்டா ஓடி வாறாய்” என்றாள்.

 

“இல்லை தியா அது ஒரு குட் நியூஸ் என்றான்.”

 

“என்னது உன்னை பேய் துரத்தி, அதுக்கு பயந்து நீ ஓடி வா்றது குட் நியூஸா…..?”

 

“அது குட்நியூஸ் இல்ல அகில்.குட் ஜோக் அகில் என்றாள. பக்கத்தில் இருந்த வினோதினி.

 

“போங்கடி நீங்களும் உங்களது காமெடியும், சகிக்கல்லை. ஒரு மனுசன் குட்நியூஸ் சொல்ல வந்தா அதை கேட்கனும், அதை விட்டிட்டு கலாக்கிறிங்களாடி” என்றான் அகில்.

 

“இல்லை அகில் உன்னை கலாய்ப்பமா….. நாங்கள் கழுவிகழுவி அல்லவா ஊத்துவோம்”. என்றாள் சுஜாதா.

 

“இந்தா பார்றி சுஜா உனக்கு சிரிக்கவே தெரியாத புருசன் வருவான். அப்ப பார் இந்த அகிலின் சிரிச்ச முகம் ஞாபகத்துக்கு வந்து கொல்லும்” என்று சபித்தான்.

 

“ஐயோ..! டேய் அவனுக்கு சிரிக்கத் தெரியாவிட்டிலும் பரவாயில்லை உன்ர முகம் மட்டும் கனவில வரவே கூடாதுடா.அப்புறம் நைட் தூக்கம் காலி……”என்றான் சுஜா.

 

“சரி பின்னே போங்கடி உங்களுக்கு குட் நியூஸ் சஸ்பென்ஸ்.” என்றான் அகிலன்.

 

“ஓகே டா அகிலன் என்ன குட் நியூஸ் சொல்லேண்டா” என்றான் தியா.

 

“இல்லை தியா உனக்கு இது புது நியூஸ் ஆனா சுஜா, வினோக்கு இது பழசு” என்றான் அகில்.

 

“ப்ளீஸ் அகில் அண்ணா சஸ்பென்ஸ் வைக்காதடா தாங்க முடியல்ல மண்டை வெடிச்சிடும். ஏனென்று சொல்லுடா” என்று ஒருமை, பன்மை எல்லாம் போட்டு கேட்டான் தியா.

 

“இல்லடி நம்ம ஆபிசுக்கு

ஒரு ஆள் நாளைக்கு வருகிறார்”என்றான்.

 

“யார்?யார்? யார்?” என்று மூன்று குரல்கள் வெளி வந்தன கேட்டது தியா, சுஜா, வினோ….

 

“யார்றா வாறது அகில்” என்றாள் வினோ

 

“ம்ம்… அது வந்து என்று இழுத்தாள்

 

“ப்ளீஸ்டா அகில் நீ யார் எண்டு சொல்லாட்டியும் பராவியில்லை ராகம் இழுக்காதேடா?”என்றாள் சுஜா.

 

“நீ சொல்லாட்டிப் போ நாளைக்கு நாங்களே யார்  என்று தெரிஞ்சுக்கிறோம்” என்றாள் தியா.

 

“இவன் சும்மா பில்டப் பண்ணி, எங்களை கடுப்பேத்துறான்டி தியா” என்றாள் வினோ.

 

“அடச்சீ வாயை மூடுங்கடி சும்மா மூக்கால முகாரி வாசிக்காதீங்கடி. நானே சொல்லுகின்றேன். என்ன? விசயம்” என்று கூறினான் அகிலன.

 

“என்ன? சொல்லு அகில்.” என்றாள் தியா.

 

“ம்ம் நம்ம தியா கேட்கிறதால சொல்லுறன்” என்றான் அகிலன்.

 

“நாளைக்கு யார்? நம்ப ஆபிசுக்கு வருககிறது என்றால்…… என்று இழுத்தவன் முதுகில் மூன்று அடிகள் விழுந்தன’

 

“அடியேய் ஏண்டி அடிக்கிறீங்க இந்த பச்சைப்புள்ளயை” என்று கத்தினான் அகில்

 

“நீ குட் நியூஸ் சொல்லுகிறேன் என்று எங்கள் உயிரைக் குறைக்கிறியேடா.. அதுக்குதான் இது…….. ஒன்று நீ எண்ணமாட்டார் எண்டு சொல்லு இல்லை எண்டா அடி வாங்கி சாவு” என்றாள் வினோ.

 

“ஏய் வருங்காலத்தில் ஒரு பொண்ணுக்கு புருசனா வரவேண்டிய தகுதி அனைத்தும் எனக்கு இப்ப இருக்குதடி.. இப்ப என்னை அடிச்சு என் கைகாலை உடைச்சி ஒரு அப்பாவி ஆம்பிளையின் மனதை நோகடிக்கிறீங்களேடி.” என்று அலறினான் அகில்.

 

“ஆமாம்டா அப்பாவிதான் அது நீயில்லை உன்னைக் கலியாணம் கட்டிக் கொண்டு வரப்போற அந்த பொண்ணு தான் அப்பாவி” என்றார்கள் மூவரும்.

 

“ஈவு இரக்கம் இல்லாத ராட்சசிகளே…..! ஒரு சின்னப்பையன் என்று பார்க்காமல் இந்த அடிஅடிச்சு ரவுண்டு கட்டிறிங்களேடி. உங்க புருசன் மாரையும் இப்பிடித்தான் வருங்காலத்தில் அடிச்சு துவைச்சு காயப் போடுவாங்களடி” என்றான் அகில்.

 

“டேய் நீ எங்கட புருசன்மாரை பற்றி கதைக்கக் கூடாது நாங்க அவனுங்களை ரீட் பண்ணுற விதமே வேற லெவல் தெரியுமா? என்றாள் சுஜா.

 

“பண்ணிட்டாலும் அவங்க வாழ்க்கை உங்க கையால அழியணும் எண்டு எழுதியிருந்தா அதுக்கு நான் என்ன பண்ணமுடியும் கடவுளே..! அந்த மூன்று பசங்களையும் நீ தான் காப்பாற்ற வர வேணும்  என்றான் அகில்.

 

‘அகில் கடைசியா கேக்கிறன் சொல்ல முடியுமா? முடியாதா?” என்றாள் வினோதினி.

 

‘சரி சரி கூல் டவுண் பேபிஸ் நான் சொல்லுறன் சொன்னால் என்ன தருவீங்க’ ஜமீன் சாப்பாடு” என்றான்.

 

“ம் முதல்ல தந்தது போலவே மூனுபேரும் சேர்ந்து இடிஆப்பம் என்று இழுத்தாள்” சுஜா.

 

‘என்னடி நீங்க பொம்பிளைகளா …?  இல்ல பொறுக்கிகளாடி.” என்றான் அகில்.

 

“நாங்க மூன்று பேரும் பொறுக்கிப் பொம்பிளைகள், வேணும்னா சாம்பிள் காட்டட்டுமா? என்றனர் மூவரும் கோரசாக.

வேண்டாம் டி சாமிகளா …. உங்க சாம்பிளும், சாப்பாடும் ஆளை விடுங்க, நான் போறேன்” என்றான் அகில்.

 

“அப்பிடியா…? நீயா வருவியாம், குட் நியூஸ் எண்டுவியாம் யாரோ நம்ம ஆபிசுக்கு வர்றாங்க எண்டு சொல்லுவியாம், பிறகு நாங்களே என்ன? என்ன? கேட்டா கதை கதையா அளப்பிங்களாம்…! பிறகு சொல்லவந்ததை சொல்லலாமல் எங்களை சுத்தல்ல விட்டுட்டு எஸ்கேப் ஆடுவிங்களாம்….. என்ன கதையடா இது?” கொதித்து விட்டனர்.

 

‘இவர்கள் இண்டைக்கு என்னை மாங்காய்ச்சம்பல் போடாமல் விடமாட்டார்கள்’ என மனசுக்குள் நினைத்துக் கொண்டு ஒரு வித சிரிப்பு சிரித்தான்.

 

“டேய் அகில் இந்தாடா ருசு பேப்பர் துடைச்சுக்கடா..! நீ சிரிச்ச சிரிப்பில வழியுது பார்” என்றாள் சுஜா.

 

“யேய்…. ரொம்ப டமேஜ் பண்றிங்கடி” என்றான் அகில்.

 

‘நாங்கடமேஜ் பண்ணல நீ சொல்ல வந்ததை சொல்லீற்று போடா” என்றாள் வினோ.

 

“சரி ரொம்ப கோபப் படாதீங்கடி” நாளைக்கு நம்ப ஆபிசுக்கு நம்ம ஹீரோ, நம்ம ஆபிசோட கனவு நாயகன்,  நாளைக்கு நம்ம ஆபிசுக்கு வாறாராம” என்றான் அகிலன்.

 

“யாருடா”என்றாள் சுஜா.

 

“ம் இரண்டு வருசத்துக்கு முதல் எம்.எஸ்.சி படிக்க லண்டனுக்கு போனாரே நம்ம எஞ்சினியர் செந்தூரன். அவர் தாண்டி இப்ப நம்ம நம் ஆபிசுக்கு சீவ்ப் எஞ்சினியரா பிரமோசன்ஸ் வாறார். இனி நமக்கு ஜாலிதான்’ என்றான் அகில்.

 

‘எத்தனை பொண்ணுங்க வயித்தெரிச்சலை வாரிக் கட்டிக் கொண்டு போனார் இப்ப மறுபடியும் அந்த பொண்ணுங்க நெஞ்சில பாலை வாக்கிற மாதிரி, மறுபடியும் கனவு நாயகனாகவே வாறார்.” என்றான்.

 

“ஏண்டா பொம்பிளை பொறுக்கியா …!” அவன் என்றாள் தியா.

 

“தியா டூ மச் என்றான் அகில். நீ நினைக்கிற மாதிரி எல்லாம் அவர் இல்லை. எல்லாருக்கும் அவரை பிடிக்கும் பொண்ணுங்க அவருக்கு மேல விழுந்து விழுந்து பழகுவாங்க, ஆனா அவர் யாரையும் கண்டுக்க மாட்டார். எல்லாரையும் கட்பண்ணி விட்டுடுவார். அதால பொண்ணுங்க எல்லாம் இவரை கண்டாலே பனியாய் உருகுவாங்க” என்றான்.

 

“ஏய் உன் கனவு நாயகனை பார்த்து நாங்க ஒண்ணும் வழியமாட்டோம்’ என்றனர் மூவரும்.பார்க்கலாம் உங்கள்ள யாராவது ஒருவர் என்கிட்ட,  அவருக்கு கொடுக்க லவ் லெட்டர் தந்து கூட விடலாம்…!” என்றான் அகில்.

 

“பார்க்கலாம் நீயும் உன் கனவு நாயகனும”என்றான் தியா….!

 

“பாா்க்கலாம் தியா” என்றன் அகில்.

“நீ புது சீவ்ப்பை பற்றி கதைக்கிறதையும்,புகழ்றதையும் பார்த்தால் எனக்கொரு டவுட்.”என்றாள் தியா.

 

“என்ன?” என்றான் அகில்.

 

“ஒரு ஆம்பிளையை  பற்றி இப்பிடி,அப்படி ஆகா,ஓகோ என்று புகழந்து தள்ளுறியே…….அவனாடா

நீ….?” என்றாள் தியா.

 

“ஏன் ? தியா.நீயா..? இப்படி பேசுகிறாய்.என்னை அண்ணா அண்ணா என்று சொல்லுவியே…நீயே இப்படி பேசலாமா  அம்மா”. என சிவாஜி பாணியில் இழுத்தான்.

 

“இதுக்கு மேலேயும் பேசுவேன் பார்கிறீாிகளா அண்ணா.”என சாவித்திரி பாணியில் தியா இழுக்க….”

 

“அம்மா,தாயே நீ செய்தாலும் ஆளை விடு எஸ்கேப் என்று கூறிக் கொண்டு”  வெளியேறினான். அகில்.

Advertisement