Advertisement

 Episode 17
 
மதிலேறி குதித்த செந்தூரின் மனநிலை இலகுவாயிருந்ததனால், அவன் தன் வீட்டுக்கு குறுக்குப்பாதையினூடாக நடராஜா சர்விஸ் மூலம் வீட்டருகில் வந்தவனுக்கு ‘அடடா அதற்குள் வீடு வந்து விட்டதே.’ என்றிருந்தது. 
 
செந்தூரின் அண்ணா கதிரவன்,  செந்தூரை முதல் நாள் இரவு தியா வீட்டுக்கு முன் இறக்கி ‘விட்டுவிட்டு’ வந்தவன் மறுபடியும் ஏற்றி வர ஃபோன் பண்ணுவான் என எதிர்பார்த்து ஃபோனை சைலண்டில் போடாது தன் கையெட்டும் தூரத்திலயே வைத்து விட்டு தூங்கினான்.
காலையில் எழுந்து ஃபோனை பார்க்கவும் தம்பிக்காரன் அழைத்ததற்கான எந்த தகவலும் இல்லாதிருக்கவே அவனுக்கு ‘படபட’த்தது. சில வேளை வீட்டுக்கு வந்து விட்டானோ? என நினைத்துக்கொண்டு, எழுந்து தாய் வீட்டுக்கு சென்றவன் அதிகாலையிலே வந்து நின்ற மூத்த மகனை என்ன? ஏதாவது பிரச்சனையா என விசாரித்த  தாயாரை சமாளித்துக் கொண்டு இருக்கவும், வெளிக்கேற்றை திறந்து கொண்டு வந்த செந்தூரைக் கண்டு கொண்ட தமயன் “அது அம்மா தம்பியிடம் பேச வேண்டும் என கூறிக்கொண்டு அருகிலே வந்து விட்ட தம்பியை அழைத்துக்கொண்டு அவனது றூமிற்குள் சென்றன்றான்.
 
“என்ன? அண்ணா இந்த நேரத்திற்கு என்னிடம் என்ன? பேசப்போகின்றாய்.” என்றான்.
 
“டேய்…இப்போது தான் தியா வீட்டில் இருந்து வருகிறாயா?”
 
“ம்ம்…”
 
“என்னடா….! உண்மையாகவா சொல்கின்றாய். நீ ஃபோன் பண்ணி பிக்கப் பண்ணுவதற்காக வரச்சொல்வாய் என நினைத்து தூங்காமல் வெயிட் பண்ணினால், நீ இப்போது லா… லா… பாடிக்கொண்டு வருகின்றாயா… ? அது சரி விடு. தியாவிடம் நீ யார்? என்று சொல்லி விட்டாயா? அவளுக்கு உன்னை ஞாபகம் இருக்கின்றதா? நீ சொன்னதற்கு அவள் என்ன? பதில் சொன்னாள்.இரண்டு பேரும் சமாதானமாகி விட்டீர்களா?” என தமயனின் ‘படபட’ப்பை பார்த்து அவனக்கு மனதில் குற்ற உணர்வெனும் பாரம் ஏறிக்கொண்டது.
 
“அண்ணா….. அண்ணா கூல் டவுன். நான் யார்? என்று தியாவிடம் சொல்லவில்லை.”
 
“என்னடா சொல்கின்றாய். அப்போது இரவு பூராகவும் என்ன? சிவபுராணம் படித்தாயா….? என கடுப்பாகினான்.” கதிரவன். 
 
“இல்லை அண்ணா…. அவ வீட்டு மெட்டைமாடியில் படுத்து தூங்கி விட்டேன்.” என்றான்.
 
“அஆ… இருக்கும். நீ செய்தாலும் செய்திருப்பாய். என புன்னகைத்த தமயன், சரிடா சீக்கிரமாய் இல்லை இல்லை இன்றைக்கே சொல்லவேண்டும், சொல்கின்றாய் அவ்வளவு தான்.நான்
கிளம்புகின்றேன்.”என்று கூறிவிட்டு அறைக்கதவை திறந்து வெளியே சென்றான்.
 
அவனும் தன் வாழ்வை அவளுடன் இணைத்துக்கொள்ள எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டாலும் அணைத்தும் முயற்சிகளும் ஊற்றி மூடிக்கொள்கின்றனவே….! இருந்தாலும் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி எனும் நோக்கில் அவன் தன் முயற்சிகளை மேற்கொண்ட வண்ணமே இருக்கின்றான்.
 
சீக்கிரமாக புறப்பட்டு ஆபிசுக்கு கிளம்பினான் செந்தூர்.அதைப்போலவே தியாவும் வேகமாக தன் வேலைகளை முடித்துக்கொண்டு புறப்பட்டு வந்து பஸ்சுக்காக வீதியில் நின்று பஸ் வருகின்றதா? என எட்டிப்பார்த்த வண்ணம் நின்றவள் முன் ஸ்மூத்தாக ஒரு கார் வழுக்கிக்கொண்டு வந்து நிற்கவும் அவள் பயந்து பினபுறமாக  இரண்டெட்டு எடுத்து வைத்தவள்,திரும்பி பார்த்து கார்க்காரனை முறைத்தவள், ”ஏய் என்ன? காரை வானத்திலா ஓட்டுகின்றாய்.காலையிலே கண்ணை பின் பிடரிக்குள்ளேயா வைத்திருக்கின்றாய். சரியான கூறுகெட்ட குக்கர்.” என அவள் தி்ட்டி முடித்த பின்னரே காரின் கறுப்பு நிற கண்ணாடி கீழே இறக்கப்பட்டது.
 
இறக்கிய கண்ணாடி வழியே குனிந்து பார்த்தவள்  திகைத்து நின்றாள். ‘இவனா தெரியாமல் யாரோ என நினைத்து கண்டபடி என்னென்னவோ பேசி விட்டேனே, இவனுக்கு கேட்டிருக்குமோ? கண்ணாடி பூட்டித்தானே இருந்தது.என்றாலும் இவனுக்கு பாம்புக்காது, சனி இன்று எனக்கு மேல் ஏறி சவாரி செய்கின்றது போல…  சரி சமாளிப்போம்.’என நினைத்துக் கொண்டு அவனைப்பார்த்தாள்.
 
அவள் பார்த்தவுடன் அவளைப்பார்த்து கண்ணடித்தவன், “ கமோன் தியா சீக்கிரமாக வந்து ஏறிக்கொள்.” என்றான்.
 
அவன் கண்ணடித்ததில் கடுப்பானவள் அவன் கூப்பிடுவது கேட்காதது போலவும் அவனை தெரியாதது போலவும் சற்று தள்ளி நின்று கொண்டாள்.
 
‘ஆரம்பிச்சிட்டாடா என் பொண்டாட்டி அட்ரிரியூட் காட்டுவதற்கு’ என்று நினைத்தவாறே “ஏய் கார்ல ஏறுடி… பார் என் கார் பின்னால் எவ்வளவு வாகனங்கள் வந்து ட்ராபிக்ஜாம் பெரிதாகப்போகின்றது வா.” என்றான்.
 
“உன்னை யார்? காரை நிறுத்த சொன்னது.உன் உதவியை எதிர் பார்த்து காத்திருப்பவர்களுக்கு போய் ஹெல்ப் பண்ணு சரியா? என்றவள் சத்தம் வெளியே வராத வண்ணம் உதடுகளை அசைத்து போடா என்றாள்.”
 
“பிடிவாத்திற்கு பிறந்தவளே இருடி வருகின்றேன்.” என்று கூறிய வண்ணம் காரை நிறத்தி விட்டு இறங்கி வந்தவன் அவளருகில் வந்து அவள் கத்த கத்த தியாவின் கையை பிடித்து, ‘தரதர’ என இழுத்த வண்ணம் காரருகில் கொண்டு போய் கதவை திறந்து அவளை உள்ளே தள்ளி கதவை சாத்தி விட்டு அவனும் காரில் ஏறி காரை ஸ்ராட் பண்ணினான்.
 
“டேய்…. அறிவு கெட்டவனே நீ எப்பாது என்ன? செய்வாய் என்று சொல்ல மாட்டாயா? அரைலூசு.”
 
அவனோ, நீ திட்டுவதை திட்டு, தேவையென்றால் அடிக்க கூட செய்.என்ற நினைப்பில் காரை ஓரளவு வேகமாக செலுத்தினான்.
 
அவர்களது ஆபிஸ் தாண்டி வாகனம் செல்லவும், அவள் “ஆபிஸ் தாண்டி காரை ஓட்டிக்கொண்டு எங்கே தான் போய் தொலையப்போகின்றாயோ? காரை நிறுத்தேன்டா…” என அவள் கத்தவும் தான் அவன் சுயநினைவுக்கு வந்தான்.
 
“ஏய் எதுக்கடி இப்ப ஊரைக்கூட்டுகின்றாய்.” என அவனும் கொஞ்சம் கடுமையாக சொல்வும்,அவளுக்கு பிபி,சுகர் எல்லாம் உச்சந்தலை வரை ஏறியது.
 
“இப்போது,இங்கே காரை நிறுத்துகின்றாயா? இல்லை கார் கதவை திறந்து குதித்து செத்து தொலையவா?” என கூறிக்கொண்டே கதவை திறக்க முயன்றாள்.அது ஓட்டமெட்டிக் லொக் ஆகியிருந்தது. 
 
அவன் ஆள் நடமாட்டம் குறைந்த ஒரு இடத்தில் இருந்த பெரிய வாகை மரத்தின் கீழ் நிறுத்தி எஞ்ஜினை அணைத்தான்.
 
“ஆபிசுக்கு ரைம் ஆகிறது.இப்போது எதற்கு இங்கே கொண்டு வந்து காரை நிறுத்தி விட்டு, என்னை இறங்க கூட விடாது இப்படி எதற்காக அடைத்து வைத்திருக்கின்றாய் . உனக்கு என்ன? தான் பிரச்சனை சொல்லித் தொலையேன்டா.”
 
“ம்… சொல்லுகின்றேன் முதலில்  ஆபிசுக்கு இன்று நீ லீவு என்று ஃபோன் பண்ணி சொல்லு.அதன் பிறகு என்ன மாட்டர் என்று நான் சொல்கினறேன்.”
 
“என்னது மாட்டரா? ஏன் என்னை பார்த்தால் உனக்கு என்ன? தோன்றுகிறது. நீ மாட்டர் சொல்ல உனக்கு வேறு ஆள் கிடைக்காமல் நான் தான் கிடைத்தேனா?” என பொரிந்து தள்ளினாள்.
 
“ஆமாம் தெரியாமல் தான் கேட்கின்றேன்.நீ எப்பவுமே இப்படித்தானா? இல்லை கொஞ்சநாளாகத்தான் இப்படித்திரிகிறாயா? நான் என்ன? சொல்கின்றேன் நீ அதை எப்படி புரிந்து கொள்கின்றாய்.இனி என் பாடு ரொம்ப கஸ்ரம் தான் போல….”
 
அவள் இவனது ரோதனை தாங்காது ஃபோன் போட்டு ஆபிசுக்கு லீவு சொல்லிவிட்டு,”இப்போது என்ன? சொல்லவேண்டும் சொல்லு?”
என தலையை திருப்பிக் கொண்டாள்.
 
அவன்  அவளது திரும்பியிருந்த முகத்தை தன் கைகளால் மிருதுவாக தன்பக்கமாக திருப்பி “தியா நான் சொல்ல வருகின்ற விடயம் ரொம்ப முக்கியமானது அதை நீ கொஞ்சம் சீரியசாக கேளேன் ப்ளீஸ்.” என்றான்.
 
சரி என்ன? சொல்லு?
 
“இந்தா இதைப்பார்.” என கையிலிருந்த மொபைலை காட்டி அதிலிருந்த போட்டோவை பார்க்குமாறு காட்டினான்.
 
அவள் அதைப்பார்த்து விட்டு “இப்போது இதை எதற்கு காட்டுகின்றாய். பெரிய பிக்காசோவின் ஓவியமா? போயும் போய் இதை எதுக்கு ஃபோன்ல வைத்து பாதுகாக்கிறாய்? ஏன்?” என்றாள்.
 
அவளது பதிலைக்கேட்டு அதிர்ந்தவன். ‘அப்படி என்றால் அவளுக்கு என்னை யார்? என்று வந்த நாளில் இருந்தே தெரிந்திருக்கின்றது. என்னை யாரென தெரியாத மாதிரி நடித்தாளா….!’ என நினைக்கும் போதே அவன் மனமெல்லாம் ரணம்ரணமாய் வலித்தது. “ஏன் தியா நான் உன் புருசன் என்று தெரிந்துமா? தெரியாதது போல நடித்தாய்.”
 
“நான் நடித்தேன் என்கிறாயே அப்போது நீ என்ன? செய்து கொண்டிருந்தாய்.உனக்கும் தெரிந்து தானே இருந்திருக்கிறது.நான் யார் என்பது பற்றி, என்னை பார்த்த அடுத்த நொடி நீ என்னை யார் என்று அறியாதது போல தானே இருந்தாய்.” என்றாள்.
 
“சரி தியா தப்பு என் மேல் தான் போனது போகட்டும். நாம் இருவரும் மறுபடியும் கணவன்,மனைவியாக நல்ல படியாக வாழலாம்.” என்றான். 
 
“ச்ச்சச… ஏன்? உன் ரசனைக்கேற்றால் போல வேற எவளும் கிடைக்கவிலலையா?  அல்லது அலுத்துப்போய் விட்டார்களா? என்றவள், நானும் நீ செத்துப்போய் விட்டாய் என்று நினைத்திருந்தேன்.ஆனால் நீ போய்ச்சேரவில்லை போல….!  மறுபடியும் உன்னை பார்த்தால் எனக்கு எந்த பிரச்சனையுமில்லை.ஆனால் நீ ரைம் பாஸ் பண்ணுவதற்காக என்னுடனான உறவை புதுப்பிக்க நினைக்கின்றாய் பார் அது அதுதான் எனக்கு
பத்திக்கிட்டுவருகிறது”.என்றாள்.
 
“தியா ப்ளீஸ் நான் சொல்லுவதை கேள்.நான் உன்னை தேடிக்கொண்டு தான் இருந்தேன்.நீ யுனிவசிட்டியில் படித்துக்கொண்டிருந்தாய் அதனால் உன் படிப்பு முடியட்டும் என நினைத்தேன்.என்னால் ஏற்கனவே உனக்கு ஏகப்பட்ட துன்பங்கள்.உன் படிப்பை குழப்பி விடக்கூடாது என வெயிட் பண்ணிக்கொண்டிருந்தேன்.
அந்த நிலையில் எனக்கும் மேற்படிப்புக்காக கட்டாயம் வெளிநாடு செல்ல வேண்டிய நிலமை.உன் தாத்தா எப்படியும் உன்னை நன்றாக பார்த்துக்கொள்வார் என நினைத்தேன். பட் அவர் திடீரென இறந்து போவார் என நினைக்கவில்லை.
இன்னும் சொல்லப்போனால் நான் உன்னை தேடி ஊருக்கு போவதற்காக ஆபிசுக்கு வந்த அன்றே லீவு சொல்லியிருந்தேன்.லீவு சொல்லி அரை மணி நேரத்திற்குள் என் முன்னால் நீ வந்து நிற்பாயென நான் நினைக்கவேயில்லை. எவ்வளவு ஷாக்,
எவ்வளவு சந்தோசம் அப்படியே உன்னை இறுக்கமாக ஹக் பண்ணி உன் முகம் முழுவதும் முத்தங்களை வாரி வழங்கி என்னை மன்னித்து விடு கண்ணம்மா என கேட்க வேண்டும் போல என்னுள் எழுந்த வேகத்தை அகில் அருகிலிருந்தனால் கட்டுப்படுத்திக்
கொண்டிருந்தேன். எவ்வளவு கஸ்ரம்.ஆனால் உன்னிடம் என்னைக்கண்டு எந்த மாற்றமுமில்லை. என்னை உனக்கு அடையாளம் தெரியவில்லையோ என நினைத்தேன்.ஆனால் என்னை யாரென்று தெரிந்தும் தெரியாதது போல இருப்பதற்கு அவ்வளவு இலகவாக இருந்ததா? 
தியா.”என்றான்.
 
“இல்லை. முதலில் உன் நினைப்பு இருந்தால் தானே உன்னை இனங்கானமுடியும்.உன் முகமே எனக்கு நினைவில் இல்லை.அப்போது இருந்தது போல இப்போது இல்லை. முகத்தில் நிறைய மாற்றங்கள்.என்னால் உன்னை இனங்காண முடியவில்லை.”
 
“ஆனால் இப்போது எப்படி என்னை தெரிந்து கொண்டாய் தியா.”
 
“உன் அண்ணி மொபைலில் உங்கள் குடும்ப படம் காட்டினார்கள்.ஆனால் அப்போது இருந்த உனக்கும் இப்போதிருக்கும் உனக்கும் ஏகப்பட்ட மாற்றங்கள். என்னால் நம்பவே முடியவில்லை. ஆனால் வேறு வழியில்லாமல் நீ தான் என்பதையும் ஒத்துக்கொள்ள வேண்டியிருந்தது உண்மை தான்.
உன்னை யாரென அறிந்த பின்பு நானும் எவ்வளவு தூரம் தள்ளிபபோக முயற்சிக்கின்றேன்.அது உனக்கு பொறுக்கவில்லை. என்னை துரத்தி குற்றுயிராக்குவதே உன் வேலையாகி விட்டது.” என்றாள்.
 
“தியா ப்ளீஸ் நடந்து போனவற்றை மற.இனி இருக்கும் காலத்தை நல்லபடியாக மாற்றலாம்.” என்றான்.
 
“எதை மறக்கச்சொல்கிறாய்,உன்னுடைய பெயரையே  இப்போது கொஞ்ச நாட்களுக்கு முன்பு தான் தெரிந்து கொண்டேன் என்பதையா? இல்லை என்னை பிடிக்கவில்லை என்பதை ஆயிரம் தடவை என் முகத்தை பார்த்து சொல்வாயே…..! அதை மறக்கவா?
அதைக்கூட விடு குடி போதையில் உன் காதலி ப்ரீத்தி என நினைத்து என்னுடன் உறவு கொண்டு படுக்கையில் ப்ரீத்தி…. ப்ரீத்தி என்று உளறினாயே…! அப்போது கூட உன் காலில் விழுந்து கெஞ்சி கதறி அழுதேன் என்னை விடு நான் ப்ரீத்தி இல்லை என்று எவ்வளவு தரம் கதறியிருப்பேன் ஆனால் நீ…நீ…” என்றவளின் குரல் அழுகையினூடு விம்மி வெடித்தது.
 
அவளது அழுகை கண்டு அவனின் மனம் வெடித்து சிதறியது.அவள் ஆற்றுவார் தேற்றுவார் இன்றி குமுறி அழுவதை பார்த்தவன் கண நேரம் தயங்காது அவளை இழுத்து தன் மார்போடு அணைத்து இறுக்கமாக கட்டிக்கொள்ளவும், அவளது அழுகை இன்னும் அதிகரித்தது.அவள் அழுகை அதிகரிக்கவும் மறுபடியும் அவனது அணைப்பும் இறுகிக்கொண்டது.









Advertisement