Advertisement

Episode 15
கவிமதி காட்டிய போட்டோவை பார்க்காது, “என்னக்கா இது.” என்றான்.
“ம் போட்டோ.” என்றாள் தமக்கை.
“அது தெரிகிறது.அதை ஏன் என்னிடம் காட்டுகிறாய்.உனக்கு கண் தெரியாதா? அக்கா.”
“இல்லடா, அக்காவுக்கு கண் தெரியும்.உனக்கு கண் தெரியுமா என்று செக் பண்ணி பார்க்கின்றேன்.” என்றாள் தமக்கையும் விட்டுக் கொடுக்காது.
அக்கா ப்ளீஸ் நானே செம  ரென்சன்ல இருக்கின்றேன். நீ வேற இன்னும் கடுப்பை கிளப்பாமல் என்னைக் கொஞ்சம் தனியே விட்டால் ரொம்ப சந்தோசம்.”
“சரிடா அதெல்லாம் பெரிய பிரச்சனையே இல்லை. இந்தா இதை பிடி இதை றூம்ல கொண்டு போய் வைத்து ஆற அமர பார்த்து விட்டு பிறகு சொன்னால் போதும்.”என  போட்டோவை கைக்குள்ளே திணித்த தமக்கையை உண்டு. இல்லை. எனும் அளவிற்கு, கோபம் வந்தாலும், அதை அடக்கி கொண்டு,கையிலிருந்த போட்டோவை கீழே இருந்த ரீப்பாயில் போட்டு விட்டு, “எனக்கு இப்போது நேரமில்லை அக்கா.அப்புறம் எப்படியும் நான் ஒத்துக்கொள்ள மாட்டேன் என தெரிந்தும், தேவையில்லாத முயற்சிகளை ஏன் எடுக்கனும்.ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும்.இதற்கு உருப்படியாக ஏதேனும் வேலையை செய்யலாமே….!” என இலவச அட்வசை தமக்கைக்கு வாரி வழங்கி விட்டு,தனது அறையை நோக்கிச் சென்றான்.
அறைக்கு சென்றவனின் காதுகளில் தமக்கை கூறியது கேட்டது. “ நீ வேண்டாம் என்றால் நாங்களும் எதுவும் சொல்லாது விட்டு விட வேண்டுமா? அப்படியெல்லாம் விட முடியாது.உன் சந்தோசம் எங்களுக்கு முக்கியமில்லாத மாதிரி ஏன் தான் நடந்து கொள்கிறாயோ….. தெரியவில்லை……!” என தமக்கை கூறியதை கேட்டு செந்தூர் ஒரு வரண்ட புன்னகையை வீசவும், அதைப்பார்த்த தமக்கையின் பேச்சு அடங்கியது.தமக்கையை பேச விடாது அடக்கிய சந்தோசத்தில் தன் றூம் நோக்கி நடந்தவன் திரும்பி தமக்கையை பார்த்து
“நீயா இழுத்து கொள்வது தான்.” என்றான்.
“நீ பேசுகிறது கொஞ்சமாவது நன்றாக இருக்கிறதாடா? ஏதோ வேண்டாவெறுப்பாக எப்போதும் பேசினால் நாங்களும் என்ன? தான்டா பண்ணுவது.ஊர் உலகத்தில யாரும் செய்யாத தப்பையா நாங்கள் செய்து விட்டோம்.உன் நல்லதுக்கு என்று நினைத்து தானே தியாக்கிட்ட அப்படி நடந்து கொண்டோம்.” என்றாள்.
“அப்படியா? ஆனால் உன்னை மாதிரி அவளும் ஒரு பெண் தான் என்று உனக்கு மறந்து விட்டதா? அவளை அன்று எனக்கு பிடிக்கவில்லை என்பது உண்மை தான்.அந்த நிலையிலும் நான் தான் வீட்டை விட்டு போனேன்.அவளை போ என்று  சொல்லவில்லை. அது மட்டுமா? அவள் ஏன்? என்ன? காரணத்திற்காக வீட்டை விட்டு போனாள் என்றாவது என்னிடம் சொன்னீர்களா? இல்லையே? எல்லாவற்றையும் நீங்களே முடிவெடுப்பது என்றால் செந்தூர் என்று ஒருவன் எதற்கு?” என்றவன் உள்ளே சென்று கதவை அறைந்து சாத்தி விட்டு கட்டிலில் தொப்பென விழுந்தவன் கண்களை இறுக்கமாக மூடினான்.மூடிய கண்கள் வழியாக கண்ணீர் கசிந்தது காதோரம் வழிந்தது.
“அம்மா பார்த்தீர்களா? இவன் என் முகத்திலடிப்பது போல பேசி விட்டு போகின்றான்.நான் இவன் நல்லதற்கு தானே இவ்வளவும் செய்தேன்.இப்போது கூட நல்ல வரன் ஒன்று வந்திருக்கின்றது.அதை  வேண்டாம் என்று சொல்கிறான். இனிமேல் இவனைப்பற்றி ஏதாவது,நல்லது,கெட்டது கதைத்தால் பாருங்கள்.நல்லதற்கே காலமில்லை.”என ‘தாம் தூம்’ என குதித்து விட்டு தாய் போட்டுக் கொடுத்த ரீயையும்,சமோசாவையும் இருந்து உண்டு விட்டு தான் தன் வீட்டுக்கு சென்றாள்.
நாளும்,கிழமையும் எவருக்காகவும்,எதற்காகவும் நிற்காது அதுபாட்டுக்கு சென்று கொண்டிருந்தது.இன்றோடு செந்தூர் லண்டனில் இருந்து, வந்து இரண்டரை மாதங்களாகின்றது. அவன் வந்த பின் தனது ‘எஸ்எஸ’ கென்ராக் மூலமாக வந்த இரண்டு,மூன்று பெரிய கட்டடங்களுக்கு ஒப்பந்தம் போட்டு,அதற்கான கட்டுமானப்பணிகளும் தங்கு தடையின்றி நடைபெற்று கொண்டிருந்தது.அவன் தன் கம்பனி வேலைகளுடன், அவன் அரசாங்க பணியையும் எந்த வித குழப்பமுமின்றி செய்தது மட்டுமல்லாது, தியாவுடனான உறவை புதுப்பதிலும் ஆர்வம் காட்டி வந்தான். அதற்கு தியாவும் ஆர்வம் காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவள் அவனை திரும்பி பார்த்தால் தானே……! அவனும், தான் யார்? என்று புரிய வைப்பதற்கு ஆயிரம் தடவைகள் முயற்சிகளை மேற்கொண்டும் அவன் அத்தனை தடவைகளும் தோற்று நின்றான். ஆனால் எடுக்கும் முயற்சியில் தோற்பவன் செந்தூர் அல்லவே….!  ஆயிரம் முயற்சிகள் தோற்றால் என்ன? ஆயிரத்தொன்று,ஆயிரத்துஇரண்டு என முயற்சிகளை தொடரந்து கொண்டே தான் இருப்பான்.
அவனுக்கு சளைத்தவளா? தியா.அவன் அவளுடன் பேச்செடுத்தாலும், அவள் காது கொடுத்து கேட்பதில்லை. வேலை விடயம் போல அவன் தன்னுடைய கேபினுக்கு கூப்பிட்டாலும், தனக்கு வேறு வேலை இருப்பதாககூறி சுஜா அல்லது வினோவை அனுப்பி விட்டு இவள் அவனை தவிர்த்தாள்.
அவனும் அவள் தனியாக இருக்கும் சந்தர்ப்பத்தை தேடி வலை வீசிக் கொண்டிருந்தான்.அவளும் அவனை நேரில் பார்ப்பதையே தவிர்த்தாள்.கிட்டதட்ட இருவருக்குள்ளேயும் தாம் சந்தித்து பேசினால் பல சங்கடமான நிலமைகள் தோன்றும்  எனவும் தெரிந்து வைத்திருந்தனர்.
அவன் உழைத்து கழைத்து வீட்டுக்கு வரும் போது மனதளவில் வெறுமையை உணர்ந்தான். அவனுடன் அப்பா,அம்மா இருந்தாலும் அவன் வரும் நேரங்களில் சில வேளைகளில் அவர்கள் வயோதிபம் காரணமாக தூங்கியிருப்பார்கள். அதில் தவறு கூற முடியாது ஏனெனில் அவன் வேலை முடித்து வரும் நேரம் அப்படி.அவன் ஊரில் உள்ள பெரிய பெரிய பில்டிங் எல்லாம் கட்டிக்கொடுத்து, கோடி கோடியாக சம்பாதித்து குவித்துக் கொண்டிருக்கினறான். அவ்வளவு பணமிருந்தும் நிம்மதியை தேடி அலைகின்றான். அன்பிற்காக ஏங்குகின்றான்.இதெல்லாம் எங்காவது கிடைத்தால் இருக்கின்ற பணமெல்லாத்தையும் கொட்டிக்கொடுத்து வாங்கி விடுவானே…..! ஆனால் அதெல்லாம் கடைகளில் விற்கிறார்களா என்ன? அது மனதில் தோன்றும் ஒரு வித உணர்வு. அது கிடைக்க வேண்டுமென நினைப்பவர்களுக்கு கிடைக்காது. அன்பு,ஆதரவை எதிர் பார்க்காதவர்களுக்கு ‘திகட்ட திகட்ட’ கிடைக்கும்.இது உலக நியதி போல.
அன்று வழமை போல தியா லஞ்ச் ரைமில் அனைவரும் லஞ்சுக்கு போய்விட,அவளக்கு வேலை இரக்கின்றது என சொல்லி விட்டு ஆபிசில் உட்கார்ந்து தனது ‘லப்டப்’ முன் இருந்து வேலை செய்து கொண்டிருந்தாள். அந்த நேரம் பார்த்து தன் காபினுக்குள்ளே இருந்து கன்டீனுக்கு செல்வதற்காக வெளியே வந்தவன் தியாவின் காபினை எட்டி பார்த்தான்.தியா மட்டும் இருந்து சீரியசாக வேலை செய்து கொண்டிருந்தாள். சுற்றி வர திரும்பி பார்த்து விட்டு யாருமில்லை என உறுதி செய்தவன் ‘மாட்டிகிட்டியா இரு வருகிறேன்.எனக்கே ஆட்டம் காட்டுறியா?’ என மனதிற்குள் நினைத்துக் கொண்டு அவள் இருக்கும் காபினை திறந்து உள்ளே சென்று அவளருகில் இருந்த இருக்கையை அருகே இழுத்துப்போட்டுக்கொண்டு அமர்ந்தவனை அவள் அவதானிக்கவில்லை.
அவளது காபின் கதவு திறந்த
சத்தம் கேட்ட தியா வந்திருப்பது அகில் என நினைத்து “அகில் ஏன்டா சீக்கிரமாக வந்து விட்டாய்”என்றாள்.அவளது கேள்விக்கு பதில் வராததை உணர்ந்து திரும்பி பார்த்தவள் அங்கிருந்தவனை பார்த்து அதிர்ந்தாள்.இவனை தவிர்ப்பதற்காக அவள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் எல்லாம் வீணாக போயிற்றே என்பதுடன் யாரும் பார்த்தால் தவறாகி விடும் என்று பதட்டத்தில் அவள் இருக்கையை விட்டு எழுந்தாள்.
“அட பரவாயில்லையே….! தியாக்கு கூட மரியாதை தரத்தெரிகின்றதே என்று உதடுகளை சுழித்தவன், என்ன? தியா எல்லா நாளும் கடவுள் உனக்கு மட்டும் தான் ஹெல்ப் பண்ணுவார் என்று ஏதாவது சட்டம் இருக்கா….. என்ன?” என்று கூறிக்கொண்டு அவன் அவளருகில் எழுந்து வர, அவள் நின்ற இடத்தில் இருந்து இரண்டடி பின் நோக்கி வைத்தவள் அதற்கு மேல் கதிரை தட்டுப்பட அப்படியே நின்றாள். அவளருகில் நெருங்கி வந்தவன் அவள் நின்ற கோலத்தை  பார்த்து விட்டு இரண்டடி தள்ளி நின்ற படி “தியா நான் உன் கூட பேசனும்.” என்றான்.
“முடியாது. ரைம் இல்லை வேக் நிறைய இருக்கிறது.”என்றாள்.
“ஓகே லஞ்ச் ரைமில் கூட சாப்பிட நேரம் ஒதுக்காது வேலை ஒதுக்குகிறவள் ஆயிற்றே……! உன் ஒருத்தி வேலையால் தான் இந்த ஆபிஸ் நடக்கிறது பாா்.அதனால் இப்போது ரைம் இல்லை. அப்படி என்றால் ஈவினிங் ஓகேயா?” என்றான்.
“எப்பவும் எனக்கு ரைம் இல்லை.உங்களுடன் பேசவும் ஒன்றுமில்லை.” என்றாள்.
“உன்னை ஒன்றும் பேசச்சொல்லி நான் கேட்கவில்லை.நான் சொல்வதை நீ கேள் என்று தான் சொல்கின்றேன்.அப்படி என்னோடு பேச வேண்டும் என ஆசை உனக்கிருந்தால் தாராளமாக பேசு நான் கேட்கின்றேன்.” என்றான்.
“உங்களோடு பேச வேண்டும் என்று எனக்கு ஆசையும் இல்லை  பூசையுமில்லை. எனக்கும் உங்களிடம் சொல்ல எதுவுமில்லை. நீங்களும் என்னிடம் எதுவும் சொல்ல தேவையில்லை.” என்றாள்.
“ச்சு…சின்னப்புள்ள மாதிரி சொன்னதையே ‘திருப்பி திருப்பி’ சொல்லாதே…..! உனக்கு இப்போது ரைம் இல்லை என்றால் உனக்க எப்போது ரைம் இருக்கிறது என்று சொல்.” என செந்தூர் கேட்டான்.
“எனக்கு எப்போதும் ரைம் இல்லை என்றவள், ப்ளீஸ் என்னை பின் தொடர்வதை நிறுத்தினீர்கள் என்றால் யாரும் என்னை பற்றி தவறாக நினைக்க மாட்டாரகள்.இப்போது நீங்கள் போகிறீர்களா? இல்லையா? நான் சாப்பிடப் போக வேண்டும்.” என கூறிக் கொண்டு தனது கைப்பையை எடுத்து கொண்டு கன்ரீன் நோக்கி நடந்தாள்.
அவன் அவளை மறிக்க எத்தனிக்கவில்லை  இன்னும் வைத்து பேசினால் இன்று முழுக்க சாப்பிடாமல் பட்டினி கிடந்தாலும் கிடப்பாள் என்பது அவன் அறிந்ததே….!
‘இப்போது போ மகளே உன்னை இன்று சந்திக்க வேண்டிய இடத்தில் சந்திக்கினறேன்.’ என மனதில் நினைத்த வண்ணம் அவனும் வெளியே சென்று விட்டான்.
அன்று ஆபிஸ் முடிந்து தன் இடத்திற்கு  தியா செல்லும் போதே காற்று பலமாக வீசி அவள் மனதையும் லேசாக்கியது. அதே போல் மழை வரும் அறிகுறியும் இருந்ததால் அவள் வழி தெருவில் நிற்காது தன் இருப்பிடம் சென்றடந்தாள்.
அன்று வழமைக்கு மாறாக செந்தூரும் வேலையை முடித்துக்கொண்டு சீக்கிரமாக வந்திருந்தான்.அவனைக்கண்ட தாய்,தந்தைக்கு மிகுந்த மகிழ்ச்சி. “என்ன கண்ணா இன்று தான் வேளையோடு வர வேண்டும் என்று தோன்றியதா? இன்றைக்காவது எல்லோரும் சேர்ந்து சாப்பிடலாம்.என்றவாறு தாய் உள்ளே சென்று உணவுப் பதார்த்தங்களை எடுத்து வைக்கவும்,செந்தூர் தான் போய் ப்ரஸ்அப்பாகி வருகின்றேன் என கூறிக்கொண்டு தன்னுடைய அறையை நோக்கிச்சென்றான்.
எல்லோரும் உணவை முடித்தக்கொண்டு தூங்குவதற்கு போன பின்பு அவன் மட்டும் ஹோலில் இருந்து தனது செல்லை நோண்டிக்கொண்டிருந்தான்.சற்று நேரம் கழித்து தமயனுக்கு போன் பண்ணி “அண்ணா நான் தியா வீட்டுக்கு போக வேண்டும்.பைக் கொண்டு வருகிறேன்.என்னை அவ வீட்டுக்கு முன்னால் ‘விட்டு விட்டு’ போ.அப்புறம் நானே நானே போன் பண்ணுகின்றேன் வந்து என்னை பிக்கப் பண்ணு.” என்றான்.
தாயை எழுப்பி, கதவை தாழ் போடச்சொன்னவன்.முக்கிய அலுவலாக வெளியே போவதாகவும்,வருவதற்கு தாமதம் ஆகலாம்.அதனால் காத்திருக்க வேண்டாம் என கூறிக் கொண்டே,பைக்கை எடுத்தக்கொண்டு கதிரவன் வீடு நோக்கிச் சென்றான்.
வாசலில் தமயன் வரவும் கூடவே சிந்துவும் வந்து அவனைப்பார்த்து “ஏன்? தம்பி ஒரே மதில் பிரிக்கும் அளவில்  தான் இரண்டு வீடுகளும் இருக்கின்றது.அதற்கு பைக் எதற்கு?” என கிண்டலாக கேட்டாள்.
அஆஆ அது உங்கள் வீட்டில் இருந்து எங்கள் வீடு வரை செல்வதற்கு உங்கள் வயதான கணவன்…….. அதுதான் என் அண்ணன் கதிரவனால் முடியாதாம். அவரை பிக்கப் பண்ண வந்தேன்.” என்றான் அவனும் கிண்டலாக……
“என் புருசனுக்கு வயசாகி விட்டதா? அவர் ஒன்றும் கிழவர் இல்லை. உங்களை விட நான்கைந்தது வயது தான் அதிகம்.” என சிந்து சண்டைக்கு வந்தாள்.
“அருகில் நின்ற தமயனை பார்த்து சிரித்த படி “அண்ணா நான் உன்னை வயதானவர் என்ற தான் சொன்னேன்.அது என்னை விட ஐந்து வயது பெரியவர் என்ற அர்த்தத்தில் சொன்னேன்.அண்ணி உன்னை சந்தடிச்சாக்கில் கிழவர் என்று சொல்கிறார்கள். கவனித்தாயா? அண்ணா.” என்றான்.
“கதிர் பார்த்தீர்களா? உங்கள் தம்பி சைக்கிள் காப்ல புகுந்து விளையாடுவதை” என்று சிந்து புகார் கூறினாள்.
இரண்டு பேருக்கும் இடையில் புகுந்த கதிர் “உங்கள் இரண்டு பேருக்கும் இன்று நான் தான் கிடைத்தேனா? ஏதோ உங்கள் பிரச்சனைக்குள் என்னை எதற்கு டமேஜ் பண்ணகிறீர்கள்.” என அவன் கெஞ்சிய பிறகே அவர்கள் சிரித்துக்கொண்டு அந்த பேச்சை கைவிட்டு கிளம்பினார்கள்.
அன்று மப்பும்மந்தாரமும், பலத்த காற்றும் அடித்து க்ளைமேட் ரொம்பவும் நன்றாக இருக்கவே, தியா அறைக்கதவை திறந்து வெளியே வந்து மொட்டை மாடியில இருட்டுக்குள் வந்து நிற்க சுழன்றடித்த காற்று அவள் தேகத்தில் பட்டு, அவள் மனதை பஞ்சுப்பொதி போல இலேசாக்கவும் சரிந்து கீழே உட்கார்ந்தாள்.
பைக்கில் வந்து சரியான இடத்தில் இறங்கி விட்டு தமயனை திருப்பி  அனுப்பியவன் அக்கம்பக்கம் பார்த்து விட்டு மதிலால் குதித்து மொட்டைமாடியில் ஏறி உட்பக்கமாக குதித்தான்.
யாரோ குதிப்பது போல் தோன்றவும் தியா பயந்து போய் திருடனாக இருக்குமோ? என நினைத்து விட்டு சுவரோடு பதுங்கினாள்.ஒ
மொட்டை மாடி இருளாக இருக்கவும் தன் செல்போனை எடுத்து லைட்டை போட்டு பார்க்கவும் தியா சுவரோடு ஒட்டியபடி இருப்பதை பார்த்தவன் அவளை நோக்கி நடந்தான்.
அந்த உருவம் தன்னை நோக்கி வருவதை உணர்ந்த தியா பீதியில் தன்னை  ஏதோ செய்ய போகிறது என உணர்ந்து “ப்ளீஸ் என்னை எதுவும் செய்து விடாதே எனக் கூறிக்கொண்டு இருந்தவாக்கிலேயே பின்புறமாக நகர்ந்தவள் அந்த உருவம் முன்னோக்கி வருவதை உணர்ந்து, “என்கிட்ட இருக்கின்ற பணம்,நகை எல்லாவற்றையும் தருகின்றேன் எடுத்துக்கொள்.என்னை விட்டுவிடு.” என்ற அவள் குரல் உள்ளே போயிருந்தது.
அவள்  இருட்டினுள் அவனை அடையாளம் தெரியாமல் தன்னை திருடன் என்று நினைத்து விட்டாள் போல என உணர்ந்தவன், போன் லைட்டை அணைத்து விட்டு,  போனை உள்ளே வைத்து விட்டு அவளின் தோளில் கைவைத்தான்.
‘ஐயோ கடவுளே தோளில் கை வைக்கின்றானே….. என்னை காப்பாற்று’ என மனதினுள் கதறினாளே தவிர அவளால் எழுந்து ஓட முடியாது அப்படியே பிரமை பிடித்தவள் போல இருந்தாள்.
“ஹேய் தியா பயப்படாதே நான் செந்தூர்.” என்று சொல்லிக் கொண்டு,  அவனும் அவளருகில் அமர்ந்தான்.அதன் பிறகு தான் அவளுக்கு அந்தரத்தில் ஊசலாடிய உயிர் மீண்டும் அவளிடம் திரும்பி வந்தது.
 

Advertisement