Advertisement

Episode 12

அவனது மாளிகையில் ராணியாக இருந்திருக்க வேண்டியவள். பஞ்னையில் உறங்கியிருக்க வேண்டியவள்.அவனது சொத்துக்களிற்கெல்லாம் சரிபாதி உரித்துடையவள்.இன்று கட்டாந்தரையில் படுத்துறங்குவதை நினைத்தால் அவன் படுத்துறங்கும் மெத்து மெத்துதென்று இருக்கும் பஞ்சணை முட்படுக்கை போல் தோன்றியது.அவளது வறுமை அவனது செல்வந்த நிலையை அடியோடு விழுத்தியது.

என்ன செய்தால் இந்நிலமை மாறும் என்று தெரியவில்லையே என மண்டையை போட்டு குழப்பியவன் என்ன? முடிவெடுப்பது என்றறியாமல் குழம்பித்தவித்தான்.அவனை மேலும் குழம்ப விடாது அவள் குளித்து விட்டு கதவை திறந்து வெளியே வந்தாள்.

வெளியே வந்தவள் வெளிக்கதவு சாத்தியிருக்கவும் ‘இவன் போய் விட்டான் போலவே’ என   மனதுக்குள்

நினைத்தவள் கதவை திறந்து வெளியே தலையை நீட்டி எட்டிப்பார்தவள் திகைத்து விட்டு,மொட்டைமாடிச்சுவரில் ஏறி இருந்து காலாட்டிய வண்ணம் இருந்தவனருகில்  கோபமாக சென்றவள்

“நீ இன்னும் போகவில்லையா?” என்றாள்.

அவன் பதிலேதும் கூறாது நிதானமாக அவளை பார்த்து “கையை காட்டு” என்றான்.

“நான் என்ன? கேட்கிறேன்.நீ என்ன சொல்கிறாய்….? என சினந்தவளை உற்று நோக்கியவன் அவளது தோள்பட்டையை அசைக்க முடியாதவாறு அழுத்தமாக பிடித்துக்கொண்டு அவளது உள்ளங்கையில் கட்டியிருந்த கட்டை உற்று நோக்கியவன் கடுப்பானான்.

“ஐயோ….தோள்பட்டை வலிக்குது விடு….” என அவள் முனகவும்

அவனது பிடியை தளர்த்தியவன் “நீ அடங்கவே மாட்டியாடி…. நீ என்ன சின்ன பேபியாடி….கை நனையும் என்று சொன்னேன் கேட்டியாடி….” என்று விட்டு கையில் கட்டியிருந்த பன்டேஜை கழற்றி விட்டு காயத்திற்கு புது பன்டேஜை கட்டி விட்டான் அதற்குள்  அவனுக்கு போதும்போதுமென்றாகி விட்டது.

சரி கதவைப்பூட்டு நான் கிளம்புகின்றேன் என்றான்.

கீழே அண்ணா வெயிட் பண்ணுகின்றான்.என கூறி விட்டு மொட்டைமாடிச்சுவரில் இருந்து ஜம் பண்ணி கீழ் ப்ளாட்டுக்கு  குதித்தவனை பார்தவள்

“உன் அண்ணன் உனக்கு ரொம்ப ஹெல்ப் போல…” என்றாள்.

“ம்ம்ம்ம்…….” கீழே நின்று அசட்டு புன்னகை ஒன்றை உதித்தவன் வேகமாக இறங்கி மதில் கடந்து காரை நோக்கி போவதைப்பார்த்த பிறகே அவளிற்கு மனப்பதட்டம் குறைந்தது.

‘போன ஜென்மத்தில் குரங்காய் பிறந்திருப்பான் போல….. விட்டகுறை, தொட்டகுறை என இந்த ஜென்மத்திலும் பாயுறது,குதிக்கிறது எல்லாம் இயல்பா வருகிறது போல என நினைத்தவள் உள்ளே சென்று கதவினை உட்பக்கமாக பூட்டிவிட்டு தூங்கச்சென்றாள்.

தூங்கச்சென்று விட்டோம் என்று பெயர் தான் தூக்கம் அவளை தழுவ மறுத்தது.இவன் எதற்காக என் மீது இந்தளவு இரக்கம் காட்டுகின்றான்.இவனக்கு என் கடந்த கால  வாழ்க்கை தெரிந்தால் தலை தெறிக்க ஓடி விடுவான்.

ஆயினும் இவனது இரக்கம் அவளுக்குள்ளே ஒருவித பயத்தை தோற்றுவித்துக் கொண்டிருந்தது. மறுபடியும் அவள் வாழ்வில் விளையாடிப்பார்க்க விதிக்கு விருப்பம் வந்து விட்டது போல என பலவாறான எண்ணங்களுடன் ‘புரண்டு புரண்டு’ படுத்து எப்போது உறங்கினாள் என்று அவளுக்கே தெரியாது.

தூக்மில்லாது புரண்டவள் விடிந்தும் நல்ல தூக்கத்தில் இருக்க அவளது அறை கதவு தட்டும் சத்தம் கேட்கவும் கொலைவெறியுடன் எழுந்தவள் ‘யாரகவிருக்கும்’ என நினைத்த வண்ணம் தூக்க கலக்கத்தோடு எழுந்து வந்து கதவைத்திறந்தவள்,

கையில் கூடையுடன் அவளை விட இரண்டு, மூன்று  வயது கூடிய அழகிய பெண்னொருத்தி நிற்கவும் தியா அவளை யாரென்று அறியாத பார்வை பார்க்கவும்,வெளியே நின்றவள் “நீங்கள் தியா தானே……..! நான் உள்ளே வரலாமா?” எனக் கேட்கவும்

கதவிலிருந்து தள்ளி நின்றவள் “உள்ளே வாருங்கள். நீங்கள்…..? யாரென்று எனக்கு தெரியவில்லையே………”என

தியா வந்திருந்தவளை பார்த்து கேட்கவும் வெளியே நின்றவள் “தியா கூல்…. கூல்….. முதல்ல நான் உள்ளே வருகின்றேன்.அப்புறமாய் நான் யார்? என்ன? எங்கிருந்து? வருகின்றேன் என எல்லாம் சொல்கின்றேன். என்று கூறி உள்ளே வந்தவள் சுற்றும் முற்றும் பார்க்கவும்,

தியா சங்கடத்துடன் நிற்கவும் கையிலிருந்த கூடையை நிலத்தில் வைத்து விட்டு அவளும் நிலத்தில் அமர்ந்து தியாவைப் பார்த்து புன்னகைத்தவள் “தியா கமோன் ப்ரஸ்அப்பாகி சீக்கிரமாக வா……” என கூற

தியா தயங்கியபடி வோஸ்றூமுக்கு சென்றவள் தன் கடமைகளை முடித்து குளித்து வெளியே வந்தாள்.அப்போதும் வீட்டுக்குள்ளே விருந்தாளியாக வந்திருந்த பெண் கொஞ்சமும் முகம் சுளிக்காது கூடைக்குள்ளே இருந்த உணவை தட்டில் எடுத்து வைத்துக்  கொண்டிருந்தாள்.

வெளியே வந்த தியா தயங்கியபடி அவளருகே வந்து “நீங்கள் யாரென்று இன்னும் சொல்லவில்லையே……”என வினவ,

 அவளது பொறுமையை சோதிக்காது “நான் சிந்துஜா. செந்தூரோ அண்ணி.” என்றாள்.

“என்ன…..?” என அதிர்ந்து நின்றவளை பாரத்த சிந்து

“உன் கையில் பட்ட அடிக்கு அவன்தான் காரணமாம். உன் கையால் சாப்பிடக்கூட நீ கஸ்ரப்படுவியாம் அது தான் காலையிலே வந்து என்னை கூட்டிக்கொண்டு வந்து உனக்கு சாப்பாடு தரனுமாம்.அப்புறமாய் உன் கையிலுள்ள கட்டை அவிழ்த்து புதிதாக கட்டுப்போட வேண்டுமாம்.அவன் சொன்னது போல தான் நீயும் கையை ஈரமாக்கி  வைத்திருக்கிறாய் போல என்றவள்

எழுந்து வந்து அவளது கைக்கட்டை அவிழ்த்து விட்டு புதிதாத கட்டுப்போட்டவள் கொண்டு வந்த உணவை ஊட்டி விடவா எனக் கேட்கவும் அவள் மறுப்பாக தலையசைக்கவும் அவளது மறுப்பை பார்த்து விட்டு ஸ்பூண் ஒன்றை வைத்துக் கொடுத்து

“இதை நீ கட்டாயமாக உன்னை சாப்பிட வைக்கனுமாம் பிறகு மாத்திரை போட வைக்கணுமாம் என்று ஓடர் போட்டிருக்கின்றான்.

பரவாயில்லை அக்கா நானே போட்டு சாப்பிடுவேன்.உங்களுக்கு தான் என்னால் சிரமமாகி விட்டது என்று கூறி உணவுத்தட்டை எடுத்து கையில் வைத்திருக்க முயன்றவளால் முடியாது தடுமாறவும்,

அதைப் பார்த்த சிந்துஜா “நமக்கெல்லாம் குட்டியா காயம் வந்தாலே கையே போனது போல பில்டப் கொடுப்போம். நீ என்னடா என்றால் இரண்டு உள்ளங்கையிலும் இவ்வளவு பெரிய காயத்தை வைத்துக் கொண்டு வலியே இல்லாத மாதிரி எப்படித்தான் இருக்க முடிகின்றதோ? தெரியவில்லை…….!” எனக் கூறிய வண்ணம் தியாவின் கையிலிருந்த தட்டை வாங்கி உணவை அவளிற்கு ஊட்டி விடலானாள்.

தியாவின் நெஞ்சு நெகிழ்ந்து கண்கள் கலங்கவும் “ஏன்? தியா கண் கலங்கிறியா? என்னை உன் அக்காவைப்பால நினைத்துக்கொள்.எனக்கு ஒரு தங்கை இருந்திருக்கலாம் என பல நாள் ஏங்கியிருக்கின்றேன் தெரியுமா? அதனால் தான் கடவுள் கொஞ்சம் லேட் ஆனாலும் அழகான உன்னை எனக்கு கொடுத்திருக்கின்றான் போல் எனிவே இன்றுமுதல் நீ எனக்கு தங்கை. நான் உனக்கு அக்கா.”எனக் கூறிக்கொண்டே உணவை மிச்சம் வைக்காது ஊட்டி முடித்தவள் அவளது வாயை தனது சுடிதார் துப்பட்டாவால் துடைத்து விட்டு கைகளை கழுவிக்கொண்டு வந்தாள்.

“அக்கா ரொம்ப நன்றி.”

“நமக்குள்ளே இனி நோ போர்மாலிட்டீஸ் ஓகே. உன்னுடைய போன் நம்பரை சொல்லு தியா என அவள் நம்பரை கேட்டு குறித்து விட்டு தியா இப்போது மாத்திரைகளை போட்டு விட்டு ஓய்வெடு அப்புறமாக வருகின்றேன.” என்றாள்.

சிந்து கிளம்பவும் “அக்கா ஆட்டோவிலா வந்தீர்கள்.”

“இல்லை கீழே காரில் உன் பாஸ் வெயிட்டிங். நான் வருகின்றேன்.” என கிளம்பியவளை தலையசைத்து வழியனுப்பி விட்டு மொட்டை மாடி வழியாக எட்டிப்பார்த்தாள். அவனும் காருக்கு வெளியே நின்று அண்ணாந்து மேலே தான் பார்த்துக் கொண்டிருந்தவன் இவள் எட்டிப்பார்த்ததை கண்டு கைகளை அசைத்தான்.

‘இவன் அடங்கமாட்டான்.’ என நினைத்துக் கொண்ட தலையில் கையால் தட்டிக்கொண்டு பட்டென தலையை உள்ளே இழுத்துக் கொண்டவள் உள்ளே சென்று கதவை மூடினாள்.

“கீழே இறங்கி வந்த சிந்து கார் அருகே நின்று மேலே பார்த்துக் கொண்டிருந்த செந்தூரைக் கண்டு தானும் மேலே நிமிர்ந்து பார்த்தாள்.

அங்கு எதுவுமில்லை என தோன்ற…… “செந்தூர் மேலே என்ன தெரியுது? நீ் பார்கின்ற பார்வையைப்பார்த்தால் தியா வந்து உன்னை எட்டி பார்ப்பாள் என்று பார்க்கிறமாதிரி இருக்கே….?” என்றாள்.

அண்ணிக்கு பதில் சொல்லமுடியாமல் தலையை கையால் முன்னில் இருந்து பின் வரை  கோதி விட்டவன் “சும்மா தான் அண்ணி அந்த பில்டிங்கின் அமைப்பை பார்த்துக் கொண்டு நின்றேன்…. என்று பொய் சொல்ல முடியாது வாய்க்குள்ளேயே சிரித்தவன் சரி காருக்குள்ளே ஏறுங்கள் உங்களை கொண்டு போய் என் அண்ணனிற்கு முன் பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் என்றான்.

நம்பீட்டன்…… நம்பீட்டன் என்று சொன்ன அவளின் பேச்சில் அவன் சொன்னதை நம்பவில்லை என்று தெள்ளத்தெளிவாக தெரிந்தது.

‘டேய் எனக்கே சாம்பிராணி போடுகிறாயா?’ என்று மனதுக்குள் நினைத்தவள் அவனைப்பார்த்து  “ஏன்? தம்பி என்னை வைத்து என்ன? வேலை பார்க்கிறாய் என்று தெரிகிறதா?” எனக் கேட்டாள்.

என்ன அண்ணி இப்படி சொல்லி விட்டீர்கள்.நேற்று இரவு அண்ணன் வந்தான் அவனே இப்படிக் கேட்கவில்லை. நீங்கள் இப்படியொரு கேள்வியை கேட்கலாமா? என்று அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டான்.

டேய்  நேற்று இங்கே தான் இரண்டு பேரும் வந்தீர்களாடா? நீ அடி வாங்கினா அதுக்க ஒரு காரணம் இருக்கிறது.ஆனா கூட வரும் காரணத்திற்காக என் புருசன் தர்மஅடி வாங்குவது நியாயமே இல்லடா. என்றவள்

ஆஆ…..இன்னொரு விசயம் அவ பாத்ரூமுக்குள்ளே எப்படி உன் லுங்கி போனது……. அது உன் இடுப்பில தானே இருந்திருக்க வேண்டும்.ஒரு வேளை உனக்கு ஹெல்ப் பண்ணுகின்ற ஐடியா  உன் லுங்கிக்கும் தோன்றி திடீரென கை,கால் முளைத்து அவ பாத்ரூமுக்குள் போய் உட்காரந்து என் கண்ணில் பட்டது போல…..”

“இது நல்ல பதிலாயிருக்கே அண்ணி. நானும் என்ன பதில் சொல்லலாம் என யோசித்துக் கொண்டிருந்தேன்.நல்ல வேளை நீங்க ஒரு செம பதில் கண்டு பிடித்து விட்டீர்கள் இனி இதையே தொடரலாம் ரொம்ப நன்றி என்றவன் இப்பிடி ஐடியாவெல்லாம் ஸ்ரொக்காக வைத்திருக்கிறீர்களா? இல்லை அவ்வப்போது வருமா?”

“அது தானா ஒரு ப்ளோவில வருகிறது.” என்றவள் உனக்கேதும் என் ஐடியா தேபை்படுமா? என்றாள்.

கட்டாயமாய் உங்கள் சேவை எனக்கு மட்டுமில்லை இந்த உலகத்திற்கே தேவை என்றான்.

“அதை விடு தம்பி இங்கே என்ன தாண்டா நடக்கிறது. சத்தியமாக புரியவில்லை. தியா யாருடா? உன் அண்ணன் தான் ஹெலப் பண்ணுவது மட்டுமல்லாது என்னையும் ஹெல்ப் பண்ணச்சொல்கின்றார்.நீ என்ன என்றால் தொண்டை நரம்பு அறும் அளவிற்கு அவளுக்காக அண்ணாந்து பார்த்தவண்ணம் நிற்கிறாய்.என்ன என்று காரணம் கேட்டால் ஒன்றுமில்லை என்று சமாளிப்பு வேற.” என்றாள்.

“அண்ணி நீங்க அண்ணாவிடமே இதைப்பற்றி கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். ஆனால் அம்மா,அப்பா, அக்கா யாருக்கும் தெரிய வேண்டாம்.மறந்தும் இப்போதைக்கு சொல்லி விடாதீர்கள்.” என்றான்.

என்ன தம்பி எனக்கே சாம்பிராணி போடுறீங்களா? ஏதோ நல்லா இருந்தால் சரி.நான் அத்தையிடம் சொல்லலாம் என்று நினைத்தேன்  ஆனால் தியாவை நான் என் தங்கையாக நினைக்கின்ற அளவுக்கு பிடித்துப்பாய்விட்டது.அதனால் நீ பிழைத்தாய்.” என்றார் அண்ணியார்.

“அப்படி என்னத்தை சொல்லி உங்களை ப்ரீஸ் பண்ணினா அவ.” என்றான்.

“அவ இவ என்று சொன்னாய் உதை விழும். தியா ரொம்ப இனொசென்ட். அவளுக்கு அம்மா,அப்பா யாரும் இல்லை.ஆனால் ஒரு பொண்ணு தனியா இருந்தால் எவ்வளவு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் அதையெல்லாம் எதிர்கொண்டு,எதிர்கொண்டு அவ சலித்து போய் வாழ்க்கையில் வாழவேண்டும் என்ற பிடிப்பை இழந்து பாதுகாப்பை தேடிக்கொண்டிருக்கின்ற குழந்தை அவள்……  

ஆனால் நீ நல்ல பையனாயிற்றே தியா கூட ஏன்டா உறண்டை இழுக்கிறாய்.நீ அவளை சீண்டி அவளுக்கு இன்னும் ‘புதுபுது’ பிரச்சனைகளை உண்டாக்காதேடா……? அவ்வளவு தான் சொல்லுவேன்.” என்று விட்டு வீட்டருகே கார் வரவும் இறங்கிக் கொண்டு

“என்ன தம்பி நான் சொன்னதெல்லாம் புரிந்தது தானே.இல்லை என்றால் மறுபடி ஒரு தடவை சொல்லவா….?”

போதும் போதும் அண்ணி ரொம்ப நல்லா கேட்டது.மறுபடியும் முதலில் இருந்தா…? இன்றைக்கு இது போதும் அண்ணி.வேணும் என்றால் நாளைக்கு வருகின்றேன். அப்போது ஆரம்பியுங்கள்.” என்றான்.

கார் வந்த சத்தம் கேட்டு வெளியே வந்த கதிரவனின் தோளில் தொங்கிக் கொண்டு வந்த மதுக்குட்டி செந்தூரைக் கண்டவுடன் அவனிடம் கையை நீட்டி “சித்து… என பாய்ந்து அவனைக்கட்டிக் கொண்டு அவனது முகம் முழுவதும் முத்தத்தை வாரி வழங்கவும்

அவனும் திருப்பி குழந்தையின் முகத்தில் முத்தங்களை வழங்க அவனது மீசை முடி குழந்தையின் முகத்தில் கூச்சத்தை உண்டு பண்ணவும் தனது குட்டிக்கைகளால் மூடிக்கொண்டு சித்து.. குத்துது குத்துது நீ ஒன்றும் எனக்கு உம்மா தர வேண்டாம் போ….. என அவனது கையில் வழுக்கிக்கொண்டு இறங்கி ஓடிப்போய்

ம்மா…… தூக்கு” என்று சிந்து காலைக்கட்டிக்கொண்டது.குனிந்து குழந்தையை தூக்கியவள் அவனைப்பார்த்து முறைத்தாள்.

“ஏன்டி  அவனை முறைக்கிறாய் என கதிரவன் வினவ

அதற்கு அவள் “ம்க்கூம் உங்க தம்பி கோடி கோடியாக சம்பாதிக்கின்ற பணம்  போதாதா அவர் முகத்திலே முட்புதராக வளர்ந்து கிடக்கின்ற தாடி,மீசையை சேவ் பண்ணுறதுக்கு……. எப்ப பார் தீவிரவாதி போல” முகத்தை வைத்துக்கொண்டு என அவள் திட்டியவண்ணம் செல்லவும் அவன் புன்னகைத்து கொண்டான்.

அவன் முகத்தில் கற்றையாக மறைந்திருக்கும் தாடி மீசைக்குள்ளே தானே அவன் உணர்வுகளை ஆறேழு வருசமாக மறைத்து வைத்திருக்கின்றான். அவனது உணர்ச்சிகளை புதைக்கும் இடமே அதுதான்.

Advertisement