Advertisement

EPISODE 1

புலரும் காலைப் பொழுதில் ஆதவன் தன் பொற்கதிர்களை அள்ளி மெதுவாக வானையும், பூமியையும் நோக்கி எறிந்து கொண்டிருந்தான். இவனைக் கண்ட பனித்துளிகள் கூட்டம், மெது மெதுவாக தமது உயிரை கரைக்கத் தொடங்கின. ‘சடசட’என இறக்கையை தட்டி விடியலும் நன்றாக விடிந்தது.

 

எப்பொழுதும் போலவே இயற்கை தன் வேலையை தங்குதடை இன்றி சுழலும் சக்கரம் போலவே செய்கின்றது. ஆனால் இந்த இயற்கை பிரசவித்த மனித இனம் மட்டும் ஏனோ …? தெரியவில்லை. காரணமும் புரியவில்லை. தங்களது செயற்பாடுகளை என்றும் சரியாக செய்வதுமில்லை. இனிமேல் செய்யப் போவதுமில்லை.

 

ஆனால் இந்த இயற்கையை இரசிக்கத் தொடங்கினால் காலநேரம் போவது தெரியாமல் எப்படித்தான் அந்த மனம் ஒன்றிவிடுகிறது. இதனை படைத்த கடவுளும் தான் எவ்வளவு கைதேர்ந்த கலைஞனாக இருக்க வேண்டும். கடவுளின் ஒவ்வொரு படைப்பையும் உற்று நோக்கின் எல்லாமே அவனின் கலைநயமே!

 

இறைவனால் படைக்கப்பட்ட இந்த இயற்கையும் தான் இப்போதெல்லாம் மனிதர்களைப் போல வெகு எளிதில் தன் உணர்ச்சிகளைக் சுனாமி வடிவிலும், சூறாவளி வடிவிலும், புயல் வடிவிலும் காட்டி விடுகிறதே…!

 

எத்தனை மாற்றங்கள் வந்தாலும் ‘தியா’ பிறந்தது முதல், இன்று வளர்ந்து நிற்கும் இளம் குமரியவள். வாழ்வில் மட்டும் ஏனோ..? எந்த உறவுகளிற்கும் இடமில்லை, அவள் உணர்ச்சிகளை மதிப்பதற்கும் இடமில்லை.

 

அவள் ஒரு பெண் அவள் ஏன் இப்படி இருக்கிறாள்..? ஏன் இப்படி இருக்கவில்லை …? என்ற கேள்வி கேட்பதற்கு யாருமற்ற அநாதை’ என்றே கூறலாம். உற்றார், உறவினர்கள் எல்லோரும் இருந்தாலும் அவள் எட்டு வயதில் இருந்தே தாய்,தந்தை இருந்தும் அநாதையாக்கப்பட்டவள். எப்போதும் அவளிற்கென்று ஒரு உணர்வு இருந்ததை யாரும் புரிந்து கொண்டதேயில்லை.

 

அவள் தங்கியிருக்கும் விடுதி தியான மண்டபத்தில் காலை தியானத்தில் அமர்ந்திருந்த ‘தியா’வின் மௌன நிலையை கலைப்பது போல் ஒரு சின்னஞ்சிறுமியின் அழுகுரல் கேட்டது. அது மட்டுமல்லாது அக்குழந்தையை சமாதானம் செய்யும் அவளது தாயின் குரலும் கேட்டு, மொத்தமாய் தன் தியானத்தை முறித்தெழுந்தாள்.

 

அந்த நொடியே அவளது விடுதி அறைக்கு எப்படி வந்தாள் என்று அறியா வண்ணம் விரைந்து வந்தவளின் உடலெல்லாம் வேர்த்து விறுவிறுத்திருந்தது. ஏனோ தெரியவில்லை வழமைக்கு மாறாக உடலெல்லாம் வேர்த்து விறுவிறுத்திருந்தது. மனமோ…! உலைக்களமாய் கொதித்தது. ஒரு வேளை அவளும் தன், தாய்,தந்தை அரவணைப்பில் இருந்திருந்தால் குட்டி இளவரசி போல் எல்லா உறவுகளுடனும், சொந்தபந்தங்களுடனும், இருந்திருக்க வாய்ப்பு இருந்திருக்குமோ….?

 

வேண்டாத கற்பனையில் இருந்து தலையை சிலுப்பி தன்னைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைத்த அந்த நிமிடம் விழிகளிரண்டும் வியர்ந்தன. மனம் ‘மறுபடி மறுபடி’அந்த கடந்த கால நினைவை ‘காயத்தை நக்கும் புலியாய்’ மனதை சமாதானப்படுத்த முயன்று தோற்றுப் போய் அந்த நாள் நினைவுகளில் மூழ்கினாள்.

 

அப்போதெல்லாம் அவள் ‘ பட்டாம் பூச்சியை பிடிக்கவென பட்டாம் பூச்சி போல பறந்து திரியும்’ குட்டிப் பெண்ணல்ல, சுட்டிப் பெண்ணும் ‘துறு துறு’ என்று எப்போதும் அவளது தாய் வாணியை ‘அது என்னம்மா”இது என்னம்மா’ என்று தொண தொணத்து உயிரை எடுத்து விடுவாள். அவளது தாயின் உயிர் மூச்சே’தியா’ தான்.

 

ஆனால் அப்பா சிவராஜ் கண்டால் அவளுக்கு ஒரு வித பயம் எப்போதும் இருக்கும்…! என்றாலும் சிவாவிற்கும் அவள் தேவதை தான்.

 

ஆனால் எப்போதும் அப்பாவிற்கும், அம்மாவிற்கும் இடையில் ஒரு இடைவெளி இருப்பது போல இருக்கும் ஆனால் என்ன? என்று அவள் நினைப்பதற்குள்ளே அது இல்லை என்பது போலவும், தனக்கு மனப்பிரம்மை போல கண்ட கண்ட கற்பனை காட்டூன்களையும், கதைகளையும் தான் பார்ப்பதாலும், படிப்பதாலும் தான் இப்படி யோசிக்கிறோமோ..? என்று அந்த எட்டுவயதில் ‘தியா’ யோசித்ததுண்டு.

 

அவள் எதை யோசித்தாளோ? அது சில காலங்களிலே உண்மை என்று புரியலாயிற்று. எப்போதும் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும் அம்மாவை என்ன சொல்லி தேற்றுவது. எப்போதும் விறைப்புடனும் கோபத்துடனும் இருக்கும் அப்பாவை எவ்வாறு அணுகுவது என அவள் குட்டி மூளை பல தடைவை யோசித்து தோற்றது.

 

சிவராஜ், வாணிக்கிடையில் அடிக்கடி சிறு சண்டைகள் ஏற்பட்டது. அது நாளடைவில் பூதாகரமாக வெடித்துக் கிளம்பிய போது தியா ‘கடலலை மேல் துரும்பு’ போல ஆகிக் கொண்டிருந்தாள். ‘ அம்மா’… ஏன்? அம்மா எப்பபார்த்தாலும் அப்பா உங்களை திட்டுகிறார். என்று கேட்ட தியாவிற்கும், தாயின் கண்ணீர் தான் பதிலாக கிடைத்தது. அவள் சின்னக் குழந்தை என்றாலும், அவளிற்கு நல்லது, கெட்டதை, பிரித்தறியும் குணமும் இருந்தது.

 

அன்று, அவளது தந்தை குடிபோதையில் வந்தது மட்டுமன்றி இன்னொரு பெண்ணையும் அவர்களது வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வந்திருந்தார். அப்போது தான் ரியூசன் வகுப்பு முடிந்து புத்தக மூட்டையை காவிக் கொண்டு வந்து செருப்பை கழற்றிய ‘ தியாவின் காதுகளிற்கு’ அவர்கள் உரையாடல் கேட்டது.

 

‘என்னப்பா இது என்ன கோலம் ஏன் குடிச்சிட்டு வீட்டுக்கு வந்தனீங்கள் ‘தியா’ பார்த்தா உங்களைப் பற்றி என்ன நினைப்பா…? அத்தோடு ‘இந்த பொண்ணுயாரு’ என்றார் வாணி.

 

‘என்னது இந்தப் பொண்ணு, கிண்ணு, எண்டு எல்லாம் என்னைச் சொல்லாத நான் இப்ப சிவராஜ்கு மனைவி என்றாள் அப்பாவுடன் கூட வந்தாள்.

 

‘என்னப்பா என்ன சொல்லுறா இவ’ என்று கலங்கினார் தாயார்.

 

‘ஆமாம் வாணி நான் இந்த பொண்ணு மதனாவிற்கு தாலி கட்டி விட்டேன். ஏன் என்றால் இவ எனது குழந்தைக்கு தாய் என்பது மட்டுமல்ல இவ அப்பா எனக்கு பிஸ்னஸ்சுக்கு பணம் கோடிக் கணக்கில குடுத்திருக்காரு. நான் கேட்டால் இனிமேலும் தருவினம்’ என்றான்.அவளைப் பெற்ற தந்தை அவளது தாயின் மனம் சுக்கு நூறாக உடைவது தியாவின் கண்முன்னே தெரிந்தது.

 

‘என்னப்பா உங்களிற்கு பணம் வேணும் எண்டா நான் என்ர அப்பா, அம்மா கிட்ட கேட்டு வாங்கி தந்திருப்பேன். நீங்க என்கிட்ட சொல்லியிருக்கலாம் தானே இப்படி பண்ணி என் வாழ்க்கையை கெடுத்திட்டீங்களே’ என அம்மா குமுறினார்.

 

‘என்ன நீயா? காசு கொடுப்பாய், உங்கப்பன் என்னத்துக்கு எதுக்கு என்று ஆயிரம் கேள்வி, உன்ர அண்ணன்மார் பெரிய முதலாளிகள் ‘கணக்கு ஆயிரம் கேள்வி’ இதுக்கு நான் பிச்சை எடுக்கலாம், பிறகு நான் எப்ப பணக்காரன் ஆகிறது’ என்றான். அவளுடைய தந்தை.

 

‘சிவராஜ் விசயம் என்னண்டு சொல்லியாச்சு தானே இவகிட்ட சீக்கிரம்மா விவகாரத்துக்கு ஏற்பாடு பண்ணுங்கோ…! நம்ம கல்யாணம் சீக்கிரமாய் நடக்கணும், லேட் ஆனா நமக்கு வயித்துல இருக்கிற குழந்தை பிறந்திடும். தெரியும் தானே உங்க முதல் மனைவியை தானாக விலகச் சொல்லுங்கோ, இல்லை எண்டா நான் என் அப்பாவிடம் சொல்லி வேற விதமா டீல் பண்ண வேண்டி வரும்’ என்றாள்.

 

‘சரி வாணி உனக்கு நான் எவ்வளவு பணம் தரவேணும் எண்டு சொல்லு தாறன். ஆனால் என் வாழ்க்கையை நாசம் பண்ணிடாதே. உன்கூட இருக்கிறதை விட என் வாழ்வு இப்போது பல மடங்கு உயரப் போகிறது’ என்றார்.

 

அம்மா பேச வழியின்றி குலுங்கி குலுங்கி அழுதாள்.

 

‘எவ்வளவு நேரம் வெயிட் பண்றது வாணி” நீ தானே சொல்லுவாய் உங்களுக்காக எதுவும் பண்ணுவேன், என் உயிரைக் கூட தருவேன் என்று சொல்லுவியே, இப்ப தான் அது விளங்குது நீ சொன்னது பொய் என்று’ என்று கூறிய தந்தையின் அகந்தையை எண்ணி இப்போதும் அவள் நெஞ்சு துடிக்கும்.

 

‘நான் இந்த வசனத்தை சொன்ன போது நான் உங்களை மட்டும் உருகி காதலிச்சேன். நீங்களும் என்னை விரும்பினீங்க நாம கல்யாணம் பண்ணி நமக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்குது. இந்த இனிய இல்லற வாழ்க்கை இனிதே நிலைச்சிருக்கனும் எண்டு சொன்ன அன்பு மொழிகள் அவை. ‘ஆனா நீ என்னையும், என் குழந்தையும், அவமானப்படுத்திட்ட சிவா நீ நல்லாவே இருக்க மாட்டாய்’ என்று கதறிய தாயின் கண்ணத்தில் தந்தையின் இரும்புக்கரம் இடியாய் இறங்கியது.

 

‘ஆமாடி நான் அப்பிடித்தான் பண்ணுவேன்’ என்று மறுபடியும் சில அடிகள் வந்திருந்த மற்றப் பெண் முன் விழுந்தது.

 

என்ன உலகமோ ஒரு பெண் அழக்காரணமாக இருந்த வாழ்க்கையை இன்னொரு பெண் இன்பமாய் ஏற்றுக் கொள்கிறாள். அப்படிப் பார்த்தால் பெண்ணுக்கு ஆண் செய்வது கொடுமை அல்ல ஒரு பெண்ணுக்கு, ஒரு பெண் செய்யும் கொடுமையை விட ஆண் செய்வது குறைவென்றே சொல்லலாம்.

 

‘பாவி டேய் நீ காசுப்பிசாசு, கொலைக்காரப் பாவி, நாசகாரன் என்று அம்மாவும் ஒருமையில் வாயை தவறவிட்டான்.

 

என்ன டார்லிங் இவ என் முன்னாடி உங்களை எப்படி தப்பா பேசுறா…! பாருங்கோ…!

 

‘இனிஇவகூட எந்த பேச்சும் வேண்டாம் டார்லிங் நாங்கள் போய் இனி நம்ம கல்யாண வேலையை பார்ப்பம்’ வாங்கோ என்று அழைத்துச் சென்றான்.

 

அவர்கள் போகும் பாதையில் ‘தியா’ விழி நீர்மல்க நின்று கொண்டிருந்தான். அதைக் கண்ட அவள் தந்தையின் உடல் ஒரு கணம் இறுகி விறைத்தது. அவளை நோக்கி அடியெடுத்த தந்தையின் கரத்தை தடுத்து நிறுத்தியது அவளது தந்தையின் இரண்டாவது மனைவியின் கரம்.

அதற்குப் பிறகு தந்தை வரவே இல்லை. தாய் தன்னை முடியுமளவிற்கு வீட்டில் இருந்து அழுது தீர்த்து விட்டு தியாக தாயின் பெற்றோர்களான ஏகாம்பரநாதன், கோமதியின் வீட்டுக்குச் சென்று அழுத அழுகையில், அவளின் அண்ணன் யார் ஜீவராஜ், ஜனார்த்தனன் ஆகியோரின் விழிகள் சிவந்து தீப்பொறியைக் கக்கின.

 

மூத்தவன் ஜீவராஜ் கோபத்தில் குறைந்தவர் எனினும், ஜனார்த்தனன் ரௌத்திரம் படைத்தவன். ஆவன் வானுக்கும், பூமிக்கும் குதித்தான். ‘அப்பா  பார்த்தீங்க இல்ல அவன் அந்த சிவராஜ் நன்றி கெட்டவனிற்கு உங்கள் நண்பன் மகன் என்று பொண்ணைக் குடுத்தீங்க இல்லை. இப்ப அவன் என் தங்கச்சி நம்மவீட்டு குத்துவிளக்கை, குழந்தையோட நடுறோட்ல விட்டுட்டு போட்டான்’ அருவாளை எடுத்துக் கொண்டு புறப்பட்டவனை ஏகாம்பரமும் தடுத்தனர்.

 

‘என்னப்பா அவனை இன்டைக்கு ஓரு சம்பவம் செய்யுறன் பாருங்க எண்டு’ கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்த ஜனார்த்தனனை தகப்பன் கன்னத்தில் அறைவிட்டு நிறுத்தினார்.

 

‘என்னப்பா அவனை கொல்லுறதை விட்டு விட்டு என்னை அடிங்க’ என்று கத்தினான் என்றே சொல்லலாம். வேண்டாமப்பா இது உன் தங்கை வாழ்வு, நாம சிவராஜ்ஜிட்ட போய் சமாதானம் பேசலாம் என்றாய். ‘என் மக வாழ்க்கையை தொலைச்சிட்டு வந்து நிற்கிறா நீயும் அவனை வெட்டிப்போட்டு ஜெயிலுக்குப் போகப் போறியோ”பிறகு உன்ர மனுசி பிள்ளையளை யாரு பார்க்கிறது’ அவங்களுக்கு யார் துணையா இருக்கிறது என்றார். ‘ சும்மா கோபத்தில ‘ கண்ணுமண்ணு’ தெரியாமல் கத்தாதேடா’ என்றார்.

 

இவர்களது சத்தத்தை கேட்டு ஒன்று கூடிய குடும்பமே சோகத்தில் தந்தையும், தமயன்மாரும் சென்று சிவராஜ் தாய் தந்தை என அத்தனை பேரிடமும் நீதி கேட்டும், சிவராஜ் மாறவில்லை. இதயமே இல்லாத போல பதிலை வீசி அவர்களை வெளியேற்றினான். சிவராஜின் தாய் தந்தை பேச்சை கேட்டும் நிலை மறந்திருந்தான்.

 

வாணியின் நிலையோ கவலைக்கிடமானது உண்ணவில்லை உறங்கவில்லை, கண்ணீர் கடலும் வற்றவில்லை, இதயமே பிளந்தது போன்ற வலி, அந்த வலியை என்ன? செய்து மாற்றலாம் எனும் நினைக்கும் போதே அதை விட பெரிய வலியில் அவளது இதயம் துடித்தது. பெற்ற மகள் ‘தியாவை’ கவனிக்கவில்லை அழுதே கரைந்தான்.

 

‘தியாவும்’துடித்தாள் தாயின் வலி ஒன்றென்றால், அவளின் வலி இரண்டாக இருந்தது. தந்தையும் தன்னை கவனிக்காது சென்றுவிட்டார். அம்மாவும் கவனிப்பதில்லை. நேரம் உணவு உண்ணவில்லை என்றால் மகளிற்கு வயிற்றுக்குள் பூச்சி, அது, இது என்று ஆயிரம் காரணம் தேடி மகளை உணவு உண்ண வைப்பாள் இன்று மகள் உண்டாளா? உறங்கினாளா? என்று எதுவும் கேட்காமல் ஓய்ந்து போனாள்.

 

அவளது மாமன்மார்கள், அவர்களது மனைவிகளுடன் தத்தமது இல்லத்திற்கு சென்றுவிட்டனர். ஆம் யாழ்ப்பாணத்தில் பொதுவாக மனைவி வீட்டில் தான் கணவன் வசிப்பார்கள். வேறு எங்காவது சில இடங்களில் அதாவது குறைந்த அளவு பேர்தான். கணவன் மனைவிகாரர்கள் வீட்டில் வசிப்பார்கள்.’டாடி’.

 

தாத்தா, பாட்டி வயதானவர்கள் என்பதாலும், தாயின் கவலையை தன் கவலையாக கருதிக் கொண்டு கவலையுடன் இருப்பதால் தியாவிற்கு தான் என்ன செய்வது என்று அறியாது துடித்தான். என்ன பெரிய உயிர் வேதனை வந்தாலும் வயிறு என்கின்ற ஒன்றுக்கு அதுக்கான பசி என்கின்ற உணர்வு வந்தால், பத்தும் பறந்து விடாதா… அப்படிப்பட்ட கொலைப்பசி தான்.

 

‘தியாவிற்கும்’ அவளும் குட்டிப் பூனையைப் போல சமயலறைக்குள் சென்று பார்த்தாள். அவளிற்கு தட்டில் இருந்த பொருள் எதுவும் எட்டவில்லை. மெதுவாக பலகை ஒன்றை எடுத்து வைத்து மேலே இருந்த பிஸ்கட் பெட்டியை எடுக்க முயன்ற போது அது கைக்கெட்டாமல் ஆட்டம் காட்டியது.

 

‘தியா’என்று கேட்ட குரலில் திடுக்கிட்டு கீழே விழுந்து ‘அம்மா’ என்று கத்தினாள். சத்தம் கேட்டு சமயலறைக்கு ஓடி வந்த கோமதி திடுக்கிட்டு நின்றார்.

 

‘என்ன தியாகுக்குட்டி இங்க என்னடா பண்ணுகிறாய்’

 

‘இ;ல்ல அம்மம்மா பசிக்குது அதுதான்….’என்று இழுத்தவளை

 

‘என் கண்ணே’ என்று தழுவிக் கொடுத்தவர் விழிகள் கலங்கியிருந்தன.

 

‘இந்தா பப்ளு குட்டி அம்மம்மா பிள்ளைக்கு கிறீம் பிஸ்கட்டும், கேக்கும் எடுத்து வந்தனான்டா… சாப்பாடுறியா’ என்றார்.

 

‘ம்ம்’ என்று விழியசைவுடன் கையை நீட்டி வாங்கியது மழலை.

 

உண்டு கொண்டிருக்கும் போதே ‘தியாவின் வாயிலும் வார்த்தைகள் துள்ளி விளையாடின.

 

‘அம்மம்மா அம்மா சாப்பிட்டீங்களா? அப்புறம் நீங்கள் சாப்பிட்டீங்களா…? என்றாள்.

 

‘இல்லை கண்ணம்மா நான் காலையில இருந்து உன் அம்மா கூட மல்லுக் கட்டுறன்’ சாப்பிடு

வாணி என்று சொன்னா கேட்டாத் தானே’ என்று அங்கலாய்த்தார்.

 

‘பாட்டி அப்ப நீங்க கேக் சாப்பிடுங்க’ என்று நீட்டினாள்.

‘இல்லைடா குட்டி என் மக உன் அம்மா சாப்பிடாமல் கொள்ளாமல் கிடக்கிறாள். நான் எப்பிடி சாப்பிடுவேன் என் தொண்டைக்குள் எப்பிடி சோறு இறங்கும்’ என்று கலங்கினார்.

 

‘என்னம்மா என்னடா இது ஏன்? இப்பிடியே சாப்பிடாமல் எழுந்துட்டாய்…’ என்றார்.

 

‘இல்லைப் பாட்டி அம்மா சாப்பிடவில்லை நான் சாப்பிட்டேன் பாட்டி’ என்றாள்.

 

‘சரிசரி குட்டி நீ போய் உன் அம்மாவோட இரு நானு வாறேன்’ என்றார் கோமதி.

 

‘அம்மா அம்மா சாப்பிடு அம்மா’ என்ற குரலிற்கு எந்த சலனமில்லாமல் இருந்த தாயை கண்டு பயந்தாள் தியா.

 

சில நாட்கள் வீட்டிலே வாணியை வைத்துப் பார்த்த கோமதி ஏகாம்பரம் தம்பதியினர் வைத்தியரின் உதவியை நாடினர். முhதக் கணக்கில் ஆஸ்பத்திரி, கோயில் குளம் என்று அவளை தேற்றினர். இரண்டு வருடங்கள் கண்மூடித்திறக்கும் முன் இறக்கை கட்டிப் பறந்தது.

அவள் தேறி வர எல்லோரும் அவளை ஆதரவாக அணைத்துக் கொண்டனர். அவள் அண்ணன் ஜீவராஜ் அவளது மனைவி ஜனார்த்தனன் மூத்த அண்ணன் மகன் ஆதவன் அவளை விட நான்கு வயது குறைந்த வான்மதியின் மகள்கள், மது, மாயா என அனைவரும் அவளது தாயை ‘அத்தை அத்தை’ என்று தாங்கினார்.

 

ஆனால் ‘தியா’ அவளை அவளது தாய் வாணி திரும்பிப் பார்க்கவில்லை, பேசவில்லை, அவளது தலை கோதவில்லை இவையெல்லாம் ஏகாம்பரம், கோமதியிடமே கிடைத்தது. நாட்கள் கடந்து வாணிக்கு வைத்தியம் பார்த்த வைத்தியர் தனபாலனின் மகனும் மனைவியை இழந்தவர். அவரை வாணிக்கு மணம் முடிப்பது பற்றி அவர்கள் வீட்டிலேயே முடிவு கேட்டு ஏகாம்பரத்திடம் வந்தனர். ஏகாம்பரத்தின் நிலைமையோ ‘ இருதலைக் கொள்ளி எலும்பின் நிலையானது’ அவர் தனது மகனை நினைப்பதா அல்லது பேத்தி ‘தியாவை’நினைப்பதா என்று தவிர்த்தார். கடைசியில் அவர் மனம் மகள் பால் சாய்ந்தது.

 

பேத்தி சிறு பெண் எதுவும் தெரியாதவாள் அவளை நானும் எனது மனைவியும் கவனித்துக் கொள்வோம். மகள் பட்ட மரமாக நிற்கிறாள். அவளது வாழ்வை செழிக்க வைக்க அவளை மறுபடி வாழவைக்க இதுதான் அரிய சந்தர்ப்பம் என நினைத்து வைத்தியர் தனபாலனின் மகனிற்கு வாணியை மணம் முடித்து வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.

வாணியை சமாதானப்படுத்தி அவளை ஒரு வழிக் கொண்டு வரபல தரப்பட்ட பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டன.

 

அன்றெல்லாம் ஏனோ? பலதரப்பட்ட உறவினர்கள் வீட்டிற்குள்ளே பல வண்ண ஆடைகளை அணிந்து சந்தோசமாக இருந்தனர். அவளும் பட்டுப்பாவடை அணிந்து அதற்குரிய நகை தட்டுக்கள் எல்லாம் பூண்டு அவளுடைய மாமன் மார்களுடைய மக்களுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.

 

அவள் விளையாடிக் கொண்டே திரும்பிப் பார்த்த கணம் அகன்ற விழிகள் விரிந்து இமைக்க மறந்து நின்றன. என்ன ஆச்சரியம் அவளது அம்மா வாணி நீண்ட காலத்திற்கு பின்பு பட்டு, நகை உடுத்தி மேடைக்கு அழைத்து வரப்பட்டாள். அவள் ‘அம்மா’ என்று அவளுக்கு கேட்கும் வண்ணம் கத்தினாள். அது அவள் காதில் விழாது இருக்கவே, தாயிடம் செல்லலாம் என ஓடியவளின் கையை அங்கிருந்த பெரியவர் கைபிடித்து நிறுத்தியது. ‘ஏய்… தியா, இப்ப அங்கே போகாத… செல்லம் உங்கம்மாக்கு கல்யாணம் நடக்குது நீ போன அச குழம்பிடுவாடா… நீ உன்ர அம்மாவை சந்தோசமா பார்க்கணுமா? வேண்டாமா…? ஏன கேட்ட அவளது தலை தன் பாட்டில் ‘ ஆமாம்’ என அசைந்தது.

 

அதன் பின் எல்லாமே சூழலும் பம்பரமாய் வேலைகள் நடந்தது, அவளது தாய் திருமணம் முடிந்து, அவரும், கணவனும் தனி வீட்டில் இருப்பது என்று முடிவானது எனினும், தியா அவர்களை எந்த விதத்திலும், சிரமப்படுத்தவில்லை. அவளுக்குள்ளே இறுகினாள். தாயின் சந்தோசத்திற்கு அவனால் எந்த இடையூறும் நேரவிடாது பார்த்துக் கொண்டாள்.

 

அவளாகவே தனது அம்மம்மாவிடம், தாத்தாவிடம் சென்று, கொஸ்ரலில் தங்கிப் படிப்பதற்கு அனுமதி கோரினாள். முதலில் மறுத்த பெரியவர்கள்.

 

‘தாத்தா அம்மா சந்தோசமா இருக்கணும் எண்டு நீங்க நினைக்கிறீங்க தானே தாத்தா’ என்ற அவளது ஒற்றை வார்த்தையில் அவர்களது விழிநீர் மல்கின.

 

அன்று முதல் கொஸ்ரலே அவளது தாய்வீடு, நண்பர்கள், உற்றார், உறவினர் என்றானது.

 

இன்று சரியாக பதின்னான்கு வருடம் முடிந்தும் கொஸ்ரல் தான் அவளது வாழ்விடம், முன்பு பாடசாலைக் கொஸ்ரல், பின்பு பேராதனைப் பல்கலைக்கழக கொஸ்ரல், இப்போது யாழ்ப்பாணத்தில் வேலை செய்வதால் அங்கே, ஒரு கேள்ஸ் கொஸ்ரல்.

 

விழி நீரோடு, பெருமூச்சும், தானாக வர தன் நினைவுகளில் இருந்து கழன்று, இயல்புக்கு வந்தாள்.

 

அவளது தாய்,தந்தை மட்டுமா அவளை புரிந்து கொள்ளவில்லை. அவனது கணவன் மட்டும் புரிந்து கொண்டானா? ஏன்ன….?

 

Advertisement