Advertisement

மலர் 2
 
அன்று காலேஜ் முடிந்து அவள் வீட்டுக்கு வரும் போதே சோர்ந்து போயிருந்தாள். இவள் வரவும் பஸ்சும் வர ஏறி இடம் பார்த்து அமர்ந்து கொண்டவள் நிம்மதி பெருமூச்சு ஒன்றை விட்டு ‘நாளையோடு இந்த எக்ஸாம் எல்லாம் முடிகிறது.றிசல்ட் வரும் வரை அப்பாவோடு நேரத்தை செலவழிக்க வேண்டும்.’ என யோசித்து கொண்டிருக்கவும் அவள் இறங்க வேண்டிய இடம் வர அவசரமாக இறங்கி வீட்டுக்கு சென்றாள்.
கதவு பூட்டியிருந்தது. திறப்பு வழமையாக வைக்கும் இடத்தில் இருப்பதைக்கண்டவள் அதை எடுத்து கதவுகளை திறந்து உள்ளே சென்றவள்,  புத்தகங்களை தன் மேசை மீது வைத்து விட்டு உடை மாற்றி வந்தவள் வீட்டை ஒழுங்குபடுத்தி விட்டு கை, கால்,முகம் கழுவி சாமியறையில் விளக்கை ஏற்றி விட்டு இரவு உணவுக்கு சப்பாத்திக்கு மாவை குழைத்து உருட்டி வைத்தவள் அதை மூடி வைத்து விட்டு கதவை பூட்டி திறப்பு எடுத்துக்கொண்டு தந்தையை தேடி வீட்டுக்கு பின் புறம் இருந்த அந்த பெரிய தோட்டத்தை நோக்கி சென்றாள். 
 
“அப்பா… அப்பா…எங்கே இருக்கிறீர்கள். உங்களுக்கு…. தோட்டத்துக்குள்ளே வந்தால் வீட்டு நினைப்பு இல்லாமல் போய்விடுமே…!” என்று கூறியபடி வந்தவள் அங்கே வாழைக்குலை விற்ற காசை கொடுப்பதற்காக தரகர் நிற்பதை பார்த்து அமைதியாய் தந்தை அருகில் போய் நின்றாள்.
 
பணத்தை கெடுத்து விட்டு தரகர் சென்று விட கையிலிருந்த பணத்தை அவளிடம் கொடுத்து, “இந்தா நித்தும்மா… இதில் இரண்டு இலட்சம் இருக்கிறது கொண்டு போய் சாமிக்கு முன்னால் வைத்து விட்டு கவனமாக உள்ளே எடுத்து வை.அதை நாளைக்கு கொண்டுபோய் உன் பேரில் இருக்கின்ற எக்கவுண்டில் கட்டி விடு.”
 
“சரி…அப்பா.” என்று தந்தை சொன்னது போல் செய்து விட்டு வெளியே வந்து சப்பாத்தி போட ஆரம்பித்தாள். நாளைக்கு நடக்கும் விபரீதம் புரியாமல்…!
 
அடுத்த நாள் காலை வேளைக்கு எழுந்து கிளம்பியவள் தந்தை கொடுத்த பையையும்  பாங் புத்தகத்தையும் எடுத்து கொண்டு கிளம்பியவள் பாங் வாசலுக்கு செல்லவும் எதிர்பாராத விதமாக எங்கிருந்து வந்தான் என்று தெரியாமல் வந்தவன் அவளது முதுகில் கொழுவியிருந்த பையை பிடித்து இழுக்கவும் அவளது சுடிதாரின் மேல்பக்கமும் கிழிந்து விட அவள் தனது உடையை கையால் பிடிக்கவும் அவளது பையை பறித்து கொண்டு ஓடினான் திருடன். 
 
அவள் கத்தவும் முடியாமல், ஓடவும் முடியாமல் அப்படியே ஸ்தம்பித்து நிற்க அவள் விழிகள் அருவியாக கண்ணீர் வழிந்தது. 
 
சற்று முன் தான் செந்தூரும் காரை பாங்குக்கு சற்று தள்ளி காரை நிறுத்தி விட்டு தனக்கு வந்த ஃபோன் ஹோலை அட்டன் பண்ணி காதுக்குள் வைத்து கொண்டு நிமிரவும் அவனும் அந்த காட்சியை பார்த்து விட்டான். அவன் பட்டென்று ஃபோனை கட் பண்ணி டாஸ்போட்டுக்குள் போட்டவன் திருடன் அவனது கார் கதவு திறக்கும் பக்கமாக வரவும் பட்டென்று வேகமாக கார்க்கதவை திறந்தான். 
 
இதை எதிர் பார்க்காத திருடன் கதவில் அடிபட்டு கீழே விழுந்தான். விழுந்தவன் எழ முடியாது அவன் நெஞ்சில் பூட்ஸ் காலொன்று அமத்திக்கொண்டிருந்தது. 
 
குனிந்து அவனது சேட்டை கொத்தாக பற்றியவன் அவனது முகத்தில் நான்கு அறை விடவும் அங்கே திரண்ட மக்கள் ஒன்று கூடி திருடனை பந்தாடி விட்டு போலீசில் இவனை பிடித்து கொடுக்கின்றோம் எனவும் அவன் தலையசைத்தவாறு பையையும் கொண்டு அவளருகே சென்றான். 
 
“இந்தாம்மா…உன் பை எல்லாம் சரியாக இருக்குதா என்று பார்?” என்று பையை நீட்டினான். 
 
அவள் அதை வாங்காது தன் சுடிதார் பிடித்தபடி நிற்கவும் அவளை நன்றாக கவனித்தவன் விடயத்தை ஊகித்து பட்டென்று அவளது சுடிதார் துப்பட்டாவை எடுத்து அவளது தோளை போர்த்திவிட்டு, “சீக்கிரம் என்னுடன் வா…என்று விட்டு முன்னே நடக்க அவள் பின்னால் அவளும் சென்றாள். 
 
அவன் தன் கார் கதவை திறந்து விட்டு ” உள்ளே ஏறு… வருகின்றேன்.” என்று கூறியவன் அருகில் இருந்த மருந்து கடையில் மருந்துகளை வாங்கி கொண்டு வந்து அவளிடம் கொடுத்தவன் சீக்கிரம் போடு வருகின்றேன் என்று விட்டு எதிரே இருந்த துணிக்கடைக்குள் சென்று மறைந்தவன் சிறிது நேரத்தில் கையில் துணிப்பையுடன் வந்து கார்க்கதவை திறந்து அவளருகில் அமர்ந்தான். 
 
அவளிடம் துணியை கொடுத்து “இந்தா உன் துணி கிழிஞ்சு போச்சுல்ல… அதான்…” என்று கவரை கையில் கொடுத்தான்.
 
அவள் இன்னும் மருந்து போடாதிருப்பதை பார்த்தவனிற்கு கோபம் ‘சுருசுரு’ என தலைக்கேறியது. “ஏய் இடியட்… மருந்து போடாமல் என்ன? கனவா காண்கிறாய்.”
 
அவளுக்கு வார்த்தைகள் தந்தியடித்தது. “ஆ… இல்… இல்லை காயம் இருக்கின்ற இடம் எட்டவில்லை.”
 
“சரி… சரி…  திரும்பு நானே போட்டு விடுகின்றேன்.” எனவும் அவளுக்கு தூக்கி வாரி போட்டு. 
 
“ஹலோ…நான் ஒன்றும் உன்னை பிடித்து தின்ன மாட்டேன் ஓகே.யஸ்ட் ஒரு ஹெல்ப். அப்படி இல்லை என்றால் என்னை ஒரு டாக்டர் என்று நினைத்து கொள் கம்மோன் க்குயிக்.”
 
அவள் பயத்துடன் திரும்பி அவனுக்கு முதுகை காட்டினாள். 
 
“கொஞ்சம் வலிக்கும் பொறுத்துக்கொள்.” என்றவன் இதமாக காயத்திற்கு மருந்திட்டு பிளாஸ்டரை போட்டு விட்டான். 
 
அவன் கைகளிற்கு பெண் உடல் என்பது புதிதல்ல. ஆனால் அவளுக்கு இது முதல் ஆணின் தீண்டல். அவனின் குணத்தை மனதிற்குள் விரும்பினாள்.அப்போதே அவளின் மனம், தனக்கு துணைவனாய் வரப்போகிறவன் இவனைப்போலவே கண்டிப்புடனும், கனிவுடனும் இருக்க வேண்டும். ‘என்று நினைத்துக்கொண்டாள். 
 
அதே போல் அவன் மனதிலும் அவளைப்பற்றி எதுவும் தோன்றவில்லை. மாறாக ஆபத்தில் இருக்கின்றாள் அவளிற்கு உதவி செய்ய வேண்டும் என்பது மட்டும் தான்… 
 
அவன் தன் வேலையை முடித்து விட்டு,அவளை பார்த்து “என்ன?  அலுவலாக இங்கே வந்தாய்.”என்றான். 
 
“பாங்குக்கு காஸ் டெப்போசிற் பண்ணணும்.”
 
“ஓ… ஸ்லீப்…நிரப்பி வைத்திருக்கிறாயா? 
 
“ம்…”என்று கூறி பாக்கை பார்க்கவும் அது அவனது காலருகில் கிடக்கவே அவள் பார்வையை தொடர்ந்தவன் அதை தானே  எடுத்து திறந்தான் கையில் சிக்கியது அவளுடைய எக்ஸாம் அட்மிஷன்.
 
“இன்று உனக்கு எக்ஸாமா? “
 
அவள் தலையை ஆம் என்பது போல் அசைத்தாள். 
 
“சரி… பாங்புக்கையும்,ஸ்லீப்பையும்,காசையும் கொடு நான் கட்டிவிட்டு வருகிறேன். நீ ரெஸ்சை சேஞ் பண்ணு ஓ…ஓகே.” என்றவன் எல்லாவற்றையும் வாங்கி கொண்டு சென்றான். 
 
அவன் செல்லும் போது கார்க்கண்ணாடியை ஏற்றி விட்டு தான் சென்றான். அவனது கரிசனம் அவள் தந்தையை அவளுக்கு நினைவூட்டவே அவள் கண்கள் கசிய உடையை மாற்றிக் கொண்டாள்.
 
அவன் சிறிது நேரத்தில் வந்து கண்ணாடியில் தட்டவும், அவள் கண்ணாடியை இறக்கினாள். 
 
அவன் அவளிடம் றிசீப்ற்றையும், பாங்புக்கையும், கொடுத்தவன் “சரி பார்த்துக்கொள்.” என்றான். 
 
அவள் கண் கலங்க “தாங்ஸ்” என்று கை கூப்பினாள். 
 
அவன் அவளைப் பார்த்து “உன் தாங்ஸ் எல்லாத்தையும் நீயே வைத்துக்கொள். இப்போது உன் காலேஜ் எது என்று சொன்னால் கொண்டு போய் விடுகின்றேன்.” என்றான்.
 
அவள் தயக்கத்துடன் “உங்களுக்கு வீண் சிரமம் நானே போய்க்கொள்வேன்.” என்றாள். 
 
“இருபது நிமிடத்தில் பறந்தா போவாய்.எக்ஸாம் எழுதனும் என்று ஐடியா இல்லை போல.உனக்கு பெஞ் தேய்க்கிறது என்றால் விருப்பமா? “
 
அவன் அராத்தை தாங்க முடியாது என நினைத்தவள் “போகலாமா?” என்றாள். 
 
“தடஸ் குட்” என்றவன் காரை எடுத்தவன் பத்து நிமிடத்தில் காலேஜ் வாசலில் கொண்டு போய் நிறுத்தினான். 
 
காரில் இருந்து அவசரமாக இறங்கியவள் அவளது பையை எடுத்துக்கொண்டு “ரொம்ப நன்றி சேர்” என்று கூறி விட்டு ஓட்டமும் நடையுமாக எக்ஸாம் ஹால் நோக்கி ஓடினாள்… 
















Advertisement