Advertisement

ஜோடி நம்பர் டூ
கழுத்தில் புது மஞ்சள் தாலி பளபளக்க வெட்கமும் கனவும் போட்டி போட நாணத்துடன் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் காத்திருந்தாள் குந்தவை. அறையில் எங்கும்  நிறைந்திருந்த மல்லிகை மணம் ஒருவித குதூகலத்தைக் கொடுக்க தன்னவனை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.
கண்ணாடிச் சுவரின் வழியே வானத்தில் நிலவு காய்ந்து கொண்டிருக்க இவளும் தன் மன்னவனை எதிர்பார்த்து உருகி நின்றாள். சிறிது நேரம் நீந்திவிட்டு வருவதாக சொல்லி சென்றவன் இன்னும் காணவில்லை. நேரம் கரைய அவன் மேல் கடுப்பு கூடியது.
“ப்ச்… இவன் இன்னும் அங்க என்ன பண்ணிட்டு இருக்கான்… போயி பார்த்திட்டு வருவோம்…” நினைத்தவள் கதவைத் திறக்க வீடே நிசப்தமாய் இருந்தது. ஒரு விளக்கு மட்டும் ஒளிர்ந்து கொண்டிருக்க பணியாளர்களும் தனிமை கொடுத்து சற்றுத்தள்ளி இருந்த கெஸ்ட் ஹவுசுக்கு போயிருந்தனர்.
“சரியான லூசுப் பாண்டி… அவனவன் பர்ஸ்ட் நைட்டுக்கு என்னெல்லாமோ யோசிக்கறான்… இவன் என்னடான்னா கல்யாணமானாப் போதும்னு இப்படி தத்தியா இருக்கானே…” மனதுக்குள் முணுமுணுத்தபடி நீச்சல்குளம் இருந்த இடத்தை நோக்கி நடக்க தேவ்மோகன் அந்த நேரத்திலும் நீந்திக் கொண்டிருப்பது தெரிந்தது.
இவளைக் கண்டதும் கை தூக்கி, “ஹாய் டார்லிங்… வா…” என்று அழைக்க, கடுப்புடன் அருகே சென்றவள், “உனக்கு என்ன நாளைக்கு ஸ்விம்மிங் காம்பெடிஷன் எதுவும் இருக்கா…” என்றாள் கடுப்புடன்.
“ஒய் பேபி… எனக்கு நைட் ஸ்விம்மிங் ரொம்ப பிடிக்கும்… உனக்கு ஸ்விம்மிங் பிடிக்காதா…” என்றான்.
“ஹூக்கும்… இங்க எதுக்கு வந்தமோ அதை மறந்துட்டு நீ இப்படிப் பண்ணிட்டு இருந்தேன்னா எனக்கு இப்பப் பைத்தியம் பிடிக்கும்…” என்றவளை நோக்கிக் குறும்புடன் புன்னகைத்தவன் கையை நீட்டினான்.
“அதான் அங்க ஸ்டெப்ஸ் இருக்கே… அதுல ஏறி வா…” அவள் சொல்லவும், “ம்ஹூம்… நீ கை கொடு…” என்றான். “சரியான இம்சை டா நீ…” என்றவள் கையை நீட்ட அடுத்த நிமிடம் அவளும் தண்ணிக்குள் இருந்தாள். இரவு நேரத்தில் ஊசியாய் உடலைத் துளைக்கும் குளிர்ந்த நீரில் அவள் நடுங்கிக் கொண்டிருக்க அவளைத் தன்னருகில் இழுத்து அணைத்துக் கொண்டான் அந்த காதல் மன்னன்.
அவளது குளிர்ந்த தேகத்தில் அவனது மூச்சுக் காற்றும், விரல்களின் தேடலும் சுகமான சூடைக் கொடுக்க குளிர்ந்த நீரிலும் வெம்மையைத் தேடி நீந்திக் கொண்டிருந்தனர்.
சிறிது நேரத்தில் விளையாட்டை முடித்து ஈரம் சொட்ட அவளைத் தன் கைகளில் ஏந்திக் கொண்ட தேவ் மோகன் தங்களது அறையை நோக்கி நகர அவனது சீண்டலில் குளிர் காய்ந்தவள் மனதில் காதல் தீயுடன் மோகமும் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியிருக்க சிவந்த முகத்துடன் அவன் மார்பில் முகத்தை புதைத்துக் கொண்டாள் குந்தவை. காதலின் கரை தேடி இருவரும் நீந்தத் தொடங்கினர்.
ஜோடி நம்பர் த்ரீ
கையில் கையும் வச்சு
கண்ணில் கண்ணும் வச்சு
நெஞ்சில் மன்றம் கொண்டு
சேருன்ன நேரம்…
அருள்மொழி வர்மன் அறைக்குள் நுழைய கட்டிலில் அமர்ந்திருந்த வானதி நாணத்துடன் எழுந்து நிற்க அவள் கையைப் பற்றியவன், “சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் சேர்ந்திருந்தால் திருவோணம்…” எனப் பாடிக் கொண்டே சுற்றவும் அவளுக்கு சிரிப்பாய் வந்தது.
“ஹஹா அத்தான்… என்னாச்சு, கையை விடுங்க…” அவள் அழகாய் தமிழில் சொல்லவும் சட்டென்று திகைத்தவன், “வானு, நீ இப்ப என்ன சொன்ன… மறுபடி சொல்லு…” என்றான் வியப்புடன்.
அவனைக் குறுகுறுவென்று நோக்கினாள் வானதி.
“அத்தான்… என் அத்தான்…
அவர் என்னைத்தான்…
எப்படி சொல்வேனடா…”
என்று பாட்டுப் பாட பேசவும் மறந்து அதிசயமாய் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான் அருள்.
ஏனத்தான் என்னைப் பார் அத்தான்
கேளத்தான் என்று சொல்லித்தான்..
சென்ற பெண்ணைத்தான் கண்டு துடித்தான்…
அழைத்தான்… சிரித்தான்… அணைத்தான்…
எப்படி சொல்வேனடா…” என்றாள் கண்ணை சிமிட்டி.
“வாவ்… சூப்பர்… இவ்வளவு அழகா தமிழ்ல பாடற… எப்படி வானு…” என்றான் அதே மாறாத திகைப்புடன்.
“கிரெடிட் கோஸ் டு மை அத்தையம்மா… அத்தை தான் இந்தப் பாட்டை எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க… சர்ப்ரைசா இருக்கட்டும்னு நானும் பிராக்டிஸ் பண்ணிப் பாடினேன்…”
“ம்ம்… சூப்பராப் பாடின வானு… அதும் நீ சொல்லுற அத்தான் செம… மறுபடி சொல்லேன்…” என்றான் அவள் கை பிடித்து.
“அத்தான்… நான் சொன்னது அவ்ளோ நல்லா இருக்கி…” அவள் வேண்டுமென்றே கேட்கவும், “”ஹாஹா… இருடி… இன்னைக்கு நான் உன்னை இறுக்கற இறுக்குல நீ இனி அந்த வார்த்தையே சொல்ல மாட்ட…” என்று சொல்லியபடி அணைக்க அவளுக்கு நிஜமாலுமே மூச்சு முட்டியது.
“அச்சோ அத்தான், விடு… மூச்சு முட்டுது…”
“அது சரி, என்ட ஓமனக்குட்டி இதுக்கே மூச்சு முட்டினா எங்கனே… இன்னும் என்னெல்லாம் இருக்கு…” என்றவன் அவள் கன்னத்தில் இதழ் பதித்து இதழை நெருங்க விலகி ஓடியவளை எட்டிப் பிடித்து கட்டிலில் சாய்த்தான். கேரளமும், தமிழ்நாடும் இணைந்து அங்கே காதலுடன் ஒரு புது மாநிலத்தைப் படைக்கத் தொடங்கியது. இருவருக்கும் காதலை சொல்ல அங்கே மொழிக்கு அவசியமின்றிப் போக நிசப்தமாய் அரங்கேற்றம் நிகழ்ந்தது.
இரண்டு நாட்கள் கொஞ்சியும், குழைந்தும் சந்தோஷமாய் காதலித்துக் கழிய மூன்று ஜோடிகளும் புது வாழ்க்கைக்குத் தயாராய் தங்கள் கூடு திரும்பத் தொடங்கினர்.
அவர்களை விருந்துக்கு வருமாறு அழைத்துவிட்டு சிவராமனும், ஷீலாவும் ஊருக்குக் கிளம்பினர். குந்தவை கணவனுடன் புகுந்த வீட்டுக்கு செல்ல தனது அண்ணன் மகள்களின் முகத்தில் தெரிந்த சந்தோஷம் கண்டு சகுந்தலாவின் மனம் நிறைந்தது. அவர்களின் வரவுக்குப் பின் வீடே கலகலவென்று நிறைந்திருக்க ஒரு வாரத்தில் ஆதித்யன் நந்தினியுடன் பெங்களூரு கிளம்பினான்.
இருவரும் விடைபெற, “ஆதி, மாசத்துக்கு ஒருதடவை ஆச்சும் வீட்டுக்கு வந்திட்டுப் போங்கடா… நந்தினிக்கு பிளைட்டுல வர்றது தான் வசதி… செலவாகுமேன்னு வராம இருந்துடாதிங்க…” சுந்தரம் சொல்லவும் சகுந்தலா கணவனை திகைப்புடன் நோக்க, “அவர் வேண்டாம்னு சொன்னாலும் என் அத்த, மாமாவைப் பார்க்க நான் இழுத்திட்டு வந்திருவேன் மாமா…” என்றாள் நந்தினி புன்னகையுடன். 
“சரிம்மா, பத்திரமா போயிட்டு வாங்க… ஆதி, என் மருமகளைப் பார்த்துக்க டா…” சகுந்தலா சொல்ல, “சரிம்மா, மருமக வந்ததும் என்னைக் கண்டுக்கல பார்த்திங்களா…” மூத்த மகன் சொல்லவும் அவனை அணைத்து நெற்றியில் முத்தமிட்டவர், “என் செல்லம்… உன்னால தானடா அவளே எங்களுக்கு கிடைச்சா…” என்றதும் மனைவியிடம் சிரித்தான்.
“அருள், வானதியை அழைச்சிட்டு பெங்களூரு வாங்க…” என்றதும் அவளை அணைத்துக் கொண்டாள் வானதி.
“சேச்சி, கவனமா இரு… வீட்ல ஹெல்ப்க்கு யாரையாச்சும் வச்சுக்க… ஆதி சேட்டா… சேச்சிய நோக்கனே…” என்று சொல்ல தங்கையின் அன்பில் நெகிழ்ந்தாள் நந்தினி.
“வானதி, நீதான் கொடுத்து வச்சவ… அத்தை மாமாவோட இங்கயே இருக்கலாம்… சந்தோஷமா இரு… அவங்களை கவனமாப் பார்த்துக்க…” என்று கூற சகுந்தலா சுந்தரத்தை அர்த்தத்துடன் நோக்கிப் புன்னகைக்க அவரும் சந்தோஷமாய் தலையாட்ட அவர்கள் கிளம்பினர்.
அருளும் சுந்தரமும் வழக்கம் போல் அலுவலகம் செல்லத் தொடங்க சகுந்தலாவும், வானதியும் எப்போதும் போல வீட்டு கதை பேசி வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொண்டனர்.
இருவரும் அன்று கோவிலுக்கு செல்ல முதன்முதலில் சகுந்தலா மயங்கி விழுந்தது வானதிக்கு நினைவு வந்தது. அவள் சகுந்தலாவை நோக்க அவரோ இவளைப் பார்த்து புன்னகைத்து அவர் எண்ண ஓட்டமும் அதுதான் என்றார்.
வானதி வேலை முடிந்து அவர்கள் அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்க சகுந்தலாவின் கைகள் வெகு நாட்களுக்குப் பிறகு பொன்னியின் செல்வனை ஆவலுடன் எடுத்தது. அதைத் திறந்தவர் மனம் சொல்லவொணா நிறைவில் மகிழ்ந்திருந்தது.
நந்தினியைக் காண பெங்களூரு செல்கையில் அண்ணனை சந்தித்ததையும், அவரிடம் தன்னை சந்தித்ததை யாரிடமும் காட்டிக் கொள்ள வேண்டாம் என்று சொல்லியதையும் அதற்குப் பிறகு தனது ஒவ்வொரு காய் நகர்த்தல்கள் மூலம் ஜெயந்தி டாக்டர் இல்லாத சமயத்தில் வானதியை இங்கே கொண்டு வந்தது, கணவரே அவளை வீட்டுக்கு அழைத்து வரும் வகையில் நடந்து கொண்டது, எதிர்பாராமல் குந்தவை, அருளை வானதி பேருந்தில் சந்தித்தது, கணவரின் மனம் அவர்களை ஏற்றுக் கொள்ளும் நாளுக்காய் காத்திருந்து அவரைக் கனியவைத்தது, எல்லாவற்றையும் சந்தோஷமாய் ரீவைன்ட் பண்ணிக் கொண்டிருந்த சகுந்தலாவின் மனசாட்சி, “உன் கணவருக்குத் தெரியாமல் இத்தனை வேலை செய்திருக்கிறாயே… இது அவருக்கு செய்யும் துரோகமில்லையா…” என்று கேட்க புன்னகைத்தார்.
“ஆயிரம் பொய் சொல்லியாச்சும் கல்யாணம் பண்ணலாம்னு சொல்லுவாங்க… நான் பொய் சொல்லலை, என் குடும்பத்தை ஒண்ணு சேர்க்க கொஞ்சம் மறைஞ்சு நின்னு விளையாடினேன்… காதலிச்ச காரணத்துக்காக என்  அண்ணனைப் பிரிச்சு, அவங்ககளைப் பொருளாதாரத்திலும் கஷ்டப்படவிட்ட என் புருஷனுக்கு இந்த சின்ன தண்டனை தப்பில்லை…” என்று மனதைத் தேற்றிக் கொண்டார்.
“நம் மனதுக்குள் எங்கோ நிசப்தமாய் ஒளிந்திருக்கும் எண்ணங்களுக்கு நாம் நினைக்காமலே சில வடிவங்களை மனது கொடுத்து விடுகிறது… அதுவே விதியின் விருப்பமும்….” என நினைத்தவர் நிறைந்த மனதுடன் பொன்னியின் செல்வனை வாசிக்கத் தொடங்கினார்.
ஆழ்மன எண்ணங்கள்
ஆழிப் பேரலையாய்
உருவாகும்போது
உதடுகள் உச்சரிக்காத
வார்த்தைகளும் சில நேரம்
உருவம் கொள்கிறது…
தனக்கான நியாயத்தின்
மொழியை மனது
கண்டறிந்து கொள்கிறது…
நிசப்தமும் சத்தமில்லாமல்
சப்திக்கத் தொடங்குகிறது…
தனதான பாஷையுடன்…
  
…………………………………………………..சுபம்………………………………………………..

Advertisement