Advertisement

வேதா,மயூவோடு வீட்டுக்கு வர,அரவிந்தும் அறையிலிருந்து வெளியே வர சரியாய் இருந்தது.
BORN TO WIN என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பச்சை நிற டீஷர்ட் அவனுக்கு மிகவும் பிட்டாக இருந்தது. அதிலும் அவனது கேட் ஐ(cat eye) கண்ணாடி மிகவும் பொருத்தமாக இருக்க,முப்பத்தியொரு வயது ஆண்மகன் என்றால் யாராலும் நம்ப முடியாது.கல்லூரி மாணவன் போல் இருந்தான்.
அந்த டீஷர்ட்டில் மகனை பார்த்ததுமே வேதாவிற்கு புன்னகை ஒட்டிக்கொண்டது.
“கிளாஸ் முடிச்சிட்டியா அர்வி”
“ஆமாமா.இன்னைக்கு லைவ் சேட்னு லாஸ்ட் மந்த் சொல்லியிருந்தேன்.அதான் தவிர்க்க முடியல.நீங்க எங்க போயிட்டு வர்றீங்க?”
“நம்ம வீட்டுக்கு தான்”என்றவர் நியாபகம் வந்தவராக,
“இன்னைக்கு நம்ம ஸ்டாப்,வொர்க்கர்ஸ் எல்லாத்துக்கும் விருந்து கொடுக்கறோம்.ஞாபகம் இருக்கு தானே?”கேட்டார்.
“அதெல்லாம் மதன் பார்த்துக்கறேன்னு சொல்லிட்டான்மா.நான் அங்க போகலை.போக சொல்லாதீங்க ப்ளீஸ்”
“நீ மட்டுமில்ல,உன் வைப் கூட அங்க போய் தான் ஆகணும் அர்வி.நீ வருவேன்னு மதன்கிட்ட சொல்லிட்டேன்.அவன் ஏதோ சர்ப்ரைஸ் கொடுக்க ஏற்பாடு செய்திருக்கான்னு நினைக்கறேன்.அவனை ஏமாத்திடாதே”
“நிச்சயம்,ஏமாத்த தான் போறேன்.என் கல்யாணத்துக்கு கூட வரலைம்மா அவன்!! அப்படியென்ன வெட்டி முறிக்கிற வேலை அவனுக்கு!! முதல் வேலையா அவனை வேலையை விட்டு தூக்கப் போறேன் பாருங்க”சொன்னவன் அதை செய்யும் முனைப்பில் போனையும் எடுக்க,அதை வேதா பிடுங்கிக் கொண்டார்.
“மதனை நீ வேலையை விட்டு தூக்கினா,கோபம் போயிடுமா! இன்னும் உனக்கு கோபம் அதிகமாகத்தான் செய்யும்.நடக்காததை செய்யற மாதிரி நடிக்கறதை விட்டுட்டு,நடக்கற வேலையை போய் கவனி.! போ..நேரமாச்சு..சீக்கிரம் கிளம்பி வா”என்றவர்,மௌனமாய் அருகில் நின்றிருந்த மருமகளையும் ஒரு பார்வை பார்த்தவர்,
“நீயும் கிளம்பி அவனோட போ”எனவும் தலையசைத்துவிட்டு அறைக்கு சென்றாள்.
“எங்கிருந்தும்மா பிடிச்சிங்க இவளை!! ரோபோ மாதிரி இருக்கா”தலையை உலுக்கிக்கொண்டான்.
எதை நினைத்து சொல்கிறான் என்று தெரியாவிட்டாலும்,”உனக்கு பிடிச்சதினால தான்,வலுக்கட்டாயமா அந்த பொண்ணை பிடிச்சு இங்க உட்கார வச்சிருக்கேன்.ரொம்ப பேசி அவளை நீயே ரோபோவா ஆக்கிடாத!! போ..போய் கிளம்பி வா”விரட்டவும் அறைக்குள் நுழைய,கதவு உள்பக்கமாய் பூட்டப்பட்டிருக்க,மேலிருக்கும் தனதறைக்கு சென்று தயாராகி வந்தான்.
அவன் வந்த பின்னரும் அவள் வந்திருக்கவில்லை.மேலும் பதினைந்து நிமிட தாமதத்திற்கு பின் தான் வந்தாள்.
அனுவின் தங்கைக்கு அலங்கரிப்பது எப்படியென்று சொல்லிக்கொடுக்கவும் வேண்டுமா என்ன?
ஆரஞ்சு வண்ண டிசைனர் சேலையில் அட்டகாசமாக வெளியே வந்தவளை பார்த்தும்,பார்க்காதது போல திரும்பி நின்று கொண்டான்.
வேதாவிற்கு இருவரின் பொருத்தத்தையும் பார்த்து,அந்த நொடி சந்தோஷம் ஏற்பட்டாலும்,இருவருக்குள்ளும் மனப்பொருத்தம் ஏற்படும் வரை தனக்கு நிம்மதி இருக்க போவதில்லை என்பதால்,எதையும் வெளிக்காட்டாமல்,”கல்யாணம் முடிஞ்ச மறுநாளே டிரைவ் பண்ண வேண்டாம் அர்வி.டிரைவர் வண்டி ஓட்டட்டும்”என்றவரிடம் ஒன்றும் சொல்லாமல் முன்னே சென்றாலும்,பின்னே வருபவளின் அரவம் உணர்ந்து,
“கல்யாண முடிஞ்ச மறுநாள்,சம்சார சாகரத்தில மூழ்கினவன் தான்,தூக்கக்கலக்கத்தில இருப்பான்.டிரைவ் பண்ண முடியாது.நான் தான் நல்லா தூங்கி புல் எனெர்ஜியோட இல்ல இருக்கேன்.எனக்கெதுக்கு டிரைவர்”தனக்குத்தானே பேசுவது போல பேசிவிட்டு முன்னே சொல்ல,எப்போதும் போல் அமைதியாகவே இருந்தாள்.
காரின் முன்னிருக்கையில் அமரப்போனவளிடம்,”இது என் வைப்க்கும்,குழந்தைகளுக்குமான இடம்.யூ ப்ளீஸ் கோ பேக்”பட்டென்று சொல்லவும்,கார்க்கதவை பட்டென்று சத்தத்துடன் அடைத்துவிட்டு வீட்டுக்கே திரும்பி நடந்தாள்.
அது ஏனோ அவனுக்கு ஒருவித திருப்தியே கொடுத்தது.பின்பக்கம் ஏறியிருந்தால்,கவலைப்பட்டிருப்பான்.இப்போது அந்த திருப்தியுடனே கதவை திறந்துவிட,அந்த சத்தத்தில் திரும்பியவள்,அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு,முன் பக்கமே ஏறிக்கொண்டாள்.
கார் பயணம் என்றாலே பாட்டு கேட்டுக்கொண்டு தான் ஓட்டுவான். பாகவதர் காலத்து பாடல் முதல் அனிருத் பாடல் வரை அனைத்து கலேக்ஷன்களும் வைத்திருப்பவன்,தன் மனநிலைக்கு ஏற்றார் போல பாடல்களை கேட்பான். அவனது மன அழுத்தத்திலிருந்து விடை கொடுக்கும் மாமருந்து இசை தான்.
மனைவியுடன் பேச தோணாததால்,பவதாரணியின் பாடல்களை ப்ளே செய்தான்.
கண்ணனுக்கு என்ன வேண்டும்
கண்ணனுக்கு என்ன வேண்டும்
தினமும் உதிர்க்கும் பொன் மலரோ
இதழ்கள் உதிர்க்கும் சொல் மலரோ
தினமும் உதிர்க்கும் பொன் மலரோ
இதழ்கள் உதிர்க்கும் சொல் மலரோ
உன்னை எண்ணி ஏங்கித் தவிக்கும்
உள்ளம் என்னும் மலரோ
சொல்லு கண்ணா
சொல்லு கண்ணா….
அரவிந்திற்கு மிகவும் பிடித்த பாடல்..பாடகி..கூடவே அவனுக்கு என்ன வேண்டும் என்பதையுமே இந்த பாடல் தெள்ள தெளிவாக கூற,சாலையிலிருந்த கவனத்தை விடுத்து,மயூவை பார்த்தான்.
பாடல்வரிகளை மெல்லிய குரலில் சத்தமில்லாமல் பாடிக்கொண்டிருக்கிறாள் என்று புரிந்தது.
சட்டென்று சத்தத்தை முழுவதுமாக குறைத்துவிட்டான்.அதை உணராமல்,அவள் போக்குக்கு..
உள்ளம் உண்டு கோடி கோடி
உந்தன் உள்ளம் என்னவென்று
சொல்லு கண்ணா…
கண்ணனுக்கு என்ன வேண்டும்
பாடிக்கொண்டே வந்தவள்,பவதாரிணியின் குரலை விட,தன் குரல் ஓங்கி ஒலிக்கவும்,அமைதியாகிவிட்டு,அவனை ஒருபார்வை பார்த்தவள்,காரின் பக்கவாட்டில் திரும்பிக்கொண்டாள்.
சிரிப்பு வந்துவிட்டது அரவிந்திற்கு!!
அவளின் மேலுள்ள கசப்புகளை எல்லாம் மறந்தவனாய்,”நல்ல குரல் வளம் உனக்கு!!இன்னும் கொஞ்சம் சத்தமா பாடினா,ரொம்ப நல்லாயிருக்கும்”என்றான்.
இதற்கும் பதிலில்லை.
தன்னிலையிலிருந்து இறங்கிப்போய் பேசியதற்கு தன்னையே குட்டிக்கொண்டான்.
ஆனாலும் கடைசியாக ஒருமுறை பேசியே தீர முடிவெடுத்து,”உனக்கு என்கூட வாழற எண்ணமா? இல்லை டிவோர்ஸ் கொடுக்கற எண்ணமா? இதுக்கு நீ பதில் சொல்லியே ஆகணும்.எப்பவும் போல மௌனமா இருந்தேன்னா,காரை நேரா,நமக்கு முன்னாடி போயிட்டு இருக்கற டேன்க்கர் லாரி மேல விட்டுடுவேன்”என்றான்.
அவன் பக்கம் அப்போதும் திரும்பாமல் இருக்க,பயம் காட்டுவதற்கென்றே வேகமாய் ஓட்டியவன்,அவளுடைய சீட் பெல்ட்டையும் கழட்டிவிட,அதற்கும் அசராமல் நேராய் அமர்ந்திருந்தாள்.
அப்படியெல்லாம் போய் இடித்துவிடமாட்டான் என்று அவளுக்கு நம்பிக்கை இருந்தது.அந்த நம்பிக்கை எப்படி வந்ததென்று புரியாமல் இருக்கும் போதே,அரவிந்த் தன்னுடைய சீட் பெல்ட்டையும் விடுவித்துவிட்டு,ஆக்ஸ்லிட்டரில் வேகம் கொடுக்க,அந்த வேகம் அவளுக்கு பயத்தை கொடுத்தது.
“இப்போ ஏன் இப்படி பண்ணிக்கிட்டு இருக்கீங்க”ஆத்திரத்தில்..கூடவே பயத்தில் கத்தி கேட்க,வேகத்தை மெல்ல மெல்ல குறைத்தான்.
“நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு”என்றதும் இன்னும் ஆத்திரம் கூட,
“உங்களோட சுயநலத்துக்காக,அந்த லாரிய இடிக்க பார்த்தீங்களே! அந்த டிரைவர்-க்கும் குடும்பம் இருக்கும்னு யோசிச்சு பார்த்தீங்களா!! என்ன மனுஷன் நீ?”மரியாதையை கைவிடவும்,காரை இடப்புறம் திருப்பி,அங்கிருந்த கிரவுண்டில் நிறுத்தினான்.
“உன் மனசில என்ன நினைச்சிட்டு இருக்க? ரொம்பத்தான் ஓவரா பேசிட்டு இருக்க!! நானும் சின்னப்பொண்ணு,அவசரப்பட்டு கல்யாணம் பண்ணிட்டோம்.விட்டுக்கொடுத்து தான் போவோம்னு பார்த்தா,நீ ரொம்பத்தான் துள்ளிட்டு இருக்க! என்ன நான் சுயநலவாதியா? ம்ம்ம்..என்னோட சுயநலத்துக்காக நான் என்ன பண்ணேன்னு சொல்லு. நீ சுயநலமா உன் குடும்பத்தை போட்டு டார்ச்சர் பண்ணதை விடவா நான் பண்ணிட்டேன்!! உன்னைப்பத்தி கதைகதையா நிறைய சொன்னாங்க!! சொன்னவங்க ரொம்ப லேட்டா சொல்லிட்டாங்க.
அதான்,அதனால தான் என்னால கல்யாணத்தை நிறுத்த முடியல.என் வொர்க்கர்ஸ்க்கு எல்லாம் இன்னைக்கு விருந்து சாப்பாடு போடணும்னு,எப்போ முடிவு பண்ணேன்னு தெரியுமா..நீ தான் எனக்கு முடிவு பண்ண அன்னைக்கு தான்!! இப்படி பல விஷயங்களை  ப்ரீப்ளான் அதை செயல்படுத்த ஏற்பாடுகளையும் பண்ணியிருந்தேன்.
 திடீர்னு நீ சொன்னவுடனே கல்யாணத்தை நிறுத்தியிருந்தா,என்னோட மானம்,மரியாதை அத்தனையும் டோட்டல் பிளாஸ்ட் ஆகியிருக்கும்.
எது நடந்தாலும் காது காதும் வைச்சபடி முடிச்சுக்கறதுக்கு, நான் ஒண்ணும் உள்ளூர் பொறுக்கி கிடையாது. நேஷனல் லெவல்ல பிசினெஸ் பண்ணிக்கிட்டு இருக்கவன்!!
என்னோட இந்த ஸ்டேட்டஸ் ஒண்ணும் என்னோட அப்பா,அம்மா சம்பாதிச்சு கொடுத்தது கிடையாது.என்னோட…நல்லா கவனி…என்னோட தனிப்பட்ட உழைப்பு!! அந்த ஸ்டேட்டஸ்க்கு ஒரு கறை மாதிரி உன்னை கல்யாணம் பண்ணி தொலைச்சிட்டேன்! கறை சட்டையில ஒட்டிடுச்சுன்னு உன்னை மொத்தமா தூக்கிப் போட்டுடறதா,இல்லை கறையை சுத்தம் பண்ணி உன் கூட வாழறதான்னு நான் முடிவு பண்ணணும்.அது உன்னோட கையில தான் இருக்கு..இல்ல இல்ல,உன்னோட வாயில தான் இருக்கு. என்னால இந்த டென்ஷனோட இனி ஒருநாள் கூட இருக்க முடியாது. ஜஸ்ட் ஸ்பீக் அவுட்”இறுதியில் அவன் சத்தம் காரையே அதிர செய்ய,
“டிவோர்ஸ் எல்லாம் கொடுக்க முடியாது”ஒற்றை பதிலில்,எந்தவிதமான விளக்கமும் கொடுக்காமல்,பதிலை சொல்லிவிட்டாள்.
அந்த பதில் அரவிந்திற்கு போதவில்லை.
“ஓகே.நீ டிவோர்ஸ் கொடுக்க வேண்டாம்!! நீ என்னோட வாழவும் வேண்டாம்..இப்போ நேரா வீட்டுக்கு போகலாம்.அம்மாகிட்ட சொல்லிட்டு உன்னை உன் வீட்டுலையே கொண்டு போய் விட்டுடறேன்.என்னோட இஷ்டமில்லாமல்,என்னை கட்டாய்யப்படுத்தி எதுவும் செய்ய வைக்க முடியாதுன்னு அவங்களுக்கு நல்லா தெரியும்.அதனால உன்னை ஊர்லையே தள்ளிவிட்டுட்டு வந்தாலும்,அவங்களால ஒண்ணுமே பண்ண முடியாது..
நான் இன்னொரு மேரேஜ் பண்ணிக்கிட்டாலும்,ஏன் லிவிங் டுகெதர் மாதிரி வாழ்ந்தாலும்,என்னை யாரும் எதிர்த்து ஒண்ணும் செய்ய முடியாது…இதுவொரு வழி.
அண்ட் இன்னொரு வழியும் இருக்கு. பழைய குப்பையெல்லாம் உன் மனசில இருந்து தூக்கிப்போட்டுட்டு,என்னோட முழு மனசோட வாழற எண்ணம் இருந்தா,நேரா ஆபிஸ் போகலாம்.சொல்லு திஸ் வே ஆர்?”என்று சொல்ல விருப்பமே இல்லாமல் நிறுத்த,காரில் சிறிது நேரம் மௌனம் மட்டுமே!!
அந்த மௌனம் அரவிந்திற்கு கடும் கோபத்தைக் கொடுக்க,வீட்டிற்கு செல்வதற்கு காரை திருப்ப,அவனே எதிர்பாராத தருணத்தில்,ஸ்டியரிங்கை திருப்பினாள்.
“என்ன பண்ற நீ”கத்தியவன்,பின்பே அவளின் செயலுணர்ந்து,அவள் கை மேல் தன் கையை வைத்து,வளைவிலிருந்து திரும்பி நேர் சாலைக்கு வந்த பின்பும்,அவள் கையை ஸ்டியரிங்கிலிருந்து எடுக்க விடாமல் மேலையே வைத்திருக்க,கையை அவள் இழுக்க முயற்சித்தும் பலனில்லை.
“வலிக்குது.விடுங்க..ப்ளீஸ்!”எனவும் விட்டவன்,காரின் வேகத்தை வெகுவாக குறைத்து,இருகைகளையும் கோர்த்து அமர்ந்திருந்தவளின்,வலது கையை கிட்டத்தட்ட பிடுங்கி,தன் இடது கையோடு இணைத்துக்கொண்டான்.
இரு கைகள் இணைந்த பின்னே,இல்வாழ்க்கையும் மலரும்!! மலரின் அகம் மலர மட்டும் நாளாகும்!!

Advertisement