Advertisement

நினைவினில் நிறைந்தவளே
அத்தியாயம் 27
செல்வா உள்ளே இருந்து கதவை இழுக்கவும் அதே நேரத்தில் வெளியே இருந்து ஒரு பெண் உள் பக்கமாக கதவை இழுக்க முயற்சி செய்ய செல்வாவின் வேகத்தை ஈடு கொடுக்க முடியாததால் அவள் அவன் மீதே விழ போனாள்…
விழுந்தவளை தாங்கி பிடித்த செல்வா..,,அவளை கீழே விழாமல் நேரே நிற்க வைத்தவன் அவளை காணாது திட்ட ஆரம்பித்தான்..
“உள்ள வரும்போது கதவ தட்டிட்டு வருனும்னு தெரியாதா உனக்கு..கீழ விழுந்தா என்ன ஆகுறது ” என்று அவன் பாட்டுக்கு அவளை காணாது திட்ட..
” ஐம் சாரி அண்ட் தேங்க்ஸ் ” என்று மெல்லிய குரலில் அந்த பெண் சொல்ல
அப்போது தான் அவளது முகத்தை கண்ட செல்வாவிற்கு சந்தோஷமாகவும் அதே சமயத்தில் அதிர்ச்சியாகவும் இருந்தது….
தன் காதல் தன் முன்னே இருப்பதை கண்ட செல்வாவிற்கு அவளை அணைத்து முத்தம் யிட வேண்டும் என்று தோன்றிய எண்ணத்தை கடினப் பட்டு அடக்கினான்…
அவளுக்கு தன்னை ஞாபகம் இல்லையோ என்று தோன்ற வைக்கும் அளவுக்கு அவளது செயல் இருந்தது…
” சீனியர் ஐம் ரியலி சாரி.. நான் தான் கதவ தட்டிட்டு வந்துருக்கனும் ..என் மேல தான் தப்பு” என்று கூறிவிட்டு அவள் அவனை கடந்து உள்ளே சென்றாள்..
“மேம் நீங்க கூப்டிங்கன்னு என்னோட க்ளாஸ்மெட் வந்து சொன்னா..” என்று பணிவுடன் சொல்ல..
“ஆமா அஞ்சனா..!!!நான் தான் உன்ன வர சொல்லி கூப்பிட்ருந்தேன் ” என்று சொல்லி அவளை அழைத்தற்கான காரணத்தை கூறினார் ஐடி ஹேச்சோடி மேம்..
” அதுனால நீங்க இப்ப வெளிய போனான்னே சிஎஸ்சி பையன் அவன் கூட சேர்ந்து தான் இத ஆர்கனைஸ் பண்ண போறீங்க…இத நீங்க ஒரு நல்ல ஆப்பர்சூனிட்டியா எடுத்து யூஸ் பண்ணிக்கோங்க அந்த பையன் அவுங்க டிப்பார்ட்மெண்ட் பிரசிடண்ட் ரொம்ப டெடிக்கேட்டான பையன்..சோ உனக்கு அதுல என்ன டௌட் இருந்தாலும் அவன் கிட்ட கேட்டுக்கோ மா ” என்றார்.
” சரிங்க மேம்..” என்றதுடன் ” அவுங்க பேர் என்ன மேம்..???” என்க
” அந்த பையன் பேர் செல்வராகவன் மா..தேர்ட் இயர் படிக்கிறான்..இப்போ நீ போலாம் ” என்று கூறி அஞ்சனாவை அனுப்பி வைத்தார்..
மீனுவின் மனதில் செல்வாவின் பெயர் குரங்கு என்றே அப்போதும் பதிந்தது…இதை அறியாத செல்வாவோ வகுப்பில் இருந்துக்கொண்டு அவளது பெயரையை ஜெபம் போல் மனதில் சொல்லிக் கொண்டு இருந்தான்..
மீனு வெளியே வரவும் திவ்யாவும் பவியும் லாலிப்பாப் சாப்பிட்டுக் கொண்டே வந்தனர்…பின்பு மூவரும் சேர்ந்து வகுப்பிற்கு சென்றனர்…
வகுப்பில் திவ்யாவும் பவியும் உறங்க..,,மீனு மட்டும் செல்வாவை அர்சித்து கொண்டு இருந்தாள்..
அந்த நாள் அப்படியே போக மாலை கல்லூரி விட ,சொல்வாவோ வேகமாக மீனுவின் வகுப்பிற்கு ஆதியை இழுத்துக் கொண்டு சென்றான்..
” டேய்..!!!இப்போ எதுக்கு டா என்ன தரத்தரன்னு இழுத்துட்டு போற ” என்று அவனது வேகத்துக்கு ஈடுகொடுத்த படியே கேட்டான்.
“அடேய்..!!! கொஞ்சம் அமைதியா வரியா என்னோட அஞ்சு பேபி பொய்யிட போறா.அவள மட்டும் இன்னைக்கு மிஸ் பண்ணிட்டேன் அப்புறம் நீ செத்த என்கிட்ட ” என்று கடு கடுத்துக் கொண்டே வேகமாக நடந்தான் .
சரியாக மீனுவும் அவளது தோழியான பவி மற்றும் திவ்யா வகுப்பை விட்டு வெளியே வரவும் செல்வா மற்றும் ஆதி அவர்களை நோக்கி வரவும் சரியாக இருந்தது..
வேகமாக வந்ததால் செல்வா மீனுவின் மீது மோத.. இதுதான் சரியான நேரம் என்று மீனு பலி தீர்த்துக் கொண்டாள்…
அவளது திட்டுக்கள் அனைத்தையும் இழித்துக் கொண்டே வாங்கிக் கொண்டான்.
“டேய் மச்சி அந்த பொண்ணு உன்ன ரொம்ப நேரமா கேவலமா திட்டிட்டு இருக்கு டா ” என்று ஆதி அவன் காதில் மெதுவாக சொல்ல..
அதற்கு செல்வா ஆதியை போலவே அவனது காதருகில் குனிந்து
வீசுகின்ற காற்றினிலே
வீழ்கின்ற அருவியிலே
மாசற்ற அன்பினிலே
மங்காத சுவையுடனே
புள்ளினங்கள் இசை பாட
புவிமகளும் சேர்ந்தாட எங்கும்
மலர்வனங்கள் பேசிடவும்
மணமெங்கும் கமழ்கின்ற
காதல்மொழி கண்பேசக்
கன்னித்தமிழ் தேனாகிப்
பாய்கின்றது காதினிலே !!!!
என்றோ படித்த கவிதையை சொல்ல…ஆதி விழி பிதுங்கி நின்றான்…
” போதும் மா !நீ என் நண்பன்னை திட்டுனது..அவன் உங்க க்ளாஸ்ல யாரோ ஒரு பொண்ண பாக்கனும்னு அவசரத்துல தான் உன்மேல இடிச்சுட்டான்.. அவனுக்கு பதில்லா நான் மன்னிப்பு கேட்கிறேன்.. அமைதியா போ மா ” என்றான் ஆதி…
” எதுக்கு அண்ணா நீங்க மன்னிப்பு கேக்குறீங்க.. இடிச்ச இவுங்களே அமைதியா தான நிக்கீறாங்க ” என்க
“ஐம் சாரி ” என்று செல்வா கூற மீனு மனதில் ‘ஜெய்ச்சிட்டோம் நாங்க ஜெய்ச்சிட்டோம்’ என்று டோரா புஜ்ஜி போலே  நினைத்து சந்தோஷப்பட்டாள்..
“சரி வா டி போலாம் நேரமாச்சி ” என்று பவி அழைக்க மீனுவும் திவ்யாவும் செல்வாவை கடந்து செல்ல…
” ஒரு நிமிஷம் நில்லு அஞ்சு ” என்க
மீனு செல்வாவை திரும்பி பார்த்து முறைக்க…
“அய்யோ கடவுளே தவளை தன் வாயாளே கெடும் என்பார்களே அது இது தானோ..யார பாக்க வந்தோம்மோ அந்த பொண்ண பாக்குறத விட்டுட்டு இந்த பொண்ணையே திரும்ப கூப்பிடுறானே … ” என்று மனதில் புலம்பிய படி இருந்தான்…
செல்வா அஞ்சு என்று சொன்னதை கவனிக்க தவறினான்.
அதற்குள் ஆதிக்கு முகிலிடமிருந்து அழைப்பு வர..,,அவனிடம் பேச சென்று விட்டான்.
” என்ன எதுக்கு இப்போ நீங்க இப்படி அஞ்சுன்னு சொல்லி கூப்பிடுறீங்க..??என்னோட பேரு அஞ்சனா..ஜசட் கால் மீ அஞ்சனா ஓகே ” என்று கோபமாக பேச..
‘ கோபப்படும் போது கூட என்னோட அஞ்சு பேபி எவ்ளோ அழகா இருக்கா..அப்படியே கண்ணமெல்லாம் எப்படி சிவந்திருக்கு..அய்யோ அத ஒரு கடி கடிக்கனும் போல் இருக்கே ‘ என்று மனதில் நினைத்தவன் ” சாரி மிஸ். அஞ்சனா ..நான் இனி உங்கள அஞ்சனானே கூப்பிடுறேன் ” என்றான்.
“சரி இனி அப்படி கூப்பிடாதீங்க .. என்னோட அபிக்கு மட்டும் தான் அந்த உரிமை இருக்கு ” என்று கூறிவிட்டு ” எதுக்கு இப்போ என்ன கூப்பிட்டிங்க..??” என்று கேள்வியை கேட்டாள்…
செல்வாவிற்கு மீனுவின் பதிலை கேட்டு இதயம் நொருங்கிவிடும் போல் இருந்தது…அவனுக்கு யாரென்றே தெரியாத அபியின் மீது ஆத்திரமாக வந்ததது…அதை எதையும் வெளிக்காட்டாமல் அமைதியாக நின்றான்…
” ஹலோ பாஸ்…!!!என்ன அண்சரையே காணோம் ” என்று செல்வாவின் முன் சுடக்கிட்டு கேட்டாள்…
“ஹாங் அ…அ…அது வந்து..,,நாளைக்கு காலேஜ்க்கு சீக்கிரம் வந்துரு மா ..கொஞ்சம் டிஸ்கஸ் பண்ண வேண்டியது இருக்கு ..உன்னோட ஹெல்ப்க்கு உன்னோட ஃபிரண்ட்ஸை கூட்டிட்டு வந்துக்கோ ” என்று கூறிவிட்டு அவளது பதிலை கூட எதிர்பாராமல் செல்ல..
அந்த நேரம் பார்த்து ஃபோன் பேசி முடித்து வந்த ஆதி..,,செல்வா வேகமாக செல்வதை கண்டு ” பாய் கேர்ள்ஸ்..பாத்து வீட்டுக்கு போங்க ” என்று  விட்டு வேகமாக செல்வாவின் பின்னே ஓடினான்…
” எதுக்கு டி..அந்த அண்ணா கிட்ட இப்படி ரூடா பிஹேவ் பண்ற..??நீ இப்படிலாம் பண்ற ஆள் கிடையாதே ” என்று திவ்யா சந்தேகமாக கேட்க…
” தெரில டி..ஆனா அவன இப்படி சீண்டுறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ..அதான் அப்படி திட்டிட்டேன்..காலைல அவன் என்னைய திட்டினான்.. இப்போ நான் அவன திட்டிட்டேன் பலிக்கு பலி ” என்று சந்தோஷமாக கூறிவிட்டு முன்னே நடந்தாள்…
” என்னடி இவ‌ இப்படி பேசிட்டு போறா..??” என்று திவ்யா மெதுவாக பவியிடம் கேட்க..
அதற்கு பவியோ ” தெரியல டி..ஏதோ வித்தியாசமா பண்றா ,இதுல அவளோட அத்த பையன் அபிய வேற இளுக்கிறா ” என்று கூற
“நீங்க இப்போ வரிங்களா இல்லையா ” என்று மீனு திரும்பி பார்த்து கேட்க…
அவள் கேட்ட அடுத்த நொடி இருவரும் அவளுடன் சேர்ந்து நடக்க தொடங்கினர்…
கோவமாக வந்த செல்வாவோ, அர்ஜுனை கூட காணாது வேகமாக நடந்து கொண்டிருந்தான்..
அவன் பின்னே ஆதியும் ஓடி வந்துக் கொண்டிருக்க, இதை கண்ட அர்ஜுன் குழம்பிப் போய் அதே இடத்தில் நின்றிருந்தான்..
ஆதி வேகமாக சென்று காரை எடுத்து வந்து செல்வாவின் முன் நிறுத்த ..அவன் அப்படியே அசையாமல் நின்றிருந்தான்…
அவனை கண்ட அர்ஜுன் வேகமாக சென்று அவனின் தோலை தொட ..,,அப்போதே சுயநினைவிற்கு வந்தவன் அவன் கையை தள்ளி விட்டு காரில் ஏறி அமர்ந்துக்கொண்டான்.
அவன் பின்னே அர்ஜுனும் எதுவும் பேசாமல் அமர்ந்துக் கொள்ள ஆதி காரை வீட்டை நோக்கி சென்றான்..
வீட்டிற்கு வர வரைக்கும் செல்வா அமைதியாகவே கண்களை மூடி அமர்ந்திருந்தான்..ஆனால் அவனது மனது மட்டும் கோபத்தில் கொந்தளித்து கொண்டு இருந்தது..
” எப்படி அவ எனக்கு அந்த உரிமை இல்லன்னு சொல்லு வா எனக்கு மட்டும் தான் அந்த உரிமை இருக்கு ..அத நான் யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன் ” என்று அவனுக்கு அவனே மனதில் புலம்பிக் கொண்டு இருந்தான்..
விட்டிற்கு வரவும்..,,செல்வா நேராக அவனது அறைக்குள் புகுந்துக் கொண்டான்.
அர்ஜுன் ஆதியை தனியே அழைத்து வந்து என்னவென்று கேட்க..தனக்கு தெரிந்த வரை அனைத்தையும் கூறியவன்..அவன் அஞ்சு என்று அழைத்ததை தவிற…
“சரி விடு..இத பத்தி அவன் கிட்ட அப்புறமா பேசிக்கலாம் ” என்று கூறி சமைக்க சென்று விட்டான் அர்ஜுன்.. ஆதி வீட்டை சுத்தம் படுத்தும் வேலையை ஆரம்பித்தான்.
‘அவ எப்படி எனக்கு அந்த உரிமை இல்லன்னு சொல்லலாம்.நான் தான் அவளுக்கு எல்லாமுமாக இருக்கனும். எனக்கும் அவளுக்கும் நடுவில யாரும் வர விரும்பல . இந்த அபி யாருன்னு எனக்கு தெரியல ..இப்ப மட்டும் அவன் என் கையில கிடச்சான்னா அவன் கைமா தான்.எவ்வளோ தைரியம் இருந்தால் அவன் எனக்கும் என் அஞ்சுக்கும் நடுவில வருவான்’ என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு தலகாணியை அபியாக கற்பனை செய்து அதனை அடித்து கொண்டு இருந்தான்…
யாரை இவன் தலைகாணியை வைத்து ஒப்பிட்டு அடித்துக் கொண்டு இருந்தானோ .,அவனோ அவனது அறையில் சுகமாக உறங்கி கொண்டு இருந்தான்…
காதல் ஒருவனை சுயநினைவின்றி அழிக்கவும் செய்யவும் காக்கவும் செய்யும்..செல்வாவின் நிலையில் அவளை கண்டு சிறு நாட்களே ஆனாலும் அவனது காதல் அவனது இயத்திறகு செல்லும் இரத்த ஓட்டத்தை போன்று வேகமாக சென்றது…
இரவுணவை சமைத்து முடித்த அர்ஜுன் ..,,செல்வாவை சாப்பிட அழைக்க அவன் அதை மறுக்க வழுக்கட்டாயாகமாக அவனை அமர வைத்து ஊட்டி விட்டு அதன் பிறகு அவனும் உண்டான்… இதையெல்லாம் பார்த்துக் கொண்டே ஆதியும் உண்டு முடித்தான்..
அடுத்நாள் காலை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக விடியலை தந்தது…
செல்வா சீக்கரமாகவே கல்லூரிக்கு அர்ஜுனையும் ஆதியையும் இழுத்துக் கொண்டு சென்றான்…
” எதுக்கு டா இப்போ இவ்ளோ சீக்கிரமா காலேஜ்க்கு கூட்டிட்டு வந்துருக்க அதுவும் என் தூக்கத்த கெடுத்து .உன்னால இன்னைக்கு ஐஸ்வர்யா ராய் கூட ஆட வேண்டிய டூயட் மிஸ் ஆயிடுச்சி ” என்று கோபத்தில் ஆரம்பித்து ஆதங்கத்தில் முடித்திருந்தான் ஆதி…
அவனை முறைத்த செல்லா பதில் கூற தொடங்கினான் .” டேய் இன்னும் ஒரு வாரத்துல நம்ம டிபார்ட்மெண்ட்டும் ஐடி டிபார்ட்மெண்ட்டும் சேர்ந்து சிம்போசியம் பண்ண போறேன்.. அதுக்கான டிஸ்கஷன்க்காக நாம இவ்ளோ சீக்கிரம் இங்க வந்துருக்கோம் சரியா ” என்றான்..
” அதெல்லாம் சரி டா.அதுக்கு எதுக்கு டா ,என்னை எழுப்பி எதுக்கு கூட்டிட்டு வந்த..?? எனக்கும் உங்க டிபார்ட்மெண்ட்க்கும் என்ன சம்பந்தம்” என்று அர்ஜுன் கேட்க..
” நீ மட்டும் வீட்ல இருந்து என்ன செய்ய போற .அதான் உன்னையும் சேர்த்து கூட்டிட்டு வந்தேன் ” என்றான் செல்வா மொபைலை நோண்டிய படியே…
” போ டா இவனே..நீயும் உன் பதிலும் ” என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்…
அர்ஜுன் நேராக லைப்ரரி சென்று தனக்கு தேவையான புத்தகத்தை எடுத்து படிக்க தொடங்கினான்..
அதன் பின் ஆதியும் செல்வாவும் வெகு நேரமாக அவர்களுக்காக காத்திருக்க .. கல்லூரி மணி அடிக்க இன்னும் சிறிது நிமிடங்களே இருக்க., அப்போது தான் மூச்சிறைக்க அவர்களை நோக்கி ஓடி வந்தால் மீனு ….
மீனுவை கண்ட செல்வா ,கோபத்தில் எரிமலை போல் கொந்தளித்தான்….
மீனு இவை அனைத்தையும் படித்து கொண்டு இருக்க “அத்தே அத்தே ” என்று கூற மீனு படிப்பதை நிறுத்தி விட்டு குரல் வந்த திசையை நோக்கினாள்…
அங்கே மகி தலைகானியுடன் நின்று கொண்டு அழகாய் அவளை பார்த்து புன்னகைத்த படி நின்றிருந்தான்…

Advertisement