Advertisement

நினைவினில் நிறைந்தவளே
அத்தியாயம் 24
மீனுவும் சுபாவும் லதாவிற்கு சமைப்பதற்கு உதவுகிறேன் என்ற பெயரில் ஒன்றுக்கு இரண்டாக வேலை வைத்துக்கொண்டு இருந்தனர்.
” ஏய்.! இரண்டு பேரும் இடத்தை காலி பண்ணுங்க. உதவுறேன்ற பேருல எனக்கு வேல வைக்காதீங்க ” என்று அவர்களை அதட்ட
அவர்கள் இருவரும் முகத்தை பாவமாக வைத்துக்கொள்ள …
” இதையெல்லாம் நான் நம்ப மாட்டேன் .. ஒழுங்கா ஓடீடுங்க இல்லன்னா சட்டுவம் தான் பேசும் பாத்துக்கோங்க ” என்று மிரட்ட
” அய்யோ அத்தை.! இந்த கோப மெல்லாம் உங்களுக்கு வராது ..அதுனால இந்த மீனுவோட அத்தை மாதிரி கம்பீரமா இருக்கனும் ” என்று கண்ணம் கிள்ளி கொஞ்சலானாள் .
இதை கேட்ட லதாவிற்கு கண்களில் நீர் வழிய தொடங்கியது …
அதை பார்த்த மீனு பதறி போய் ” அய்யோ…!!!! என்ன மன்னிச்சிடுங்க அத்தை .ஏதோ தெரியாம பேசிட்டேன் ” என்று சிறு குழந்தைபோல் இரண்டு கையையும் காதின் மேல் வைத்து மன்னிப்பு வேண்ட…
” அட நீ எதுக்கு மீனு சாரி லாம் கேக்கிற‌.? உங்க அத்தை செய்யற சாப்பாட்ட சாப்பிடுறதுக்கு அவ தான் நமக்கு நன்றி சொல்லனும் ” என்றார் இந்திரன் டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த படியே…
” அப்போ என் சாப்பாடு அவ்ளோ கேவலமா இருக்குன்னு சொல்றீங்களா ?” என்று கோபத்துடன் வினவ
” அத நான் எப்படி மா என் வாயால சொல்றது..” என்று பாவமாக சொன்ன அடுத்த நொடி தோசை கரண்டி பறந்தது….
அதிலிருந்து நாசுக்காக தப்பித்து விட்டார் இந்திரன்….
” இன்னைக்கு உங்க மூனு பேருக்கும் நைட் டிஃபன் கட் ” என்றார் லதா…
” அம்மா நான் என்ன பண்ணேன்.. நான் அமைதியா தான இருந்தேன் ” என சுபா சொல்ல மீனு அவளது நிலையை கண்டு சிரித்தாள்..
சுபா தன் அண்ணியை கோரமாக ஒரு லுக் விட்டுட்டு தன் அன்னையை கரக்ட் பண்ண ஆரம்பித்தாள்.
மாடியில் அறையில் இருந்த செல்வா ,, கோபத்துடன் அமரவும் நடக்கவுமாக இருந்தான்..
” இந்த அஞ்சு ஏன் தான் இப்படி பண்றான்னே தெரில .. எல்லாத்துக்கிட்டயும் நல்லா பேசுறா பழகுறா ஆனா உயிருக்கு உயிரா காதலிச்ச என்ன மட்டும் கண்டுக்க மாட்றா..இவள வச்சிட்டு என்ன தான் பண்றதோ தெரியலையே ” என புலம்பி கொண்டு இருந்தான் செல்வா.
“அவள எப்படி இங்க கூட்டிட்டு வரது..” என்ற தீவிர யோசனையில் இருந்தவன்..,,ஏதோ ஐடியா வந்தது போல் மூலை பிள்ன்க்காக ஆக..,,”ஆஹா இது தான் சரியான வழி” என்று அந்த ஐடியாவை செயல் படுத்தி முடித்தவன்..,, அறையின் வெளியே வந்து” மீனு மீனு” என்று கத்த அவளிடமிருந்து எந்த ஒரு ரியாக்ஷனும் இல்லாமல் போக ..
சிறிது கோபத்தில் செல்வா மீண்டும் “மீனு மீனு” என்று வீடே அதிரும் படி கத்த .,, சமையலறையில் இருந்த மீனு வேகமாக வெளியே வந்து பார்த்தாள்…
செல்வா மீனுவிடம் ” சீக்கிரமா மேல வா ” என்று கோபமாக கூறிவிட்டு அறைக்கு சென்றுவிட்டான்.
செல்வா கோபமாக மீனுவை‌ அழைப்பதை கண்ட அஞ்சலி உள்ளுக்குள் சந்தோஷ பட்டாள்.
மீண்டும் சமையலறைக்குள் வந்த மீனுவை பார்த்து லதா ” என்ன வேணுமாம் அவனுக்கு இப்போ இப்படி கத்துறான்..?? ” என்க
” தெரியல அத்த மேல வர சொன்னாரு . நான் போய் என்னன்னு கேட்டுட்டு வரேன்.அதுவரைக்கும் கொஞ்சம் சமையல பாத்துக்கோங்க ” என்று கூறிவிட்டு அறைக்கு சென்றாள்.
” ஏதோ இவ சமைக்கிற மாதிரி சொல்லிட்டு போற பாரு ” என்று அவள் போகும் பாதையை பார்த்து திட்ட அதற்கு மாறாக லதாவின் முகத்தில் புன்னகை நிரம்பி இருந்தது.
மேலே வந்த மீனு அறையை கண்டு ஒரே சமயத்தில் அதிர்ச்சியாகவும் கோபமாகவும் வந்தது.
அந்த நேரம் பார்த்து குளித்து விட்டு வந்த செல்வா மீனுவை ஒரு முறை முறைத்து விட்டு கண்ணாடி முன் நின்று தலை முடியை கோதியவாறே தன்னவளை சைட் அடிக்க ஆரம்பித்தான்.
“செல்வா.! எதுக்காக இப்போ பேக்ல இருந்த துணி எல்லாத்தையும் இப்படி கீழ போட்டு வச்சிருக்கீங்க” என்று கோபமாக அவன் முன் நின்று கேட்க…,,
அதை பொருட்படுத்தாமல் மீனுவை கடந்து சென்று பைல் எடுக்க,, தான் கேட்ட கேள்விக்கு பதில் தராமல் தன்னை கடந்து சென்றதால் கோபம் தலைக்கேற மீண்டும் அவன் முன் நின்று ,, “சொல்லுங்க செல்வா எதுக்கு இப்போ இந்த அறையை இப்படி கலச்சி போட்டு வச்சிருக்கீங்க..??? “என்று கோபமாக கேட்க
” நான் என்ன பண்னேன்.ஒரு முக்கியமான ஃபைல் காணோம்.அத தான் தேடினேன் அதுல சில துணி வெளில வந்துடுச்சி அவ்ளோதான ” என்றான் சாதாரணமாக
” என்ன நீங்க இவ்ளோ சாதாரணமாக சொல்றீங்க..?? இத நான் எவ்வளவு கஷ்டப்பட்டு அடுக்கி வச்சேன்னு தெரியுமா உங்களுக்கு.. இப்படி ஒரு ஃபைல் தேடுறேன்னு கலச்சி போட்டு வச்சிருக்கீங்க “என்று அவள் அவன் பணியனை பிடித்து அவனுக்கு நெருக்கமாக நின்று கோபப்பட….
மீனுவை அவ்வளவு நெருக்கத்தில் கண்டு அவனது நிலை தான் திண்டாட்டமாக இருந்தது.
செல்வா மீனுவை நெருங்கிக் கொண்டே வர ..,,மீனு அப்போது தான் உணர்ந்தாள் செல்வாவின் நிலையை .. அவன் கண்ணில் காதலும் மோகமும் போட்டி போட , அடுத்த நொடியே அவளது கரங்கள் பனியனை விட கால்கள் தானாக பின்நோக்கி செல்ல
தரையில் செல்வா குளித்துவிட்டு வந்ததால் தண்ணீர் சொட்டி ஈரமாக இருக்க,,அதிலே காலை வைத்து வழுக்கி கட்டிலில் விழ..,,எங்கோ விழப்போகிறோமோ என்று பயந்து மீண்டும் அவனது பனியனை பிடிக்க அவனும் அவளுடன் சேர்ந்து விழுந்தான்…
இருவரது கண்களும் நொடி பொழுது பிரியாமல் பார்த்து கொள்ள இருவரது காதலும் விழியின் மூலம் ஒருவருக்கு இன்னொருவர் புரிய வைக்க முயற்சி செய்தனர்.அதே பார்வையுடன் செல்வா மீனுவின் இதழ் அருகே செல்ல …
அந்த நேரம் பார்த்து செல்வாவிற்கு அழைப்பு வர..,, இருவரும் மோன நிலையில் இருந்து மீண்டனர்.
சற்றும் தாமதிக்காமல் செல்வாவை தள்ளிவிட்டு வெளியே வந்த மீனுவிற்கு அஞ்சலியின் அழுகை மட்டுமே கேட்டது..
அவளது அறையை நோக்கி மீனுவின் கால்கள் தானாகவே சென்றது. அவளது விசும்பல் சத்தம் கேட்க கேட்க இவ்வளவு நேரம் இருந்த சந்தோஷம் பறந்து போனது….
” அத்தான் நீ இல்லாமல் என்னோட வாழ்க்கை முற்று பெறாது. ஆனா இனியும் நம்மனால சேர்ந்து வாழ்வும் முடியாது .ஏன் அத்தான் நம்ம காதல் தோத்து போச்சி .என்னால முடியல செல்வா அத்தான். யார் கிட்டயும் என்னோட ஃபீலின்ஸ ஷேர் பண்ண கூட முடியல.அதான் ஒரு முடிவு எடுத்துருக்கேன். இது தான் சரியா இருக்கும் ” என்று கூறி பக்கத்தில் இருந்த கத்தியை எடுத்து மணிக்கட்டில் வைத்து அறுக்க போக ..,, சரியாக வந்து அதை செய்ய விடாமல் தடுத்து நிறுத்திய மீனு அஞ்சலியை பலார் என்று ‌கண்ணத்தில் அறைந்தாள்.
மீனு அறைந்த அறையில் அஞ்சலியின் கண்ணம் கன்றி போனது.
” என்ன நினைச்சிட்டு இருக்க நீ..??? சாவுறது தான் எல்லா பிரச்சனைக்கும் தீர்வுன்னு நினைச்சா யாரும் இங்க உயிர் வாழ முடியாது.அப்போ இந்த உலகமே சுடுகாடா தான் இருக்கும். அடுத்து என்ன பண்ணணும்னு தான் யோசிக்கனுமே தவிர ..,,அதுக்கு பயந்து இப்படி ஒரு முடிவு எடுக்க கூடாது ” என்று கோபத்தில் கத்த
” நான் என்ன பண்றது மீனு…என்னால முடியல நானும் எவ்ளவோ முயற்சி பண்ணிட்டேன் செல்வா அத்தானை மறக்க..ஆனா என்னால முடியல மீனு. நான் அத்தானை மறக்க நினைக்கிற ஒவ்வொரு நொடியும் அத்தான் என் நினைப்புல அதிகமா வரராரு .இப்படி ஒரு வலி வேணாம்னு தான் இப்படி ஒரு முடிவ எடுத்தேன் ” என்றாள் அழுதுகொண்டே…
” இனி இந்த மாதிரியான காரியத்தலாம் பண்ணிட்டு இருக்காத .இரு உனக்கு டிஃபன் எடுத்துட்டு வரேன்… சாப்பிட்டு தூங்கு ” என்று கூறி சமையலறை நோக்கி சாப்பாடு எடுத்து வந்து ஊட்டியும் விட்டாள்..
ஒரு நொடி மீனுவின் அன்பை கண்டு உண்மையாகவே ஒரு துளி கண்ணீர் எட்டிப் பார்த்தது.
அதன் பின் வீட்டின் உள்ள அனைவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு படுக்க சென்றனர்.
செல்வா லேப்டாப்பில் ஏதோ வேலை செய்து கொண்டிருக்க ..மீனு அவன் களைத்து வைத்த எல்லா பொருட்களையும் அடுக்கிக்கொண்டு இருந்தாள்.
மீனுவை சிறிது அவஸ்த்தை படுத்தலாம் என்று தோன்ற..,, அவள் பக்கத்தில் சென்று பின்புறத்தில் இருந்து மீனுவின் இடையினை அவனது கரங்கள் பிடித்து அவளது கழுத்தினுள் செல்வா முகம் புதைத்து” சாரி டா சனா..!!! அந்த ஃபைல் கொஞ்சம் முக்கியமானது டா . அதுனால இப்படி பண்ண வேண்டியதா போச்சி ” என்று மன்னிப்பு கூற….
அவனை விட்டு விலகியவள் எதுவும் பேசாமல் அமைதியாக துணிகளை எடுத்து அடுக்க ஆரம்பித்தாள்.
செல்வா மீண்டும் அவளை நெருங்கி வந்து மன்னிப்பு கூற ,,மீனுவிற்கு கோபமாக வரவே..,,அவனை அவளிடமிருந்து தள்ளி நிறுத்திவிட்டு அழத்தொடங்கினாள்.
“ஹே..! மீனு எதுக்கு இப்போ அழுகுற..?? “என்று வருத்தத்துடன் அவளை நெருங்க…
“ப்ளிஸ் செல்வா..!! என்கிட்ட வராதீங்க…நீங்க என்கிட்ட வரும்போதெல்லாம் எனக்கு ஏதோ முள்ளு மேல நிக்கிற மாதிரி இருக்குது. நமக்கு கல்யாணம் எப்படி நடந்ததுன்னு உங்களுக்கு தெரியும்ல , அப்பறம் ஏன் நீங்க இப்படி பண்றீங்க… என்ன விட்டுடுங்க ப்ளிஸ். என்னால முடியல ” என்று கை கூப்பி அழுவும் தன்னவளை கண்டு துடிதுடித்து போனான் செல்வா.
அந்த அறையில் சில நிமிடங்களுக்கு அமைதி மட்டுமே நிலவ…,,
” நீ பயப்படாமா இரு மீனு மா…இனி என் பார்வை கூட உன் மேல படாது ” என்று கூறிவிட்டு விருட்டென்று அந்த இடத்தை விட்டு சென்றான்.
செல்வா சென்ற‌ நொடியிலிருந்து அவனை நினைத்து அழுது கரைந்தவள் ,, தனக்குள் விதைத்த
காதலை தனக்குள்ளே புதைத்துக் கொண்டு ஒரு முடிவெடுத்தவளாய் எழுந்து அடுத்த நாள் விடியலுக்காக காத்திருக்க தொடங்கிய சிறிது நேரத்திலே உறங்கியும் போனாள்.
அறையை விட்டு வந்த செல்வா நேராக ,,மாடிக்கு சென்று தனிமையை தேடிக்கொண்டான். அவனால் மீனு சொன்ன வார்த்தையை மறக்க முடியவில்லை….
நீ வெறுத்தாலும்
உன்னை நேசிப்பேனே
என் உயிர் உள்ளவரை..
அவள் பேசிய வார்த்தைகள் அவனுள் இடியாய் விழுந்தது…இதையே நினைத்து நினைத்து துடித்த செல்வாவிற்கு தலை வலி அதிகரித்தது…
அந்த வலியை விட மீனுவின் வார்த்தைகளே அவனுக்கு வலிக்க செய்தது….
துக்கம் வரவில்லை என்று மாடிக்கு வந்த அர்ஜுன்..,,கண்டது என்னமோ செல்வா தலையை பிடித்து அமர்ந்திருப்பது மட்டுமே…
பயத்தில் வேகமாக செல்வாவின் பக்கத்தில் சென்ற அர்ஜுன் அவனை எழுப்பி..” என்னடா  பண்ற இங்க  அதுவும் இந்த நேரத்துல..??”என்று அர்ஜுன் பதறியவாறு கேள்வி கேட்க…
” ஒன்னும் இல்ல மச்சி ,லைட்டா தலை வலி அதான்… கொஞ்ச நேரம் காத்து வாங்கலாம்னு வந்தேன் ” என்று பதில் கூறினான்.
” ஹே செல்வா.! ரொம்ப தலை வலிக்குதா டா..???” என்று சிறு பயம் கலந்த குரலில் கேட்க…
” டேய்..!இது வெறும் சாதாரண தலை வலி தான்.. இதுக்கு எதுக்கு இப்படி பயந்துட்டு கேட்கிற…???” என்றான் பொறுமையாக
” நீ இங்கையே இரு.. நான் போய் தல வலிக்கு மருந்து எடுத்துட்டு வரேன்…” என்று கூறி வேகமாக சென்று முகில்க்கு அழைப்பு விடுத்தான்…
” இந்த நேரத்துல யாரு டா கூப்பிடுறது ” என்று புலம்பிக் கொண்டே ஃபோனை எடுத்து பார்க்க அதில் அர்ஜுன் பெயர் இருக்கவும்..,,
” யாரு டா லைன்ல..???” என்று ஆதி முகில் மீது கால் போட்ட படியே கேட்க… 
” அர்ஜுன் தான் டா ஆதி.. எதுக்கு இந்த நேரத்துல கூப்பிடுரான்னு தெரியலையே…” என்று குழப்பத்துடனே அழைப்பை உயிர்ப்பித்தான்…
” சொல்லு அர்ஜுன்..என்ன இந்த நேரத்தில கால் பண்ணி இருக்க.. ” என்க
” முகில் செல்வாக்கு ரொம்ப தலை வலின்னு சொல்றான்…. இப்போ என்ன பண்றது..??” என்று கேட்ட அர்ஜுனிடம்.,
” நீ பயப்படாத அர்ஜுன் ,செல்வா மாத்திரை போட்டு இருக்க மாட்டான்.. நீ என்ன பண்ற அவனது அறைக்கு போய் அதுல நான் சொல்ற டேப்லெட் எடுத்துட்டு போய் கொடு.. அவனுக்கு சரியா பொயிடும் ” என்றான் நம்பிக்கை ஊட்டும் விதமாக..
“சரி முகில் நான் போய் கொடுக்கிறேன் பாய் குட் நைட்” என்று கூறி அழைப்பை துண்டித்து விட்டு செல்வாவின் அறைக்கு சென்று முகில் சொன்ன மாதிரியை எடுத்து வந்து செல்வாவிடம் கொடுத்து போட சொன்னான்…
அவனும் எந்த ஒரு மறுப்பிதலுமின்றி மாத்திரையை போட்டுக் கொண்டு உறங்க சென்றான்…
அழைப்பை வைத்த முகிலை வினோதமாக பார்வை பார்த்தான் ஆதி…
” என்ன டா அப்படி பாக்குற..??? ”
” இல்ல அர்ஜுனை உனக்கு முன்னாடியே தெரியுமா..???” என்று தன் சந்தேகத்தை எழுப்ப..
அதற்கு அவன் ” ஆமாம் தெரியும் .அர்ஜுனை மட்டும் இல்ல செல்வாவையும் தெரியும்” என்றான்.
” எப்படி தெரியும்..??எப்போ இருந்து தெரியும்.? அதுவும் இல்லாம ஏதோ மாத்திர கீத்திரன்னு பேசின..???” என்று கேள்வியை அடுக்க….
” ரெண்டு வருஷமா தெரியும்” என்று கூறி இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பை பற்றி அனைத்தையும் கூறி முடித்தான்…
இதனை கேட்ட ஆதிக்கு அதிர்ச்சியாக இருந்தது…
” இதுல இருந்து அவன காப்பாத்தவே முடியாதா டா..???” என்று தன் நண்பனின் வாழ்க்கையை எண்ணி கேட்க..
” முடியும் டா… அதுவும் மீனுவால தான் முடியும்.. அவ தான் அவனுக்கு மருந்து . இனி அவன குணப்படுத்திடலாம் ” என்றான்.
” எப்படியாவது அவன காப்பத்தனும் டா ” என்று கூறிவிட்டு உறங்க சென்றுவிட்டான்… அதன் பின் முகிலும் உறங்க சென்றான்.
அடுத்தநாள் சீக்கிரமே எழுந்த செல்வா..,, சக்தியையும் அவளது குழந்தைகளையும் அழைக்க கோயம்பேடு சென்றுவிட்டான்..
காலையில் சிறிது நேரம் கழித்தே எழுந்த மீனுவின் கண்கள் தேடியது என்னவோ செல்வாவை தான்… ஆனால் அவள் கண்ணுக்கு அகப்படாமல் சென்று விட்டான்.
சீக்கிரமாக கிளம்பி வந்த மீனு ..,, அத்தையிடம் சென்று ” அத்தம்மா நான் கோவிலுக்கு பொயிட்டு வரேன் ” என்று கூற
” சரி பாத்து பொயிட்டு வா ” என்று வழி அனுப்பி வைத்தார் லதா…
மீனு கிளம்பி சென்ற சிறிது நேரத்திலே சக்தி மற்றும் குழந்தைகள் வந்து சேர்ந்தனர்…
“பாட்டி… பாட்டி…”என்ற கூவலுடன் உள்ளே வந்தான் சக்தியின் ஆறு வயது மகன் மகிலேஷ்.
“தாத்து… தாத்து…” என்று கத்திக்கொண்டே வந்தாள் மகியின் தந்கையான ஹர்ஷ வர்தனா.
” வாங்க…!!!வாங்க…!!!! குழந்தைங்களா…எப்படி இருக்கீங்க தங்கங்கலா…???? ” என்று பாசமாக கேட்டார் லதா.
“போங்க பாட்டி நான் உன்கூத டூ” என்றது நாலு வயது குழந்தையான ஹர்ஷூ.
“எதுக்கு இந்த பாட்டிகிட்ட டூ விட்டீங்க…???” என்று லதா கேட்க…
“என்ன நீ தூக்கவே இல்ல பாட்டி” என்று கோபமாக கூற ..
“அட செல்லக்குட்டி இதுக்கு தான் உனக்கு கோபமா… “என்று அவளை தூக்கிக்கொண்டார் லதா.
” என்னம்மா பேர புள்ளைங்கள பார்த்தவுடனே இப்படி நீங்க பெத்த புள்ளைய மறக்கலாமா..??? ” என்று கூறி சோஃபாவில் அமர்ந்து கண்களை சுழல விட்டாள் சக்தி.
” அதெல்லாம் ஒன்னும் இல்ல..நீ இல்லாம இவுங்க இல்ல ” என்று கூற
” அதான் எனக்கே தெரியுமே ” என்றாள்.
” என்னக்கா எதையோ தேடுற மாதிரி இருக்கு…” என்று தீவிரமாக கேட்க…
” உன் பொண்டாட்டிய தான் தேடுறேன் . எங்க ஆளையே காணோம் . அப்புறம் சுபா , அர்ஜுன் ,அஞ்சலி அப்பாவையும் காணாம் ” என்றாள் கண்களை சுழல விட்டப்படி.
” எனக்கு தெரியல அக்கா.காலையில கிளம்பும்போது தூங்கிட்டு இருந்தா.. ” என்றான் இறுகிய முகத்துடன்….
” மீனு கோவிலுக்கு பொயிருக்கா… அப்பறம் அஞ்சலி, அர்ஜுன், சுபா எல்லாம் தூங்குறாங்க …அப்பா பேப்பர் வாங்க போயிருக்கார் டா “
“சரி நீ போய் கொஞ்ச நேரம் தூங்கு மா.. பசங்களா போய் பாட்டி ரூம்ல தூங்குங்க ” என்றார்…
” சரி பாட்டி ” என்ற மகி தன் தங்கையையும் அழைத்துச் சென்றான்.
கோவிலுக்கு வந்தவளுக்கு முழுவதும் வேதனையாக இருந்தது. ஒரு புறம் அவள் காதல் கணவன் இருக்க , இன்னொரு புறம் தங்கையென நினைக்கும் அஞ்சலி இருக்க , இருவருக்கும் நடுவில் மாட்டி அல்லோலப்பட்டு கொண்டிருந்தாள் மீனு.
வாழ்வே அவளுக்கு பூதாங்கரமாக தெரிந்தது மீனுவிற்கு.
தன் கவலைகள் தீரும் வரை கோவிலிலே இருந்தவள் , இறுதியில் செல்வாவின் காதல் வெற்றியடைய வேண்டும் என்ற வேண்டுதலோடு வீட்டிற்கு புறப்பட்டாள்.
வீட்டிற்கு வந்தவளை வரவேற்றது என்னமோ அஞ்சலியின் சிரிப்பு சத்தமே அதுவும் சக்தியுடன் சேர்ந்து வந்தது…
உள்ளே சென்ற மீனு..,, நேராக சக்தியிடம் சென்றாள்.
” சக்தி அக்கா…! நல்லா இருக்கீங்களா…?” என்று பாசமாக கேட்க
சக்தியும் பதிலுக்கு ” நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க…?என்று ஒரு இறுக்கத்துடனே அவள் கேட்க..
” நான் நல்லா இருக்கேன் அக்கா..  ” என்றாள் பவ்யமாக..
” செல்வா உனக்கு புருஷன்னா .. அப்போ நான் உனக்கு அண்ணி. என்னைய அண்ணின்னு சொல்லி கூப்பிட்டு பழகு சரியா ” என்றாள் கடுமையான குரலில்….
மீனுவிற்கு கஷ்டமாக இருந்தாலும் ” சரிங்க அக்கா ” என்று கூற…
“அடியே..!!!அக்கா எதுக்கு இப்போ என் செல்ல அண்ணிய ராகிங்கு பண்ற .. இது மட்டும் அண்ணாக்கு தெரிஞ்சது நீ செத்த ” என்று கூறியபடியே அவர்களுடன் இணைந்து கொண்டாள் சுபா.
” ஏன்டி அவன் பெரிய இவன் ..அவனுக்கு நான் பயப்படனும்மா போடி போடி…அவன விட நான் தான் பெரிய பொண்ணு தெரியும்ல ” என்றாள் சக்தி…
” இங்க பாரு அண்ணி எப்படி பயந்து பொயிருக்காங்கன்னு ” என்று கூறி ” அண்ணி இவ ஒரு டம்மி பீசு …இவளுக்குலாம் பயப்பட தேவையில்லை ” என்றாள்..
” அடியே இந்த அக்காவ டேமேஜ் பண்ணலன்னா உனக்கு தூக்கமே வராதா..???”என்று சக்தி அடிக்க தொடங்க சுபா ஓட ஆரம்பித்தாள்…
தீடிரென்று யாரோ ஒருவர் மீது மோதுவது போல் தோன்ற யார் என்று பார்க்க ,அங்கு அர்ஜுன் சிரித்த முகத்துடன் நின்றிருந்தான்…
வேகமாக அவனை விலக நினைக்க..,, அதற்குள் அவன் பிடி இறுகியது…
“அர்ஜுன் அவளை விடாத புடி..” என்று அவர்களை நெருங்கி வந்தாள் சக்தி.
” ப்ளிஸ் அஜூ விடுங்க …அவ வந்தா என்னைய அடிப்பா  ” என்றதும் அர்ஜுன் ஏதோ மாயம் சூழ்ந்தது போல் அவள் சொன்னவுடன் அவளை விட ,இது தான் சாக்கென்று அவள் ஓடியே விட்டாள்…
“என்ன அர்ஜுன் இப்படி அவள விட்டுட்டியே” என்று கோபமாக முறைத்து சக்தியை பார்த்து ஈஈஈஈ என்று இழித்து வைத்தான்…
பின்னர் அனைவரும் காலை உணவை உன்ன வர…,, அனைவருக்கும் பரிமாறினாள் மீனு..
“மீனு அக்கா…!நீ தான் என் புது அத்தையா…???” என்று குரல் வர…
அவளது மனதில் “மகி ” என்று பெயர் உச்சரிக்க.,,உடனே திரும்பின மீனு அங்கே கண்டது ஹர்ஷாவின் பக்கத்தில் நின்ற மகியை தான்…..
செல்வாவிற்கு பயம் வந்தது. ‘எங்கே மகி எதையாவது சொல்லி விடுவானோ’ என்று அவனுக்கு பக்..பக்… என்று இருந்தது…
“உனக்கு என்ன முன்னாடியே தெரியுமா…?” என்று திக்கி திணறி கேக்க…
எல்லாரையும் ஒரு பார்வை பார்த்த மகி… “இல்லையே” என்று பதிலளித்தான்.
அவனது பதிலை கேட்ட பின்பு தான் ,, அனைவருக்கும் சீரான மூச்சே வந்தது….
“உண்மையிலே உனக்கு என்ன தெரியாதா..??ஆமா உங்க ரெண்டு பேத்தோட பேர் என்ன..??? ” என்று அவர்கள் உயரத்திற்கு குனிந்து கேட்க…,,
“இல்ல அத்தை தெரியாது… நீங்க அம்மாவ அக்கான்னு சொன்னீங்க.. அதுனால தான் நானும் சொன்னேன் . அப்புறம் என்னோட பெயர் மகிலேஷ் இவ என்னோட தங்கச்சி ஹர்ஷ வர்தனா ” என்றான் .
“சரி உங்க விசாரிப்பு எல்லாம் அப்புறம் வச்சிக்கோங்க..இப்போ வந்து ரெண்டு பேரும் சாப்பிடுங்க ” என்றான் செல்வா.
ஹர்ஷூவை மடியில் உட்கார வைத்து ஊட்டி விட்டான் செல்வா.
பின்னர் நொடிகள் நிமிடங்களாக கடக்க…,, நிமிடங்கள் நேரங்களாக மாறியது….செல்வா கிளம்பும் நேரமும் நெருங்கியது…
” செல்வா எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டியான்னு பாத்துக்கோ டா ” என்றார் லதா.
” ஹான் மா…!!!! எல்லாம் கரட்டா இருக்கு மா ஒன்ன தவிர ” என்றான் மீனுவின் மீது தீர்க்கமான பார்வையை பதித்த படியே….
“என்னடா எது எடுத்து வைக்கல…???” என்ற கேள்வி கேட்ட அன்னையை பார்த்து ” உங்க பாசமான முத்தத்தை தான் மா சொன்னேன் ” என்று சொல்லி சமாளித்தான்.
சிறிது நேரத்திலேயே அர்ஜுன் காரை எடுக்க.,,,செல்வா அனைவரிடமும் விடைபெற்று காரில் ஏறினான்… அவனது பார்வை மீனுவை தவிர அனைவரிடமும் இருந்தது….
கதிர் மற்றும் அபியை அழைத்துக்கொண்டு அர்ஜுன் அர்போர்டை நோக்கி சென்றான்…
” சரி டா மூன்னு பேரும் நல்ல படியா இத முடிச்சிட்டு வாங்க …” என்று கூறி மூவரையும் வழி அனுப்பி வைத்தான் அர்ஜுன்….
வீட்டில் இருந்த மீனுவிற்கு காலையில் மகி சொன்னதே நினைவில் இருக்க.,அவளுக்கு எதுவோ ஒன்று தப்பாகப்பட்டது….
அறைக்கு சென்ற மீனு,,துவைத்து வைத்திருந்த துணியை மடித்து அலமாரியில் வைத்து கொண்டு இருக்க…
அந்த நேரத்தில் மீனுவின் கண்களில் ஏதோ விழ அதை தேய்த்தவாரு துணி அடுக்க கை தவறி அதில் மீனுவின் கை இடித்து விட….
அலமாரியின் மேலே இருந்த டைரி ஒன்று கீழே விழுந்தது….
அதை எடுத்து பார்த்தவள்,,ஏதோ டைரியாக இருக்க., அதை திறந்தவள் முதல் பக்கத்தில் செல்வாவின் கை எழுத்தில்நினைவினில் நிறைந்தவளே….” என்று எழுதப்பட்டிருந்தது….
அதை பார்த்தவளுக்கு அஞ்சலியின் ஞாபகமே வர… கட்டிலில் உட்கார்ந்து அடுத்த பக்கத்தை திருப்பி படிக்க தொடங்கினாள்..

Advertisement