Advertisement

நினைவினில் நிறைந்தவளே
அத்தியாயம் 23
மீனு செல்வாவிடம் தன்னை சமன் படுத்தி கொண்டு , “யாரையாவது காதலிக்கிறீங்களா…??? “என்று கேட்டு அவனது பதிலுக்காக காத்திருக்க ,, அவன் ஆமாம் என்று சொன்னதுமே அவள் இதயம் நொறுங்கியது போல் உணர்ந்தாள்… ஆனால் ஏன் அப்படி தோன்றுகிறது என்று யோசிக்காமல் விட்டு விட்டாள்.
அதற்கு அடுத்த அவன் காதலித்த பெண்ணின் பெயரை அறிந்துக் கொள்ளும் முயற்சியில் அவனிடமே ” அவுங்க பெயர் தெரிஞ்சுக்கலாமா…???” என்றாள் தன் துக்கத்தை மறைத்துக்கொண்டு….
” இன்னைக்கு என்ன நம்ம அமுல் பேபி இப்படியெல்லாம் கேள்வி கேட்டுட்டு இருக்கு ..,அய்யோ நான் உண்மைய சொன்னா ‌எல்லா விஷத்தை சொல்ல வேண்டியது வரும்மே ” என்று மனதில் நினைத்து கொண்டு மௌனமாகவே நிற்க..
” உங்கள தான் கேக்குறேன்..??? அவுங்க பேர் சொல்லு செல்வா..” என்றாள் சிறிது நடுக்கத்துடன்
அவனும் எதுவாக இருந்தாலும் பார்த்து கொள்ளலாம் என்ற நினைப்பில் ” இப்போ என்னால அவ பேர சொல்ல முடியாது ” என்று கூறிவிட்டு “என் அத்தை பொண்ணு ” என்றான் காதலுடன்…
இந்த பதிலை கேட்டு நொறுங்கி போனாள் அவள்.
பிறகு அவள் எதுவும் பேசாமல் படுத்துக்கொண்டாள்….. மீனு ஏன் இப்படியெல்லாம் கேள்வி கேட்டாள் என்று புரியாமல் செல்வா குழம்பி போனான்.
அதற்கான விடையை தெரிந்து கொள்ள தவறினான்.பின் அவனும் சென்று படுத்த சிறிது நேரத்திலே அவளை தன் அணைப்பில் வைத்து கொண்டு உறங்கினான்…
அதன் பிறகு வந்த நாட்களில் மீனு செல்வாவிடமிருந்து தள்ளியே இருந்துக்கொண்டாள் . இருவரும் ஒன்றாக இருந்தாலும் தனித்தனியே வாழ்ந்து வந்தனர்.
இதை கண்ட பெரியவர்கள் மனம் துடித்தாளும் காலப்போக்கில் சரியாகிவிடுவர் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.
இதனை கண்ட அஞ்சலிக்கு மட்டும் தினந்தோறும் தீபாவளியாக இருந்தது….அதனை மகிழ்வாகவும் கொண்டாடி கொண்டு இருந்தாள்..அது மட்டும் இல்லாமல் மீனுவிடம் இல்லாத மற்றும் நடவாத காதலை பற்றி தினந்தோறும் பிதற்றிக் கொண்டு இருந்தாள்.
ஆதியும் முகிலும் அடிக்கடி செல்வாவை காண்பதற்காகவும் அர்ஜுனை காண்பதற்காகவும் செல்வாவின் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்.
இன்னும் இரண்டு நாட்களே இருந்தது செல்வா கதிர் மற்றும் அபி மும்பை செல்வதற்கு…
அவர்கள் மூவரும் ஆஃபிஸில் இருந்து ‌இரவு பகல் பாராது வேலை செய்தனர். அவர்களுக்கு உதவும் பொரூட்டில் மீனுவும் பவியும் அங்கே இருந்து உதவி செய்தனர்….
பவி மட்டும் வேலை குறைவாகவும் சாப்பிடுவதை அதிகமாகவும் செய்து கொண்டு இருந்தாள்.
” ஐய்யோ…!!! நான் ரொம்ப டையட் ஆயிட்டேன் பா ஓவர் டைம் ஒர்க் செஞ்சி செஞ்சி .. ரொம்ப நேரம் ஒர்க் செஞ்சிட்டேன் போல… ஸ்டோமக் காலியா இருக்கு பா… நான் சாப்பிட போறேன் ” என்றாள் பவி ஏதோ உழைத்து கிழித்த மாதிரி
” அப்படி என்ன டி ஒர்க் பண்ணீங்க மேடம்???” என்று கேட்டுக்கொண்டே அங்கு வந்தாள் மீனு..
மீனுவின் கேள்வியை கேட்டு செல்வா கதிர் மற்றும் அபி என்ன மூவரும் சிரிக்க….
அவர்கள் மூவரையும் பவி ஒரு முறை முறைத்து விட்டு மீனுவிடம் திரும்பி ” அதுவா மீனு …” என்று இழுக்க
” அடியே ரொம்ப இழுக்காத… சீக்கிரமா சொல்லி முடி ..எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு “
” சொல்றேன் சொல்றேன் ” என்று பவி சொல்லும்போதே ஆண்கள் மூவரும் அவர்களது காதுகளை மூடிக் கொண்டனர்.
” ஆஃபிஸ்க்கு வந்தோன்ன பிரேக் பாஸ்ட் சாப்பிட போனேன்.. அப்பறம் ஒரு டேன் மினிட்ஸ் கழிச்சு காஃபி குடிச்சேன். அதுக்கப்பறம் சமோசா சாப்பிட போனேன்…கொஞ்ச நேரம் கழிச்சு ஜுஸ் குடிச்சிட்டு வந்தேன்… அந்த வேலைய பாத்துட்டு இருந்ததுல இந்த வேலைய பாக்க மறந்துட்டேன் ” என்று ராகம் போட்டு கொண்டு கூற….
மீனுவின் காதில் புகை வராத குறை தான்.இதற்காக தான் நீங்கள் மூவரும் காதை மூடீனீர்களா..??? என்று அவர்களை பார்த்து ஒரு முறை முறைத்து வைத்தவள் பவியிடம் திரும்பி…,,
” நானும் அங்க தான இருந்தேன்.. நான் உன்ன பாக்கவே இல்லையே ” என்று மாபெரும் சந்தேகத்தை எழுப்ப
” ஹிஹி நான் நீ கேன்டீன்க்கு வரும்போது நான் ஒழிஞ்சுகிட்டேன். அப்பறம் நீ போன பிறகு திரும்பவும் என்னோட ஃபிலேச்சுல உட்கார்ந்து சாப்பிட ஆரம்பிச்சுட்டேன் ” என்று இழித்துக் கொண்டே சொல்ல…
” சரி சரி வா நாம போய் பப்ஸ் வாங்கி சாப்பிடலாம் ” என்று மீனு பவியை அழைக்க
” நானும் அத சாப்பிடறதுக்கு இப்போ எந்திருச்சேன் ” என்று அவளுடன் செல்ல நடை எடுத்து வைக்க
” ரெண்டு பேரும் ஒழுங்கா நில்லுங்க..!!! இப்போ தான பவி நீ ஜுஸ் குடிச்சிட்டு வந்த..???” என அபி கேட்க
” ஆமா அதுக்கு என்ன..???”என்று எதிர் கேள்வி கேட்க
” உங்களுக்கு எல்லாம் வயிறுன்னு ஒன்னு இருக்கா இல்லையா…??? எவ்ளோ தான் சாப்பிடுவீங்க ரெண்டு பேரும்..???” என்றான் நக்கலாக
இருவரும் அவனை பார்த்து முறைக்க…,, அவர்களது கணவன்மார்கள் அபியின் நிலமையை கண்டு சிரித்தனர்.
” ரெண்டு பேரும் எதுக்காக என பாத்து சிரிக்கிறீங்க…??? ” என பச்ச குழந்தைபோல் கேட்க…
” அபி கொஞ்சம் எங்க கூட வாயேன் ” மீனு கூற அவனும் “ஏன்..??? எதற்கு…???” என்று கேள்வி கேட்க
” உனக்கும் சேர்த்து பப்ஸ் வாங்கி தரதுக்கு தான் ” என்றாள் பவி .
” சரி ” என்று கூறிய அடுத்த நொடி அவன் கேன்டீன் முன்பு நின்றான்.. அவன் பின்னாலே இரு பெண்களும் சிரித்துக்கொண்டே சென்றனர்.
அரைமணி நேரமாகியும் அவர்கள் மூவரும் வராததால் கதிரும் செல்வாவும் கேன்டீன் நோக்கி சென்றனர்.
அங்கே சென்று பார்த்தால் அந்த கேன்டீனையே இரு பெண்களும் சேர்ந்து காலி செய்து கொண்டு இருந்தனர்.
அதனை கண்ட இருவரும் அபியின் அருகே வந்து நின்றுக்கொண்டு ” இது உனக்கு தேவையா..?? நாங்க அமைதியா தான இருந்தோம்.. நீயும் அப்படியே இருக்க வேண்டியது தான . இப்போ பாரு உன் பர்ஸ் காலி ” என்க
” அட போ செல்வா.. பணம் இன்னைக்கு வரும் நாளைக்கு போகும்…ஆனா அங்க பாரு அவுங்க ரெண்டு பேரும் எவ்வளவு சந்தோஷமா இருக்கிறாங்கனு . எனக்கு அது போதும் டா  ” என்றான் பெண்களின் குழந்தை தனத்தை ரசித்த படியே…
” அவுங்க கூட இருக்கும் போது எதுவும் தெரியாது மச்சி..அதே அவுங்க நம்ம கூட இல்லாத போது தான் தெரியவரும் அவுங்கள நாம எவ்வளோ மிஸ் பண்றோம்னு . உங்க ரெண்டு பேர நம்பி தான் இந்த பொண்ணுங்க இருக்காங்க. ஆனா நீங்க வேலை தான் முக்கியம்னு அத கட்டிகிட்டு திரியிறீங்க .அவுங்கள பத்தியும் கொஞ்சம் யோசிங்க டா ரெண்டு பேரும்…அவுங்கள சந்தோஷமா பாத்துக்கோங்க  ” என்று கூறிவிட்டு ‌பெண்களுடன் சேர்ந்து கொண்டான்..
கதிரும் செல்வாவும் சொல்வதறியாது அமைதியாக நின்றனர்.
கதிரும் பவியையே பார்த்து கொண்டு இருந்தான்.அவனுக்கு தெரியாமலே பவி சிறிது சிறிதாக அவனுக்குள் நுழைய தொடங்கி இருந்தாள்.
பின் ,, அவர்கள் ஐவரும் அந்த சந்தோஷத்தை ஞாபக படுத்திக் கொள்ள புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்…
அந்த நாள் அப்படியே செல்ல ,,அந்த நாள் முழுக்க மீனு சிரித்த முகமாகவே இருந்தாள்.
அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ..,, இளையவர்கள் பட்டாளம் அனைத்தும் செல்வாவின் வீட்டில் ஒன்று கூடியது…
அந்த நாள் முழுவதும் ஆண்களை வைத்து பெண்கள் வேலை வாங்குவர்.
மதிய உணவை ஆண்கள் அனைவரும் சேர்ந்து செய்ய ,, பெண்கள் அனைவரும் சேர்ந்து சீட்டு விளையாடிக் கொண்டு இருந்தனர்.
லதாவும் இந்திரனும் இவர்களை தொந்தரவு செய்ய எண்ணாமல் அமைதியாக இருந்தனர்…
பின் ஆண்கள் அனைவரும் சமையலறையை ஒரு வழி ஆக்கிவிட்டு சமைத்து முடித்தனர்.
பின்பு,, அனைவரும் சாப்பிட உட்கார ஆதி சிந்துவிற்கு எதிராக அமர்ந்து கொண்டான்.
சிந்து ஆதியை முறைத்துக் கொண்டே சாப்பிட தொடங்கினாள்.அவனும் அவளை பார்த்து இழித்துக் கொண்டே சாப்பாட்டை கொறித்து கொண்டு இருந்தான்.
கேலியும் கிண்டலுமாகவே மதிய உணவை முடித்தனர்.
அந்த எட்டு பேரும் சேர்ந்து பேசிக்கொண்டு இருக்க…,,
” மாம்ஸ் எனக்கு ரொம்ப போர் அடிக்குது ..நாம எதாவது விளையாடலாமா..???” என்று சிந்து செல்வாவிடம் கேட்க
” ஆமா பா எவ்வளோ நேரம் தான் பேசிட்டே இருக்கிறது…எதாவது விளையாடலாம் ” என்று திவ்யா சிந்துவுடன் கை கோர்த்து கொண்டாள்.
” அப்படி என்ன விளையாடுறது..??” என்று செல்வா அவர்களிடமே கேட்க
சிந்து இல்லாத மூலையை வைத்து யோசிக்க தொடங்கினாள்.
” இந்த குட்டி பிசாசுக்கு தான் மூலையே இல்லையே அத வச்சி என்ன யோசிக்குது ” என்று ஆதி மனதில் சிந்துவை பற்றி பேச மனதோ நமக்கு எதுக்கு வீண் வம்பு என்று அமைதியாகவே இருந்தது.
” போதும் டி நீ இல்லாத மூலையை வச்சி யோசிச்சது ..நாம தம்ஷறாட்ஸ் விளையாடலாம்…இதுல சாங் பேர் பேரா பாடனும் .அதுக்கு நடுவுல ஒரு டாஸ்க் நாங்க சொல்லுவோம் .. அதையும் நீங்க பண்ணி தான் ஆகனும் ” என்று பவி சொல்ல அதற்கு அர்ஜுன் ” Truth or Dare with dumsharaths ” என்க அனைவரும் சம்மதத்தினர்.
” அதுலயும் ஒரு சின்ன சேன்ஜ் வச்சிக்கலாம் ” என்று சுபா சொல்ல
” என்ன சேன்ஜ் பண்ணனும் சுபா செல்லம்…??? அத்தான் பண்றேன் ” என்று அர்ஜுன் காதலாய் பேச
” நாம பேரையும் ஸ்லாட் போட்டு சூஸ் பண்ணிக்கலாம் ” என்று நமட்டு சிரிப்பொன்று சிரித்தாள்.
அர்ஜுன் மனதில் ” இவளலலாம் வச்சி என்ன பன்றதோ தெரியல ” என்று நினைத்தாலும் வெளியில் ” சூப்பர் ஐடியா செல்லம் ” என்று புகழ்ந்தான்.
சிறிது நேரத்திலே விளையாட்டு தொடங்கியது….
சிந்து முதலில் ஆரம்பித்தாள்….அவள் அந்த ஸ்லாட்யை எடுத்து பார்க்க அதில் முகில் பெயர் இருந்தது.
சிந்துவும் முகிலும் பாட தொடங்க அர்ஜுனும் சேர்ந்து அவர்களுடன் பாட தொடங்கினான்…
சிந்து முகில் மற்றும் அர்ஜுன் மூவரும் சேர்ந்து வா வா டியர்ரு பிரதர்ரு பாடல் பாடினர். பாடிய பின்பு நான்கு பலுன்கள் கொடுத்த ஊத சொல்ல அவர்களும் உதவினர்.
அதன் பிறகு பவி வர ,, அவளுக்கு கதிர் பெயரே வந்திருந்தது.
இருவரும் சேர்ந்து உன்ன விட்டா யாரும் எனக்கில்ல என்ற பாடலை மெய்மறந்து பாடினர்.
அதன் பிறகு முகில் மீனு,,சிந்து ஆதி ,,அஞ்சலி அபி ,திவ்யா முகில் மற்றும் சுபா அர்ஜுன் என அனைவரும் பாட இறுதியாக ..,,மீனு சீட் எடுக்க அதில் செல்வா பெயர் வந்தது .
அந்த நேரம் பார்த்து செல்வாவிற்கு அழைப்பு வர ,,அவன் சிறிது தள்ளி நின்று அதை உயிர்ப்பித்து பேச ஆரம்பித்தான்…
அதனால் மீனுவுடன் அஞ்சலி பாட முன் வந்தால்..,,இரு பெண்களும் சேர்ந்து பாட தொடங்கினர்.
மீனு : மௌனம் பேசும்
வார்த்தை யாவும்
ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே
காலம் செய்யும்
மாயம் போதும்
சூடாத பூக்களும் வாடிடுதே
மீனு அந்த வரியை முடிக்க..,,அஞ்சலி தொடங்கினாள்.
அஞ்சலி : பிரிவென்று ஏதுமில்லை
உயிரென்று ஆன பின்னே
நீ என்றால் நீ இல்லை
நானே நானே தானே
மெது மெதுவாய் திருவுருவாய்
ஆனாய் ஆனாயே
மீனு : நெகிழும் நினைவுகள்
நெஞ்சில் வீசுதே
காலமே கைகொடு
காதல் காதல் எந்நாளும் நீள
இனிதான வாழ்வில் சேர….ஹோ ஓ
ஒரு நூறு ஆயுள் வாழ என்று அஞ்சலியை மனதில் நினைத்து பாட
அஞ்சலி : மௌனம் பேசும்
வார்த்தை யாவும்
ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே
காலம் செய்யும்
மாயம் போதும்
சூடாத பூக்களும் வாடிடுதே
மீனு : அலைகள் போலவே
காதல் மோதுமே
சேருமா ஓர் கரை
மோதும் மோதும் ஓயாமல் மோதும்
ஓர் நாளும் சேர்ந்தே தீரும்….ஹோ ஓ
அந்நாளும் வந்தே சேரும்….
அஞ்சலி :. மௌனம் பேசும்
வார்த்தை யாவும்
ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே
காலம் செய்யும்
மாயம் போதும்
சூடாத பூக்களும் வாடிடுதே
மீனு : பிரிவென்று ஏதுமில்லை
உயிரென்று ஆன பின்னே
நீ என்றால் நீ இல்லை
நானே நானே தானே
மெது மெதுவாய் திருவுருவாய்
ஆனாய் ஆனாயே என்று இறுதியாக மீனு பாடி முடித்தாள்.
இறுதியில் மீனு அந்த பாடலை பாடி முடிக்க அவளது கண்கள் கண்டது செல்வாவையே விழியில் வரும் கண்ணீரை கட்டு படுத்திக்கொண்டே. அதே நேரம் செல்வாவும் திரும்பி மீனுவை பார்க்க இருவரது விழிகளும் ஓரே நேர்க்கோட்டில் சந்திக்க ,,உடனே விழிகளை திருப்பிக் கொண்டாள் மீனு.
அஞ்சலியும் அபியும் இதை அனைத்தையும் கண்டனர். அஞ்சலி வெறுப்பாகவும் அபி யோசனையாகவும் பார்த்தனர். மற்றவர்கள் யாரும் இதை கவனிக்க வில்லை.
அபிக்கு மீனுவின் நடவடிக்கை மீது சிறிது சந்தேகம் எடுத்தது.அந்த நிலமையை கெடுக்க விரும்பாமல் அமைதியை கடைப்பிடித்தான்.
போன் பேசிவிட்டு வந்த செல்வா மீனுவின் அருகில் நின்றுக்கொண்டு ,, போதும் விளையாடினது வாங்க என்று உள்ளே அழைத்து சென்றான்.
” அம்மா…!!!அப்பா…!!! ” என்று ஹாலில் இருந்து செல்வா அழைக்க …,,” சொல்லு செல்வா ” என்று சொல்லியபடியே அறையில் இருந்து வெளியே வந்தனர்…
” அம்மா…!!! சக்தி அக்கா நாளைக்கு நான் மும்பை போறதுனால இன்னைக்கு நைட்டு கிளம்பி நாளைக்கு ஊருக்கு வரேன்னு சொன்னா ” என்றான் சந்தோஷமாக
” ரொம்ப சந்தோஷம் பா.. அவ இங்க வந்து எவ்ளோ நாள்ளாச்சி “என்றாள் புன்னகையுடன்.
இந்த பெயரை கேட்ட மீனுவிற்கு ..,,ஏதோ தன்னை நெருங்கியவர்கள் வர போற மாதிரி ஒரு உணர்வு ஏற்பட்டது.
அந்த நாள் முழுக்க சந்தோஷமாகவே இருந்தனர் அனைவரும். பின்பு அதே சந்தோஷத்துடன் அனைவரும் அவர் அவர்களது வீட்டிற்கு சென்றனர்.
இவர்களது சந்தோஷத்தை கெடுக்கும் விதமாக பன்னையபுரத்தில் அதற்கான வேலையை தொடங்கி இருந்தனர்.

Advertisement