Advertisement

நினைவினில் நிறைந்தவளே…
அத்தியாயம் 21
சக்கரபாணியூம் சாந்தாயும் சாமியின் பதிலுக்காக காத்திருக்க.., அவர் மெதுவாக தன் கண்களை திறந்து ஒரு ஆழ்ந்த பார்வை பார்த்துவிட்டு ” நாம நினைக்கிற மாதிரி அவ இப்போ சாதாரண இடத்துல இல்ல.அவள பாதுக்காக்குரதுக்கு ஒரு கூட்டமே இருக்கு “என்க
“சாமி அந்த பொண்ணு எங்க இருக்கா..???அவள எப்படி கண்டுபிடிக்கிறது…???இப்போ எப்பிடி இருப்பான்னு சொல்ல முடியுமா.??” என்று கேள்வி கனைகளை தொடுக்க
“அந்த பொண்ணை நெருங்குறது ரொம்பவே கஷ்டம். அவள பாதுக்காக்க அவளுக்கு துணையா நிறையபேர் இருக்காங்க . ஏன் உயிரை கொடுக்க கூட தயாரா இருக்காங்க. அதேபோல அவளே வருவா நம்ம ஊருக்கு ” என்றார்.
” அது எப்படி சாமி அவ நம்ம ஊருக்கு வருவா..???” என்று தனக்கு தோன்றிய சந்தேகத்தை கேட்டார் சாந்தாயி.
” அவ இந்த ஊருக்கு வரனும்ன்னா நீ உன்னோட பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும். அதாவது உன்னோட மூத்த பையனா இருக்கிற வீரராஜேந்திரன் மகனான முகில்க்கு கல்யாணம் பண்ணனும் ” என்றார் சோலியை உருட்டி பார்த்து சொல்ல
“சரிங்க சாமி ” என்றனர் இருவரும்.
” உங்களுக்கு நாட்கள் கம்மியா இருக்கு . அவனோட பிறந்த நாளுக்கு முன்னாடி முகில்க்கு கல்யாணம் பண்ணி வைக்கனும் .அப்போ தான் அவள இங்க வர வைக்க முடியும் ” என்றவர் “இனி எல்லாம் அவன் செயல் ” என்று கடவுளை காட்டினார்.
” சரிங்க சாமி நீங்க சொன்னது போலவே செய்றோம் ” என்று சொல்லிவிட்டு இருவரும் கிளம்பி வீட்டிற்கு சென்றனர்.
போகும் வழியில் சாந்தாயி சங்கரபாணியிடம் ” டேய் மகனே இப்போ இந்த விஷயத்தை வீட்ல உள்ள யாருக்கிட்டயும் சொல்ல வேணாம் ” என்க
” சரி மா சொல்லலை. ஆனா அவன எப்படி சம்மதிக்க மா வைக்கிறது..???”  
சாந்தாயி அவரிடம் ஒரு யோசனை சொல்ல ” இத பண்ணின்னா கண்டிப்பா அவன் சம்மதிப்பான் ” என்றார்.
அதற்குள் வீடு வர இருவரும் அமைதியாகினர்.
எதுவும் நடவாது போல இருவரும் வீட்டிற்கு வந்து அவர் அவர்களது அறைக்கு சென்று ஓய்வெடுக்க தொடங்கினர்.
அன்று இரவு வளர்மொழி சாப்பாடு எடுத்து வைத்துக் கொண்டு இருக்க ,, அவரிடம் வந்த ஆதி மற்றும் முகில் அமைதியாக நின்றனர்.
” என்னங்கடா ரெண்டு பேரும் அமைதியா நிக்குறீங்க..??” என்க 
சுற்றி முற்றி பார்த்தவன் யாரும் இல்லை என்று தெரிந்து கொண்ட ஆதி முகிலின் தோலை தட்டி சைகை செய்ய 
” அம்மா நான் என் குடும்பத்த கொன்னவுங்கல கண்டு பிடிக்க போறேன் மா. அதுக்காக எங்களுக்கு மிதுவோட ஃபோட்டோ வேணும்  ” என்றான் நிதானமாக.
” டேய் முகில் என்கிட்ட மிது வோட ஃபோட்டோ எதுவுமே இல்லயே டா ” என்று கைவிரிக்க.
” அம்மா கொஞ்சம் நல்லா யோசிச்சு பாருங்க மா ” என்றான் ஆதி.
” உண்மையா எதுவுமே இல்ல டா ” 
“சரிங்க மா . அப்படி நீங்க மிதுவோட ஃபோட்டோ பார்த்தா எனக்கோ இல்லன்னா ஆதிக்கோ கால் பண்ணி சொல்லுங்க மா ” என்றான் முகில்.
மூவரும் இப்படி பேசிக்கொண்டு இருக்க சக்கரபாணி வர அவர் பின்னாடியே சாந்தாயும் வந்தார்.அவர்கள் வரவும் பேச்சை நிறுத்தி கொண்டனர்.
அதன் பின் அமைதியாக சாப்பிட ,,அப்போது ஆதி அந்த அமைதியை கலைக்க ” அப்பா ” என்று அழைத்தான்.
” சொல்லு தம்பி ” என்றார் கனீர் குரலில்
” அப்பா நாளைக்கு நானும் முகிலும் ஊருக்கு போறோம் பா.மாரனீங் நாலு மணிக்கு ஃபிளைட் ” என்றான்.
” டேய் இப்ப தான டா ரெண்டு பேரும் வந்தீங்க. அதுக்குள்ள போறேன்னு சொல்றீங்க.? ” என்றார் மகன்களின் பிரிவை தாங்க இயலாமல்
” அம்மா என்னோட ஃபிரண்ட் அர்ஜுன் நாளைக்கு வர சொல்லி சொல்லி இருக்கான் மா.அவனை பார்க்க தான் போறோம் ” என்றான் சாப்பிட படியே
அர்ஜுன் என்ற பெயரை கேட்ட அடுத்த நொடி முகில் முகமல்லாது அனைவர் முகத்திலும் ஒவ்வொரு விதமான முக பாவனை வந்து சென்றது.
இதை அனைத்தையும் போலிஸ் மூலை கண்டுக்கொண்டது.
“சரி பா பொயிட்டு வாங்க ” என்றார் கவலையை புதைத்துக் கொண்டு
பின்பு அனைவரும் உண்ட பிறகு படுக்க சென்றுவிட்டனர்.
அந்த இருட்டு அறையில் இருந்த வீரராஜேந்திரன் மட்டும் சிரித்துக்கொண்டே இருந்தார். “தனக்கான விடுதலை நாள் கூடிய சீக்கிரம் வர போகுது ” என்று சொல்லி சந்தோஷ பட்டுக்கொண்டு இருந்தார்.
அடுத்தநாள் விடியலில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு விமானம் ஏறினர் இருவரும்.
சக்கரபாணியும் சாந்தாயும் சேர்ந்து அவர்களது திட்டத்தை செயல்படுத்த தொடங்கினர்.
.
.
.
**********
சுபா காலையிலேயே வீட்டிற்கு சென்று வீட்டை சுத்த படுத்தி வைத்திருந்தாள். அவர்களது வருகைக்காக வீட்டில் காத்துக்கொண்டு இருந்தவள் வீட்டின் முன் கார் சத்தம் கேட்கவும் சமையலறை நோக்கி வேகமாக ஓடி ஆர்த்தி தட்டுடன் வெளியே வந்தாள்.
அப்பொழுது காரை விட்டு இறங்கினார்கள் செல்வாவும் மீனுவும்….
செல்வா மீனுவை ஒன்றாக நிற்க வைக்க ,,அவர்கள் இருவரும் சிறு இடைவெளி விட்டு நின்றனர்.
” ஹலோ அண்ணா…!!!அண்ணி பக்கத்துல சேர்ந்து நிக்கிறது. இப்படி வெக்கப்பட்டுட்டு இருந்தா எப்படி ” என்றாள் சுபா நக்கலடிக்கும் விதமாக
” ஹே குட்டி வாய ஒடச்சுருவேன் பாத்துக்கோ ” என்று எச்சரிக்கை விடுத்தான் செல்வா.
” யாரு டா அது என்னோட வருங்கால பொண்டாட்டிய வாய ஒடச்சுருவேன்னு சொன்னது ” என்று அர்ஜுன் பின்னால் இருந்து சுபாவின் பக்கத்தில் நின்று கேட்டான்.
“நான் தான் டா சொன்னேன். இப்போ அதுக்கென்ன ” என்றான் விரைப்பாக…
“டேய் மச்சி அது நீ இல்லன்னு எனக்கு நல்லாவே தெரியும். யாரா இருக்கும்ன்னு தான் தெரியல ” என்று கூறி தேடி பார்ப்பது போல் காட்டிக்கொண்டான்.
“அடேய்..!!!அது நான் தான் டா அவள அடிச்சுருவேன்னு சொன்னது ” என்க
” உன் வாழ்க்கைலயே இது நீ இரண்டாவதா செய்ய போற நல்ல விஷ்யம் ” என்றான் சுபா விடம் இருந்து சிறிது தள்ளி நின்ற படியே
செல்வா அவனை கண்டு முழிக்க..
“அது ஒன்னும் இல்ல மச்சி ..,,என் தங்கச்சிய கல்யாணம் பண்ணது தான் நீ செஞ்ச முதல் நல்ல விஷயம். அடுத்தது இப்போ சொன்னியே அவள அடிச்சிருவேன்னு அது இரண்டாவது நல்ல விஷயம் “என்று செல்வாவின் தோல்களில் கைப்போட்டவாறு கூறினான்.
தனக்காக தன்னவன் பேசுகிறான் என்று ஒரு கர்வத்தில் நின்றவள்,,தன்னை கால வாறி விட்ட அர்ஜுனை பார்த்து முறைத்து வைத்தாள்.
“ஏன் டா இப்படி உன் முகமெல்லாம் சிவப்பாகுது ” என்று யாரடி நீ மோகினி படத்தில் சரண்யா தனுஷை பார்த்து கேட்பது போல் அர்ஜுன் கேட்க…
“நேக்கு தெரியலன்ற டையலாக் சொல்லுவேன்னு மட்டும் எதிர்பார்க்காத” என்று கூறி அவனை தொரத்த அர்ஜுனும் அவளிடம் இருந்து தப்பிப்பதற்காக வேகமாக ஓடினான்.
இதனை கண்ட அனைவரும் சிரிக்க ,, இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த மீனு கூட சிரிக்க தொடங்கினாள்.
தீடீரென்று யாரோ தன் கையை பற்றுவது போல் உணர்வு ஏற்பட ,,உடனே திரும்பி பார்க்க அங்கு செல்வா தான் தன் கையை பிடித்துக் கொண்டு தன்னையே பார்த்த படி இருந்தான்.
அவனை பார்த்த நிமிடத்தில் அவளுக்குள் சிறு தடுமாற்றம். அவன் கண்கள் எதையோ பறைசாற்றிட நினைக்க ,ஆனால் அவளுக்கு எதுவும் புரியாமல் போக அவன் கண்களை ஊடுருவி பார்க்க ,சுதாரித்து கொண்ட செல்வா பார்வையை அவளிடமிருந்து அகற்றினான்.
லதா அவர்களுக்கு ஆர்த்தி எடுக்க போக செல்வாவின் ஒரு பக்கத்தில் அஞ்சலி வந்து நின்றுக் கொண்டாள் .
இதனை கண்ட லதாவிற்கு கோபமாக வர சபை நாகரிகம் கருதி அமைதியாக ஆர்த்தி எடுத்தாள்.
“அத்தான் தட்டுல காசு போட்டுட்டு உள்ள போங்க ” என்று கூறியவாறே ஸ்கூட்டியில் இருந்து இறங்கி வந்தாள் சிந்தியா.
” அட வாம்மா சிந்து ..இப்போ தான் உங்க அக்காவை அங்க இருந்து கூட்டிட்டு வந்தோம். அதுக்குள்ள அக்கா ஞாபகம் வந்துருச்சா .உடனே வந்துட்ட ” என்று சொல்வா நக்கலடிக்கும் தோரணையில் கேட்க 
“அட போங்க அத்தான்…. போயும் போயும் இவளை பாக்க வருவேன்னா சொல்லுங்க… நான் என்னோட செல்ல மாமாவை பாக்க வந்தேன் ” என்று கூறி இந்திரனின் பக்கத்தில் நின்றுக்கொண்டாள்.
“ஹலோ மிஸஸ் லதா இந்திரன் எங்க ரெண்டு பேருக்கும் சேர்த்து ஆசிர்வாதம் பண்ணுங்க “என்றாள் நக்கலாக.
” அடியே அப்படியே ஒன்னு போட்டேன்னா பாறேன் ” என்று அடிக்க வரது போல் பண்ண 
” அய்யோ கொலை கொலை ” என்று கூப்பாடு போட்டு கத்த 
” போதும் டா இந்த விளையாட்ட நாம அப்புறமா வச்சிக்கலாம் டா ” என்றார் இந்திரன்.
” சரி திரன் ..நீங்க சொல்றதுனால இவுங்களை விடுறேன். ஆனா அத்தான் காசு போடுங்க ,அப்போ தான் உள்ள விடுவேன் ” என்று அவள் மீண்டும் அதிலே வந்து நிற்க
செல்வாவும் இரண்டாயிரம் ரூபாய் எடுத்து தட்டில் போட்டு விட்டு மீனுவை அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான்.
இதனை கண்ட அஞ்சலிக்கு ஆத்திரமாக இருந்தது.
அர்ஜுனை துரத்திக்கொண்டே ஓடினாள் சுபா. அர்ஜுன் நேராக அவனது அறைக்குள் புகுந்து கொண்டான்.
சுபாவும் ஏதோ ஒரு வேகத்தில் அவனது அறைக்குள் நுழைந்து அவனை தேட ,,அந்த நேரம் கதவை உள் பக்கமாக தாழ்ப்பாள் போட்டுவிட்டு ஹாயாக கதவில் சாய்ந்த படி நின்றான் அர்ஜுன்.
” அர்ஜுன் எதுக்காக கதவு சாத்துறீங்க..???கதவ திறங்க அர்ஜுன் நான் போறேன் ” என்றாள் கதவை நோக்கி காலடி எடுத்து வைத்த படியே
” போ நான் ஒன்னும் உன்ன தடுக்கலையே ” என்றான் சாதாரனமாக தலையை கோதிய படி
” நீங்க இப்படி நின்னா நான் எப்படி போறதாம் ” என்றாள் திக்கித்திணறி .
” நான் இங்க தான் நிப்பேன் .நீ என்ன கடந்து போறதுன்னா தாரலாமா போலாம் ” என்றான் சாவகாசமாக நின்று கொண்டு
உள் மனதில் அவனை அர்ச்சித்த படி இருக்க ..,, வெளியில் ” ப்ளிஸ் அர்ஜுன் விடுங்க நான் போறேன் “.
” நான் என்ன உன்ன புடிச்சா வச்சிருக்கேன் ” என்று புருவம் உயர்த்திட.
“சுபா சுபா ” என்று கீழே இருந்து லதா அழைக்கவே
” அய்யோ அம்மா வேற கூப்பிடுறாங்களே ..,,சண்டால பாவி நகராம அப்படியே நிக்கிறான் பாரு ” என்று மனதில் திட்டியபடி அவனை நெருங்கி வந்தாள்..
அவனை நெருங்கி வர வர சுபாவிற்கு இதய துடிப்பு அதிமாக அடித்தது. கதவின் மீது கை வைக்க போக 
அடுத்த நொடியே அர்ஜுன் சுபாவை தன் வசம் வைத்திருந்தான்.
அவனிடம் இருந்து தன்னை பிரித்தெடுக்க போராடா ,,அவனது பிடி இரும்பு பிடியாக இருந்தது.
” உன்கிட்ட கொடுக்கணும்னு நேத்திலர்ந்து காத்திட்டு இருக்கேன் ” என்று கூறி அவனது இதழால் அவளது இதழை சிறை பிடித்தான்.
முதலில் அவனிடம் இருந்து விலக முயற்சித்தவள் ,,அவன் அவனுடைய காதலில் இதழ் வழி மூலம் உணர்த்திட அதன் பின் அவளும் அமைதியானாள்.
அவள் மூச்சுவிட சிரம படவே அவளை விட்டவன்..,,” இனி என் முன்னாடி இப்படி புடவைல வந்து நிக்காத டி . அப்புறம் உனக்கு தான் சேதாரம் பார்த்துக்கோ ” என்றான் கண்ணத்தை வருடி விட்ட படியே
அவளது கண்ணங்கள் இரண்டும் தக்காளி பழம் போல் சிவக்க ,, அர்ஜுனை தள்ளிவிட்டு வேகமாக கதவை திறந்து வெளியே சென்று விட்டாள்.
செல்வா மீனுவை அவனது அறைக்கு அழைத்து சென்றான்.
” இனி இதுதான் நம்ம ரூம் நல்லா இருக்கா..???” என்று கேட்க 
மீனுவும் அந்த அறையை சுற்றி பார்த்தாள்.
பார்க்க மிகவும் அழகாக இருந்தது.நீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் அமைக்கப்பட்டிருந்தது அந்த அறை .ஒரு பெரிய கட்டில் அதற்கு நேராக டிவி ..,,பக்கத்திலே இருவர் அமர்வதற்கான சோஃபா. அதன் எதிர் முனையில் இன்னொரு அறை இருந்தது. பால்கனியில் ஒரு பெரிய ஊஞ்சல் ஒன்று மாற்றப்பட்டு இருந்தது. 
“ரொம்ப அழகா இருக்கு ” என்றாள் மனதார.
“நமக்காக பார்த்து பார்த்து உருவாக்கியது ஆச்சே ” என்று மனதில் நினைத்தவன் ,
“சரி நீ போய் ட்ரெஸ் மாத்திட்டு வந்து ரெஸ்ட் எடு ” என்றான்.
அவளும் குளியலறைக்குள் நுழையும்போது தான் ஞாபகம் வந்தது தன்னிடம் எந்த உடையும் இல்லை என்று.
அவள் குளியல் அறைக்குள் செல்லாமல் தயங்கிய படியே நிற்பதை கண்ட செல்வா “என்ன ஆச்சி..???” என்று கேட்க
” அது அது வந்து.. மாத்திட்டு வரதுக்கு ட்ரெஸ் இல்ல ” என்றாள் தயக்கத்துடனே.
“ஒரு நிமிஷம் இரு” என்றவன் ” சுபா” என்று அழைக்க
 ” இதோ வந்துட்டேன் ” என்று மீனுவின் பைகளுடன் அறைக்குள் நுழைந்தாள்.
” இதோ பேக் ” என்று ஒரு இடத்தில் வைத்து விட்டு சென்றாள் சுபா.
பையில் இருந்து ஆடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.
” திரன் செல்லம் எங்க இருக்கீங்க..???” என்று கேட்டுக்கொண்டே ஓடி வர யாரோ ஒருவர் மீது மோதி கீழே விழ பார்க்க ஒரு கரம் அவளின் இடையினை வலைத்து அவளை விழாமல் காத்தது.
அடுத்த நொடி சுதாரித்து கொண்டு அவனிடமிருந்து விலகி நின்றவள் ,,அங்கு இருந்தவனை கண்டதும் பத்திர காளியாய் உருமாறி இருந்தாள்.
அவனை திட்ட சிந்து வாயெடுக்க ” வா டா ஆதி ” என்று வரவேற்றார் இந்திரன்.
” ஹப்பா க்ரீன்சில்லி கிட்ட இருந்து எப்படியோ இன்னைக்கு தப்பிச்சிட்டோம் “என்று மனதில் இந்திரனிற்கு நன்றியை தெரிவித்தான்.
” எப்படி இருக்கீங்க பா..??” என்று கேட்டு விட்டு வெளியில் பார்க்க அங்கே முகில் தயங்கிய படி நின்றிருந்தான்.
” அடேய் உள்ள வா டா ” என்று முகிலை அழைத்து வந்தான் ஆதி.
” நான் நல்லா இருக்கேன். இது யாரு பா..??” என்றார் முகிலை காட்டி..
” இது என்னோட அண்ணா பா ” என்று அனைவருக்கும் முகிலை அறிமுக படுத்தி வைத்தான்.
” வாடா நல்லவனே ..!!! எப்படி இருக்க…???” என்று கேட்டவாறே மாடியிலிருந்து கீழே வந்தவன் முகிலை பார்க்க ” டாக்டர் நீங்க எப்படி இங்க ..???” என்று சிறு பயத்துடனே அர்ஜூன் முழிக்க
” நான் ஆதியோட அண்ணா ” என்றான் முகில்.
” எதுக்கு டா என்ன தீடிர்ன்னு வர சொன்ன..செல்வா எங்க டா ” என்று ஆதி கேட்க
” நான் இங்க இருக்கேன் டா பக்கி ” என்று கூறியவாறே மனைவியுடன் கீழே இறங்கி வந்தான்.
ஆதிக்கு ஆச்சரியம் தாளவில்லை என்றால் முகில்க்கு அதிர்ச்சியாக இருந்தது.
ஆதி எதையாவது கேட்டு குழப்புவதற்கு முன்பே அர்ஜுன் அவர்களிடம் உண்மையை கூறினான்….
சிறிது நேரம் அங்கே இருந்துவிட்டு ஆதியும் முகிலும் சென்றனர்..
கதிர் மற்றும் பவி இருவரையும் ஆர்த்தி எடுத்து அழைத்து வந்தார் புவனா.
பவி மணியை பார்க்க 10 என்று காட்ட “அச்சோ டைமாச்சே ” என பதறி போய் டிவியை போட்டு மோட்டு பட்லு பார்க்க ஆரம்பித்தாள்.
இதனை கண்டும் காணாதவாறு கதிர் அவனது அறைக்கு சென்றுவிட்டான்.
புவனா தலையில் அடித்துக்கொண்டு சமையலறைக்குள் புகுந்து கொண்டார்.
சிறிது நேரம் கழித்து டிவியை அனைத்து விட்டு அவளது அறைக்கு செல்ல ,,
 ” எங்க போற…???” 
” இது என்ன கேள்வி அத்தான்.நான் என்னோட ரூம்க்கு தான் போறேன் ” என்றாள்.
” எது உன் ரூம்..??” என்று கேள்வி கேட்க
‘அது ‘என்று கதிர் அறைக்கு பக்கத்தில் இருந்த அறையை காட்ட ” இனி அது உன் ரூம் கிடையாது . இனிமேல் இது தான் உன் அறை ” என்றான்.
பவி திருதிருவென முழிக்க….
” நமக்கு கல்யாணம் ஆயிடுச்சு மா.. அத கொஞ்சம் அப்ப அப்ப ஞாபகம் வச்சிக்கோங்க ” என்றான்.
பவி எதுவும் சொல்லாமல் அறைக்குள் சென்று படுத்துக்கொண்டாள்.
இப்படியே மேலும் இரண்டு நாட்கள் போக.., அதற்கு அடுத்த நாள் நால்வரும் ஆஃபிஸ் சென்றனர்…. 
ஆஃபிஸில் வேலை செய்யும் எவருக்கும் இவர்களுக்கு திருமணமான விடயம் தெரியாது.
” நான் ஆஃபிஸ்க்கு ஸ்கூட்டியில வரேன்.நீங்க கார்ல போங்க ” என்றாள் மீனு.
அவள் இடக்கையை பிடித்து தன் புறமாக திருப்பியவன் மீனுவுடன் நெருக்கமாக நின்றான். செல்வாவின் மூச்சுக் காற்று மீனுவின் மேல் பட பட அவளது இதயத் துடிப்பு அதிகமாகி கொண்டே இருந்தது.
” இங்க பாரு மீனு . நாம ரெண்டு பேரும் ஒண்ணா தான் ஆஃபிஸ் போறோம் வறோம் .இதுல எந்த சேன்ஞ்சஸூம் இல்ல. அப்படி நீ ஸ்கூட்டில தான் போவேன்னு சொன்னா நான் வீட்லயே இருக்கேன் நீ ஆஃபிஸ் போய்ட்டு வா ” என்று அவளை விளக்கி விட்டு வந்து சோஃபாவில் அமர்ந்தான்.
ஒரு நிமிடம் அந்த அறையில் அமைதி நிலவ ,மீனுவே செல்வாவின் அருகில் சென்று..,,” சரி இனி நான் உங்க கூடவே வரேன் ” என்றாள்.
” உண்மையா தான் சொல்றீயா…???” என்பதுபோல் பார்க்க
அதை புரிந்துகொண்ட மீனு ” நான் உண்மைய தான் சொல்றேன் ” என்றாள்.
அடுத்த நொடி அவளது கண்ணத்தில் தனது இதழை ஒற்றி விட்டு ” தேங்க்ஸ் டா செல்லம்” என்று கூறி ” நான் கீழே வெயிட் பண்றேன் . கொஞ்சம் சீக்கிரம் வந்துரு ” என்று கூறி விசில் அடித்தப்படியே கீழே சென்றான்.
அவனது செய்யலில் அப்படியே திகைத்து போய் நின்றவள்…,,அவளது மொபைல் சிணுங்கவும் தான் சுயநினைவு பெற்றாள்.
அதன் பின் அவளும் கீழே செல்ல ,, இருவரும் கிளம்பி ஆஃபிஸிற்கு சென்றனர்.
அங்கே கதிரும் பவியும் டாம் அண்ட் ஜெர்ரி ஆட்டத்தை ஆடிக் கொண்டே ஆஃபிஸிற்கு வந்து சேர்ந்தனர்….

Advertisement