Advertisement

நினைவினில் நிறைந்தவளே
அத்தியாயம் 20
உறக்கம் வராமல் நெடுநேரம் படுக்கையில் இருந்த பவி ,,அந்த அறையில் இருக்கும் பால்கனிக்கு சென்று நிலவை ரசித்துக் கொண்டே காலை நடந்த நிகழ்வுகளை கண் முன் கொண்டு வந்து  இருந்தாள் .
****
அன்று இரவு கதிர் ,,செல்வாவையும் மீனுவையும் சேர்த்து வைக்க சொல்லி கோரிக்கை வைக்க ,,அதை அவர்கள் ஏற்றுக்கொண்ட பிறகு..,,புவனா ஏதோ முடிவெடுத்தவலாய் கதிரிடம் சத்தியம் வாங்கிக் கொண்டார்.
அதிகாலை நான்கு மணியளவில் செல்வா மற்றும் மீனுவை தவிர்த்து புவனா அனைவரையும் கோவிலுக்கு வரும்படி அன்பு கட்டளை இட்டார் ‌.ஆனால் திவ்யா மட்டும்” நான் மீனு கூடவே இருக்கேன்.நீங்க எல்லாம் போய்ட்டு வாங்க ” என்று கூறினாள்.
பின்னர் அனைவரும் கோவிலுக்கு சென்றனர்.
கோவிலுக்கு வந்த பின்பு,, புவனா கதிரிடம் சென்று அவனது கைகளை பிடித்து கொண்டு நின்றார்.
“அம்மா உங்களுக்கு என்ன ஆச்சி…???” என்று கதிர் வினவ புவனாவோ ” உனக்கு இந்த அம்மா நல்லது தான் செய்வான்னு நம்பிக்கை இருக்கா..???” என்க
“என்ன மா இப்படியெல்லாம் கேட்டுட்டு இருக்கீங்க..?? நீங்க எனக்கு எப்பொழுதும் நல்லது மட்டும் தான் செய்வீங்க .இதுல உங்களுக்கு என்ன சந்தேகம் ” என்றான் .
“இந்த அம்மா உனக்கு நல்லது தான் செய்வேன்னு தோனுச்சின்னா ,, அப்போ இப்பவும் நான் ஒன்னு சொல்றேன். அத நீ எனக்காக செய்யனும். இத மட்டும் நீ செஞ்சீன்னா .என் மனசுக்குள்ள இருக்கிற பாரம் பொய்ட்டும் டா ” என்று கைகளை கூப்பி வேண்டினார்.
பதறிய கதிர் ” என்ன மா நீங்க..?? நீங்க என் கிட்ட இத செய்யுன்னு ஒரு வார்த்த சொன்னாலே நான் செய்வேன் மா.நான் உங்களுக்காக என் உயிரையும் கூட நீங்க கேட்டா தருவேன். நீங்க இப்படி பேசுறது தான் மா எனக்கு ரொம்ப கஷ்டத்த தருது. ப்ளிஸ் எதுவா இருந்தாலும் சொல்லுங்க நான் பண்றேன். ஆனா இப்போ எதுக்கு நாம கோவிலுக்கு வந்துருக்கோம்..??அங்க மீனுவும் செல்வாவும் தனியா இருப்பாங்களே மா..” என்றவனை பார்த்து ஒரு பெரிய மூச்சை இழுத்து விட்ட படி பவியிடம் சென்ற புவனா..
“நான் அவன் கிட்ட சொன்ன மாதிரி தான் ,, உன்கிட்டயும் சொல்றேன்.என் மனசுல இருக்கிற பாரத்தை நீங்க ரெண்டு பேரும் தான் குறைக்கனும்” என்று கூறி பவியை‌ அழைத்து வந்து கதிரின் பக்கம் நிற்க வைத்தார்.
“உங்க ரெண்டு பேத்துக்கிட்டயும் ஒரு விஷயம் சொல்றேன் கேட்டுக்கோங்க” என்று பவியை பார்த்து புவனா பேச ஆரம்பித்தார்
“உங்க அப்பா..!!!!அதாவது என்னோட பாபு அண்ணா சாவுறக்துக்கு முன்னாடி என் கிட்ட ஒரு வேண்டுதல்ல வச்சாரு.”
“என்னன்னு அத்தை எங்க அப்பா உங்க கிட்ட வேண்டுதல் வச்சாரு…???சொல்லுங்க அத்தை… நான் கண்டிப்பா எங்க அப்பாவோட வேண்டுதல்ல நிறைவேத்துறேன் “என்று புவனாவின் முன் கண்கள் பனிக்க மன்றாடி நின்றாள்.
“நான் கண்டிப்பா சொல்றேன் டா பவி .அது சொல்ல வேண்டிய நேரம் எனக்கு வந்துருச்சு.ஆனா அது உன்னால மட்டும் செய்ய முடியாது. கதிரும் சேர்ந்து தான் செய்யனும். அவனால மட்டும் தான் இத செய்ய முடியும் “.
“அம்மா சொல்லுங்க .. நான் இப்போ என்ன பண்ணனும்.மாமாவோட வேண்டுதல் என்ன..?” என்றான் கனீர் குரலில்…
“அண்ணா சாகுரதுக்கு கொஞ்ச நாள் முன்னாடி என்ன கூப்பிட்டு இருந்தார். நானும் அண்ணாவ பாக்க கோவைக்கு வந்தேன்.அப்போ அண்ணாக்கு கேன்சர்ல லாஸ்ட் ஸ்டேஜ் .ஆனா இத அண்ணா நம்மகிட்ட
சொல்லவே இல்லை.”
“அண்ணா நல்லா இருக்கீங்களா…??? பவி எப்படி இருக்கா…??? என்னனா எனக்கு போன் பண்ணி வேகமா இங்க வர சொன்னீங்க..???என்ன விஷயம் அண்ணா…??? சொல்லுங்க” பதறிய‌ படியே புவனா கேட்க…
“வா மா புவனா..!!! எப்படி இருக்க…???கதிர் எப்படி இருக்கான்..??? நான் நல்லா இருக்கேன் மா…எனக்கு என்ன என்று கூறும்போது ஒரு அற்த்த மற்ற சிரிப்பு இருந்தது. அப்பறம் பவியும் நல்லா இருக்கா மா. நான் உன்ன இங்க அவசரமா வர சொன்னதுக்கு ஒரு காரணம் இருக்கு மா” என்றார் பாபு.
“என்ன காரணம் அண்ணா..??? என்கிட்ட சொல்லுங்க “.
“இங்க பாரு புவனா ..,,உனக்கே தெரியும் பவி அம்மா இல்லாத பொண்ணுன்னு .அவளுக்கு அம்மா பாசம்ன்னா என்னனென்ன தெரியாது . நான் இன்னும் எவ்வளவோ நாள் உயிரோட இருப்பேன்னு தெரியாது . எனக்கப்புறம் அவள நீ தான் பாத்துக்கணும்” என்று பேசிக்கொண்டு இருக்க ,, உடனே அதை தடுத்த புவனா…..,,
“என்னனா இப்படியெல்லாம் பேசிட்டு இருக்கீங்க…??? உங்களுக்கு ஒன்னும் இல்ல னா… இனி இந்த மாதிரியெல்லாம் பேசாதீங்க . அப்பறம் நான் உங்க கூட பேசவே மாட்டேன்” என்று சிறு குழந்தை கோபித்துக் கொள்வது போல் பேசினார்..
அவளது இந்த குழந்தை தனத்தை பார்த்து தன் நிலமையை எப்படி சொல்வது என்று தவித்து போனார்.
என்ன அண்ணா அமைதியா இருக்கீங்க..??? என்று புவனா கேட்க..
“அதெல்லாம் ஒன்னும் இல்லை மா” என்று பதில் அளித்து விட்டு தான் சொல்ல வேண்டும் என்று நினைத்ததை சொல்ல ஆரம்பித்தார்.
“புவனா நான் சொல்ல வரத கொஞ்சம் கவனமா கேளு” என்று அவர் புதிர் வைக்க
“சொல்லுங்க அண்ணா..!!!” என்றார் புவனா.
“எனக்கு கொஞ்ச நாளாவே ஏதோ ஒரு மாதிரியாவே இருக்கு மா… இன்னும் எவ்வளவு நாள் நான் இந்த பூமியல வாழ போறேன்னு தெரியல….பிறப்புன்னு ஒன்னு இருந்துச்சீன்னா இறப்புன்னு ஒன்னு கண்டிப்பா இருக்கும்… அத நம்மால மாத்த முடியாது…எனக்கு அப்பறம் என்னோட பொண்ண உன்னவிட வேற யாராலையும் பாத்துக்க முடியாது … அதுனால..” என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போது அங்கு பவி காலேஜ் முடித்து விட்டு அவர்களை நோக்கி ” அத்தை” என்ற கூவலுடன் வந்தாள்.
அத்துடன் பாபு தனது பேச்சை நிறுத்தி கொண்டார்…
“அத்தை…!!!” என்று கூவிக்கொண்டே வந்தவள் புவனாவை அணைத்துக் கொண்டாள்.
புவனா அவளை அணைத்து ,,” எப்படி இருக்க பவி மா…??? ” தலையை கோதிய படியே கேட்டார்.
” நான் நல்லா இருக்கேன் அத்தை..நீங்க எப்படி இருக்கீங்க..??? அப்புறம் என்னோட  அத்தான் எப்படி இருக்காரு…???‌ ” என்று பதில் கேட்க..
” நானும் நல்லா இருக்கேன். உன் பொத்தானும் நல்லா இருக்கான் ” என்றார்..
” என்ன அத்தை இந்த சைட் திடிர் விசிட்..??? ” என்று கேள்வி எழுப்ப அவளே அதற்கான பதிலையும் இருக்கிற மூலையை வைத்து யோசிக்க தொடங்கினாள்.
“அட பெரிய மனுசி பதில கண்டு புடிச்சிட்டியா…?? என்று புவனா வினவ ,,
சிறிது நேரம் யோசிப்பது பாவனை செய்தவள் ,,”ம்ம்ம் அத்தை …கண்டு புடிச்சிட்டேன் …நீங்க என்ன ரொம்ப மிஸ் பண்ணிருப்பீங்க … அதுனால தான் என்ன பாக்க வந்துருக்கீங்க ” என்று சந்தோஷமாக சொல்ல
“எப்படி பவி மா இப்படி கரெக்டா அன்சர் சொல்ற சூப்பர் டா…” என்று கூறிவிட்டு மேலும் ” இப்போ போய் ஃபிரஷ் ஆகிட்டு வா ” என்று கூறி அவளது அறைக்கு அனுப்பி வைத்தார் புவனா.
” இப்போ சொல்லுங்க அண்ணா. நான் என்ன செய்யனும்னு..???” என்று புவனா கேட்க..
” நீ நம்ம கதிருக்கு பவியை கல்யாணம் வைக்கனும் மா ” என்றார் உறுதியாக.
இதனை கேட்ட புவனாவிற்கு மகிழ்ச்சி தாழ வில்லை.
” அண்ணா எனக்கும் இந்த ஆசை இருக்கு . அவுங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கனும்ன்னு . ரெண்டு பேருக்கும் புடிச்சிருந்தா கண்டிப்பா அவுங்களுக்கு திருமணம் பண்ணி வைக்கிறேன் அண்ணா ” என்று புன்னகையுடன் புவனா கூறினார்.
” சரி மா .அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சி கொடுப்பது உன்னோட பொருப்பு மா ” என்றார்.
” கண்டிப்பா அண்ணா…இது என்னோட கடமை அண்ணி இருந்திருந்தா எதெல்லாம் செஞ்சிருப்பாங்களோ ..,, அதெல்லாம் நான் செய்வேன் அண்ணா ” என்று வாக்களித்தார்.
அதன் பிறகு இரண்டு நாட்கள் அங்கு தங்கி விட்டு மீண்டும் சென்னை வந்து விட்டார் புவனா.
****
சிறிது நாட்களிலே அவர் இறந்த செய்தி வந்தது. அன்றே முடிவெடுத்து விட்டேன். இனி பவி என்னுடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்று..,, ஆனால் பவி படிப்பு முடிந்தவுடன் தான் வெளிநாடு செல்ல போகிறேன் என்று என்னிடம் வந்து சொல்லவும் …,, என்னால் ஒன்னும் செய்ய முடியல ‘சரின்னு’ சொல்லி  அவளை அனுப்பி வைத்தேன்.
இது தான் அன்று நடந்தது என்று புவனா அன்று அவர்களுக்குள் நடந்த நிகழ்வை கூறினாள்.
இதனை கேட்ட அனைவரும் எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் இருக்க ,, புவனாவின் பார்வை கதிரின் மேல் இருந்தது.
நான் உன்கிட்ட நேத்து நைட்டு ஒரு சத்தியம் வாங்கினேன்.அந்த சத்தியத்துக்கு இப்போ வேல வந்துருச்சு என்றார் கதிரை நோக்கிய படியே…
கதிருக்கு இப்படி ஒரு நிலைமை வரும் என்று அவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை . அவன் தன் அன்னை பாராமல் தலையை குனிந்த படியே நின்றிருந்தான்.
” கதிர் ” என்ற அழைப்பில் ,,கீழே குனிந்திருந்த தலையை நிமிர்த்தி பார்க்க ,,
” என்னோட அண்ணா இறக்குறதுக்கு முன்னாடி ,, என்கிட்ட அவர் சொன்ன வேண்டுதல்ல நீ தான் நிறைவேற்றி வைக்கனும் பா ” என்று கைகளை கூப்பி அவனிடம் வேண்டினார் புவனா.
அவன் எந்த ஒரு பதிலும் தராமல் இருக்க ,, “ப்ளிஸ் கதிர் இந்த அம்மாக்காக நீ என்னோட பவிய கல்யாணம் பண்ணிக்கோ டா ” என்று கெஞ்சினார்.
தன் அம்மாவின் கெஞ்சலை தாங்க முடியாத கதிர் ,,ஏதோ முடி வெடுத்தவனாய் ” நான் பவிய கல்யாணம் பண்ணிக்கிறேன் மா. நீங்க போய் என் கிட்ட கெஞ்சி கிட்டு ” என்றான்.
இதனை கேட்ட புவனாவிற்கு நிம்மதியாகவும் அதே நேரத்தில் சந்தோஷமாகவும் இருந்தது. தன் அண்ணனின் ஆசையை நிறைவேற்ற போற சந்தோஷம் அவருக்கு இருந்தது.
சிறிது நேரத்திலே அனைத்து ஏற்பாடுகளும் அபி செய்து முடிக்க ,,இருவர் கைகளிலும் அவுங்களுக்காக வாங்கி வந்த ஆடையை தர ,, இருவரும் அதை பெற்றுக்கொண்டு உடை மாற்ற சென்றனர்.
ஐயர் கதிரை அழைத்து வருமாறு கூற..,,அபி சென்று அவனை அழைத்து வந்து அமர வைத்தான்.
ஐயர் கூறிய மந்திரங்களை இயந்திரமாக கதிர் கூறிக்கொண்டு இருக்க ,,” பெண்ணை அழைத்து வாங்கே ” என்று கூற புவனா மற்றும் சுசிலா இருவரும் சேர்ந்து மணப்பெண்ணை அழைத்து வந்தனர்.
பொடிய நடையுடன் முகத்தில் எந்த ஒரு ஒப்பனையும் இல்லாமலே வானுலக தேவதை போல் கதிரை நோக்கி வந்தாள் பவி.
பவி வரவும் ,இருவரும் சேர்ந்து ஐயர் கூறிய ‌மந்திரங்களை கூறினர்.
ஐயர்” கெட்டி மேளம் கெட்டி மேளம்” என்று சொல்ல…
பொன் போன்ற அந்த மஞ்சள் நிற தாலியை பவியின் கழுத்தில் கட்டி அவளை தன்னவள் ஆகிக்கொண்டான் கதிர்.
மனதிலும் ” இனி பவி என்னுடைய பொறுப்பு. அவளுக்கு இனி எல்லாம் நானாக இருப்பேன் ‌” என்று சத்தியமும் செய்துக் கொண்டான்.
பிறகு அனைவரும் கிளம்பி மண்டபத்திற்கு வந்து சேர்ந்தனர்.
” பவி ” என்ற அழைப்பில் கனவுலகில் இருந்து மீண்டு வந்தவள்..,,குரல் வந்த திசையை நோக்கினாள்.
” நீ இன்னும் தூங்காம என்று பண்ற..??? அதுவும் பால்கனில…???‌ ” என்று கதிர் கேட்க அவனை பார்த்து கொண்டே இருந்தவள் பதில் எதுவும் கூறாமல் அமைதியாக நின்றிருந்தாள்.
” உன்கிட்ட தான கேட்கிறேன் பவி.. வாய தொரந்து பதில் சொல்லு ..??? ” என்று கதிர் அதட்ட
” இல்ல அத்தான் தூக்கம் வரல அதான்  சும்மா நிலாவ பாத்துட்டு இருந்தேன் ” என்றாள் பாவமாக.
” சரி போதும் நீ நிலாவ பாத்துட்டு இருந்தது. வா வந்து தூங்கு ” என்க
” சரி அத்தான்” என்று கூறிவிட்டு படுக்கையை நோக்கி சென்றாள் பவி .
பவியின் விழிகளில் கண்ணீர் தேங்கி இருப்பதை கண்ட கதிர் ,,” பவி ” என்று அழைக்க …
அவள் கேள்வியாய் கதிரை நோக்க ,,” நீ எப்போதும் நைட் ஆனா எப்போதும் மாமா மடில தான படுத்து தூங்குவ .இனி நைட்ல என்னோட மடில படுத்துக்கலாம் ‌” என்றான்.
ஓடிச்சென்று அணைத்துக் கொண்ட பவி ,,” ரொம்ப ரொம்ப நன்றி அத்தான் எல்லாத்துக்கும் ” என்று கண்ணீர் சிந்திக் கொண்டே கூற …
” எதுக்கு இந்த நன்றி எல்லாம்… நான் எப்போ உனக்கு மூன்றாம் நபரா மாறினேன்..???” என்று பொய் கோபத்துடன் கேட்க
” இல்ல இல்ல அத்தான் . அப்படியெல்லாம் இல்லை. எனக்கு சொல்லனும்னு தோனுச்சு சொன்னேன் ‌.‌..,,அவ்ளோ தான் ” என்றாள் பவி வேகமாக.
” இங்க பாரு பவி… நான் எப்போதும் உன்னோட அத்தான் தான். நான் செஞ்சத நன்றிகடன் வட்டிகடன்னு சொல்லிட்டு இருக்காத. அதுவும் இல்லாமல் இந்த வாழ்க்கைய ஏத்துக்க எனக்கு கொஞ்சம் டைம் வேணும். அதுவரைக்கும் கொஞ்சம் எனக்காக வெயிட் பண்ணு மா” என்றான் பவியின் தலையை கோதிய படியே….
அந்த அணைப்பில் இருந்து வெளி வந்த பவி..,,” சரி அத்தான் ” என்று கூறிவிட்டு ” நான் கொஞ்ச நேரம் உங்க மடில படுத்துக்கவா ” என்று கெஞ்ச…
” அட லூசு இதுக்கு போய் யாராவது கெஞ்சுவாங்களா  ” என்று அவளை தன் மடியில் படுக்க வைத்துக்கொண்டான்.
பவி உறங்கும் வரை காத்திருந்தவன் அவள் உறங்கிய பின்பு.. அவளை ஒழுங்காக படுக்க வைத்துவிட்டு அவனும் அவள் பக்கத்திலே படுத்துக்கொண்டான்.
அடுத்தநாள் காலை அழகாக விடிய..,,
மீனுவும் செல்வாவும் சீக்கிரமே எழுந்து கிளம்பி கீழே வந்தனர்..
இரவு தூங்க வெகு நேரம் ஆனதால் பவியும் கதிரும் எழும்ப நேரம் எடுத்தது.
முதலில் எழுந்த கதிர்..,,தன்  மேல் ஏதோ பாரமாக இருப்பது போல் உணர‌ ,,அது என்னவாக இருக்கும் என்று நிமிர்ந்து பார்த்த அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.
தன் மீது காலையும் கையையும் போட்டு அழகாக குழந்தை போல் உறங்கி கொண்டு இருந்தாள் பவித்ரா.
அவளை எழுப்ப மனம் வராமல் சிறிது நேரம் அப்படியே இருக்க..,,அவள் எழுந்திருப்பது தெரிந்தவுடன் கண்களை இருக்க மூடிக்கொண்டான்.
பவி எழும் போது தான் கதிரின் மீது தன் கை கால்கள் இருப்பதை உணர வேகமாக எழுந்து கொண்டவள் ஓட்டமும் நடையுமாக  குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.
பவி வெளியே வந்தவுடன் ,, கதிர் குளிக்க சென்று விட்டான்.
பின்னர் இருவரும் கிளம்பி கீழே சென்றனர்….
காலை உணவை அனைவரும் சேர்ந்து சாப்பிட ,,நல்ல நேரம் வரவும் சுசிலா பவியையும் மீனுவையும் அழைத்து ” ரெண்டு பேரும் நல்லா சாமி கும்பிட்டு கோங்க டா. அதுக்கப்புறம் இந்த விளக்க ஏத்துங்க டா ” என்க …
இருவரும் தலை ஆட்டி விட்டு ‌….சாமி கும்பிட்ட பிறகு விளக்கேற்றினர்.
நல்ல நேரம் முடியும் முன்பே இரு ஜோடிகளையும் ராஜன் குடிம்பத்தினர் கண்ணீரோடு வழி அனுப்பி வைத்தனர்.
இனி இந்த இரு ஜோடிகளின் வாழ்விலும் வசந்தம் வரும் என்று வேண்டுவோம் … ஆனால் விதியின் விளையாட்டில் யாரும் தப்பிக்க இயலுமா…??? என்று பொருத்து இருந்து பார்ப்போம்.

Advertisement