Advertisement

நினைவினில் நிறைந்தவளே
அத்தியாயம் 19
அர்ஜுன் அபியை காண்பதற்காக மாடிக்கு வந்திருந்தான்.
சிறிது நேரம் காற்று வாங்கலாம் என்று அங்கு சுபாவும் மேலே மாடிக்கு வர,,, அர்ஜுன் அந்த நிலவை கண்டு ரசித்து கொண்டு இருப்பதை பார்த்து மெய் மறந்து நின்றாள்.
“எவ்ளோ நேரம் தான் டி ..,,என்ன இப்படியே சைட் அடிச்சிட்டு இருப்ப ..,,இந்த மாமாக்கு வெக்கமா இருக்குல… “என்றான் நிலவை பார்த்த படியே..
“ஐய ஆச தான் உங்களுக்கு… எங்களுக்கு வேற வேலை இல்ல பாரு உங்கள சைட் அடிக்கிறது தான் எனக்கு வேலையா..போங்க போங்க அந்த சைடு” என்றாள் சிரித்துக்கொண்டே.
“உண்மைய ஒத்துகிட்டா தான் என்ன..??? நீ என்ன சைட் அடிச்சத தான் நானே பாத்தேனே…??? என்னோட செல்லம் எவ்வளவு அப்பட்டமா சைட் அடிச்சான்னு தான் எனக்கு தெரியுமே…” என்றான் மெல்லிய புன்னகையோடு
“அப்போ நீங்க என்ன தான் பாத்துட்டு இருந்தீங்களா…???” என்று தவளை தன் வாயாலே கெடும் என்பது அர்ஜுனே அவன் வாயால் ஒப்பித்து விட்டான்.
“உன்ன பாக்காம வேற யார பாக்க சொல்ற பொண்டாட்டி..??? எனக்கு வேற யாரையும் பாக்கவே தோணல டி “என்று காதல் வசனம் பேச ,, 
அர்ஜுனின் பொண்டாட்டி என்ற வார்த்தையில் சுபாவின் கண்ணங்கள் இரண்டும் வெட்கத்தில் சிவக்க தொடங்க அதை மிகவும் கஷ்டப்பட்டு அடக்கி அவனை பார்த்து முறைத்து வைத்தாள்.
“அடியே…!!! நான் சொன்னதுக்கு நீ இப்போ வெக்க படனும் டி. ஆனா நீ இப்படி என்ன பார்த்து முறைக்கிற…???” 
” அப்பறம் உங்கள கொஞ்ச சொல்றீங்களா…??? “
“அப்படியே நீ என்ன கொஞ்சிட்டாலும்” என்று முணுமுணுக்க
” என்ன அங்க முணுமுணுப்பு..???”
” அதெல்லாம் ஒன்னும் இல்லையே” என்று கையை விரித்து காட்ட ..,,
“அது ‘என்றாள் சுபா எச்சரிப்பது போல்
“நீங்க என்ன பார்த்து பொண்டாட்டின்னு சொல்லுவீங்க நான் அதுக்கு வெக்க படனுமோ .சீ பாஸ் ஐம் ஸ்டீல் சிங்கள். நமக்கு இன்னும் கல்யாணம் ஆகல .அது ஞாபகத்துல வச்சிக்கோங்க” என்றாள் நக்கலாக.
“பெரியவுங்க யாருக்காச்சும் ஞாபகம் இருக்கா பாரு..?? நாம தான் டி சீனியர் . நமக்கு தான் முதல நிச்சயம் பண்ணாங்க .ஆனா பாரு கல்யாணமே வேணானு சொன்ன உன் அண்ணனுக்கு, அவனோட ஃபிரண்ட்க்குலாம் கல்யாணம் ஆயிடுச்சி . ஆனா நம்மள பாரு இன்னும் ஒழுங்கா லவ் கூட பண்ண முடியாம இருக்கோம்” என்றான் சுபாவை கை வலைக்குள் வைத்த படி. 
“ஒழுங்கு மரியாதையா என்ன விடுங்க அர்ஜுன்.நான் கீழ போறேன் “என்று அர்ஜுனை தள்ள முயற்சி செய்ய அது முடியாமல் போனது அவனின் இறுகிய பிடியால்.
” ஏய்..!! கொஞ்ச நேரம் இப்படியே இரு டி ,,ஆடிக்கிட்டே இருக்காதே” என்று கூறிவிட்டு நிலவை ரசிக்க தொடங்கினான்.
“அய்யோ அர்ஜுன்…!!!அம்மா வராங்க…!!! என்ன விடுங்க… “என்று பதற “அத்தை எங்கே” என்று பதற்றத்தோடு தேட 
அதனை கொண்டு அவனிடமிருந்து விலகியவள் ,” அம்மா கீழ பேசிட்டு இருப்பாங்க அர்ஜுன் “என்றவுடன் சிட்டாக பறந்து விட்டாள்.
“அடி கள்ளி‌..!!! “என்று மனதில் நினைத்துக்கொண்டு இருந்த நேரம்,,, “எங்களோடு பேச கொஞ்சம் டைம் ஒதுக்குங்க பாஸ்.இருபத்து நாலு மணி நேரமும் லவ்ஸ் பண்ணிட்டே இருக்காதீங்க பா… என்ன மாதிரி சின்ன பையனும் உங்களோட தான் இருக்கான் ஞாபகம் வச்சிக்கோங்க” என்று அர்ஜுன் பின்னால் இருந்து ஆதங்கத்தோடு ஒரு குரல் வந்தது.
திரும்பி பார்த்த அர்ஜுனிடம் ,, ‘இதெல்லாம் ஓவ்வரா தெரியல…???” என்ற அபிபை பார்த்து “தெரியலை” என்று தோல்களை குழுக்க அபிக்கு இரண்டு காதுகளிலும் புகை வராத குறைதான்.
“சரி சொல்லுங்க அபி…!!! எதுக்கு என்ன மாடிக்கு வர சொன்னீங்க..???என் கிட்ட எதோ பேசனும்ன்னு வேற சொன்னீங்க..??என்ன விஷயம் அபி” என்று கேள்வி கனைகளை அர்ஜுன் அடுக்கவும் ,
” ஒரு நிமிஷம் இரு அர்ஜுன் நான் கொஞ்சம் மூச்சு விட்டுக்கிறேன்” என்றவனை பார்த்து அர்ஜுன் முழிக்க “நீ இவ்வளோ கேள்வி கேட்டா நான் எப்படி தான் அன்சர் பண்றது சொல்லு” என்று பாவமாக முக பாவத்துடன் சொல்ல 
“சரி.. சரி …என்ன விஷயம்ன்னு சொல்லு அபி “என்று கூறிவிட்டு நிலவை பார்க்க தொடங்கினான்.
“நீ இரண்டு நாளா வீட்டுக்கு வரலன்னு கேள்வி பட்டேன்..?? அப்படி எங்க போயிருந்த அர்ஜுன்..உனக்கு எதாவது பிரச்சினையா..??” என்றவனிடம் “இது என்ன கேள்வி அபி முட்டாள்தனமா இருக்கு.எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல. கொஞ்சம் அர்போர்ட்ல ஒர்க் இருந்துச்சி .அதான் என்னால வீட்டுக்கு வர முடியல “என்று மலுப்ப முயன்றான்.
“சரி அர்ஜுன் உனக்கு வேலை இருந்ததாகவே இருக்கட்டுமே. ஆனா நீ ரெண்டு நாளா வேலைக்கு போலன்னு நான் கேள்வி பட்டேன். இதுக்கு பதில் சொல்லு இப்போ ஏன் நீ வேலைக்கு போலன்னு…???” என்று கேட்க அர்ஜுனோ என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நிலவையே வெறித்து கொண்டு இருந்தான்.
“ஏன் அர்ஜுன் பொய் சொல்ற…??? இந்த இரண்டு நாளா நீ வேலைக்கும் போல..??அதே சமயம் நீ வீட்டுக்கும் வரலன்னு சுபா சொன்னா..அப்போ நீ எங்க தான் போயிருந்த..???உனக்கு என்ன பிரச்சினை இருந்தாலும் சொல்லு அர்ஜுன்..நீ என்ன ஒரு நண்பனா நினைச்சா உன்னோட பிரச்சனையை என்கிட்ட சொல்லு.. என்னால முடிஞ்ச உதவியை நான் உனக்கு செய்றேன் “என்றான் அபி.
“உன்கிட்ட சொல்றதுனால எந்த பிரச்சனையும் இல்ல..ஆனா எனக்கே அது என்ன பிரச்சினைன்னு தெரில‌. ஒரு டு டேஸ் முன்னாடி என்ன கிட்னாப் பண்ணிட்டாங்க. அவுங்க எதுக்கு என்ன கடத்துனாங்கன்னு கூட எனக்கு தெரியல “என்றான்.
‘என்ன சொல்ற அர்ஜுன் கிட்னாப் பண்ணிடாங்கனா..??? “என்று அதிர்வுடன் கேட்ட அபியை பார்த்து ஆமாம் என்று தலையை ஆட்டினான். 
“என்ன நடந்துச்சின்னு சொல்லு அர்ஜுன்..???” என்று கூறிவிட்டு அர்ஜுனின் பதிலுக்காக காத்திருக்க…,,
“நிச்சயம் அன்னைக்கு செல்வா ரொம்ப மனச‌ ஒடஞ்சி பொய்ட்டான். என்னால அவன அப்படி ஒரு நிலமைல பாக்க முடியல. அவன் கிட்ட இந்த கல்யாணத்த நிறுத்த சொல்லி எவ்வளவோ கேட்டு பாத்துட்டேன்.ஆனா அவன் அதுக்கு ஒத்துக்கவே இல்ல. அப்பறம் அவன அங்க இருந்து வீட்டுக்கு கூட்டிட்டு பொய்ட்டேன்.அவன் தூக்கத்திலையும் மீனுவோட பெயர மட்டும் தான் சொல்லிட்டே இருந்தான்.இனி இவன இப்படியே விட்டா எங்க பைதியம் ஆய்டுவானோன்னு நான் பயந்துட்டேன். அதுனால தான் நம்மனால மீனு கிட்ட தான் எந்த உண்மையும் சொல்ல முடியாது.ஆனா கதிர் கிட்ட சொல்லாம்ல ,, அவன் புரிஞ்சிப்பான்னு எனக்கு நம்பிக்கை இருந்தது.அதுனால தான் அன்னைக்கு நைட்டு ஒரு ஏழு மணி போல கதிர பாக்க கிளம்பினேன்.
நான் பொய்ட்டு இருந்த வழில ஒரு பாட்டி மயங்கி கிடந்தாங்க .அவுங்கள அப்படியே விட எனக்கு மனசு வரல . அதுனால பைக்க நிறுத்திவிட்டு அந்த பாட்டிய பாக்க போனேன். அப்போ தான் யாரோ என் மண்டைல பலமா அடிச்சுடாங்க .என்னோட பலத்தை எல்லாம் கொண்டு வந்து எழுந்திரிக்க ட்ரை பண்ணப்போ திரும்பவும் என்ன அடிக்கவும் …,, நான் அங்கேயே மயங்கி விழுந்துட்டேன். அதுக்கப்புறம் கண் முழிச்சு பாக்கும்போது ஒரு இருட்டு அறையில என்ன கட்டி வச்சிருந்தாங்க. அவுங்களுக்கு என்கிட்ட இருந்து என்ன வேணும்ன்னு கேட்டேன்.”
அதுக்கு அவுங்க ” எங்களுக்கு உன்கிட்ட இருந்து எதுவுமே வேணாம். நீ இங்க ஒரு நாளைக்கு இங்க இருந்தா போதும். அப்பறம் நாங்களே உன்ன வெளிய விட்டுருவோம் ” சொன்னாங்க.
 “அங்க இருந்து தப்பிக்க முயற்சி பண்ணேன்..,,பட் என்னால அது சுத்தமா முடியல அப்பறம் அவுங்களே இன்னைக்கு மார்னிங் என்ன கல்யாண மண்டபத்துக்கு பக்கத்துல தல்லி விட்டுட்டு பொய்டாங்க.அந்த நேரம் எனக்கு செல்வாவ பத்தின கவல தான் இருந்தது.அதுனால என்ன கடத்துடனவுங்க யாருன்னு தெரிஞ்சிக்க விரும்பாமல் வேகமா மண்டபத்துக்கு வந்துட்டேன்” என்று அர்ஜுன் அந்த இரண்டு நாளில் நடந்ததை கூற அபி யோசனையில் ஆழ்ந்தான்.
“சரி அர்ஜுன் நாம இத பத்தி அப்பறமா பேசலாம் .இப்போ வா நாம தூங்க போகலாம்” என்று கூறி முன் செல்ல அர்ஜுனும் அவன் பின்னே சென்றான்.
மீனு மனதில் பல குழப்பத்துடனே அந்த அறைக்குள் நுழைந்தாள்.‌அவள் கண்ணை சுற்றியும் முற்றியது அலைய விட அவன் பால்கனியில் நின்று கொண்டிருப்பது தெரிய வர ,,அவள் தன் கையில் இருந்த பால் செம்பை அங்கே டேபிலில் வைத்து விட்டு செல்வாவை நோக்கி சென்றாள்.
அவன் பக்கத்தில் சென்று நின்று அந்த நிலவை பார்க்க தொடங்கினாள். மீனு வந்தது கூட தெரியாமல் நின்ற செல்வாவை அவளது பேச்சின் சத்தது நடப்பவைக்கு அழைத்து வரப்பட்டது.
“இந்த நிலா எவ்வளவு அழகா இருக்குல.. இது மட்டும் எல்லாருக்கும் வெளிச்ச கொடுத்துட்டே இருக்குல” என்றாள் .ஆமாம் என்பது போல் தலையை மட்டுமே ஆட்டினான் செல்வா.
“உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா செல்வா..”என்க 
அவன் என்னவென்று அவளை நோக்க “எனக்கு எந்த கஷ்டம் வந்தாலும் நான் இந்த இடத்துல வந்து தான் நிற்ப்பேன். ஏதோ அது எனக்கு ஒரு மன நிம்மதிய கொடுக்கும். ஆனா இன்னைக்கு இங்க நின்னும் எனக்கு பல கேள்விகளுக்கான விடை தெரியாம நிக்கிறேன். ஏதோ நடு காட்ல நிக்கிற மாதிரி இருக்கு ” என்று அந்த நிலவை பார்த்தே கூறி கண்களில் வரும் கண்ணீரை கூட துடைக்க வழி இல்லாமல் நின்றாள்.
அவளது கேவல் சத்தம் கேட்கவே அவளை பார்த்த செல்வா…அவள் அழுது கொண்டிருப்பது தெரிய வர,அவளை தன்னுள் புதைத்துக் கொண்டான் .
மீனுவும் செவ்வாவை அணைத்துக்கொண்டு அழுக ஆரம்பித்தாள்.
“அழுகாத மீனு மா” என்று அவள் தலையை கோதியவாறே கூற…
“என்னால முடியல செல்வா.என்னோட லைஃப்ல என்ன நடக்குதுன்னே தெரியல. நேத்து வரைக்கும் வேற ஒரு வாழ்க்கை வாழ போறேன்னு இருக்க,,இப்போ உங்களுக்கு மனைவியா இருக்கேன். தீடிருன்னு எப்படி மாப்பிள்ளை மாருச்சி . அதுவும் இல்லாமல் அவளுக்கு எப்படி கதிர் கூட கல்யாணம் ஆச்சி.என்னக்காக அவ அவளோட வாழ்க்கைய அர்பணிச்சிட்டா” என்று கூறி தேம்பி தேம்பி அழுக அவளை சமாதானம் செய்ய வழி தெரியாமல் நின்றான் செல்வா.
“இங்க பாரு மீனு மா…இது எல்லாம் விதியோட விளையாட்டு டா. யார்க்கு யாரு கூட இருக்கனும்ன்னு கடவுள் நாம பிறக்கும்போதே முடிவு பண்ணிட்டாரு. அவுங்க அவுங்களோட சேரு வாங்க. இதுல நீ எதுவும் செய்யல மா.அதே மாதிரி அவளுக்கு புடிச்சு போய் தான் அவ இந்த கல்யாணத்த செஞ்சிக்கிட்டா. உன்னால தான் அவ இந்த கல்யாணம் பண்ணிக் கிட்டான்னு நினைச்சி ஃபீல் பண்ணாத சரியா..” என்று அவளை தன்னிடம் இருந்து பிரித்து அவள் கண்களை பார்த்து கூறினான்.
மீனு அவன் கண்களை பார்த்துக்கொண்டே சரி என்று தலையை ஆட்டினாள். “சரி வா தூங்க போலாம்” என்று அவளை அழைத்துச் சென்றான்.
“போ போய் உடை மாத்திட்டு வந்து தூங்கு டா “என்று கூற அவளும் வாஷ் ரும் சென்று உடை மாற்றிவிட்டு வந்தாள். அவள் வந்த பிறகு அவனும் உடை மாற்ற குளியல் அறைக்குள் புகுந்து கொண்டான்.
திரும்பி வந்து பார்க்கும் போது ,,,குழந்தை போல் உறங்கிக் கொண்டிருக்கும் மீனுவை பார்த்து “நம்ம கல்யாணம் எப்படியெல்லாம் நடக்கனும்னு நீ ஆச பட்ட .ஆனா உனக்கு என்கூட திருமணம் ஆச்சின்னே நான் தாலி கட்டனதுக்கப்புறம் தெரிய வந்தது. நான் உன்ன விட்டு பிரிஞ்சி போகனும்னு தான் விரும்பினேன். ஆனா நம்ம விதி நம்மள சேத்து வச்சிருச்சி .ஆனா என்னால உன்கூட எவ்ளோ நாளைக்கு இருக்க முடியும்ன்னு தெரியல . அதுவரைக்கும் உன்ன சந்தோஷமா பாத்துக்குவேன். நீ எந்த ஒரு கவலையும் இல்லாமல் சிரிச்சிட்டு இருக்கனும் டா.அது தான் எனக்கு வேணும்” என்று நினைத்துக்கொண்டு அவளது நெற்றியில் முத்தம் ஒன்றை கொடுத்து விட்டு அவளுக்கு ஒதுக்குபுறமாக படுத்துக்கொண்டான்.
######
இவர்கள் இப்படி இருக்க ,,அங்கே கதிரும் பவியும் ஒருவரது ஒருவர் முகத்தை கூட பார்க்க தயங்கி கொண்டு இருந்தனர். 
இருவரும் ஒரே சமயத்தில் திரும்பி “சாரி” என்று சொல்ல ,,எதுக்கு என்ற கேள்வி.. இருவருமே எழுப்பினர் .
“அத்தான் நீயும் நானும் ஒரே சமையத்துல சாரி சொல்லிட்டோம் “என்க
 அதற்கு அவன் ஆமாம் என்பது போல் தலையசைக்க ,, “அப்போ நீ எனக்கு சாக்கி கொடு ‘என்று கையை அவன் முன் நீட்ட …கதிர் பேந்த பேந்த முழித்து கொண்டு இருந்தான்.
” எதுக்கு அத்து அப்படி பாக்குற.. நான் உன்கிட்ட சாக்லேட் தான கேட்டேன்” என்று குழந்தையை போல் கேட்க கதிருக்கு சிரிப்பு தான் வந்தது.
“இப்போ எதுக்கு உனக்கு சாக்லேட்..??” என்க ,,’என்ன அத்தான் இப்படி கேட்டுட்ட நாம ஒரே நேரத்துல சாரி சொல்லிருக்கோம். நான் தான் உனக்கு இப்போ சேம் பிஞ்ச் அடிச்சேன்னே அப்போ நீ எனக்கு சாக்லேட் கொடுக்கனும்ல” என்று சிறு குழந்தைகள் போல் பேசுபளிடம் அவன் மனதில் உள்ளதை அவன் எப்படி கூறுவான்.
“சரி நாளைக்கு வாங்கி தரேன்.இப்போ போய் தூங்கு” என்க 
“கண்டிப்பா வாங்க தருவ தான அத்தான் ,என்னால நம்ப முடியாது முதல எனக்கு சத்தியம் பண்ணி கொடு அப்ப தான் துங்க போவேன்” என்று அடம்பிடிக்க ,, கதிருக்கு தன் பழைய பவி கிடைத்து விட்ட சந்தோஷத்தில் “சத்தியமா வாங்கி தரேன் வாண்டு நீ போய் தூங்கு” என்றான். 
“சரி நான் போய் தூங்குறேன் Good night* என்று கூறி பறக்கும் முத்தத்தை பறக்க விட்டுட்டு தூங்க சென்றுவிட்டாள்.
சிறிது நேரம் கழித்து கதிரும் அவளுடன் சேர்ந்து உறங்கி போனான்.
********
“சொல்லுங்க அண்ணி…!!!நம்ம மீனுக்கு என்ன பிரச்சினை..? ஜோசியர் அப்படி என்ன உங்க கிட்ட சொன்னாரு..?” என்று லதா கேள்விகளை அடுக்க பதில் பேச முடியாமல் நின்றனர் ராஜன் மற்றும் சுசிலா இருவரும்.
“ஏன் ரெண்டு பேரும் அமைதியா இருக்கீங்க…?? “என்க 
“அண்ணி என்னால இப்போதைக்கு சில உண்மைகள உங்க கிட்ட சொல்ல முடியாது.ஆனா அது உங்களுக்கு சீக்கிரமா தெரிய வரும்” என்று சுசிலா பீடிகை போட்டார்.
“இனி நீங்க தான் மீனுவ பாத்துக்கணும். அவளுக்கு உயிர் பலி இருக்கு அண்ணி. அதுவும் அவளுக்கு சொந்தங்களால தான் உயிர் பலி வரும். ஜோசியர் சொன்னது என்னன்னா ” சொந்தத்துக்குல கல்யாணம் பண்ணி வைக்க வேண்டாம். அப்படி நீங்க சொந்துத்துல பண்ணி வச்சிங்கன்னா ஒரு உயிர் பலி போகும். உங்க பொண்ணுக்கு காளி அம்மன்னோட ராசி இருக்கு மா. அவுங்க கண்ணுக்கு முன்னாடி தப்பு நடந்தா அத அவுங்க கண்டிப்பா தண்டிக்காமல் இருக்க மாட்டாங்க. உங்க பொண்ணுக்காவே ஒரு உயிர் தன்னோட உயிரை விடாம புடிச்சிட்டு இருக்கு.அந்த உயிர் கிட்ட போகுறப்ப உங்க பொண்ணு பல பிரச்சனைகளை சந்திப்பாங்க. இதை எல்லாத்தையும் அவுங்க கடந்துட்டாங்ன்னா அவுங்க உயிர் தப்பிச்சது. இல்லையேல் மத்ததெல்லாம் அந்த ஆத்தா தான் பாத்துக்கணும் மா.” என்று அவர் கூறிய அனைத்தையும் சுசிலா லதாவிடம் கூற 
அதற்கு லதா ” இனி என்னோட மருமகளுக்கு எந்த ஒரு பிரச்சனையும் வராது அண்ணி.நாம சொந்தங்களா இருக்கலாம்.ஆனா நாம ஒன்னும் இரத்த சொந்தம் கிடையாதே அண்ணி. அப்பறம் ஏன் கவல படுறீங்க ” என்க “நான் தான் உங்க கிட்ட மொதலையே சொன்னேன்னே சில உண்மைகளை இப்போ உங்க கிட்ட சொல்ல முடியாதுன்னு .அதுல தான் நீங்க கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்கும் அண்ணி” ” என்றார் சுசிலா.
“சரிங்க அண்ணி…நீங்க ஒன்னும் கவல படாதீங்க.மீனுக்கு எந்த ஒரு பிரச்சனையும் வராம பாத்துக்கலாம். நீங்க எதபத்தியும் யோசிக்காம தூங்குங்க அண்ணி . அண்ணா அண்ணிய பாத்துக்கோங்க” என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு சென்றார்.
இதனை அனைத்தையும் அஞ்சலி ஒழிந்து நின்று கேட்டு கொண்டு இருந்தாள்.பின்பு அவளுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்று படுத்துக்கொண்டாள்.
********
“இப்பவாவது சொல்லுங்க அம்மா …,,மாமாவ கொலை பண்ணாங்கன்னு சொன்னது உண்மையா…? “என்க வளர்மொழியோ முகிலையே பார்த்து கொண்டு இருந்தாள்.
“அம்மா சொல்லுங்க…”என்று முகில் வளர்மொழியின் கையை பிடித்துக் கொண்டு கெஞ்ச…
வளர்மொழிக்கு அழுகை வர..,,அதை அடக்கிக்கொண்டு ஆதி கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தயாரானார்.
“ஆமாம் டா.என்னோட அண்ணா குடும்பத்தை கொலை பண்ணது உண்மை தான்.அது யாருன்னு தெரிஞ்சும் என்னால ஒன்னும் பண்ண முடியல” என்று வேதனையுடன் கூற…
“என்னன்னு சொல்ல சொல்ற.. பண்ணத்தாசைக்காக என்னோட அண்ணன் குடும்பத்த அழிச்சிடாங்க டா. எனக்குன்னு இருந்த சொந்தங்கள் அத்தனையும் என்ன விட்டு பொயிடுச்சி ஆதி” என்று கூறி அழுகும் அன்னையை பார்த்து ,
“அம்மா இதெல்லாம் யார் பண்ணதுன்னு சொல்லுங்க நான் அவுங்களுக்கு தண்டனை வாங்கி தரேன் “என்று கோபத்தை அடக்கிக் கொண்டு கேட்க..
“என்னால அது யாருன்னு சொல்ல முடியாது டா …ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன்..,, நல்லா கேட்குக்கோங்க ரெண்டு பேரும்…”
“நம்மல சுத்தி இருக்கிறவுங்க எல்லாரும் நல்லவுங்க இல்ல…இங்க எல்லாரு முகமூடி போட்டுட்டு தான் சுத்திட்டு இருக்காங்க . உள்ளுக்குள்ள கொடிய விஷத்தை வச்சிக்கிட்டு தான் நல்லவுங்க மாதிரி நடிக்கிறாங்க டா.நம்ம கண்ணு முன்னாடியே தான் எல்லாமே நடக்குது ‌.அத நீங்க ரெண்டு பேரும் தான் கண்டு பிடிக்கணும்” என்றார்.
“சரிங்க மா நாங்க கண்டிப்பா..மாமா குடும்பத்த அழிச்சவுங்களுக்கு நான் தண்டனை வாங்கி தராம விட மாட்டேன்.அவுங்களுக்கு என்னோட கையால தான் மரணம்” என்றான் ஆதி திட்டவட்டமாக.
“சரி டா.நீங்க ரெண்டு பேரும் வந்ததுல இருந்து எதையோ தேடிட்டு இருந்தீங்களே அது கிடச்சிடுச்சா” என்று கேட்க ,,
“அய்யோ இன்னும் இல்ல மா” என்று கூறிவிட்டு இருவரும் திரும்பவும் தேடுதல் வேட்டையை தொடங்கினர்.
காரை எடுத்துச் சென்ற சக்கரபாணி மற்றும் சாந்தாயி இருவரும் வேகமாக சாமியார் இருக்கும் இடத்திற்கு சென்றனர்.
******
“சாமி…. “என்று இருவரும் அந்த சாமியின் காலில் விழுந்து வணங்கி எழுந்தவுடன் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்தனர்.
“என்ன சக்கரபாணி ஒரு பிரச்சனை வந்தா தான் சாமியோட ஞாபகம் வரும்மோ” என்க 
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல சாமி. ஆனா இப்போ ஒரு பெரிய பிரச்சினை வந்துருக்கு சாமி .அதுக்கு நீங்க தான் ஒரு நல்ல பதில்லா எனக்கு சொல்லனும்” என்று பயத்தினுள் சொல்ல …
“எனக்கு எல்லா விஷயமும் தெரியும் சக்கரபாணி…உன்ன கொல்றதுக்காக அவ வரப் போறது என்னமோ உண்மை தான் “என்றார் அந்த சாமி…
“எங்க உயிர நீங்க தான் காப்பாத்தணும் சாமி” என்று கைகூப்பிட….
சாமி தனது சோலியை எடுத்து வீசிவிட்டு கண்களை மூடி கடவுளை வேண்ட…அவர் கண்ணுக்கு இப்பொழுது உயிரோட இருக்கும் மீனு மிதுனாவாக அந்த சாமியின் கண் முன்னாடி தோன்றி மறைந்தாள்….
அவர் கூறும் பதிலுக்காக காத்திருந்தனர் சக்கரபாணியும் சாந்தாயும்……

Advertisement