Advertisement

நினைவினில் நிறைந்தவளே
அத்தியாயம் 16
பார்லர் சென்ற மூவரும் சிறிது ஃபேசியில் செய்து விட்டு காஃபி ஷாப்பிற்கு சென்றனர்.
அபியும் செல்வாவும் மண்டபம் சென்று எல்லாம் சரிவர இருக்கிறதா என்று பார்க்க சென்று இருந்தனர்.
காஃபி ஷாப்பிற்கு வந்த மூவரும் கேப்பசீன்னு ஆடர் செய்து அரட்டை அடித்துக்கொண்டே குடித்தனர்.
ஆதி வேகமாக தன் வண்டியை எடுத்துக்கொண்டு முகிலயை காண மருத்துவமனைக்கு சென்றான்.
மருத்துவமனைக்கு சென்ற ஆதி முகில் இருக்கும் அறைக்கு வேக நடையெடுத்தான்.
“டேய் ஆதி…!!! இந்த நேரத்துல இங்க என்ன பன்ற..??? இது டூயுட்டி டைம் தான..?? எதாவது ஒர்க் விஷயமா வந்துருக்கியா டா…??? “எழுப்பிய கேள்வி கனைகளை ஓரம் கட்டி வைத்த ஆதி ,, “உன்கிட்ட கொஞ்சம் முக்கியமான விஷயம் பேசணும் வா டா” என்க ,,
“என்ன விஷயம் டா..???” என்று முகில் கேட்க ,,
“இங்க வேணாம் இது நீ வேலை பார்க்கும் இடம் . யாராவது வந்து நம்மை டிஸ்டர்ப் செய்வாங்க” என்று கூறி அவனை பக்கத்தில் இருந்த காஃபி ஷாப்பிற்கு அழைத்து சென்றான் ஆதி.
அவர்கள் உள்ளே செல்லவும் மீனு சிந்து மற்றும் பவி வெளியே வரவும் சரியாக இருந்தது.
வெயிட்டர் கைகளில் காஃபி கொண்டு வர,,அதை இடித்து விட கூடாது என்று ஒதுங்கி செல்ல நினைத்த மீனு.யாரோ ஒருவர் மீது மோதி கீழே விழுந்தவள் ,, வலியில் ” அம்மா ” என்று கத்த அந்த சத்தத்தை கேட்டு சிந்து மற்றும் பவி இருவரும் திரும்பி பார்த்து சிரிக்க தொடங்கினர்.
ஆதி அங்கே நடப்பது தெரியாமல் சிலையென நின்றிருந்தான். முகில் வேகமாக மீனுவிற்கு தன் கரத்தினை நீட்ட ,,அவள் அவனை பார்த்து முழித்து கொண்டு இருந்தாள்.
“ஆபத்துக்கு ஒன்னும் தப்பில்லைங்க ,,என் பிடிச்சு எந்திரிங்க முதல ” என்றான் முகில் . பின்னர் ,,மீனு அவன் கையை பிடித்து எந்திரித்தாள் .
“சாரி அண்ணா தெரியாமா உங்க மேல இடிச்சுட்டேன் “என்றாள் மீனு.
” பரவாயில்ல மா “என்று கூறிவிட்டு “ஏதும் அடிகிடி படலையே “என்க
” அதெல்லாம் எதுவும் இல்லை அண்ணா “என்றாள் .பவி அவளை தாங்கி பிடித்து கொண்டு நின்றிருந்தாள்.
“சரி மா பார்த்துப் போங்க ” என்று கூறிவிட்டு ஆதியை இழுத்துக்கொண்டு உள்ளே சென்றான் முகில். ஆதி அப்பொழுதுமே சிலையென தான் இருந்தான்.
மீனுவும் பவியும் திரும்ப ,,அங்கே சிந்து கோபத்தின் உச்சியில் இருந்தாள்.அவளை பார்த்த மீனுவும் சிந்துவும் பார்த்து ஒருசேர ” இப்ப இவ எதுக்கு இவ்வளவு கோபமா இருக்கா ” மனதில் நினைத்தனர்.
“எதுக்கு ரெண்டு பேரும் என்ன பார்த்து பேய பாக்கிர மாதிரி ரியாக்ஷன் குடுத்துட்டு இருக்கீங்க..???” கோபக்குரலில் கேட்க ,, இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை ,,இவள் ஏன் இவ்வளவு கோப்படுகிறாள் என்று.
“ஹே ஏன் டி இப்படி கோபமா இருக்க..??? விழுந்த அவளே கோபமா இல்ல” என்று பவி கேட்க ,, “அச்சச்சோ இப்படி பண்ணிட்டியே சிந்து பேபி ஏதாவது சொல்லி சமாளி” என்று மனதில் நினைத்த நேரம் பவி அவளை உலுக்க ” அய்யோ அக்கா உலுக்காதீங்க ,, அப்பறம் நான் குடிச்ச கேப்பசீன்யூ எல்லாம் வெளிய வந்துரும் . அப்பறம் நீங்க தான் அதை க்ளீன் பண்ணனும் பாத்துக்கோங்க” என்க ,,
“அய்யோ நான்லாம் பண்ண மாட்டேன் பா “என்றாள் பவி பதறி அடித்து கொண்டு.
அதற்குள் வீட்டில் இருந்து அழைப்பு வர ,, மூவரும் வீட்டிற்கு சென்றனர்.
“ஆதி…ஆதி… “என்று பலமுறை முகில் அழைத்தும் ,, அவனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. தீடிரென்று மழை பெய்வது போல் தோன்ற ,,”முகில் ஷாப்க்குள்ள மழை பெய்யுது டா “என்று அவனை பார்க்க ,,அங்கு முகில் ஜக்கை வைத்து கொண்டு நின்றிருந்தான்.
“ஏன் டா இப்போ என் மேல தண்ணி ஊத்தின..??”
“அட கிருக்கு பயலே உன்ன எவ்ளோ நேரமா கூப்பிட்டுட்டு இருக்கேன் .நீ என்னனா செஞ்சி வச்ச சிலை மாதிரி உட்கார்ந்திருக்கிற ” .
அவனை பார்த்து இஇஇஇஇ என்று இழித்து வைக்க ,,”சிரிக்காத பாக்க முடியல ,,எதுக்கு இப்போ என்ன இங்க கூட்டிட்டு வந்திருக்க…??? “என்று கேட்க
“ஆமாம்ல எதுக்கு வந்தோம்” என்று யோசனை செய்ய “அய் ஞாபகம் வந்திடுச்சு “என்று குதுகளித்தான் ஆதி.
மூவரும் வீட்டிற்கு வந்தவுடன் ,,நான்கு நல்ல வார்த்தைகளால் பாராட்டு வாங்கினர் சுசிலாவின் மூலமாக . “இன்னும் நல்லா திட்டுங்க மா “என்று கூறி வீட்டினுள் வந்தாள் திவ்யா.
“யாரு டா அது நமல கோத்து விடுறது…?? ” என்று மூவரும் ஒரே மாரி திரும்பி பார்க்க ,, அங்கே திவ்யா சிரித்து கொண்டு நின்றிருந்தாள். திவ்யாவை கண்ட மீனு மற்றும் பவி இருவரும் ஓடிச்சென்று அவளை அணைத்துக் கொண்டனர். அவளும் அவர்களை அணைத்துக் கொண்டாள்.
சில பல நலன்கள் மூவரும் முடித்து விட்டு தான் திவ்யாவை உள்ளே அழைத்து சென்றனர்.
மூவரும் சேர்ந்து சில வருடங்கள் கழித்து பார்த்து கொள்வதால் ,, மூவரும் மீனுவின் அறையில் இருந்து பேசிக்கொண்டு இருந்தனர். சிந்து அபிக்கு போன் செய்து பேசினாள்.
சிறிது நேரத்தில் அபி வீட்டிற்கு ஒரு குட்டி பார்சலுடன் வந்தான் . செல்வா அவனது வீட்டிற்கு சென்றான்.
சிந்துவும் அபியும் அந்த பார்சலை எடுத்து கொண்டு மீனுவின் சென்றனர்.
“ஹே…!!! இது உங்களுக்கான ஒரு குட்டி சர்ப்ரைஸ் ,, ரொம்ப நாள் கழிச்சு நீங்க மீட் பண்ணிகிறதுனால” என்று கூறி அவர்களின் முன் பிளக்ஃபாரஸ்ட் கேக் எடுத்து வைத்தனர். மூவரும் சந்தோஷ அதிர்ச்சியில் இருந்தனர்.
“சரி சரி போதும் நீங்க அதிர்ச்சி ஆனது. வாங்க மூனு பேரும் வந்து கேக் கட் பண்ணுங்க” என்றாள் சிந்து.
மூவரும் இன்முகத்துடன் ஒன்று சேர்ந்து கேக் கட் பண்ண ,,அதை பார்த்து சிந்து கை தட்ட .இவை அனைத்தையும் அபி படம் பிடித்தான்.
மூவரும் மூவருக்கும் ஊட்ட ,, இறுதியில் பவி மீனுவிற்கு ஊட்டும் போது ,,” நீ என்னைக்கு என்னோட சாரி சாரி எங்க கதிர் அத்தான் கூட சந்தோஷமா வாழனும் டா. கதிர் அத்தான் ரொம்ப நல்லவரு . அவர நீ நல்ல படியா பாத்துக்கோ .உன்ன அவரு ரொம்ப காதலிக்கிறார் . ரெண்டு பேரும் சந்தோஷமா இருங்க ” என்று கூறி கேக்கை ஊட்டி விட்டாள்.இதை கேட்ட திவ்யாவிற்கு பெரும் அதிர்ச்சி. மீனு எந்த ஒரு பதிலும் கூறாமல் வெறும் சிரிப்பை மட்டுமே பதிலாக தந்தாள்.
பவி அவளுக்கு ஊட்டி விட்ட அடுத்த நொடி ,,அந்த இடத்தை விட்டு செல்ல அவள் பின்னே திவ்யாவும் சென்றாள். இதை எதையும் மீனுவை தவிர மற்ற இருவரும் கவனிக்கவில்லை. ஆனாலும் அவள் அவர்கள் பின்னே செல்லவில்லை.
>>>>>>>>>>
“டேய் எருமை மாடே….!! எதுக்காக என்ன இழுத்துட்டு வந்த” என்று முகில் கேட்க ,,
“டேய் மிதுவ கண்டு பிடிக்கிறதுக்கு ஒரு ஐடியா கண்டு புடிச்சுட்டேன் “என்றான் ஆதி.
“என்ன ஐடியா டா…?? சீக்கிரம் சொல்லு” என்று முகில் ஆர்வத்துடன் கேட்க ,,
“டேய் முகில்‌..!!! உன்கிட்ட மிதுவோட சின்ன வயசு போட்டோ இருக்கா..??” என்று கேட்க சிறிது நேரம் யோசித்த முகில் ,,”தெரியல டா “என்று பதில் கூற
” டேய் கொஞ்சம் நல்லா யோசிச்சு பாரு டா “
” நல்லா யோசிச்சு பாத்துட்டேன் டா . என்கிட்ட இருக்கிற மாதிரி தெரியல” என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போது ஏதோ ஒன்று அவனுக்கு பொறி தட்ட ,, “இப்போ ஞாபகம் வந்துருச்சு என்கிட்ட ஒன்னு அவ போட்டோ இருக்கு டா “என்றான் மகிழ்ச்சியாக..
“செம்ம செம்ம ..!!! சூப்பர் டா முகில். இப்போ அந்த போட்டோ எங்க இருக்கு..??” என்று ஆதி வினவ ,,
“அது இப்ப ஊர்ல தான் டா இருக்கு . மொட்டை அடிக்கிறதுக்கு முன்னாடி எடுத்தோம் “என்றான்.
“சரி இப்ப அந்த புகைப்படத்தை வைத்து என்ன செய்ய போற..???” என்று முகில் கேட்க..,,
அதற்கு ஆதி அவனுடைய ஐடியா முழுவதையும் கூற “நல்ல ஐடியா தான் டா ,, கண்டிப்பா என்னோட மிதுவ நான் கண்டு பிடிக்கனும் டா “என்று கூறி கண்களில் இருந்து கண்ணீர் வர அதை துடைத்து விட்டான் ஆதி.
“நீ கவல படாத முகில் ,, கண்டிப்பா நம்ம மிதுவ கண்டு பிடிச்சுடலாம் .நாம நாளைக்கே ஊருக்கு போய் அந்த போட்டோவ எடுத்துட்டு வந்திடலாம் சரியா” என்று ஆதி கேட்க அதற்கு முகில் சரி என்று கூறி தலையசைத்தான் .
பின்னர் ,, இருவரும் கோல் காஃபி குடித்துவிட்டு பில் பே பண்ணிவிட்டு கிளம்பினர். முகிலை மருத்துவமனையில் விட்டுவிட்டு ஆதி ஸ்டேஷன் சென்றான்.
>>>>>>>>>>>>
“ஒரு நிமிஷம் நில்லு டி..!!‌” என்ற திவ்யாவின் குரல் கேட்டு அப்படியே நின்றாள் பவி.
“இங்க என்ன  தான் நடக்குது…??? மீனுக்கு யார் கூட நாளைக்கு கல்யாணம்” என்று திவ்யா கேட்க ,,
“இங்க ஒன்னும் நடக்கல நாளைக்கு தான் கதிருக்கும் மீனுவுக்கும் திருமணம் “என்றாள் பவி எங்கோ வெறித்து பார்த்து.
“அப்போ அவளோட ராகவ் கண்ணா என்ன ஆனான் டி..?? எப்படி மீனு இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன…??? அவளோட காதல் என்ன ஆச்சி..??? “என்று கேள்வகளால் அவளை மூல்கடிக்க ,,அவள் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தாள்.
“எதாவது சொல்லு டி .. இல்லன்னா நான் மீனு கிட்டயே கேட்டுக்கிறேன்” என்று கூற ,, அதற்குள் பவியே “அவளுக்கு அண்ணா யாருன்னே தெரியாது டி ” என்றாள் மொட்டையாக .
“என்னடி சொல்ற…??” என்று திவ்யா அதிர்வில் கேட்க ,,
“ஆமாம் டி அவளுக்கு பலசு எல்லாம் மறந்து போச்சி” என்றாள் .
“இது எப்படி உனக்கு தெரியும்” என்க ,, “நான் மீனு வேலை பார்க்கிற ஆஃபிஸ்ல ஒரு பிராஜெக்ட்காக ஹையர் ஆஃபிஸரா போனேன். அப்போ தான் அங்க செல்வாவ பார்த்தேன் . அப்போ அவுங்க தான் இதையெல்லாம் சொன்னாங்க” என்று அன்று நடந்த நிகழ்வை கூற ஆரம்பித்தாள்.
வெகு நேரம் ஆயினும் இருவரும் வராததால் அவர்களை அழைக்க வந்த மீனு இதையெல்லாம் எதர்ச்சியாக கேட்க நேர்ந்தது. அவளுக்குள் ஆயிரம் கேள்விகள் எழும்ப ,,அப்போது அவள் மூலையில் ஏதோ ஒன்று எட்ட ,, அன்று ஒருநாள் திவ்யாவை சந்தித்தபோது கூட கண்ணா என்ற பெயரை உபயோக படுத்தினாளே என்று நினைவு வர ,, இதற்கெல்லாம் பதில் கிடைக்க வேண்டும் என்றால் இந்த உரையாடலை கேட்க வேண்டும் என்று எண்ணி அவர்கள் காணாதவாறு மறைந்து நிற்க ,,அதற்குள் பெரியோர்கள் நலங்கு வைக்க வேண்டும் என்று மீனுவை அழைத்து சென்றனர். அவளும் வேறு வழியின்றி அவர்களுடன் சென்றாள்.
பவி அன்று நடந்ததை கூற தொடங்கினாள்…..
********
அன்று காலை எட்டு மணியளவில் ஏர்போர்ட்டில் இருந்து ரூமிற்கு சென்று ரெஃப் பிரஷ் ஆகிவிட்டு XXX கம்பெனியை நோக்கி சென்றாள் பவி .அங்கு சென்றதும் ,,அவளை வரவேற்பதற்காக ரிசப்ஷனில்லே செல்வா நின்று கொண்டிருந்தான் . அவனுடன் சேர்ந்து இரண்டு பேர் நின்றிருந்தனர்.
உள்ளே வந்த பவி ,,செவ்வாவை பார்த்த சந்தோஷத்திலே அவன் முன் வந்து நிற்க , செல்வாவின் முகத்தில் அதிர்ச்சியே இருந்தது. தன் முன் நின்ற இருந்த பவியை வெல்கம் செய்துவிட்டு ,,அவளை அவனது அறைக்கு அழைத்து சென்றான்.
“ஹாய் ராகவ் கண்ணா சாரி சாரி செல்வா..!!! இங்க உங்கள பார்ப்பேன்னு நான் எக்ஸ்பெக்டே பண்ணல ,,ரியலி இட்ஸ் அ சர்ப்ரைஸ் டு மீ” என்றாள் பவி.
அதற்கு செல்வா ஒரு வெற்று புன்னகையை மட்டுமே தந்தான்.
“ஓகே செல்வா..,,நீங்க எப்படி இருக்கீங்க..??? அப்பறம் உங்க அஞ்சு எப்படி இருக்கா..??? எப்ப உங்க லவ்ல வீட்ல சொல்ல போறீங்க…???இல்ல ஆல்ரெடி சொல்லிட்டிங்களா ” என்று பவி கேள்விகளை கேட்டுக்கொண்டே போக ,,செல்வா சற்று தன்னை நிதான படுத்திக்கொண்டு அவளது கேள்விக்கு பதில் கூற தொடங்கினான்.
“நான் நல்லா இருக்கேன் பவி. மிஸ்.அஞ்சனாவும் நல்லா தான் இருக்காங்க. நீங்க எப்படி இருக்கீங்க..??? நீங்க ஃபாரீன் எப்போ போனீங்க பவி…???” என்று யாரோப்போல் பதில் கூறி கேள்வியும் கேட்டான் .
“நான் நல்லா இருக்கேன் செல்வா..,, நான் ஃபாரின் போய் ரெண்டு வருஷம் ஆச்சி” என்று கூறிவிட்டு மேலும் ,”நான் கேட்ட இன்னொரு கேள்விக்கு இன்னும் பதில் வரலையே “என்று உண்மை அறியாமல் நக்கலாக கேட்க ,,
அதற்கு அவனோ ” அந்த கேள்விக்கு வேலையே இல்லை “என்றான் மொட்டையாக.
“அப்போ நீங்க ரெண்டு பேரும் வீட்ல எல்லாத்தையும் சொல்லிடீங்களா” என்று ஆர்வத்துடன் கேட்க ,,
“இல்லை பவி இப்போ நாங்க லவர்ஸ் கிடையாது இன்ஃபேக்ட் நான் யாருன்னு கூட அவளுக்கு தெரியாது . அவள பொருத்த வரைக்கும் நான் அவளோட கொலீக் அண்ட் அவ கல்யாண பண்ணிக்க போற பையனோட ஃபிரண்ட் அவ்ளோ தான்” என்றான் கவலை தேய்ந்த குரலில் .
“என்ன சொல்றீங்க செல்வா எனக்கு ஒன்னும்மே புரியல கொஞ்சம்தெளிவா சொல்லுங்க” என்க,,
அவனும் நடந்த அனைத்தையும் கூறி முடிக்க இறுதியாக “கதிர் தான் அவளுக்கு பார்த்த மாப்பிள்ளை ,, கதிர் மீனுவ ரொம்ப நல்லா பாத்துக்குவான் அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு” என்று கூறி முடிக்க ,, மாப்பிள்ளை கதிர் தான் என்று தெரிந்ததும் அவளுக்கு இந்த உலகமே நின்றது போல் இருந்தது.
“நீ இத பத்தி எதுவும் மீனு கிட்ட கேட்காத ,, இதனால அவ்ளோட உயிருக்கு ஆபத்தா கூட முடியலாம் . எனக்கு அவ சந்தோஷமா வாழ்றது தான் முக்கியம் ‌”என்றான் செல்வா .
“எப்படி செல்வா அவள இன்னொருத்தனுக்கு உங்களால விட்டு கொடுக்க முடியுது” என்று பவி கேட்க ,, அதற்கு அவனோ காதல் என்றான்.
பவி வாயடித்து போய் நின்றாள் அவனது காதலின் ஆழத்தை கண்டு . அதற்கு பின்பு நடந்த அனைத்தையும் பவி திவ்யாவிடம் அவள் முகம் பாராமல் கூறி முடித்தாள்.
“அப்போ உன்னோட காதல் என்ன ஆச்சி..??? “என்று அவளை தன் புறம் திருப்பி கேட்க ,,
“அது என்னோடவே புதஞ்சி பொய்டுச்சி மச்சி “என்று கூறி அவளை அணைத்துக்கொண்டு அழுதாள் .
தன்னிடம் இருந்து விலக்கி விட்டு,, அவளது கண்ணை துடைத்து ” சரி அழதாத மச்சி எல்லாம் சரியாகிடும்” என்று தைரியபடுத்தினாள் திவ்யா.
“சரி வாடி கீழ போகலாம் ,,மீனு நமக்காக காத்துட்டு இருப்பா “என்று கூறி முகத்தை அலம்பிக்கொண்டு கீழே செல்ல அவள் பின்னே திவ்யாவும் சென்றாள்.
மீனுவிற்கு முல்லின் மேல் நிற்பது போல் இருந்தது.
“நான் கண்ணான்னு ஒருத்தவுங்கல காதலிச்சிருக்கேன் . ஆனா ஏன் எனக்கு இது ஞாபகத்துல்ல இல்ல . அப்பறம் எனக்கு செல்வாவ முன்னாடியே தெரிஞ்சிருக்கு .அய்யோ கடவுளே…!!!எனக்கு மண்டையே வெடிச்சிடும் போல் இருக்கே “என்று மனதுக்குள் குமுறி கொண்டு இருக்க,, வெளியே சிரித்தப்படி இருந்தாள்.
மீனுவிற்கு நலங்கு வைத்த பின்பு அவளை கிளம்ப சொல்ல ,, அவளும் சிறிது நேரத்தில் கிளம்பி வர ,, அனைவரும் திருமண மண்டபத்திற்கு சென்றனர்.மீனுவின் குடும்பம் வந்த சிரிது‌ நேரத்திலே கதிர் குடும்பமும் வந்து சேர்ந்தது.
மணப்பெண் அறையில் மீனு பவி சிந்து மற்றும் திவ்யா இருந்தனர். அனைவரும் இருந்ததால் அவளால் எதையும் வெளிப்படுத்த முடியவில்லை. யோசித்து யோசித்து மண்டையே வெடித்து விடும் போல் இருக்க ,,அவளை சிறிது நேரத்திலே நித்திரை தேவி உறக்கத்திற்கு அழைத்துச் சென்றது.
அதே நேரத்தில் கதிர் செல்வாவை காணததால் அவனுக்கு அழைக்க ,, அவனும் அழைப்பை ஏற்று” சொல்லு கதிர்” என்று சொல்ல
“நான் உன்ன உடனே பார்க்கனும் நீ சீக்கிரம் கிளம்பி மண்டபத்துக்கு வா” என்று கூறி அவன் பதிலை கூட எதிர்பார்க்காமல் கட் செய்தான்.
சிறிது நேரத்திலே மண்டபத்திற்கு வந்த செல்வா ,,கதிரை பார்க்க செல்ல , வேகமாக அவனது கைகளை பற்றிய ஒரு உருவம் அவனை மாடிக்கு அழைத்து சென்றது. யார் என்று செல்வா திரும்பி பார்க்க அங்கே கதிர் நின்றிருந்தான்.
அவர்களது பேச்சு வார்த்தை சாதாரணமாக ஆரம்பித்து வாக்குவாதமாக மாறி அதன் பின்பு கெஞ்சலாக உருவெடுத்து இறுதியாக அணைப்பில் முடிந்தது.
பின்னர் கதிர் படுக்க செல்வாவையும் அழைத்துக்கொண்டு சென்று படுத்து விட்டான்.
அடுத்தநாள் காலை இன்முகமாக பிறந்தது அனைவருக்கும்….
மண்டபம் முழுவதும் விருந்தினர்கள் படை வருகை தர ,, மண்டபமே நிறைந்திருந்தது.
மாப்பிள்ளை தன்னவளை காணும் நோக்குடன் ஐயர் சொல்லும் மந்திரங்களை கடமைக்கு சொல்லிக்கொண்டு இருக்க
ஐயர் “பொண்ணை அழைத்து வாங்கோ “என்று கூற ,,மீனு பாரத்துடனும் குற்ற உணர்வுடன் நட்பு படைகள் சூழ்ந்து அவளை மேடைக்கு அழைத்து வந்தனர்.
இருவரும் சேர்ந்து எல்லா சடங்குகளும் செய்ய ,,ஐயர் தாலியை மாப்பிள்ளை கையில் கொடுக்க ,, அந்த நிமிடம் கதிர் மனதில் ” நீ எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கனும் “என்று நினைத்து கண்ணை மூடி திறந்ததும் “மாப்பிள்ளை தாலியை கட்டுங்கோ ” என்க ,அடுத்த நிமிடம் அவன் கையில் இருந்த மாங்கல்யம் அவள் சங்கு கழுத்தில் ஏறி சரிபாதியாக்கி கொண்டான்.
அந்த நேரம் பார்த்து வேகமாக மண்டபத்திற்கு வந்த அர்ஜுன் கண்களில் கண்ணீர் கோர்த்து அதிர்ந்து நின்றான்.

Advertisement