Advertisement

நினைவினில் நிறைந்தவளே

அத்தியாயம் 15

யாரும் இல்லை

இந்த பூமியிலே

அட பூவும் கூட
உன் பிரிவால பிணமாச்சே
ஏக்கம் வந்து
நெஞ்சம் ரணமானதே
இந்த வாழ்க்கையிலே
நீ தொடராத உறவானியே

தினம் இரவுல
அழுகுறேன் நடந்தத
வெறுக்கிறேன் என்
உயிரையே பிரிஞ்சதா
உணருறேன் நானே……

இனியும் செல்வா இங்கே இருந்தால் ஆபத்து என்ன தெரிந்து கொண்டு அவனை அங்கு இருந்து அழைத்து சென்றான் அர்ஜுன்.
போகும் போது சிந்துவிடம் மட்டும் கிளம்புவதாக கூறிச்சென்றான் .
தன் வாழ்வில் தனக்கான ஒருத்தன் இருக்கிறான் என்பதை மறந்து தன்னையே நினைத்து கொண்டிருக்கும் ஒருவனது கைகளுக்குள் தன் கைகளை கோர்த்தாள் மீனு.
ஆனாலும் அவளது மனதிற்கு ஏதோ தவறு செய்து கொண்டிருக்கிறோம் என்று உறுத்திக் கொண்டே இருக்க ,, அதேபோல் தனக்காக யாரோ அழுவது போல் உணர்ந்து ஏன்..?? எதற்காக…??? என்ற கேள்விகள் அவள் மனதை ஆட்கொள்ள அதை யோசிக்க விடாமல் அவளது கண்ணீர் வெளியே வந்தது.
செவ்வாவை அழைத்து வந்த அர்ஜுன் ,,அவனை அவனது அறையில் விட்டு விட்டு அவனது அறைக்கு சென்றான்.
சிறிது நேரத்தில் கிளம்பி வந்த அர்ஜுன் ,,நேராக செல்வாவின் அறைக்கு செல்ல அங்கு அவன் உறங்கி கொண்டு இருந்தான் ‌. கண்ணீரின் தடம் நன்றாகவே தெரிந்தது.
“நான் கண்டிப்பா உன்னோட அஞ்சு கிட்ட உன்ன சேர்த்து வைப்பேன் டா.உங்களுக்குள்ள என்ன பிரச்சினைன்னு எனக்கு தெரியாது. ஆனா நீ படும் அவஸ்தைய என்னால பாக்க முடியல டா. நான் ஒரு நண்பனாக இருந்து கண்டிப்பா உங்கள சேர்த்து வைப்பேன் . நீங்க பிரியனும்னு நீ நினச்ச ஆனால் கடவுள் உங்கள சேர்த்து வைக்க நினைக்கிறாரு டா . அதுவும் என் மூலமாக” என்று சொல்லி அவன் தலையை கோதிவிட்டு சென்றான் அர்ஜுன்.
செல்வா அந்த தூக்கத்திலும் “வேணாம் அர்ஜுன் ,,இத செய்யாத ப்ளிஸ் . என் அஞ்சுவாச்சும் சந்தோஷமா வாழட்டும் ” என்று புலம்பி கொண்டு இருந்தான்.
இதையெல்லாம் எதர்ச்சியாக காஃபி குடுக்க வந்த அஞ்சலி கேட்குமாறு நேர்ந்தது.சாந்தமாக வந்தவள் கோபமாக மாறி வந்த சுவடே தெரியாமல் அங்கிருந்து நகர்ந்தாள்.
தான் உளறி கொட்டியதால் ,,இனி என்னென்ன பிரச்சினை வரும் என்று தெரியாமல் நன்றாக உறங்கி கொண்டு இருந்தான் செல்வா.
வேகமாக அவளது அறைக்கு வந்த அஞ்சலி ,,அந்த காஃபி டம்ளரை தூக்கி எறிந்தாள்.டம்ளர் கீழே விழுந்து,,அதில் இருந்த காஃபி அந்த அறை முழுவதும் தெரித்தது.
கோபத்தில் அஞ்சலியின் முகம் சிவந்து காணப்பட்டது.கண்களோ எதிரில் எவராது வந்தால் அவர்கள் பஸ்பம் தான் என்பது போல் சிவந்து இருந்தது.
அஞ்சலி கண்ணாடியின் முன் நின்று தன் பிம்பத்தையே பார்வையிட்டு கொண்டு இருந்தாள்.
“அத்தான் நீங்க எனக்காக தான் பிறந்திருக்கீங்க .நீங்க எனக்கு மட்டும் தான் சொந்தம் . நீங்க என்னை நினைச்சி மட்டும் தான் கவலை படனும் . யாரோ ஒருத்தருக்காக நீங்க ஏன் ஃபீல் பண்ணனும்…???? அவ உங்களோட லைஃப்ல இருந்து பொயிட்டான்னு நினைச்சேன். ஆனா அவ திரும்பவும் உங்களோட லைஃப்ல வந்து ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டா . இனி அவ எப்படி உயிரோட வாழ்ரான்னு நானும் பாக்குறேன். இனியும் உன்ன சும்மா விட்டா ,,என்னோட வாழ்க்கையை பறிச்சிட்டு போயிடுவ டி . அதுனால உன்ன சும்மா விட மாட்டேன் . உன்னோட சாவு உன்ன நெருங்கி கிட்டே இருக்கு “என்று குரோரமாக தன் பிம்பத்தை செல்வாவின் பின்பமாக நினைத்து பேசிக்கொண்டு இருந்தாள்.
“இனி அவளை கண்டுபிடிச்சு எப்படியாவது அவளை அழிச்சு அத்தானை தனக்கு சொந்தமாக்கிகனும்” என்று நினைத்து கொண்டு மொபைலில் இருந்த செல்வாவின் புகைப்படத்தை பார்த்து முத்தம் கொடுத்துவிட்டு ,, கட்டிலில் சென்று படுத்துக் கொண்டு எப்படி அவளை அழிக்கலாம்…???? என்று யோசனை செய்துக்கொண்டே சிறிது நேரத்தில் உறங்கி விட்டாள்.
அந்த நாள் அப்படியே சென்றது …
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான சூழ்நிலையில் சிக்கி தவித்து கொண்டு இருந்தனர்.இவர்களின் நிலைமை அறியாத கதிர் மட்டும் மீனுவுடன் திருமணம் என்ற சந்தோஷத்தில் வானத்தில் மிதந்து கொண்டு இருந்தான்.
கதிரவன் தன் வேலையில் கவனமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் ,,தன் உதயத்தை கிழக்கில் உதிக்க ,,இனி நிம்மதியாக உறங்கலாம் என்று மதி  தன் படுக்கையை தேடி சென்றது…
நேற்று இரவே புவனா ராஜன்க்கு அழைப்பு விடுத்து ” நாளை காலை திருமண உடை வாங்க போகலாம் ” என்று கூற அவரும் அதற்கு தன் சம்மதத்தை தெரிவித்துவிட்டு தன் மனைவியிடம் இதை கூறி மீனுவிடம் சொல்ல சொன்னார்.தன் கணவர் கூறியது போல் மகளிடம் கூற‌ ,,அவள்‌ வெறும் புன்னகையே பதிலாக அளித்து விட்டு சென்றாள்.
சிந்து வந்திருந்ததால் ,,மீனு நார்மலாக இருக்க ஆரம்பித்தாள். அவளது குட்டி குட்டி செயல்களும் அவளை சிரிக்க வைத்தன.
மீனுவின் குடும்பத்தினர் நல்ல நேரம் பார்த்து வீட்டில் இருந்து கிளம்பினர் .
கதிரின் குடும்பத்தாரும் கிளம்பி கடைக்கு வர ,,அதே நேரம் மீனுவின் குடும்பத்தினரும் வந்து சேர்ந்தனர்.
சுசிலா புவனா மற்றும் சிந்து என மூவரும் சேர்ந்து அந்த கடையை ஒரு வழி பண்ணிக்கொண்டு இருக்க ,,மீனு மட்டும் அமைதியாகவே யாருக்கோ திருமணம் என்பது போல் இருந்தாள் . சிந்து மற்றும் அபியின் சிறு சிறு சண்டைகளால் மீனுவை கவணிக்க தவறினர்.
பிறகு அனைவரும் ஆடைகள் வாங்கிவிட்டு தாலி வாங்க நகை கடைக்கு சென்றனர்.கதிர் தனக்கு கால் வருகிறது என்று சொல்லி அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றான். பெண்கள் தாலி வாங்கி முடித்து வர ,,கதிரும் அவர்களுடன் இணைந்து கொண்டான். பின்பு ஹோட்டல் சென்று சாப்பிட்டு விட்டு அவர் அவர்களது வீட்டிற்கு கிளம்பினர்.
அஞ்சலியின் மனதில் எப்படியாவது அத்தானை திருமணம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்தாள். அதற்கான திட்டத்தை போட தொடங்கினாள்.
அந்த ஒருவாரம் எப்படி சென்றது என்று தெரியாமலே வேகமாக சென்றது. இன்னும் ஒருநாள் மட்டுமே இருந்தது திருமணத்திற்கு.
பவித்ரா மீனுவின் திருமணத்திற்காக வந்திருந்தாள். அவளை அழைப்பதற்காக கதிர் ஏர்போர்ட் வரை சென்றிருந்தான்.
அரைமணி நேரம் முன்பே வந்த கதிர் போர்ட்டிக்கோவில் வெயிட் செய்து கொண்டு இருந்தான்.
இங்கு மீனுவை சமாதானம் செய்யும் நோக்கில் அபி கலத்தில் இறங்கியிருந்தான்.
“ஹே மீனு  …!!! ரூம்ல என்ன பண்றீங்க…???? “என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தான் அபி.
மீனு எந்த ஒரு பதிலும் கூறாமல் அமைதியாகவே நின்று அவனை பார்த்து இல்லை இல்லை பார்வையால் எரித்து கொண்டு இருந்தாள்.
“ஹே இப்படி பாக்காத மீனு  எனக்கு ரொம்ப பயமா இருக்கு “என்று அபி தனது முகத்தை குழந்தை போல் வைத்து கொள்ள ,,அதை பார்த்த மீனுவிற்கு சிரிப்பு வந்தாலும் அதை உள்ளே கட்டுப்படுத்திக் கொண்டு வெளியே முறைத்து கொண்டு இருந்தாள்.
“நான் சொல்ல வரத கொஞ்சம் கேள்ளு மா “என்று கெஞ்சி கேட்க ,
,மீனுவின் மனது இலகியது ஏனென்றால் அவன் அவளை மா என்று அழைப்பது ஒரு இக்கட்டான நிலையில் மட்டும் தான் .அவனது இந்த கெஞ்சளினாள் மீனுவின் கோபம் காத்தோடு காத்தாக பறந்து சென்றது. தன்னிடம் கூற முடியாமல் எதையோ நினைத்து தவிக்கிறான் என்று புரிந்துக் கொண்ட மீனு ,,அவனை அணைத்துக் கொண்டு “எனக்கு பப்ஸ் எங்கடா‌ எரும ” என்க
“இதோ இந்தா உன்னோட‌ ஃபேவ்ரட் காலான் பப்ஸ் “என்று நீட்ட
“தாங்க்ஸ் டா பன்னிக்குட்டி “என்று கில்லி விட்டு கட்டிலில் உட்கார்ந்து  சாப்பிட ஆரம்பித்தாள்.
அவளை பார்க்கும் போது சிறுவயதில் இருந்தது போலவே தான் இருந்தது. “ஷேக் நீ இப்படி நான் சாப்பிடுறத பார்த்துட்டே இருந்தா…???எனக்கு தான பிறகு வயிறு வலிக்கும்” என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு சொல்ல ,,அவள் சொல்லியதை காதில் வாங்காதவன் அவள் கூறிய ஷேக் என்ற பெயரில் தான் செய்ததை மன்னித்து விட்டாள் என்று தெரிந்து கொண்டான்.
பின்னரே அவள் கூறியது உணர ,, “இதையெல்லாம் யாரு சாப்பிடு வா …இதுவே ரெண்டு நாள் முன்னாடி செஞ்சது .உனக்காக ஸ்பெஷலா வாங்கினேன் “என்றான் அபி.
இதை கேட்ட மீனு சாப்பிடுவதை நிறுத்தாமலே இருந்தாள்.
“ஏன்டி இது கெட்டு போனதுன்னு சொல்றேன் அப்பையும் இப்படி உக்கார்ந்து சாப்பிட்டுட்டு இருக்க” என்று கேள்வியாய்  அபி அவளை நோக்க
அதற்கு கூலாக வாயில் பப்ஸை திணித்துக் கொண்டே ,, “இந்நேரம் இதோட ஸ்மெல் வச்சி ரெண்டு கால் உள்ள ஒரு பன்றி இங்கு வந்துட்டு இருக்கும்.அது வரதுக்குள்ள நான் சாப்பிட்டு முடிக்கனும்ல அதான் ” என்று சாப்பிட்ட படியே சொன்னாள் மீனு.
இதை கேட்ட அபி சிரிக்க ,,மீனு சொன்ன மாதிரியே அங்கு ரெண்டு கால் வைத்த பன்றி மீனுவை பார்த்தும் அபியை பார்த்தும் முறைத்துக் கொண்டு நின்றது.
“என்ன பாத்தா பன்னி மாதிரி தெரியுதா அக்கா உனக்கு…???” என்று கோபமாக கேட்க அவளோ கூலாக சாப்பிட்டு விட்டு தண்ணீர் குடித்தாள்.
இதை கண்ட சிந்துவிற்கு கோபம் வர அபியின் தலையில் கொட்டு வைத்தாள். “எதுக்கு இப்போ எனக்கு கொட்டு வைச்ச எரும “என்க
“ஹான் அதுவா அக்காவ அடிச்சா அக்காக்கு வலிக்கும்ல . அதான் உன்ன அடிச்சேன் “என்று சொல்லி மீண்டும் ஒரு கொட்டு வைத்தாள் சிந்து.
“பேயே வலிக்குது” என்று அவளை அடிக்க அபி துரத்த சிந்துவும் அவனுக்கு பளிப்பு காட்டிக் விட்டு ஓடினாள்.
பவித்ராவிற்காக காத்துக் கொண்டிருந்த  கதிரை அதிக நேரம் சோதிக்க‌ விடாமல் வந்து சேர்ந்தாள் பவி .
கதிர்  அவளிடம் எதுவும் பேசாமல் ,,அவளது பைகளை வாங்கிக்கொண்டு கார் டிக்கியில் வைத்து விட்டு டிரைவர் சீட்டில் அமர்ந்து கொண்டான்.
பவியும் எதுவும் பேசாமல் முன் இருக்கையில் அமர்ந்து கொண்டாள். சிறிது நேரம் வரை அங்கு அமைதியே நிலவியது.இருவரும் எதுவும் பேசிக்கொள்ள வில்லை .கதிர் தன் கவனத்தை வண்டி ஓட்டிக்கொண்டு இருந்தான்.
” இந்த பவி வண்டில ஏறுனுதுல இருந்து ஒரு வார்த்தை பேசுறால பாரு…???? அப்படி என்ன தான் என் மேல கோபம்ன்னு தெரியல… சொன்னா தான தெரிஞ்சிக்க முடியும் .இப்படி இவ அமைதியாகவே இருந்தா நான் எப்படி தான் தெரிஞ்சிக்கிறது…..????” என்று மனதில் புலம்பிக் கொண்டு இருக்க அதனை அவனது முக பாவனை  காட்டிக்கொண்டு இருந்தது.
அதை கவனித்த பவி மனதில் சிரித்தாலும் ,,அதை வெளிக் காட்டிக்கொள்ள வில்லை.
நேராக வீட்டிற்கு வந்து காரை நிறுத்தி அடுத்த நொடி திரும்பி  பார்க்க, அதற்குள் பவி வேகமாக வீட்டிற்குள் சென்றிருந்தாள்.
“இவளுக்கெல்லாம் இந்த கடவுள் என்னைய இப்படி டிரைவர் வேல பாக்க வச்சிடாரே” என்று புலம்பிக் கொண்டே அவளது லக்கேஜை எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் வந்தான்.
வேகமாக உள்ளே வந்த பவி ,,”புவி…புவி… “என்று கத்திக்கொண்டே ஹாலிற்கு வந்தாள்.
“புவி எங்க இருக்க.???உன்ன பாக்க தான ஊர்ல இருந்து வந்துருக்கேன் . ஆனா நீ எங்க போன்ன என்ன பாக்க வராம…????” என்று கத்திக்கொண்டே இருக்க
“அடியே வாயாடி கொஞ்சம் கூட உனக்கு வாய் வலிக்காதா…???? ” என்று கேட்டுக்கொண்டே அவரது அறையில் இருந்து வெளியே வந்தார் புவனா.
“புவி அத்தை…..!!!!! என்று கூறி புவனாவை அணைத்துக் கொண்டாள் பவி. புவனாவின் காதில்” எனக்கு ஏன் அத்தை வலிக்க போகுது கேக்குறவுங்களுக்கு தான் காது வலிக்கனும் “என்று கூற
“அடி கழுதை நீ இன்னும் மாறவே இல்லை” என்று சிரித்தார் புவனா.
“என்ன அத்த இப்படி சொல்லிடீங்க” என்று முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு கூற “நான் இப்ப என்ன சொல்லிட்டேன்னு இப்படி மூஞ்ச வச்சிருக்க…???? “என்று புவனா கேட்க ,,
அதற்கு பவியோ “நான் போன்ன தடவை உங்கள பாக்க வரும்போது கொஞ்சம் குண்டா இருந்தேன். இப்போ கொஞ்சம் வெயிட் ரெடுயூஸ் பண்ணியிருக்கேன். ஆனா நீங்க நான் இன்னும் மாறவே இல்லைன்னு சொல்றீங்க “என்றாள் முகத்தை தொங்கப்போட்டு கொண்டு .
இதை கேட்ட புவனா மற்றும் கதிர் சிரிக்க ,,இதை பார்த்த பவிக்கு கதிர் மேல கோபம் வர அவளது லக்கேஜை அவனிடம் இருந்து பிடிங்கி கொண்டு அவளது அறைக்கு சென்றாள்.
“அம்மா இதெல்லாம் ஞாயமா இருக்கா சொல்லுங்க..?? நீங்களும் தான் சிரிச்சீங்க ..,,ஆனா என்ன பாத்து மட்டும் முறச்சிட்டு போறா” என்று தன் அன்னையிடன் புகார் வாசிக்க ,,
“விடு டா விடு டா சின்ன பொண்ணு” என்று சொல்லிவிட்டு சமையலறை நோக்கி சென்றார் புவனா.
#####
உன்னை எப்போதுமே
உள்ளம் கொண்டாடுமே
நீ என்னோட ஆனந்தமே
என்னுள் உன் ஞாபகம்
என்றும் நீங்காதிங்கே நீ
என்னுள்ளே எந்நாளுமே
போகாதே …….
செல்வா தன் கவலைகளை எல்லாம் தன்னுள்ளே மறைத்துக்கொண்டு வெளியில் சிரித்துக் கொண்டு இருந்தான்.
அபியும் செல்வாவும் சேர்ந்து அனைத்து வேலைகளையும் ஒன்று விடாமல் பார்த்தனர்.மீனுவின் தந்தை ராஜனை ஒரு வேலை செய்ய விட வில்லை இருவரும்.
இரவு நேரத்தில் செல்வா ,,அவனது நினைவுகளை அந்த டைரியில் எழுதி வைத்துக்கொண்டு இருந்தான்.
அடுத்தநாள் காலையிலேயே பவி கிளம்பி கீழே வர..,, அவளுக்கு காஃபியை கொடுத்த புவனா அடுத்து கதிருக்கு கொடுக்க எடுத்து சென்றாள்.
சிறிது நேரத்தில் கீழே வந்த கதிரிடம் ,, “நான் மீனுவை பாக்க போகனும் என்ன கொஞ்சம் ட்ராப் பண்ண முடியுமா” என்று எங்கேயோ பார்த்து கொண்டு கேட்க ,,
“என்ன பார்த்து கேட்டா மட்டும் தான் கூட்டிட்டு போவேன்” என்க ..,,
அதற்கு பவி “நான் கார்ல வெயிட் பண்றேன் சீக்கிரம் வாங்க” என்று கூறிவிட்டு தன் அத்தையிடம் சொல்லிவிட்டு காரில் ஏறி அமர்ந்தாள்.
“கொழுப்பு ஒவ்வரா தான் இருக்கு” என்று நினைத்து விட்டு கார் கீயை எடுத்துக்கொண்டு  வெளியில் வந்தவன் டிரைவர் சீட்டில் அமர்ந்துகொண்டு காரை ஓட்டத் தொடங்கினான் .
அவன் மனதில் ” நாம மாப்பிள்ளையா கெத்தா இருக்காம இந்த குரங்குக்கு எல்லாம் நம்மள டிரைவர் ஆக்கீட்டான்னுங்களே ” என்று புலம்பிக் கொண்டே இருக்க அவனது மனச்சாட்சியோ இவன் இப்படி தான் என்று தன் காதுகளை பொத்திக்கொண்டது .
மீனுவின் வீட்டு வாசலில் கதிர் காரை நிறுத்தினான். பவி இறங்காமல் அவனை பார்த்து “நீ வீட்டிற்கு போ கதிர் , திருமணத்துக்கு முன்பு பொண்ணும் பையனும் சந்திக்க கூடாதாம் அத்தை சொன்னாங்க . அதுனால நீ வீட்டிற்கு போ” என்று சொல்லிவிட்டு அவன் பதிலை கூட எதிர்பார்க்காமல் வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.
அவனும் பவி சொன்னது போல நேராக வீட்டிற்கு சென்றான்.
பவி வரதை கவணித்த சிந்து ,, அவளிடம் சென்று” பவி அக்கா எப்படி இருக்க…???? “என்று கேட்க ,,
” நான் நல்லா தான் இருக்கேன் டி செல்லம் நீ எப்படி இருக்க…??? அப்பறம் படிப்பு எல்லாம் இந்த வருஷம் முடிஞ்சிருக்குமே….???” என்று பவி எதிர் கேட்டாள்.
அவள் விடை அளிக்கும் முன் அபி அங்கு வந்து ,,”ஹேய் வாலு…!!! வீட்டுக்கு வந்தவுங்கல இப்படி தான் வாசல்ல நிக்க வச்சியே எல்லா கேள்வியும் கேப்பியா நீ “என்று அவளை கொட்ட ,,
“டேய் எரும மாடு நான் ஒன்னும் கேள்வி கேட்டுட்டு இருக்கல இதோ என் முன்னாடி நிக்கிறாங்களே மிஸ் . பவித்ரா அவுங்க தான் என்கிட்ட எல்லா கேள்வியையும் கேட்டுட்டு இருக்காங்க” என்றாள் தலையை தேய்த்த படி .
“சரி சரி விடு” என்று கூறிவிட்டு நைசாக அந்த இடத்தை காலி செய்தான் அபி .
சிந்து மற்றும் பவி இருவரும் மீனுவை தேடி மீனுவின் அறைக்கு சென்றனர்.
மீனு பால்கனியில் நின்று எதையோ வேடிக்கை பார்த்துக்கொண்டே பாட்டு கேட்டப்படி இருந்தாள்.
பவி வந்ததை பார்த்த மீனு ,, ஓடிச்சென்று அவளை அணைத்துக் கொண்டாள். பவி பிரிவின் துயரம் என்று எண்ணி அவளை ஆறுதல் படுத்த முயற்ச்சிக்க ,,சிந்துவும் மீனுவை பார்த்து சிறுபிள்ளை அழுகலாமா வேண்டாமா என்பது போல் முகத்தை வைத்துக்கொண்டு இருந்தாள்.
இவர்களது பாசத்தை கண்டு ஒரு பக்கம் மனம் நெகிழ்வாக இருக்க ,,மறுப்பக்கம் இதுப்போல் ஒரு தங்கை தனக்கு இல்லையே என்று வருத்தம் கொண்டாள் பவித்ரா. இதனை சிந்து அறிந்தாலோ இல்லையோ வேகமாக சென்று பவியை அணைத்துக் கொண்டாள். அவளுக்கு இருப்பக்கமும் இரு தங்கைகளும் அணைத்திருந்தனர்.
அதனை ஒரு போட்டோ எடுத்த அபி ,, அவர்களிடம் வந்து “ப்பா ப்பா என ஒரு பாசம் என்ன ஒரு பாசம் ,,நீங்க மூன்று பேரும் பாண்டியன் ஸ்டார்ஸ் சீரியலையே மீஞ்சுருவீங்க போல” என்று சிரித்துக்கொண்டே கூற ,,
“ஆம் “என்றனர் மூவரும் கோரசாக……
இதனை எல்லாம் வெரும் வாட்டிக்கையாளராக பார்த்து கொண்டு இருந்தான் செல்வா. அவர்களது பிணைப்பை பார்த்து யாரும் கண்ணு வைக்க கூடாது என்று கடவுளிடம் கோரிக்கை வைத்தான் .
“சரி சரி உங்க சீரியல்ல கொஞ்சம் மூட்டக்கட்டிட்டு கீழ சாப்பிட வாங்க சுசி அம்மா உங்கள கீழ கூட்டிட்டு வர சொன்னாங்க “என்று சொல்லி செல்வாவை அழைத்துக்கொண்டு கீழே சென்றான் அபி.
பின்னர் மூவரும் கீழே சென்று சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் அரட்டை அடித்தனர்.
“ஹே பவி அக்கா..!!! திவ்யா சிஸ்டா எப்ப இங்க வராங்க…??? நாளைக்கு கல்யாணம் இன்னும் இங்க வரல..???அக்கா கல்யாணத்த முடிச்சிட்டு தான் வருவாங்க போலயே “என்று யோசனை செய்கிற மாதிரி ஆக்க்ஷன் செய்ய, அதை பார்த்து சிரித்து விட்டு” அவ எப்பொழுதும் லேட்டா தான் வருவா ,,நைட் தான் வர முடியும்ன்னு சொன்னா டா “என்றாள் பவி.
பிறகு மூவரும் கிளம்பி பார்லர் சென்றனர்.மீனுவை விட சிந்து அதில் அதிகம் கவனம் எடுத்துக்கொள்ள அதை பார்த்த பவி ,,”ஹே குட்டி…!!! உங்க அக்காவுக்கு தான் நாளைக்கு திருமணம் உனக்கு இல்ல சரியா” என்க…
“அட போ பவிக்கா நீ வேற ,, அதான் அக்காக்கு கல்யாணம் ஆகபோகுதுல அப்பறம் எப்படியும் அந்த அபி எருமைக்கு இப்போ கல்யாணம் பன்ன மாட்டாங்க சோ அடுத்து நான் மட்டும் தான் இருக்கேன். நாளைக்கு தான் அழகா இருக்கனும்ல அதான் இந்த ஆர்ப்பாட்டம்” என்றாள் .
அதை கேட்ட பவி ” அடியே இதெல்லாம் உனக்கு கொஞ்சம் ஒவ்வரா தெரியல” என்க
“தெரியல கா” என்று கூறிவிட்டு அவள் வேலையில் கவனத்தை செலுத்தினாள்.
அஞ்சலி செல்வாவிற்கு தெரியாமல் ,,அவன் தூங்கும் போது அவனது மொபைலில் இருந்து அவளது புகைபடத்தை எடுத்து அவளது மொபைலுக்கு சேர் செய்து கொண்டாள்.
முகிலும் ஆதியும் சேர்ந்து மிதுனா இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க தீவிரமாக முயற்சி செய்து கொண்டு இருந்தனர் . ஆனால் அவர்களுக்கு இதுவரையும் எந்த ஒரு துப்பும் கிடைக்க வில்லை.
அப்பொழுது ஆதிக்கு ஒரு யோசனை வர ,,அதை முகிலிடம் சொல்வதற்காக வேகமாக தன் ஜீப்பை எடுத்துக் கொண்டு ஹாஸ்பிடல் சென்றான்.
மீனுவிற்கு திருமணம் கதிருடன் நடக்குமா அல்லது செல்வாவுடன் நடக்குமா என்பதை பற்றி எல்லாம் அடுத்த வர போகும் பதிவுகளில் காண்போம்….

Advertisement