Advertisement

மீனு கான்ஃப்ரென்ஸ் அறைக்கு வந்து இருவரையும் பார்த்து முறைக்க ,, செல்வாவின் மனதில் “இவள் ஏன் இவர்கள் இருவரையும் பார்த்து முறைக்கிறாள்” என்று மனதுடன் புலம்பிக் கொண்டு இருந்தான்.

நேராக அந்த பெண்ணை பார்த்து வந்த மீனு ,,அவளை அனல் பார்வையுடன் பார்த்து நிற்க இதற்கெல்லாம் நான் அசற மாட்டேன் என்று சகஜமாக நின்றவள் ,,அடுத்த நிமிடம் தன் கன்னங்களில் கைகளை வைத்து கொண்டு நின்றிருந்தாள் .மீனு அடித்த அடியில் அவள் “அம்மா” என்று கத்த ,,

“இப்போ எதுக்கு டி கத்திட்டு இருக்கிற” என்று மீனு எகிர ‘ஏய் மங்கூஸ் …!!! நீ அடிச்ச அடிக்கு அம்மான்னு கத்தாமல வேற எப்படி டி கத்துறது” என்று அவளும் தன் இரண்டு கைகளையும் தன் இடையில் வைத்து கொண்டு சொல்ல ,,மீனுவோ ” ஹாஹாஹா” என்று சிரிக்க தொடங்கினாள்.

“இப்போ எதுக்கு டி என்ன பாத்து இப்படி சிரிக்கிற ” என்று கோபமாக அவள் கேட்க,,அதற்கு மீனு “சும்மா தான் மச்சி சிரிச்சேன்” என்று தனது கட்டைவிரலை காட்டி ஆட்ட இப்போது மீனுவை அடிக்க கை ஓங்கி சென்ற அவள் தீடிரென்று மீனுவை அணைத்து கொண்டாள்.

அதை பார்த்த இருவருக்கும் ஈ ஆடவில்லை.அந்த நேரம் பார்த்து உள்ளே வந்த கதிர் அவர்களை பார்த்து அப்படியே நின்றான்.

பின்னர்,, இருவரும் சிறு கதை அலந்தவாறே இருக்க,,அங்கு இருந்த செல்வா கதிர் மற்றும் புதியவன்னை கண்டு கொள்ளாமல் இருந்தனர்.

இவர்களை இப்படியே விட்டால் பேசிக்கொண்டே தான் இருப்பார்கள் என்று மனதில் நினைத்த கதிர் அவர்களை நோக்கி சென்று “பவி” என்று அழைத்தான்.

பவி என்று அழைத்ததில் திரும்பி பார்த்த பவித்ரா.எதுவும் பேசாமல் முகத்தை தூக்கிக் கொண்டாள்.

“இவளுக்கு என்ன ஆச்சு “என்று மனதில் நினைத்துக்கொண்டு ,,”என்ன ஆச்சி பவி ..??ஏன் என்கிட்ட பேச மாட்டேங்கிற ..??? “என்றிட

“நான் யாருக்கூடையும் பேச விரும்பவில்லை மீனு “என்றாள் பவி .

“இங்க என்ன டா நடக்குது..??? நாம இப்படி லூசு மாதிரி நின்னுட்டு இருக்கோம்” என்று செல்வா மனதில் நினைத்துக்கொண்டு இருக்க ,,அவன் காதினுள் “பாஸ் நீங்க மைன்ட் வாய்ஸ்ன்னு நினைச்சி சத்தமா பேசிட்டீங்க “என்றான் அபிஷேக் பிரேம்.

செல்வாவை பார்த்த மீனு ஒரு புன்னகையை பதிலாக அளிக்க அபியை பார்த்து முறைத்து வைத்தாள். பவியே தன்னை தானே அறிமுகப்படுத்தி கொண்டாள் . மீனு எனது உயிர் தோழி என்றும் கதிர் தன்னுடைய அத்தை மகன் என்றும் கூறினாள்.

அவளது அனல் பார்வையை கண்ட அபி,,”இனி இங்கே இருந்தால் என் உயிர் தப்பாது” என்று தப்பிக்க நினைக்க ,,”உன்னால் இங்கிருந்து தப்ப முடியாது மவனே ” என்றபடி மீனுவின் பார்வை இருந்தது.

இதை எதையும் அங்கிருந்த மூவரும் கவனிக்கவில்லை.பின்னர் அனைவரும் சிறிது நேரம் பேசிவிட்டு அவர்களது வேலையை காண சென்றனர்.

___________________________________________________
இறுதி செமஸ்டர் என்பதால் ,,சிந்து மற்றும் அவளது தோழிகள் அனைவரும் படிப்பில் கவனத்தை செலுத்தினர்.
எவ்வளவு தான் படிப்பில் கவனம் செலுத்தினாலும் இனி நாம் ஒன்றாக இருக்க முடியாது என்று மனதலவிள் அழுது கொண்டு இருந்தனர்.
சிந்துவிற்கு தன் அக்காவின் வாழ்வில் இனி எந்த ஒரு கவலையும் இல்லை.அவள் இனி சந்தோஷமாக வாழ்வாள் என்று எண்ணிக்  நிம்மதியாக தனது இறுதித் தேர்வுகளை நன்கு எழுதினாள்.
தேர்வு முடிய முடிய தோழிகளுடன் நேரத்தை செலவழித்தாள் சிந்தியா .இனி இவர்களுடன் இருக்க போவதில்லை என்று எண்ணி தோழிகள் அனைவரும் கண் கலங்கினர்.
இறுதி தேர்வு முடிய ,,அன்று மாலையே கல்லூரியில் ஃபேர்வல் பார்ட்டி நடத்தப்பட்டது. அதில் பெண்கள் அனைவரும் புடவையும் ஆண்கள் அனைவரும் வேஸ்டி சட்டையிலும் வந்திருந்தனர்.
அன்றைய தினம் அவர்களுக்கு நன்றாக சென்றது. கேலியும் கலாட்டாவுமாக இருந்தது. பிரிவின் துயர் அவர்களை வாட்டினாலும் ,அதை பொருட்படுத்தாமல் அந்த நேரத்தை மகிழ்வோடு ரசித்தனர்.
ஃபேர்வல் முடித்து ஹாஸ்டல் வந்த தோழிகள் அனைவரும் சிறிது விளையாடிக் கொண்டும் கதை அளந்தபடியும் இருக்க‌ ,,விடியல் வரும்போது தான் துயில் கொண்டனர் அனைவரும்.
___________________________________________
முகில் சாந்தாயி சொன்னதில் இருந்து அறையை விட்டு வெளி வரவே இல்லை. வளர்மொழி சாப்பிட அழைத்தால் மட்டுமே அறையை விட்டு வெளியே வருவான்.இப்படியே அந்த இரண்டு நாளும் போனது.
அவனுக்கு அங்கே இருப்பது நெருப்பு மேல் இருப்பது போல் இருந்தது.
தான் தன் தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்தை காக்கும் பொருட்டு இவை அனைத்தையும் சகித்துக் கொண்டு வாழ்கிறான்.
தன் தாய் தந்தையின் புகைப்படத்திற்கு முன் சென்று நின்று ,,சில நொடி அமைதி காத்தவன் ,,
“ஏன் அப்பா ..?? நம்ம குடும்பத்தை இப்படி அடியோட அழிக்க நினைக்கிறாங்க…???எனக்கு ஒன்னும்மே புரியல பா .ஆனா ஒன்னு மட்டும் புரியுது பா ,, நம்மள சுத்தி இருக்கிறவுங்கல்ல யாரும் நல்லவுங்க இல்ல பா.
நான் கண்டிப்பா உங்களுக்கு செஞ்சி கொடுத்த சத்தியத்தை காப்பாத்துவேன் . என்னோட இரத்த சொந்தம் உயிரோட தான் இருக்கான்னு தெரிஞ்சா ,,அவள கண்டிப்பா உயிரோட இருக்க விட மாட்டாங்க .அம்மாவோட ஆசை படி என்னோட உங்களோட தங்கச்சி பையனுக்கு கல்யாணம் பண்ணி வைப்பேன்.இதுல என்னோட உயிரே போனாலும் பரவாயில்லை ‌.அதே போல் எங்களிடம் இருந்து உங்களை பிரித்தற்கு அவர்களுக்கு சரியான தண்டனை வாங்கி தருவேன். ஆனா இதுவரை என்னால நம்ம குடும்பத்தை அழிக்க யார்  இப்படி செய்திருப்பாங்கன்னு தெரியல பா. அவுங்கள மட்டும் நான் கண்டு பிடிச்சேன் ,, அதுதான் அவுங்க இந்த மண்ணுலகில் வாழும் கடைசி நாளா இருக்கும் .சாவு எப்படி இருக்கும் என்பதை நான் அவுங்களுக்கு காண்பிப்பேன் . இது நான் உங்களுக்கு செய்து தரும் சத்தியம் ” என்று கூறிவிட்டு கண்ணீர் சிந்தினான் .
“நான் இப்போ உயிரோட இருக்கேன்னா அது என்னோட தங்கச்சிக்காகவும் என்னோட ஆதிக்காவும் தான் இருக்கேன் பா “என்றான் கண் கலங்க
அந்த அறையில் சுற்றிலும் ஆதி மற்றும் முகிலின் புகை படங்கள் மட்டுமே இருந்தன.அவர்களது சிறு வயிதிலிருந்து இப்ப வரை எடுத்த அனைத்து புகைப்படங்களும் மாட்டப்பட்டிருந்தது.
ஆதியின் புகைப்படத்திற்கு நேராக சென்ற முகில் ,”டேய் ஆதி நீ தான் எனக்கு எல்லாமுமாக இருந்த ,, என்னோட தங்கச்சிய கண்டு பிடிக்கிறதுக்காகவே நீ போலிஸ் ஆயிருக்க…உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல டா…நீ என்ன விட சின்ன பையன் தான் . ஆனால் பல நாட்கள் நீ எனக்கு மூத்தவனா இருந்திருக்க….உன்கிட்ட மட்டும் தான் என்னால உரிமையா இருக்க முடியுது… உன்ன பாக்கனும் போல இருக்கு டா ” என்று அவன் புகைப்படத்தை பார்த்து தன் போல் பேசிக்கொண்டிருந்தவனை “டேய் ஏன் டா இப்படி பண்ற …??? என்ன பாக்கனும்னு சொல்லி இருந்தா நான் வருந்துருக்க போறேன் .அதுக்கு போய் என் போட்டோ கிட்ட தனியா பேசிட்டு இருக்க “என்று சொல்லிக்கொண்டே ஆதித்யன் உள்ளே வந்தான்.
ஆதியை பார்த்த சந்தோஷத்தில் முகில் அவனை இறுக்கி அணைத்து கொண்டான்.
“அடேய்….!!!! என்னோட மனைவி தான் டா என்ன இப்படி கட்டி பிடிக்கனும் . ஆனா நீ இப்படி பண்ணிக்கிட்டு இருக்கியே பக்கி” என்று கூறிக்கொண்டு இருக்க ,, ஆனால் அவனது கைகளோ அவனை அணைத்து கொண்டு இருந்தது.
“டேய் ஆதி ..!!! எப்படி இருக்க…????” என்று கேட்டவுடன் “அம்மா உன்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டாங்கலா…?? “என்றான் முகில் அவனை விலக்கிய படி,,,
“நான் நல்லா தான் இருக்கேன்…,, ஏன் டா அண்ணா…!!! ஊருக்கு வரத்துக்கு முன்னாடி ஒரு வார்த்தை சொல்லிட்டு வர முடியாதோ “என்க ,,
“இல்ல டா சொல்லனும்னு தான் நினைச்சேன் ஆனா மறந்துட்டேன்” என்றான் தலையை சொறிந்த படியே …,,
“சரி இப்போ எதுக்கு இங்க வந்த..?உனக்கு எப்படி லீவ் கிடைச்சது..?” என்றான் முகில் ஆதியிடம்‌.
“டேய் முகில்…!!!! எனக்கு ட்ரேன்ஸ்ஃபர் கிடைச்சிருக்கு டா “என்க
“சூப்பர் டா எங்க கிடைச்சிருக்கு “என்று முகில் சந்தோஷமாக கேட்க
” சென்னைக்கே கிடைச்சிருச்சு டா.இனி உன்கூட தான் இருக்க போறேன் அப்படியே என்னோட ப்ரென்ட்ஸ் கூடவும் டைம் ஸ்பேன்ட் பண்ண போறேன் ” என்றான் ஆதி.
“சரி டா ..இந்த விஷயத்த அம்மா அப்பா கிட்ட சொல்லிட்டியா “என்க
“இன்னும் இல்ல முகில் முதல உன்கிட்ட சொல்லனும்னு தான் ஆசைப்பட்டேன் . அதான் உன்ன தேடி இங்க வந்துட்டேன்’ என்றான் .
“சரி வா கீழே போகலாம்” என்று ஆதி கூற முகிலும் அவன் கூடவே சென்றான்.
படியிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்த இருவரையும் பார்த்த வளர்மொழி ” இவர்கள் என்றும் சந்தோஷமாக இருக்க வேண்டும் ..,,இவர்களது ஒற்றுமை யாராலும் கெட்டு விட கூடாது . அதேபோல் யாரும் இவர்கள் மீது கண்ணு வைக்க கூடாது ” என்று மனதில் நினைத்து கொண்டு இருந்தார்.
“வளரு …!!! “என்று ஓடி சென்று அணைத்து கொண்டான் ஆதி.
“டேய் என்கிட்ட பேசாத “என்று சொல்லி முகத்தை தூக்கி வைத்துக்கொண்டார் வளர்மொழி.
“அச்சோ பேபி !ஏன் என்கிட்ட பேசமாட்டீங்க” என்க
” உங்க அண்ணன் சோகமா மூஞ்ச தூக்கி வச்சிருக்கான் வாடா என்று நான் சொன்னதும் கிளம்பி வந்துட்ட” என்று தன்னையும் அறியாமல் உளறினார் வளர்மொழி.
முகில் அவன் காதை பிடித்து திறுகி ,, “எத்தனை தடவை சொல்லியிருக்கேன் அம்மாவ பேர் சொல்லி கூப்பிடாதன்னு” என்று ஆதி காதை மேலும் திறுக ….
“டேய் எரும வலிக்குது டா காதை விடு” என்று கெஞ்சி கொண்டு இருக்க ..,,”பேபி…பேபி …!!!” என்று முடிப்பதற்குள் “ஆஆஆஆஆ அம்மா” என்று கத்தினான் ஆதி .
“இப்போ மட்டும் எப்படி டா அம்மான்னு வந்துச்சி “என்று வினவ ஆதி அவன் தலையை தேய்த்து கொண்டு இருந்தான்.
“சரி சரி போதும் நீங்க விளையாடினது” என்று வளர்மொழி சொல்ல
“அம்மா நாங்க எங்க மா விளையாடிட்டு இருக்கோம் ,,இதோ உங்க பாசமான பையன் என்ன அடிச்சுட்டான் . அவன் என்கூட ஃபைட் பண்றான் நீங்க என்னன்னா நாங்க ப்லே பண்றோம்ன்னு சொல்றீங்க” என்று சிறுபிள்ளை போல் முகத்தை வைத்துக்கொண்டு தன் அண்ணனை குற்றம் சாட்டிக் கொண்டு இருந்தான் ஆதி.
இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த சாந்தாயிக்கு எல்லும் கொள்ளும் வெடித்து கொண்டு இருந்தது. தன் பேரன் வந்து இருப்பதால் அமைதி காத்தார் .
“சரி இரண்டுபேரும் சண்டைய முடிச்சிட்டு வாங்க ,, எனக்கு ரொம்ப பசிக்கிது அப்பா சாப்பிட வர நேரமாச்சு” என்று சொல்லி முடிப்பதற்குள் இருவரும் டைனிங் டேபிளில் அமர்ந்து இருந்தனர்.
அந்த நாள் இவர்களுக்கு இனிமையாக போக ,, இரவு வேலையில் முகில் தன் அன்னையிடம் நாளை ஊருக்கு போவதை பற்றி சொல்ல ,,ஆதி தானும் முகிலுடன் செல்வதை பற்றி கூறிவிட்டு தனக்கு ட்ரேன்ஸ்ஃபர் வந்ததையும் சேர்த்து கூறினான். இதை கேட்ட சக்கரபாணி ஆதியை முறைத்து விட்டு அவரது அறைக்கு சென்றுவிட்டார்.
அடுத்தநாள் காலை ஆதி மற்றும் முகில் இருவரும் சென்னைக்கு கிளம்பினர்….
_______________________________________________________
செல்வா ,கதிர் ,அபி மற்றும் மீனு நால்வரும் வேலையில் தீவிரமாக இருக்க பவி ஒரு வேலை காரணமாக வெளிநாடு செல்ல நேர்ந்தது.
அபியை பார்த்த ராஜன் மற்றும் சுசிலாவிற்கு பெரும் மகிழ்ச்சி . திருமணம் முடியும் வரை தங்களுடன் தான் இருக்க வேண்டும் என்று உத்தர விட அபியும் அதை ஏற்றுக்கொண்டான்.
நாட்கள் அதன் போக்கில் வேகமாக செல்ல ,, நிச்சயம் செய்ய வேண்டிய நாளும் நெருங்கி வந்தது. இன்னும் இரண்டு நாட்களில் நிச்சயம் என்றிருந்த நிலையில் வீடே கலகலப்பாக இருக்க ஆரம்பித்தது.
சிந்துவும் தன் படிப்பை முடித்து விட்டு சென்னைக்கு வந்துவிட்டாள்.
முகிலும் ஆதியும் சென்னைக்கு வந்து ஒருவாரம் ஆனது. சென்னையில் அசிஸ்டன்ட் கமிஷனராக ஆதி பதவி ஏற்றான்.
முகிலும் ஆதியும் சேர்ந்து தீவிரமாக முகிலின் தங்கையை தேடினர்.
மீனு எல்லாரிடமும் நன்றாக பேசினாலும் அபியை பார்த்து மட்டும் முறைத்துக் கொண்டே இருந்தாள்.
நிச்சயத்திற்கு வேண்டிய வேலைகள் எல்லாம் அபி மற்றும் செல்வா கவனித்து கொண்டனர்.
நிச்சயத்து தேவையான ஆடைகளை வாங்க கடைக்கு சென்றனர். தேவையான எல்லாவற்றையும் வாங்கினார்கள் கதிர் மற்றும் மீனுவின் குடும்பத்தினர்.
கதிர் கனவுலோகத்தில் மிதந்து வந்தான் ( பாவம் இவனோட கனவு என்ன ஆக போகுதோ…???)
நிச்சயதார்த்த நாளும் வந்தது……
வீடே சொந்த பந்தங்கள் சூழ்ந்து நிற்க நேரமில்லாமல் வேலைகள் நடந்தது…
அர்ஜுனை சிந்து அழைத்து வேகமாக வீட்டிற்கு வருமாறு கூறினாள் . மீனுவின் தோழிகளான திவ்யா மற்றும் பவிக்கும் அழைப்பு விடுத்தனர்.
கதிர் மாப்பிள்ளை என்ற தோற்றத்தில் கம்பிரமாக இருந்தான். சிகப்பு நிற சட்டையும் அதற்கு ஏற்றார் போல் வேஷ்டியும் அணிந்திருந்தான்.
மீனுவும் சிகப்பு நிற புடவையில் பச்சை நிற பாடர் வைத்த பட்டு புடவையில் தேவதையாக மின்னினாள் .
செல்வா மட்டும் இல்லாத வேலையையும் தேடித்தேடி செய்து கொண்டு இருந்தான். எங்கே இதையெல்லாம் பார்த்து தான் கண் கலங்குவது யாரேனும் பார்த்து விடுவார்களோ என்ற பயத்தில் தான் இல்லாத வேலையெல்லாம் செய்து கொண்டு இருந்தான்.
அர்ஜுன் சிந்து கூறியதனால் ,, வேகவேகமாக கிளம்பி மீனுவின் வீட்டின் முன் தன் வண்டியை நிறுத்தினான்.
அவன் வந்து அங்க பார்க்கும் போது வீடே கலகலப்பாக இருக்க,,இங்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் குழம்பி நிற்க..,,”அட உள்ள வாங்க அண்ணா என்ன வெளியவே நிக்கிறீங்க’ என்று அர்ஜுனை உள்ளே அழைத்து இல்லை இல்லை இழுத்து சென்றாள் சிந்து.
அர்ஜுன் உள்ளே வந்ததும் அங்கு செல்வா இருப்பதை பார்த்து திடுக்கிட்டு நின்றான்.செல்வாவோ அர்ஜுனை பார்த்து  புன்னகைத்து சென்றான்.
“இங்க என்ன நடக்குது சிந்து…????” என்று தன் கேள்வியை அர்ஜுன் கேட்க “இன்னைக்கு அக்காக்கு எங்கேஜ்மண்ட் “என்று சொல்ல அவன் உடனே செல்வாவை பார்க்க அவனோ எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டு இருந்தான்.
அர்ஜுனை பார்த்த மீனு புன்னகையை மட்டும் பதிலாக அளித்தாள்.
பின் ஐயர் நிச்சய பத்திரிகை படித்த பிறகு இரு குடும்பத்தாரும் தாம்பூலம் மாத்திக்கொண்டனர் .
இங்கே தாம்பூலம் மாற்றிக்கொண்டு கதிர் மற்றும் மீனுவிடம் நிச்சய ஆடையை கொடுத்து மாற்றி வர சொல்ல அவர்களும் சென்றனர். செல்வா தனியாக ஒரு அறைகுள் இருந்து அழுது கொண்டிருக்க தன் பின்னால் யாரோ கை வைப்பது தெரிந்து வேகவேகமாக தன் கண்களை துடைத்து கொண்டு திரும்ப அங்கே அர்ஜுன் கோபமாக நின்று கொண்டு இருந்தான்.
அர்ஜுனை பார்த்த அடுத்த நொடி தாயை கண்ட சேய்யைப் போல் அவனை கட்டிக்கொண்டு அழ தொடங்கினான்.அவன் அழுகையை பார்த்த அர்ஜுன் அவன் அழுகட்டும் என்று தன் தோளில் சாய்த்து கொண்டான்.
சிறிது நிமிடம் அழுத செல்வா ,,தன்னை தானே தேற்றிக்கொண்டு அர்ஜுனை பார்க்க அவன் முகம் கோபத்தில் சிவனை போல் காட்சி அளித்தது.
அர்ஜுனும் செல்வாவும் அந்த அறையில் பேசிக்கொண்டு இருந்ததை ,,அந்த அறைக்கு வெளியே நின்ற ஒரு உருவம் அதை கேட்டு திடுக்கிட்டுட்டு சென்றது.
உடை மாற்றி வந்த இருவரும் ,,நிச்சய மோதிரங்கள் மாற்றிக் கொண்டனர்.
செல்வாவின் துடிப்பை பார்த்து அர்ஜுன் அவனை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டான்.
அங்கு அனைவரும் சந்தோஷத்தில் மிதந்தனர்.
நிச்சயம் முடிந்த பிறகு கதிரின் குடும்பத்தினர் மட்டும் வெளியேறினர் .
இன்னும் ஒருவாரத்தில் திருமணம் ,,இனி தன் வாழ்வில் வசந்தம் தான் என்று மணக்கோட்டை கட்டிக்கொண்டு இருந்தான் கதிர்.
இத்திருமணம் நல்ல படியாக நடக்குமா ???யார் யாருடன் சேர்வர்….????

Advertisement