Advertisement

நினைவினில் நிறைந்தவளே
அத்தியாயம் 14
அந்த அழகான காலை பொழுதில் கதிரவன் தன் இமைகளை திறந்து கொண்டு ,,இனி தான் தான் எல்லாருடைய வாழ்விலும் வெளிச்சத்தை கொண்டு வர வேண்டும் என்று நினைத்து பூமியில் உதித்தது. இனி எல்லாவற்றையும் தன்னவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் மதி தன் இடத்திற்கு சென்று தன்னை மறைத்துக் கொண்டது…
கண்ணாடியின் முன் தன் பிம்பத்தை ஒன்று இரண்டு முறை சரிப்பார்த்து கொண்டு இருந்தாள் மீனு. ஏனென்றால் இது அவளை பொருத்த வரைக்கும் முதல் முறை பிரசன்டேஷன் செய்யப்போகும் நாள்.இதில் எந்த ஒரு தவரும் வர கூடாது என்று எண்ணினாள் .
தனக்கு தேவையானவை அனைத்தையும் எடுத்து கொண்டு அவள் வேலை பார்க்கும் கம்பெனிக்கு சென்றாள்.
அங்கே சென்றவளுக்கு ஆச்சரியமாக இருந்தது இன்று தான் வேலை பார்க்குமா கம்பெனியா இது என்று இருந்தது.
என்றும் எப்பொழுதும் ஒரு அமைதி நிலவும் அந்த கம்பெனியில் இன்று ஒரே சலசலப்பாக இருந்தது.
எதற்காக இந்த சலசலப்பு என்று தன் காதுகளை தீண்டி கேட்க தொடங்கினாள்..
“இன்னைக்கு நம்ம ஆஃபிஸ்ல ஒர்க் பண்ற எல்லா ஆண்களும் புதிதாக வந்த லீடையே வச்ச கண்ணு வாங்காமல் பார்த்துட்டு இருக்காங்க ” என்று ஒருவள் கூற
“ஆமாம் டி அவளும் அவ உடையும் பாக்கவே சகிக்கல” என்றாள் இன்னொருவள் .
“அப்படி யாரு வந்துருப்பா …??? ‘என்ற சிந்தனையில் வந்தவள் யாரோ ஒருவரின் மீது மோதி கீழ விழ பார்க்க ,,அவளை ஒரு வல கரம் அவளது இடையை பிடித்து நிறுத்தியது .கீழே விழப் போகிறோம் என்ற பயத்தில் கண்களை இறுக்கி மூடியும்,, தான் இன்னும் கீழே விழவில்லை என்று தெரிந்து மெதுவாக தன் கண்களை திறந்து பார்க்க செல்வா அவளை பார்த்துக் கொண்டு இருந்தான்.
அந்த பார்வையில் தன்னை தொலைக்க தொடங்கியவள் ,,அடுத்த நிமிடமே அவள் தன்னை சுதாரித்து கொண்டு அவனிடம் இருந்து விலகி நின்று ஒரு முறை முறைத்து விட்டு அந்த இடத்தை விட்டு மறைந்தாள்.
அவனை விட்டு வெகு தூரம் வந்த பிறகே சீராக மூச்சு விட முடிந்தது அவளால்.
“தான் இனி ஒரு போதும் செல்வாவின் கண்களை பார்க்க கூடாது.நமக்கு கதிருடன் திருமண நடக்க போகுது இனி கதிர் தான் தன் வாழ்க்கை “என்று முடிவெடுத்து விட்டு ,, தன் வேலைகளை செய்ய தொடங்கினாள்.
பிரசன்டேஷன் செய்ய வேண்டிய நேரம் வரவும் அனைவரும் கான்ஃபெரன்ஸ் அறைக்கு சென்றனர்.
கதிர் செல்வா மற்றும் அந்த லீட் மட்டும் வரமால் இருக்க,,மீனு சிறிது பயத்துடனே அந்த அறையில் உட்கார்ந்து இருந்தாள்.
சிறிது நேரத்தில் செல்வா உள்ளே வர, அவன் பின்னால் வந்த பெண்ணை பார்த்து மீனு அதிர்ந்து நின்றாள்.
பின்பு ,,அந்த பெண்ணை அவள் இடத்தில் உட்கார வைத்துவிட்டு செல்வா தன் டிம் மெட்ஸிடம் பேச தொடங்கினான்.
“இன்னும் சிறிது நேரத்தில் பிரசன்டேஷன் ஆரம்பமாகிவிடும் . இன்னொரு லீடை அழைத்து வர கதிர் சென்றுள்ளான் . அவர்கள் வந்தவுடன் நாம பிரசன்டேஷனை ஆரம்பிக்கலாம்” என்று சொல்லிவிட்டு தனக்கான இருக்கையில் அமர்ந்து கொண்டான் செல்வா.
____________________________________________________
முகில் எழுந்து காலை கடன் அனைத்தையும் முடித்துவிட்டு கீழே வந்து நாற்காலியில் அமர்ந்தவனுக்கு மணக்க மணக்க தன் அன்னையின் கையால் போட்ட காஃபி தரப்பட அதை அவன் ரசித்து ருசித்து குடித்து கொண்டு இருந்தான்.
“ஏன்டி வளரு கொஞ்சம் காஃபி எடுத்து வா “என்று கூறிக்கொண்டே தன் அறையில் இருந்து வந்தார் எண்பது வயது மிக்க பாட்டி சாந்தாயி .
“இதோ கொண்டு வறேன் அத்தை” என்று சொல்லிவிட்டு வேகமாக சமையலறைக்கு சென்றார் வளர்மொழி .
யாரோ தன்னை பார்த்து கொண்டு இருப்பது போல் உணர்ந்த முகில் ,, நிமிர்ந்து பார்க்க தனக்கு முன் இருந்த சோஃபாவில் அமர்ந்து ஒரு ஏலன பார்வையை பார்த்து கொண்டு இருந்தார் சாந்தாயி.
“ஏன் இந்த பாட்டி நம்மள பாத்து ஒரு மாதிரி மாதிரி ,,இந்த நேரம் பாத்து ஆதி இல்லாம பொய்ட்டானே .ஊருக்கு வரும்போது அவனை ஊருக்கு வர சொல்லி இருக்கனும் தப்பு பண்ணிட்டேன் …இல்ல இல்ல பாவம் ஆதி அவனால எப்படி இங்க இப்போ வர முடியும் .அவன் தான் ட்ரேய்னிங் பொயிருக்கானே “என்று மனதுடன் ஒரு பேச்சு வார்த்தை நடத்தி விட்டு சாந்தாயி பாட்டியை நோக்கி சென்றான் .
“இந்த சனியன் எதுக்கு நம்மள பாத்து வரான் ,,இவன பார்த்தாலே அந்த நாள் நல்லா போகாது ..,,இந்த லச்சனத்துல இந்த சனியன் நம்மள பாத்து வேற வருதே” என்று மனதில் அவனை கருவிக்கொண்டு இருக்க அவன் சாந்தாயி பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.
“பாட்டி மா நல்லா இருக்கிறீங்களா …???’ என்று பாசத்துடன் கேட்க
“அதான் நீ வந்துட்டள இனி நாங்க நல்லா இருந்த மாதிரி தான்” என்று வெடுக்கென்ன பேசினார் சாந்தாயி.
இதையெல்லாம் பார்த்தும் எதுவும் செய்யவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் தவித்துப்போனார் வளர்மொழி.
சாந்தாயி பேசினது முகில் மனதில் வருத்தம் ஏற்படுத்தினாலும்,” இது எப்போதும் நடப்பது தான் அம்மா எனக்கு இதில் எந்த ஒரு வருத்தமும் இல்லை “என்று தன் அன்னைக்கு கண் அசைவில் புரியவைக்க முயன்றான்.
அவனின் சமாதானத்தை ஏற்றுக்கொண்டு ,,அத்தை கேட்ட காஃபியை போட்டு கொண்டு வந்து அவரிடம் கொடுத்தார்.
“இந்தா வளரு …உன்கிட்ட காஃபி கேட்டு எவ்வளவு நேரம் ஆச்சி .இப்படி ஆடி அசஞ்சி கொண்டு வந்து தர “என்று அவரை திட்ட, இதை பார்க்க முடியாத முகில் “இப்போ எதுக்கு பாட்டி என் அம்மாவ திட்டுறீங்க “என்க
“அம்மாவாம் அம்மா யாரு யார பாத்து அம்மான்னு சொல்றதுன்னு ஒரு இது இல்ல ..,,இந்த அனாதைய வீட்ட விட்டு தொறத்துன்னு சொன்னா கேட்டா தானே எல்லாம் இந்த சக்கரபாணிய சொல்லனும் “என்று தன் மனதில் நினைத்து கொண்டு முகிலை பார்த்து ஒரு முறைப்பை‌ பதிலாக அளித்து விட்டு “நான் ரூம்க்கு போறேன்‌” என்று கூறிவிட்டு அவறது அறைக்கு சென்றுவிட்டார்.
பின்னர் முகிலும் தனக்கு சிறிது வேலை இருக்கு என்று கூறிவிட்டு அறைக்கு சென்று விட்டான்.
அந்த இருட்டு அறையில் இருந்த சத்தம் மட்டும் நிற்காமல் கேட்டு கொண்டே இருக்க ,,அந்த அறையில் சிறு வெளிச்சம் உண்டாக ,,இதுவரை மிதுனா…மிதுனா .. கூறிக்கொண்டு இருந்தவர் அந்த அறையே அதிரும் படி சிரிக்க தொடங்கினார்.
அந்த அறையை திறந்து கொண்டு ஒருவர் உள்ளே வர ,,”இன்னும் கொஞ்ச நாள் தான் மாமா அப்புறம் உங்கள அக்கா கிட்டயே அனுப்பி வச்சறேன்” என்றான் அங்கு வந்தவன்.
“ஹாஹாஹா….!!!” என்று மீண்டும் சத்தமாக சிரிக்க….
அங்கு இருந்தவனுக்கு கோபம் தலைக்கேறியது.”என்ன மாமா இப்போ எதுக்கு இந்த சிரிப்பு” என்று பல்லை கடித்து கொண்டு கேட்டான் அவன்.
“அடேய் லூசு மாக்கான் …நீ நினைக்கிறது எப்போதும் நடக்காது.உன்ன அழிக்க என் பொண்ணு வருவா டா .உன்னோட சாவு என் ரெண்டு பசங்க கையாலாதான்” என்று சொன்னார் அந்த பாவப்பட்ட மனிதர்.
“மாமான்னு பாக்குறேன் இல்ல உன்ன கொண்ணு போட்டு பொயிட்டே இருப்பேன் “என்று கோபமாக கூற மேலும் அவருக்கு சிரிப்பு தான் வந்தது.
வெளியே நின்று இருந்த அடியாளை கூப்பிட்டு ,”இன்னைக்கு ஃபுல்லா இந்த ஆளுக்கு சாப்பிட எதுவும் தராதீங்க டா” என்று கூறி அவரை பார்த்து ஒரு ஏலன புன்னகை சிந்தி விட்டு சென்றார்.
“இவர் கதையை சீக்கிரம் முடிக்கனும் டா “என்றார் வெளியில் இருந்த அடியாட்களிடம் ….”அந்த பொண்ண கொன்றதே நாம தான் நம்மல கொல்ல அவ வருவாலாம் ..ஹாஹாஹாஹா” என்று சிரித்துவிட்டு அந்த இடத்தை விட்டு சென்றான்.
____________________________________________________
சிறிது நேரத்தில் கதிர் மற்றொரு லீடையும் அழைத்துக் கொண்டு கான்ஃபேரன்ஸ் அறைக்கு வந்தான்.
கதிர் அறைக்குள் உள்ளே வர ,,இந்த முறை கதிருக்கு அதிர்ச்சியாக இருந்தது.
அவன் பின்னே உள்ளே வந்த மற்றோரு லீடை பார்த்து மீனுவிற்கு மேலும் அதிர்ச்சியாக இருந்தது.
ஒரே நாளில் ஒரே நேரத்தில் இரண்டு அதிர்வுகளை கண்டவள் தான் செய்ய வேண்டிய வேலையை முழுவதுமாக மறந்து போனாள்.
செல்வா வந்து அழைத்து பேசுமாறு சொல்ல ,,இருவரும் அவர்களை அறிமுக படுத்திக் கொண்டனர்.
அங்கே வந்தவர்களை பார்த்த அதிர்ச்சியில் இருந்தவள் ,, தன் பெயரை யாரோ அழைப்பது போல் உணர சுயநினைவு பெற்று பார்க்க செல்வா தான் அழைத்திருந்தான் .
“மிஸ் .அஞ்சனா இப்போ நீங்க உங்க பிரசன்டேஷன்ன ஆரம்பிங்க” என்று கோபத்தை அடக்கி கொண்டு சொன்னான்.
அங்கு நடந்த எதையும் கதிர் கவனிக்கும் நிலையில் இல்லை என்று பார்த்தால் அவனுடன் இருந்த அனைவரும் கனவு உலகில் மிதந்தது கொண்டு இருந்தனர்.
ஆண்கள் அனைவரும் அந்த அழகு தேவதையையும் ,, பெண்கள் அனைவரும் அங்கு இருந்த ஹேன்சம்மை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
ஆனால் அவர்களோ மீனுவுடைய பிரசன்டேஷனை கவனித்து கொண்டு இருந்தனர்.
எப்படியோ பிரசன்டேஷனை முடித்த மீனு ,,அங்கு இருந்த அனைவரையும் பார்க்க அவர்கள் அனைவரும் அமைதியாக இருந்தனர் .
மீனுவிற்கு தான் பயமாக இருந்தது‌ ,,எங்கே தான் செய்த பிரசன்டேஷன் பிடிக்கவில்லையோ என்று நினைத்து செல்வா மற்றும் கதிரை பார்க்க அவர்களும் அமைதியாக இருந்தனர்.
அடுத்த நொடியே அங்கே கைத்தட்டல் சத்தம் கேட்கவே மீனுவிற்கு நிம்மதியாக இருந்தது.
“எனக்கு உங்க பிரசன்டேஷன் பிடிச்சிருக்கு ,,மேற்க்கொண்டு பாக்கலாம்” என்றாள் அந்த பெண் லீட்.
அதன் பின் மீட்டிங் முடிய அனைவரும் வெளியே சென்றனர்.
கதிர் அவன் இருக்கையில் அமர்ந்து கொண்டு ,,” இவ எங்க இங்க வந்தா …??? அதும் என்கிட்ட இங்க வரேன்னு எதுவும் சொல்லையே …??? என்று மனதில் பல கேள்விகள் உருவானது .
செல்வா மற்றும் அந்த லீட் இரண்டு பேர் மட்டும் கான்பரன்ஸ் அறையில் இருக்க ,, மீனு வேகமாக உள்ளே வந்து இருவரையும் பார்த்து முறைத்து கொண்டு நின்றாள்.

Advertisement