Advertisement

நினைவினில் நிறைந்தவளே
அத்தியாயம் 13
கதிர் தன் மனதில் உள்ள காதலை செல்வாவிடம் பகிர்ந்து கொண்ட சந்தோஷத்தில் வீட்டிற்கு ஆனந்தமாக சென்றான்.
சிந்து கல்லூரியில் தன் தோழிகளிடம் அந்த புகைப்படத்தை காட்டி தன் மகிழ்ச்சியை தெரிவித்தாள். அதுக்கு அவள் தோழிகள் அனைவரும் treat வேணும் என்று கேட்க ,,அவளும் தருவதாக கூறினாள்.
மாலை நேரம் வரவும் சிந்துவும் அவளது தோழிகளும் கிளம்பி ஒரு மாலுக்கு சென்றனர்.
பர்கர் கிங் சென்று அவர்களுக்கு விருப்பமான பர்கர்களை சாப்பிட்டனர்.பிறகு யீவினிங் ஷோ nnor படத்தை பார்க்க சென்றுவிட்டனர்.
வீட்டிற்கு வந்த செல்வா தன்னை தனிமை படுத்தி கொள்ள விரும்பாமல் தேவையே இல்லாத வேலையை எல்லாம் செய்ய தொடங்கினான்.
இதையெல்லாம் கவனித்து கொண்டு இருந்த அர்ஜுனிற்கு கவலையாக இருந்தது.தன் நண்பனுக்கு மட்டும் ஏன் தான் இவ்வளவு கஷ்டம் கடவுள் தருகிறானோ தெரியலையே என்று மனம் வருந்தினான்.
ஆனாலும் அர்ஜுன் செல்வாவிடம் எதுவும் பேசவில்லை.
மீனுவிற்கு தான் எடுத்த முடிவு சரியா ??தவறா?? என்று தன் மூலையையும் மனதையும் போட்டு குழப்பிக் கொண்டு இருந்தாள்.
பின் ,,தன் தந்தை மற்றும் அன்னையின் மகிழ்வை கண்டு தான் எடுத்தது சரியான முடிவு தான் என்று தன் மனதிற்கு பதில் தந்தாள்.
ஆனால் அவளது மனமோ ,”நீ சரின்னு சொன்னது சரியா .?? அப்புறம் ஏன் நீ செல்வாவ பத்தி கவல படுற” என்றது.
அதற்கு அவளது மூலையோ ” அது ஒரு சாதாரண விஷயம் .இத சொல்லி அவள குழப்பி விடாத நீ ” என்றது.
“எது சாதாரண விஷயம் …??? அவனோட பேருக்கு அர்ச்சனை பண்றதா” என்று எதிர் கேள்வி கேட்டது அவளது மனது. இதை கேட்ட மீனுவிற்கு அதிர்ச்சியாகவே இருந்தது. அவள் இதை எதிர் பார்க்கவே இல்லை ,, இப்படி ஒரு கேள்வி அவளது மனம் எழுப்பும் என்று.
ஆனால் மீனுவோ இதை பற்றி இனி யோசிக்கவே கூடாது என்று முடிவெடுத்து விட்டு தன் வேலையை செய்ய தொடங்கினாள்.
சிந்துவும் அவளது தோழிகளும் படத்தை பார்த்து விட்டு கிளம்ப மணி எட்டை தொட்டு இருந்தது.
“ஹே சீக்கிரம் வாங்க டி ..,, இல்லைன்னா அந்த வார்டன் குரங்கு கிட்ட திட்டு வாங்குவோம்” என்று சிந்து சொல்ல அதற்கு அவளது தோழி ஒருத்தி ” அய்யோ பயமா இருக்கு டி..,,அந்த மங்க்கி நம்மள சும்மா விடாது டி ” என்றாள்.
“ஹே அதெல்லாம் அந்த மங்க்கி கிட்ட இருந்து தப்பிச்சறலாம் .,நீங்க சீக்கிரம் வாங்க “என்றாள் சிந்து.
பிறகு அனைவரும் வேகவேகமாக நடக்க,, ஹாஸ்டல் வரவும் காம்பௌண்ட் வால் ஏறி குதித்தனர்.
சிந்து மட்டும் ஏறாமல் அப்படியே நிற்க ,,”ஹேய் சீக்கிரம் ஏறி தொலை டி அந்த மங்க்கி ரௌன்ஸ் போகுது டி” என்று அவளது தோழி கத்த.
“இதோ மச்சி “என்று அந்த இடத்தை சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு காம்பௌண்ட் வால் ஏறி குதித்து ஹாஸ்டலுக்குள் சென்றாள்.
இதை எல்லாம் இரு கண்கள் பார்த்து சிரித்து கொண்டு இருந்தது இல்லை இல்லை ரசித்து கொண்டு இருந்தது.
ரூம்மிற்கு சென்றும் சிந்து அமைதியாகவே இருந்தாள்.
“ஹப்பா…!!! இப்பதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு அந்த காட்ஜில்லா கிட்ட இருந்து தப்பிச்சாச்சு “என்று கூறிவிட்டு ஒரு பெருமூச்சை இழுத்து விட்டாள் ஒருவள் .
“யாரு அந்த காட்ஜில்லா முன்னாடி திட்டு வாங்குவது’ என்றாள் இன்னொருவள் .
“யார் அந்த காட்ஜில்லா” என்று கேட்டுக்கொண்டே அந்த அறையினுள்  நுழைந்தார் வார்டன்.
சிந்துவை தவிர அந்த அறையில் இருந்த மூவருக்கும் பேர் அதிர்ச்சியாக இருந்தது.மூவரின் மனதும் ” இன்னைக்கு நீங்க செத்தீங்க ” என்று சொல்லி சிரித்தது.
“மேம் அதெல்லாம் யாரும் இல்லை … நாங்க காட்ஜில்லான்னு சொல்லல மேம் காட் ஸ் ஆல் என்று தான் சொன்னோம் ” என்றாள் மூவருள் ஒருத்தி. அதற்கு பதிலளிக்கும் விதமாக ஆமாம் என்று பூம்பூம் மாடு போல் தலையாட்டினர் மற்ற இருவரும்.
“ஓஓஓஓஓ “என்று சொல்லி ஐந்து நிமிடம் மூச்சு விடாமல் திட்டிவிட்டு சென்றார் அந்த வார்டன்.
அந்த வார்டன் சென்ற அடுத்த நொடி ,,தன் காதுகளில் வைத்திருந்த பஞ்சை எடுத்து தூக்கி எறிந்தார்கள்.
சிந்து மட்டும் அமைதியாகவே இருக்க,,இதை கவனித்த ஒருத்தி அவளிடம் சென்று,” என்ன ஆச்சு சிந்து உடம்பு எதுவும் சரியில்லையா “என்று அவள் நெற்றியை தொட்டு பார்த்த படியே கேட்க,, அப்போது தான் தன் நினைவுகளில் இருந்து வெளி வந்தவள்,” என்னடி பண்ற …??? அந்த காட்ஜில்லா கிட்ட இருந்து எப்படியோ சப்பிச்சிட்டோம்” என்று பேசிக்கொண்டு போனவளை வினோதமாக பார்த்தனர் மூவரும்.
“ஏன் டி இப்படி பாக்குறீங்க…???? “என்க
” அடியே அந்த காட்ஜில்லா வந்தது உனக்கு தெரியாது” என்று அங்கிருந்த ஒருவள் கேட்க சிந்துவோ ” என்னது காட்ஜில்லா வந்துச்சா….???? எப்போ வந்துச்சி ….????” என்று தெரியாமல் கேட்க,
” அடியே அந்த காட்ஜில்லா வந்தது மட்டும் இல்லாமல் அழாக ரொம்பவே ஸ்வீட்டா பேசிட்டு போச்சி” என்றாள் மற்றொருவள்.
இதை கேட்டு சிந்து சிரிக்க ,,”உனக்கு இங்க நடந்த எதுவுமே ஞாபகத்துக்கு இல்லையா” என்றாள் அவள் தோழி, அதற்கு சிந்து இல்லை என்று தலையாட்டினாள்.
“அப்ப மேடம் அப்படி என்னத்தை சீரியசா யோசிச்சீங்க” என்று அவளது இன்னொரு தோழி கேட்க ,,
“இல்ல மச்சி மால்க்கு போய்ட்டு ஹாஸ்டல் காம்பௌண்ட் வால் ஏறி குதிக்கும் போது யாரோ நம்மள ஃபாலோ பண்ண மாதிரியே இருந்துச்சி டி,, அதுமட்டுமல்லாமல் எனக்கு ஏதோ ஒரு மாதிரி இருந்துச்சி. இந்த மாதிரி ஒரு ஃபீல் எனக்கு இதுக்கு முன்னாடியும் ஏற்பட்டு இருக்கு “
அவள் சொல்வதையே கேட்டுக்  கொண்டிருந்த மூவருக்கும் இவளுக்கு எதாவது அடிகிடி பட்டுருச்சா என்று யோசிக்க தொடங்கினர்.
மூவரும் தன்னை கிண்டல் அடிக்கிறார்கள் என்று தெரிந்த அடுத்த நொடி அங்கே தலைகாணி சண்டை  நடந்துக் கொண்டிருந்தது .
——————————————————————-
சென்னையில் உள்ள பெரிய மருத்துவமனையில் மருத்துவராக வேலை பார்த்து கொண்டிருப்பவன் தான் முகில் . தன் குடும்பத்தையும் தன் சொந்தப் பந்தங்களையும் ஒன்று சேர்ப்பதற்காகவும் தன் மாமன் மகளை கண்டு பிடித்து அவள் உயிரை காக்கும் நோக்கத்துடன் தான் இங்கு வேலை பார்க்கிறான் .
தன் சொந்தங்கள் கண் முன்னாடி இருந்தும் எந்த உண்மையும் சொல்ல முடியாமல் தவிக்கும் இருபத்தியாரு வயது இளைஞன்.
முகில் தன் அறையில் இருந்து கொண்டு இரண்டு நாளைக்கு தகுந்தாற்போல் உடமைகளை ஒரு பையில் எடுத்து வைத்து விட்டு ஹாஸ்பிடலில் வேலை பார்க்கும் மற்றொரு மருத்துவருக்கு அழைப்பு விடுத்து அவன் செய்ய வேண்டிய ஷெட்டூளை சொல்லிவிட்டு தான் இரண்டு நாட்களுக்கு வரமாட்டேன் என்று கூறி அழைப்பை அணைத்தான்.
பின்,,தன் பையை எடுத்துக்கொண்டு தனது காரில் ஏறி விமானம் நிலையத்திற்கு சென்றான்.
அவன் ஏறிய விமானம் திருச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தது.
ஒன்றரை மணி நேரம் கழித்து திருச்சியை அடைந்த முகில் ஒரு கேப் புக் செய்து ,,அதில் ஏறி தனது இருப்பிடத்தை நோக்கி பயணம் செய்தான்.
அந்த கார் பனையபுரம் உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற பலகையை தாண்டி சென்று கொண்டிருந்தது .
சாலையின் இருபுறமும் மரங்களும் வயல்களுமாக இருந்தது (அந்த கார் போகட்டும் நாம இந்த ஊர சுத்தி பாத்துட்டே போகலாம் ).

திருச்சியில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தள்ளி இருக்கும் ஊர் தான் பனையபுரம் .எங்கு பார்த்தாலும் இயற்கை வளம் அதிமாக காணப்படும் ஊர் . வயல்வெளிகள் கால்வாய்கள் போன்று இருப்பவை தான் அந்த கிராமம். அந்த கிராமத்தில் இல்லாத வசதி இல்லை. அனைத்து வசதிகளையும் அந்த ஊருக்காக செய்து கொடுத்திருந்தார் ஊர் தலைவர்.

பரம்பரையாக அந்த ஊருக்காக நல்லது மட்டுமே செய்து கொண்டு வந்தனர் அந்த குடும்பத்தினர். அந்த ஊரில் வரும் ஒவ்வொரு பண்டிகையையும் திருவிழாக்களும் சிறப்பாக செய்து கொடுப்பார்கள் அந்த வீட்டு பெரியவர்கள்.

ஆனால் இன்று அங்கு எந்த விதமான திருவிழாக்களும் சிறப்பாக நடைபெறுவது இல்லை.

அந்த ஊரில் அன்று நடந்த அந்த சம்பவத்திற்கு பிறகு எதுவும் சிறப்பாக நடப்பதில்லை.

முகிலின் கார் நேராக ஒரு பெரிய வீட்டின் முன் நின்றது.

காரை விட்டு இறங்கியவன் ,,நேராக தன் அத்தை மற்றும் மாமாவின் புகைப்படத்திற்கு முன் நின்று வணங்கி விட்டு தன் தாய் தந்தையரை காண சென்றான்.

முகிலை பார்த்த அவனது தாய் ” வாப்பா ராசா ..!!! எப்படி இருக்க….???? இப்போ தான் உனக்கு இந்த அம்மாவை பாக்கனும்னு தோன்னுச்சா ராசா….????? ” என்றார் வளர்மொழி அவனின் தாய் .
” நான் நல்லாயிருக்கேன் மா…ம்மா உங்களுக்கு தான் நல்லா தெரியும்ல எனக்கு என்னோட வேலை எவ்வளவு முக்கியம்னு ..அது தெரிஞ்சும் நீங்க இப்படி பேசுறது எனக்கு கஷ்டமா இருக்கு ” என்று வராத கண்ணீரை துடைத்து கொண்டான்.
“டேய் ராசா ….இதுக்கு எதுக்கு இப்போ கண் கலங்கி நின்னுட்டு இருக்க “என்று அவனது அன்னை துடைத்து விட
இதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்த சக்கரபாணி ,, ஏய் வந்த புள்ளைய என்ன நிக்க வச்சி பேசிட்டு இருக்க ..,,போ போய் தம்பிக்கு சாப்பிட ஏதாவது குடு போ ” என்று தன் மனைவியிடம் கூற அவளும் சரிங்க என்று கூறி சமையலறை நோக்கி சென்றார்.
இங்கே இவர்கள் இப்படி இருக்க,,
ஒரு பெரிய அறையில் வெளிச்சம் என்பதே இல்லாமல் இருட்டு சூழ்ந்திருக்க ,,அந்த அறையில் ஒருவரது குரல் சத்தம் மட்டுமே ஒலித்து கொண்டு இருந்தது.
“மிதுனா….மிதுனா…”என்பது மட்டுமே அந்த குரலுக்கு உரியவர் சொல்ல அதற்கு பதிலாக அந்த அறை மீண்டும் அந்த பெயரை சொல்லியே எதிர் ஒளித்தது.
அந்த பெயருக்கு உரிய பெண்ணிற்கே தெரியாது ,,இது தான் அவளது பெயர் என்று.
தன் பெயரை மட்டுமே ஜபமாக கூறும் ஒருவர் இருக்கிறார் என்று தெரியாமல் தன் வாழ்வை நோக்கி பயணித்து கொண்டு இருக்கிறாள் அவள்.
முகில் பல நாட்கள் கழித்து தன் அன்னையின் கைப்பக்குவத்தில் வயிறு வலிக்கும் வரை சாப்பிட்டவன் ,, தன் அறைக்கு சென்று ஓய்வெடுக்க தொடங்கினான்.
——————————————————————-
சென்னையில் மீனு கதிர் செல்வா மற்றும் அவர்களது டிம் மெட்ஸ் அனைவரும் இரவு பகல் பாராது உழைத்தனர்.
எப்படியாவது இதில் வெற்றி அடைய வேண்டும் என்று எண்ணினர்.
கதிர் மட்டும் இன்னொரு வேலையையும் சேர்த்து கவனமாக பார்த்துக்கொண்டு இருந்தான் ( அதாங்க நம்ம மீனுவ சைட் அடிக்கிறது தான் ).
மீனுவிற்கு கதிர் தன்னை பார்ப்பது தெரிந்தும் அவள் அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. தன் வேலையில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருந்தாள்.
ஆனால் இதை பார்த்து மனதளவில் நொறுங்கி போனான் செல்வா .
செல்வா மீனுவிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்த்து கொண்டான். ஏதேனும் வேலை விடயம் என்றால் மட்டுமே அவளிடம் பேசினான் .
இது மீனுவிற்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.தன்னை ஏன் செல்வா தவிர்க்கிறான் என்று தெரியாமல் அவளும் குழம்பி போனாள்.
இப்படியே ஒரு வாரம் சென்றது…..
அவர்கள் அந்த பிராஜெக்ட் பிரசன்டேஷன் செய்யும் நாளும் நெருங்கியது.
மீனுவிற்கு சிறிது பயமாகவே இருந்தது…,, தான் இதை சரிவர செய்வோமா என்று ….????
கதிர் தான் மீனுவிற்கு பக்கபலமாக இருந்தான்.அவனது ஆறுதல் மீனுவிற்கு இப்பொழுது தேவையாகவே இருந்தது.
அன்று இரவு முழுதும் மீனுவிற்கு தூக்கம் வரவே இல்லை. நித்திரைதேவி அழைக்கும் வரை முழித்து இருந்தவள்,, அவள் அழைக்கவும் உறங்கி விட்டாள்.
அடுத்தநாள் வரப்போகும் லீட் யாராக இருக்கும் என்று தெரியாமல் செல்வா மீண்டும் ஒருமுறை அந்த பிரசன்டேஷனில் ஏதேனும் தவறு இருக்கிறதா என்று தனது லேப்டாப்பை பார்த்து கொண்டு இருந்தான்.
ஆனால் கதிரோ மீனுவுடம் கனவில்

அன்பே அன்பே

பேரன்பே பேரன்பே

ஏனோ இரவோடு ஒளியாய்கூடும்

உறவொன்று கேட்கிறேன்

வரை மீறும் இவளின் ஆசை

நிறைவேறப் பார்க்கிறேன்

நதி சேரும் கடலின்மீது

மழை நீராய் சேருவேன் ??

என்ற பாடலுக்கு டூயட் ஆடி கொண்டு இருந்தான்.

அடுத்தநாள் கதிரவன் தன் வேலையை காண ஓடோடி வந்தது…மதி அதற்கேற்றாற் போல் தன்னை மறைத்துக் கொண்டது.

இன்று மூவருக்கும் அதிரடியாக பிறந்திருந்தது..இதனை அறியாமல் மூவரும் அவரவர்களது வேலையை செய்து கொண்டு இருந்தனர்.

வரப்போகும் நபரை பார்த்தால் என்ன நடக்குமோ தெரியவில்லை…..

அவர்களின் வருகை இவர்கள் வாழ்வில் புயல் வீசுமா …??? அல்லது வசந்த காற்று வீசுகிறதா..??? என்று பார்ப்போம்.

Advertisement