Advertisement

நினைவினில் நிறைந்தவளே
அத்தியாயம் 12
வலிகளை சுமந்துகொண்டு
பிறரிடம் மகிழ்வாக
நடிப்பதும் ஒருவித
வலியை ஏற்படுத்தும்….
கதிர் தன் வலிகளை மறைத்து கொண்டு தன் அன்னையுடன் மீனுவின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான்.
அங்கு செல்வா அரை மயக்கத்தில் இருந்தும் ,,அவன் உச்சரித்தது மீனுவின் பெயரை மட்டுமே . அவனது அறையில் இருந்த அஞ்சலி இதை எதர்ச்சியாக கேட்க ,,அவளுக்கு மீனுவை கொள்ளும் அளவிற்கு கோபம் வந்தது.
“அத்தான் …!!! இந்த அஞ்சலி உங்களுக்காக மட்டும் தான் பிறந்திருக்கா . உங்களுக்கு என்ன மட்டும் தான் பிடிச்சிருக்கனும் . உங்களோட அஞ்சுவா நானா மட்டும் தான் இருப்பேன். நீங்க எனக்காக தான் அத்தான் பிறந்திருக்கீங்க . உங்களுக்காக மட்டும் தான் நான் உயிரோடவே இருக்கேன். அவ மட்டும் உங்கள என்ன விட்டு பிரிக்க பாத்தா அப்புறம் அவ உயிரோடவே இருக்க மாட்டா அத்தான். அவ உயிரோட இருக்கணும்னா நீங்க அவள மறந்து தான் ஆக வேண்டும் “என்று செல்வாவின் தலையை கோதியவாறே பேசிக் கொண்டு இருந்தாள் அஞ்சலி.
கதிர் தன் அன்னையை மீனுவின் வீட்டின் முன் இறக்கிவிட்டு காரை ஓரமாக நிறுத்தி விட்டு தன் மனதை நிதான படுத்தி கொண்டு மீனுவின் வீட்டிற்குள் நுழைய ,,அவன் காதில் விழுந்தது என்னவோ மாப்பிள்ளை பையன் அழகா இருக்கான்,,நம்ம மீனுவிற்கு ஏத்த மாப்பிள்ளை தான் என்றது.
தன் மனதை இறுக்கி கொண்டு ,,நேராக தன் அன்னை இருந்த இடத்தில் சென்று அமர்ந்து கொண்டான் கதிர்.
அந்த இடத்தில் இருந்த பெரியவர்கள் எல்லாம் பேசிக்கொண்டு இருக்க,,அதில் ஒரு பெண்மணி மட்டும் “பொண்ணை அழைச்சிட்டு வா மா சுசிலா ” என்க சரி என்று கூறிவிட்டு மீனுவை அழைத்து வர சென்றுவிட்டார் சுசிலா..
கதிரின் கண்கள் மீனுவிற்கு பார்த்த மாப்பிள்ளையை தேட ,, அவன் கண்களுக்கு மட்டும் அந்த மாப்பிள்ளை தெரியவே இல்லை.
சிறிது நிமிடத்திலே அழகு பதுமையாக வெள்ளை மற்றும் சிவப்பு நிற புடவையில் கோல்டன் ஜறுகை வைத்து பிங்க் நிற பாடர்லில் தேவலோக தேவதையாக அவர்கள் முன் நடந்து வந்தவளை பார்த்த கதிரின் இமைகள் மூட மறுத்தது.
எல்லோருக்கும் தன் வணக்கத்தை தெரிவித்து வந்தவர்கள் அனைவருக்கும் டி கொடுக்க அவர்களும் அதை வாங்கி பருக ஆரம்பித்தனர்.
கதிரிடம் திரும்பிய புவனா ,,”டேய் !கதிர் பாருடா என்னோட மருமகள் எவ்வளவு அழகா இருக்கா “என்க
அதற்கு கதிர் வேகமாக மீனுவை பார்த்து கொண்டே “ஆமா ஆமா” என்று கூறி தலையை ஆட்டிய வேகத்திலே அவன் மூலையில் பொறி தட்ட உடனே தன் அன்னையை பார்க்க புவனாவோ அவனை பார்த்து சிரித்து கொண்டு இருந்தார்.
“கதிர் என்னோட‌ சப்ரைஸ் எப்படி இருக்கு..??” என்று புவனா கேட்க
“அம்மா உங்களுக்கு எப்படி இது தெரியும் “என்பதாக தன் சந்தேகத்தை கேட்க
” எனக்கு என் பையனோட‌ மனச தெரியாத சொல்லு “என்று கூறிவிட்டு மீனுவை அழைத்து தன் வலது பக்கமாக உட்கார வைத்து கொண்டார்.
“அம்மாடி மீனு நீ இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க டா ,,என்னோட கண்ணே பட்டுடும் போல இருக்கே” என்று அவளுக்கு நெற்றி கழித்தார் புவனா.
இதையெல்லாம் பார்த்த சுசிலா மற்றும் ராஜனிற்கு சந்தோஷமாக இருந்தது. தன் மகள் ஒரு நல்ல இடத்தில் வாழ போகிறாள் என்ற நிம்மதியில் இருந்தனர்.
புவனா மீனுவிடம் திரும்பி ” மீனு மா உனக்கு என்னோட பையனை கல்யாணம் பண்ண சம்மதமா ” என்று நேரடியாக கேட்கவே , அவள் சம்மதம் கூற வேண்டும் என்று கதிர் அவனுக்கு தெரிந்த எல்லா கடவுளிடமும் வேண்ட அந்த நேரம் மீனு தன் அன்னை மற்றும் தந்தையின் முகத்தில் இருக்கும் நிம்மதியை பார்த்துவிட்டு புவனாவிடம் திரும்பி தனக்கு இத்திருமணத்தில் சம்மதம் என்றாள்.
அவளது பதிலில் கதிருக்கு தான் தேன் வந்து பாய்ந்தது போல் இருக்க அவனுக்கு இப்போது நடனம் ஆட வேண்டும் போல் தோன்ற இருக்கும் இடம் அறிந்து மனதளவில் டண்டனக்கா பாட்டிற்கு நடனம் ஆடி கொண்டு இருந்தான்.
அவனது ஆட்டத்தை நிறுத்தும் பொருட்டு அங்கு இருந்த பெண்மணி ” பொண்ணுக்கு மாப்பிள்ளைய புடிச்சிருக்குன்னு சொல்லிருச்சி அதே பையனுக்கு பொண்ண புடிச்சிருக்கா ” என்று கேள்வியை முடிப்பதற்குள் “புடிச்சிருக்கு” என்ற பதில் வந்தது..
அதை கேட்ட அனைவரும் சிரிக்க தொடங்க மீனு மட்டும் அமைதியாகவே இருந்தாள்.அவளது அமைதியை அங்கு இருந்த எல்லோரும் வெட்கம் என்று தவறாக புரிந்து கொண்டனர்.
பெரியோர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு மாதம் கழித்து நிச்சயம் அதுக்கு அடுத்த வாரத்தில் திருமணம் என்று முடிவெடுத்தனர்.
பிறகு ‌அனைவருக்கும் இரவு உணவை தயார் செய்திருக்க அதை சாப்பிட்டு விட்டு அவர் அவர்கள் வீட்டிற்கு கிளம்ப தயாராக ,,சுசிலா புவனா விடம் சென்று ” சம்மந்தி என்னோட சின்ன பொண்ணு இப்போ இறுதி ஆண்டு படிச்சிட்டு இருக்கா ,,அவளால்ல இந்த நிகழ்ச்சிக்கு வர முடியலைன்னு போட்டோ எடுத்து அனுப்ப சொல்லி ஒரே டார்ச்சர் .. மாப்பிள்ளையும் மீனுவையும் சேர்த்து ஒரு போட்டோ எடுத்துக்கலாம் அண்ணி ” என்க
கதிருக்கு லட்டு தின்ன ஆசையா என்பது போல் இருந்தது.
“இதுக்கு எதுக்கு அண்ணி என் கிட்ட கேட்டுட்டு இருக்கீங்க .உங்க மாப்பிள்ளை கிட்ட நீங்களே சொல்லுங்க” என்று சிரித்தபடியே கூறினார் புவனா.
கதிர் சுசிலாவிடம் சென்று “அத்தை இதுல என்ன இருக்கு போட்டோ எடுத்துட்டு நானே அந்த வாலுக்கு அனுப்பி வைக்கிறேன். நீங்க எப்போதும் போல என்கிட்ட பேசுங்க ” என்க
” சரிங்க மாப்பிள்ளை “என்றார் சுசிலா.
பிறகு கதிர் தன் மொபைலை அங்கிருந்த ஒரு சிறுவனிடம் கொடுத்து எடுக்க சொல்ல அந்த சிறுவனும் சரி என்றான்.
சுசிலா மீனுவை அழைத்து கொண்டு கதிரிடம் வந்து நிற்க வைத்தார்.அந்த சிறுவன் கதிரையும் மீனுவையும் போட்டோ எடுத்து அவனிடம் கொடுத்துவிட்டு சென்றான்.
இவை யாவையும் மீனு ஒரு பொம்மை போலவே செய்தாள்.
அதை பார்த்த கதிருக்கு மகிழ்ச்சி தாளவில்லை.இனி மீனு தன்னவள் ,,தனக்கு மட்டுமே சொந்தம் என்று மனதில் நினைத்துக் கொண்டான். அந்த புகைப்படத்தை மீனுவிடம் காட்டியும் சந்தோஷ பட்டான்.அவள் அதற்கு வெறும் புன்னகையை மட்டுமே பதிலாக தந்தாள்.
சிந்துவிற்கு அந்த புகைப்படத்தை அனுப்பி வைத்தான்.அதை பார்த்த சிந்துவிற்கு இனியாவது தன் அக்காவின் வாழ்க்கையில் சந்தோஷம் வரட்டும் என்று மனதில் எண்ணினாள்.
பின்னர் கதிர் மற்றும் புவனா அவர்கள் வீட்டிற்கு சென்றனர்.
அந்த இரவு கதிருக்கு ஆனந்தமாக போக மீனுவிற்கு குழப்பமாக சென்றது…
ஒருவாரம் சென்றதே தெரியாமல் சென்றது மூவருக்கும்.
ஒருவாரம் கழித்து உடல்நிலை தேறி ஆஃபிஸ் சென்றான் செல்வா.
செல்வா வந்ததை அறிந்த கதிர்,, தன்னுடைய மகிழ்வை பகிர்ந்து கொள்ள செல்ல நினைக்கும் போது ,,செல்வாவே கதிரை தொடர்பு கொண்டு வர சொல்ல அவனும் அவனது அறைக்கு சென்றான்.
“எக்ஸ் க்யூஸ் மீ மே ஐ கம் இன்” என்று கதவை தட்டி நாகரிகம் கருதி கதிர் கேட்க
” எஸ் கம் இன் கதிர் “என்று கூறிவிட்டு கணினியை பார்த்து கொண்டு இருந்தான்.
“அரைமணி நேரத்துல மீட்டிங் இருக்கு..உங்க டிமோட கான்ஃபெரன்ஸ் ரூம்க்கு வந்திருங்க ” என்று கூறிவிட்டு தன் வேலையை செய்ய ஆரம்பித்தான்.
அரைமணி நேரத்தில் கதிரின் டிம் அனைவரும் கான்ஃபெரன்ஸ் ரூமிற்கு வந்து இருக்க ,,அங்கே ஒரு சலசலப்பு இருந்து கொண்டே இருந்தது. மீனுவும் கதிரும் அமைதியாகவே இருந்தனர்.
கான்ஃபெரன்ஸ் அறைக்குள் நுழைந்த செல்வா ,,”சாரி ஃபார் லேட் ” என்று கூறிவிட்டு “கதிர் நீங்க இப்போ பண்ணிட்டு இருக்கிற பிராஜெக்ட் ஒன் வீக்ல முடிக்கனும் .
இந்த பிராஜெக்ட்ட லீட் பண்றதுக்கு வெளிநாட்டிலிருந்து ஒருத்தர் வர போறாங்க . அது யாருன்னு இன்னும் எனக்கு தெரியல .பட் அவுங்க கொஞ்சம் ஸ்ரிட்க்ன்னு மட்டும் கேள்வி பட்ருக்கேன் .
நாம அவுங்க போகுற வரைக்கும் கொஞ்சம் சேஃவா இருக்கனும் guyss. Don’t do some immature activities..Do all ur works properly and complete it as much as possible. Otherwise they will throw back out and who is going to do the presentation kathir ..?? என்ற செல்லா கதிரை பார்க்க , அதற்கு கதிர் “Selva Anjana is going present our presentation “என்றான்.
“That’s fine . Now you guys can leave this place and carry on ur works “என்று செல்வா கூறிவிட்டு சென்றான்.
அங்கே இருந்த ஒருவள் “ஹே அந்த லீட் யாரா இருக்கும் ..??” என்று கேட்க “எனக்கு தெரியலை “என்றாள் இன்னொருவள்.
“செல்வா மாதிரியே ஒரு ஹான்சன் காய் வந்தா நல்லா இருக்கும் டி ” என்க அதற்கு மற்றவளும் ஆமோதித்தாள்.
செல்வா கதிர் மற்றும் மீனு அவர்களது வேலையில் மும்முரமாக இருந்தனர்.
மாலை நேரம் வரவும் மீனு கதிரிடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு சென்றாள்.
செல்வா வீட்டிற்கு கிளம்பும் நேரம் பார்த்து,கதிர் அவனை வழி மறித்து நின்று கொண்டான்.
“சொல்லு கதிர் ..!! எதுக்கு இப்போ என்ன வழி மறச்சிட்டு இருக்க “
கதிர் “டேய் செல்வா !உன்கிட்ட கொஞ்சம் பேசணும் டா “என்க
” சரி சொல்லு கதிர் ,என்ன பேசணும் ” என்று கைகளை கட்டி கொண்டு கேட்டான் செல்வா .
“இங்க வேணாம் செல்வா, கஃபே டே போகலாம் .அங்க போய் பேசலாம் ” என்று கதிர் செல்வாவை அழைக்க அவனும் அவனுடன் சென்றான்.
“கஃபே டே வந்து பத்து நிமிஷம் ஆச்சி டா கதிர் .என்ன விஷயம் பேசுறதுக்காக கூப்பிட “என்று செல்வா கேட்க..,,
“டேய் செல்வா ..!!! எனக்கு ஃபிரண்ட்ஸ்ன்னு சொல்ல யாரும் இல்லை . நான் அதிகமா யார் கிட்டையும் பேச மாட்டேன் டா. என்னோட ஃபிரண்ட் எல்லாமே என்னோட பவி மட்டும் தான் . அவகிட்ட தான் நான் எல்லாமே சொல்லுவேன். அவகிட்ட நான் எதையுமே மறைச்சது இல்ல. இப்போ அவ வெளிநாட்டில்ல வொர்க் பண்றா .
இந்த விஷ்யத்த நான் என்னோட அத்த பொண்ணான்னா பவி கிட்ட கூட சொன்னது இல்ல. ஆனா இத உன்கிட்ட சொல்லனும்னு தோணுது செல்வா .
“சொல்லு கதிர்…,,நீ என்ன சொல்லனும்னு நினைக்கிறியோ சொல்லு டா” என்று ஊக்குவித்தான் செல்வா.
“எங்க வீட்டில எனக்கு பொண்ணு பாத்துருக்காங்க டா ..,,அந்த பொண்ணு யாருன்னு உனக்கே தெரியுமா..???
அதுவும் நான் காதலிச்ச பொண்ணையே எனக்கு எங்க வீட்ல பாப்பாங்கன்னு நான் நினைச்சி கூட பார்த்தது இல்லை.
பவி எப்பொழுதும் அவளை பத்தி மட்டும் தான் பேசுவா , எனக்கு அப்போதுலாம் தெரியாது , அவள என்னோட உயிருக்கு மேல காதலிப்பேன்னு . இப்ப வரைக்கும் அவ கிட்ட நான் என்னோட லவ்வ சொல்லவே இல்லை. ஆனா இன்னும் ஒரு மாசத்துல அவ எனக்கு பொண்டாட்டியா ஆகிடுவா . என்னோட காதலியாகிறதுக்கு முன்னாடியே என்னோட மனைவியாக போறா டா செல்வா.
நான் அவள மொத தடவை பார்த்தது ,,பவியோட ஃபேர்வெல் டேல தான் டா. அவள பார்த்த அந்த நிமிஷம் தோணுச்சி இவ தான் எனக்கு எல்லாமேன்னு ” .
“இவ்வளோ நேரம் நான் யார பத்தி சொல்றேன்னு தெரியுமா டா செல்வா” என்க
“எனக்கு எப்படி தெரியும் கதிர் ,,நீ சொன்னா தான டா தெரியும்” என்றான் செல்வா “.
“டேய் கொஞ்சம் கெஸ் பண்ணு டா” என்று கதிர் சொல்ல
“அடிச்சுடுவேன் டா ஒழுங்கு மரியாதையா சொல்லிடு “என்று அவனை பார்த்து முறைத்து கொண்டே சொல்ல “சரி சரி கோப படாத நானே சொல்றேன்” என்றான் கதிர்.
“அது வேற யாரும் இல்ல டா என்னோட மீனு தான் அந்த பொண்ணு “என்றான் கதிர்.
கதிர் மீனு என்று சொன்ன அடுத்த நொடி செல்வாவிற்கு தான் அது தன் மீனுவாக இருக்க கூடாது என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டே கதிரிடம் “மீனுனா யாரு டா…????” என்று தனக்கு இருக்கும் சந்தேகத்தை தீர்த்து கொள்ளும் பொருட்டு கேட்டான்.
“ஹே..!!! சாரி டா செல்வா . உனக்கு மீனுன்னா யாருன்னு தெரியாதுல ,,அது வேற யாரும் இல்ல டா அஞ்சனா தான்” என்று அவன் தலையில் குண்டை இறக்கினான்..
எதை கேட்க கூடாது என்று கடவுளிடம் வேண்டினானோ அதையே கேட்டு விட்டான் .தன் உயிரே தன்னை விட்டு பிரிவது போல் இருந்தது.
ஒரு வாரத்துக்கு முன்னாடி நடந்த பெண் பார்த்தது என்ன எல்லாத்தையும் கதிர் செல்வாவிடம் கூறினான்.
மேலும் “மீனுவுக்கு நடந்த ஒரு சின்ன ஆக்சிடன்ட்ல அவளோட பழைய ஞாபகங்கள் மறந்து போச்சி டா” என்று கேட்காத தகவலையும் கூறினான்.
அதை கேட்ட செல்வா மேலும் நொறுங்கி போனான். தன்னவளுக்கு கடவுள் ஏன் இவ்வளவு சோதனை கொடுத்திருக்கிறார் என்று கடவுளின் மேல் கோபம் கொண்டான்.
தன்னவளுக்கு கதிர் தான் மாப்பிள்ளையாக வர போகிறான். இனி அவன் அவளை பார்த்து கொள்வான் என்ற நம்பிக்கை பிறந்தாலும் மனதளவில் நொறுங்கி போனான். .
“Congratulations கதிர் ….!!! அஞ்சனாவை நல்லா பாத்துக்கோ டா .பாக்க ரொம்ப நல்ல பொண்ணா தான் இருக்காங்க” என்று வாழ்த்தினான்.
“கண்டிப்பா டா. அவ என்னோட உயிர் டா” என்றான் கதிர்.
“சரி டா டைம் ஆச்சி கிளம்பலாம் “என்று செல்வா சொல்ல சரி என்று சொல்லிவிட்டு இருவரும் கிளம்பி சென்றனர்.
செல்வாவின் ஆஃபிஸிற்கு வர போகும் புது நபர் யாராக இருக்கும் ….????

Advertisement