Advertisement

நினைவினில் நிறைந்தவளே 
அத்தியாயம் 11
உந்தன் பதிலை
கேட்டு என்
நித்தமும் அடங்கியது…..
அஞ்சனா கூறிய பதிலை கேட்டு கதிரும் செல்வாவும் அதிர்ச்சியில் இருந்தனர்…
அஞ்சனா செல்வாவின் பதிலுக்காக காத்திருக்க..,,செல்வா அந்த அதிர்வில் இருந்து வெளி வர வில்லை என்று அவன் ‌முகத்தை பார்த்தால் நன்றாக தெரிந்திருக்கும்… ஆனால் அதை எல்லாம் அஞ்சனா கவணிக்க தவறினாள்.
செல்வா இன்னும் தனக்கு பதில் தர வில்லை என்று மீண்டும் ” செல்வா” என்று அழைக்க…
செல்வாவும் கதிரும் ஒரு சேர சுயநினைவு அடைந்து நிகழ்லுகிற்கு வந்தனர்
“சரி அஞ்சனா ..!! உங்களுக்கு நான் 1hr பர்மிட் பண்றேன்..இப்போ நீங்க கிளம்பலாம் “என்க அவளும் சரி என்று சொல்லிவிட்டு தன் இடத்திற்கு சென்று தன் பையை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினாள்…
கதிரும் தான் கொண்டு வந்த ஃபைலில் சைன் வாங்கி விட்டு சென்றான்…
செல்வாவிற்கு என்ன செய்வது என்று புரியவில்லை..தனிமை அவனுக்கு தேவைப்பட்டது…
பின்னர் தலை வலியாக இருக்க அப்படியே டேபிளில் தலை சாய்த்து படுத்துக் கொண்டான்.
கதிர் அவனை அழைத்து செல்வதற்காக வர..,, அவன் படுத்திருப்பதை தெரிந்து வேகமாக உள்ளே வந்து அவனை எழுப்பி விட்டு காஃபி ஷாப்பிற்கு அழைத்து சென்றான்…
செல்வாவும் கதிரும் காஃபி அருந்தி விட்டு சென்றனர்…
கதிரை வீட்டிற்கு அனுப்பி விட்டு தான் எப்பொழுதும் செல்லும் பூங்காவிற்கு சென்றான்..
தன் கவலை போகும் வரை அந்த பூங்காவில் இருந்துவிட்டு தான் வீட்டிற்கே சென்றான்.
கதிரின் அன்னை புவனா கதிருக்காக காத்திட்டு இருக்க..
வீட்டிற்கு வந்த கதிர் ,,வேகமாக உள்ளே வந்தவன் அன்னையை கூட காணாமல் நேராக தன் அறைக்கு சென்று விட்டான்.
இவனுக்கு என்ன ஆச்சி இங்க ஒருத்தி நின்னுட்டு இருக்கிறது கூட தெரியாம அவன் பாட்டுக்கு போறான் என்று மனதில் புவனா நினைத்து கொண்டு அவனுக்காக ‌காஃபி போட சமையலறைக்கு சென்றுவிட்டார்.
தன் அறைக்கு வந்த கதிர் வேகமாக குளியலறைக்குள் புகுந்து கொண்டு தண்ணீரை திறந்து விட்டு அழத் தொடங்கினான்.
“கதிர்..கதிர்…”என்று தன் அன்னையின் சத்தம் கேட்கவே தான் இருக்கும் நிலையை கண்டு..தன்னை நிதான படுத்திக்கொண்டு “சொல்லுங்க அம்மா “என்று சொன்னான் …
“டேபிளில்ல காஃபி வைச்சிருக்கேன் டா குளிச்சிட்டு வந்து குடி நான் கீழே போறேன் “என்று சொல்லிவிட்டு சென்றார் புவனா.
தன்னை சமன் படுத்திக்கொண்டு குளியலறையில் இருந்து வெளியே வந்தவன் தன் உடைகளை மாற்றிவிட்டு காஃபி கப்பை எடுத்துக்கொண்டு தன் அன்னை இருக்கும் இடத்திற்கு சென்று அமர்ந்து கொண்டான்.
தன் அன்னையிடன் மீனுவை நாளை பெண் பார்க்க வருகிறார்கள் என்று கூறிவிட்டு “இன்று நான் சமையல் செய்றேன் மா,,நீங்க ஓய்வு எடுத்துக்கோங்க மா” என்று சொல்லிவிட்டு சமையல் வேலையில் தன்னை மூழ்கிக் கொண்டான்.
இரவு வெகு நேரம் கழித்தே வந்த செல்வா இரவு உணவு வேண்டாம் என்று சொல்லிவிட்டு அறைக்குள் புகுந்து கொண்டான்..
“ஏன் சனா நீ இப்படி பண்ற ..??எனக்கு பயித்தியமே பிடிச்சிடும் போல இருக்கு… உன்ன நான் ரொம்ப கஷ்ட கொடுத்துட்டேன்னு எனக்கு நல்லா தெரியும்.ஆனா நீ எனக்கு இப்படி ஒரு தண்டனை தரியேமா இது உனக்கே ஞாயமா தெரியுதா..??? எப்படி உன்னால என்ன மறந்த மாதிரி நடிக்க முடியுது…,,என்னால சுத்தமா முடியல சனா..,,செத்துட்டு இருக்கேன் மா டெயிலியும்..”
“உன்ன எப்படி என்னால இன்னொருத்தன் மனைவியா பாக்க முடியும் சொல்லு…????சனா இப்படி பண்ணாத டா ..எனக்கு என்ன தண்டனை வேணும்னாலும் குடு அத நான் ஏத்துகிறேன் .ஆனா எனக்கு நீ தண்டனை கொடுக்கிறாத நினைச்சிட்டு உனக்கு நீயே தண்டனை கொடுத்துக்காத ப்ளிஸ்” என்று தன் போனில் அவளது புகைபடத்தை பார்த்து புலம்பி கொண்டு இருந்தான்.
தீடிரென்று ஏதோ ஒரு யோசனை வர தன் மொபைலை படுக்கையில் வைத்து விட்டு தனது அறையில் எதையோ தேட ஆரம்பித்தான்.
இங்கே கதிர் சமையல் வேலை அனைத்தையும் முடித்து விட்டு ,தன் அன்னையுடன் சேர்ந்து சாப்பிட்டு விட்டு அன்னை மடியிலே படுத்து உறங்கினான்.
இவர்கள் இப்படி இருக்க காரணமானவளோ தான் உண்டு தன் வேலை உண்டு என்று டிவியில் சிங்சேன் பார்த்து கொண்டு இருந்தாள்.
செல்வா தனது அலமாரியில் இருந்து ஒரு டைரியையும் பேனாவையும் எடுத்து கொண்டு வந்து படுக்கையில் அமர்ந்து கொண்டான்.
அந்த டையிரியின் முதல் பக்கத்தில்..,,
நினைவினில் நிறைந்தவளே..!!!…,,, என்று எழுதிவிட்டு தன் தன்னவளுடன் இருந்த நினைவுகளை அதில் சேகரிக்க தொடங்கினான்.
நித்திரை தேவி அழைக்கும் வரை எழுதியவன்,,அவள் அழைக்கவும் அதை எடுத்து கப்போர்டில் வைத்துவிட்டு உறங்க சென்றான்.
அடுத்தநாள் மீனுவிற்கு அழகாகவும் செல்வாவிற்கும் கதிர்க்கும் மோசமாக பிறந்தது.
மீனுவின் முகத்தில் தன்னை இன்று பெண் பார்க்க வருகிறார்கள் என்ற பொழிவு இல்லாமல் வேலைக்கு கிளம்பி கீழே வந்தவள் சாப்பிட்டு விட்டு ,,”அப்பா அம்மா நான் போயிட்டு வரேன்” என்று கூறிவிட்டு செல்லுகையில் அவளது அன்னை அவளிடம் சென்று “இன்னைக்கு உன்ன பொண்ணு பார்க்க வறாங்க ,அதுனால வீட்டிற்கு வரதுக்கு முன்னாடி கோவிலுக்கு பொயிட்டு வா” என்றார் .
“சரி மா” என்று கூறிவிட்டு சிட்டாக பறந்து விட்டாள் மீனு.
கதிர் தன் கவலைகளை தனக்குள்ளே புதைத்துக் கொண்டு வேலைக்கு கிளம்பி சென்றான்.
செல்வா விடியற்காலையில் தூங்கியதால் அவனால் எழுந்திரிக்க முடியவில்லை.
ஆஃபிஸிற்கு வந்த மீனு மற்றும் கதிர்..,,தன் வேலைகளை பார்த்து கொண்டு இருந்தனர்.மீனுவின் கைகள் தன் வேலையை பார்த்தாலும் அவளது கண்கள் மட்டும் செல்வாவின் அறையையே பார்த்து கொண்டு இருந்தது.
லன்ச் டைம் வரவும் மீனு நேராக கதிரிடம் சென்று “சாப்பிட போலாமா” என்க அவனும் சரி என்று இருவரும் செல்ல மீனுவின் மனதில் எப்பொழுதும் சாப்பிடுவதற்கு செல்வாவும் வருவான் ,இன்று ஏன் வரவில்லை என்று மனதில் பேசியபடியே கதிருடன் சென்றாள்.
இங்கே அஞ்சலி செல்வா இன்னும் அறையை விட்டு வெளியே வர வில்லை என்று தெரிந்ததும் ,,அவனது அறைக்கு சென்று பார்த்தால் அங்கே செல்வா தூங்கி கொண்டு இருந்தான்.
“மாமா எந்திரிங்க ..!! ஆஃபிஸிக்கு போகனும் மணி ஆகுது பாருங்க “என்று அவன் அருகில் நின்று எழுப்ப முயற்சித்தாள்.
ஆனால் செல்வா எந்திரிக்க வில்லை என்று தெரிந்து அவனது கைகளை தொட்டு எழுப்ப முயற்சித்த போது தான் தெரிந்தது செல்வாவிற்கு காய்ச்சல் என்று .
உடனே அஞ்சலி கீழே சென்று அத்தையிடம் கூறிவிட்டு அர்ஜுனை அழைத்து கொண்டு செல்வாவின் அறைக்கு சென்றாள்.
லதா செல்வாவின் நெத்தியில் கை வைத்து பார்த்து காய்ச்சல் அதிகமாக உள்ளதால் உடனே ஹாஸ்பிடல் அழைத்து செல்லாம் என்க …
அர்ஜுன்க்கு மனதில் சிறு பயம் உண்டாக ,,உடனே அர்ஜுன் செல்வாவின் கார் எடுத்து வர,,செல்வாவை அழைத்து கொண்டு வேகமாக ஹாஸ்பிடலிற்கு வந்தான்.
செல்வாவினால் நடக்க கூட முடியவில்லை ,, அர்ஜுன் செல்வாவை தாங்கிய படியே நடந்து வந்து கதிரையில் அமர வைத்தான்.
செவிலியர் வந்து செல்வாவை உள்ளே அழைத்து வர சொல்ல,, அர்ஜுன் அவனை அழைத்துக்கொண்டு சென்றான்.
“குட் மார்னிங் டாக்டர் முகிலன் “என்று அர்ஜுன் கூறிவிட்டு டாக்டரிடம் சைகை செய்து ,எதையோ சொல்ல முயற்சித்து கொண்டு இருந்தான். அந்த டாக்டரும் அதை புரிந்து கொண்டது போல் தலை அசைத்தார்.
செல்வாவை பரிசோதித்து விட்டு ,,சில டெஸ்ட்டை எடுக்க சொல்ல செவிலியர் செவ்வாவை அழைத்து கொண்டு செல்ல லதாவும் அவர்கள் கூடவே சென்றார்.
லதா சென்றதை கவனித்த அர்ஜுன் ,,நேராக முகிலனிடம் வந்து “ரொம்ப நன்றி டாக்டர் என்னோட அத்தை கிட்ட எதுவும் சொல்லாம மறைத்ததுக்கு . அவுங்களுக்கு இது தெரியவந்தால் ரொம்பவும் வேதனை படுவாங்க “என்று கூற
” இதுல என்ன இருக்கு அர்ஜுன் ,,இது என்னோட கடமை “என்று எதையோ மனதில் வைத்து கூறினான்.
பிறகு அர்ஜுன் செல்வா இருக்கும் இடத்தை நோக்கி செல்ல ,, முகிலன் அர்ஜுனையே பார்த்து கொண்டு இருந்தான்.
“டேய் அர்ஜுன் ..!!! அவுங்க உனக்கு மட்டும் அத்தை இல்லடா எனக்கும் அத்தை தான் .நீங்க எல்லாரும் என் கண் முன்னாடி இருந்தும் ,,என்னால் நான் யார் என்று கூற முடியவில்லை . அதுவும் இல்லாமல் செல்வா எங்க வீட்டுக்கு வர போற மருமகன் டா அவனுக்கு எதுவும் ஆக நான் விட மாட்டேன்” என்று மனதில் நினைத்து கொண்டு தன் வேலைகளை கவணிக்க ஆரம்பித்தான் .
செல்வாவிற்கு எடுக்கப்பட்ட டெஸ்ட் எல்லாம் வரவும் ,,அதில் வைரல் ஃபீவர் என்றே வந்தது. அதுக்கு தகுந்தாற்போல் மாத்திரை மருந்துகளை எழுதி கொடுத்தான் முகிலன்.
“இரண்டு நாள் வீட்டில்லே ரெஸ்ட் எடுத்துக்கிட்டும் .அப்போ தான் ஃபீவர் குரையும் “என்று கூறி அனுப்பி வைத்தான் முகிலன்.
வீட்டிற்கு வந்த செவ்வாவை படுக்க வைத்துவிட்டு , மாத்திரைகளை கொடுத்தனர் சுபா மற்றும் அஞ்சலி.
செல்வாவை கானாத்ததால் மீனுவிற்கு சாப்பிடவே பிடிக்கவே இல்லை. ஏதோ பெருக்கு கொஞ்சம் சாப்பிட்டு விட்டு கதிரிடம் வேலை இருப்பதாக கூறி தன் இடத்திற்கு சென்றுவிட்டாள்.
கதிரும் தன் உணவை மூடி வைத்துவிட்டு தன் வேலையை பார்க்க சென்றான்.
கதிருக்கு எங்கே பேசினால் தன் மனதில் உள்ளதை உளறிடுவோமோ என்ற பயம் . மீனுவிற்கோ எப்படி செல்வாவை பற்றி பேசுவது என்ற தயக்கம் .அதனால் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவே இல்லை.
மணி மூன்று எனக் காட்ட ,,மீனு வேகமாக கதிர் இருக்கும் இடத்திற்கு வந்து “செல்வாவிற்கு என்ன ஆச்சி ..?? இன்னைக்கு ஏன் ஆஃபிஸ்க்கு வரவில்லை …??? “என்று தன் மனதில் இருந்த கேள்வியை கேட்டாள்.
“செல்வாக்கு வைரல் ஃபீவர் .ரெண்டு நாளைக்கு ஆஃபிஸ் வர மாட்டான்.சரி நீ கிளம்பு இன்னைக்கு வேற உன்ன பொண்ணு பாக்க வறாங்க ..சீக்கிரமா வீட்டுக்கு பொயிடு” என்று கூறி அவளை அனுப்பி வைத்தான்.
ஆஃபிஸ் விட்டு வெளியே வந்தவள்,,அம்மா சொன்ன படி நேராக கோவிலுக்கு சென்றாள்.
மீனுவின் முகத்தில் கவலையே நிறைந்து இருந்தது. சாமி சன்னதிக்கு சென்றவளின் மனதில் செல்வாவிற்கு சீக்கிரம் உடல் நிலை சரியாக வேண்டும் என்பதே ,, ஐயர் அவளிடம் வந்து” யார் பேருக்கு அர்ச்சனை “என்க
அதற்கு மீனு தன்னை அறியாமலே செல்வாவின் பெயரையும் அவனது ராசி நட்சத்திரத்தையும் ( எப்படி சொன்னோம் என்று யோசிக்க தவறினால்) சொல்ல அவரும் அர்ச்சனை செய்துவிட்டு குங்குமம் கொடுத்தார்.
அதை வாங்கியவல் நெற்றியில் வைத்துவிட்டு சன்னதியை சுற்றி வந்தவள், பக்கத்தில் இருந்த திட்டில் உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்க்க தொடங்கி இருந்தாள்.
ஐம்பது வயதுடைய பெண்மணி பக்கத்தில் இருந்த குளத்தில் நீர் எடுத்துக்கொண்டு வந்து அங்கே இருந்த பிள்ளையார் மீது ஊற்றிக்கொண்டு இருந்தார்.
அவரால் அந்த குடத்தை தூக்கிக்கொண்டு நடந்து வர கஷ்ட பட்டு கொண்டு இருக்க,,அந்த குடம் தவறி விழ போக அதனை தாங்கி பிடித்தாள் மீனு.
பிறகு,,அந்த அம்மாவை ஒர் இடத்தில் உட்கார வைத்துவிட்டு தன்னிடம் இருந்த தண்ணீர் பாட்டிலை நீட்டி “குடிங்க மா” என்க
“வேண்டாம் மா நான் இந்த பிரார்த்தனையை முடிக்க வேண்டும்” என்று கூறிவிட்டு எழ முயற்சி செய்ய ..,,
“நீங்க இங்கேயே உட்காருங்க மா உங்களுக்கு பதிலா இந்த பிரார்த்தனையை நான் முடிக்கிறேன்” என்று கூறிவிட்டு குளத்தை நோக்கி சென்றாள்.
பின்னர் குளத்திலிருந்து தண்ணீர் எடுத்து வந்து பிள்ளையார் மீது ஊற்றினாள். பிரார்த்தனை அனைத்தையும் முடித்து விட்டு மீனு அவர்களிடம் வந்து ” இப்போ உங்க பிரார்த்தனை முடிந்தது மா “என்க
” ரொம்ப நன்றி மா .உன் பேரு என்ன டா” என்க
“அஞ்சனா மா “என்றாள் .
“சரி மா ,என்னோட பையனுக்கு உடம்பு சரியில்ல மா அதுனால தான் இந்த பிரார்த்தனை செய்ய வந்தேன் ” என்று அவள் கேட்காத கேள்விக்கு தானே முன்வந்து பதில் கூறினார் அந்த பெண்மணி.
“சரிங்க மா வாங்க சாமி கும்பிட்டு போகலாம் “என்று அந்த பெண்மணியை சாமி சன்னதிக்கு அழைத்து சென்றாள்.
அந்த சாமி யார் பேருக்கு அர்ச்சனை என்க அந்த பெண்மணி பேர் சொல்ல வரும்போது மீனுவிற்கு அழைப்பு வர ,,அதில் சுசிலா அழைத்திருக்க அவள் தனியே நின்று பேசிக்கொண்டு இருந்தாள்.
மீனு அந்த பெண்மணியிடம் வந்த போது ஐயரும் வந்து பிரசாதம் குடுத்து விட்டு சென்றார்.
“அம்மா நீங்க பாத்து வீட்டுக்கு போங்க மா ..,, எனக்கு வீட்டில இருந்து கால் பண்ணி வர சொல்லிட்டாங்க “என்க
“சரி மா நான் பத்திரமா போய்கிறேன் .. நீயும் பாத்து போ மா “என்று கூறிவிட்டு விடை பெற்றார் அந்த பெண்மணி.
மீனு அந்த பெண்மணி போகும் திசையே பார்த்து கொண்டு இருக்க, மீண்டும் அழைப்பு வர இந்த முறை கதிரிடமிருந்து வந்தது.
அவனிடம் பேசிக்கொண்டே வீட்டிற்கு சென்று,சுசிலாவிடம் நற்சொற்க்களை பெற்றுக் கொண்டாள்.
கதிர் தன் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வர ,,அங்கே அவன் அன்னை பரபரப்பாக வேலை பார்த்து கொண்டு இருந்தார்.
“என்ன மா பண்ணிட்டு இருக்கீங்க ..??” என்ற கேள்வியுடன் வீட்டிற்குள் நுழைந்த மகனை பார்த்து” இன்னைக்கு ஏன் டா லேட்” என்று கேள்வி கேட்டு விட்டு பதிலை கூட எதிர்பாரமல் “கதிர் சீக்கிரம் கிளம்பி வா டா “என்று கூறி சென்றார்.
இங்கே என்ன நடக்கிறது என்று புரியாமல் அதே இடத்திலே நின்று கொண்டிருக்கும் கதிரை பார்த்த புவனா ,,” இன்னும் இங்க தான் நிக்கிறியா டா ..போ போய் சீக்கிரம் கிளம்பி வா ,,மீனு வீட்டில நம்மள கூப்பிட்டு இருக்காங்க .. மாப்பிளை வீட்டுக்காரவுங்க வரதுக்கு முன்னாடி நாம அங்க போகனும் டா “என்க மனதில் தோன்றிய வலிகளை மறைத்து கொண்டு “சரி மா” என்று கூறிவிட்டு தன் அறையை நோக்கி சென்றான்.
சிறிது நேரத்தில் கிளம்பி கீழே வந்த கதிர் ,, தன் அன்னையை நோக்கி “போகலாமா” என்க புவனாவும் “போகலாம் “என்றார்.
இருவரும் மீனுவின் வீட்டை நோக்கி செல்ல,, மீனுவின் மனமோ செல்வாவையே நினைத்துக் கொண்டு இருந்தது.
மாப்பிள்ளையின் பெயரை கூட அறிய விரும்பாமல் ,, அவர்களை காண்பதற்காக காத்துக்கொண்டு இருக்கிறாள்.
செல்வாவிற்கு அந்த நிலையிலும் மனத்தளவில் அழுது கொண்டு இருந்தான். தன்னவள் தன்னை விட்டு வெகு தூரம் செல்ல போகிறாள் என்று தெரிந்தும் வாய்விட்டு அழ கூட உடம்பில் சக்தி இல்லாமல் போனது.
இவர்கள் மூவரும் விதியின் பிடியில் சிக்கிக்கொண்டு தவிக்கின்றனர் .

Advertisement