Advertisement

நினைவினில் நிறைந்தவளே
அத்தியாயம் 10
அஞ்சனா தன் அப்பாய்ட்மெண்ட் லெட்டர் வாங்கி கொண்டு வரும்போது செல்வா அவள் எதிரில் வந்து நிற்க,,”ஹே அஞ்சனா ..!! கங்கார்ட்ஸ் ” என்று கை கொடுக்க அவளும் “தேங்க்ஸ் ” என்று அவனுடன் சேர்ந்து கை குழுக்கினாள் .
பிறகு அவனிடம் இருந்து விடை பெற்றுக்கொண்டு கதிருக்கு கிளம்புவதாக மெசேஜ் செய்து விட்டு வீடு நோக்கி கிளம்பினாள்.
தன் வீட்டிற்கு வந்தவள் ,தன் அப்பா அம்மாவை அழைத்து வேலை கிடைத்து விட்டது என்று அந்த சந்தோஷமான செய்தியை அவர்களிடன் கூறிவிட்டு சோஃபாவில் சென்று அமர்ந்து சிங்சான் பார்க்க ஆரம்பித்தாள்..
வேலை அதிகமாக இருக்கவே செல்வாவும் கதிரும் அவரவர்கள் வேலைகளில் மூழ்கி இருக்க மீனுவின் நினைப்பில்லாமல் இருந்தனர் இருவரும்.
தன் வேலை முடியவும் கதிர் நேராக செல்வா அறைக்கு வர ..அவன் அங்கு லேப்டாப்பில் தன் முகத்தை புதைத்திருந்தான் .
” மே ஜ கம் இன் சார் “என்றிட
“ஹே உள்ளே வா கதிர் “என்று தனது லேப்டாப்பை பார்த்து கொண்டே சொல்ல
“அது எப்படி செல்வா நான் தான் வந்தேன்னு என் முகம் பாராமலே சொன்ன ” என்க
அதற்கு செல்வாவோ ” அதெல்லாம் ஒன்னும் இல்ல மேன் இந்த கேவலமான குரல் கண்டிப்பா உன்னோடதா மட்டும் தான் இருக்கும் “என்று முகத்தை சீரியசாக வைத்து கொண்டு சொல்ல அங்கு கதிரோ தன் கைகளால் வையிற்றை பிடித்து கொண்டு சிரிக்க தொடங்கினான்.
“எதுக்காக டா இப்ப நீ இப்படி சிரிக்கிற” என்று அவன் இடத்தில் இருந்து எழுந்து நின்று கேள்வி கேட்டான்.
அதற்கு கதிரோ “மச்சி நீ ரொம்ப காமெடி பண்ற டா “என்று மீண்டும் சிரிக்க
” நான் எப்போ காமெடி பண்ணேன் சொல்லு ” என்க
” இப்போ தான் என்னோட வாய்ஸ் ரொம்ப கேவலமா இருக்குன்னு சொன்னியே அத தான் சொல்றேன்”
” மச்சி நான் ஒன்னும் காமெடிக்காக சொல்லல உண்மைய தான் சொன்னேன். நீ யார்கிட்ட வேணாலும் கேட்டு பாரு அவுங்களும் இதையே தான் சொல்லுவாங்க “என்க இப்போது அங்கு கதிரின் சிரிப்பொலி நின்று அவனது முறைப்பு மட்டுமே பதிலாக கிடைத்தது.
“சரி டா என்ன முறைச்சது போதும் ,இப்போ எதுக்கு வந்தேன்னு சொல்லவே இல்லையே” என்று செல்வா கேட்க “அட ஆமாம்ல இப்போ நான் எதுக்கு இங்க வந்தேன் “என்று கதிர் யோசனை செய்ய தொடங்கினான்.
“அட மாங்கா எதுக்கு இங்க வந்தன்னே மறந்துடுச்சா “என்று அவன் மண்டையில செல்வா ஒரு கொட்டு வைக்க
“டேய் மச்சி வலிக்குது டா இப்போ மணி என்னன்னு தெரியுமா” என்று கதிர் கேட்க
அதற்கு செல்வா” இதை கேக்க தான் இங்க வந்தியா டா “என்று சொல்லிவிட்டு “மணி 7” என்க அப்போதும் தான் செல்வாவிற்கு புரிந்தது , “அச்சோ சாரி பா நான் டைம் பாக்கவே இல்ல ” என்க
“சரி அதான் இப்ப டைம் பாத்துட்டில்ல இப்போ கிளம்பி வரது “என்று கதிர் பேசிக்கொண்டே போக “இல்ல கதிர் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நீ கிளம்பு நான் இந்த வேலைய முடிச்சிட்டு கிளம்புறேன் “என்று சொல்ல
“சரிங்க சார் சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு கிளம்புங்க நான் கீழே செக்யூரிட்டி கிட்ட சொல்லிட்டு போறேன்” என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.
கதிர் செக்யூரிட்டியிடம் கூறிவிட்டு வீட்டிற்கு கிளம்பி சென்றான்.
************
இங்கு லதா சுபாவையும் அஞ்சலியையும் கூப்பிட்டு கொண்டு கோவிலுக்கு சென்றார்.
அங்கே மூவரும் தன் வேண்டுதல்களை கடவுளின் முன் முறையிட்டனர்.
அர்ஜுனின் தந்தை மற்றும் தாயார் அவர்களது ஊருக்கு சென்றனர். அஞ்சலி மட்டும் இரண்டு வாரம் கழித்து வருவதாக கூறிவிட்டு லதா வீட்டில்லே இருந்துவிட்டாள்.
அஞ்சலியின் மனதில் தனக்கே செல்வா அத்தான் கிடைக்க வேண்டும் என்று வேண்டினாள்.
பக்கத்தில் இருந்த சுபாவின் மனதிலோ தன் அண்ணன் ஆசை பட்ட வாழ்வு கிடைக்க வேண்டும் அவனுக்காக மட்டுமே நான் இந்த திருமணத்திற்கு சம்மதித்திருக்கிறேன்( இன்னும் எத்தனை காலத்துக்கு இந்த பொய்யையே சொல்லுவ மா..பாவம் அர்ஜுன் ).
லதாவோ “என் பசங்க வாழ்க்கை நல்ல படியாக அமைய வேண்டும் கடவுளே” என்று வேண்ட மூவரும் கடவுளின் அவரவர் வேண்டுதல்களை முன் வைத்தனர்.
ஏழு மணி போல் மூவரும் கோவிலிலிருந்து வீட்டிற்கு திரும்பினர்.
செல்வா தன் வேலையை கவனமாக செய்து கொண்டு இருக்க தீடீரென்று மீனுவின் ஞாபகம் வந்தது.
செல்வாவிற்கு ஒன்று மட்டும் புரியவில்லை .ஏன் இன்று மீனு தன்னிடம் யாரோ ஒருவர் போல் நடந்து கொண்டால் என்று யோசிக்கும் போது தலை வலிப்பது போல் இருந்தது.
இன்று இப்படி இருக்கும் மீனுவை கண்டு அவன் மனம் கலங்க தான் செய்தது.
தனது இனிமையான நாட்களை எண்ணி அவன் மனம் பின் நோக்கி சென்றது….
ஐந்து வருடங்களுக்கு முன்…..
இயற்க்கையும்
வாழ்க்கையும்
ஒன்றுதானோ…..???
இருளும்
ஒளியும்
மாறி மாறி
வருக்கிதே…..
“டேய் அண்ணா எந்திரி டா” என்று சுபா அவனை எழுப்பி கொண்டு இருக்க
” அட குட்டி கொஞ்ச நேரம் என்னை தூங்க விடு மா…இந்த அண்ணா பாவம் தானே” என்று தூக்க கலக்கத்திலும் தன் தங்கை சுபாவிடம் கெஞ்சி கொண்டு இருக்க
“டேய் அண்ணா இப்போவே மணி ஏழு ஆகுது டா .இப்போ நீ கிளம்புன்னா தானே ஒன்பது மணிக்கு ட்ரேய்ன் புடிக்க முடியும் சொல்லு ” என்க
பதறி அடித்து எழுந்த செல்வா “அச்சோ குட்டி டைம் 7 ஆயிடுச்சா ஏன் என்ன இவ்வளோ லேட்டா என்ன எழுப்பி விடுற” என்று அவள் காதை பிடித்த திருக ….
“அச்சோ அண்ணா வலிக்குது..,, என் காதை கொஞ்சம் விடு டா “என்று அவள் கத்தி கொண்டு இருக்க “நான் கேட்டதுக்கு அன்சர் பண்ணு குட்டி ஏன் என்ன எழுப்பி விடல “என்று கேட்க
“அடேய் அண்ணா !அப்பா தான் உன்ன எழுப்பி விட வேணாம்ன்னு சொன்னாரு ,, நான் தான் பாவம் அண்ணான்னு சொல்லி உன்ன எழுப்ப வந்தேன். உன்ன எழுப்பி விட்டதுக்கு என்னோட காத பிடிச்சு இப்படி திறுகுற ” என்று தன் காதை பிடித்து கொண்டே சொல்ல “சாரி டா குட்டி உனக்கு வலிக்குதா ” என்று பாசமாக அவள் தாடையை பிடித்து கொண்டு கொஞ்ச
“ஆமாம் வலிக்குது அதுக்கு என்ன “என்று சுபா செல்வாவின் கையை தட்டி விட்டாள் .
“அட என் செல்ல தங்கச்சிக்கு வலி எடுக்குதோ அப்போ அதுக்கு ட்டிரிட்மெண்ட் குடுத்தே ஆகனுமே ” என்று சொல்லிவிட்டு அவள் தலையில் நறுக்கென்று ‌ஒரு கொட்டு வைத்து விட்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
“அம்மா” என்று சுபா கத்த “இப்போ எதுக்கு டி இப்படி கத்துற அவன நிம்மதியா கிளம்ப விடு டி , பாவம் என் பையன் நைட் ஃபுல்லா ட்ராவல் பண்ணும் ,முதல நீ அவன் ரூம்ல இருந்து வெளில வா ” என்று சமையல் அறையில் இருந்து கத்தினார் லதா.
“நானா அவன கொடும படுத்துறேன் , அவன் தான் என்ன கொடும படுத்திட்டு இருக்கான் “என்று சுபா மனதில் நினைத்தவாறு அவனது அறையை விட்டு வெளியேறினாள் .
குளித்து முடித்து விட்டு கதவை திறக்க அவனால் கதவை திறக்க முடியாமல் போனது. இது அந்த குட்டி வேலையாக தான் இருக்கும் என்று நினைத்து கொண்டு அவன் “அம்மா “என்று கத்த சுபாவிற்கு சிரிப்பாக வந்தது.
“இதுக ரெண்டுக்கும் வேற வேலையே இல்லையா .எப்ப பாரு அம்மா அம்மான்னு ஊரே அலரும் படி கத்துறது ” என்று மனதிற்குள்ளே புலம்பினார்.
” போ.. போ.. மா உன்னோடு அன்பு மகன் உன்ன கூப்பிடுறான்” என்று டிவியை பார்த்துக்கொண்டே சொல்ல “அவன என்ன டி பண்ணுண்ண” என்று லதா கையில் கரண்டியை வைத்து கொண்டு கேட்க …
“அட அம்மா நான் ஒன்னுமே பண்ணலையே “என்று தன் முகத்தை பாவமாக வைத்து கொண்டு சொல்ல “இந்த நடிப்பெல்லாம் என்கிட்ட காட்டாத சரியா” கரண்டியை வைத்து அடிக்க வர “அப்பா என்ன காப்பாத்துங்க” என்று அவர் பின்னாடி சென்று ஒளிந்து கொண்டாள்.
“என் புள்ளைய அடிக்கிறத விட்டுட்டு உன் மகன் அங்க இருந்து கத்திகிட்டே இருக்கான் பாரு அவன முதல போய் பாரு” என்றார் இந்திரன் அந்த வீட்டின் தலைவர்.
“உங்க ரெண்டு பேரையும் வந்து கவனிச்சுக்கிறேன் “என்று கூறிவிட்டு செல்வாவின் அறை நோக்கி‌ சென்றார்.
“அய் தேங்க்ஸ் அப்பா..!! இந்த அம்மா கிட்ட இருந்து என்னை காப்பாத்தினதுக்கு “என்ற சுபாவை பார்த்து “என்னடா தங்கம் அப்பாகிட்ட போய் தேங்க்ஸ் லாம் சொல்லிட்டு இருக்க இது என்னோட கடமை டா என்னோட செல்ல பொண்ண நான் தானே காப்பத்தனும் “என்று அவள் தலையை வருடி கொடுக்க சுபா தன் தந்தையை அணைத்து கொண்டாள்.
“செல்வா எங்க டா இருக்க” என்று லதா கேட்ட அடுத்த நொடி “அம்மா நான் பாத்துரும்ல இருக்கேன் மா .கொஞ்சம் வந்து கதவை திறந்து விடுங்க .அந்த குட்டி கதவை சாத்திட்டு போய்ட்டா” என்க
” இரு கதவை திறக்குறேன் “என்று கூறிவிட்டு கதவை திறந்து விட்டார் லதா.
கதவை திறந்து வெளியே வந்த செல்வாவிடம் “சரி டா சீக்கிரமா கிளம்பி வா ரயில்க்கு நேரம் ஆகுது பாரு” என்று சொல்லி அந்த அறையை விட்டு வெளியே வந்தார்.
லதா சென்ற சிறிது நேரத்தில் செல்வா கிளம்பி தன் உடமைகளை எல்லாம் எடுத்து ஒரு பேக்கில் தினித்துவிட்டு அதை எடுத்து கொண்டு கீழே வந்தான்.
கீழே வந்தவன் நேராக குட்டியை பார்த்து கொண்டே வர ,,”அச்சோ சுபா இன்னைக்கு நீ செத்த” என்று மனதில் நினைத்து இந்திரன் பக்கத்தில் நின்று கொண்டு பயத்துடனே அவனை பார்க்க செல்வா அவளை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்துவிட்டு சமையலறை நோக்கி சென்று பலகை மேல் ஏறி அமர்ந்து கொண்டான்.
லதா அவனுக்கு ஒரு தட்டில் மூன்று தோசைகள் வைத்து கொடுக்க அவனும் அதை வாங்கி கொண்டு சாப்பிட்டு விட்டு கிளம்ப தயாராகினான்.
செல்வா தன் அன்னையிடம் சென்று” சரி மா நான் கிளம்புறேன். இப்போ கிளம்பினா தான் சரியான நேரத்திற்கு ரயில் நிலையத்திற்கு போக முடியும் மா ” என்க
லதா கண்களில் கண்ணீர் வர அதை துடைத்து கொண்டு ,” அடுத்து எப்போ டா ஊருக்கு வர” என்று கேள்வி எழுப்ப “தெரியல மா காலேஜ்ல கண்டிப்பா இந்த வீக்கெண்ட் லீவ் கிடைக்காது .சோ அடுத்த மாதம் தான் வர முடியும் “என்க
“சரி டா கண்ணா பாத்து பத்திரமா போ நல்லா சாப்பிடனும் சரியா உடம்ப பாத்துக்கோ செல்வா கண்டதெல்லாம் சாப்பிடாத” என்று சொல்லிக்கொண்டு இருக்கையில் சுபா லதாவிடம் வந்து ,”அம்மா நீ இந்த டையலாக்க மாத்தவே மாட்டியா என்றிட “
“ஏன் டி “என்று லதா கேட்க
“இதே டையலாக்க தான் நீ போன தடவ அண்ணா வீட்டுக்கு வரும்போதும் சொன்ன இப்பவும் நீ இதையே தான் சொல்ற வேற எதையாவது சொல்லு மா அட்லீஸ்ட் மாடுலேஷனாவது மாத்து மா “என்று சொன்ன அடுத்த நொடி சுபா தலையில் கை வைத்து தெய்த்து கொண்டு இருந்தாள்.
“எதுக்கு இப்ப என்ன கொட்டுன” என்று செல்வாவை பார்த்து முறைத்து கொண்டே கேட்க ….
“அம்மா உன்கிட்டாயா இப்படி சொன்னாங்க என்கிட்ட தானே சொன்னாங்க அதுக்கு எதுக்கு நீ இவ்வளவு பெரிய டையாலாக் பேசுற அதுக்கப்புறம் திரும்பவும் அம்மா அவுங்க ரேடியோவ ஆரம்பிப்பாங்க மா” கூறி செல்வா சிரிக்க அவனுடன் சேர்ந்து சுபாவும் சிரிக்க லதா அவர்களை பொய்யாக முறைத்து கொண்டு இருந்தார்.
பிறகு செல்வா அவர்களிடம் சொல்லிவிட்டு தந்தையுடன் கிளம்பி ரயில் நிலையம் வந்து சேர்ந்தான்.
இன்னும் பத்து நிமிடத்தில் நீலகிரி எக்ஸ்பிரஸ் மூன்றாவது ப்ளாட் பாரமில் இருந்து புறப்பட உள்ளது என்று அனௌன்ஸ்மெண்ட் வர “சரிங்க பா நீங்க கிளம்புங்க நான் ட்ரெயின் ஏறிக்கிறேன்” என்க
“சரி டா கண்ணா பார்த்து போ ..பொய்ட்டு போன் பண்ணு” என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.
செல்வா தன் அப்பாவை அனுப்பி விட்டு ரயில் இருக்கும் இடத்திற்கு சென்று தன் சீட் நம்பரை பார்த்து விட்டு அதில் ஏறி அவன் இடத்தில் அமர்ந்து கொண்டான்.
“ஹே இன்னும் பத்து மினிட்ஸ் தான் டி இருக்கு அதுக்குள்ள ட்ரெயின புடிச்சிறலாம்ல டி “என்று மீனு தன் கைகளை பிசைந்த வாறே சிந்துவிடம் கேட்டுக்கொண்டு இருக்க
“இதை நீ கிளம்புறதுக்கு லேட் பண்றதுக்கு முன்னாடி யோசிருக்கனும் அக்கா இப்போ நீ வாய திறந்த அவ்வளவு தான் பாத்துக்கோ “என்று அவளை திட்ட
” சிந்து அக்காவ திட்டாத “என்றார் ராஜன்
“என்னடா இன்னும் வாயிஸ் வரலையேன்னு நினைச்சேன் “என்று சொல்லிவிட்டு கார் ஜன்னலை திறந்து வேடிக்கை பார்க்க தொடங்கினாள்.
ஐந்து நிமிடத்திலே ரயில் நிலையத்திற்கு வந்துவிட …ஐந்து நிமிடத்தில் வண்டி புறப்பட உள்ளது என்று ஒலிப்பெருக்கி ஓசை எழுப்ப
“ஐயோ டைம் ஆயுடுச்சி ” என்று தனது பையை தோலில் மாற்றிக்கொண்டு வேகவேகமாக நடக்க தொடங்கினாள் இல்ல இல்ல ஓட தொடங்கினாள். நெரிசல் அதிகமாக இருந்த காரணத்தினால் அவளால் வேகமாக செல்ல இயலவில்லை.
ரயில் இருக்கும் இடத்தை நெருங்கியவள் வண்டி தன் இருக்கையை கண்டு பிடித்து கொண்டு இருக்க அந்த நேரம் வண்டி மூவ் ஆக ஆரம்பித்தது..அவளது தோழிகள் எல்லாரும்” அஞ்சனா ” என்று கத்த வேகமாக கையை நீட்டி கொண்டு ஓட முயற்சிக்க
ஒரு வல கரம் அவளது கைளை பிடித்து இழுத்து அவளது இடுப்பினை சுற்றி வளைத்து அவளை தூக்கி ரயில் ஏற்றியது .
அந்த வலக்கரம் இழுத்த இழுப்பில் அந்த நபர் மேலே மோதினாள்.
மீனு பயத்துடனே அவனை விட்டு விலகிய நொடி ,” ஆர் யூ ஆல்ரைட்..??”என்று கேள்வி எழுப்ப மீனுவிற்கு பயம் இருந்தாலும் அதற்கு மேல் கோபம் தலைக்கேறியது .
மீனு கண்ட படி அவனை திட்டிக்கொண்டு இருக்க அதை அவன் காதில் கூட வாங்காமல் அவள் விழிகளை பார்த்து கொண்டு இருந்தான்.
“எக்ஸ் க்யூஸ் மீ ..உங்க நேம் என்ன‌ சொல்லுங்க நான் இப்பவே உங்களை போலிஸ் கிட்ட கம்பெளைன்ட் பண்றேன்” என்க
“என்னோட நேம் செல்வா மேடம்.. அப்புறம் நான் எதுவுமே தப்பு பண்ணலையே. எதுக்கு என்னைய போலிஸ் கிட்ட மாட்டி விடனும்ன்னு நினைக்கிறிங்க……??? “என்று புருவம் உயர்த்தி கேள்வி எழுப்பினான்.
“நீ யாருன்னே எனக்கு தெரியாது ..நீ என் கைய புடிச்சி தூக்கிவிடுற “என்று கோபத்துடன் கேட்டாள் மீனு.
“நான் உங்களுக்கு ஹெல்ப் தானே பண்ணேன். நீங்க‌ போலிஸ் கம்பெளைன்ட் கொடுத்தா நான் உள்ள போக மாட்டேன் நீங்க தான் உள்ளே போகனும் .ஓடுற வண்டில ஏற டிரை பண்ணதுக்காக ” என்று செல்வா சொல்ல
அதனை கேட்ட மீனுவிற்கு பயம் தொற்றிக்கொள்ள ,”சரி சரி உன்ன மன்னிச்சி விடுறேன் “என்று சொல்லி விட்டு அங்கு இருந்த ஒரு சீட்டில் அமர்ந்து கொண்டாள்.
பின்னர் அவனும் வந்து அமர்ந்து கொண்டான்.
சிறிது நேரத்தில் மீனு தூங்கி விட….,,,
என் மனதை
திருடிய உந்தன்
கண் விழிகளை
திருடுவதற்காக
காத்திருக்கிறேன்……
அவளையே கண் இமைக்காமல் பார்த்து கொண்டு வந்தான் செல்வா .
********
உன் நினைவுகள்
மட்டுமே
இன்றுவரை
என்னை
வாழவைக்கிறது…….
அவனது நினைவுகளை கலைக்கும் விதமாக அவனது அலைப்பேசி அழைப்பு விடுத்தது.
அதுவரை மீனுவின் நினைவுகளில் இருக்க அவன் முகத்தில் இருந்த புன்சிரிப்பு அவனது மொபைலை எடுத்து பார்த்த அடுத்த நொடி இருந்த காணாமல் போனது.
மொபைல் திரையில் அஞ்சலி என்று வர..,,சிறிது நொடிகள் கழித்து ‌எடுத்து ஹலோ சொல்வதற்கு முன் அஞ்சலியே பேச தொடங்கினாள் .
“ஹலோ மாமா இப்போ மணி பத்தாகுது ஆகுது…. நீங்க எங்க இருக்கீங்க…??நீங்க இன்னும் வரலைன்னு அத்த பயப்படுறாங்க.. கொஞ்சம் சீக்கிரம் வாங்க மாமா ‘என்று அவனை பேச விடாது அவளே பேசிவிட்டு மொபைலை அணைத்துவிட்டாள்…..
பிறகு ,லேப்டாப்பை ஷட் டௌன் செய்து விட்டு தன் பையை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
வீட்டிற்கு வந்த செல்வா சாப்பிட்டு விட்டு யாருடனும் எதுவும் பேசாது அமைதியாக அறைக்கு தூங்க சென்றான்.
அடுத்தநாள் காலை அழகாக புலர்ந்தது…
மீனு தன் முதல் நாள் வேலைக்கு தயாராகி கீழே வர .,அவளுக்காக காலை உணவை எடுத்து வைத்து கொண்டு இருந்தார் சுசிலா.
“அம்மா எனக்கு டைம் ஆச்சி.,, நான் கிளம்புறேன் “என்று சொல்லிக் கொண்டே பூஜை அறை நோக்கி சென்றாள்.
“ஹே ..!!! ஒழுங்கு மரியாதையா சாப்பிட்டு போடி “என்று அவளை பூஜை அறையை விட்டு வெளியே வந்த அடுத்த நொடி அவள் வாயில் இட்லியை திணித்தார் சுசிலா.
இது தான் சரியான நேரம் என்று சுசிலாவிற்கு தோன்றிட உடனே அவளிடம் கூறிவிட்டார்.
“மீனு நாளைக்கு உன்ன பொண்ணு பாக்க வராங்க டி.அதுனால ஒரு மணி நேரம் ப்ர்மிஷன் போட்டு வந்துவிடு” என்று கூறிக்கொண்டே இட்லியை ஊட்டி விட்ட படியே கூறி முடித்தார் சுசிலா.
மீனு ஆஃபிஸ் அலுவலுகத்தை நெருங்க அவளை பின்னே இருந்து அவள் தோள் பட்டையில் கை வைத்து ” அஞ்சனா” என்று அழைக்க
தீடிரென்று தோள் மீது யாரோ கை வைக்கவும் கோபமாக திரும்பி பார்க்க., அங்கே அவள் முன்னே அழகாய் சிரித்து கொண்டு நின்றாள் அவளது உயிர் தோழி திவ்யா .
“ஹே திவி..!!! எப்படி இருக்க டி …???உன்ன பாத்து எவ்வளவு நாள் ஆச்சி” என்று அவளை பார்த்த சந்தோஷத்தில் கேட்டாள் மீனு.
அவளை கோபமாக முறைத்து விட்டு,, “நான் நல்லா தாண்டி இருக்கேன் நீ எப்படி இருக்க…?? அப்பறம் உன்னோட ராகவ் எப்படி இருக்காரு..??” என்று கேள்வி கேட்டு கொண்டு இருந்த நேரம் திவ்யாவிற்கு அழைப்பு வர..,
“சரி டி இப்ப கொஞ்சம் அவசரமா போய் ஆகனும் .இந்த வீக்கெண்ட் மீட் பண்ணலாம் .. அப்பறம் அண்ணாவ கேட்டதா சொல்லு “என்று சொல்லிவிட்டு அவளுடைய பதிலை கூட எதிர்பாரமல் அந்த இடத்தை விட்டு சென்று விட்டாள் அவள் தோழி திவ்யா.
“ராகவா யாரு அது …?? அதுவும் அவ உன்னோட ராகவ்ன்னு வேற சொல்லிட்டு போனாளே …நமக்கு ராகவ்ன்னு ஃபிரண்ட் யாரும் இல்லையே ” என்று மனதில் பல கேள்விகளுடன்னே ஆஃபிஸ் உள்ளே சென்றாள் மீனு….
மீனுவிற்கு முதல் நாளே வேலை அதிகமாக கொடுத்ததால்.,,திவ்யா கூறியதை மறந்தே போனாள் மீனு….
பிறகு மாலை நேரம் வர.,,செல்வாவின் கேபினுக்கு சென்று “தனக்கு நாளை ஒரு மணி நேரம் பேர்மிஷன் வேண்டும் “என்று கூறினாள் மீனு.
“எதற்காக” என்று கேள்வி எழுப்பும் நேரத்தில் கதிர் ஒரு ஃபைலை எடுத்து கொண்டு உள்ளே வந்தான்.
“இப்ப சொல்லுங்க அஞ்சனா …??” என்று செல்வா கேள்வி கேட்க அடுத்த நிமிடம் அவளிடம் வந்த பதிலை கேட்டு இருவருக்கும் உலகமே நின்றுவிடும் போல் இருந்தது……
ஆனால் இதை எதுவும் மூவருமே கவனிக்கவில்லை……

Advertisement