Advertisement

 நினைவினில் நிறைந்தவளே

அத்தியாயம் 07

வயது
வித்தியாசம்
பார்ப்பதில்லை….
அம்மாவின்
கொஞ்சலில்
மட்டும்….
இன்னும்
குழந்தையாக….
சுசிலாவை ICU வில் இருந்து நார்மல் வார்ட்க்கு மாத்தினர்.
அவர்களை நோக்கி சென்ற நர்ஸ்..,, “இன்னும் கொஞ்ச நேரத்தில கண் முளிச்சுருவாங்க . அதுக்கப்புறம் நீங்க போய் அவுங்கள பாக்கலாம்” என்று விட்டு சென்றார்.
சிறிது நேரத்தில் டாக்டர் அழைத்தார் என மீனுவும் அவள் அப்பாவும் சென்று பார்த்து விட்டு வந்தனர்…
அவர்கள் இருவரும் வரவும்..,, சுசிலா கண் முளிக்கவும் சரியாக இருக்கவும் ,உடனே மீனு சிந்து மற்றும் ராஜன் உள்ளே சென்றனர்.
சிந்து ” அம்மா ” என்று அழுதுகொண்டே அழைக்க ,,”எனக்கு ஒன்றும் இல்லை “என்பது போல் தலை அசைத்தார் சுசிலா.
சிறிதும் நேரத்தில் நர்ஸ் உள்ளே வந்து ,, ” “எல்லாரும் வெளிய போய் இருங்க,,யாராவது ஒருத்தர் மட்டுமே பேஷன்டோட இருங்க ” என்று கூறிவிட்டு வெளியே சென்று விட்டார்.
மீனு ” நான் அம்மாவுடன் இருக்கேன் .நீங்க எல்லாரும் வீட்டுக்கு போய் கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க ” என்று கூறி அவர்கள் இருவரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தாள்.
சுசிலா மயக்க ஊசியின் வீரியத்தில் அவர்களை கண்ட சிறிது நேரத்தில் உறங்கியும் போனாள்.
ஆயிரம்
சொந்தங்கள்
அணைத்திட
இருந்தாலும்…..
அன்னையே
உன்னை போன்று
அன்பு செய்ய
யாரும் இல்லை
இப்பூலகில்……….
அர்ஜுன் அறைந்த அடியை வாங்கிக் கொண்டு அமைதியாக அவன் முன் நின்று கொண்டு இருந்தான் செல்வா.
அர்ஜுன் ” ஏன் டா செல்வா இப்படி பண்ற??? உனக்கு அறிவு இருக்கா இல்லையா??? பாவம் டா அந்த பொண்ணு…உன்னையே நினைச்சிட்டு வாழ்ந்துட்டு இருக்கு …உன்னோட வீன் பிடிவாதத்தை விட்டுடு செல்வா …” என்று அதே கோபத்தில் கூற,,
செல்வா அப்போதும் எதுவும் பேசாமல் அமைதியாகவே அவன் முன் நின்றான்.
” டேய் எதாவது வாய தொரந்து பேசு டா… எவ்வளவு நாள் தான் நீ உன்னையும் வருத்திகிட்டு அந்த பொண்ணையும் கஷ்ட படுத்த போற??? இதுனால உனக்கு என்ன நிம்மதி கிடைக்க போது டா சொல்லு?? என்று அவன் தோல்களை பிடித்து கொண்டே கேட்டான் அர்ஜுன்.
” நான் அவள விட்டு பிரிஞ்சு தான் வாழனும் அர்ஜு….எனக்கு அவளோட சந்தோஷம் மட்டும் முக்கியம் இல்ல அவளோட குடும்பத்தோட சந்தோஷமும் எனக்கு முக்கியம் தான். எனக்கு அவள விட்டு பிரிஞ்சு வாழ்றது கஷ்டம் தான்..,,ஆனா இத நான் அவளோட குடும்ப சந்தோஷத்துக்காக தான் செஞ்சேன் டா …ப்ளிஸ் இனி இத பத்தி இனி பேசாத அர்ஜுன். ” என்று செல்வா அவனிடம் கேட்டு கொண்டான்..
” டேய் செல்வா …!!!! நீ அந்த பொண்ணு விட்டு பிரிஞ்சு வாழ்றதுனால யாருக்கும் எந்த நல்லதும் நடக்க போறது இல்ல டா…நீ உன்னையும் கஷ்ட படுத்திக்கிட்டு அந்த பொண்ணையும் கஷ்ட படுத்துற டா… உன்னோட வீன் பிடி வாதத்தை விட்டுடு செல்வா ” என்று அவனின் பிடிவாதத்தை கலைக்கும் பொருட்டு மேலும் அர்ஜுன் பேச,,
ஆனால் செல்வாவின் மனது கரைந்ததாக தெரியவில்லை.
” அர்ஜுன் நான் என்னோட சனாவ பார்த்தே ரெண்டு வருஷம் ஆச்சு டா… இன்னைக்கு அவள பாத்துட்டேன் டா…. எனக்கு இதுவே போதும்  அர்ஜு என் வாழ்நாள் முழுவதும்…” என்று கூறிவிட்டு தான் வந்த காரில் போய் உட்கார்ந்து அர்ஜுன்காக வெயிட் பண்ணி கொண்டு இருந்தான்…
அவன் சென்ற இரண்டு நிமிடத்திலேயே அர்ஜுன் வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டான்.
இவர்கள் செய்த உரையாடலை ஒரு ஜோடி கண்கள் பார்த்து குழம்பி போய் அந்த இடத்தை விட்டு சென்றது.
செல்வாவின் கார் வீட்டை நோக்கி பயணித்தது…
சிறிது நேரத்திற்கு முன்பு…
இரண்டு மணி நேரத்திற்கு முன்பு அர்ஜுனிற்கு ஒரு கால் வந்தது.
அந்த நேரம் பார்த்து சரியாக திங்ஸ் இருக்கிற இடத்துக்கு வந்த அர்ஜுனால் அந்த கால் யாரென்று பார்க்இ முடிந்தது.
செல்வா தான் கால் பண்ணி இருந்தான்.
செல்வாவாவும் அர்ஜுனும் அன்று நடந்த நிகழ்விற்கு பிறகு,அர்ஜுன் செவ்வாவை முற்றிலும் தவிர்க்க தொடங்கி இருந்தான். அதனை அறிந்த செல்வாவும் அர்ஜுனை தொந்தரவு செய்ய விரும்பாமல் அமைதிகாத்தான்.
ஆனால் இன்றோ இரண்டு வருடங்கள் கழித்து செல்வா அழைக்கவும் அவனுக்கு ஏதோ தவறாக படவே யோசனையுடன் அந்த அழைப்பை ஏற்றான்.
செல்வா : ஹளோ அர்ஜு…!!!!
அர்ஜுன் : சொல்லு செல்வா…!!! என்ன எனக்கு கூப்பிட்டு இருக்கிற??? வீட்ல எதாவது பிரச்சனையா?????
செல்வா : அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல அர்ஜுன்.வீட்ல இருக்கிற யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.. எனக்கு தான் உன்னோட உதவி எனக்கு வேணும் டா அர்ஜுன்.உன்னால எனக்கு உதவி பண்ண முடியுமா இப்போ???
அர்ஜுன் : சரி..இப்போ உனக்கு என்ன உதவி வேணும்னு சொல்லு செல்வா???
செல்வா : நீ இப்போ XXX Hospital க்கு வாடா கொஞ்சம் …
அர்ஜுன் : சரி டா வரேன்…
என்று சொல்லி விட்டு அழைப்பை கட் செய்தான் அர்ஜுன்.
அதன் பின் செல்வா வர சொன்ன ஹாஸ்பிடலுக்கு ஒரு மணி நேரத்துல வந்து சேர்ந்தான்…..
அங்கு அர்ஜுன்  பார்த்தது என்னவோ செல்வா காதலித்த பொண்ணை தான்…
உடனே அர்ஜுன் அவனது கண்களை சுழல விட்டு செல்வாவை தேட ,அவனோ
நான் அவன் பக்கத்தில போய் நின்னேன்….
” இப்போ இங்க என்ன பண்ணிட்டு இருக்க செல்வா??? அங்க நிக்கிறது அஞ்சானா தானே??? அவளுக்கு பயந்து தான் இங்க வந்து நிக்கிறியா நீ??? சொல்லு செல்வா ..” என்று நான் அவன் முன்னாடி நின்னுட்டு கேட்டேன்.
செல்வா ” டேய் அர்ஜுன் …!!!!‌நான் கார்ல பொய்ட்டு இருக்கும்போது ஒரு இடத்தில கும்பலா இருந்திருச்சி..என்ன எதுன்னு பார்க்க போனேன் .போய் பார்த்தா ஒரு இரத்த வெள்ளத்துல உயிருக்கு போராடிட்டு இருந்தாங்க . நான் அவுங்கள இங்க கொண்டு வந்து சேர்த்துட்டேன் டா…நர்ஸ் வந்து அவுங்களோட திங்ஸ் எல்லாத்தையும் என்கிட்ட கொடுத்தாங்க .அதுல ஒரு மொபைல் போன் இருந்துச்சி . அதுனால நான் அந்த நம்பர்க்கு கால் பண்ண போது தான் தெரிஞ்சது இவுங்க அஞ்சுவோட அம்மான்னு.இந்த ஆப்ரேஷன் முடியுற வரைக்கும் என்னால இந்த இடத்தை விட்டு வெளிய போக முடியாது டா…அவ கண்ணுலையும் நான் பட கூடாது.அதுனால …”
அர்ஜுன்” அதுனால நான் என்ன டா பண்ணனும்??? ”
” அதுனால நீ கொஞ்சம் நேரம் இங்க இரு டா…அவுங்கள பொருத்த வரைக்கும் நீயே காப்பாத்தினதா இருக்கட்டும்….ப்ளிஸ் டா இந்த ஹெல்ப் மட்டும் என்னாக பண்ணு டா “என்று  கைகளை பிடித்து கொண்டு கெஞ்சினான்.
அவன் கெஞ்சலை ஒரு நண்பனான அர்ஜூனிற்கு சங்கடத்தை உண்டாக்காக அதற்காகவே அவனுக்கு தன் சம்மதத்தை தெரிவித்தான்.
“இவன் ஏன் இப்படி பண்றான்… அப்படி என்ன காரணத்திற்காக அந்த பொண்ண விட்டுட்டு இப்படி கஷ்ட படுறானே தெரியல…நாம கேட்டாலும் ஒன்னும் சொல்ல மாட்டான் .இதுனால தான் நான் இவன் கூட பேசுறதே இல்லை ” என்று மனம் சிந்திக்க தொடங்கியது.
சிறிது நேரத்திலே நேராக வண்டி செல்வாவின் வீட்டின் முன் நின்றது.
இருவரும் சேர்ந்தே வீட்டிற்கு வருவதை பார்த்த லதா மற்றும் அர்ஜுனின் அம்மா அம்பிகா ,, அவர்களை பார்த்து அதிர்ச்சி ஆச்சிரியம் மற்றும் சந்தோஷம் என்ன‌ பல வகையான பாவனைகளை அவர்கள் முகத்தில் காட்டினர்…..
இரண்டு பேரும் அவர்களது அறைக்கு சென்று ரெஃப்ரெஷ் ஆகிவிட்டு கீழே வந்தனர்….
அவர்கள் இருவருக்கும் லதா மற்றும் அம்பிகா சாப்பாட்டை பறிமாறினர் . இருவரும் சாப்பிட்டு முடித்து விட்டு தூங்க சென்று விட்டனர்.
சாப்பிடும் போது இருவரும் எதுவும் பேசவில்லை.
அர்ஜுனிற்கு இருந்த கலைப்பில் நித்திரை தேவி அவனை வேகமாக அழைத்து கொண்டது……
ஆனால் செல்வாவிற்கோ அவனது தூக்கம் வெகு தூரத்தில் இருந்தது….
செல்வாவின் மனநிலை எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை. காரணம் அவன் கிட்ட தட்ட இரண்டு வருடங்கள் கழித்து தன்னவளை சந்தித்து உள்ளான் என்று மனம் குளிரவா அல்லது இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அவளை சந்திக்க நேர்ந்தது என்று கவலை கொள்வதா என்றே தெரியவில்லை.
ஏதோ ஒன்று அவளின் குரல் கேட்ட நிமிடத்திலிருந்து வெறுமையாக சென்று கொண்டிருந்த அவன் வாழ்விற்கு பிடிப்பு வந்தது போல் தோன்றியது அவனிற்கு.
அவளின் அழுகை குரல் அவனது செவிகளில் சென்றடைந்த நொடி ,அணைத்து ஆறுதல் படுத்த சொல்லி அடம்பிடித்த மனதையும் பரபரத்த கையை கட்டுபடுத்த முடியாமல் தவித்து போனான் அங்கிருந்தவரை..
உன்னுடன் இருந்த
அந்த இனிமையான
பொற்காலங்களை,,
இந்த தனிமையான
காலங்களோடு
ஒப்பிடும்போது
தான் தெரிகிறது
வாழ்க்கையில்
எதை இழந்தேன்று…..!!!!!!
இன்று உன்னை பார்த்து விட்டேன் .இதுவே போதும் என் வாழ்நாளை ஓட்டுவதற்கு என்று மனதில் நினைத்து கொண்டே எப்போது உறங்கினான் என்று தெரியவில்லை.
அடுத்த நாள்..
சுசிலா எழுந்து பார்த்த போது ,,மீனு கதிரையில் உட்கார்ந்து கொண்டு பெட்டில் தலை வைத்து படுத்து உறங்கி கொண்டிருந்தாள்…
சுசிலா தன் கைகளை எடுத்து மீனுவின் சிகையை கோதி விட ஆரம்பித்தார். அதற்குள் மீனு முழித்துவிட ,,” அம்மா நல்லாருக்கியா மா??? உனக்கு இப்போ தல வலி எப்படி இருக்குமா??? ” என்று கேட்டவளிடம்,, ” நான் நல்லா இருக்கேன். எனக்கு இப்போ தல வலிலாம் பரவாயில்லை ” என்று பொறுமையாக பதில் கூறினார்.
பின் சுசிலா ஏதோ பேச வாய் எடுக்க,,அதை புரிந்து கொண்ட மீனு ” என்ன மா என்கிட்ட எதாவது பேசனுமா?? ” என்று கேட்க அதற்கு சுசிலா ” ஆமாம் ” என்பது தலை ஆட்ட..,,” அப்போ சொல்லு மா ” என்று சொல்லிவிட்டு சுசிலா வை பார்த்தாள்..
” இங்க பாரு மீனு மா.. நான் இனி எவ்வளவு நாள் உயிரோட இருப்பேன்னு எனக்கு தெரியல.. அதுக்குள்ள உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வைச்சா  தான் மா என் கட்ட கூட வேகும் .ப்ளிஸ் மீனு மா உன்னோட முடிவு இந்த அம்மாக்காக மாத்திக்கோ டா .. கல்யாணத்துக்கு சரி னு சொல்லு மீனு?? ” என்று ஆதங்கத்தில் ஆரம்பித்த சுசிலா கேள்வியில் முடித்தார்.
இந்த நிலையிலும் தன் அம்மா இப்படி ஒன்று கேட்பார்கள் என்று மீனு மனதிலும் நினைக்க வில்லை.
தன் அன்னையின் முகத்தை கண்ட மீனு,,தனது பதிலுக்காகவே ஏக்கத்துடன் காத்திருக்கிறார் என்று புரிந்து கொண்ட மீனுவால் என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. இப்படி ஒரு தர்மசங்கடமான நிலை வரும் என்று அவள் நினைக்கவில்லை.
சிறிது நேரம் தன் மனதுடன் புலம்பி கொண்டு இருந்த மீனு ,,” தனக்கு திருமணம் வேணாம்” என்று சொல்ல வந்த போது தான் நேற்று இரவு டாக்டரை சந்தித்த போது அவர் கூறிய செய்தி ஞாபகத்திற்கு வர,, விழிகளை மூடி வர துடிக்கின்ற கண்ணீரை உள்ளிழுத்தவள் பெரும் மூச்சொன்றை வெளியிட்டு தன் அன்னையிடம் , “அம்மா நான்  கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன் ” என்று தன் வலிகளை மறைத்து கொண்டு இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தாள்…
“எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு மா ” என்று சிலாகித்து கொண்டார் சுசிலா.
” எதுக்கு மா உனக்கு சந்தோஷமா இருக்குனு சொல்ற ” என்று ராஜன் கேள்வி கேட்டு கொண்டே உள்ளே வந்தார் . அவருடன் சிந்துவும் வந்தாள்.
” ஏங்க மீனு கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாங்க “என்றார் சந்தோஷத்துடன்
” எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு மா ” என்று மீனுவின் தலையை தடவி கொடுத்தார் ராஜன்.
” ஐம் சோ ஹாப்பி அக்கா” என்று மீனுவின் கண்ணத்தில் முத்தம் கொடுத்தாள் சிந்து.
” சரி மா நீ இப்போ வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு மா ” என்று மீனு வை வீட்டிற்கு அனுப்பி வைத்தார் ராஜன்.
பகலெல்லாம் கனவோடு
கலக்கிறேன்
நீயில்லா தனிமைகளில்..
இரவெல்லாம் கண்ணிரோடு
கரைகிறேன் வலிமிகுந்த
நேரங்களை….
மீனு தன் வலிகளை சுமந்து கொண்டு வீட்டை நோக்கி பயணத்தை மேற்கொண்டாள் .

வீட்டிற்கு சென்றவுடன் , தன் அறைக்கு சென்று எவ்வளவு அழ முடியுமோ அவ்வளவு அழுது தீர்த்தாள் .

பிறகு தன்னை சமன் படுத்தி கொண்டு , தன் கைப்பேசியை எடுத்து கதிர்க்கு அழைப்பு விடுத்தாள்…
உடனே அழைப்பை எடுத்த கதிர்,, அவனிடம் வீட்டு சூழ்நிலையை பற்றி கூறிவிட்டு” ஒருவாரம் கழித்து தான் வேலைக்கு வர முடியும் , அதுவரைக்கும் கொஞ்சம் சமாளிங்க கதிர் “என்று தான் சொல்ல நினைத்ததை கூறி முடித்தாள்.
“அஞ்சனா ..!! இப்போ ஆண்டிக்கு எப்படி இருக்கு,,எந்த ஹாஸ்பிடல்ல இருக்காங்க” என்று அவன் கேள்வி கேட்கவும்..
கதிர் கேட்ட கேள்விக்கு ஹாஸ்பிடல் பெயரையும் அன்னையின் நலனை பற்றியும் கூறி முடித்து “சரிங்க கதிர் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் அப்பறமா பேசுகிறேன் “என்று அழைப்பை துண்டித்தாள்.
இரவும் முழுவதும் கண் முளித்து இருந்த காரணத்தினால் சிறிது நேரம் உறங்கினாள் மீனு..
இங்கு கதிர்க்கு தான் ஒரே கொண்டாட்டம். அஞ்சனா கால் பண்ணி பேசியதில் பாட்டு இல்லாமலேயே ஆட தொடங்கிவிட்டான்.
சிறிது நேரம் ஆட்டத்திற்கு பிறகு , கதிர் குளியலறைக்கு சென்று ரெஃபிரெஷ் ஆகி  வெளியே வந்தவன் வெளியே செல்ல கிளம்பி கீழே வந்து , தன் அன்னையிடம் கூறிவிட்டு  சென்றான் கதிர்.
“ஏங்க மீனுவுக்கு ஒரு நல்ல இடமா பாக்கனுங்க .. நீங்க தரகர் கிட்ட சொல்லி மாப்பிள்ளை பாக்க சொல்லுங்க சீக்கிரமா மீனுவோட கல்யாணத்த முடிக்கனும்ங்க ..மீனுவோட கல்யாணத்துல தான் என்னோட சந்தோஷமே அடங்கி இருக்கு “என்று தன் கணவனிடம் கூறிக் கொண்டு இருந்தார் சுசிலா.
“சரிமா நான் தரகர் கிட்ட சொல்லிடுறேன்.நீ கவலை படாம இரு மா.. நான் எல்லாத்தையும் பாத்துக்கிறேன் .நீ மொதல்ல இத சாப்பிட்டு மாத்திரை போடு சுசி ..நீ இப்போ ரெஸ்ட் எடுக்க வேண்டிய நேரம் மா …இந்த வேலையெல்லாம் நான் பாத்துக்கிறேன்  “என்றார் ராஜன்.
“இல்லங்க நான் தான் எல்லா வேலையும் பார்ப்பேன் .நம்ம பொண்ணு கல்யாணத்துக்கு என்ன ஒரு ஓரமா இருக்க சொல்றீங்களா” என்று பொய்யான கோபத்துடன் கேட்டார் சுசிலா.
“சரி சரி நீயே எல்லா வேலையும் பாரு சரியா ..இப்போ இந்த கஞ்சிய சாப்பிடு” என்று அவரே ஊட்டி விட்டார் தன் மனையாளுக்கு..
“சரிங்க நீங்க தர்கர்க்கு போன் பண்ணி இங்க வர சொல்லுங்க “என்று சுசிலா சொல்ல ,,உடனே தர்கர்க்கு கால் பண்ணி இங்கே வர சொன்னார்…
“நான் உள்ளே வரலாமா” என்று ஒரு குரல் கேட்க சுசிலா மற்றும் ராஜன் இருவரும் கதவின் அருகே நின்றிருந்தவனை பார்த்தனர்..
“நீங்க யாரு தம்பி?? வார்ட் மாத்தி வந்துட்டிங்களா ” என்று கேள்வி கேட்டார் ராஜன்.
“இல்ல அங்கிள் . நான் சரியான வார்ட்க்கு தான் வந்துருக்கேன். உங்களுக்கு தான் நான் யாருன்னு தெரியாது ..ஆனா எனக்கு உங்க பொண்ண நல்லா தெரியும் அங்கிள்” என்றான் அந்த இளைஞன்.
“என்னோட பொண்ண தெரியுமா??எப்படி தெரியும் உங்களுக்கு. அப்புறம் உங்க பேரு என்ன தம்பி?? “என்றார் சுசிலா.
“ஆமா ஆண்டி ..எனக்கு உங்க பொண்ண நல்லா தெரியும் .. நானும் அவுங்களும் ஒன்னா தான் வேலை பாக்கிறோம். அப்பறம் என்னோட பேரு கதிர் “என்றான்.
“சரிங்க தம்பி ..அதுக்கு எதுக்கு தம்பி என்ன பார்க்க கோயம்புத்தூர்ல இருந்து வந்துருக்கிங்க?? “என்றார் சுசிலா.
“ஆண்டி இதுல என்ன இருக்கு… அதுவும் இல்லாமல் எனக்கும் உங்க பொண்ணுக்கும் இங்கேயே டார்ன்ஸ்ஃபர் கிடைச்சிடுச்சி . “என்றான் கதிர்…
“நீங்க நிஜமா தான் சொல்றீங்களா தம்பி ,,இனி அவ எங்கள விட்டு போக மாட்டள “என்று தன் ஆதங்கத்தை கேள்வியாய் கேட்டார் சுசிலா…
கதிர் வாய்யை திறக்கும் முன்,, “ஆமாம் மா இனி நான் உங்கள விட்டு எங்கேயும் போக மாட்டேன்” என்று சொல்லிக்கொண்டே உள்ளே வந்தாள் மீனு.
“நீ உண்மைய தான சொல்ற மீனு ..இனி எங்கள விட்டு போக மாட்ட தான ” என்ற தன் அன்னையின் கேள்வியில் பாசம் பரிதவிப்பு என்று எல்லாம் இருந்தது.
“இல்ல அம்மா இனி நான் எங்கேயும் போக மாட்டேன் உங்களோட தான் இருப்பேன்” என்று அழுத்தம் திருத்தமாக கூறினாள்.
“கதிர்  நீங்க இங்க வருவீங்கனு நான் எதிர் பார்க்கலை” என்று கதிரை பார்த்து கேட்டாள்.
“நீங்க அம்மாக்கு இப்படி ஆய்டுச்சின்னு சொன்னதும் எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சி அதான் பாத்துட்டு போகலாம்னு வந்தேன். நீங்க இப்ப ஆஃபிஸ்க்குலாம் வர வேணாம் வீட்ல இருந்தே ஒர்க் பண்ணுங்க அம்மாக்கு உடம்பு சரியா போனதுகப்பறம் ஆஃபிஸ்க்கு வந்தா போதும் .ஒரு மெயில் மட்டும் சென்ட் பண்ணிருங்க “என்றான் கதிர்.
“தேங்க்ஸ் கதிர்” என்றாள் மீனு…
“சரிங்க ஆண்டி நான் கிளம்புறேன் நீங்க உங்க ஹெல்த்த பாத்துக்கோங்க” என்று சொல்லிவிட்டு அஞ்சனாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றான் கதிர்.
அவன் சென்ற சிறிது நேரத்தில் தரகர் வந்து சில போட்டோக்களை கொடுத்து விட்டு சென்றார்.
அர்ஜுன் இரண்டு முறை சுசிலாவை பார்த்து விட்டு சென்றான் அதுவும் செல்வாவின் தொல்லையால் தான்…
ஒரு வாரம் கழித்து சுசிலாவை வீட்டிற்க்கு கூட்டிச் சென்றனர்.
சிந்துவிற்கும் லீவ் முடிந்துவிட்டதால் அவள் ஹாஸ்டல் சென்றுவிட்டாள்.
மீனு வீட்டில் இருந்தே ஆஃபிஸ் வேலையையும் பார்த்து கொண்டு சுசிலாவை நன்கு கவணித்து கொண்டாள்.
அர்ஜுன் அந்த வீட்டில் ஒரு பையனாக மாறி இருந்தான். அதே மாதிரி தான் கதிரும் அந்த வீட்டில்..
அர்ஜுன் மீனு வீட்டில் இவ்வளவு நெருக்கமாக இருப்பது செல்வாவிற்க்கே தெரியாது…
மீனுவிற்கு ஒரு சைட் மாப்பிள்ளை பார்த்து கொண்டே இருந்தனர்…
மீனு தண்ணீர் குடிக்கலாம் மாடி படிகளில் இருந்து வேகமாக இறங்கி வந்து கொண்டு இருந்தாள்..கீழே கொட்டி இருந்த எண்ணையை கவனிக்காமல் அதில் கால்லை வைக்கவும் வழுக்கி விட்டு அம்மா என்று கத்திகொண்டே கீழே விழுந்தாள் மீனு.
அந்த நேரத்தில் உள்ளே வந்து கொண்டு இருந்த கதிர் ,மீனுவின் சத்தத்தை கேட்டு வேகமாக உள்ளே வந்து பார்த்தான் ..
அங்கே மீனு கீழே விழுந்து கிடந்தாள்..உடனே மீனுவை தூக்கி கொண்டு ஹாஸ்பிடல் நோக்கி பறந்தான்.
அங்கே அவளுக்கு சிகிச்சை நடந்து கொண்டு இருந்தது….
சுசிலா மற்றும் ராஜன் உடனே ஹாஸ்பிடல் வந்தனர்…
சிறிது நேரத்தில் வெளியே வந்தார் டாக்டர்….
உங்க பொண்ணுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை கொஞ்சம் பலமான அடி தான்..அவுங்க எந்திரிச்சா தான் தெரியவரும் என்று சொல்லிவிட்டு சென்றார்.
சிறிது நேரத்தில் கண் முளித்த மீனுவை பார்க்க ராஜன் , சுசிலா மற்றும் கதிர் உள்ளே சென்றனர்.
“எப்படி இருக்க மா , இப்போ தலை வலிக்குதா “என்று பாசமாக கேட்டார் சுசிலா.
“தலை கொஞ்சமா  வலிக்குது மா மத்தபடி ஒன்னும் இல்லை “என்று கூறிக்கொண்டே கதிரை பார்த்து “அப்பா இவர் யாரு” என்று கேள்வி கேட்டாள்…
“மீனு மா இவர உனக்கு யாருன்னு தெரியல்லையா” என்று கேள்வியாக  ராஜன் கேட்க .அதற்கு அவள் இல்லை என்று தலையாட்டினாள்.
அந்த நேரத்தில் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தார் டாக்டர். நீங்க எல்லாரும் கொஞ்சம் வெளியே இருங்க என்று கூறிவிட்டு மீனுவை செக் செய்தார்.
சிறிது நேரத்தில் வெளியே வந்த டாக்டர்.,, அவர்களிடம் சென்று” உங்க பொண்ணுக்கு இடைப்பட்ட காலத்தில் நடந்த நிகழ்வுகளை மறந்துடாங்க “என்றார்.
“அய்யோ டாக்டர்..!!!என்ன சொல்றீங்க ..என்னோட பொண்ணுக்கு ஞாயபகமே வராதா டாக்டர் “என்று சுசிலா கேள்வி கேட்டு கதறி அழ தொடங்கினார் ..
“ஞாபகம் எப்ப வேணாலும் வரலாம்… அவுங்க கிட்ட அவுங்க பாஸ்ட் பத்தி எதுவும் பேசாதிங்க..,, அவுங்களாக்கா ஞாபகம் வந்தா உண்டு,, இல்லன்னா நம்மால ஒன்னும் பண்ண முடியாது..இப்போ அவுங்களுக்கு மயக்க மருந்து கொடுத்துருக்கோம் அவுங்க கண் முழிச்சதும் நீங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம் “என்று சொல்லிவிட்டு டாக்டர் ரௌவுண்ஸ் சென்றுவிட்டார்…
“என்னங்க அந்த ஜோசியர் சொன்னது மாதிரி எல்லாம் ஒவ்வொன்னா நடக்குது , எனக்கு என்னமோ பயமா இருக்குங்க நம்ம பொண்ணுக்கு எதாவது ஆயிடுச்சினா என்னால‌ அத தாங்கிக்க முடியாதுங்க” என்று கூறிவிட்டு கதறி அழ தொடங்கிவிட்டார் சுசிலா.
“நம்ம பொண்ணுக்கு ஒன்னும் ஆகாது மா ,நீ கவல படாம இரு  ..எத பத்தியும் யோசிக்காத இப்பொழுதிற்கு .நமக்கு நம்ம பொண்ணு தான் முக்கியம் ..அவ நல்லா இருந்தா போதும்.நீ எதுக்கும் டென்ஷன் ஆகாத மா” என்று சுசிலாவை சமாதானம் படுத்தினார் ராஜன்.
“ஆமா ஆண்டி நீங்க கவல படாதீங்க நாம எல்லாரும் இருக்கோம்ல ,, கண்டிப்பா என்னோட அஞ்சனாக்கு சாரி சாரி நம்மளோட அஞ்சனாவுக்கு ஒன்னும் ஆகாது “என்று அவனும் சமாதானம் செய்ய முயற்சி செய்தான்….
அவர்களுக்கு ஒன்று மட்டும் புரிந்தது,, கதிர் மீனுவை காதலிக்கிறான் என்பது‌ தான்.
சிறிது மீனு கண் முழிக்கவும்,, அவளை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
ஒரு வாரம் மீனு வீட்டிலேயே இருந்தாள். கதிர் மட்டும் நாள்தோறும் வந்து மீனுவை பார்த்துவிட்டு போவான்.
கதிர் தான் அப்பப்போ மீனுவை வெளியே கூட்டி சென்று வந்தான்…
இதே போல் பதினைந்து நாட்கள் கழிய,, வீட்டிற்குள்ளே இருக்க மீனுவிற்கு போர் அடித்தது… நேராக தன் தந்தையிடம் சென்றாள் மீனு.
“அப்பா ..!!! எனக்கு வீட்டுக்குள்ளே இருக்கிறதுக்கு ரொம்ப போர் அடிக்குது பா… நான் வேலைக்கு போலாம்ன்னு இருக்கேன்..அதுக்கு உங்களோட அனுமதி வேணும் பா “என்றாள் மீனு.
“வேணாம் டா தங்கம்.. உனக்கு ஆல்ரெடி உடம்பு சரியில்லை ..இதுல வேலைக்கு போறேன்னு சொல்றது எனக்கு சரி பட்டு வரல “என்று தன் மகளின் நலனை கருத்தில் கொண்டு சொன்னார் ராஜன்.
“அப்பா ப்ளிஸ் பா … எனக்கு எந்த பிரச்சனையும் வராது பா… நான் நார்மல்லா தான் பா இருக்கேன் .. அம்மா நீங்களாவது அப்பா கிட்ட சொல்லுங்க மா ,,எனக்கு ஒன்னும் இல்லன்னு “
“ஏங்க பாவம் புள்ள ஓகே சொல்லுங்க ,,பட் ஒரு கண்டிஷன் இருக்கு மீனு,,நீ அதுக்கு ஓகே சொன்ன தான் நாங்க நீ வேலைக்கு போறதுக்கு சம்மதிப்போம் “என்று பீடிகையை போட்டார் சுசிலா.
“சரி மா நீங்க சொல்ற கண்டிஷன்க்கு நான் ஓகே சொல்றேன் ..நீங்க நான் வேலைக்கு போறதுக்கு சம்மதம் சொல்லுங்க “என்றாள் மீனு..
“சரி டா மீனு.. நான் அது என்ன கண்டிஷன்னு சொல்றேன் ..அதை கேட்டுட்டு நீ நோ சொல்லவே கூடாது சரியா ” என்றார் .
வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் ” உங்க மேல சத்தியமா நீங்க சொல்ற கண்டிஷன்னுக்கு நான் நோ சொல்ல மாட்டேன் போதுமா .. இப்போதாவது அது என்ன கண்டிஷன்னு சொல்லுங்க “என்று கோபத்துடன் முடித்தாள் மீனு….

Advertisement