Advertisement

இரு வீட்டாரும் சேர்ந்து அவர்களது திருமண நாளை ஒரு வருடம் கழித்தே வைத்திருந்தனர்…..
இந்த ஒரு வாரமும் செல்வா குடும்பத்தில் சந்தோஷம் மட்டுமே நிலைத்திருந்தது..
அர்ஜுனும் நிச்சயம் முடிந்த அடுத்த நாளில் இருந்தே வேலைக்கு சென்று விட்டான்.. அதனால் சுபா தன் மனதில் பேச நினைக்கும் விசியத்தை சொல்ல முடியாமலே போனது….
இங்கு மீனு வீட்டில் …,,
“மீனு நான் உன்கிட்ட கொஞ்சம் பேசனும் மா?? “என்று சுசிலா அமைதியான குரலில் தயக்கத்துடனே கேட்க ,
“ம்ம்ம் சொல்லுங்க மா “என்று தன் துணிகளை பையில் அடுக்கியவாறே கேட்டாள்.
சுசிலா சிறு தயக்கத்துடனே பேச ஆரம்பித்தார்….
” எனக்கு உன்னோட வாழ்க்கை ரொம்ப முக்கியம் டா மீனு ,நீ ஒரு கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழ்றத பாக்கனும்னு நாங்க ஆச படுறோம் டா ,நீ இப்படியே எவ்வளவு நாள் தான் கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டே இருக்க போற சொல்லு??? உனக்கு அடுத்து ஒரு தங்கச்சி இருக்கா மா, நீ கல்யாணம் பண்ணாம இருந்தா அவ வாழ்க்கையும் சேர்ந்து தானே பாதிக்கும்..”என்று தன் மனதில் இருந்த ஆதங்கத்தை மீனுவிடம் கூறிக்கொண்டே பெற்றவரின் குரலை தடுத்தது மீனுவின் குரல்.
” அம்மா போதும் நிறுத்துங்க…!!!! இதுக்கு மேல‌ இத  பத்தி நீங்க என் கிட்ட பேசாதிங்க மா , நான் இங்க வரது புடிக்கலனா சொல்லிருங்க நான் இனி இங்க வரல “என்று கோபத்துடன் கத்த…
” வேணாம் மா ! நான் எதுவும் பேசல நீ கிளம்பு‌ “என்று தன் கண்ணீரை அடக்கி கொண்டு அந்த இடத்தை விட்டு சென்றார் சுசிலா…..
பிறகு அந்த வீட்டில் யாரும் எதுவும் பேசவில்லை. அமைதியாகவே அனைத்து வேலைகளும் நடந்தது.
மீனுவும் தன் உடைகளை எல்லாம் எடுத்து வைத்து விட்டு தனது அறையில் இருந்து வெளியே வந்தாள்….
மீனுவும் சிந்துவும் சிறிது நேரம் பேசிவிட்டு ” சிந்து மா  நீ அன்னைக்கு என் கிட்ட பூங்காக்கு போலாம்னு சொன்ன தான ,,வா நாம இன்னைக்கு அங்க பொய்ட்டு வரலாம்…” என்றாள் மீனு.
சிந்து ” அய்ய் ஜாலி ஜாலி…!!!! (மனதில் நினைத்து கொண்டு ) சரிங்க கா போகலாம் ” என்றாள் பவ்வியமாக
” சரி நீ போய் சீக்கிரம் கிளம்பி வா ” என்று அவளுக்காக காத்திருக்க தொடங்கினாள் அவள்
அவள் வந்த பின் இருவரும் பூங்காவிற்கு சென்றனர்…
சிந்து பூங்காவிற்கு சென்றதும்..,, அங்கு‌ இருந்த குழந்தைகளோடு குழந்தையாக விளையாட சென்றுவிட்டாள்.
மீனு அங்கு இருந்த பெஞ்சில் உட்கார்ந்து ,தனது அம்மாவிடம் பேசியதை நினைத்து வருந்த தொடங்கினாள்….
“அம்மா என்ன மன்னிச்சிடு மா…!!! எனக்கு வேற வழி தெரியல ,உங்கள காய படுத்தனும்றது என் நோக்கம் இல்ல .,, என்ன மன்னிச்சிடு மா என்னால கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்க முடியாது..,,அவனோட இடத்தை நான் யாருக்கும் தர விரும்பவில்லை  மா”‌என்று மனதில் புலம்பிக் கொண்டு இருக்க
அங்க இருந்த யாரோ ஒருவர்” கண்ணா ஓடாதே டா அப்பறம் கீழே விழுந்துருவ ” என்று கத்திக்கொண்டே இருக்க,,மீனு அந்த பெயரை கேட்டதும் தன் கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளில் மூழ்கிப் போனாள்…
________________________
கண்ணா : ஹே அஞ்சு மா…!!!
(மீனு தன் காதலனை கண்ணா என்று தான் செல்லமாக அழைப்பாள் ..)
மீனு “யாருடா நீ…???”
கண்ணா ” என்ன பாத்தா யாருனு கேக்குற …??? “
மீனு ” உன்ன பார்த்து தான் கேக்குறேன் கண்ணு தெரியுமா தெரியாதா உனக்கு?? “
கண்ணா ” என்னோட செல்லம் கோபமா இருக்கீங்க போல??? “
மீனு ” நான் எதுக்கு உங்க மேல கோப படனும்?? நான் யாரோ ஒரு மூணாவது மனுசி தான ..‌இங்க ஒருத்தி உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்னு கொஞ்சம் ஞாபகம் இருந்தா கூட கண்டிப்பா வந்துருப்பீங்க??? ஆனா நான் யாரோ ஒருத்தி தானே?? ” என்று முகத்தை திருப்பிக் கொண்டாள்.
கண்ணா ” அஞ்சு நீ என்ன திட்டு ..,நாலு அடி கூட அடிச்சிக்கோ அதுவும் வலிக்காம அடிக்கனும் ..,, இப்படி பேசாத மா ப்ளிஸ். எனக்கு நீ போன் பண்ணி வர சொன்னதே லேட்டா தான் டா தெரியும்.” என்றான் கவலை நிறைந்த குரலில்
மீனு ” என்ன சொல்ற??? புரியுர மாதிரி கொஞ்சம் சொல்லு??? ” என்றாள்.
கண்ணா ” நீ எனக்கு கால் பண்ணப்ப நான் உன்னோட கால்ல அட்டன் பண்ணல என்னோட ஃபிரண்ட் தான் அட்டன் பண்ணி இருக்குறான் “
மீனு ” என்னது நீ அட்டன் பண்ணலையா???? ” என்று இடையில் புகுந்து கேள்வி கேட்க
கண்ணா ” நான் சொல்றத முதல்ல சொல்ல விடு டா அஞ்சு “
மீனு ” சரி சொல்லு “
கண்ணா ” அவன் அட்டன் பண்ணிட்டு ஹலோ னு சொல்லிருக்கான் ..,,நீ வேற கண்ணானு சொல்லி பேசிருக்க அவன பேசவிடாம ..,, நீ லூசா இருப்ப போலனு நினச்சிட்டான் மா அவன் .நீ பேசிட்டு கால்ல கட் பண்ணிட்ட .,, அவன் ஏதோ ராங் நம்பர்னு நினைச்சி என்கிட்ட சொல்லவே இல்லை..,, அதுக்கப்புறம் தான் நான் ஃபோன் எடுத்து பார்த்தபோது நீ கால் பண்ணி இருந்த..,, அதான் நீ இங்க தான் வந்துருப்பேனு நினைச்சி நான் இங்கே வேகமா வந்தேன்… “
மீனு ” என்ன பாத்தா லூசு மாதிரியா தெரியுதா “
கண்ணா ” நான் எப்போ அப்படி சொன்னேன்…”
மீனு ” இன்னைக்கு நீ எப்படியோ இங்க என்கிட்ட வந்துட்ட ,, ஆனா என விட்டுட்டு பொய்டாத டா என்னால அத தாங்கவே முடியாது,,நீ என்ன விட்டுட்டு போன அடுத்த நொடியே நான் என் வாழ்க்கையை…..” என்று பேசிக் கொண்டு போனவளின் இதழ்களில் கை வைத்து பேசவிடாமல் செய்தவன் ” இங்க பாரு அஞ்சு மா., நான் உன்ன விட்டு எங்கேயும் போக மாட்டேன் நீ தான் என்னோட உயிர் ,எப்போ உன்ன நான் காதலிக்க ஆரம்பிச்சேனோ அப்பவே நீ என் சரிபாதியாக மாரிட்ட மா., என் உயிர விட்டு என்னால எப்படி வாழ முடியும் சொல்லு நீ இந்த மாதிரியெல்லாம் பேசமாட்டேன்னு ஏன் நினைக்கவும் மாட்டேன்னு எனக்கு என் மேல சத்தியம் பண்ணி கொடு அஞ்சு..” என்று கூற
அஞ்சுவும் எதை பற்றியும் யோசிக்காமல் அவன் மீது சத்தியம் செய்து கொடுத்தாள். வருங்காலத்தில் இப்படி ஒரு நிகழ்வு நடக்கும் என்று தான் இந்த சத்தியத்தை வாங்கினானோ..
கண்ணா ” குட் கேர்ள் டா மா அண்ட் லவ் யூ சோ மச் “என்றான் காதலுடன்..
“லவ் யூ டூ ராகவ் கண்ணா ” என்றாள் அதே காதலுடன்…
பிறகு இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பினர்….
___________________
ஆண்டி ஆண்டி என்று ஒரு குழந்தை கூப்பிட்டு மீனுவை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது…
மீனு “என்ன டா குட்டி வேணும் உனக்கு ???”
குழந்தை” ஆண்டி ..!!!அந்த ball எத்து குதுங்க (எடுத்து கொடுங்க) ப்ளிஸ் ” என்று தன் மழலை குறளில் கூற…
அவளும் அங்கிருந்த பந்தை எடுத்து கொடுத்தாள்….
” தாங்ஸ் ஆண்டி…!!!!! ” என்று கூறி விட்டு அந்த குழந்தை விளையாட சென்றது….
அந்த குழந்தையை பார்த்து தன் கவலைகளை எல்லாத்தையும் மறந்து சிரிக்க தொடங்கினாள்….
இவள் இங்கு அந்த குழந்தைகள் விளையாடு வதை பார்த்து கொண்டு இருக்க..,,அப்போது தான் சிந்துவின் ஞாபகம் வந்தது மீனுவிற்கு…
சிறிது நேரத்தில் சிந்துவும் அங்கே வர ..,, இருவரும் வீட்டிற்கு கிளம்பினர்….
வீட்டிற்கு வரும் வழியெல்லாம் யாரையோ திட்டிக்கொண்டே வந்தாள் சிந்து. யார் என்று கேட்டாள் அதற்கும் திட்டுவாள் என்று மீனு அமைதியாகவே வந்தாள்.
வீட்டிற்கு வந்த பிறகு சிந்து திட்டுவதை நிறுத்தினாள்….
இரவு நேரம் ஆகவும் மீனு ரயில் நிலையத்திற்கு கிளம்ப தயாரானாள் மீனு….
சுசிலாவிடம் மட்டும் மீனு எதுவும் பேசவில்லை…..
பின்னர்,,மீனு சாப்பிட்டு விட்டு தன் அப்பாவுடன் ரயில் நிலையத்திற்கு கிளம்பினாள்….
சிந்து தன் அன்னையிடம்…,,
சிந்து‌ ” அம்மா நீ கவல படாத மா …!!! அக்கா கண்டிப்பா உன்கிட்ட பேசுவா மா …!! ” என்று ஆறுதல் மொழிகள் கூற
இதனை கேட்க சுசிலா அழுகத் தொடங்கி விட்டார்.
சிந்து ” அம்மா அலுகாத  ..!!!அக்கா கண்டிப்பா புரிஞ்சுப்பா மா ஒரு நாள். நீ எதை பத்தியும் யோசிக்காதிங்க மா …”
அம்மா ” சின்ன புள்ள மாதிரி பேசு டி “என்று கோபப் பட
சிந்து ” அட போம்மா…!!! உன்கிட்ட போய் பேச வந்தேன் பாரு ..,,எனக்கு இதெல்லாம் தேவ தான்  “என்று தலைமையில் அடித்துக் கொண்டாள்.
அம்மா ” போடி போ….!!! உன்கிட்ட யாரும் வந்து அட்வைஸ் கேக்கல”
சிந்து ” எல்லாம் என் நேரம் டா ” என்று கூறி விட்டு தன் அறைக்கு சென்று விட்டாள்….
கதிர் தன் ஆபிஸில் வேலை பார்க்கும் ஒருவருக்கு அழைப்பு விடுத்து சிறிது நேரம் பேசினான்.. இறுதியில்” இதனால் கண்டிப்பா மீனு சென்னையில் உள்ள ஆபிஸில வேலை பார்க்க சம்மதிப்பாள் ” என்று கூறி அந்த அழைப்பை அணைத்தான்…
“அடுத்த வாரத்தில் இருந்து நானும் மீனுவும் ஒன்றாக சென்னையில் வேலை பார்ப்போம்…என் காதலை கண்டிப்பாக அவளிடம் கூறுவேன்….”என்று கதிர் அவன் வீட்டில் இருந்து கனவு கோட்டை கட்டிக்கொண்டு இருந்தான்….(பாவம் அவன் கனவு கோட்டை சரிய கூடாதுன்னு வேண்டிக்கோங்க மக்களே )
இங்கு ராஜன் மீனுவை ரயில் ஏற்றி விட்டுட்டு” பத்திரமா இருமா . போனதும் கால் பண்ணு .டைம்க்கு சாப்பிடு மா. வேலைக்கு கவனமாக பொய்ட்டு வா டா கண்ணு…!!!”என்று அறிவுரை வழங்கினார்.
” சரிங்க பா ..!!! நா பத்திரமா இருந்துக்கிறேன் ,நீங்க அம்மாவ பத்திரமா பாத்துக்கோங்க பா..,,நீங்க ரெண்டு பேருமே டைம்க்கு சாப்பிடனும்.. மாத்திரைலாம் கரக்டா போடுங்க… நான் இல்லை னு இனிப்பு அதிகமா சாப்பிடாதிங்க …சரிங்க பா மணி ஆச்சி அங்க அம்மாவும் சிந்துவும் தனியா இருப்பாங்க நீங்க கிளம்புங்க பா ..” என்று மீனு கூற அதற்கு ராஜன் “சரி டா கண்ணு நான் கிளம்புறேன் ” என்றார்…
அடுத்த நாள் காலை …,,
மீனுவிற்கு noon shift என்பதால் தன் விடுதிக்கு வந்து கொஞ்ச நேரம் உறங்கினாள் …
இங்கு மீனுவை நினைத்து வேதனை கொண்ட சுசிலா கோவிலுக்கு சென்று வரலாம் என்று முடிவெடுத்தார்…
சிந்துவிற்கு கோவிலுக்கு வர முடியவில்லை என்பதால் சுசிலா மட்டுமே சென்றார். காலை உணவை கூட சாப்பிட மறந்து கோவிலுக்கு சென்றார்….
அங்கு சுசிலா கடவுளிடம் தன் மன பாரத்தை சொன்ன பிறகே அவரது மனம் கொஞ்சம் அமைதியானது…..
ஆனாலும் மீனுவை பற்றின கவலை அவளை விட்டு நீங்கவே இல்லை…
சுசிலா அங்கு இருந்த எல்லா கடவுளையும் கும்பிட்டு விட்டு சந்நதியில் உட்கார்ந்தாள்…
மீனு எழுந்து வேலை கிளம்ப ஆரம்மித்தாள்….
சிறிது நேரத்தில் கிளம்பி வெளியே வந்து கேப்பிற்காக வெயிட் பண்ண, சிறிது நேரத்தில் கேப் வரவும் அதில் ஏறி ஆபிஸ்க்கு சென்று விட்டாள்…..
மீனு வேலைக்கு வந்த பிறகு அவள் தோழியான தியா அவளிடம் வந்து “கதிரையும் உன்னையும் சென்னையில் உள்ள பிராண்ச்க்கு மாத்திட்டாங்க டி…” என்று அவள் கூறவும் மீனுவிற்கு அதிர்ச்சியாக இருந்தது….
“என்ன சொல்ற தியா??? இது எப்படி நடக்க முடியும்…??? “
“அஞ்சனா நீயும் கதிரும் சேர்ந்து பண்ண போற ப்ராஜெக்ட் இனி சென்னையில் தான் பண்ணனும்னு சொல்லியிருக்காங்க டா..,, அதுனால தான் கதிர் இன்னைக்கு மார்னிங் வந்து அவரோட transformation லெட்டரை வாங்கிட்டு பொய்டாரு என்று தியா கூற…
மீனுவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை….
அவள் அப்படியே தன் இருக்கையில் அமர்ந்து விட்டாள் ‌…..
சுசிலா சிறிது நேரம் அந்த கோவிலில் இருந்து விட்டு வீட்டிற்கு செல்ல புறப்பட்டாள்….
சுசிலா காலையில் உணவை தவிர்த்தால்… இப்போது வெயிலில் நடக்க நடக்க அவளுக்கு தலை சுற்றுவது போல் இருக்க…,,அந்த நேரம் பார்த்து வந்த லாரி சுசிலாவை நெருங்க அவள் கண் இருட்டியதால் லாரி சுசிலாவின் மீது மோதியது… அந்த லாரிக்காரன் வண்டியை நிறுத்தாமல் வேகமாக சென்றுவிட்டான்…
அந்த ரோட்டில் இருந்த எல்லோரும் சுசிலாவை சுற்றி கொண்டு நின்று வேடிக்கை பார்த்தனர்.. அந்த ரோட்டில் இரத்த வெள்ளத்தில் மூழ்க தொடங்கினார் சுசிலா… ஆனால் யாரும் முன் வரவில்லை அவளை மருத்துவமனையில் சேர்க்க….
ஆனால் மீனுவின் மனதிற்கு ஏதோ உறுத்தலாகவே இருந்தது…. ஆனால் ஏன் என்று தான் புரியாமல் தவித்து கொண்டு இருந்தாள்….
சுசிலாவின் நிலைமையை கண்டு யாரும் உதவ முன் வர வில்லை.
அங்குள்ளவர்கள் அனைவரும் அந்த பெண்ணின் நிலைமையை கண்டு வேடிக்கை மட்டுமே பார்த்தனர்.
அந்த நேரத்தில் அந்த வழியை‌ கடந்து சென்ற செல்வா ..,, தீடிரென்று தான் வந்த காரை நிறுத்தி விட்டு அங்கு ஏன் கூட்டமாக இருக்கிறது என்று பார்க்க சென்றான்.
அங்கு சுசிலா இரத்த வெள்ளத்தில் இருப்பதை கண்டு ,,உடனே அங்கு கூட்டமாக இருந்த மக்களை பார்த்து.,,
” உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா?? இங்க இவுங்களுக்கு எவ்வளவு பிளட் லாஸ் ஆயிருக்கு ,, இப்படி எல்லாரும் வேடிக்கை பாக்குறீங்க? இவ்வுங்கள்ள ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனா தான் என்ன?? ” என்று அங்கு இருந்தவர்கிளை பார்த்து கத்தினான்.
அந்த கூடத்தில் இருந்த ஒரு ஆள் “இந்த அம்மாவ இப்போ ஹாஸ்பிடல சேர்த்துட்டு , அதுக்கப்புறம் எங்கள போலிஸ்க்கும் கோர்ட்டுக்கும் அலைய சொல்றீங்களா?? ” என்று ஒருவன் பேச,,
அங்கு இருந்தவர்களை எல்லாம் முறைத்து விட்டு ” இதுவே உங்க வீட்ல உள்ள யாருக்கும் இப்படி ஆச்சின்னா நீங்க சும்மா இருப்பீங்களா சொல்லுங்க??? அது என்ன உங்களுக்கு ஒரு ஞாயம் மத்த எல்லாத்துக்கும் ஒரு ஞாயமா ,இது உங்களுக்கு எல்லாம் அசிங்கமா இல்ல?? இனி இப்படி இருக்காதீங்க ஒரு உயிர் போச்சினா திரும்ப வராது ” என்று கூறி விட்டு சுசிலாவை தூக்கி கொண்டு காரில் படுக்க வைத்து விட்டு வேகமாக மருத்துவமனை சென்றான் செல்வா.
வேகமாக ஹாஸ்பிடலை அடைந்த செல்வா , அங்குள்ள ஒரு ஸ்ரெட்சர் எடுத்து வந்து அதில் சுசிலாவை படுக்க வைத்து ஹாஸ்பிடல் உள்ளே சென்று டாக்டர்சை அழைத்தான்.
அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்த ஒரு டாக்டர் சுசிலாவின் பல்ஸ் ரேட் செக் செய்து விட்டு” உடனடியாக ஆப்ரேஷன் செய்ய வேண்டும் ” என்று கூறிவிட்டு சுசிலாவை ஆப்ரேஷன் செய்யும் இடத்திற்கு அழைத்து சென்றனர்.
சிறிது நேரத்தில் வெளியே வந்த நர்ஸ் செல்வாவிடம் சென்று ” இது பேஷண்ட்டோட திங்ஸ் புடிங்க ” என்று அவன் கையில் அதை குடுத்து விட்டு சென்றாள்.
அந்த நர்ஸ் குடுத்த பொருளில் சுசிலாவின் மொபைல் போன் இருந்ததை கண்ட செல்வா ,,உடனே அதை எடுத்து அதில் சுசிலா இறுதியாக பேசிய எண்ணிற்கு கால் பண்ணலாம் என்று டையல் செய்ய போனான். ஆனால் அவனால் அதை செய்ய முடிய வில்லை.
இங்கு மீனுவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
சிறிது நேரம் யோசித்த மீனு, பிறகு மேனேஜரிடம் சென்று ரிலிவிங் ஆடரையும் transformation ஆடரையும் வாங்கி கொண்டு வெளியே வந்த மீனுவிற்கு தொலைபேசியில் அழைப்பு வந்தது….
இறுதியாக செல்வா அந்த நம்பர்க்கு டயல் செய்தான்.அந்த அழைப்பு எங்கேஜ்டாகவே  இருந்தது.
அவள் அதை எடுத்து பேசி கொண்டு ‌இருந்த நேரம் ..,,தன் அன்னையிடம் இருந்து அழைப்பு வந்தது.
இரண்டு முறை டயல் செய்தும் எடுக்கவில்லை என்று வேற நம்பர்க்கு கால் பண்ணலாம் என்று எண்ணி இன்னொரு நம்பர்க்கு டயல் செய்ய போக ,, இவன் முன்னதாக அழைத்திருந்த நம்பரில் இருந்து அழைப்பு வந்தது….
உடனே அட்டன் செய்த செல்வா….
“ஹளோ அம்மா…!!! ” என்ற குரலை கேட்டு அதிர்ச்சி அடைந்தான்.அவன் கண்கள் ஒரு ஆச்சரியத்தில் விரிந்து அதன் பின் கலங்க ஆரம்பித்தன .
மீண்டும் எதிர் புரத்தில் இருந்து ” அம்மா லைன்ல இருக்கியா??? இல்லையா?? ” என்று ஒரு குரல் கேட்டது.
அந்த குரலை கேட்டு அதிர்ச்சியில் இருந்து வெளியே வந்த செல்வாவின் மனம் சொன்னது ஒன்றே ஒன்று தான் ” உன்னோட அஞ்சுவின் குரல் ” என்றது .
தன்னை சமன் படுத்தி கொண்டு செல்வா மறுபுறம் இருந்த பெண்ணிடம் ” ஹளோ ” என்றான்.
” ஹளோ யார் பேசுறீங்க?? இந்த போன் எப்படி உங்க கிட்ட வந்துச்சி???” என்று எதிர்முனையில் கேட்க
” உங்க அம்மாக்கு ஆக்சிடன்ட் ஆயிடுச்சி..,,இப்போ XXX ஹாஸ்பிடல் ல அட்மிட் பண்ணிருக்கேன். கொஞ்சம் சீக்கிரம் வாங்க ” என்று கூறிவிட்டு கால்லை கட் செய்து அங்கே இருந்த சேரில் அப்படியே உட்கார்ந்து விட்டான்.
அந்த கால்லை கட் செய்த மீனு ,உடனே தன் தந்தைக்கு கால் செய்து விஷயத்தை கூறி அந்த ஹாஸ்பிடலின் பெயரையும் கூறி அங்கே சீக்கரமாக போக சொல்லிவிட்டு கால்லை கட் செய்தாள் மீனு.
பின்னர்..,, வேகவேகமாக தன் விடுதிக்கு வந்த மீனு ,, காலையில் ஊரிலிருந்து கொண்டு வந்த பையை எடுத்துக்கொண்டு விடுதியை விட்டு வெளியே வந்த மீனு ஒரு ஆட்டோ பிடித்து ரயில் நிலையம் சென்றாள்.
ராஜன் மற்றும் சிந்து வேகமாக மீனு சொன்ன ஹாஸ்பிடலுக்கு வந்து சேர்ந்தனர்.
சிந்து வேகமாக ரசப்செஷன் சென்று ,, அவர்களிடம் ” கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இங்க ஆக்சிடன்ட் னு சொல்லி யாராவது அட்மிட் பண்ணாங்களா??? ” என்று கேட்க அங்கு உள்ள பெண்மணி ” ஆமா..,,இப்போ அவுங்களுக்கு ஆப்ரேஷன் நடந்துட்டு இருக்கு ” என்று கூற ,,சிந்து ” தாங்ஸ்” என்று கூறி விட்டு வேகமாக தன் தந்தையுடன் அங்கே சென்றாள்.
ஆப்ரேஷன் கிட்ட தட்ட நான்கு மணி நேரமாக நடை பெறுகிறது.
ராஜன் அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்து இருந்தார். சிந்து மட்டும் தேம்பி தேம்பி அழுது கொண்டே இருந்தாள்.ராஜன் சிந்துவை சமாதானம் செய்யும் நிலையில் இல்லை என்றாலும் அவளை சமாதானம் செய்ய முற்பட்டார் .
டாக்டர்ஸ் எதுவும் கூறவில்லை.நேரம் ஆக ஆக பயம் கூடி கொண்டே இருந்தது….
மீனு சென்னை வந்து இறங்கியதும் வேகமாக ஒரு ஆட்டோவை பிடித்து ஹாஸ்பிடல் வந்து சேர்ந்தாள்.
மீனு வரதை கண்ட சிந்து ..,,வேகமாக ஓடி சென்று அவளை கட்டி பிடித்து கொண்டு அழ தொடங்கினாள் .
“அக்கா ..!! அம்மாக்கு ஒன்னும் ஆகாதுல .,,எனக்கு ரொம்ப பயமா இருக்கு அக்கா …”‌என்று அவளை கட்டி பிடித்து கொண்டே கேட்க..,,
மீனுவும் ” அம்மாக்கு ஒன்னும் ஆகாது டா ..நீ அழுகுறது அம்மாக்கு தெரிஞ்சா ரொம்ப ஃபீல் பண்ணுவாங்க  ..கண்ண தொடச்சிக்கோ பாக்கலாம் “என்று அவளை சமாதானம் செய்து கொண்டு இருந்தாள்.
இவர்கள் மூவரும் அங்கு இருந்த செல்வாவை கவணிக்க வில்லை …
சிறிது நேரம் கழித்து ஆப்ரேஷன் தேட்டரில் இருந்து வெளியே வந்த டாக்டர் ராஜனிடம் சென்று ” உங்க மனைவி பொளச்சிடாங்க சார்..இனி பயப் பட ஒன்னும் இல்லை….”என்று சொல்ல ..அதற்கு ராஜன் ” ரொம்ப நன்றி சார் என்னோட மனைவிய காப்பாத்துனதுக்கு ” என்று கை எடுத்து கும்பிட,,
” அந்த பையன் சரியான நேரத்துல கொண்டு வந்து சேர்த்ததால காப்பாத்த முடிஞ்சது.. இல்லன்னா கண்டிப்பா காப்பாத்திருக்க முடியாது சார் ..நீங்க நன்றி சொல்லனும்னா அந்த பையனுக்கு சொல்லுங்க சார் ” என்று கூறி அந்த இடத்தை விட்டு சென்று விட்டார்.
ராஜன் அங்கு இருந்த பையனை நோக்கி சென்று ,,” ரொம்ப நன்றி தம்பி ..!!! என்னோட மனைவியை ஹாஸ்பிடல் கொண்டு வந்து சேர்த்ததுக்கு ” என்று தனது நன்றியை தெரிவித்தார்.
” இதுக்கு எதுக்கு அங்கிள் எனக்கு நன்றிலாம் சொல்றீங்க ..” என அந்த பையன் கூற
” சரி தம்பி உன்னோட பேரு என்ன??? இந்த ஆக்சிடன்ட் எப்படி நடந்துச்சுனு தெரியுமா தம்பி??? ” என்று ராஜன் அந்த பையனிடம் கேட்க,,
” என்னோட பேரு அர்ஜுன் சார் . நான் பொயிட்டு இருக்கும் போது ஒரு இடத்துல கூட்டமா இருந்துச்சி .. என்னன்னு பாக்கும் போது தான் அம்மா அடி பட்டு மயங்கி கீழே விழுந்து இருந்தாங்க … அதான் உடனே ஹாஸ்பிடல் கொண்டு வந்து சேர்த்துட்டேன் ” என்று அர்ஜுன் அங்கு நடந்ததை கூறினான்.
“ரொம்ப நன்றி அண்ணா ..!!!எங்க அம்மாவ காப்பாத்துனதுக்கு ” என்று மீனு கூற அதற்கு அர்ஜுன் ” பரவால்ல மா ..!!இனியாவது அம்மாவ நல்லா பாத்து கோங்க ” என்றான்.
“சரிங்க சார்..எனக்கு நேரமாச்சி நான் கிளம்புறேன்  ” என்று கூற
” சரிங்க தம்பி…நீங்க செஞ்ச உதவியை நாங்க எங்க வாழ்க்கைல மறக்க மாட்டோம் ” என்றார் ராஜன்.
பிறகு,, அர்ஜுன் வேகமாக கார் பார்க்கிங் இருக்கும் இடத்திற்கு சென்றான்.
அர்ஜுன் செல்வாவின் கார் இருக்கும் இடத்திற்கு சென்று செல்வாவை காண்பதற்காக வெயிட் பண்ணி கொண்டு இருந்தான்.
அர்ஜுனை காத்திருக்க வைக்காமல் செல்வாவே அவன் முன் வந்து நின்றான்.
“ரொம்ப நன்றி அர்ஜுன் இங்க வந்ததுக்கு .” என்று செல்வா கூறிய அடுத்த நிமிடம் பளார் என்று சத்தம் கேட்டது.
அர்ஜுனின் கை பதம் செல்வாவின் கண்ணத்தில் நன்றாக பதிந்து இருந்தது…

Advertisement