Advertisement

சுகம் – 7

கோபம் நீயெனில்

குழைவு நானெனில்

காதல் நம்மிடையே

ரசவாதமோ

“என்ன சர் இத்தனை பேர் வந்திருக்காங்க???” என்றபடி காரில் இருந்து இறங்கினாள் சௌபர்ணிகா..

“எஸ் சௌபர்ணிகா, நான் தான் இன்னிக்கே வர சொன்னேன்.. புட் கோர்ட்டை ஷிப்ட் பண்ண சொன்னேன். கார் பார்க் பண்றவங்களுக்கு அந்த சைட் கேப் கிடைக்கும்.. பெரியவங்களுக்கும் இது வசதியா இருக்கும்..” என்று அவனும் இறங்கியபடி சொல்ல,

“ஓ !!” என்றுமட்டும் சொன்னாள் வேறெதுவும் சொல்லாது.. அவளது கண்களோ என்ன வேலை நடக்கிறது என்பதனை பார்க்க,

“என்ன ஓ!! சீக்கிரம் வா.. போய் ஆட் நோட்டிஸ் டிசைன் செலக்ட் செய்யணும். எப்ப பார் வேடிக்கை தான்..”  என்றான் சலுகையாய்..

அவனது வேகத்திற்கு சேலையை கட்டிக்கொண்டு அவளால் நடக்க முடியவில்லை.. கிட்டத்தட்ட ஓடாத குறைதான்.. மூச்சு வாங்கிவிட்டது. அவளை ஒரு ஏளன பார்வை பார்த்தபடி தன் இருக்கையில் அமர்ந்தவனுக்கு அவனது வேலைகள் மட்டுமே கண்ணிலும் மனதிலும் பதிந்தது.,. ஆனால் இதிலெல்லாம் பாவம் சௌபர்ணிகாதான்..

திருமணம் வீட்டில் அலைந்து திரிந்தது வேறு அலுப்பாய் இருக்க, இவனோ வந்ததில் இருந்த வேலை வேலை என்றிருக்க,  ஒரு ஜூஸ் குடித்தால் தேவலாம் போல் இருந்தது.. அதை அவனிடம் சொல்ல முடியுமா என்ன?? எச்சில் விழுங்கியபடி அவன் கூறுவதை எல்லாம் சரி செய்து கொண்டு இருந்தாள்..

என்ன நினைத்தானோ அவளது முகத்தை பார்த்தபடி இருந்தான்.. அவனது பேச்சு நின்று போகவும், கணினியில் இருந்து தலையை திருப்பி பார்த்தவள் அவனது பார்வை அவள் முகத்தில் படிந்திருப்பதை கண்டு அவளும் ஒரு நொடி பேச்சற்று தான் போனாள்..

இருவரது இந்த மோன நிலைக்கு ஆயுள் ஒரு சில நொடிகள் கூட இல்லை தன்னை சுதாரித்துகொண்ட சர்வேஷ் “ஓகே தென்…” என்று மீண்டும் எதுவோ கூற ஆரம்பித்தான் ஆனால் சௌபர்ணிகாவிற்கு தான் அதை மனதில் ஏற்ற சில நேரம் பிடித்தது..

“சௌபர்ணிகா….”

“சா.. சாரி சர்.. ஒரு நிமிஷம்..” என்றவள் வேகமாய் தண்ணீர் பாட்டிலை எடுத்து குடித்தாள்..

‘பாக்குறான் பார்.. காலையில சரியாக்கூட சாப்பிட விடாம இழுத்துட்டு வந்தானே.. குடிக்கவாது ஏதாவது வாங்கி கொடுத்தா என்ன ?? கஞ்சத்தனம்’ என்று அவனை திட்டியபடி தான் குடித்தாள் ஆனால் புரை ஏறியது என்னவோ அவளுக்கு தான்..

“ம்ம் மெல்ல ” என்று வேகமாய் தலையில் தட்ட கை ஓங்கியவனை திகைத்து  பார்த்தாள் சோபி.. அவனுமே அவளது பார்வையை கண்டு, தான் செய்ய விளைந்த காரியத்தை எண்ணி வேகமாய் கைகளை மடக்கி கொண்டான்..

ஆனால் அவனது இந்த சிறு செயல் சௌபர்ணிகா மனதில் ஒரு புன்னகையை மலரச் செய்தது.. அடுத்த நொடி “வேண்டாம் சோபி.. இவனிடம் நீ வேலை செய்கிறாய் அவ்வளவே.. நீ அந்த அளவில் இரு போதும்” என்று அவள் மனமே எச்சரித்தது..

இருவரும் ஒருசிறு நேரம் மௌனித்து அமர்ந்திருக்க, அதுவே இருவருக்கும் ஒரு அவஸ்தையை கொடுக்க, சர்வேஷ் பொறுத்தவனோ, “ஓகே சௌபர்ணிகா, வா போர்த் ப்ளோர்ல விசிட் போயிட்டு வரலாம்…” என்றழைக்க,

“ஓகே…” என்று அவளும் நடந்தாள்.                  

சர்வேஷ் எஸ்கலேட்டர் பக்கம் போகவும் “சர் லிப்ட்ல போலாமே..” என்றபடி தயக்கமாய் நின்றாள்..

“லிப்ட் எதுவும் வேலை செய்யாது..” என்றான் அவனோ கூலாக..

“என்.. என்ன ?? ஏன் ???” என்று சௌபர்ணிகா பதற்றமாய் கேட்க,

“என்ன ஏன்?? நீ எந்த உலகத்துல இருக்க,. கொஞ்சம் கண்ணை திறந்து பாரு.. மால் இன்னிக்கு க்ளோஸ்ட் எல்லாம் அல்டர் பண்ணிட்டு இருக்காங்க. இன்னும் ரெண்டு நாள்ல தீபாவளி சேல்ஸ் ஆரம்பிக்கணுமே.. லிப்ட் செர்விஸ் பண்ணிட்டு இருக்காங்க.. ஏறு சீக்கிரம்” என்றவன் சொல்ல, அப்போது தான் அவள் சுற்றிலும் பார்த்தாள்..

“ஷ்… இது வேடிக்கைப் பார்க்கிற நேரமில்லை சௌபர்ணிகா..” என்று சர்வா பல்லைக் கடிக்க, 

“இல்.. இல்ல நான் ஸ்டெப்ஸ்ல வர்றேன்..” என்றாள் மெதுவாய்..

“ஏன் ???”

“இல்ல.. என்.. எனக்கு இது.. இதுல ஏற கொஞ்சம் பயம் அதான்” என்று சொல்லி முடிக்கவில்லை அவன் பட்டென்று சிரித்துவிட்டான்…

“வாட்… !!! கம் அகைன்… ஹா ஹா பயமா!! உனக்கா ??” என்று அவன் சிரிப்பதை பார்த்து அருகே வேலை செய்து கொண்டிருந்தவர்களும் என்னதென்று புரியாமல் இவர்களைப் பார்க்க..  சௌபர்ணிகாவிற்கு தான் அவமானமாய் போய்விட்டது.. ஆனாலும் அவன் சிரிப்பை நிறுத்திய பாடில்லை.

“ம்ம்ச் இப்போ ஏன் சிரிக்கிறீங்க???!!” என்று முகத்தை உர்ரென்று வைத்துக் கேட்க, அப்போதும் அவன் விடாது சிரிக்க,

“ஹலோ இப்போ ஏன் இவ்வளோ சிரிப்பு..” என்று முறைத்தாள்.  

“சின்ன பசங்க எல்லாம் எவ்வளோ அழகா இதுல ஏறி போதுங்க.. உனக்கென்ன??? ஹா ஹா”

‘சிரி சிரி, இப்படி சிரிக்கிற உன்னை மொட்டை வெயில்ல சிக்னல்ல நிக்க வைக்கணும்….’  

“வாட் ??!! ”

“நத்திங்.. நான் ஸ்டெப்ஸ்ல வர்றேன்…” என்று திரும்பியவளை கைகளை பிடித்து நிறுத்தினான்..

“என்… என்ன சர்???!!!” என்று திகைத்தவள், அவனது முகத்தையும் தன் கரத்தை பற்றியிருக்கும் அவனது கரத்தையும் மாறி மாறிப் பார்க்க, 

“கண்ணை மூடு… ” என்றான்..

“எதுக்கு ???”

“சொல்றேன்ல.. க்ளோஸ் யூவர் ஐஸ்..” என்று மிருதுவாய் சொல்ல,

“ம்ம்…. ” என்று தலையை ஆட்டியவளின் கண்கள் தன்னைப்போல் கண்களை மூடிக்கொள்ள, 

அடுத்த நொடி அவள் தோள்களில் கைவைத்து தன்னோடு லேசாய் தள்ளியவன் அவளை  எஸ்கலேட்டரில் நிறுத்த, அவளோ தான் மேலே  ஏறிக்கொண்டு இருப்பது புரிந்து கண்களை வேகமாய் திறந்து ‘ஆ!!’ என வாய் பிளந்து சர்வேஷைப் பார்த்தாள்..

அவனோ இன்னும் கிண்டல் மாறாத சிரிப்பில், அதே போல கைகளை பற்றி இந்தபக்கம் நிறுத்தினான்.. என்ன நடந்தது என்று அவளுக்கு இன்னும் புரியவில்லை… கண் மூடித் திறப்பதற்குள் எல்லாம் நடந்திட, அவளோ அசையாது நிற்க, அவள் முகத்தையே சர்வேஷ் பார்த்துகொண்டு இருக்க,  

“இது.. இது எப்.. எப்படி ???” என்றாள் கண்கள் இமைக்காது..

“ஹா!! யோசி… மூளை இருக்கு தானே.. கார்த்திக் எல்லாம் எவ்வளோ ஷார்ப்பா இருக்கான்.. நீ ஏன் இப்படி இருக்க??”

‘என்னது கார்த்திக் ஷார்ப்பா???!!! அவனை ஷார்ப்புன்னு சொல்ற நீ அதிபுத்திசாலி தான் போ…’ என்று அத்தனை உணர்விலும் அவளது மனம் கவுன்ட்டர் அடிக்க,

“என்ன பதிலையே காணோம்??” என்றான் இவன்.

“நத்திங் சர்..”

“வாட் சௌபர்ணிகா இது.. எப்போ எது கேட்டாலும் நத்திங் நத்திங் நத்திங்… இதென்ன பழக்கம்..???” என்று அத்தனை நேரம் இருந்த புன்னகை மாறி எரிந்து விழ, அவன் வேண்டுமானால் நினைத்த நேரத்தில் தன் உணர்வுகளை மாற்றிக்கொள்ளலாம்.. ஆனால் அவளால் முடியுமா என்ன??? பதில் கூற முடியமால் திகைத்து விழித்தாள்..

“என்ன என்ன அப்படியே நிக்கிற?? இப்படி ஒன்னும் தெரியாத மாதிரி முகத்தை வைச்சா நீ ரொம்ப அப்பாவின்னு நம்பிடுவேனா?? பார்த்தேனே அன்னிக்கு அம்மா கூட, அப்புறம் இன்னிக்கு மண்டபத்தில் எல்லாம் எவ்வளோ வாய் பேசுனன்னு.  இப்போ என்ன கொழுக்கட்டையா வச்சிருக்க.. எது கேட்டாலும் நத்திங்.. இனிமே அப்படி சொல்லி பாரு அப்போ தெரியும்…” என்று மிரட்ட,

‘ஐயோ என்ன இது..’ என்று மேலும் கண்களை விரித்தாள்..

“என்ன இப்படி பாக்குற… லுக் எனக்கு நல்லா தெரியும் நீ என்கிட்ட மட்டும் தான் இப்படின்னு.. பட் வொய்.. எல்லார்கிட்டவும் நல்லா பேசுற நான் மட்டும் அப்படி என்ன பண்ணிட்டேன்..” என்று அழுத்தம் திருத்தமாய் கேட்டவனை கண்டு,   அவளால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

சௌபர்ணிகாவிற்கு அழுகையே வந்துவிடும் போல இருந்தது.. யாரும் இதுவரை அவளை இப்படி பேசியது இல்லை. அவளது தந்தை கண்டிப்பானவர் தான் ஆனால் இப்படி எல்லாம் நடந்தது இல்லை..  அழுகை வந்துவிடும் என்ன வந்தே விட்டது.. பேசாமல் அமைதியாய் நின்றாள்..

ஆனால் அவனுக்குமே தெரியவில்லை தான் ஏன் இப்படி நடந்துகொண்டோம் என்று.. அவளது கலங்கிய முகம் அவனை எதோ செய்தது..

“ம்ம்ச் இப்போ ஏன் இப்படி நிக்கிற.. நட.. எது சொன்னாலும் உடனே கண்ணுல தண்ணி வந்திடும்.. என்ன தான் பழக்கமோ.. சி எனக்கு இப்படி இருந்தா சுத்தமா பிடிக்காது..” என்று சொல்லியபடி அவன் நடக்க,

‘அப்போ அழுக்கா பிடிக்குமா ???!!’ என்று அந்த நேரத்திலும் அவள் மனதில் கவுன்ட்டர் முளைத்தது..

அதற்குமேல் அவனிடம் அவள் பேசவில்லை.. அவன் சொன்ன வேலைகளை மட்டும் செய்தாள்.. எப்போதும் இருக்கும் சிரிப்பு அவளிடம் இல்லை.. சர்வேஷ் கூட ஏதாவது சொல்லி பின் அவளது முகத்தைப் பார்க்க, அவளோ கர்மமே கண்ணாய் இருந்தாள்.. இரண்டொரு முறை அவனும் பார்த்துவிட்டு  மேற்கொண்டு எதுவும் பேசாமல் இருந்தான்..

மேல் தளங்களில் நடக்கும் மாற்று வேலைகளை எல்லாம் பார்த்துவிட்டு கீழிறங்கப் போக,

“நான் ஸ்டெப்ஸ்ல வர்றேன்…” என்று முனுமுனுத்து சௌபர்ணிகா நகரப் போக, அதே நேரம் அங்கு வந்த இருவர், “சார் லிப்ட் செர்விஸ் பண்ணியாச்சு.. ஒன்ஸ் நீங்க செக் பண்ணிட்டா நல்லது…” என்று சர்வேஷிடம் சொல்ல,

“யா.. ஓகே..” என்றவன் சௌபர்ணிகாவை பார்த்தான்..

‘இப்போ என்னத்துக்கு என்னை பார்க்கணும்.. இவன் ஒருத்தன் லிப்ட்ல போனா போதாதா…’ என்றெண்ணியவள் இருப்பதா போவதா என்பதுபோல் தயங்க,

“கம் வித் மீ…” என்று சொல்லியபடி அவன் நடக்க, “ம்ம்ச்.. இவனோட பெரிய இம்சை..” என்று முனுமுனுத்து அவளும் நடக்க,

“என்ன?? என்ன சொன்ன??” என்று கேட்டவனுக்கு வழக்கம் போல் “நத்திங்…” மட்டுமே பதிலாய் கொடுத்தாள்.

லிப்டில் இருவரும் ஐந்தாவது தளத்தில் இருந்து கீழே வர பட்டங்களை அழுத்த, ஆரம்பத்தில் சரியாய் இறங்கிய லிப்ட் மூன்றாவது தளம் வருகையில் பாதியில் அப்படியே நின்றுவிட்டது.. உள்ளேயே இவர்கள் இருவரும் மட்டுமே இருக்கே, லிப்ட் ஒருமுறை லேசாய் ஆடி நின்றதும்  சௌபர்ணிகாவிற்கு ஒருமுறை இதயமும் ஆடித்தான் நின்றது..

‘அச்சோ…’ என்று சர்வேஷைப் பார்க்க, அவனோ “வாட் ஹேப்பன்…” என்று பட்டங்களை விடாது அழுத்த ம்ம்ஹும் சுத்தம் எவ்வித அசைவும் இல்லை..

“இப்போ என்ன பண்றது…??” என்று சௌபர்ணிகா கேட்கும்போதே,

“ம்ம்ச் இப்போ ஏன் உன் முகத்துல இவ்வளோ டென்சன்.. நீ மட்டும் தனியாவா ஸ்ட்ரக் ஆகி நிக்கிற.. நானும் தானே..” என்று கடிந்தவன், லிப்ட் சர்வீஸ் செய்தவர்களின் எண்ணை அழுத்த, அதுவோ அழைப்பே போகமாட்டேன் என்று அடம் செய்தது..

“டேமிட்… சிக்னல் இல்லை போல…” எனும்போதே,

‘நான் பாட்டுக்கு ஸ்டெப்ஸ்ல போயிருப்பேன்.. ‘என்று சௌபர்ணிகா முணுமுணுக்க,

“என்ன ஒரு நல்ல எண்ணம்???” என்றான் நக்கலாய்..

“பின்ன.. திட்டிட்டே இருக்கீங்க.. நான் என்ன செய்ய??” என்று அவளும் பதிலுக்கு பதில் கேட்க,

“ஷ்ஷ்…” என்று ஒருநொடி கண்களை மூடித் திறந்தவன், “சரி திட்டலை போதுமா…” என்று மென்மையாக சொல்ல, அந்த குரல் அவளது என்னவோ செய்தது நிஜம்..

“என்.. என்ன??” என்று அவள் திகைக்கையில்.. “என்ன சௌபர்ணிகா..?? நான் திட்டலை சொன்னேன்…” என்று அவன் சொல்கையில் தன்னருகே அவன் வந்து நிற்பதாய் உணர, வேகமாய் அவள் பின்னே நகர, லிப்டின் பக்க வாட்டில் இடித்துக்கொண்டாள்..

“ஷ்…” என்று கை முட்டியைத் தேய்க்கப் போக,

“என்னதிது.. என்னாச்சு உனக்கு…” என்று அவன் அக்கறையாய் கேட்க,

“இல்ல.. அது…” என்று திக்கித் திணற,

“இடிச்சா வலிக்கும்.. வலிச்சா அதை என்கிட்ட சொல்ல என்ன வந்தது..” என்றவன், கரிசனமாய் “ரொம்ப வலிக்குதா??” என, அவனது அந்த அக்கறையான மிருதுவான குரலில் அவளின் கண்கள் கலங்கியது தான் அந்தோ பரிதாபம்..

சர்வேஷோ அவள் வலியில் அழுகிறாள் என்றெண்ணி, “ஹேய்.. நிஜமா ரொம்ப வலியா??” என்றபடி அவளது கரங்களை பிடித்துப் பார்க்க, அவனுக்கோ யாரையேனும் அழைத்து முதலில் வெளியே போகவேண்டும் என்பது கூட மறக்க, அவளோ அவனது அருகாமையில், திக்குமுக்காடித் தான் போனாள்..

“இல்ல.. அது.. வலி..இல்ல..” என்று சொல்லும்போதே, அவன் அவளை நெருங்கித் தான் நின்றிருந்தான்..

“பின்ன ஏன் அழுத…” என்று அவனது குரல் வெகு அருகில் கேட்டதும், பட்டென்று சோபி அவனை நிமிர்ந்து பார்க்க, சில நொடிகள் இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்று கலந்திட,

சௌபர்ணிகாவின் கரங்களை பிடித்திருந்தவனின் பிடியோ இன்னமும் இறுக, தலையில் சூடிய மல்லிகையின் வாசமும், அவள் கண்களின் மொழியும் நிச்சயமாய் சர்வேஷை லேசாய் ஆட்டித் தான் படைத்தது..

அப்படியே அவளது கண்களைப் பார்த்து நின்றவனுக்கு இத்தனை நாட்கள் மனதில் இருக்கும் வெறுமை எல்லாம் கரைவது போல் இருக்க, அவளது மல்லிகை வாசமோ அவன் மனதெங்கிலும் புகை மூட்டம் போல் பரவி ஒருவித மயக்கம் தருவதாய் இருக்க, அப்படியே அவள் மீது சாய்ந்துகொள்ள வேண்டும்போல் இருக்க,

அதேநேரம் சட்டென்று “சர்வா என்ன பண்ணிட்டு இருக்க நீ…” என்று அவனது அறிவும்,

“சோபி.. என்ன இருந்தாலும் அவன் உனக்கு சம்பளம் கொடுக்கிறவன்.. அவனே சொல்லிருக்கான் தானே..” என்று அவளது புத்தியும் ஒரே நேரத்தில் சத்தமிட,

இவர்களின் மோனம் களையும் முன்னே, லிப்ட் மீண்டும் ஒருமுறை ஆடி கீழிறங்கத் தொடங்க, அந்த ஆட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் முட்டி பின் வேகமாய் விலகி நின்றுகொண்டனர்..

‘சோபி என்ன இது..’ என்று அவள் தன்னை தானே கடிந்துகொள்ளவும்.

‘சர்வா நீயா இப்படி’ என்று அவன் தன்னை தானே கேட்டுக்கொள்ளவும், இருவரும் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்க்க தயங்கி நிற்க, ஒருவழியாய் தரை தளம் வந்துவிட்டது..

லிப்டின் கேட்டைத் திறந்து வேகமாய் சௌபர்ணிகா வெளியேறிட, சர்வேஷ் வெளி வருகையில், “சாரி சார் ஒரு சின்ன பிராப்ளம்..” என்றபடி வந்தார் லிப்ட் சர்வீஸ் செய்யும் நபர்..

“ஹ்ம்ம் என்னன்னு பார்த்து சரி பண்ணுங்க..” என்றவனுக்கோ எண்ணம் அவனிடம் இல்லை.

அறைக்குள் செல்வதா?? சென்றால் அவளைக் காண வேணுமே என்பதெல்லாம் தோன்ற, வெறுமெனே வெளி வேலைகளைப் பார்ப்பதுபோல் பார்த்து நின்றிருந்தான். உள்ளே சென்ற சௌபர்ணிகாவோ வேக வேகமாய் தண்ணீரைப் பருக, மனம் ஒருநிலையில் அடங்க மறுத்தது..                                     

நேரம் இப்படியே செல்லவும் சர்வேஷை காண ஷ்ரவன் வந்தான்.. தன் நண்பனை கண்டதும் சர்வேஷின் முகம் மற்றதை விடுத்தது புன்னகையை பூசிக்கொண்டது.. இந்த நேரத்தில் இவன் வந்ததும் கூட நல்லதோ என்றெண்ணிக்கொண்டான்..

 “வா டா வா.. ஷ்ரவன்…. பாத்து ரொம்ப நாள் ஆச்சு.” என்று அவனுக்கு கரம் குலுக்க,

“என்ன பண்ண சர்வா.. ட்ரைனிங் போட்டாங்க.. ஆமா என்ன வர சொன்ன?? எதுவும் முக்கியமான வேலையா என்ன ??” என்றான் அவனும்..

“ஆமாடா ஆடிட்டர் பார்க்கணும் கூட நீயும் இருந்தா நல்லா இருக்கும்னு நினைச்சேன்.. இப்போ நீ ஃப்ரீ தானே…”

“ஃப்ரீ தான்டா.. இப்போவே போலாமா???” என்று ஷ்ரவனும் சொல்லிட,  இருவரும் கிளம்பினார்கள்..

கிளம்புகையில் ஷ்ரவன் வந்து சௌபர்ணிகாவிடம் இரண்டொரு வார்த்தை பேசினான்.. சௌபர்ணிகாவும் மற்றதை எல்லாம் விடுத்தது சிரித்தபடியே பேசினாள். ஷ்ரவனோடு சேர்ந்து சர்வாவும் உள்ளே வர, இருவரையும் பார்த்தவனோ ‘எல்லார்கிட்டவும் சிரி..’ என்று நொடித்தவன்,  

“கொஞ்சம் வேலை இருக்கு.. பார்த்துக்கோ.. வந்திடுவேன்..” என்று  மட்டும் கூறிவிட்டு நண்பனை அழைத்துக்கொண்டு கிளம்பி சென்றுவிட்டான்.. 

அவன் கிளம்பி சென்றதும் தான் அவளுக்கு இயல்பாய் இருக்கவே முடிந்ததுபோல் இருந்தது. என்னவோ இத்தனை நேரம் இருந்த ஒரு படபடப்பு அடங்கி தன்னிலைக்கு வர வர, மனதில் அத்தனை கடுப்பாய் வந்தது.. இழுத்து வராத குறையாய் அழைத்து வந்தான்.. வந்து பார்த்தால் அப்படி ஒன்றும் அதிகம் வேலை இருந்தது போல தெரியவில்லை.. அனைத்துமே முடியும் நிலையில் இருந்தன. பின் எதற்காக அத்தனை அவசரப் படுத்தி அழைத்து வர வேண்டும் என்றிருக்க, அடுத்து வேலை ஆட்கள் வந்து எதுவோ கேட்க அவளும் எழுந்து சென்றாள்.

மீண்டும் அனைத்தையும் சுற்றி நின்று ஒருமுறை பார்த்துவிட்டு வர, அவளது வயிர் தான் இருப்பாதாய் காட்டிக்கொண்டே இருந்தது.. எத்தனை நேரம் தான் சமாளிக்க, தண்ணீர் இருந்தது முழுவதையும் குடித்துத் தீர்க்க, அதுவோ எத்தனை நேரம் தாக்கு பிடிக்கும்..

யாரையாவது அனுப்பி ஏதாவது வாங்கி வர சொல்வோம் என்று பார்த்தால் அனைவருமே வேலையில் கவனமாய் இருந்தனர்..   

சர்வேஷும் சாப்பிடாமல் தானே போனான் என்றெண்ணியவள், ‘இவன் பாட்டுக்கு கிளம்பி போயிட்டான்… சாப்பிடவும் இல்லை..’ என்று புலம்பியபடி வந்தமர, பசி தந்த மயக்கம் வேறு, இரண்டு நாட்களாய் சரியான உறக்கம் இல்லாத காரணம் எல்லாம் சேர்ந்து கண்களை சொருக வைத்தது..

எப்படி உறங்கினாள் என்று அவளுக்குமே தெரியாது.. எத்தனை நேரம் இப்படி உறங்கினாள் என்றும் தெரியாது.. யாரோ எழுப்புவது போல இருந்தது.. “இன்னும் கொஞ்ச நேரம் ப்ளீஸ்..” என்றுவிட்டு மீண்டும் தன் உறக்கத்தை அணைத்துக்கொண்டாள்.

“சௌபர்ணிகா!!!!!!!” என்று சர்வேஷ் காட்டு கத்தலாய் கத்த, 

அடித்து பிடித்து எழுந்தாள் “சா… சாரி.. சர்.. நான்.. நான் எதோ தெரியாம. சாரி” என்று சொல்கையில் அவன் பார்த்த பார்வையில் அவளுக்கு அவமானமாய் போய்விட்டது..

‘ச்சே எப்படி தூங்கினேன்..’ என்று தன்னை தானே கடிந்தவள் அவனது முகம் பார்க்காது தலை குனிய,  “ம்ம்.. முதல்ல சாப்பிடு”  என்று ஒரு பார்சலை கொடுத்தான்..

“என்னது..??!!” என்று விழிகள் விரித்து ஆச்சரியமாய் பார்த்தாள் சௌபர்ணிகா..

“ம்ம்ச் பிடி.. முதல்ல சாப்பிடு, தென் பிரெஷ் ஆகிட்டு வா, இந்த டிடைல்ஸ் எல்லாம் கொஞ்சம் சரி பாக்கணும்..” என்று சர்வேஷ் அவசரப் படுத்த,

“இல்ல இது..” என்று அவள் மேலும் தயங்க,

“ம்ம்ச்.. மார்னிங்கும் சரியா சாப்பிடலைதானே.. போ போ.. போய் சாப்பிடு..” என,

“ம்ம் தேங்க்ஸ்..” என்று சொல்லி, அவன் கொடுத்த பார்சலை வாங்கிட, “சீக்கிரம் வா.. வேலையிருக்கு…” என்று சொல்லிவிட்டு சென்றான்..

‘அதானே பார்த்தேன், என்னடா பாசமா வந்து பார்சல் தரானேன்னு.. ஹ்ம்ம் எல்லாம் இவன் வேலைக்காக தானா..’ என்றெண்ணியபடி  வேக வேகமாய் உண்ண ஆரம்பித்தாள்..

சாப்பிட்ட பின்பு தான் அவளுக்கு கண்ணே நன்றாய் தெரிவது போல இருந்தது.. கண் மட்டுமல்ல உடல் மொத்தமுமே அப்போது தான் சரியாய் இருப்பதுபோல் இருந்தது..

“ஹப்பா.. இப்போதான் கண்ணே தெரியுது..” என்று சொல்லியபடி அனைத்தையும் சுத்தம் செய்ய, அந்த கவரில் இன்னொரு பார்சல் இருப்பது கண்டு   “அட இதென்ன இன்னொரு கவர் வேற உள்ள இருக்கு..” என்று விரித்து பார்த்தாள் அழகாய் இரண்டு ஜிலேபிகள் அவளை பார்த்து சிரித்தன..

‘ஹா!!!! இந்த முசோலினி கூட மியூசிக் கம்போஸ் பண்றானே..’ என்று மனதில் அத்தனை நேரம் இருந்த கவலை காணாமல் போனது.

ஒருசிறு செயல் தான். அதுவே அவளுக்கு அப்படியொரு மகிழ்வைக் கொடுக்க, தன்னை கவனித்திருக்கிறான் என்பதும், வேலையாக போன இடத்தில் கூட அவளது நினைவு இருக்கிறது என்பதிலும் அவளது மனம் என்னென்னவோ நினைத்திடத் தொடங்கியது..    

‘என்னை கொஞ்சம் ருசியேன்…’ என்று அந்த ஜிலேபிகள் அவளைப் பார்த்து சிரிக்க,

“ரெண்டுமே எனக்கா… ஐ சூப்பர்..” என்று ஒன்றை எடுத்து வாயில் வைக்க போனாள்.. அதே நேரம் “சௌபர்ணிகா” என்று அவன் குரல் தடுத்து நிறுத்தியது..

கையில் ஜிலேபியோடு சிரித்தபடி தான் திரும்பினாள்.

“இவ்வளோ நேரமா சாப்பிட.?? நானும் அப்போ இருந்து வெயிட் பண்ணிட்டு இருக்கேன்..” என்று சொல்ல, அவள் கையில் இருந்த ஜிலேபியின் இனிப்பு இப்பொழுது அவள் மனதில் இல்லை..

“இதோ வந்திடுறேன் சர்… ஜஸ்ட் எ மினிட்..”

அவனது பார்வை அவளையும் அவளது கையில் இருந்ததையும் மாறி மாறி அளந்தது…

அவளுக்கோ ‘ஹய்யோ பிடிங்கிடுவானோ!!!!!!!!??????’ என்று முழிக்க,   என்ன நினைத்தானோ சிரித்தபடி “சீக்கிரம் சாப்பிட்டு வா” என்றுவிட்டு சென்றான்..

‘ஓ!!! காட்.. இவன் என்னை பைத்தியம் பிடிக்க வைக்கிறான்… எப்போ சிரிக்கிறான், எப்போ சீருரான்னு கண்டு பிடிக்கவே முடியலை… கடங்காரன்…. ஒரு ஜிலேப்பியை நிம்மதியா சாப்பிட விடுறான?’ என்று புலம்பியபடி வேகவேகமாய் விழுங்கிவிட்டு அதன் ருசியை கூட உணராமல் அவனை நோக்கி சென்றாள்…

 

 

 

        

          

    

 

 

  

 

Advertisement