Advertisement

சுகம் – 6

உன் விழிகள் பேசும்

பாஷையில் என் மௌனம்

உடைகிறது…

“சர் திஸ் இஸ் டூ மச்… இது பங்கசன் வீடு… இது, இதெல்லாம் சரியே இல்லை…” என்று கோவமாய் சௌபர்ணிகாவின் குரல் ஒலிக்க,

“சௌபர்ணிகா.. ட்ரை டூ அன்டர்ஸ்டேன்ட் மீ.. ஒரு பத்து நிமிசம் நான் சொல்றதை கேளு..” என்றான் விடாப்பிடியாய் சர்வேஷ்.

“சர் ப்ளீஸ் நான் போகனும்.. என்னை விடுங்க.. எல்லாரும் பார்த்தா என்ன நினைப்பாங்க…”

“நோ சௌபர்ணிகா.. நான் சொல்றதை நீ கேட்டுத்தான் ஆகணும். எனக்கு வேற வழியில்லை.. எந்த பிரச்சனையும் வராது…”

இப்படியான சர்வேஷ் மற்றும் சௌபர்ணிகாவின் பேச்சு வார்த்தைகள் ஒன்றுக்கு இரண்டாய் ஸ்ரீநிதியின் காதில் விழுந்து அவளை பதற்றத்தின் உச்சிக்கே கொண்டு போனது..

“என்ன நடக்குது உள்ள??? அய்யோ!! அண்ணா நீ என்ன பண்ற?? கடவுளே சோபிக்கா வேற உள்ள இருக்காங்க போலவே.. நான் இப்போ என்ன பண்றது.. அம்மாவை கூப்பிடவா?? இல்ல வேண்டாம்.. கார்த்திக் ஐயோ வேண்டவே வேண்டாம்…” என்று யோசித்தவள் வேகமாய் கதவை தட்டினாள்..

வேகமாய் தட்டியதில் படக்கென்று கதவு தானாய் திறந்து கொண்டது..

“ஓ ! அப்போ கதவு பூட்டு போடலியா ???” என்று யோசித்தபடி உள்ளே எட்டி பார்த்தாள்.. கதவு திறந்த வேகத்தில் அதிர்ந்து பார்த்தபடி இருந்தனர் உள்ளிருந்த இருவரும்..

அவர்களை கண்ட பின்னரே ஸ்ரீநிதிக்கு நிம்மதி வந்தது.. சர்வேஷ் தன் லேப்டாப்பை திறந்து வைத்து அதில் எதையோ சௌபர்ணிகாவிடம் காட்டிகொண்டு இருந்தான்.. அவளுக்கே ஒருமாதிரி ஆகிவிட்டதோ என்னவோ.. நாமாக எதையோ யோசித்து விட்டு ச்சே என்று எண்ணியவள்

“அண்.. அண்ணா.. என் என்ன பண்ற நீ ???” என்றாள்..

ஸ்ரீநிதியின் திக்கல் திணறலாய் வந்த வார்த்தைகளே சோபிக்கு உணர்த்தின அவள் என்ன நினைத்து கதவை இப்படி வேகமாய் திறந்தாள் என்று.. சர்வேஷை முறைத்துவிட்டு

“உள்ள வா ஸ்ரீ.. ” என,

“இல்லை சோபிக்கா.. நீங்க…” என்றாள் தயக்கமாய்..

“ம்ம்ச் உனக்கு என்ன வேணும் ஸ்ரீ??” என்று இப்போது சர்வேஷ் பல்லைக் கடிக்க,

“இல்லைண்ணா.. அது.. அதுவந்து அம்மா தேடுனாங்க அதான்..”என்றாள் திக்கி திணறி..

சௌபர்ணிகாவிற்கு சர்வேஷ் மீது அத்தனை ஆத்திரமாய் வந்தது.. ‘நிச்சயமா ஸ்ரீ தப்பா நினைச்சு இருப்பா.. இப்படியா இவன் பண்ணுவான்.. விசேஷ வீட்டில வந்துகிட்டு இதை பண்ணு அதை பண்ணுனு என் உயிரை வாங்குறான்.. கொஞ்சம் கூட இவனுக்கு இங்கிதமே தெரியாதா??’ என்று எண்ணியபடி

“உட்காரு ஸ்ரீ ஏன் நின்னுட்டே இருக்க…” என்றாள் மெல்ல..

“இல்லை சோபிக்கா.. இருக்கட்டும்…”

“இங்க பாரு ஸ்ரீ எங்களுக்கு வேலை இருக்கு.. இருக்கிறதுன்னா இரு இல்லை இடத்தை காலி பண்ணு…”என்று சர்வேஷோ எடுத்த வேலையை முடித்துவிடும் வேகத்தில் இருந்தான்,.. அண்ணனின் இப்பேச்சை கேட்கவும் ஸ்ரீயின் முகம் அப்படியே சுணங்கிவிட, அதைப் பார்த்தவளுக்கோ மேலும் கோபம் தலைக்கேற,   

“சர், போதும்.. அல்ரெடி இந்த வொர்க்கை முக்கால்வாசி முடிச்சாச்சு.. மீதியை நாளை பார்க்காலம்” என்று அழுத்தம் திருத்தமாய் கூறினாள்..

“நாளைக்கு இதெல்லாம் பிரிண்ட்டுக்கு அனுப்பனும்.. சோ வி ஹேவ் டு பினிஷ் திஸ் நவ்… ” என்றான் அவனும் விடாபிடியாய்.

“சர்.. இப்போ என்ன உங்களுக்கு நாளைக்கு இதை அனுப்பனும்.. கல்யாணம் முடியவும் நான் உங்க கூடவே வர்றேன்.. போதுமா.. லீவும் வேண்டாம் இப்போ இதோட போதும்.. எல்லாரும் வெளிய இருக்காங்க சர்.. நம்ம மட்டும் தான் இங்க இருக்கோம்..” என்றாள் புரிந்துகொள் என்ற பாவனையோடு..

“ச்சே… என்ன தான் மென்டாலிட்டியோ.. எப்போ பார் அரட்டை அடிக்கணும்.. போங்க போய் தொலைங்க.. எங்க உருப்பட போறீங்க… நாளைக்கு என்கூடவே கிளம்பனும் சொல்லிட்டேன்.. எனக்கு என் வேலை தான் முக்கியம்..” என்றவனை பார்த்து,

‘ஆமாமா வேலை முக்கியம்னு சொல்றவங்களை எல்லாம் கல்யாண வீட்ல வெங்காயம் உரிக்க   விடனும்…’ என்று  முனுமுனுத்தாள்…

“வாட் ??? ”

“நத்திங் சர்… நத்திங்..” என இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு சர்வேஷ் வெளியேறினான்..

சர்வேஷிடம் இத்தனை தைரியமாய் வெளிப்படையாய் சௌபர்ணிகா பேசியது ஸ்ரீநிதிக்கு ஆச்சரியமாய் இருந்தது.. இத்தனைக்கும் அவள் சொல்லும் அனைத்தையும் சர்வேஷ் பொறுமையோடு கேட்பதே அவளுக்கு பெரிய அதிர்ச்சியாய் தான் இருந்தது.. சர்வேஷ் கோவமாய் சென்ற பிறகும் சோபியும் ஸ்ரீநிதியும் அங்கே இருந்த நகரவே இல்லை…

சௌபர்ணிகா தான் ஆரம்பித்தாள் “ஸ்ரீ நீ.. நீ எதுவும் தப்பா நினைக்கலையே.. உன் அண்ணனை பத்தி தான் தெரியுமே உனக்கு..” என்று..

“அதானே பார்த்தேன் க்கா.. நான்கூட எங்க சாருக்கு எதோ பல்ப் எரியுதோன்னு தப்பா நினைச்சுட்டேன்.. அண்ணன் உங்களுக்கு மெசேஜ் பண்ணதை பார்த்தேன் க்கா..” என்றாள் வந்த சிரிப்பை அடக்கி..

“என்ன ஸ்ரீ சொல் ??”

“ஆமா சோபிக்கா, நான் இப்படி சொல்றேன்னு தப்பா நினைக்கவேண்டாம். அண்ணன்க்கு எப்போ பாரு வேலை தான்.. நீங்களே பாருங்க கல்யாணத்துக்கு வந்தோமா நாலு பொண்ணுங்களை சைட் அடிச்சோமான்னு இல்லாம இப்பவும் வந்து வேலைன்னு உங்களையும் டென்சன் பண்ணிட்டு இருக்கான்.. இவனுக்கு எப்படியாவது கல்யாணம் பண்ணிடணும்னு அப்பா அம்மா அவ்வளோ ஆசையா இருக்காங்க.. ஆனா இவன் எங்க.. ஹ்ம்ம் அதான் உங்களையே பார்த்துட்டு இருந்தானா சரி இவனுக்கும் எதுவோ தோணிருக்கு போலன்னு வந்தா இங்க உங்க நிலைமை இப்படி..” என்று சிரிக்க,

“ஹா ஹா நீ சொல்றது சரிதான் ஸ்ரீ.. நான்தான் சிக்கினேன் உங்க அண்ணாகிட்ட.. சரி இந்த போனை பிடி நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வர்றேன்…” என்று தன் அலைபேசியை கொடுத்துவிட்டு போனாள் சௌபர்ணிகா…

சௌபர்ணிகா சென்ற அடுத்த சில நொடிகளில் அவளது செல்லுக்கு அழைப்பு வந்தது.. “முசுடு முசோலினியா??? யாரா இருக்கும் ??” என்று யோசித்தப்படி

“ஹலோ” என்றவள்  “அண்ணா நீ யா !!! ??? ” என்றாள் வேகமாய்..

“ம்ம் சரிண்ணா.. அக்கா ரெஸ்ட் ரூம் போயிருக்காங்க..”

“சரி கத்தாத சொல்லிடுறேன்…” என்று  வைத்துவிட்டாள்.

அவளுக்கு மனதில் திடிரென்று ஒரு எண்ணம்.. “இவங்க போன்ல முசுடு முசோலினி, அண்ணா போன்ல???!!!! கண்டுப்பிடிச்சுட்டா போச்சு.. ஸ்ரீ இனிமே நீ தான் களத்தில் இறங்கனும்…”  என்று மனதில் எதுவோ கணக்குப் போட்டுக் கொண்டு இருக்க,

“என்ன ஸ்ரீ ஒரே யோசனை ??” என்றபடி வந்தாள் சௌபர்ணிகா.

“இல்லைகா அண்ணா எதோ பிங்க் கலர் பைல் அவன் லேப் பேக்ல வச்சிருக்கானாம் உங்களை எடுத்து உங்க பேக்ல வைக்க சொன்னான்.. நாளைக்கு போகும் போது மறக்காம எடுத்து வைப்பிங்கலாம்..”

‘ஹ்ம்ம் நாளைக்கு என்னையும் சேர்த்து இழுத்துட்டு போக என்னமா யோசிக்கிறான்’ என்று எண்ணியவள் அவன் சொன்னதை செய்து விட்டு ஸ்ரீயோடு அந்த அறையை விட்டு வெளியே சென்றாள்..

ஆனால் சௌபர்ணிகா, சர்வேஷ், அறியாத ஒரு விசயம், மண்டபத்தில் இருந்த சொந்தபந்தங்கள் சிலரின் பார்வை இவர்கள் மேல் இருந்தது தான்.. பொதுவாய் ஒரு கல்யாணம் காட்சி என்று சென்றால் அங்கே கல்யாண் வயதில் இருப்பவர்களை கவனிக்கத்தானே செய்வர்.. அப்படி கவனிக்கப்பட்ட சிலரில் இவர்கள் இருவரும் சேர்ந்து இருந்தது தான் பிரச்சனையாகி போனது..

போதாத குறைக்கு புனிதாவும், மோகனாவும் தோழிகள் போல பேசி மண்டபத்தில் வலைய வந்தது, இன்னும் வசதியாய் போனது..  இதற்கெல்லாம் மேலாய் சர்வேஷ், சௌபர்ணிகாவை தனியே அழைத்து பேசியது, இருவரும் பார்த்துகொள்வது பேசிக்கொள்வது, எல்லாம் வந்தவர்கள் வாய்க்கு அவல் தான்.

ஆனால் இதெல்லாம் தெரியாத ஸ்ரீயோ அன்றிரவு உறங்க செல்லும் பொழுது “அண்ணா உன் போன் குடு.. என் பிரண்டுக்கு போன் பண்ணி நாளைக்கு லீவ் சொல்லணும்..” என,

“ஏன் இதெல்லாம் முன்னாடியே சொல்றது இல்லையா ??” என்றான் அவனோ கேள்வியாக..

“ம்ம்ச் குடுண்ணா மறந்துட்டேன்.. ”..

“ம்ம்..”

“குடுத்துட்டல்ல பின்ன ஏன் இங்கயே நிக்கிற.. நான் ஒன்னும் உன் போனை முழுங்க மாட்டேன்..”  என்று சொல்ல,

“ஸ்ஸ்ஸ்.. சரி சரி மெதுவா பேச பழகு ஸ்ரீ” என்றுவிட்டு உள்ளே சென்றான் சர்வேஷ்..

அவன் உள்ளே சென்ற அடுத்த நொடி சௌபர்ணிகாவின் எண்களை அடித்து பார்த்து மறுநொடியே கட் செய்தாள்.. அதில் சௌபர்ணிகாவின் பெயருக்குப் பதிலாய்  “ஏட்டிக்குபோட்டி ” என்று பதிந்து வைத்திருந்தான்..

“அங்க முசுடு முசோலினி, இங்க ஏட்டிக்குபோட்டி.. சோஎன்னவோ இருக்கு..” என்று யோசித்தவள் ஒன்றும் தெரியாதவள் போல உள்ளே சென்று விட்டாள்..

மறுநாள் பொழுது மங்கள வாத்தியங்களோடு வண்ண மலர் வாசத்தோடு சரசரக்கும் பாட்டாடைகளின் உரசல்கலோடும், மினுமினுக்கும் பொன் ஆபரணங்களின் ஜோலிப்போடும் அழகாய் விடிந்தது..

தங்க நிற பட்டு சேலையில், தலை நிறைய மதுரை மல்லி சூடி, கை நிறைய வளையல்கள் குலுங்க சௌபர்ணிகா அழகாய் ஜொலித்தாள்.. புனிதாவிற்கு மகளின் இந்த தோற்றதை கண்டு இமைக்க முடியவில்லை..

“அழகு டி சோபி நீ.. இன்னிக்கு மறக்காம சுத்தி போடணும்” என்றுவிட்டு போனார்..

கார்த்திக் “ஹேய் சோபி கண்ணு.. இதுக்கு தான் தினமும் குளிக்கணும். டெய்லி குளிச்சா இதே மாதிரி தினமும் அழகா இருப்ப…” என்று கிண்டலாய் பாராட்டினான்..

“கார்த்திக் வந்தவங்களை கவனிக்காம இங்க என்ன சோபிக்கூட அரட்டை” என்று  பரந்தாமனின் குரல் கேட்டு  “ஹ்ம்ம் இவருக்கு நான் மட்டும் தான் கண்ணுக்கு தெரிவேன் போல” என்று புலம்பியபடி சென்றான்..

அவருக்குமே மகளை பார்த்து ஒரு பெருமிதம் தான்.. அதுவும் சர்வேஷ் வேறு அவளைப் பற்றி நல்லவிதமாய் பேசிட பரந்தாமனுக்கு உள்ளம் நிறைந்துவிட்டது.. எங்கே நான் சொன்னதனால் மட்டும் இந்த வேலையில் இருக்கிறாளோ என்று யோசித்தவருக்கு இப்போது அந்த யோசனை சிறிதும் இல்லை..

அவர் தன்னையே பார்ப்பது கண்டு “அப்பா…” என்று சௌபர்ணிகா அழைக்க,   

“சோபி, சர்வேஷ் தம்பி முக்கியமான வேலை இருக்கு உன்னை கல்யாணம் முடியவும் கூட்டிட்டு போறேன்னு சொன்னார்.. சரியா கிளம்பிடு என்ன..??” என்றார் மற்றது எதுவும் சொல்லாது..

‘அட பாவி அப்பாகிட்டையே வந்து சொல்லிட்டானா.. இவனை…’

“என்ன சோபி??”

“ஹா ஒண்ணுமில்லைப்பா.. சரி நான் போறேன்ப்பா..”

“நல்லது” என்று அவரும் சென்றுவிட்டார்..

“இந்த ஸ்ரீ எங்க போனா??” என்று சௌபர்ணிகா நினைத்து முடிக்கவில்லை வெண்ணிற பட்டு லெகாங்காவில் அழகியாய் வந்து முன் நின்றாள்..

“சோபிக்கா..!!  வாவ்… சூப்பர்… அழகா இருக்கீங்க..”

“தேங்க்ஸ் ஸ்ரீ.. நீயும் தான் செமையா இருக்க.. இப்போதான் உன்னை நினைச்சேன் நீயே வந்துட்ட..”

இப்படியே இருவரும் பேசியபடி உள்ளே சென்றால் சௌபர்ணிகாவின் பார்வை யாரையோ அலசியது.. “எங்கே இருப்பான்?? நேற்று பார்த்துக்கொண்டு இருக்கும் பொழுதே மாயமாய் மறைந்தான்.. இன்று எங்கே போனான்….” என்று அவள் உள்ளம் தன் நாயகனைத் தேட,

“என்ன சோபிக்கா யாரை தேடுறிங்க??” என்றாள் ஸ்ரீநிதி..

“ஹா !! யா.. யாருமில்லை…”

“அவளுக்கு அப்பப்போ அப்படிதான் ஸ்ரீ, எதா வித்தியாசமா கண்ணுக்குத்  தெரியும்.. திடிர்னு இப்படி ஆகிடுவா.. எல்லாம் என்னை மாதிரி தெளிவா இருப்பாங்களா என்ன ??” என்றபடி வந்து சேர்ந்தான் கார்த்திக்..

“அதானே பார்த்தேன் உனக்கு சோபிக்காவை வம்பு பண்ணலைன்னா தூக்கமே வராதே.. ”

“உனக்கு அவளுக்கு ஜால்ரா போடலைன்னா ஏப்பம் கூட வராதே…”

“ஏப்பமா ??!! என்ன சொல்ற லூசு ”

“ஆமா இன்னும் கொஞ்ச நேரத்தில் நல்லா மொக்கிட்டு ஏப்பம் விடுவல அதை சொன்னேன்..”

“ஐயோ போதும் நிறுத்துங்க… ரெண்டு பேரும்.. டேய் கார்த்திக் சும்மா என்னடா எங்ககூட வம்பு… ஸ்ரீ அவன்தான் பேசுறான்னா நீயுமா..” என்றாள் சௌபர்ணிகா..

அதேநேரம் பார்த்து சர்வேஷும் அங்கே வந்தான்..” ஹேய் எல்லாம் இங்கதான் இருக்கீங்களா ??!!” என்றபடி..

‘இங்க இல்லாம இங்கிலாந்துக்கா போயிட்டோம்!!!’

“கார்த்திக் உங்க அக்கா எப்பவும் மனசுக்குள்ளயே தான் பேசுவாளா?? ஏன் அப்பப்போ எப்படியோ ஆகிடுறா” என்று நக்கலாய் சௌபர்ணிகாவை ஒரு பார்வை பார்த்து கேட்டான்..

‘இப்படி நக்கலா பேசுறவனை நரி கிட்ட பிடிச்சு கொடுக்கணும்’ என்று  மனதில் தான் முனுமுனுத்தாள்..

“சார் இது உங்களுக்கு தெரியுது, எனக்கும் புரியுது.. அதை சொல்ல போய் தான் இப்போ இவங்க ரெண்டு பேர் கிட்டயும் வாங்கிகட்டிகிட்டேன்”

“கார்த்திக் போதும்,. போய் வேற வேலை இருந்தா பாரு.. ரொம்ப கிண்டல் பண்ணாத என்ன..” என்று சௌபர்ணிகா சொல்லும்போதே,

“ஏன் சோபி நீ மட்டும் ஸ்ரீ கூட நல்லா பேசுவ, நான் சார் கிட்ட பேச கூடாதா ??இதென்ன நியாயம்..” என்றான் அவனும்..

“அதானே இதென்ன நியாயம்?? கார்த்திக் நீ பேசு.. நான் உனக்கு புல் சப்போர்ட் பண்றேன். தென் டோன்ட் கால் மீ சார் ஓகே..”

இதை கேட்டதும் பெண்கள் இருவருக்கும் வாயடைத்து போனது.. பேசினது சர்வேஷ் தானா என்று..

ஸ்ரீ அதை கேட்கவும் செய்தாள் “அண்ணா நிஜமா நீ தானா இப்படி பேசின?? கார்த்திக் நிஜமாவே உன்கிட்ட ஒரு மேஜிக் இருக்குடா…” எனவும், இதை கேட்டு கார்த்திக் தன் சட்டை காலரை தூக்கிவிட்டு கொண்டான்..

இவர்களின் அரட்டை இப்படியே ஒரு பக்கம் தொடர, சுப முகூர்த்த வேலையில் மணமகன் மணமகள் கழுத்தில் மங்கள தாலி அணியவும்  கெட்டிமேளம் கொட்டியது..

இதை எல்லாம் காணும் பொழுது சௌபர்ணிகாவின் மனதில் தானும் இப்படி அவனோடு சேர மாட்டோமா என்று இருந்தது.. சொல்ல முடியாத ஏக்கம் தான். நினைவுகள் மறுபடியும் அவள் மனதில் மேல் எழும்ப தன் நினைவுகளுக்குள்ளே மூழ்கி போனாள்..

திடீரென்று அழகிய கனவை யாரோ ஆசிட் ஊத்தி எரித்தது போல இருந்தது அவளுக்கு அப்பொழுது.. காரணம் சர்வேஷ் தான் ”சௌபர்ணிகா கல்யாணம் முடிஞ்சது, வா சாப்பிட்டு கிளம்பலாம்” என்று அவன் வந்து உரிமையாய் அழைக்கவும் அவள் அருகே அமர்ந்திருந்த உறவுகள் சில புருவம் உயர்த்தி பார்த்தன..

“சர், இப்போதான் கல்யாணம் முடிஞ்சு இருக்கு.. உடனே கிளம்புனா நல்லா இருக்காது, இருங்க ஒரு போட்டோ எடுத்துட்டு போகலாம்..” என்று அவனுக்கு மெல்லவே சொல்லினாலும்,  அவன் கோவமாய் பார்த்தான்..

“பத்து நிமிஷம் தானே,.. கல்யாணம் உங்க மாமா பொண்ணுக்கும் தானே..” என்று சொல்ல,

“நான் வந்தது என் அம்மாக்காக…”என்றான் பட்டென்று..

“சரி.. உங்க பேமிலி, எங்க பேமிலி எல்லாம் போட்டோ எடுக்கனுமே..” என்றாள் விடாது..

“ரொம்ப முக்கியம்…”

“எனக்கு முக்கியம்..” என்றுவிட்டு சென்றாள்..

இதை எல்லாம் பார்த்திருந்த ஸ்ரீயின் மனதில் ஒரு எண்ணம்.. “அண்ணா வா, நம்மளும் அவங்கக்கூட போய் நின்னு போட்டோ எடுத்துக்கலாம். உனக்கும் நேரம் மிச்சம் தான..” எனவும் சரி வா என்று அவனும் சம்மதித்தான்..

புகைப்படம் எடுக்கும் நேரத்தில் சரியாய் வந்து சர்வேஷ் நிற்கவும் லேசாய் அதிர்ந்து தான் போனாள் சௌபர்ணிகா.. திடுக்கிட்டு பார்த்தவளை பார்த்து தன் கை கடிகாரத்தை காட்டினான் சீக்கிரம் என்பதுபோல்..

“ஐயோ விரட்டுரானே…” என்று முனுமுனுத்தவள் சிரிக்கக்கூட மறந்தாள்.

உண்ணும் பொழுதும் இப்படிதான். அருகிலேயே இருந்தான்.  “ஐ!!  ஜிலேபி..” என்று ஆசையாய் வாயில் வைக்க போனவளை அவனது பார்வை அடக்கியது..

“எல்லாம் என் நேரம்..”  என்று புலம்பியபடி உண்டு முடிக்கவும், அவன் வந்து கிளம்பலாமா என்றதும்,  “சர் நான் ட்ரஸ் மாத்திட்டு வர்றேன் ஒரு பைவ் மினிட்ஸ்” என்றாள் பாவமாய்..

“நோ அதுக்கெல்லாம் நேரம் இல்லை.. இதுவே நல்லாத்தான் இருக்கு.. கிளம்பு…”

‘எப்போ பார் அதிகாரம் தான் இவனுக்கு. திமிர் பிடிச்சவன்..’ என்று அவள் வழக்கம் போல் முணுமுணுக்க,

“வாட்??!! ” என்றான் எரிச்சலாய்..

“நத்திங் சர்… அம்மாகிட்ட சொல்லிட்டு வர்றேன்…” என்று நகரப் பார்க்க, 

அவனோ “நானே சொல்லிட்டேன்..” என்றான்.

“அப்போ அப்பா…”

“அவர்கிட்டையும் நானே சொல்லிட்டேன்.. ”

“இல்ல. ஸ்ரீ …கார்த்திக்”

“ம்ம்ச் இப்போ வரியா இல்லையா ??!!”

கத்தாத குறை தான்.. ஒன்றும் பேசாமல் கிளம்பி போனாள்.. ஆனால் போகும் போதே அனைவரிடமும் வாட்ஸ் அப்பில் மெசேஜ் தட்டித்தான் விட்டாள்.. ஸ்ரீ இதை எல்லாம் தூரத்தில் இருந்து கவனித்து கொண்டே தான் இருந்தாள்..

“ஹேய் ஸ்ரீ,. என்ன இங்க இருக்க.. அக்கா இப்போதான் மெசேஜ் பண்ணா.. ஆனாலும் உன் அண்ணன் இவ்வளோ பொறுப்பு ஆகாது பா… ” என்றான் கார்த்திக்..

“நானும் அதை தான் யோசிக்கிறேன் கார்த்திக்..”

“என்ன ???!!”

“எஸ் கார்த்திக்.. என் அண்ணனை எனக்கு நல்லா தெரியும்.. அவன் இப்படி யாருக்கிட்டயும் இவ்வளோ உரிமை எடுத்து பேசமாட்டான்.. ஆனா பாரு இங்க இத்தனை பேர் இருக்கோம் சோபிக்காவை இழுத்துட்டு போகாத குறை தான்.. உன் அப்பா அம்மாக்கிட்டயே அவனே பேசிட்டான்..”

“அவருக்கு வேலை இருக்கும் ஸ்ரீ,.. ”

“இல்ல கார்த்திக் இது வேற மாதிரி இருக்கு.. ”

“ஏய்… என்ன சொல்ற லூசு!!! ”

“கார்த்திக், ஒரு பிரண்டா நான் சொல்றதை தப்பா நினைக்க கூடாது.. ப்ளீஸ்” என்று ஸ்ரீநிதி கார்த்திக்கைப் பார்க்க, அவனோ என்ன சொல்கிறாள் என்று புரியாது..

“ம்ம் சொல்லு..” என்றான்..

“என் அண்ணனும், உன் அக்காவும் லைப்ல சேர்ந்தா எப்படி இருக்கும் கார்த்திக்???” கேட்டது என்னவோ கேட்டுவிட்டாள் ஆனால் அடுத்த நிமிடம் பயம் கொண்டாள்..

இதெல்லாம் பெரியவர்கள் பார்த்து பேச வேண்டியது.. அதுவும் இல்லாமல் கார்த்திக் என்ன நினைப்பானோ என்ற எண்ணம் வேறு.. தயக்கமாய் அவன் முகம் பார்த்தாள்.. அவனும் அவளை தான் பார்த்துகொண்டு இருந்தான்..

“எப்படி ஸ்ரீ உனக்கு இப்படி ஒரு எண்ணம்???” இன்னும் அதிர்ச்சி குறையாமல் அவன் குரல்..

“இல்ல எனக்கு தோனுச்சு அதான்.. ” என்று ஸ்ரீநிதி மென்று விழுங்க,

“ஹ்ம்ம் எங்க அக்காக்கு இப்படி ஒரு ட்ரில் மாஸ்டர் தான் லாயக்கு ஸ்ரீ” என்று சிரித்தான் கார்த்திக்..

“ஹப்பாடி… சிரிச்சிட்டியா…” என்று நெஞ்சில் கை வைத்தவள்  “என் அண்ணனுக்கும் இப்படி ஒரு ஆளு தான் மேட்சிங் கார்த்திக்…” என்றாள் புன்னகையாய்..

“ஆனா இது நம்ம மட்டும் முடிவு பண்ணா போதுமா??? அவங்களுக்கு பிடிக்கணும் முக்கியமா வீட்டில பேசணுமே.”

இப்படி கார்த்திக் ஸ்ரீ இருவரும் பேசிக்கொண்டு இருக்க பெரியவர்கள் பக்கமோ “பரந்தாமா உன் பொண்ணுக்கு மாப்பிள்ள பேசி முடிச்சுட்டன்னு சொல்லவே இல்லையே” என்றார் உறவில் ஒரு பெரியவர்

“என்ன பெரியப்பா சொல்றீங்க?? அதெல்லாம் எதுவும் இல்லையே.. உங்ககிட்ட சொல்லாம நான் எதுவும் செய்வேனா ??” என்றார் பரந்தாமன் யோசனையாய்..

“பரந்தாமா பெரிய இடம், வெளிய சொன்னா கலைச்சு விட்டிருவாங்கன்னு சொல்லாம இருந்தியோ என்னவோ?”

“என்ன பெரியப்பா சொல்றீங்க நீங்க…. அதெல்லாம் எதுவுமில்ல..”

“அதான் நேத்து இருந்து பார்த்துட்டு தானே இருக்கோம். சோபிக்கூட அந்த தம்பி வந்து பேசுறதும், எல்லாம் சேர்ந்து போட்டோ எடுத்ததும், இதோ இப்பக்கூட ரெண்டு பேரும் தானே கிளம்பி போனாங்க.”

“பெரியப்பா, அவர் அந்த தம்பி இருங்க..” என்றவர் வேகமாய் சர்வேஷின் அப்பா எங்கே என்று பார்த்து  “விஸ்வநாதன், விஸ்வநாதன் இங்க வாங்க ஒரு நிமிஷம்” என்று அழைக்க, அவரும் 

“என்ன பரந்தாமன்??” என்றபடி வர,

“இவர் எங்க பெரியப்பா.. பெரியப்பா இவர்தான் அந்த தம்பி சர்வேஷோட  அப்பா.. இவங்க மால்ல தான் சோபி  வேலை செய்றா.. இப்போக்கூட வேலை இருக்குன்னு தான் கிளம்பி போனாங்க.. விஸ்வநாதன் நம்ம பசங்க பேசினதை இவங்க தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க. அதான் சொல்லிட்டு இருந்தேன்.” என்றார்..

விஷயம் புரிந்து விஸ்வநாதன் கூட ஓரிரு வார்த்தைகள் பேசினார்.. ஆனால் இவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டுவிட்டு அந்த பெரியவர் “என்னவோப்பா எல்லாம் சொல்றீங்க.. ஆனா பிள்ளைகளை பார்க்கவும் பொருத்தமா தான் இருக்கு. சுத்திமுத்தி சொந்தம் வேற.. பார்த்து பேசி முடிங்க” என்றுவிட்டு போனார்..

இந்நிகழ்ச்சியே இரு தந்தையாரின் மனதிலும் ஒரு விதையை போட்டது… ஆனாலும் வெளிக்காட்டவில்லை..

சௌபர்ணிகாவிற்கு சர்வேஷோடு தனியாய் காரில் பயணிப்பதே ஒரு புது அனுபவமாய் இருந்தது.. அவனும் அவ்வபோது அவளை பார்த்தபடி தான் காரை செலுத்தினான்.. முதல் முறையாய் சௌபர்ணிகாவை இத்தனை நெருக்கத்தில் பார்க்கிறான்.. இதற்குமுன் இப்படி இருந்தது இல்லை.. தனியாய் இருவரும் ஒரே அறையில் வேலை செய்தாலும் இத்தனை நெருக்கம் இல்லை..

தலை நிறைய மல்லிகை சூடி, பட்டு சேலையில் அவனது பார்வைக்கு சற்றே வித்தியாசமாய் தான் தெரிந்தாள்.. அவனது பார்வையை அவளும் உணர்ந்து தான் இருந்தாள்.. உடல் எல்லாம் குறுகுறுத்தது போல இருந்தது..

அவளது கண்கள் அலைப்புருவது அவனுக்கும் தெரிந்தே இருந்ததுவோ என்னவோ, திரும்பி திரும்பி அவளைக் காண,   

‘எதுக்கு இப்படி பார்த்து தொலைக்கிறான்.’ என்று எண்ணியவள் முகத்தை ஜென்னல் பக்கம் திருப்பிகொண்டாள்… சர்வேஷிற்கு இவளின் பாவனைகள் எல்லாம் முகத்தில் அவனையும் அறியாமல் ஒரு சிரிப்பை தந்தது..

சிரித்தப்படியே காரை இன்னும் கொஞ்சம் வேகமாய் ஓட்ட, அத்தனை நேரம் மெதுவாய் போன கார் இப்போது வேகமேடுக்கவும் என்னவென்று சர்வேஷை சௌபர்ணிகா பார்க்க, அவனும் என்னவென்று தலையை தூக்கி கேட்க,

“எதுக்கு இவ்வளோ ஸ்பீடா போறீங்க..??” என்றாள் முகத்தை சுருக்கி..

மனமோ ‘எப்போ பார் வேலை வேலை வேலை.. ச்சே..’ என்று நொந்துகொள்ள, அவனோ “நந்திங்…” என்றான் அவளைப் போல்..

“வாட்???!!” என்று சௌபர்ணிகா குரலையும் புருவத்தையும் உயர்த்த,

“ஹா ஹா நத்திங்.. நத்திங்..” என்று சிரித்தவன் இன்னமும் காரை வேகமாய் கிளப்ப,

“சர் ப்ளீஸ் ஸ்லோவா போகலாமே…” என்றவளைப் பார்த்து இன்னமும் பலமாய் சிரித்தவன்,

“கார்த்திக் ஏன் உன்னை சோபி கண்ணு சொல்றான்…” என்று கேட்க,

‘இப்போ இந்த கேள்வி முக்கியமா…’ என்று முறைத்தாள்..

“எல்லாமே உல்டாவா நடக்குது..” என்று அவனாக சொல்ல,

“என்ன சொல்றீங்க??” என்றாள் அவளும் புரியாது..

“இல்லை வழக்கமா நான்தான் முறைப்பேன்  நீ நந்திங் சொல்வ..” என,

“புரிஞ்சா சரி..” என்றாள் வேகமாய்..

“என்ன என்ன புரியணும்…??”

“ஹ்ம்ம் நீங்க முறைக்கிறது தான்…” என்று சௌபர்ணிகா சொல்லவும் “வேறென்ன செய்யணும்..” என்றான் ஒன்றுமே தெரியாதது போல. அவனது குரலில் வேகமாய் ஒரு மாற்றம் தெரிந்ததுவோ என்னவோ?? அதை சௌபர்ணிகா உணர்வதற்குள் அவனது குரலும் முகமும் மாறிவிட்டது.

அதன்பின்னே அவனிடம் பேச்சில்லாது போக, சௌபர்ணிகாவும் அடுத்து எதுவும் கேட்கவில்லை.. என்னவோ இவன் இத்தனை நல்லவிதமாய் பேசியதே போதும் என்றிருந்தது.. அடுத்து வந்த நேரமெல்லாம் மௌனமாய் கழிய ஒருவழியாய் சர்வேஷின் மாலும் வந்துவிட்டது..        

                              

   


               

  

           

                       


 

Advertisement