Advertisement

சுகம் – 16

ஒருவழியாய் கார்த்திக் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் தக்க பதில் அளித்து அவனை அனுப்பி வைப்பதற்குள் சர்வேஷிற்கு போதும் போதும் என்றாகிவிட்டது.. கார்த்திக்கை அனுப்பியவனுக்கு தெரியாதா என்ன அவனது அக்கா எத்தனை கேள்விகள் கேட்பாள் என்று.. ஆனால் அதற்குமுன் அவனே முந்திக்கொண்டான்..

“சுபி.. என்ன இவன் இவ்வளோ கேள்வி கேட்கிறான்???? இதுக்கு உன் அப்பாவே எவ்வளோ பரவாயில்ல..” என,

“என்னது அப்பாவா??!!!!” என்று கண்களை விரித்தாள்..

“ஹலோ சுபி.. உங்க அப்பாதான்.. அதுக்கேன் இவ்வளோ அதிர்ச்சி..” என்று சர்வேஷ் கேட்க,  

“அவர்கிட்ட நாங்களே இவ்வளோ பேசமாட்டோம்.. நீங்க என்ன பேசினீங்க..” என்றாள் சந்தேகமாய்..

“ஓ !! உனக்கு தெரியாதா ?? மறுவீட்டுக்கு வந்த போது பேசினோம்…ரொம்ப நேரம்.. என் மாமனார் என்கிட்ட இவ்வளோ ப்ரீயா பேசுவார்னு நினைக்கலை..” என்று சொல்ல  

“வாட் ???!!!!!!! ” என்றாள் அதிர்ந்து..

“ஹேய் சுபி, இந்த வாட் எப்பவும் என்னோடது.. நத்திங் தான் உன்னோடது..”

“ம்ம்ச் இதுக்கு கார்த்திக் போடுற மொக்கையே நல்லா இருக்கும்.. கல்யாணம் ஆச்சுல.. அப்புறம் என்ன என்னோடது உன்னோடதுன்னு..” என்றாள் வேகமாய்..

சௌபர்ணிகாவிற்க்கு சர்வேஷிடம் வேலை செய்யும் போதிருந்த பயம் சிறிதும்  இப்பொழுது இல்லை. முன்னமெல்லாம் அவனை கண்டாலே நடுக்கம் ஏற்படும். ஆனால் இப்பொழுதோ கூறவே தேவையில்லை. இவன்தான் கணவன் என்றானதும் ஒரு இலக்கம் அவளுள். அதிலும் அவன் மனதிலும் காதல் இருக்கிறது என்று தெரியவும் ஒருவித சலுகையும் ஒருவித உரிமையும் அவளாகவே எடுத்துக்கொண்டாள்.

சின்ன சின்ன விசயங்களில் இருவருக்கும் கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், அது ஒருப்பக்கம் இருக்கட்டும் என்று தான் இப்போது இருந்தனர்.. 

“ஓ !! அப்போ உன்னோடது எல்லாம் என்னோடதா சுபி ???” என்று கேட்டபடி நெருங்கியவனை தள்ளி நிறுத்தினாள்..

“போதும்.. அப்பா வந்து என்ன பேசினாரு அதை சொல்லுங்க??” ஆர்வமாய் அவள் குரல் கேட்கவும் சர்வேஷின் காதல் எட்டி பார்த்தது.. இப்படி எல்லாம் பேசித்தான் இவளை கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்ய வேண்டும் என்று நினைத்தவன்,

“ஹ்ம்ம் சொல்லனும்னா அதுக்கு லஞ்சம் தரணுமே….” என்றதும், அவன் என்ன கேட்கிறான் என்று அவளுக்கு புரியாமலா இருக்கும்…

‘சும்மா இருந்தவனை சொரிஞ்சு விட்டேனோ…..’ என்று மௌனமாய் அவனைப் பார்க்க,  

“மௌனம் சம்மதமா ??” என்றான் அவனும்..

“அதெல்லாம் இல்ல.. நீங்க சொன்னா சொல்லுங்க, சொல்லாட்டி போங்க. எனக்கு வேலை இருக்கு. கொஞ்சம் இடம் கொடுத்தா போதுமே…” என்று நிஜமாகவே எரிச்சலாய் பேசியவளை கண்டு

‘சர்வா ரொம்ப பண்ணாத, அவ இவ்வளோ இறங்கி வந்ததே பெருசு.. இன்னும் கொஞ்சம் ஸ்லோ மோசன்ல போகணும்..” என்று தனக்கு தானே கூறிகொண்டவன்

“அடடா ஒரு விளையாட்டுக்கு சொன்னா உடனே அதை உண்மைன்னு நம்பிடுவியா சுபி?? ” என்றவனுக்கு முறைப்பு மட்டுமே பதிலாய் வந்தது..

“எங்கப்பா என்ன சொன்னாருன்னு கேட்டேன்.. ”   

“அதுவா, சோபி ஜாலியான பொண்ணு ஆனா பொறுப்பா இருப்பா.. கார்த்திக் அப்படியில்ல, அவனுக்கு இன்னும் வெளியுலக அனுபவம் இல்லை.  எப்போவுமே அவன் அக்கா அம்மான்னு தான் சுத்திட்டு இருப்பான்.. நீங்க தான் அவனுக்கு கொஞ்சம் எல்லாம் பழக்கி விடனும், நாலு பேர் கிட்ட பேசி  சமாளிக்க கத்துக்கணும் அவன்னு சொன்னார். போதுமா???” என அவளுக்கு மேலும் மேலும் ஆச்சர்யமாய் போனது..

“ஓ!! அதான் கார்த்திக்கை மாலுக்கு போக சொன்னீங்களா?? ஆமா என்னை பொறுப்பான பொண்ணுன்னு நிஜமாவே சொன்னாரா???” என்றாள் நம்பாது.

“அவர் தெரியாம சொல்லிருப்பார் சுபி. அதெல்லாம் பெருசா எடுத்துக்கலாமா??? விடு விடு.. உங்கப்பா பலாபழம் சுபி…”

“என்னது ???!!!!!!!”

“ஆமா வெளிய பார்க்க தான் கடுகடு சிடுசிடு, பட் உன் மேல கார்த்திக் மேல எல்லாம் எவ்வளோ பாசம் தெரியுமா. உங்களுக்காக ஒரு ஒரு விசயத்தையும் பிளான் பண்ணி பண்றார்.. நைஸ் மேன்..” என்று அவன் புகழவும் சௌபர்ணிகாவிற்கே இன்னும் தாங்கள் தந்தையை சரியாய் புரிந்துக்கொள்ளவில்லையோ என்று தோன்றியது..

இனிமேல் கார்த்திக்கோடு சேர்ந்து தானும் அவரை கேலி பேசக்கூடாது என்று முடிவு செய்துக்கொண்டாள்…  

“என்ன சுபி அமைதியாகிட்ட ???!!”

“ஹா !! நத்திங்…. ”

“அதானே பார்த்தேன்.. சரி சரி சீக்கிரம் கிளம்பு…. வெளிய போலாம்…”

“எங்க போறோம் ??”

“அது ரகசியம்.. சொல்லமாட்டேன்..  ”

அவனையே வித்தியாசமாய் பார்த்தபடி சமையலை கவனிக்க சென்றாள்.. பின்னோடே அவனும் வந்து அவளுக்கு உதவினான்..  இருவரும் பேசியபடியும் சின்ன சின்ன சீண்டல்களுடனும் அழகாய் அப்பொழுது கடந்து போனது..

சௌபர்ணிகா வீட்டை பூட்டி விட்டு கிளம்பி வரவும் சர்வேஷ் பைக்கை ஸ்டார்ட் செய்து ரெடியாய் நிற்கவும் சரியாய் இருந்தது.. அதை கண்ட சோபிக்கோ ஆச்சரியமாய் “என்ன கார் எடுக்கலியா?? எப்போவும் கார்ல தானே என்னை கூட்டி போவீங்க ???” என்றாள்.

“அது கல்யாணத்துக்கு முன்ன, இது கல்யாணத்துக்கு பின்ன”

“இவனுக்குள்ளையும் என்னவோ இருக்கே” என்று முனுமுனுத்தப்படி அவன் தோளில் கை வைத்து ஏறி அமர்ந்தாள்..

அவனுக்கோ வானில் பார்க்காத குறை தான்.. கண்ணாடி வழியாய் பின்னே இருப்பவளை காண்பதும் அவள் காணும் போது கண்ணடிப்பதும் ஒரு வழி படுத்திவிட்டான் அவளை. அவளுக்கோ மனம் இன்னதென்று கூற முடியாத உணர்வுகளால் நிரம்பி வழிந்தது..

சர்வேஷ் கூறியதும் சரிதானோ.. ஏன் கோவமாய் பிடிவாதமாய் இருக்க வேண்டும். அப்படி இருந்து என்ன கண்டோம்..?? இப்படியான சிறு சிறு மகிழ்ச்சியை கூட தொலைக்க இருந்தேனே.. என்றெல்லாம் அவள் எண்ணங்கள் ஓட போகும் வழியை கவனிக்க மறந்து அமர்ந்திருந்தாள்..

அவன் பைக்கை நிறுத்தி சுபி சுபி என்று இரு முறை அழைத்த பின்னரே தன்னிலை வந்தாள் சோபி..

“ஹா!! என்னங்க ???” என்று அவள் கேட்டபின்னரே சுற்றும் முற்றும் பார்த்தாள்.. பார்த்ததும் அவளது கண்கள் ஆச்சரியத்தில் விரிந்து முகமோ புன்னகையில் மலர்ந்தது..

“ச.. சர்.. சர்வா !!!!!” என்று இன்னமும் அவள் அவனைப் பார்ப்பதும் வந்திருக்கும் இடத்தை பார்ப்பதுமாக இருக்க,   அவனோ அவளையே பார்த்தபடி நின்றிருந்தான்.

சௌபர்ணிகாவின் இப்புன்னகைக்கு காரணம் சர்வேஷ் அவளை அழைத்து வந்த இடம் தான்.. அதுதான் முன்பு அவள் படித்ததும், அவன் பகுதி நேர வேலை செய்த கணினி நிலையம் தான்.. நிச்சயமாய் அவன் இங்கு அழைத்து வருவான் என்று அவள் நினைத்து கூட பார்க்கவில்லை..

அவனையும் அந்த இடத்தையும் மாறி மாறி பார்த்தபடி இருந்தவளுக்கு கேட்க ஆயிரம் கேள்விகள் இருந்தன, ஆனால் ஒன்றும் வார்த்தையாய் வெளிவரவில்லை.. இன்னும் அவளுக்கு அந்த திகைப்பே முதலில் நீங்கவில்லை..

“இங்க.. இங்க எதுக்கு??” ஆச்சரியம், குழப்பம், மகிழ்ச்சி எல்லாம் கலந்து ஒலித்தது அவள் குரல்..

“உள்ள வா போலாம்… ”

“உள்ளயா?? ஐயோ வேண்டாம்.. இங்க ஏன் கூட்டிட்டு வந்திங்க.”

“அட முதலாளியம்மா நீங்க வராம இப்படியே பேசிட்டே இருந்தா என்ன அர்த்தம்.? முதல்ல உள்ள வா சுபி அப்புறம் பேசலாம்..” என்று இழுக்காத குறையாய் இழுத்து சென்றான்..

கடந்து செல்வோறெல்லாம் இவனுக்கு விஷ் செய்துகொண்டே செல்லவும் அவனும் பதிலுக்கு மரியாதை தெரிவித்துக்கொண்டே வரவும் இதை எல்லாம் கண்ட சௌபர்ணிகாவிற்கு தலையே சுற்றியது.. ‘என்னடா நடக்குது இங்க…’ என்றபடி அவள் நடக்க,  

‘அட்மின்’ என்று பெயர் பலகை தாங்கிய அரை அவரவும் சௌபர்ணிகாவை உள்ளே அழைத்து சென்று பெரிய இருக்கையில் அவளது தோள்களை பற்றி அமர வைத்தான்.. அப்பொழுதான் ஒன்றை கவனித்தாள்.. அந்த கணினி நிலையம் முன்பிருந்தது போல் அல்லாமல் விரிவாக்கம் செய்யப்பட்டு இருந்தது. பெயரும் மாற்றப்பட்டு இருந்தது.. எல்லாமே புதிதாய் நிறைய நிறைய மாற்றங்களுடன் இருந்தது..

‘எஸ். எஸ் கம்ப்யூட்டர் அகடாமி..’ என்ற பெயர் ப்ளெக்ஸ் ஒன்று அவளது இருக்கைக்கு நேராய் சுவரில் மாட்டப்பட்டு இருக்க, அதனை  கண்டதும் தன் கணவனை விழிகள் விரித்து பார்த்தாள்..

“சௌபர்ணிகா சர்வேஷ் அதான் எஸ். எஸ்.. எப்படி ???” என்று சிரித்தபடி தன் சட்டை காலரை உயர்த்தினான்..

“இது,.. இதெல்லாம் எப்… எப்படி…”

“அது ஒரு பெரிய கதை சுபி..” என்றபடி அவள் முன்னே இருந்த இருக்கையில் அமர்ந்தான்.. மௌனமாய் அவளும்  அவனது பதிலுக்காய் காத்திருந்தாள்..

“நான் இங்க மால் கட்டிட்டு இருக்கும் போதே, இந்த செனட்டர் ஓனர் என்னை இன்சார்ஜ் எடுத்துக்க சொன்னார் சுபி, அவருக்கு அவங்க பசங்க கூட போய் டெல்லில செட்டில் ஆகனும்னு எண்ணம். எனக்கும் டீச்சிங் விட முடியல. தென் நான் மேனேஜ் பண்ண ஆரம்பிச்சேன். கொஞ்சம் கொஞ்சமா டிவலப் பண்ணேன்.

இதெல்லாம் அவரும் கவனிச்சுட்டு தான் இருந்தார். தென் அவருக்கு என்ன பண தேவையோ, திடீர்னு ஒருநாள் இந்த இடத்தை விற்க போறதா சொன்னார். எனக்கு வேற இது சென்டிமென்ட் இடமா, என்ன பார்க்கிற இங்க தானே உன்ன முதல்ல பார்த்தேன் அதான். சோ, ஷ்ரவன் மூலமா லோன் அப்பளை பண்ணி வாங்கிட்டேன்.. நம்ம கல்யாணத்துக்கு மூணு நாள் முன்ன தான் ரெஜிஸ்டர் ஆச்சு.. அப்போவே உன்கிட்ட சொல்லணும் தான் இருந்தேன் பட் கொஞ்சம் சர்ப்ரைஸ் கிப்ட்டா கொடுக்கலாமேன்னு தான்…”  என்று சொல்ல,

அவளுக்கு இன்னும் இது கனவா நினைவா என்றே நம்ப முடியவில்லை.. சில வருடங்களுக்கு முன்பு தினமும் வந்து போன இடம். அதுவும் அவனை காண வேண்டுமென்றே வராத ப்ரோகிராம்மிங் படிக்க வந்தது அதை விட கொடுமை..

எத்தனை எத்தனை நினைவுகள் தாங்கியது இவ்விடம்.. தோழிகளோடு அரட்டை கச்சேரிக்கு இங்கே பஞ்சமே இல்லை. அதிலும் சர்வேஷை கண்டால்  அவள் மனதில் பறக்கும் பட்டாம்பூச்சிகளின் வண்ணமோ ஏராளம். இப்படி அவளது உணர்வுகளோடு கலந்த இடம் இன்று அவளுக்கே சொந்தமானதாய் ஆனது இன்னும் அவளை நம்பமுடியவில்லை..

“என்ன சுபி இப்படி அமைதியா ஆகிட்ட, உன்.. உனக்கு பிடிக்கலையா??” அவன் முகத்தில் தெரிந்த சிறு பதற்றம் அவள் இதழில் சிரிப்பை கொண்டு வந்தது..

‘கோவமா இருந்தவள இவ்வளோ சீக்கிரம் மயக்குறானே….’ என்று முணுமுணுக்க,

“என்ன சுபி முனுமுனுப்பு….. ” என்றான் அவனும்..

‘ஹா !! முனுமுனுக்குறவங்களுக்கு எல்லாம்  முந்திரி அல்வா கிடைக்குமாம் அதான்..’

“உன்னை திருத்தவே முடியாது.. இப்படி பேசி பேசியே மனுசனை கவுத்திறு..” அவனது வார்த்தைகளே அவனது மனநிலையை தெளிவாய் காட்டியது.. மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறான் என்று.. மகிழ்ச்சி என்பதனை விட காதலால் அவனுள்ளம் நிறைந்து இருந்தது அது தான் உண்மை..

“நான்.. நான் கூட இந்த இடத்தை அவ்வளோ பெருசா நினைக்கல.. ஆனா நீங்க எப்படி?? இது.. இதல்லாம் கல்யாணத்துக்கு முன்னமே நீங்க பண்ணது ஹப்பா!!!! என். என்னை உங்களுக்கு அவ்வளோ பிடிக்குமா??” என்று  அவளுமே கண்களில் காதலை தேக்கி லேசான படபடப்போடு தான் கேட்டாள்..

அவளையே உற்று பார்த்த சர்வா “ஹ்ம்ம் இந்த கேள்விய நீ வீட்டில் கேட்டிருந்தா என் பதிலே வேற மாதிரியா இருக்கும் சுபி.. ஆனா எனக்கு இப்போ கிளாஸ் டைம் சோ வந்து பேசுறேன்..” என்று எழுந்தவன் முன்னே எப்படி சட்டையின் கைகளை முட்டி வரை மடித்துவிடுவானோ அதுபோல் மடக்கினான்..

அதெல்லாம் காணும் பொழுது சௌபர்ணிகாவிற்கு பழைய நியாபகங்கள் எல்லாம் நினைவு வந்தன..

இவன் இன்னும் மாறவே இல்லையோ??? பணத்திமிர் என்று நினைத்தேனே.. அதெல்லாம் வெறும் வெளி வேசமோ… அப்படியே அன்று பார்த்ததுபோல் இன்றும் மாறாது இருக்கிறானே.. இவனது காதலும் மாறவில்லை.. என்னை மறக்கவும் இல்லை.. என்னுடைய நினைவை பெரியதாய் நினைத்தால் தானே இவ்விடத்தை வாங்கினான்… இப்படியான எண்ணங்கள் எல்லாம் அவளது மனதில் வரிசையாய் வரிசை கட்டி நிற்க அவளது விழிகளோ கணவனை காதலாய் நோக்கியது..

“ஹேய் சுபி இப்படி எல்லாம் இங்க பார்த்துவைக்காத, அப்புறம் நேரா வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுவேன். கொஞ்சம் நேரம் தான் வெயிட் பண்ணு வந்திடுறேன்..” என்று அவளது கன்னங்களை தட்டி செல்பவனை நினைக்கையில் பெருமை பெருமிதம் காதலால் பெருக்கெடுத்தது..

இதையெல்லாம் உடனே யாரிடமாவது பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தோன்ற உடனே முதலில் புனிதாவிற்கு தான் அழைத்தாள்.. மகள் பேசுவதை பொறுமையாய் கேட்ட அவரோ சோபி பேசி முடிக்கவும் ‘இதெல்லாம் முதல்லயே மாப்பிள்ள சொல்லிட்டார் சோபி…’ எனவும் இவளுக்கு சப்பென்று ஆனது..

அடுத்து ஸ்ரீக்கு அழைத்து மோகனாவிடம் கொடுக்குமாறு கூறி அவரிடம் மகிழ்ச்சியாய் கூற அவரும் புனிதா கூறிய பதிலையே கூற மறுபடியும் இவளுக்கு பல்பு கிடைத்தது தான் மிச்சம்…

“ஹ்ம்ம் சரியான அழுத்தம் பிடிச்சவன், லவ் பண்றதை மட்டும் யாருகிட்டவும் சொல்லமாட்டானாம், ஆனா இதெல்லாம் பொண்டாட்டிக்கிட்ட சொல்றதுக்கு முன்ன எல்லார்கிட்டவும் சொல்லிடுவனாம்.. களவாணி.. வரட்டும்.” என்று  அவனை புன்னகையோடு வாச பாடியவள் “சும்மா இருப்பதற்கு சுற்றியாவது வரலாம் ” என்றெண்ணி அங்கே நடக்க ஆரம்பித்தாள்.

கண்ணாடி தடுப்பு இட்ட ஒரு அரையில் சர்வேஷ் ப்ரொஜெக்டர் வைத்து ஒரு பத்து பதினைந்து மாணவர்களுக்கு பாடம் எடுத்துக்கொண்டு இருந்தான்.. கண்ணாடி தடுப்புக்கு வெளியே இருந்து அதை சோபி பார்க்க,

எத்தனை ஆண்டுகள்… இப்படி இவனை பார்க்க எத்தனை ஆண்டுகள்…?? அதே போல்.. அதே பாவனை, அதே கம்பீரம், ஆனால் என்ன காதல் மட்டும் சற்றே கூடியது போல தோன்றியது.. 

கடந்து போன நாட்களில் எல்லாம் எத்தனை தேடல்கள், எத்தனை கண்ணீர், ஆனால் அதெல்லாம் ஒன்றுமே இல்லை என்பது போல தோன்றியது அவளுக்கு.. உள்ளே பாடம் எடுத்தவனுக்கு என்ன தோன்றியதோ சட்டென்று திரும்பி பார்த்தான்.. சௌபர்ணிகாவை கண்டதும் ஒரு புன்னகையை வீசி உள்ளே வருமாறு சைகை செய்தவன் அவள் உள்ளே வர கதவையும் திறந்துவைத்து நின்றான்.

பிறகு அங்கிருந்த மாணவர்களுக்கு “ஷி இஸ் மை லவ்.. மை பெட்டெர் ஹாப், சௌபர்ணிகா சர்வேஷ்..” என்று அறிமுக படுத்தவும், அடுத்தநொடி  கைத்தட்டலும் ஆரவாரமும் அவளை வேறு ஒரு உலகிற்கு அழைத்து சென்றது..

அங்கிருத்த மாணவன் ஒருவன் “சார் லவ் மேரேஜா அரேஞ்சுடா..” என்று வினவ சர்வேஷோ “லவ் அட் பர்ஸ்ட் சைட்..” என்றான் உற்சாகமாய்.. மீண்டும் அங்கே ஒரு ஆரவாரம்…

“மேம் நீங்க சொல்லுங்க, சாரை எங்க முதல்ல நீங்க பார்த்திங்க??? ” என்று இன்னொரு பெண் வினவ, படக்கென்று திரும்பி கணவன் முகம் பார்த்தாள்.. அவனும் சொல்லுமாறு ஊக்கவும்,

“இங்கதான் இதே சென்டர்ல, ஒரு ஆறு வருசம் முன்ன பார்த்தேன்.. அப்போவும் இப்படிதான் கிளாஸ் எடுத்துட்டு இருந்தார்…” என்று வெட்கம் பாதி காதல் மீதியாய் கூறவும் மாணவர்களிடம் வெளிபட்ட கைதட்டலும் வாழ்த்துக்களும் கேட்கவா வேண்டும்..

“ஹேய்… ஹேய் போதும் போதும்… ஸ்டுடென்ட்ஸ் போதும்.” என்று சர்வேஷ் கைகளை உயர்த்தி கூறவும் அடுத்த நொடி அங்கே அமைதி நிலவியது..

‘எல்லாரையும் கண்ட்ரோல் பண்றது எப்படின்னு நல்லா தெரிஞ்சு வச்சிருக்கான்’ என்று எண்ணிக்கொண்டாள்.

“ஓகே பசங்களா நாளைக்கு பார்ப்போம், இருந்து ஒர்க்கவுட் பண்ணிட்டு போங்க… அசோக் சர் வந்து உங்களை ஹேண்டில் பண்ணுவார்” என்று அனைவருக்கும் கையசைத்துவிட்டு சௌபர்ணிகாவை அழைத்துக்கொண்டு வெளியே வந்தவன்,

“ஒரு நிமிஷம் சுபி, சொல்லிட்டு வர்றேன்…” என்றவன் உள்ளே இன்னொரு அரைக்கு சென்று பின் சிறிது நேரத்தில் வெளியே வந்தான்..

இருவரும் சேர்ந்து வெளியே வர, பைக்கை உதைத்து ஸ்டார்ட் செய்தவன் “ஏறு சுபி” என்றதும் முன்னை விட இன்னும் நெருக்கமாய் அமர்ந்தாள்…

“சொல்லு சுபி எங்க போகலாம் அடுத்து ???” என்றான் வேறு எங்கு செல்வது என்று தெரியாமல்..

“வீட்டுகே போலாமா” என்றாள் மெல்ல..

“என்ன வீட்டுக்கா??!!!! என்ன சுபி..”

“ப்ளீஸ்…. ” என்று கண்களை சுருக்க,

“சரி” என்றவன் அதற்கு மேல் அவளிடம் எதுவும் பேசவில்லை…

அவளுக்கோ கணவனோடு தனியே இருக்கவேண்டும். தங்களை சுற்றி யாரும் இருக்க கூடாது.. அதற்கு தோதாய் இப்பொழுது இருப்பது அவர்கள் வீடு மட்டுமே.. அவனது தோள்களில் சாய்ந்து, அவனது கரங்களை பிடித்து ஆயிரம் கதை பேச  வேண்டும் போல் அவளுக்கு பரபரத்தது.

வீட்டிற்கு வந்து இறங்கியதுமே சர்வேஷ் கேட்ட முதல் கேள்வி “என்ன சுபி இதெல்லாம் பிடிக்கலையா???” என்பது தான்.. தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் கேட்டால் அவள் என்ன சொல்வாள்..

‘இவன் பேசுறதே புரியல.. இவனெல்லாம் பாடம் நடத்தி..’ என்று இழுத்தவள்  விளங்கிடும் “என்ன சொல்றீங்க ???? புரியல… ”   என்றாள் மெல்ல

“இல்ல ஏன் வீட்டுக்கு போலாம்னு சொன்ன ??? பிடிக்கலையா ???”

“ம்ம்ச்.. எது பிடிக்கலையா??? புரியுற மாதிரி சொல்லுங்க.” என்றாள் வீட்டை திறந்தபடி…

உள்ளே வந்ததும் பொத்தென்று சோபாவில் அமர, அவளுமே அருகில் அமர்ந்துகொண்டாள்.. முன்போல் தள்ளியில்லாமல் இப்போது கொஞ்சம் அருகே.. 

“கேட்டேன்ல சொல்லுங்க.. என்ன பிடிக்கல எனக்கு??”

“நீ ஏன் வீட்டுக்கு போலாம்னு சொன்ன ???”

 “வீட்டுக்கு வரணும் போல இருந்தது அதான் சொன்னேன். ”  

“அப்போ என் கூட வெளிய வர்றது பிடிக்கலைன்னு தானே அர்த்தம்…” என்றான் முகத்தை தூக்கி..

‘இவன் மூளைல பெரிய ஓட்டை இருக்கும் போலவே, ச்சே ச்சே  இதயுத்துல தானே ஓட்டை இருக்கும்..’ என்று எண்ணியபடி முறைக்க,

“பதில் பேசு சுபி.. பிடிக்கலைதானே…. ” என்றான் அவன்..

“ம்ம்ச் இன்னொரு தடவ பிடிக்கலன்னு வார்த்தை வந்தது எனக்கு கோவம் வந்துரும் சொல்லிட்டேன். நான் உங்கட்ட சொன்னேனா பிடிக்கலைன்னு.. நீங்க எல்லாம் பாடம் நடத்துனா விளங்கிடும்…”

“நான் கேட்டதுக்கு இது இல்லை பதில்…” என்று  அழுத்தமாய் அவனது குரல் மாறவும் அவனை மேலும்  முறைத்து பார்த்தாள்..

“நீங்க எல்லாம் வெளிநாட்டுல வேலை பார்த்தீங்கன்னு சொல்லிடாதிங்க.. வெக்க கேடு..” என்று அவள் தலையில் அடிக்க

“ஏனாம்..?? ” என்றான் ரோசமாய்..

“ஹ்ம்ம் வீட்டுல யாரும் இல்லையே.. பொண்டாட்டி வீட்டுக்கு வேற போகலாம்னு சொல்றாளே, சந்தோசமா கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணலாம்னு தோணாம, வந்ததுல இருந்து ஒரே கேள்வி கேட்டுகிட்டு.. கேள்வி கேட்க மட்டும் தான் உங்களுக்கு தெரியும் போல..”

இதை கேட்டதும் அவன் முகத்தை பார்க்க வேண்டுமே.. ஹப்பா!!! ஆயிரம் வாட்ஸ் தான் எரிந்தது..

“சுபி?!!!!!!!!!!!!!!!!!!!! ”

“எதுக்கு இவ்வளோ ஆச்சரிய குறி??? நானே கடுப்புல இருக்கேன்..”

“சரி சரி நோ கடுப்பு… நான் எதோ தப்பா புரிஞ்சுகிட்டேன் சுபிம்மா.” என்றபடி அவளை தன்னருகே இழுத்தான்..

“ம்ச்.. விடுங்க.. இதுக்கொன்னும் குறைச்சல் இல்ல.. என் மூடே மாறிடுச்சு.. உங்கட்ட எவ்வளோ பேசனும்னு வந்தேன் தெரியுமா??? போங்க சர்வா…” அவனது முதுகில் தட்டினாள்..

“ஹேய் அதான் தப்பு என் மேலன்னு ஒத்துகிட்டேன்ல அப்புறம் என்ன??? சரி சொல்லு இப்போ உன் கோவமெல்லாம் போச்சா.. இப்போவாது என் காதல் புரிஞ்சதா???” என்று அவன் கேட்கவும் அவள் பார்வை வித்தியசாமாய் மாறியது..

“என்ன அப்படி ஒரு பார்வை?? ”

“உங்க பேச்சு உங்களுக்கே அபத்தமா தெரியலையா ???”

“புரியல சுபி…. ”

“இங்க பாருங்க, நீங்க அந்த செனட்டர் வாங்குனது ஒரு சென்டிமென்ட்காக அதாவது நம்மோட காதல் நினைவுகள் அதுல இருக்குன்னு.. சரிதான்.. நீங்க என் பேருக்கு வாங்கினது எனக்கும் சந்தோசம் தான். ஆனா உடனே நான் மனசு மாறுவேன்னு நீங்க எப்படி நினைக்கலாம்.. என்ன இதுக்கெல்லாம் நான் ஆசை பட்டு மயங்கிடுவேன்னு நினைச்சீங்களா ??”

சௌபர்ணிகா இப்படி ஒரு கேள்வியை கேட்டதும் சர்வேஷ் முகம் அப்படியே வாடிவிட்டது.. அவன் இதை இந்த கோணத்தில் நினைத்து கூட பார்க்கவில்லை.. சரி இதெல்லாம் கூறினால் மகிழ்வாள் என்றே எண்ணினான்..

மகிழ்ந்தாள் தான்.. இல்லை என்று யார் சொன்னது.. ஆனால் உடனே மனம் மாறிவிட்டதா என்றால் எப்படி இருக்கும் அவளுக்கு.. தன் பெயரில் வாங்கி இருக்கிறான் என்றதுமே இவனை கட்டி தழுவிட வேண்டுமா என்ன ???

“இல்ல நான் அந்த மீனிங்ல கேட்கல..” அவனது குரலே முற்றிலும் மாறிவிட்டது..

“பின்ன??? ”

“நீ சந்தோஷ படுவன்னு நினைச்சேன்.. என்மேல இருக்க கோவம் போகும்ன்னு நினைச்சேன்..”

“சந்தோசம் இல்லைன்னு யார் சொன்னது.. இத்தனை வருஷ காதல் சர்வா.. நம்ம ரெண்டு பேருமே அதை அனுபவிக்கல.. இந்த ஒரு நாள் அதை மாத்திடுமா என்ன?? நீங்க காலையில ஒரு விஷயம் சொன்னீங்க நம்ம ஒத்துமையா இருக்கலாம்னு எனக்கும் அது சரின்னு பட்டது. ஆனா உடனே என் மனசு மாறும்னு எனக்குமே தெரியலை சர்வா”

அவள் மெதுவாய் தான் சொன்னாள் ஆனால் அவன் தான் அதை சரியாய் தவறுதலாய் புரிந்துகொண்டான்..

“ஓ !!! அப்போ நான் உன் பின்னாடி அலையணும்.. அதானே நீ நினைச்சிருக்க..” என்று வழக்கத்திற்கு மாறாய் இத்தனை கோவமாய் அதிகாரமாய் அவனது குரல் ஒலிக்கவும் ஒரு நொடி அவளுக்கு உடலும் மனமும் பதறிவிட்டது..

தான் என்ன நினைத்து அவனை வீட்டிற்கு அழைத்து வந்தோம் இப்பொழுது அவன் பேசுவது என்ன?? இல்லை இந்த சூழலை வளர விட கூடாது என்று எண்ணியவள்

“வேண்டாம் போதும்.. இனிமே இதை பத்தி இப்போதைக்கு பேசவேண்டாம் சர்வா.. வீனா பிரச்சனை தான் வரும் நமக்குள்ள.. நீங்க ரூம்க்கு போங்க நான் எதா சாப்பிட பண்றேன் ” என்று எழுந்தவளை இழுத்து தன் மேலே சரிதான்..

“ஹே!! என்.. என்ன.. என்னங்க…”

“உன்… உன்னங்க தான்டி… உனக்கு சந்தோசம் கொடுக்கணும்னு ஒவ்வொன்னா பார்த்து பார்த்து நான் பண்ணா, நீ என்னவோ வசனம் பேசுற…”

“வசனமா???? நான் என் மனசில இருக்கிறத தான் சொன்னேன்… முதல்ல விடுங்க சர்வா என்ன இது நாடு ஹால்ல.. ”

“அதான் யாரும் இல்லையே. அப்புறம் என்ன?? உன் மனசுல நான் தானே இருக்கேன்.. அப்புறம் என்னை அக்செப்ட் பண்றதுல உனக்கு என்ன கஷ்டம்.. என்ன உன் பின்னால சுத்தனுமா?? ப்ளீஸ் ப்ளீஸ்னு கெஞ்சனுமா??” ஆக்ரோஷமாய் ஒலித்தது அவன் குரல்..

சௌபர்ணிகாவிற்கோ வியர்த்து வழிந்தது… நெஞ்சுக்கூடு நடுங்கியதை அவளால் நன்றாய் உணர முடிந்தது.. அவளின் நடுக்கத்தை அவனும் உணர்ந்தான்.. அவளது நடுக்கமும் அவளது அருகாமையும் சர்வேஷிற்கு வேறு உணர்வுகளை கிளப்பின..

“ஏன் சுபி என்னை இப்படி பைத்தியம் ஆக்குற??” என்று குழைந்தவன் அவளது நடுங்கும் இதழ்களை தன் இதழ்களால் மூடினான்…

           

                         

                                                          

Advertisement