Advertisement

நிலவை தேடும் பால்வெளி இவன்!..

26

பத்மநாபன், தன் பெண்ணை அழைத்துக் கொண்டு, தங்களின் வீட்டிற்கு  வந்து சேர்ந்தார். முன்பே வேதாவிடம் சொல்லிருந்தார் பத்மநாபன்.. ’பெண்ணை  இரண்டு நாள், நாங்கள் கூட்டி போகிறோம்’ என சொல்லி இருந்தார். 

மேலும் வேதா இரண்டுநாட்கள் ஊட்டி வரை தனது தோழிகளோடு செல்லுகிறார், அவர்கள் நலசங்கத்தில் ஒரு மருத்துவ முகம்.. அங்கே நடக்கிறது. இவர்கள் நான்கு பெண்கள் செல்லுகிறார்கள், அதில் வேதாவும் செல்லுவதால்.. இந்த வாய்ப்பு பவானிக்கு.

எனவே கோர்ட் முடிந்து ,பத்மநாபன், பெண்ணை  தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தார். திருமணமாகி இரண்டு வருடங்களுக்கு மேலாகிறது, ஆனால் பவானி தன் பிறந்த வீட்டில் இரண்டு நாட்கள் சேர்ந்தார் போல் வந்து தங்கியது இல்லை எனலாம். இத்தனைக்கும் பத்து  கிலோமீட்டரில்தான் அவர்களின் வீடு. ஆனாலும் வேதா, பெரிதாக அப்படி அனுமதில்லை தன் மருமகளை. வாசுகியும் அதை உணர்ந்து பெண்ணை அழைப்பதில்லை. சம்பந்தியின் குணம்தான் தெரியுமே. 

இப்போது வாசுகி பெண்ணின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். மகனும் உடனிருப்பதில்லை.. மகளை வாரம் ஒருமுறை சென்று பார்த்து வருவார்தான் வாசுகி. ஆனாலும்.. வீட்டிலிருந்து அவர்களை தான் கவனிப்பது போல வராதல்லவா.. எனவே இன்று இரண்டு நாள் தங்குவதற்காக வருகிறாள் எனவும் பரபரப்பாக இருந்தார் அன்னை.

பவானி வந்து சேர்ந்தாள்.. கோர்ட்டில் டென்ஷனில் இருந்தால்.. முகத்தை கொஞ்சம் களைப்பாக காட்டியது, மற்றபடி பவானி திடமாகவே வந்து சேர்ந்தாள்.. “ம்மா..” என்ற அழைப்போடு.

வந்ததும் ஹால் சோபாவில் அப்படியே படுத்துக்கொண்டாள்.. சிறுபிள்ளையாக. இதுதானே அம்மா வீடு. புகுந்த வீட்டில் ஆயிரம் வசதிகள் இருந்தாலும்.. இந்த செல்லம் அங்கே கிடையாதே.

பத்மநாபன் உள்ளே வந்தவர் அப்படியே பார்த்துக்கொண்டே அமர்ந்தார். ‘அங்கே கோர்ட்டில் இவள் இருந்த நேரத்தில் எத்தனை போன் கால்ஸ்.. ஒவ்வொன்றையும் பேசி.. பதில் சொல்லி.. சமாளித்து.. அது போக, வழக்கு குறித்து ஆலோசனையில்.. சந்தேகங்கள் கேட்டுக் கொண்டு, ஒரு நிமிடம் கூட ஆசுவாசமாக இருந்தாளா தெரியாது.. இங்கே வந்து இப்படி சிறுபிள்ளை போல படுத்திருக்கிறாள்.. விசுவும் ஊரிலில்லை.. பாவம் எப்படிதான் .சமாளிக்கிறாளோ’ என தோன்ற தோன்ற.. பெண்ணவளின் போன் ஒலித்தது.

வேகமாக எழுந்து போனை எடுத்து பேசினாள் பவானி.

வாசுகி, குடிப்பதற்கு பழசாறு எடுத்து வந்தார். தந்தையும் மகளும் வாங்கி குடித்தனர்.

தந்தைக்கு தன் பெண்ணை பார்த்து முடிவாகவில்லை.

வாசுகி, உணவை டேபிள் மேல் எடுத்து வைக்க சென்றார்.

சற்று நேரத்தில் தந்தையும், மகளும் பேசிக்கொண்டே உண்டனர். எல்லாம் தொழில் பேச்சுகளாகவே இருந்தது. வாசுகிக்கே கொஞ்சம் கோவமாக வந்தது. 

வாசுகி “போதுமேங்க, கொஞ்சம் அவளை சாப்பிட விடுங்க” என்றார் சலிப்பாக.

பத்மநாபன் “ம்.. உங்க அம்மாக்கு, நீ  அவளிடம் பேசலையேன்னு பொறாமை” என பெண்ணிடம் ரகசியமாக சொல்லி சிரித்தபடி உண்ணத் தொடங்கினார்.

வாசுகியின் காதில் விழுந்தாலும், ஏதும் கேட்காதவர் போல.. பெண்ணுக்கு பரிமாறினார்.

ஐஸ்கிரீம் நாலு வகை வாங்கி வைத்திருந்தார் வாசுகி. உண்டவுடன் அதில் ஒன்றை கொண்டு வந்து பெண்ணிடம் கொடுத்தார். 

பவானி “ம்மா.. இப்போதானே ம்மா.. சாப்பிட்டேன்” என வாய் சொன்னாலும் கைகள் நீட்டி, அந்த கிண்ணத்தை வாங்கிக் கொண்டாள். ராஜ உபசாரம் நடந்தது பெண்ணுக்கு.

மறுநாள் அவளின் இறுதி பரீட்சையும் முடிந்தது.

அடுத்தடுத்த நாட்கள் வேகமாக சென்றது பெண்ணுக்கு, மில்லிற்கு சென்றாள்.. தன் அத்தையிடம் போனில் பேசினாள்.. கணவனிடம் கோர்ட்டில் நடந்தவளைகளை சொன்னாள். ஆனாலும் தன் கணவனை தேட தொடங்கினாள், பவானி. அவனின் ப்ரௌன் நிற விழிகளை காணாமல் கொஞ்சம் கலையிழந்துதான் போனாள் பெண்.

அடுத்த இரண்டு நாட்கள் ஓடியதே தெரியவில்லை பவானிக்கு. 

வேதா, ஊரிலிருந்து வரவும், பவானியும் வந்து சேர்ந்தாள் தன் வீட்டிற்கு.

ஒருவழியாக விசு வரும் தேதி தெரிந்தது. மனது காற்றில் பறந்தது பெண்ணுக்கு. அவளுக்கே, தான் இவ்வளவு அடிமையாக இருக்கிறேனே கணவனுக்கு என தோன்றியது. அதை நினைத்து சிரிப்பும் வந்தது.

@!@!@!@!@!@!@!@!@!@!

விசு, தனது வக்கீல் மூலமாக கோர்ட்டில் நடந்தவைகளை கேட்டு தெரிந்துக் கொண்டான். விசு “முடித்திடலாம் சர்..” என்றான்.

வக்கீல் “இல்ல பா, இன்னும் ஒரு வருஷம் இழுக்கலாம்.. அவ்வளவு சீக்கிரம் முடிவு தெரிந்திட கூடாது. அத்தோட, இது பழிவாங்கும் செய்கை.. எனவே கொஞ்சம் சீரியஸ் ஆக்கி அப்புறம் அவங்களுக்கு தண்டனையை சொல்லணும்.. எப்போடா இது முடியும்ன்னு நினைக்கணும் அவங்க.. அதனால் இருங்க.. முடிக்கலாம்” என்றார் நிதானமானக் குரலில்.

விசு, நீண்ட பெருமூச்சு ஒன்றை விட்டு அமைதியாகினான், என்ன சொல்லுவது என தெரியவில்லை. அவர்கள் செய்த காரித்திற்கு.. அவர்களை பொசுக்கிவிட தோன்றுகிறது. ஆனால், அவன் அப்படி வளர்ந்தவன் அல்ல.. அவனின் நிலையும் கெளரவமானது.. எனவே, சட்டப்படி நின்று நிதானித்துதான் எல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது என எண்ணம்.

விசு, ஒருவாரம் சென்று இந்தியா வந்து சேர்ந்தான்.

கணவனை அழைப்பதற்காக பவானி கொச்சின் வந்திருந்தாள். அவளை அந்த அர்த்தராத்திரியில் பார்க்கவும் விசுவிற்கு பழைய நினைவுகள் அலை அலையாக எழுந்தது.. மிகவும் உணர்வுபூர்வமாக நின்றான் அவளின் கணவன். விசு ‘என்னை ஸ்தம்பிக்க வைப்பதே வேலை இவளுக்கு’ என தனக்குள் முனகிக் கொண்டே.. அவளை நோக்கி வந்தான்.

செந்தில் அண்ணாதான் உடன் வந்திருந்தார். அவர் கொஞ்சம் தள்ளி நிற்க, விசு, தன் மனையாளிடம் “எதுக்கு இவ்வளவு தூரம் வந்த பார்பி” என்றான் அருகில் வந்து மெல்லியக் குரலில். ஆனால் அவனின் ப்ரௌன் நிற  கண்கள் இப்போது மனையாளிடம் ‘அம் இம்ப்ரெஸ்டு..’ என சத்தமில்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது.

பவானி “அஹ… சும்மா, கொச்சின் ஏர்போர்ட் பார்த்ததேயில்ல, அதான் வந்தேன்” என்றாள் மெல்லிய குரலில் கணவனின் கண்களை பார்த்துக் கொண்டே சொன்னாள், நக்கலாக.

கணவன் மையலாக சிரித்தான் ‘தெரியுமே இவள் நக்கல் பேச்சு.. இதைதான் மிஸ் பண்ணேன்’ என மனதுள் சொல்லிக் கொண்டே செந்திலை நோக்கிநடந்தான்.

செந்தில், தனியே லக்கேஜ் ட்ராலியை தள்ளிக் கொண்டு செல்லுவதைப் பார்த்து, தானும் அவரோடு போய் சேர்ந்துக் கொண்டான், விசு.

பவானிக்கு, கணவனிடமிருந்து அவள் எதிர்பார்த்த என்னமோ கிடைக்கவில்லை.. ‘அவனின் ஆச்சார்யா விழிகளை எதிர்பார்த்ததாலோ.. இல்லை, பார்பி என்ற ஆனத குரலை எதிர்பார்த்தாலோ.. தன்னை கட்டிக் அள்ளிக் கொள்வான் என எதிர்பார்த்ததாலோ.. ஏன்! தன் விரல்களையாவது பர்ரிக்கொல்வான் என எதிர்பார்த்ததாலோ..’ எதோ கிடைக்கவில்லை அவளுக்கு. முகம் வாடி போனாள். 

விசு, கொஞ்சம் தடுமாற்றமகவே இருந்தான். மறக்க மறக்க நினைத்தும் என்னமோ ஒரு நிழலான நினைவு அவனை ஆட்கொள்கிறது. அதுவும், மனையாளை பார்க்கவும்.. எதோ தாக்குகிறது அவனை.

பவானிக்கு கணவனின் நிலை புரிகிறது, ஆனால், அதன் ஆழம் தெரியவில்லை. எனவே, தனக்கு முன்னால் செல்லும் கணவனை ஆராய்ந்துக் கொண்டே வந்தாள்.

விசுவும் பவானியும் காரின் பின் சீட்டில் அமர்ந்துக் கொள்ள.. செந்தில் காரெடுத்தார்.

விசு, தன் மனையாளின் கையை இறுக்கி பிடித்துக் கொண்டு.. கண் மூடிக் கொண்டான். கணவனின் ஆர்பாட்டம் பார்க்க ஆசையாய் வந்தவளுக்கு.. இந்த அமைதி உறுத்தியது.

பவானி “ஏங்க..  என்னாச்சு, உடம்புக்கு முடியலையா?..” என்றாள்.

விசு, லேசாக சிரித்துவிட்டு “இல்ல.. ஒண்ணுமில்ல..சும்மா.” என்றான் ஒன்றுமில்லாத குரலில்.

பவானி “இல்ல எதோ இருக்கு.. உங்க குரலே சரியில்ல.. சரி தூங்குங்க” என்றாள், தனக்கு தானே சாமதானம் சொல்லிக் கொண்டு.. கணவனுக்கும் சமாதானம் சொன்னாள்..

விசு “ஒண்ணுமில்ல ப்பா” என்றான்.

பவானி, செந்திலை துணைக்கு அழைத்தாள் பேச்சில் “அண்ணா, இவர் என்னமோ மாதிரிதானே இருக்கார் நீங்களே சொல்லுங்க..” என்றாள் சிறுபிள்ளையாய்.

செந்தில் என்ன செய்வது என தெரியாமல்.. சிரித்தார்.

விசு “ச்சு… உனக்கு தூக்கம் வரலை, அதுக்காக அவரை டிஸ்ட்ரப் பண்ணாத..” என்றான் கொஞ்சம் அதட்டலாக.

பவானி அமைதியானாள்.

செந்திலுக்கு, சிறு பெண்ணின் அமைதி பொறுக்காமல் “விடும்மா.. எதோ பழைய ஞாபகமாக இருக்கும்.. அன்னிக்கு விசு இருந்த நிலை என்னான்னு எனக்குதான் தெரியும். சரியாகிடும்.. ஏதாவது குடிக்கிறீயா பவானி, கடையில் நிறுத்தவா..” என்றார் பவானியின் யோசனையை  கொஞ்சம் மாற்றும் விதமாக.

பவானிக்கு இப்போதுதான் முழுவதுமாக புரிந்தது கணவனின் நிலை.

பவானி “இ..இல்ல ண்ணா,இப்போது ஏதும் வேண்டாம். நீங்க போங்க..” என சொல்லி, தன்னோடு பிணைத்திருந்த தன் கணவனின் கையை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டு அவளும் கண் மூடிக் கொண்டாள்.

பெண்ணவளின் மனது.. கணவனின் வலியை உணர தொடங்கியது.. ‘கடத்தப்பட்ட என் வலிதான் பெரியது என எண்ணியிருக்க. கணவன் இன்னமும் எதையோ நினைத்து மௌனமாகும் அளவிற்கு நான் அவனுள் சென்றுவிட்டேனா’ என எண்ணம் தோன்ற.. மெல்லிய நீர் படலம் அவள் கண்ணில்.

அன்று செந்தில் சொல்லி இருந்தார் விசுவின் அன்றைய செய்கையைகளை.. இப்போது அதெல்லாம் நினைவு வந்தது பெண்ணுக்கு. இருவருக்கும் எதோ குழப்பமான மனநிலை உறக்கம் வரவில்லை.. கடந்தகாலம் கண்முன் வந்து படுத்துகிறது. அவர்களாக விலகினால் அன்றி, அவர்களை விடாது அது. பழைய நினைவுகள் இருவரையும் ஆட்கொண்டது.

நேரம் சென்றது.. விடிய தொடகியது.

விசுதான் முதலில் சுதாரித்தான் “செந்தில் காபி சாப்பிடலாம், வண்டியை நல்ல இடமாக பார்த்து நிறுத்துங்க” என்றான்.

மூவரும் பொதுவான விஷயங்களை பேசியபடி காபி குடித்து, கொஞ்சம் நல்ல மனநிலையில் கிளம்பினர். 

அதன்பின் விசு.. இயல்பாக இருந்தான். அதை தொடர்ந்து அந்த பயணம் இனிமையாகவே சென்றது.

காலை உணவிற்கு வீடு வந்து சேர்ந்தனர் இவர்கள். உண்டு முடித்து விசு உறங்க சென்றான்.

வேதா, மருமகளிடம் “நீயும் போடா.. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ” என்றார்.

பவானிக்கு என்னமோ உறக்கம் வரவில்லை.. “இல்ல அத்தை.. லஞ்ச் என்னான்னு பார்க்கிறேன்.. அவர் ரொம்ப நாள் கழிச்சி வந்திருக்கார்.. “ என்றாள்.

வேதாவிற்கு சந்தோஷமாக, ஒன்றும் சொல்லாமல் தான் வெளியே கிளம்பி சென்றார்.

விசு குளித்து வந்தான்.. மனையாளை காணாமல் “பவானி” என மேலிருந்த காரிடரில் நின்று சத்தம் போட்டான்.

பவானி ஹாலில் வந்து பார்த்தாள்.. கையில் கத்தி இருந்தது.

விசு, அதை பார்த்து பயந்தவன் போல பவானை செய்துவிட்டு “அம்மா எங்கே” என்றான்.

பவானி சொல்லவும்.. விசு ”நீ தூங்கலையா” என்றான்.

பவானி ‘இல்லை’ என்பதாக தலையசைத்தாள். 

கணவனுக்கு அவளை பிரியவே மனதில்லை.. விசு “கச கசன்னு இல்ல.. குளிக்காமல் என்ன பண்ற” என்றான் கோவமாக இப்போது.

மனையாளின் முகம் செம்மை படர்ந்தது “இல்ல, குளிக்காமல் சமைத்தால்தான் டேஸ்ட் செமையாக இருக்குமாம்..“ என்றாள் கண்ணடித்து.

விசு மேலிருந்து பார்த்துக் கொண்டே இருந்தான்.. ஒரு நிமிடம் சென்று “ஆம் இம்ப்ரெஸ்டு…” என்றான் உதட்டை மட்டும் அசைத்து.

பவானி, கணவனுக்கு பழிப்பு காட்டிவிட்டு சமையலறை சென்றாள்.

விசு, தங்களின் அறைக்கு வந்து உறங்க தொடங்கினான்.

பவானி, தன் பெற்றோருக்கு அழைத்து, தானும் கணவனும் வந்து சேர்ந்த செய்தியை சொல்லினாள். அவர்கள் மாலை வந்து பார்ப்பதாக சொல்லினர்.

இப்படியாக பவானியின் நேரம் சென்றது.. மில்லிற்கு செல்லவில்லை.

சமையல் முடித்து மேலே சென்றாள். குளித்து.. அழகான ஒரு எல்லோ வித் பிங்க் நிறத்தில் சல்வார் அணிந்து.. ஜன்னலோரம் தலை உலர்த்திக் கொண்டிருந்தாள்.

கணவன் அப்போதுதான் கண்விழித்தான்.

விசு “பார்பி வந்துட்டியா…” என்றபடி அவளை நோக்கி கை நீட்டினான்.

பவானி, கணவனின் கைகளை பற்றிக் கொண்டு, அவனின் அருகில் அமர்ந்தாள். அமர்ந்தவளை தன் போர்வைக்குள் இழுத்துக் கொண்டான் கணவன்.

விசுவின், கைகள் இயல்பாய்  தாலி செயினைதான் தேடியது “நான் இல்லாதப்ப.. ஓகே.. இப்போ, டேக்இட் அவுட்” என்றபடி அதை தன்னிடம் எடுத்துக் கொண்டான்.

பவானி “திருந்தவே மாட்டீங்களா.. இப்படி தாலியை கேட்கிற புருஷனை யார் சொல்லியும் கேட்டதில்லை நான்” என்றாள்.

விசு அந்த செயினை தனதாக்கிக் கொண்டு “ப்ச்சு.. விடு பார்பி.. நானே முதலாக இருந்துட்டு போறேன்..” என்றபடி தன்னவளை தனக்குள் புதைத்துக் கொண்டான். ஏதேதோ கேள்விகள்.. அதற்கான பதில்கள், செல்ல கோவங்கள்.. பெரிய சமாதனாங்கள்.. என ல்லாம் அந்த கூடலில் தன்னியல்பாக நிகழ்ந்தது. இத்தனைநாள் பிரிவு.. அவர்களின் தேடலை அதிகமாக்கியது. நேரத்தையும் அதிகமாக்கியது. 

வேதா, உண்டு குட்டி உறக்கம் போட சென்றுவிட்டார்.

மாலை நான்கு மணிக்குதான் கீழே வந்து உண்டனர் பவானி விசு இருவரும். 

விசு “பார்பி.. ஐஸ்கிரீம் சாப்பிட போலாமா..” என்றான்.

பவானி “இப்போவா?.. அத்தை எழுந்து வந்திடுவாங்க.. நீங்க இன்னும் சரியாகூட அவங்க கிட்ட பேசலை.. நைட் போலாம்” என்றாள்.

விசு “ஓகே..” என்றபடி ஹால் சோபாவில் அமர்ந்தான்.

சற்று நேரத்தில் வேதா எழுந்து வந்தார்.. அவரை தொடர்ந்து பத்மநாபன் வாசுகி வந்தனர். நேரம் சென்றது. அடுத்த இரண்டுமணி நேரத்தில் அவர்களும் விடைபெற்று கிளம்பினர்.

இரவு உணவு எதுவும் சமைக்க வேண்டாம் வெளியில் செல்லாம் என சொல்லி இருந்தான், விசு.

அதன்படி இரவு ஏழு மணிக்கு மேல்.. நல்ல ஹோட்டலுக்கு சென்றனர், மூவரும் குடும்பமாக. விசு முன்னாமே டேபிள் புக் செய்திருந்தான். இவர்களை பார்த்த்தும், உணவு விடுதியின் மேலாளர் வந்து வரவேற்று.. அவர்களுக்காக இடம் காட்டினார்.

விசு, அழகாக குடும்பத்தோடு அங்கே சென்றான். தன் அன்னைக்கு தானே சேர் நகர்த்தி அமர வைத்தான்.. பவானி “அப்போ எனக்கு” என கேட்க.

விசுவும் “உனக்கு இல்லாமையா” என சொல்லி, அவளின் இருக்கையையும் பின்னால் நகர்த்தி, மனையாள் அமர்ந்ததும்.. அவளின் வசதி கேட்டுக் கொண்டுதான் அமர்ந்தான்.

வேதா நிறைவாக பார்த்திருந்தார்.. தன் கணவனை நினைக்காமல் இருக்க முடியவில்லை அவரால்.. கண்ணில் நீர் நிறைந்தது.. பவானி “அத்தை, என்ன அத்தை” என்றாள்.

வேதா ஒன்றுமில்லை என்பதாக தலையசைத்தார்.

விசு “ம்மா…” என்றபடி அவரின் கை பற்றினான்..

வேதா “ஒண்ணுமில்ல டா, முன்னாடி, நாம அப்பா கூட வருவோமில்ல அது ஞாபகம் வந்திடுச்சி.. “ என தொண்டையை சரி செய்துக் கொண்டார்.

விசுவும் அமைதியாக இருந்தான். இப்போது பவானி அமைதியாக இருந்தாள்.

வேதா “விசுப்பா, சந்தோஷம் பா.. ரொம்ப சந்தோஷம்.. இந்த நேரத்தை அனுபவிக்கனும்.. பீல் பண்ண கூடாது, பவானி பாவம் பாரு. ஏதாவது சாப்பிடலாம்..” என்றார்.

பவானி சிரித்தாள்.

மூவருமாக சேர்ந்து ஆர்டர் செய்தனர். உண்டனர்.. பேசினர்.. கலகலப்பாக சிரித்தனர்.. விசுவின் பழைய ரகளைகளை அன்னை சொல்ல.. மனையாள் கேட்டு சிரித்துக் கொண்டிருந்தாள்.. 

விசு “ம்மா..போதும்மா… எல்லாத்தையும் சொல்லிடாத..” என அதட்டிக் கொண்டிருந்தான்.

அளவான சிறிய அந்த குடும்பத்தில் , நீண்ட நாட்களுக்கு பிறகு, ஆனந்தம்.. ஆர்பாட்டமாக வரத் தொடங்கியிருந்தது. எல்லா பிரச்சனைகளும் தீர்ந்த பிறகு, கொண்டாடுவதில் என்ன இருக்கிறது. பிரச்சனைகளுக்கு நடுவில் இருக்கும் கொண்டாட்டங்கள்தான் அழகானவை.. நம்மால் காலம் கடந்தும்  நினைவுக் கொள்ள கூடியவை. அந்த அந்த நொடிகளில் வாழ்வோம்.

“புயல் மையல் கொண்டால்..

மழை மண்ணில் உண்டு…

எந்த தீமைக்குள்ளும்…

ஒரு நன்மை உண்டு..

சந்தோஷம் சந்தோஷம் 

வாழ்க்கையின் பாதி பலம்..”

$சுபம்$

Advertisement