Advertisement

விசு “ஹேய் பார்பி, அப்புறம் கோவப்படு.. உன்னை தொட்டு பார்க்கணும் போல இருக்கு.. ப்ளீஸ்..” என்றான் கரகரப்பான குரலில் மென்மையாக சொன்னான் கணவன்.

கணவன் என்ன சொல்லுகிறான்.. என புரியாமல், சட்டென திரும்பி பார்த்தாள் மனையாள், அவளின் முகம் சட்டென வெம்மையை பூசிக் கொண்டது.. அவளும் சட்டென கதவை திறந்துக் கொண்டு வெளியேறினாள்.

விசு அமர்ந்த இடத்திலேயே, அவளை விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

பவானிக்கு, சட்டென அலை அலையாக பழைய நினைவுகள் எல்லாம் வந்து சேர்ந்தது.. அவன் தூரத்தில் இருக்கும்வரை பெரிதாக காதல் பேச்சு என பேசியதில்லை.. ஆனால், அக்கறையாக கேட்பான்.. ‘காலேஜ் போனியா, நிறைய வேலை இருந்தால், மில்லுக்கு போகாத.. அம்மாவை பார்த்துக்க.. கவனமா இருக்கணும்..’ என பொதுவாக சொல்லுவானே தவிர, கிசுகிசுப்பான குரலில் பேசுவது.. மிஸ் யூ என சொல்லுவது.. ஏதும் கண்டதில்லை கணவனிடம். இப்போதுதான் முதல்முறை.. எதோ உளறுகிறான்.. ம்.. காதலாக கணவனாக உளறுகிறான் என தோன்றியது பெண்ணுக்கு. கொஞ்சமாக முகம் மிளிர்ந்தது அவளையும் அறியாமல்.

விசு, அவளை பின்தொடர்ந்து வந்தான்.. பவானி, என்ன செய்வதென தெரியாமல்..  அங்கிருக்கும் ஹாலில் உள்ள.. சின்ன ஸ்டூலில் அமர்ந்தாள்.

விசு “என்ன பதிலே காணோம்.. எப்படி இருக்க.. நல்லா இருக்கியா.. ஏன் என்கிட்டே வரமாட்டேங்கிற.. என்னாச்சு” என்றான் குரலில் புதிதான ஒருபாவம் வந்திருந்தது.

பவானிக்கு அது புரிந்தாலும் மனது இன்னும் அவனை முழுதாக தெரிந்துக் கொள்ளாத குழப்பத்தில் இருந்ததே.. எனவே “நான் எப்போ உங்ககிட்ட வந்திருக்கேன்..” என்றாள் அமைதியானக் குரலில்.

விசுவிற்கு, அந்த குரல் பேதம் தெரிய, அவளின் கேள்வி உண்மைதான் என புரிந்தது.. ஆனாலும், இவள் மனதில் எதோ இருக்கிறது என கணவனாக உணர்ந்தவன் “இல்ல, வந்ததில்ல.. அதுக்காக இப்படியே இருக்க முடியுமா” என்றவன் அவளின் அருகில் வந்து, கீழே அமர்ந்தான்.. தன்னவளின் மென் பாதங்களை எடுத்து தன் மடியில் வைத்துக் கொள்ள முயன்றான்.

பவானி, அவனின் முயற்சியை தடுத்தபடியே.. தானும் கீழிறங்கி அமர்ந்தாள்.. “இப்படியே இருந்திடுவோம்ன்னுதான் தோணிச்சி” என்றாள் ஏற்ற இறக்கமான குரலில்.

விசு “என்ன கேட்க்கிற புரியுற மாதிரி கேளு..” என்றான், நேர் பார்வையாக தன்னவளை பார்த்து.

பவானி ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

விசு “எ.. எனக்கு பேச தெரியலையா இல்லை, நான் அப்படியே பழகிட்டனா தெரியலை.. என்ன.. என்ன பிரச்சனை உனக்கு.. சொல்லு” என்றான்.

பவானி இப்போதும் அமைதியாக இருந்தாள்.

விசு “இன்னும் எத்தனை நாள் டா..” என்றான் அவனின் குரல் அப்பட்டமான ஏக்கத்தை காட்டியது.

பவானி “அன்னிக்கு, கல்யாணத்துக்கு முன்னாடி, நான் உங்ககிட்ட ஒன்னு கேட்டேன்..” என சொல்லி நிறுத்தினாள்.

விசு சற்று யோசித்து “ம்.. படிக்கனும்ன்னு கேட்ட..” என்றான் யோசனையாக, இன்னமும் ஒன்று கேட்டாள், அதுவும் நினைவிலிருந்தது அவனுக்கு, ஆனாலும், அமைதியாக இதை மட்டும் சொன்னான்.

பவானி “அது மட்டும்தான் கேட்டேனா.. சரி” என எழுந்துக் கொள்ள எத்தனித்தாள்.

விசு பதறி “ஹேய்ய்… இரு.. இரு.. யோசிச்சு சொல்றேன்..” என்றான், பொய்யான பதட்டத்தில்.

பவானி, கணவனை முறைத்தபடி அமர்ந்தாள்.

விசு “நான் ஒகேவா கேட்ட..” என்றான், தன் நெற்றியில் தட்டிக் கொண்டு.

பவானி “பதில் இன்னமும் சொல்லலை..” என்றாள், அதிகாரமானக் குரலில்.

விசு “இன்னமும் சொல்லனும்மா..”  என ரசனையாக சொல்லியபடியே.. அவளின் பாதங்களை பற்ற முயன்றான்.

பவானி, மீண்டும் அவன் முயற்சியை தடுத்து.. தனக்குள் தன் பாதங்களை வைத்துக் கொண்டாள். பவானி “சொல்லுங்க..” என்றாள்.

விசுவிற்கு, ‘என்ன சொல்லணும் இவளிடம்.. நீயில்லாமல் ஒன்றுமில்லை என உருக வேண்டுமோ.. இன்னமும் என்ன..’ என சலிப்பாக வந்தது..

ஆனாலும் பொறுமையாக விசு “இத்தனை நாள் கூடவே இருந்திருக்க.. இப்படி கேட்க்கலாமா” என்றான் கொஞ்சம் குரல் கண்டிப்பான காதலை காட்டியது.

பவானியும் பொறுமையாக “எனக்கு உங்களை புரிஞ்சிக்க தெரியலை.. நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு தெரியலை.. என் அப்பாக்காகதான் கல்யாணம் செய்துகிட்டீங்கன்னு தோணுது.. ஆனால், என்னை படிக்க ஒத்துகிட்டது ஏன்? அதுகூட ஓகே.. எனக்காக நீங்க காம்பரமைஸ் ஆகுறீங்கன்னு தோணுது..  அ..அது.. இப்படி தள்ளி நின்னு.. என்னை, இப்படி விட்டுட்டு வெளிநாடு போனது இது.. எ..எல்லாம்..  அது, எனக்கு ஒருமாதிரி இருக்கு, நா..நான் உங்களுக்கு மேட்ச் இல்லையோன்னு தோணுது..” என்றாள் தயங்கி தயங்கி என்றாலும் மனதில் உள்ளதை கேட்டாள்.

விசு “அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல..” என சொல்லி அவள் திமிர திமிர.. அவளின் பாதங்களை தனக்குள் எடுத்துக் கொண்டான்.

விசு “இப்படி சென்சிட்டிவ்வா யோசிக்கறேன்னா.. எனக்கு புரிந்ததை வைத்துதான் சொல்லுகிறான்.. உன்னை நான் அங்கிள்காகதான் கல்யாணம் செய்துகிட்டேன். ஆனால், இப்படி உன் காலை பிடிக்கிற அளவுக்கு நான் இம்ப்ரெஸ் ஆவேன்னு தெரியலை.. ப்ளீஸ் எதனால இப்படி ஆனேன்னு மட்டும் கேட்டிடாத, எனக்கு தெரியாது. தெரிஞ்சிக்கனும்ன்னு ஆசையா இருக்கு ஹா… ஹா… ப்ளீஸ் அல்லோ மீ…” என்றான்., அவளின் அத்தனை குழப்பத்தையும் சின்ன சிரிப்பிலும்.. முடிவற்ற வாரத்தையிலும் தகர்த்தான் அசால்ட்டாக.

பவானி “என்மேல கோவம் வருத்தம் ஏதும் இல்லையா.. நான் யாரையோ லவ் செய்து..” என நிறுத்தினாள்.

விசு “அதெல்லாம் ஒரு விஷயமே இல்ல பவானி.. எனக்கெல்லாம் பாரு லவ்வே வரல.. இத்தனைக்கும் அப்ரோட்ல படிச்சேன்.. என் ப்ரெண்ட்ஸ் எல்லாம் சாமியாருன்னு கிண்டல் பண்ணுவாங்க.. சோ, அவங்க அவங்க லைப்.. அதை நான் ஆராயக் கூடாதில்ல.. உன்னோட லைப்பிலும்  எதோ நடந்திடுச்சி.. அதை விட்டுடு.. டாட். 

இப்போ, நீ என்னை பத்திமட்டும் யோசி, நான் உன்னை பத்திதான் யோசிக்கிறேன்.. எப்படின்னா! ஏன் என்கிட்டே சொல்ல.. அன்னிக்கு உன்னை கடத்த முயற்சி நடந்துதுன்னு  எனக்கு சொல்லி இருக்கலாம் நீ!, நான் அந்த அளவு உனக்கு நெருக்கமாக இல்லைன்னு உண்மையாக தோணிச்சி.. உண்மையா பீல் பண்ணேன்..” என்றான்.

பவானி “சாரி, அ…அது ஸ்ரீயாக இருக்குமோன்னு எனக்கு எண்ணம்.. ராகவ்கிட்ட சொன்னேன்.. அவன் கிண்டல் செய்தான், அதான் நம்மை யார் கடத்த போறாங்கன்னு அசால்ட்டா இருந்துட்டேன்.. சாரி” என்றாள், தன் தவறை உணர்ந்த குரலில்..

விசுவிற்கு கொஞ்சம் கோவம் வந்தது இந்த பேச்சில், ஆனாலும் அந்த நேரத்தில் அதை அவளிடம் காட்டக் கூடாது என எண்ணி அமைதியாக ஏதும் பேசாமல் இருந்தான்.

பவானிக்கு, கணவனின் அமைதியான முகம் கோவம் என புரிந்தது.. இத்தனை நேரம் அவன் சொன்னது எல்லாமும் புரிந்தது, அதனால் மனதில் எங்கோ ஒட்டிக் கொண்டிருந்த சந்தேகங்கள் எல்லாம் அவனின் பாலீஷான பதிலில் பயந்து ஓடிவிட்டது போல.. காதலாக கணவனின் கண்களை பார்த்தாள், இமைக்காமல்.

கணவன், அவளை போல புரியாதவன் இல்லையே.. தன்னவளின் பார்வை புரிந்தது போல அவனிற்கு, அவளின் பாதங்களை பற்றி இழுத்தான் தன்னிடம்.. “எத்தனை வைச்சிருக்க மனசில்” என்றான்..கிசு கிசுப்பானக் குரலில்.

அந்த வார்த்தையில் ‘ஏதுமில்லை’ என தன்போல அவளின் சிரம் அவனுக்கு சாதகமான பதிலை சொல்லியது.. இன்னமும் இமைக்காமல் கணவனையே பார்த்திருந்தாள் பெண்..

பதிலில்லா அழுத்தமான மனையாளின் பார்வை.. என்னமோ சொல்லியது அவனிடம், அவனும் அதே அழுத்தத்தோடு அவளை பார்த்தான்.. அவனின் கண்கள் இப்போது கருப்பும் ப்ரவுனும்  கலந்த அடர் ப்ரவுன் நிறத்திற்கு மாற, மென்மையாக அவளின் இதழ்களில் முத்தமிட்டான்.. பொலபொலவென அவளின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.. இப்போது அழுத்தம் கூடியது அவனின் முத்தத்தில்.

எல்லாவற்றையும் பேசி புரிந்துக் கொள்ள முடியும்தான்.. ஒரே அலைவரிசையில் உணர்ந்துக் கொள்ள.. காதலின் மொழி முத்தம் தானே.. அவனிலிருந்து மென்மையாகத்  தொடங்கிய மொழி.. தன்னவளின் கண்ணீர் கண்டதும்.. வன்மையாய் மாறி  ஆட்கொள்கிறது அவளை.. அவளும் அந்த வன்மைக்கு இடம் கொடுத்து கண்ணீரை நிறுத்த.. பேச்சில்லா மொழி தொடங்கியது அவர்களிடையே.. நுட்பமான சப்தங்களாலும்.. அதை உணர்வதால் வரும் சின்ன சின்ன  அசைவுகளாலும்.. தங்களுக்குள் மட்டுமே புரிந்துக் கொள்ள கூடிய புதிய மொழி ஒன்றை.. கண்டுக் கொண்டு, பேசி களித்தனர்.. களைத்தனர்.. இருவரும். விடியலில் கூட சங்கேத பாஷைகள் தொடர்ந்தது இருவருக்குள்ளும்.. காதல் பாஷைகளுக்கு விடியல் எப்போதும்   எதிரியே.. இப்போதும் அந்த விடியல் வந்து நின்று இருவரையும் மௌனமாக்கியது. 

“உன்னை தாண்டி..

என்னால் எதையும் யோசிக்க 

முடியாதே.. முடியாதே…”

Advertisement