Advertisement

நேசம் – 26

“ நான் அவசரப்பட்டு பேசிட்டேனோ??? ச்சே… என்ன நினைச்சிருப்பா ?? ஆல்ரெடி லிசிக்கு கல்யாணம் இதெல்லாம் பிடிக்காது. நான் வேற பேசியிருக்க கூடாது. எல்லாம் என்னால தான்..” என்று நடந்தவைக்கு தன்னை தானே பொறுப்பாக்கி கொண்டு வருந்திக்கொண்டிருந்தான் ரகுநந்தன்…

“பார்த்து பேசி கூட நாள் ஆச்சு.. லிசி பேசாம இருந்தா என்ன?? நம்ம போய் பேசலாம் “ என்று முடிவு எடுத்தான்.. முடிவு எடுத்தபின் அதை மாற்றிக்கொள்ளும் பழக்கம் இல்லையே ரகுநந்தனுக்கு.. லிசியை அழைத்தான்..      

பலமுறை ரிங் போய் நின்றது தான் மிச்சம்.. அவள் எடுப்பதாய் இல்லை.. மீண்டும் மீண்டும் அழைத்தான்.. ஆனால் எடுக்கப்படவே இல்லை..

“ வாட் ஹேப்பன்!! இத்தனை கூப்பிட்டும் அட்டென்ட் பண்ணாம இருக்கா..??” என்று யோசித்தவன் அப்பொழுது தான் நேரத்தை கவனித்தான்..

“ ஷிட் !!! இப்போ அவளுக்கு வேலை இருக்கும்…” என்று மீண்டும் பொறுமை காத்தான்..

அவளோடு பேசிவிட காத்திருந்த அத்தனை நேரமும் அவனுக்கு எந்த வேலையும் ஓடவில்லை.. சதிஸ் வந்து தான் உண்ண அழைத்து, இல்லை இல்லை இழுத்து சென்றான்..

“ வாட் ஹேப்பன் மச்சி.. சம்திங் இஸ் ஈட்டிங் யூ ??” சதிஸின் கேள்விக்கு பதில் கூறுவதா வேண்டாமா என்ற யோசனை ஒரு நொடி நந்தனின் மனதில் ஓடியது.. பிறகு நடந்ததை கூறினான்..

கேட்ட சதிஸிற்கு சற்றே அதிர்ச்சி.. ஏனெனில் அவனுக்கு ரகுநந்தனை பற்றி சிறுவயதில் இருந்தே தெரியும்.. லிசியை பற்றியும் தெரியும்..

“ ராக்கி சொல்றேன்னு தப்பா நினைக்காத.. லிசி நல்ல பொண்ணு தான் ஓகே.. பட் லைப், மேரேஜ்ன்னு வரும் போது இதல்லாம் ஒத்து வருமா டா??  அதுவும் இல்லாம அவளுக்கு ஆரம்பத்தில் இருந்தே இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை  ”

“ எஸ்  சதிஸ்.. அதான் நான் கொஞ்சம் பொறுமையா போகலாம்னு முடிவு எடுத்து இருக்கேன் “ என்று நம்பிக்கையாய் கூறி  சிரிக்கும் நண்பனை பார்த்து பதிலுக்கு சிரிப்பதை தவிர அப்பொழுது சதிஸால் என்ன செய்ய முடியும்..

“ஆனா ராக்கி ஒன்னு மட்டும் சொல்றேன் தப்பா நினைக்காதே.. எந்த ஒரு ரிலேஷன்ஷிப்பும் கட்டாய படுத்தி வரவைக்க கூடாது.. சோ, லிசி இதோட பிரேக் அப் பண்ணலாம்ன்னு சொன்னா நீ அவளை போர்ஸ் பண்ணாத”

“ ஹ்ம்ம் சதிஸ்.. நீ சொல்றது சரிதான்.. பட் நான் அவளை போர்ஸ் பண்ணல.. வெயிட் பண்றேன்னு தான் சொல்றேன்.. இட்ஸ் ஓகே மென் அவ வேண்டாம்னு பீல் பண்ணா, ஐ வோன்ட் கம்ப்பல் ஹேர்..”      

மாலை வீட்டிற்கு சென்ற பிறகும் லிசியிடம் இருந்து எந்த அழைப்பும் இல்லை.. மறுபடியும் அவனே அழைத்தான்.. இம்முறை எடுக்கப்பட்டது.. ஆனால் எடுத்தது அவள் இல்லை.. ஜான் என்று ஒருவன்..

“ ஹலோ !!! லிசி…”

….

“ ஓ!! லிசி எப்போ ப்ரீ ஆவா ??”

“ ஓகே… ”

“ இப்போ என்ன மீட்டிங்.. லிசி பார்க்கிற வேலையில் அவளுக்கு மீட்டிங் எல்லாம் இருக்காதே.” என்று யோசித்தவன் சரி அவளை தொல்லை செய்ய வேண்டாம் என்று படுத்து உறங்கிவிட்டான்..

மறுநாள் விழிப்பு வந்ததே லிசியின் அழைப்பில் தான்.. தூக்கத்திலேயே “ ஹலோ ” என்றவன் லிசியின் குரல் கேட்டு படக்கென்று எழுந்தமரந்தான்..

“ லிசி.. லிசி டியர்.. ஐம்.. ஐம் சாரி “

“ இட்ஸ் ஓகே ராக்கி… பட் டோன்ட் கன்பியூஸ் யூர்செல்ப்..”

“நோ!! லிசி நான்.. நான் உன்கிட்ட அப்படி பேசி இருக்க கூடாது தான்.. நம்ம.. நம்ம எப்பவும் போல லவ்வர்ஸ் மாட்டும் தான் ஓகே.. உனக்கு ஒருவேலை மேரேஜ் பத்தின தாட்ஸ் வந்தா, அப்போ வி கெட் மேரி.. ரைட்..”

…………

“ லிசி பேசு.. ஏன் அமைதியா இருக்க ?? ”

“ ராக்கி…. ஈவினிங்க நான் வீட்டுக்கு வரேன் பேசலாம்.. ஓகே வா.. இப்பொ எனக்கு முக்கியமான வேலை இருக்கு “ என்று அவள் அழைப்பை துண்டிக்கும் பொழுது பின்னே அவளை யாரோ லிசி டார்லிங் என்று அழைப்பது கேட்டது..

இவன் பதிலுக்கு கூட காத்திராமல் வைத்திருந்தாள் லிசி.. தூக்கம் போனதும் இல்லாமல் இப்பொழுது மனதில் இருந்த நிம்மதியும் போனது தான் மிச்சம் ரகுநந்தனுக்கு…      

“ யாரது ?? இன்னும் சரியா கூட விடியல லிசியை கூப்பிட்டது… யாரா இருக்கும் ?? ” என்ற யோசனையே அவனது மனதை தின்றது..

மனதில் ஏதோ ஒன்று வித்தியசமாய் வந்து நெருடிக்கொண்டே இருந்தது.. லிசியோடு பொறுமையாய் போகவேண்டும் என்று அத்தனை நேரம் எண்ணியிருந்தது இப்பொழுது லேசாய் கரைந்து போனது போல இருந்தது..

“ இவ எப்போவும் விஷயத்தை தள்ளி போடுறவ இல்லை.. சரியோ தப்போ நேருக்கு நேராய் தான் எல்லாம்.. ஆனா இப்போ??? சம்திங் ராங்.. ” என்ற யோசனையுடனே அலுவலகம் கிளம்பினான்..

அவள் கூறிய மாலை பொழுதும் வந்தது… அவளும் வந்தாள்.. எப்பொழுது வந்தாலும் அணைத்து முத்தமிடும் லிசி இப்பொழுது எங்கோ காணாமல் போயிருந்தாள்.. அனைத்தையும் கவனித்தபடி தான் இருந்தான் ராக்கி…

“ என்ன விசயம் ராக்கி நேத்து அத்தனை தரம் கூப்பிட்ட போல..??? ” மிகவும் செயற்கையாய் இருந்தது அவளது பேச்சும் புன்னகையும்…

“ஹ்ம்ம் எஸ் லிசி.. அன்னிக்கு நடந்தது இட்ஸ் ஆல் மை பால்ட்.. சோ ”

“ ப்ளீஸ் ராக்கி அந்த இஸ்யு பத்தி பேசாத.. அனதர் திங் அன்னிக்கு நான் சொன்னது தான் நமக்குள்ள இனிமே… ஹ்ம்ம்… நத்திங் இஸ் பிட்வீன் அஸ்.. அன்ட் திஸ் இஸ் பைனல்.. ”

“ வாட் !!! லிசி இப்படி ஒரு சின்ன பிரச்சனைக்கு போய் இவ்வளோ பெரிய டெசிசன்.. ஜஸ்ட் திங் அபௌட் மீ அண்ட் அவர் ரிலேசன்ஷிப்..”  வலியும் வேதனையுமாய் அவன் குரல்.. ஆனால் அதெல்லாம் அவளது கண்களுக்கும் மனதுக்கும் தெரிந்ததா புரிந்ததா என்றெல்லாம் தெரியவில்லை..

“ நோ ராக்கி!! திஸ் இஸ் நாட் எ ஸ்மால் திங்.. இன்னிக்கு விட்டு அப்புறம் இன்னொரு நாள் இதே ப்ராப்ளம் வரும்.. என்னிக்கு இருந்தாலும் வீ ஹேவ் டு டிஸைட்… சோ லெட் வி குவிட்”

அவன் என்ன கூறினாலும் அவள் இதேதில் தான் பிடிவாதமாய் நின்றாள்.. பேச்சுக்கள் நீண்டுகொண்டே போனது.. நேரம் கரைந்தது தான் மிச்சம்.. ஆனால் லிசியின் மனமோ அவள் எடுத்த முடிவில் பிடிவாதமாய் இருந்தது.. அலுத்து போய் விட்டான் ரகுநந்தன்.. இதற்குமேல் அவளிடம் இதை பற்றி பேசினால் தனக்கு தான் இழுக்கு என்று தோன்றவும், அவனும் ஒப்புக்கொண்டான்..

லிசிக்கு இப்பொழுது தான் நிம்மதியாய் இருந்தது.. “ ஹாப்பாடி…. ஒருவழியாய் வந்த வேலை முடிந்தது…” என்று எண்ணியவள் அதன் பின் மிக சகஜமாய் பேசினாள் அவனோடு..  அவனுக்கு தான் அவள் முகம் பார்கவே கூசியது.. இவள் எப்படி என்னிடம் யாரோ போல் பேசுகிறாள்..

அடிகடி பேசுவாள் தான்.. எப்பொழுதாவது நேரில் வந்து பார்த்துவிட்டு போவாள்.. அவ்வளவே..  நாட்கள் சென்றன.. அவன் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்த பழகி கொண்டான்.. இருந்தாலும் மனதின் ஒரு மூளையில் ஒருவித தவிப்பு, தனிமை, வெறுமை இருந்துகொண்டே இருந்தது..

அன்று லிசிக்கு பிறந்தநாள்.. நேரில் சென்று அவளுக்கு வாழ்த்து சொல்லலாம் என்று அவளது வீட்டிற்கு சென்றான்.. சிறுவயதில் இருந்தே சென்று வந்த வீடெனில் அவன்பாட்டிற்கு உள்ளே சென்றான்.. யாரும் இல்லை வீட்டில்.. ஆனால் உள்ளே பேச்சுக்குரல் கேட்டது..

“ அன்ட்டி அங்கிள் எல்லாம் எங்க போனாங்க” என்று முனுமுனுதப்படி உள்ளே சென்றவனுக்கு அங்கே கண்ட காட்சி அப்படியே உறைய வைத்தது..

லிசியும் அந்த ஜானும் நடுவீட்டில் ஒருவரை ஒருவர் அணைத்தபடி, அரைகுறை உடையுடன்… பார்ப்பது நிஜமா பொய்யா என்று உணரவே அவனுக்கு சற்று நேரம் பிடித்தது. உண்மைதான் என்று உணர தொடங்கிய அடுத்த நிமிடம் அங்கே நிற்பதற்கே அவனுக்கு உடம்பெல்லாம் அமிலம் தெளித்து போல இருந்தது..

வந்த சுவடே தெரியாமல் பின்னால் நகர்ந்தான்… மனதில் சம்மட்டி வைத்து அடித்தது போல அப்படியொரு வலி.. கத்தி அழ வேண்டும் போல இருந்தது ஆனால் முடியவில்லை.. நடை கோனலானது,.. எங்கே விழுந்துவிடுவோமோ என்று எண்ணி அங்கிருந்த சுவரில் சாய்ந்து நின்றான்.

உள்ளே இருவரின் கொஞ்சல் குரல் சற்றே ஓய்ந்து பேச்சுக்குரல் கேட்டது.. அவனது காதில் நாராசமாய் விழுந்தன.. என்ன பேசுகிறார்கள் என்று கேட்க ஒரு நொடி மனம் விழைந்தாலும், அடுத்த நொடி அதை கட்டுபடுத்தினான்.. ஒருநிமிடம் கூட இங்கே இருக்க கூடாது என்று எண்ணியவனை “ ராக்கி ” என்ற அவனது பெயர் தடுத்து நிறுத்தியது..

இந்த நிலையில் என்னை பற்றி என்ன பேசுகிறார்கள்.. அவனையும் அறியாமல் அவனது கால்கள் அங்கே நின்றன.. ஜானினது குரல் தான் “ நல்ல வேளை  லிசி அந்த  ராக்கிகிட்ட இருந்து மட்டும் நீ பிரேக் அப் பண்ணல திஸ் பர்த்டே இப்படி நம்ம என்ஜாய் பண்ணியிருக்க முடியாது” அவனது பேச்சில் அத்தனை நெருக்கம்..

இந்த நெருக்கம் இன்று நேற்று வந்ததில்லை என்று ரகுநந்தனுக்கு புரிந்தது..

“ எஸ் ஜான்.. ஊப் !!! அவன்கிட்ட இருந்து வரதுக்குள்ள ஹப்பா!!! யு க்னோ ஒன் திங்.. சரியான செண்டிமெண்ட் பூல் ஹீ இஸ்.. எப்போ பார் அம்மா, பேமிலி அது இதுன்னு ஒரே போரிங் தாட்ஸ் அண்ட் டால்க்ஸ் தான்“

“ யா ஐ க்னோ!!! அதான் ஸ்டார்டிங்ல இருந்தே உன்கிட்ட நான் சொல்லிட்டு இருந்தேன்.. அவனை விட்டு வான்னு.. ஹப்பா அவனும் அவன் பீகேவ்சும்..  சச் ஏன் இடியாட்டிக் பெல்லொவ்…”

“ யா !! பட் சம் டைம்ஸ் ஹி இஸ் வெரி நைஸ் டு மீ.. ஆனா என்னை எவ்வளோ ப்ரீ யா விடுவான் தெரியுமா அதான் அவன் கிட்ட எனக்கு பிடிச்சதே.. நான் எது சொன்னாலும் சரின்னு சொல்றதை தவிர ஹி டின்ட் க்நொவ் எனி திங்.. அதுவும் முக்கியமா நான் பொய் சொன்ன அவனால் கண்டு பிடிக்கவே முடியாது.. மேரேஜ்கு கம்பல் பண்ணுனான்.. ஹூப்!! அவன் கூட மேரேஜ் பண்ணி லைப் லாங் ஒரு போரிங் ஆனா லைப் நான் வாழ விரும்பலை. அதான் அது இதுன்னு சொல்லி எப்படியோ எஸ்கேப் ஆகிட்டேன்” என்று கூறி சிரித்தாள் லிசி.. உடன் சேர்ந்து ஜானினது சிரிப்பு சத்தமும் கேட்டது..

ரகுநந்தன் செவியில் ஒரே நேரத்தில் அமிலத்தையும் இரும்பையும் காய்ச்சி ஊற்றுவது போல இருந்தது.. தான் ஏமாற்றப்பட்டோம் என்ற எண்ணமே அவனை அடியோடு வீழ்த்தியது.. எப்படி அவன் வீட்டிற்கு வந்தான் என்று அவனுக்கே தெரியவில்லை..

தலை வெடித்து விடும் போல இருந்தால், இதயமோ நெருஞ்சி முள்ளால் ஆனா கத்தியை வைத்து திருகுவதை போல வலித்தது.. ஆற்றுவார் இல்லாமல் தேற்றுவார் இல்லாமல் கிடந்தான்.. இரண்டு நாட்கள் எங்கும் செல்லவில்லை.. வீட்டின் கதவை கூட திறக்கவில்லை..

யார் அழைத்தாலும் அலைபேசியை எடுக்கவில்லை.. என்ன யோசித்தான், என்ன செய்தான், என்ன உண்டான் இது எதுவுமே அவனுக்கு தெரியாது..

உண்டானா, உறங்கினான அவன் மனம் என்ன நினைக்கிறது என்பதை எல்லாம் உரிமையாய், உள்ளன்போடு அவனுக்கே அவனுக்கென்று பார்த்து கேட்க யாரும் இல்லை..  தனிமை ஒரு புறம், தான் ஏமாற்றபட்டோம் என்ற எண்ணம் ஒருபுறம் அவனை வாட்டி வதைத்தது..

எத்தனை மட்டமாய் என்னை நினைத்திருக்கிறாள்.. நான்.. நான் இடியாட்டிக்.. போரிங் பெல்லொவா?? ஷிட்… ஹொவ் டேர் யு ஆர் ?? லிசி….. கத்தினான்…. ஏன் என்று கேட்க யாரும் இல்லை..

யோசித்தான்… நிறைய யோசித்தான்..  எங்கே தவறு நிகழ்ந்தது?? யார் மீது தவறு இதில்.. என்னை பிடிக்காமல் போனதன் காரணம் என்ன ?? இப்படி நிறைய யோசித்தான்… 

யோசித்து பார்த்ததில் ஆரம்பத்தில் இருந்தே அவள் சரியாய் தான் இருந்திருக்கிறாள் தான் தான் அவளை மிகவும் சார்ந்தே இருந்துவிட்டோம் என்று எண்ணும் பொழுது அவன் மனம் இன்னும் வேதனையில் புழுங்கியது…

அப்பொழுது தான் மனதில் திடீரென்று ஒரு எண்ணம் தோன்றியது.. நிச்சயம் என் வாழ்வில் நான் நல்லபடியாய் வாழ்வேன்.. எனக்கென்று ஒருத்தி வருவாள்.. என்னை கவனிக்க, எனக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க, என்னை மட்டுமே சகலமாய் நினைக்க ஒருத்தி வருவாள்..

அவளை என் கைக்குள்ளேயே வைத்துக்கொள்வேன், நான் சொல்லும் படி நடக்க வைப்பேன்.. என்னை தாண்டி போக விடவே மாட்டேன்.. இந்த லிசி இல்லையென்றால் நான் வீழ்ந்துவிடுவேனா என்ன ??? இல்லவே இல்லை.. எனக்கென்று ஒரு வாழ்கை அமைத்து நான் நிச்சயம் என் வாழ்வில் வெற்றிபெறுவேன்…

இந்த எண்ணம் தோன்றிய அடுத்த நொடி அவன் மனம் அப்படியே சமன் பட்டது.. இருந்த வருத்தம் போன இடம் தெரியவில்லை.. வேகமாய் குளித்து அலுவலகம் கிளம்பினான்…

அங்கே போனால் சதிஸ் பிடித்துக்கொண்டான்… அவனுக்கு தக்கவிதமாய் பதில் கூறி சமாளித்து தன் இருக்கையில் வந்து அமர்ந்தபின் தான் தான் தாய் எழுதிய கடிதம் கிடைத்து அவன் இந்தியா வந்தது… அதன் பின் நடந்தவை தான் அனைவருக்கும் தெரியுமே..

அனைத்தையும் ரகுநந்தன் மிதிலாவிடம் கூறிமுடித்தபின் அங்கே அப்படி ஒரு அமைதி நிலவியது.. மிதிலாவிற்கு இன்னும் தான் கேட்டதை நம்ப கூட முடியவில்லை.. யாரும் இல்லாமல் எப்படி ரகுநந்தன் அந்த சூழ்நிலையில் இருந்தான் என்று நினைக்கும் பொழுது அவளுக்கு அழுகை தான் வந்தது..

“ எப்படி ?? எப்படி அந்த லிசியால் முடிந்தது ?? காதல் இல்லாமல் ஒருவனோடு பழக முடியுமா ?? ஒருவனுடைய உண்மையான நேசத்தை எப்படி இவ்வளவு  மட்டமாய் எண்ண முடிந்தது..  நந்தன்.. என் நந்தன் அன்னையையும் இழந்து, தன் காதலியும் ஏமாற்றினாள் என்று தெரிந்து ஐயோ !! எப்படித்தான் சமாளித்தானோ.. அன்று அவன் பட்ட வேதனைக்காக இன்று கண்ணீர் வடித்தாள்..”

அதை வார்த்தையிலும் வெளிபடுத்தினாள்…

“ ஸ் ஸ் !! மிது என்ன இது ?? ஏன் இப்படி அழுகுற.. ப்ளீஸ் டோன்ட் க்ரை.. ஏற்கனவே நீ என்னால ரொம்ப அழுதுட்ட மிது.. போதும் ” என்று அவளது கண்களை துடைத்தான்..

மூக்கு விடைக்க, இதழ்கள் துடிக்க அவன் முகம் பார்த்து இன்னும் தேம்பி அழுதாள்.. அன்று யாருமில்லாமல் ரகுநந்தனுக்கும் இதே வேதனை தான்.. ஆனால் இன்றோ அவன் இன்னொருத்தியை சமாதானம் செய்துகொண்டு இருக்கிறான்.. இந்த எண்ணமே அவனுக்கு புதிய தெம்பை கொடுத்தது..

“ மிது ப்ளீஸ் அழாத.. நான் அதில் இருந்து எல்லாம் வெளிய வந்துட்டேன்.. ஆனா என்ன உன்னை பத்தி தெரிஞ்சும் லூசு மாதிரி ஏதேதோ கற்பனை பண்ணி முடிவு எடுத்துட்டேன்… ஐம் ரியலி சாரி பேபி..” என்று அவன் கூறிய பிறகே அவளுக்கு நடப்பு தெரிந்து அவனிடம் இருந்து விலகினாள்..

“ என்ன மிது ??!! ப்ளீஸ் என்கிட்டே இரு மிது” என்று அவளது கைகளை பற்றினான்…

“ எப்படி நந்தன் ?? எப்படி உங்கனால இப்படி நினைக்க முடிஞ்சது ?? அந்த லிசி பண்ண தப்புக்கு எனக்கு தண்டனையா ?? நான் என்ன நினைச்சிருந்தேன் தெரியுமா என் நந்தனோட காயங்களுக்கு நான் மருந்தா இருக்கனும்னு நினைச்சேன்.. ஆனா நீங்க எனக்கு வலியை கொடுத்தது தான் மிச்சம்.. நீங்க சொன்ன காரணம் எல்லாம் சரிதான்.. ஆனா ஒரு நிமிஷம் ஒரே ஒரு நிமிஷம் என் இடத்தில இருந்து யோசிச்சு பார்த்திங்களா நீங்க ??? ”

“ மிது நான் பண்ணது தப்பு தான்.. என்ன காரணம் சொன்னாலும், எத்தனை விளக்கம் குடுத்தாலும் அது மாறாது தான்.. ஆனா என் மனசில இருக்கிறது நீ.. நீ மட்டும் தான் மிது.. எனக்கு உன்னோட வாழும் வாழ்கை போதும்.. நான் பண்ணதுக்கு உன்னால மன்னிக்க முடிஞ்சா என்னை மன்னி மிது.. இல்லைனா நான்.. நான் ஜஸ்ட் இப்படியே உன்கூடவே இருக்க மட்டும் அனுமதி போதும்.. நிச்சயமா நான் உன்கிட்ட வேற எந்த உரிமையும் எடுத்துக்க மாட்டேன்” என்று முகத்தில் வேதனையை நிறப்பி, இவள் என்னை மன்னித்து ஏற்றுக்கொள்ள மாட்டாளா என்ற ஆவலும் கலந்து அவளது பதிலுக்காய் ஏங்கினான்..

அவன் கூறிய காரணங்களால் மிதிலாவின் மனம் வேதனையில் துடித்தாலும், அவன் நிலை புரிந்தாலும் ஏனோ இன்னும் சமாதானம் அடைய மறுத்தது.. என்ன என்று அவளுக்கும் புரியவில்லை.. அவன் நிலையில் இருந்து பார்த்தால் அவனது செயல்கள் எல்லாம் சரிதான்.. தனக்கு பிடித்த மாதிரி, தன் பேச்சை கேட்டு மனைவி இருக்க வேண்டும் என்று எண்ணியதெல்லாம் சரிதான்..

ஆனால் இதன் பின் விழைவுகள் பற்றி அவன் சிந்திக்க மறந்தானே.. உயிரும் உணர்வும் உள்ள ஒருத்தியை தன் இஸ்டபடி பொம்மை போல ஆட்டுவித்தால் அதன் வலி என்னவென்று நினைத்துபார்க்க மறந்தானே…. இதையெல்லாம் நினைக்க நினைக்க மிதிலாவிற்கு அழுகை முட்டியது..

அவனோடு சேரவும் முடியாமல்  விலகவும் முடியாமல் சிக்கி தவித்தாள்.. என்னதான் லிசி அவனை ஏமாற்றி இருந்தாலும், அவளை பற்றி இப்பொழுது வரை ஒருவார்த்தை தவறாக பேசியது இல்லை நந்தன்.. அவ்வளவு ஏன் இத்தனை பிரச்சனை நடந்தும் நடந்தது என்னவென்று அவன் கூறவில்லையே.. இன்று மிதிலா காட்டாயப்படுத்தி கேட்டிராவிட்டால் அவன் சொல்லியே இருக்கமாட்டான்.

ஆழ்ந்த மூச்சை வெளியிட்டாள் மிதிலா..

“ஹ்ம்ம் நீங்க சொன்னது எல்லாம் சரிதான் நந்தன்.. என்.. எனக்கு இன்னும் கொஞ்சம் டைம் வேண்டும்..” அதிர்ந்து பார்த்தான்..

“ வேற ஒன்றுமில்லை நந்தன்.. என் முடிவு என்பது நம்ம வாழ்க்கை தான்.. அதில் எந்த மாற்றமும் இல்லை.. ஆனா நடந்த எல்லாத்தையும் மறந்து நான் கொஞ்சம் இயல்பா இருக்க எனக்கு கொஞ்சம் நாள் ஆகும்.. நான்… நான் சொல்றது உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்”

கதை கேட்டு தலையாட்டும் சிறுவன் போல வேகமாய் வேகமாய் தலையை உருட்டினான்.. அதை தவிர அவனால் வேறு என்ன செய்ய முடியும்..

இரவு நீண்டுக்கொண்டே போனது.. உறக்கமும் இவர்களிடம் இருந்து விலகிக்கொண்டு போனது.. இதே அறையில் எத்தனையோ உறங்கா இரவுகள் இருவருக்கும் நினைவு வந்தது.. எத்தனை மகிழ்ச்சி.. எத்தனை பூரிப்பு.. செல்ல சீண்டல்களும், சிணுங்கல்களும் அரேங்கேரிய இடத்தில் மௌனம்… மௌனம்… மௌனம் மட்டுமே..

கண்ணெதிரே கலைத்து போய், முகத்தை ஒரு கையால் மறைத்து படுத்திருக்கும்,   தன் மனைவியை பார்த்தபடி படுத்திருதான் ரகுநந்தன்.. இத்தனை நாள் தன் மனதில் இருந்த பாரத்தை எல்லாம் அவளிடம் இறக்கி வைத்த நிம்மதி அவனுக்கு..

“ இனி எனக்கும் மிதிலாவும் இடையில், மறைக்கவோ, மறுக்கவோ எதுவும் இல்லை “ என்று எண்ணும் வேலையில் மிதிலா பட்டென்று திரும்பி

“ஆமா இந்த லிசி விஷயம் எல்லாம் சரி, ஆனா இந்த சொத்தை எல்லாம் பாட்டி நமக்கு எழுதி வச்சதுனால தான் என்னை கல்யாணம் பண்றது பத்தி யோசிச்சேன் அப்படி இப்படின்னு வேற எதோ கிறுக்கி இருந்திங்களே அப்போ அதுகென்ன ரீசன் சொல்ல போறீங்க???” என்று கேட்கவும்

“ இன்னும் முடியலையா ??” என்பது போல பார்த்தான்,..

“ பதில் சொல்லுங்க… அப்போ இந்த சொத்து எல்லாம் தான் உங்களுக்கு முக்கியமா இருந்ததா என்ன ??” பழைய ஆத்திரம் அவள் முகத்தில்…

படுத்திருந்தவன் எழுந்தமர்ந்து அவளது கைகளை பிடித்துக்கொண்டான்.. அவள் படுத்துக்கொண்டும், இவன் அமர்ந்துக்கொண்டும் பேசுவது அவளுக்கு சற்றே சங்கோஜமாய் இருந்தது.. ஆனாலும் அவன் கைகளை பற்றியிருந்தபடியால் எழுந்தால் அவன் மீது தான் முட்டி அமர வேண்டும்.. பேசாமல் அவன் முகத்தை பார்த்து படுத்திருந்தாள். அதுவும் அவளுக்கு சங்கட்டமாய் தான் இருந்தது..

“ படுத்தி எடுக்கிறானே” என்று எண்ணினாள்.

“ மிது இந்த சொத்து அது இதெல்லாம் இப்போ நீ சொல்லி தான் எனக்கு நியாபகம் வருது.. ஹ்ம்ம் நான் என்ன நினைச்சேன் தெரியுமா எப்பவும் லைப்ல கொஞ்சம் நிம்மதியா இருக்கனும் பிரச்சனை இல்லாமல் இருக்கணும் அப்படின்னு.. அன்னிக்கு படிச்சு பார்க்காம கூட சைன் பண்ண பாரு, அப்போ நானும் குழம்பி போய் தான் படிக்காம சைன் பண்ணேன். ஆனா பாட்டி உனக்கு எனக்கும் இப்படி ஒரு வில்லங்கம் இருக்கிற மாதிரி எழுதி வைப்பாங்கன்னு நினைச்சு கூட பார்க்கலை. இதை நான் பாட்டிகிட்ட ஒரு நாள் கேட்டேன்..”

“என்னது பாட்டிகிட்ட கேட்டிங்களா ??”

“ஆமா மிது.. எனக்கு மனசை போட்டு குழப்பிட்டே இருந்தது.. அதான் ஒரு நாள் கேட்டேன் ”

“ ம்ம் பாட்டி என்ன சொன்னாங்க ??”

“ நந்து, நீ இப்போ இங்க வருவன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல டா, நீ வரதுக்கு முன்னமே சொத்தை எல்லாம் பிரிச்சு எழுத தான் ஏற்பாடு பண்ணியிருந்தேன் ஆனா நீ வந்த பிறகு அதில சின்ன மாற்றம் மட்டும் பண்ணேன்.. ஏன்னா உனக்கும் இங்க என்னை விட்டா சொந்தம்ன்னு யாரும் இல்லை, மிதிலாவுக்கும் யாருமில்லை.. நீங்க ரெண்டு பெரும் கடைசி வரைக்கும் உறவா இருக்கணும்னா சொத்து பொதுவா இருந்தா தான் ஆச்சு..

இல்லைனா நாளடைவுல அவங்கவங்க வாழ்க்கை பார்த்துட்டு தனியா போயிடுவிங்க.. அது எனக்கு பிடிக்கல.. மிதிலாகிட்ட ஒரு சத்தியம் பண்ணி கொடுத்து இருந்தேன் உனக்கு கல்யாணம் பண்ணி நான் உன்கூடவே தான் இருப்பேன்னு, ஆனா இப்போ அது முடியுமான்னு தெரியலை.. ஏன்னா நீயும் வந்துட்ட.. உன் அம்மா இருந்திருந்தா கூட பரவாயில்லை..

ஆனா என்னை நம்பி உன்னை அனுப்பிட்டு போயிட்டா.. அதான் கடைசி வரைக்கும் எல்லாம் கொஞ்சமாவது ஒரே குடும்பமா இருக்கணும்னு இதை பண்ணேன்.. சொத்தை காரணமா வச்சாவது உனக்கு வரும் பொண்டாட்டியும், மிதிலாக்கு வர புருசனும் இதுக்கெல்லாம் சம்மதிப்பாங்கன்னு ஒரு நப்பாசை.. இப்படின்னு சொன்னாங்க மிது…”

“ ஓ !!! அப்ப பாட்டி சொன்னதுனால தான் என்னை கல்யாணம் பண்ணறது பத்தி யோசிச்சிங்களா ?? உங்களுக்கா தோணலையா ??”  அவனுக்கு தன் மீது ஒரு துளி காதல் கூட தோன்றவில்லையா என்ற ஆதங்கம்.. கேள்வி மேல் கேள்வி கேட்க வைத்தது..

“ ம்ம்ச் மிது !!! இப்படியே எல்லாத்துக்கும் கேள்வியா கேட்டா அதுக்கு முடிவே இல்லை.. முதல்ல நீ என்னை நம்ப பாரு.. இந்த பிரச்சனையை சால்வ் பண்ணனும்னா எப்படிவேணா பண்ணி இருக்கலாம்.. ஊரு உலகத்துல உன்னை தவிர வேற பொண்ணே இல்லையா என்ன?? இல்லை பாட்டிகிட்ட கொஞ்சம் பிடிவாதம் பண்ணி மாத்தி எழுதுங்கன்னு சொன்னா எழுதியிருக்க மாட்டாங்களா என்ன ?? ” கோவமாய் கேள்வி கேட்டவனை பதில் கூற இயலாமல் பார்த்தாள்..

“சொல்லு மிது.. அப்படி பார்த்தா உனக்கும் கூட என்மேல பார்த்ததுமே லவ் அப்படின்னு சொல்றது மாதிரி எல்லாம் எதுவும் இல்லை.. நீ என்னை கல்யாணம் பண்ண சரின்னு சொன்னதே பாட்டியை மனசில் வைச்சு தான்.. எனக்கு அது நல்லா தெரியும்.. என்ன உண்மை தானே ???”

விக்கித்து போய் எழுந்தமர்ந்தாள் மிதிலா.. தன் மனதின் அடி ஆழத்தில் இருந்த ஒன்று, இன்று தன் கணவன் வாயால் கூறக்கேட்டு பேச்சற்றாள்..

“ என்ன மிது உண்மை தானே?? நீ சம்மதம் சொன்னது பாட்டிக்கூடவே கடைசி வரைக்கும் இருக்கலாம், தேவை இல்லாத எந்த பிரச்சனையும் இல்லாம இருக்கணும்னு தானே.. அதனால் தானே முதல்ல நீ சம்மதம் சொன்ன ?? அதுக்கப்புறம் தானே உனக்கு என்மேல கொஞ்சம் கொஞ்சமா பாசம் வந்தது ??”

இப்படி எல்லாவற்றையும் புட்டு புட்டு வைப்பான் என்று அவள் நினைக்கவில்லை… இவன் எப்படி கண்டுகொண்டான்??? விழிகளில் கேள்வியை தொடுத்து அவனது விழி நோக்கி அம்பை பாய்ச்சினாள்..

“ எப்படி தெரியும்னு பார்கிறயா மிது ?? என்னால இதை கூட புரிஞ்சுக்க முடியாதா என்ன?? ஆனா  நினைச்சு பார்த்தா உனக்கு தான் இப்போ என்னை புரியலை மிது. இல்லைனா நீ இப்படி அடுத்தடுத்து கேள்வியா கேட்டு இருக்க மாட்ட.. நான் கல்யாணம் பண்ணனும்னு நினைச்சிருந்தா பாட்டி உன்னை விட பெஸ்ட்டா எத்தனையோ பொண்ணுங்களை கொண்டு வந்து நிருத்தியிருப்பாங்க.. ஆனா நான் கல்யாணம் பத்தி யோசிக்கும் போது என் கண் முன்னாடி வந்தது உன் முகம் தான்..

உன் அன்பு, அக்கறை எல்லாம்…  எல்லாமே எனக்கே எனக்குன்னு வேண்டும்னு தோனுச்சு.. அதான் யோசிக்காம அடுத்த நிமிஷம் உன்கிட்ட  அப்படியே கேட்டேன்.. இங்க பாரு மிது இப்படியே ஒவ்வொரு விசயத்தையும் நம்ம மாத்தி மாத்தி விளக்கம் கேட்டு எக்ஸ்ப்ளைன் பண்ணிட்டு இருந்தோம்னா அவ்வளோ தான் எத்தனை வேகமாய் நம்ம கல்யாணம் நடந்ததோ அத்தனை வேகமா அலுத்தும் போயிடும்.. சோ இதுக்கு மேல முடிவு உன் கையில் தான்..  ” என்று கூறியவன் இதற்குமேல் தன்னிடம் விளக்கம் சொல்லவோ இல்லை மேற்கொண்டு பேசவோ எதுவும் இல்லை என்பது போல படுத்துக்கொண்டான்..

இப்பொழுது திகைத்து நின்றிருப்பது மிதிலாவின் முறையானது.. அவன் சொன்னதெல்லாம் இப்பொழுது சரியென பட்டது.. அவன் பக்கம் நியாயம் இருப்பது போல தோன்றியது…

“ ஸ் !!! ஆ !!! ” தலையை பிடித்து தேய்த்துக்கொண்டாள்…

“ இப்படி ஒரு நிமிஷத்தில எல்லாத்தையும் மாத்தி லாஸ்ட்ல என்மேல குறை சொல்லி இப்படி பேசாம போய் படுத்துட்டான்.. இப்போ நான் போய் படுக்குறதா வேண்டாமா ?? படுத்தா இவன் நான் சமாதானமா போயிட்டேன்னு நினைப்பானோ ?? இல்லை வேற ஏதாவது கேட்டா ??” இப்படி அலை அலையாய் அவள் மனதில் கேள்விகள்..

ரகுநந்தனும் மிதிலாவின் முகத்தை தான் பார்த்துக்கொண்டு இருந்தான்.. அவள் முகத்தில் தோன்றும் ஒவ்வொரு பாவனையும் அவனுக்கு சிரிப்பை தந்தன.. இருவருக்குமே மனதில் அத்தனை நேரம் இருந்த இறுக்கம் மாறி ஒரு லேசான உணர்வு எழுந்தது..

“ வந்து படு மிது… நான் எதுவும் நினைக்கமாட்டேன்.. நீ கேட்ட டைம் நீ எடுத்துக்கோ..” என்று மென் புன்னகையுடன் கூறியவனை பிடிவாதமாய் ஒரு பார்வை பார்த்தாள் மிதிலா..

“சரி உனக்கு தூங்க பிடிக்கலைனா அப்படியே நில்லு.. நான் தூங்க போறேன் பா..”

“என்ன தைரியம் இவனுக்கு.. பண்ணது எல்லாம் இவன்.. ஆனா நான் என்னவோ தப்பு மாதிரி நின்னு யோசனை பண்ணிட்டு இருக்கேன்.. எல்லாம் இவனால தான்.. ஏன் நான் படுத்தா என்ன??? நானும் படுப்பேன்.. இவனுக்கு தான் தூக்கம் வருமா எனக்கும் தான் வரும்” என்று ஏட்டிக்கு போட்டியாய் எண்ணிக்கொண்டு அவளும் படுத்தாள்..

மெல்ல கண்கள் திறந்து அவள் முகம் பார்த்தான்..

“ என்ன ?? நான் ஒன்னும் நீங்க சொன்னதுக்காக படுக்கல.. எனக்கு நிஜமாவே தூக்கம் வந்துச்சு அதான்”

“ஹா ஹா !!! சான்ஸே இல்லை மிது.. ஒரிஜினல் பீஸ் தான் நீ..” என்று கூறியபடி அவள் மீது கைகளை போட்டுக்கொண்டான்..

அவன் கேலி பேசி சிரித்தது ஒருபக்கம் கோவம் வந்தாலும் அவன் முகம் மலர்ந்து சிரித்து எத்தனை நாள் ஆனது என்ற எண்ணம் தோன்றியாதால் பதிலுக்கு எதுவும் சொல்லாமல் அமைதியாய் படுத்து இருந்தாள்..

“ என்ன மிது ?? இன்னும் என்ன யோசனை?? இந்நேரம் ஏதாவது பதிலுக்கு சிலுப்புவியே??” சீண்டினான்…

“ ம்ம்ச்.. பதிலுக்கு பதில் பேசினா இந்த பிரச்சனை ஓயாது நந்தன் அதான்… அதுவும் இல்லாம இதை இதோட நிருத்திக்கிறது தான் நல்லது.. நமக்கும் கஷ்டம், அடுத்தவங்களுக்கும் கஷ்டம்…”

“அப்போ !! அப்போ .. நீ நீ என்னை மன்னிச்சுட்டியா மிது ??? ” ஆர்வமாய் ஆசையாய் அவன் குரல்..

“ நந்தன் நமக்குள்ள மன்னிப்பு எல்லாம் இடமே இல்லை.. ஜஸ்ட் ஒருத்தரை ஒருத்தர் அப்படியே அக்ஸப்ட் பண்ணிட்டு போகணும்.. எதிர்காலத்துல நானே ஏதாவது தப்பு பண்ணலாம்.. எல்லாரும் எப்பயும் ஒரே மாதிரி இருக்க முடியுமா என்ன ?? சோ இதை இதோட விடுங்க.. நாளைக்கு இருந்து நமக்கு புது லைப் அப்படின்னு மைன்ட் செட் பண்ணிட்டு படுங்க.”

இத்தனை நேரம் இல்லாத அமைதி மிதிலாவின் முகத்திலும் குரலிலும்.. ரகுநந்தனும் புரிந்துக்கொண்டான்..

”தேங்க்ஸ் எ லாட் டியர்…. ” அவள் நெற்றியில் மென்மையாய் ஒரு முத்தம்….

மிதிலா மறுக்கவும் இல்லை, விலகவும் இல்லை.. கண்கள் மூடி அந்த தருணத்தை அனுபவித்தாள்.. ஏனோ இத்தனை நாள் பட்ட துன்பம் எல்லாம் ஒன்றுமே இல்லை என்பது போல இருந்தது..

எதுவும் கூறாமல் அவன் மார்பில் முகம் புதைத்து படுத்துக்கொண்டாள்… மிதிலா இத்தனை நெருங்கியதே பெரியது என்று எண்ணி ரகுநந்தனும் அவளை அணைத்தவாறு படுத்துக்கொண்டான்… அவ்வணைப்பில் இரு உயிருக்கும் இடையில் இருக்கும் தூய்மையான நேசம் மட்டுமே இருந்தது..

இருவருக்கும் நிம்மதியான் உறக்கம்.. நீண்ட உறக்கம்… மறுநாள் காலை சதிஸ் தான் இருவருக்கும் காத்திருந்து தவித்து போனான்..

“ பாட்டி இன்னும் எவ்வளோ நேரம்… ??? நான் வேணா போய் எழுப்பவா ?? ” கிட்டத்தட்ட இருபதாவது முறையாய் ஜெகதாவிடம் கேட்டிருப்பான்..

“ அடேய் சதிஸ்…. பொறு டா.. இன்னும் தூங்கி எழுந்து வரட்டும் உனக்கு என்ன அவ்வளோ அவசரம்??”  பதில் கோகிலாவிடம் இருந்து வந்தது..

“ அக்கா இதல்லாம் ரொம்ப ஓவர் ஆமா.. அவங்களுக்கு வெயிட் பண்ணி எனக்கு சாப்பாடு கூட போடல… ஒன்னும் சாப்பாடு போடுங்க.. இல்லை அவங்களை எழுப்ப விடுங்க”

“ குட் மார்னிங் பாட்டி, அக்கா, சதிஸ்  ” என்ற குரல் கேட்டு அனைவரும் திரும்பினர்..

“ யப்பா !!! மிதிலா வந்தியம்மா… நல்ல வேளை.. அக்கா இப்போவாது எனக்கு டிபன் வைங்க ப்ளீஸ்..” என்றபடி டைனிங் டேபிளில் அமர்ந்தான் சதிஸ்..

“ அட என்ன சதிஸ் இன்னும் பிரேக் பாஸ்ட் இல்லையா ??” மிதிலாவின் தெளிந்த மலர்ந்த முகமே அனைவரருக்கும் நிம்மதியை கொடுத்தது..

ஜெகதாவும் கோகிலாவும் கடவுளுக்கு மனதில் கோடானு கோடி நன்றிகளை கூறிக்கொண்டனர்.. சதிஸிற்கு புரிந்தாலும் வெளியில் காட்டாமல் இருந்துக்கொண்டான்.. மீண்டும் மீண்டும் என்ன கிளறுவது அதான்…

“ அட மிதி அதெல்லாம் அப்போவே சாப்பிட்டான். உங்க கூட சேர்ந்து ரெண்டாவது ரவுண்டு.. அதான் இவ்வளோ அவசரம்”

“ பார்த்து டா மச்சி இங்க இருந்து போறப்போ ரெண்டு மடங்கா போகாத..  ”என்று முதுகில் தட்டி சிரித்த நண்பனை முறைத்து பார்த்துவிட்டு மீண்டும் தட்டில் கவனம் செலுத்தினான் சதிஸ்,..

இளையவர்கள் பேசியபடி உண்ணட்டும் என்று ஜெகதாவோடு கோகிலாவும் நகர்ந்துவிட்டார்…

“ என்ன மச்சி நைட் எல்லாம் தூங்கலையா முகமே ஒரு மாதிரி இருக்கு” நந்தன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்வதா வேண்டாமா என்று யோசித்து மிதிலாவின் முகத்தை வேறு பார்த்தான் சதிஸ்..

“என்ன சதிஸ்.. உடம்பு எதுவும் சரி இல்லையா என்ன ?? “

“ இல்ல மிதிலா இது.. இது வேற  ”

“ ஓ!! அப்போ நீங்க பேசிட்டு சொல்லுங்க நான் பிறகு வரேன் ” என்று நகர போனவளை நிறுத்திவைத்தான்..

“ இல்லை மிதிலா.. இது.. லிசி..”

“ அவளுக்கென்ன ??” கணவன் மனைவி இருவரின் பார்வையும் தீண்டிச்சென்றது..

“ அவளுக்கு ஒன்னும் இல்லை.. நேத்து எல்லாம் பேசியே என்னை கொன்னுட்டா.. கனடா போறாளாம்.. வர மூணு மாசம் மேல ஆகுமாம்..சந்தோசமா போயிட்டு வா தாயேன்னு சொல்லி வைக்கிறது குள்ள யப்பா!!!!” சதிஸ் கொடுத்த பாவனை மிதிலா ரகுநந்தன் இருவருக்கும் சிரிப்பை தந்தது…

இருவரின் ஒருமித்த சிரிப்பே சிதிசிற்கு சதிஸ் மனதிற்கு இனி லிசியே நேராய் வந்தாலும் எந்த  பிரச்சனையும் இருக்காது என்று தோன்றியது… அவனும் அச்சிரிப்பில் இணைந்து கொண்டான்…

 

 

சில மாதங்கள் கழித்து

“ நந்தன்.. நந்தன் இங்க பாருங்களேன்.. இந்த கலர் நல்லா இருக்கா ?? இல்லை இது நல்லா இருக்கா ??” காலை எழுந்ததில் இருந்து பாடாய் படுத்தி எடுத்துக்கொண்டு இருந்தாள் மிதிலா..

“ ஐயோ !! மிது என்னை ஒரு நீயுஸ் பேப்பர் படிக்க விடு மா.. எந்த கலரா இருந்தாலும் உனக்கு நல்லா தான் இருக்கும்”

“ ஹா!! அதெல்லாம் முடியாது.. உங்களுக்கு பொண்டாட்டியை விட பேப்பர் தான் முக்கியமா” பேப்பரை பிடுங்கி தூர போட்டு விட்டு நின்றாள்..

“ ம்ம்ச் என்ன மிது ???!” லேசான கோவத்துடன் அவன் குரல்..

“ என்ன மிதுன்னா ??? ஏன் எனக்கு ட்ரெஸ் செலக்ட் பண்றதை விட உங்களுக்கு என்ன வேலை.. ஒழுங்கா வந்து எடுத்து குடுங்க” மிரட்டிவிட்டு சென்றாள்..

“ பாருங்க பாட்டி இவளை… ” என்று ஜெகதாவிடம் புகார் பத்திரம் வாசித்தான்..

“என்னை இதில் இழுக்காத நந்து.. உன் பாடு உன் பொண்டாட்டி பாடு..” தப்பித்து கொண்டார் ஜெகதா..

“ இப்போ மட்டும் என் பொண்டாட்டி.. மத்த நேரம் எல்லாம் என் பேத்தி… ஹ்ம்ம் எல்லாம் என் நேரம்” என்று தலையில் அடித்துக்கொண்டு சென்றான்..

இது தினமும் நடக்கும் கூத்து தான்.. முன் எப்படி ரகுநந்தன் அனைத்திற்கும் மிதிலாவை அழைப்பானோ இப்பொழுது மிதிலா அவனை அழைத்துக்கொண்டு இருந்தாள்..

“ உன்னை போய் சதிஸ் நல்ல பொண்ணுன்னு சொல்றான் பாரு ”

“ ஏன் நான் நல்லா இல்லையா ?? அப்போ ஈவினிங் சதிஸ் பேசும் போது சொல்றேன்.. உங்க பிரன்டுக்கு என்னை பிடிக்கலையாம் அப்படின்னு ”

“ அம்மா தாயே நீ கொஞ்சம் சும்மா இரு.. உடனே அவன் எனக்கு கிளாஸ் எடுப்பான்..  ”

“ ஓ !! அப்போ நான் உங்களுக்கு பொண்டாட்டி இல்லையா அம்மா தாயேன்னு சொல்றிங்க ??”

“ யம்மா!!! எனக்கு எல்லாமே நீ தான்.. போதுமா.. இந்தா இதை கட்டிக்கோ..”

“ ஹ்ம்ம் இதை மட்டும் கட்டுனா போதுமா ?? அப்போ உங்களை கட்டிகிட்டேனே என்ன பண்றது ??”

“ மிது மா ப்ளீஸ் ஐம் பாவம்..”

“ சரி சரி அழாதிங்க.. குட்டி பாப்பாக்கு சாயங்கலாம் வந்து ஸ்வீட் தரேன் “ என்றவளை பிடித்து

“ நீ சாயங்கலாமா தா நான் இப்போ தரேன்” என்று கூறி இதழ் பொருத்தினான்..

“ ஹ்ம்ம் இவ்வளோ நேரம் என்ன பண்ணிங்க, கிளம்பும் போது தான் எல்லாம் “ என்று சலித்தவள்  

“நந்தன் ஈவினிங் வந்து என்னை கூப்பிட்டிட்டு போங்க.. என்ன  மறந்திட கூடாது” என்றாள்..

“ மிது டியர் நீ ரொம்ப முன்னேறிட்ட .. நான் பண்ணைல இருந்து வீட்டுக்கு வந்து தென் உன்னை அங்க வந்து பிக் அப் பண்ணனும்.. நீயே வந்திடேன்…”

“ அதெல்லாம் எனக்கு தெரியாது.. நீங்க வராம நான் வீட்டுக்கு வரமாட்டேன்…” என்று கூறி பழிப்பு காட்டி போனவளை என்ன செய்யலாம் என்பது போல பார்த்தான்..

ஆனால் அவனுக்கு சிரிப்பு தான் வந்தது..  மிதிலாவிடம் முன்பிருந்த துள்ளல், உற்ச்சாகம் மீண்டும் திரும்பியிருந்தது.. கூடவே சேட்டையும் கூடியிருந்தது.. கோகிலா தான் சில நேரம் சிக்கிக்கொண்டு முழிப்பார்..   

“ மிதிலா ஆனாலும் இப்படி ஒரு மாற்றம் ஆகவே ஆகாது டி.. பாவம் உன் புருஷன் உள்ள அழுகுறேன் வெளியே சிரிக்கிறேன் அப்படிங்கற நிலைமை தான் போல”

“ அக்கா இதெல்லாம் டூ மச்.. அதுக்காக எங்க ரூம் குள்ள நடக்குறதை எல்லாம் வெளிய படம் பிடிச்சா காட்ட முடியும்..  ”   என்று கண்ணடித்துவிட்டு சென்றாள்..

“ அடிப்பாவி !!!” வாயடைத்து நின்றார் கோகிலா..

அறைக்குளே “ உனக்கு கோகிலா அக்காவை வம்பு பண்ணலைனா தூக்கம் வராதே..” என்றபடி அவளை அணைத்தான்..

“ உங்களுக்கு என்னை இப்படி கட்டி பிடிக்கலைனா தூக்கம் வராதே.. ” பதிலுக்கு பதில் தான்..

“ ஹ்ம்ம் ஆமா!! கட்டி மட்டும் பிடிச்சா போதுமா ?? இதெல்லாம் சும்மா தூங்குறதுக்கு முன்ன பால் குடிக்கறது மாதிரி.. ”

இதென்ன புது கதை என்பது போல பார்த்தாள்..

“ ஆமா டியர்.. ஹக் பண்றது எல்லாம் ஸ்கூல் பிள்ளைங்க விஷயம்…   ”

“ ஹா !!! அப்புறம்… ”

“ அப்புறம் எல்லாம் நம்ம ஆராய்ச்சி பண்ண வேண்டிய விஷயம்.. சோ டோன்ட் டிஸ்டர்ப்… ”என்றவன் அதற்கு மேல் அவளை பேச விடவில்லை…

            

 

                            

 

      

  

                                         

                                  

                           

   

                   

 

Advertisement