Advertisement

நேசம் –  2 

“ ஹேய்!! ராக்கி…. என்ன மேன் இப்படி உட்கார்ந்து இருக்க.. ராக்கி… ராக்கி…” என்று தன் நண்பன் காது அருகில் கத்தினான் சதிஸ்…

தன் நண்பனின் வருகையை உணர்ந்தாலும், அவனது வார்தைகளை கேட்டாலும் அவனுக்கு பதில் கூறாமல் ஒரு வெற்று பார்வை பார்த்தான் நண்பர்களால் ராக்கி என்று அழைக்கப்படும் ரகுநந்தன்..

“ ராக்கி உன்னை தான் ட்யுட்… என்ன மேன் நீ.. இன்னும் எத்தனை நாள் இப்படியே சோக கீதம் வாசிக்க போற.. விடுற கண்ணீர்ல டெக்சாஸ் மாகாணமே மிதக்க போகுது…” என்று மீண்டும் அவனை சகஜமாக்கும் முயற்சியில் இறங்கினான் சதிஸ்..

அதற்கும் ஒரு வெற்று பார்வை பதில்..

“ ம்ம்ச்… என்ன டா இது.. திஸ் இஸ் நாட் யுவர் நேச்சர்.. நடந்தது நடந்து போச்சு ராக்கி.. அதை யாராலும் மாத்த முடியாது.. சொன்ன கேளு டா கொஞ்சம் வெளிய வா…” என்று தன் நண்பனை வித விதமாக சமாதானம் செய்து பார்த்தான் சதிஸ்.. நீண்ட நேர போராட்டத்தின் பயனாக ரகுநந்தன் வாய் திறந்தான்..

“ என்னால முடியல டா… கொஞ்சம் கூட என்னால இதை தாங்க முடியல“ என்றான் மிகவும் கவலை தோய்ந்த முகத்துடன்..

எப்பொழுதும் உற்சாகத்துடன், துள்ளலுடன் நண்பர்களோடு பேசும் ராக்கி, முகத்தில் மறையாத புன்னைக்கு சொந்தகாரன் ராக்கி, யாரும் முடியாது என்று கூறும் விசயங்களை சவாலாய் எடுத்து முடித்துகாட்டும் ராக்கி.. இன்று வாழ்வையே வெறுத்து ஒரு இருட்டு அறைக்குள், யாரையும் பார்க்க முடியாமல், பேச பிடிக்காமல் இருப்பதை கண்டு மனம் வருந்தினான் சதிஸ்…

“ என்ன டா நீயே இப்படி இருந்தா எப்படி டா ராக்கி.. எங்களுக்கு எல்லாம் ரோல் மாடலே நீதான்.. ஆனா உன்னைய இந்த மாதிரி கொஞ்சம் கூட எங்கனால பார்க்க முடியல டா.. சொன்னா கேளு வா கொஞ்ச நேரம் வெளிய போய்ட்டு வரலாம் “ என்று கைகளை பிடித்து இழுத்தான்..

“ ஐ ஹேவ் டு கோ இந்தியா…” என்ற பதிலை கேட்டு அதிர்ச்சியில் நின்றான் சதிஸ்..

“ என்.. என்னடா சொன்ன.. இந்.. இந்தியா போக போறியா என்.. என்ன திடீர்னு…??”

“ அம்மாவோட கடைசி ஆசை…”

“ அம்… அம்மாவோட கடைசி ஆசையா.. ஆனா இது.. இது எப்படி டா உனக்கு தெரியும்.. நீ தான் அந்த டைம்ல அம்மா கூட இல்லையே ??” என்று கூறியவன் தன் நண்பனின் முகத்தை கண்டு தலையில் அடித்துகொண்டான்..

“சாரி.. சாரி டா மச்சி.. நான்.. நான் எதோ ஒரு நியாபகத்துல இப்படி சொல்லிட்டேன்.. சாரி… ப்ளீஸ்.. இது இந்த வார்த்தை நான் சொல்லி இருக்க கூடாது தான்.. பட் நான் வேணும்னே சொல்லல ராக்கி.. ப்ளீஸ்…” என்று பரிதவித்தான் சதிஸ்..

“ ஹ்ம்ம் ஆனா உண்மை அது தானே சதிஸ்… நான் கடைசி நேரத்தில அம்மா கூட இல்லையே.. அந்த நேரத்தில அம்மா என்னைய எவ்வளோ தேடினாங்கலோ… என்னால அதை நினைச்சா தான் டா சதிஸ் தாங்கவே முடியல..” என்று பேசியவனை முதலில் ஆறுதல் கூற எண்ணியவன், பிறகு அமைதி காத்தான்

“ அவன் மனசில இருக்கிறது எல்லாம் வெளிய வரட்டும்” என்று நினைத்துகொண்டான்..

“நான் எத்தனை சுயநலமா இருந்து இருக்கேன் சதிஸ்.. அம்மாக்கு முடியலைன்னு தெரிஞ்சும், நான் அவங்க கூட இருக்காம.. நான்… நான் ..ச்சி.. என்னைய நினைச்சாலே எனக்கு அருவருப்பா இருக்கு டா.. டாக்டர் எனக்கு நிறைய டைம் கால் பண்ணியிருக்காங்க.. பட் நான் தான் கவனிக்காம இருந்துட்டேன்..”

“ஆனா சதிஸ் நான் வேணும்னே அப்படி செய்யல டா.. அம்மாவை அந்த கோலத்துல ஹாஸ்பிடல்ல பாக்க ஒருமாதிரி இருந்தது டா. அதான் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு வரலாம்னு லிசி கூட போனேன்.. ஆனா… அதுவே நான் அம்மாவை கடைசியா பார்க்கிறதுன்னு தெரியாமா போச்சு டா…” என்று அதற்கு மேல் பேச முடியாதவனாய் இருளை வெறிதான் ரகுநந்தன்..

ரகுநந்தன் இருபத்தி எட்டு வயது நிரம்பிய இளைஞன்.. எம்.பி.ஏ படித்து ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்கிறான். கை நிறைய சம்பளம்..      டெக்சாஸ் மாகணத்தில் தன் தாயோடு வசித்து வருகிறான். அவனை பொறுத்த வரைக்கும் அவனது அன்னை தான் எல்லாம்.. தாய் சொல்வதை மனதிற்கு பிடிக்கவில்லை என்றாலும் கூட மீற மாட்டான்.. அவனுக்கு தெரிந்தது எல்லாம் அவனது அன்னை லீலா, அதன் பிறகு நண்பர்கள், இப்பொழுது ஒரு புதிய உறவு லிசி..

லிசி ஆங்கிலோ இந்திய பெண்.. ஒரு ஆறு மாதங்கள் முன்பு தான் இவர்கள் வீட்டு அருகில் குடிவந்தனர்.. லீலா பொதுவாக எல்லாரிடமும் நன்றாய் பழகுவதால் லிசியின் குடும்பமும் இவர்களோடு நன்றாய் உறவாடினர்..

நாட்கள் இப்படியே செல்ல ரகு, லிசி இருவருமே நட்பையும் தாண்டி வேறு எதுவோ தங்களுக்குள் இருப்பதை உணர்ந்துகொண்டனர்.. ரகுநந்தனிற்கு லிசியை பிடித்து இருந்தாலும் அதை தன் தாய் தான் முடிவு செய்யவேண்டும் என்று பொறுமை காத்தான்.

ஆனால் லிசிக்கு இப்படிப்பட்ட உணர்வுகள் எல்லாம் கிடையாது. அவளை பொறுத்தவரை அவளுக்கு சரியென்று பட்டதை செய்வாள், சொல்வாள், அதன்படி நடப்பாள்.. அவளுக்கு பெரிதாய் குடும்பத்தின் மீது எல்லாம் பற்று பாசம் கிடையாது..

இப்படி பட்டவளுக்கு ரகுநந்தனை எப்படி பிடித்தது என்று தான் தெரியவில்லை.. இதை அவளே அவனிடம் சொல்லியும் இருக்கிறாள்… ரகு தன் தாயிடம் முடிவை விட்டதற்கு இதுவும் ஒரு காரணம். என்னதான் தனக்கு லிசி பிடித்து இருந்தாலும் அவளை தன் குடும்பத்திற்கு ஏற்றவாறு நடந்தகொள்ள சொல்ல அவனால் முடியவில்லை..

“ ஹேய்!!! என்ன மேன் நீ இங்க வந்து இத்தனை இயர்ஸ் ஆச்சு இன்னும் ஒரு இந்தியன் மாதிரியே பீகேவ் பண்ணுற.. என்னால இந்த இடியாட்டிகா எல்லாம் இருக்க முடியாது…” என்று முகத்தில் அடித்த மாதிரி பேசிவிடுவாள்..

ஆனால் அவள் என்னதான் இப்படி நடந்து கொண்டாலும் இவன் அடுத்த சில நொடிகளில் அவளை தேடி செல்வான்.. இந்த விசயத்தில் லிசிக்கு தன்னை நினைத்து மிகவும் பெருமை.. ரகுநந்தன் தன் கைக்குள் இருக்கிறான் என்று பெருமை அடிப்பாள் நண்பர்களிடம்..

இப்படி நாட்கள் சென்றுகொண்டு இருக்கும் போது தான் ஒருநாள் திடீரென்று லீலாவிற்கு மயக்கம் வந்தது.. அடித்து பிடித்து ரகு அவரை மருத்தவ மனையில் சேர்த்தான்.. மருத்துவர்கள் பரிசோதித்த பின் லீலாவிற்கு அதிக பட்ச மன அழுத்தத்தினால் வந்த மயக்கம் என்று கூறினர்.. இதை கேட்டு ரகுநந்தனிற்கு அதிர்ச்சி..

எப்பொழுதும் சிரித்த முகமாய் இருக்கும் என் அன்னைக்கு மன அழுத்தமா?? என்று உறைந்து நின்றான்.. அவனை பொறுத்த வரை அவனும் அவன் தாயும் அவர்கள் உலகில் சந்தோசமாக இருப்பதாய் நினைத்துகொண்டு இருந்தான்.. ஆனால் அது அப்படியல்ல, லீலா எதையோ நினைத்து மனதின்னுள்ளே குமைந்து கொண்டு இருக்கிறார் என்று தெரியவும் ரகுவிற்கு சம்மட்டியால் அடித்தது போல இருந்தது..

“ எப்படி.. எப்படி இது நடக்க முடியும் ?? என் அம்மா மனசில கவலையா ?? நோ.. கூடவே கூடாது.. நான் இருக்கும் போது எப்படி அம்மா கவலை படலாம்.. அவங்க கண் திறக்கட்டும், முதல் வேலையா அம்மா மனசில இருக்கிறதை தெரிஞ்சுக்கணும் “ என்று நினைத்துகொண்டான்..

அவனது எண்ணங்கள் அவன் தாயின் மனதை எட்டியதோ என்னவோ, சிறிது நேரத்தில் கண் விழித்தார்..அவரது கைகளை பிடித்துகொண்டு

“அம்மா.. அம்மா இப்ப எப்படி இருக்குமா ??” என்று சிறு குழந்தையாய் மாறி பதறினான்.. ஆனால் லீலாவோ ஒரு சிரிப்பை மட்டும் பதிலாய் கொடுத்தார்..

“ என்னம்மா நீ?? கொஞ்ச நேரத்தில என்னைய இப்படி பயப்பட வச்சுட்ட.. உனக்கு என்னம்மா பிரச்சனை??எதுவா இருந்தாலும் என்கிட்டே சொல்லுமா?? ப்ளீஸ் “ என்று கூறிக்கொண்டு இருக்கும் போதே மருத்துவர் வந்து அவரை தொல்லை கொடுக்காமல் அதே நேரம் அவர் மனம் பதற்றமடையும் படி எதையும் சொல்லவோ பேசவோ கூடாது என்று சொல்ல வேறு வழியில்லாமல் வெளியே எழுந்து சென்றான் ரகுநந்தன்..

மருத்துவமனையில் கட்ட வேண்டிய தொகையை கட்டிவிட்டு, வேண்டிய மருந்துகளை வாங்கிகொண்டு வந்தவனிற்கு தாயின் உறங்கும் காட்சியே கிடைத்தது..

“ ஹ்ம்ம் நல்லா தூக்கம் போல. சரி தூங்கட்டும்”என்று அமர்ந்தவனுக்கு அப்பொழுது தான் நினைவு வந்தது.

“ ச்சே லிசிகிட்ட நம்ம சொல்லவே இல்லையே” என்று தன்னை தானே நொந்துகொண்டு அவளுக்கு அழைத்து நடந்ததை கூறினான்..

“ ஹேய் ராக்கி… வயசானாலே இப்படி எல்லாம் நடக்கும்.. இதுக்கு போய் நீ ஏன் இவ்வளோ டென்சன் ஆகுற டியர். பி கூல்… டோன்ட் வொர்ரி.. சரி இப்போ எனக்கு ஏன் கால் பண்ண ??” என்றாள் விட்டேத்தியாக..

ரகுநந்தனிற்கு  மனதில் சுருக்கென்றது.. “ எவ்வளோ டென்ஷன்ல இருக்கோம், சரி இவகிட்ட பேசினா ஒரு ஆறுதல் கிடைக்கும் கூட இருப்பான்னு பார்த்தா இப்படி பேசுறா “ எண்ணியவன் “ ஹா நத்திங் பேபி.. ஜஸ்ட் உன்கிட்ட இன்போர்ம் பண்ண தான் கூப்பிட்டேன் “ என்று பதில் உரைத்தான்..

“ ஹோ !! ஓகே குட்.. தென் ஆன்ட்டிய கேட்டேன்னு சொல்லு. வீட்டுக்கு வரவும் வரேன்.. என் பிரன்ட் தெரியும்ல மேத்தியு அவனுக்கு நெக்ஸ்ட் வீக் மேரேஜ், இப்போ பார்ட்டில இருக்கேன்.. பை “ என்று கூறி வைத்துவிட்டாள்..

ஒரு சில நொடிகள் தன் கைபேசியையே பார்த்தவன் பேசாமல் கண்கள் மூடி சாய்ந்து அமர்ந்து அப்படியே உறங்கியும் விட்டான்..

இப்படியாக இரண்டு நாட்கள் மருத்துவமனையில் கழிய, ரகு லிசிக்கு அதன் பிறகு அழைக்கவும் இல்லை..  அவனுக்கு தன் தாயின் சோர்ந்த முகத்தை பார்க்க முடியவில்லை.. யாரிடமாவது மனம் விட்டு பேச வேண்டும் போல இருந்தது.. இந்த நேரம் பார்த்து சதிஸ் வேறு ஊரில் இல்லை..

லிசியின் மனதில் என்ன தோன்றியதோ என்னவோ திடீரென ஒரு பூங்கொத்துடன் மருத்துவமனை வந்தாள்.. வந்தவள் லீலாவிடம் சிறிது நேரம் பேசினால். அதற்கும் அவரிடம் ஒரு புன்னகையே.. 

“ ஓகே ஆன்ட்டி…. கெட் வெல் சூன்.. தென் நான் ராக்கிய நான் வெளிய கூட்டிட்டு போறேன், பாருங்க அவன் முகமே எப்படி இருக்குன்னு. கொஞ்சம் வெளிய வந்தா ஹி வில் பீல் பெட்டர் “ என்று கூறி ரகுவின் முகம் பார்த்தாள்..

அவனோ மறுப்பாய் தலையசைத்து தன் தாயின் முகம் பார்த்தான்.. லீலா மௌனமாக தலையசைத்து ரகுநந்தனை போய் வர சொன்னார்..

“ இல்ல மா “ என்று தயங்கியவனை

“ தேங்க்ஸ் ஆன்ட்டி..” என்று கூறி கை பிடித்து இழுத்து சென்றாள் லிசி..

வெளியே வந்தவன் “ வாட் லிசி அம்மா தனியா இருக்காங்க.. லீவ் மீ…”

“ ஹேய் ராக்கி.. உன்னைய பார்த்து முழுசா த்ரீ டேஸ் ஆச்சு டார்லிங்“ என்று கூறி அணைத்தாள்..

அவனை மட்டும் அணைக்கவில்லை, அவனது கைபேசியை வாங்கியும் அனைத்துவைத்தாள். அவனுக்குமே ஒரு ஆறுதல் தேவை இருந்தது.. தன் கவலைகள் மறந்து அவனும் அவளோடு வெளியே சென்றான்.. ஆனால் அவனுக்கு அப்பொழுது தெரியவில்லை இது தான் தன் அன்னை தனக்கு கொடுத்த கடைசி விடை என்று…

திரும்பி வந்தவனுக்கு கிடைத்த செய்தியோ பெரிய அதிர்ச்சி கொடுத்தது.. இடிந்து போய் அமர்ந்துவிட்டான்.. தனக்கென்று இருந்த ஒரே உறவுஇ இப்பொழுது இல்லை..

“ ஐயோ !!! அம்மா !!!!!!” என்று கதறி அழுதான்.. விஷயத்தை கேட்ட சதிஸ் போட்டதை போட்டுவிட்டு ஓடி வந்தான். அவனுக்கு இப்படி துடிக்கும் நண்பனிற்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. 

என்னதான் அழுதாலும் துடித்தாலும் காலமும் நேரமும் யாருக்கும் காத்திராது தானே.. லீலாவின் இறுதி சடங்குகள் முடிந்தன..

“ டேய் கடைசி வரைக்கும் அம்மா மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்காமயே போயிட்டேன் டா.. நான் அன்னிக்கு வெளிய போயிருக்க கூடாது டா…” என்று தினமும் குமுறினான்..

இப்படி பட்ட அவனது மன குமுறல் அந்த இறைவனை எட்டியது போல, அவனது மனதை சிறிது அமைத்தி படுத்த ஒருவரை அனுப்பி வைத்தார்.. ஆனால் அவர் கொண்டுவந்த செய்தி அவனுக்கு அமைதி கொடுத்ததா, இல்லை மேலும் அவனது வலியை அதிகப்படுதியதா தெரியவில்லை..

ஒருவார விடுமுறைக்கு பின் அன்று தான் தன் அலுவலகம் சென்று இருந்தான். வேலையில் நாட்டம் இல்லை.. தன் முன் இருந்த கணினியை வெறித்து பார்த்தபடி இருந்தான்.. அவனது மேஜையில் இருந்த தொலைபேசி அடித்தது..

தன் நினைவுகளில் இருந்து கலைந்தவன், தொலைபேசியை எடுத்து பேசினான்..

“ ஹலோ !!!”

“டாக்டரா??”

“ ஓகே ஓகே என் கேபினுக்கு வரச்சொல்லுங்க…” என்று கூறி யோசனையில் ஆழ்ந்தான்…

மூன்று நிமிட இடைவெளிக்கு பின் அவனது அன்னைக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் வந்தார்..

“ ஹாய் ராக்கி… ஹவ் ஆர் யு ??” என்று கை குழுக்கியவற்க்கு ஒரு வெற்று புன்னகையே பதிலாய் கொடுத்தான்..

அதை புரிந்து கொண்ட அவரும் “ ஐ நோ யங் மேன்… யு ஆர் இன் சம் திங்கிங் அபௌட் யுவர் மாம்… “ என்றவரை அதிர்ந்து பார்த்தான்..

“ டாக்டர்!!!!!”

“ எஸ்… ஐ நோ… பட் இ ஹாவ் ஒன் சொலுசன்.. திஸ் இஸ் யுவர் மாம்ஸ் லெட்டர் போர் யு… ஷி டோல்ட் மீ டு கிவ் திஸ் அப்ட்டர் ஹேர் டெத்..” என்று கூறும் பொழுதே ரகுநந்தனிற்கு முகத்தில் சொல்ல முடியாத வேதனை கொடுத்தது..

மேலும் சில நொடிகள் பேசியவர் தான் கொண்டு வந்த கடிதத்தை கொடுத்துவிட்டு  போனார். அதையே வெறித்து பார்த்தபடி அமர்ந்து இருந்தான்..

அவனது மனமோ “ இத்தனை வருஷம் ஏன் அம்மா என்கிட்டே எதுவுமே சொல்லாம இப்படி கடைசி நேரத்தில ஒரு லெட்டர் கொடுத்து இருக்காங்க.. அப்படி என்ன என்கிட்டே சொல்ல நினைச்சாங்க.?? கடவுளே இன்னும் என்ன என்ன சோதனை இருக்கோ.. அம்மா அப்படி என்னதான் என்கிட்டே இருந்து மறைச்சிங்க??” என்று நொந்தபடி கடிதத்தை பிரித்தான்.

பிரித்து படித்தவனின் கண்கள் கலங்கியதோ. மனம் குழம்பியதோ தெரியவில்லை..  ஆனால் சிலையென அமர்ந்து இருந்தான்..

இப்படியே தன் நினைவுகளில் மூழ்கி இருந்தவனை சதிஸ் உலுக்கி குலுக்கினான்..

“ டேய்… டேய்… ராக்கி…”

“ ஹா !!! என்னடா ??”

“ என்ன டா இப்படி உறைஞ்சிட்ட… என்ன மேன்..??”

“ இல்லடா அது.. அது வந்து…”

“ என்ன  சொல்லு…”

“ அம்மா ஒரு லெட்டர் கொடுத்து இருக்காங்க…..”

“ என்ன ?? என்ன லெட்டர் ?? யார் கொடுத்தா ?? எப்போ டா.. நானும் இங்க தானே இருந்தேன் ??”

“ நேத்து டாக்டர் வந்து கொடுத்துட்டு போனார்..”

“ ஒ !! சரி ராக்கி என்ன இருந்தது லெட்டர்ல??”

சதிஸ் கேட்டதும் மீண்டும் அந்த கடிதத்தில் இருந்தவை அவன் மனதில் ஓடியது.. அக்கடிதத்தில் இருந்தது எல்லாம் இது தான்..

மை டியர் ரகு, 

       எனக்கு தெரியும் இப்போ உன் மனசு எவ்வளோ கஷ்டப்படும்னு.. ஐம் சாரி மை சன்.. ஆனா நான் என்ன செய்ய முடியும்?? என் விதி இவ்வளோதான்.. அனுபினவன் கூப்பிட்டா போய் தானே ஆகணும்..

இனிமே என்னை பத்தி பேச எதுவும் இல்லை.. ஆனா ஒரு அம்மாவா உனக்கு சொல்ல என்கிட்டே நிறைய இருக்கு.. உன் மனசில நிறைய கேள்விகள் இருக்கும்.. நீ நினைக்கலாம் இதை எல்லாம் இத்தனை நாள் சொல்லாம இப்போ ஏன் சொல்றேன்னு. பட் எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரணுமே ரகு..

நீ நினைக்கிற மாதிரி அம்மா உன்னைய தனியா விட்டு போகல டா. உனக்குன்னு ஒரு சொந்தம் இந்தியால இருக்கு.. நீ தனி ஆள் இல்ல ரகு.. உன்னோட ரத்த சொந்தம், உன் பாட்டி  உனக்காக காத்துகிட்டு இருக்காங்க ரகு.

நீ இங்க வளர்ந்தவன் உன்னைய திடிர்னு இந்தியா போக சொன்னா உனக்கு கஷ்டமா தான் இருக்கும். ஆனா வாழ்கையில நான் பண்ண தப்பை நீ பண்ணிடாத. உன் அப்பா இறந்த பிறகு அங்க இருக்க பிடிக்காம உன்னையும் கூட்டிட்டு இங்க வந்துட்டேன். அப்போ என்னை பத்தி மட்டும் தான் யோசிச்சேன். அதுனால அந்த முடிவு எனக்கு சரியா பட்டது. ஆனா நாள் ஆக ஆக நான் ரொம்ப தப்பு பண்ணிட்டேன்னு உணர ஆரம்பிச்சேன் ரகு.. உன்கிட்ட இதை எல்லாம் சொல்லி நம்ம இந்தியா போகணும்னு நினைக்கும் போது, நான், நான் இப்படி உன்னைய விட்டு போற சூழ்நிலை டா..

ஆனாலும் பரவாயில்ல நீ போ.. நான் விட்டு ஓடி வந்த உறவு கிட்ட நீ போ.. நான் செய்யாம விட்ட பொறுப்பை, கடமையை இனி நீ செய் ரகு.. உன் அம்மாக்காக டா.. உன் மீதி வாழ்க்கை அங்க இருந்தா என் ஆன்மா ரொம்ப சந்தோசப்படும் ரகு.. உன் பாட்டி உன் மேல ரொம்ப பாசம் அவங்களுக்கு.. அவங்ககிட்ட நான் மன்னிப்பு கேட்டேன்னு சொல்லு ரகு.. உனக்கான ஒரு சந்தோஷமான எதிர்காலம் அங்க இருக்கு.. நீ தனி இல்ல ரகு.. அம்மா எது பண்ணாலும் அது உன் நல்லதுக்கு தான் ரகு மா.. நீ எங்க போகணும், யாரை பார்க்கணும் இதை பத்தி எல்லா விபரமும், என் பீரோல டைரில இருக்கும் ரகு..

எப்பவும் இந்த அம்மாவோட ஆசிர்வாதமும், பிரார்த்தனையும் உனக்காக இருக்கும் ரகு..

 

                                                              இப்படிக்கு.

உன் அம்மா….. 

தன் நண்பன் கூறியதை அமைதியாக கேட்டபடி இருந்தான் சதிஸ்.. கேட்டு முடித்தவன் “ சோ கன்போர்ம் நீ இந்தியா போறது???”

ஆமாம் என்பது போல தலையை ஆட்டினான் ரகுநந்தன்..

“ ஹ்ம்ம் அப்போ லிசி…??” என்று கேட்டவன் சுற்றி சுற்றி பார்த்து “ டேய் லிசி எங்க டா?? அவ உனக்கு ஆறுதலா உன்கூட இருப்பானு நினைச்சேன்!!!”

“ ஹ்ம்ம் அவ சார்லஸ் கூட அவுடிங் போயிருக்கா…” ஒரு வெற்று குரலில் பதில் கூறினான் ரகுநந்தன்..

“ என்ன அவுடிங்கா.. என்ன மேன் சொல்ற.. இந்நேரம் உன்கூட இல்லாம அப்படி என்ன” என்று கேட்டு கொண்டு இருக்கும் போதே

ரகு “ம்ம்ச்..” என்று சலிப்புற்றான்..

“ என்னடா…??”

“ ஷி ப்ரேக் அப் வித் மீ….”

“ வாட் பிரேக் அப்பா…?? என்ன சொல்ற ??” அதிர்ந்து விழித்தான்..

“ எஸ்.. கல்யாணம் பண்ணிட்டு இந்தியா போகலாம்னு சொன்னேன்.. அவ உன் அம்மாதான் கடைசி நேரத்துல இருந்த டென்சன்ல எதோ கிறுக்கி இருக்காங்கன்னு சொன்னா நீயும் பூலிஷ் மாதிரி பீகேவ் பண்ணற, லுக் நம்ம இப்படியே இருக்கலாம். கல்யாணம் எல்லாம் வேணாம், ஜஸ்ட் நம்ம நம்மலா இருக்கலாம். எப்போ இந்த ரிலேஷன்ஷிப் போர் அடிக்கிறதோ அப்போ பை சொல்லிடலாம்ன்னு  சொன்னா “ என்று நிறுத்தியவன் மீண்டும் தொடர்ந்தான்.

“ நான் இதுக்கு சம்மதம் சொல்லல.. உனக்கும் எனக்கும் ஒத்து வராதுன்னு  சொல்லிட்டு போயிட்டா “ என்று கூறி மீண்டும் இருளை வெறிதான்..

சதிஸ்க்கு அவனை பார்க்கும் போது மிகவும் கஷ்டமாக இருந்தது.. “ ஹ்ம்ம் விடு டா அவளுக்கு கொடுப்பினை இல்லை.. சரி எப்போ கிளம்பனும்.. என்ன பார்க்கிற உன்கூட நானும்  வரேன்.. அங்க தனியா போய் நீ என்ன செய்ய போற ??”

“ வேணாம் சதிஸ்.. நாளைக்கு பிளைட்.. டே ஆப்டர் டுமாறோ நான் அங்க இருப்பேன்.. ஐ வில் மேனேஜ்..  நான் அங்க போய் உன்கிட்ட பேசுறேன்.. இனிமே லைப்ப நான் தனியா தான் பேஸ் பண்ணனும்..”

சதிஸ் புரிந்துகொண்டான் இதற்குமேல் தான் என்ன கூறினாலும் தன் நண்பனின் காதுகளில் அது விழாது என்று..

“ ஓகே நாளைக்கு நீ போறவரைக்கும் நான் இங்க இருக்கேன் ராக்கி..” என்று கூற, சிறிது நேரம் பேசிவிட்டு இருவரும் சேர்ந்து வீட்டை ஒதுங்கு செய்தனர்.. ரகுவிற்கு வீட்டின் ஒவ்வொரு பொருளையும் பார்க்கும் போது மனதில் பிரளயமே வந்துவிடும் போல இருந்தது..  

நாளை என்பது ரகுவிற்கு கண் இமைக்கும் நேரத்தில் வந்தது போல இருந்தது. அவனை வழியனுப்ப சதிஷை தவிர வேறு யாரும் வரவேண்டாம் என்று கூறிவிட்டான்..

தன்னையே திரும்பி திரும்பி பார்த்தபடி சோகமாய் கை அசைத்து செல்லும் தன் நண்பனுக்காக பிரார்த்தனை செய்தான் சதிஸ்.

                              

                           நேசம் – தொடரும்

            

                                                  

   

          

                                                       

           

                                            

Advertisement