Advertisement

                                   நேசம் – 18

ஆதவன் இவ்வுலகை ஆள வந்து வெகுநேரம் ஆனபின்னும் ரகுநந்தனுக்கும், மிதிலாவுக்கும் மட்டும் இன்னும் பொழுது விடியவில்லை. வெறும் உறக்கமில்லையே ஆனந்த உறக்கம்.

ரகுநந்தனுக்கோ கைகளில் இருந்து தன் மனைவியை விடுவிக்க மனமில்லை, மிதிலாவிற்கோ விலக மனமில்லை… இவ்விரண்டு மனங்களும் சேர்ந்து இன்னும் தங்கள் காதல் நிகழ்வுகளில் இருந்து வெளிவராத காரணத்தினால் அவர்களை பொருத்தமட்டில் இன்னும் பொழுது விடியவில்லை..

இதழில் உறைந்த புன்னகையோடு தன் கணவனிடம் இன்னும் நெருங்கி பாடுத்தாள் மிதிலா.. இந்த நெருக்கம் போதாது இன்னும் கொஞ்சம் வேண்டும் என்பதுபோல அவனும் தன்னோடு மேலும் இறுக்கிக்கொண்டான்..

அறைக்குள் பரவிய வெளிச்சம் அவளது உறக்கத்தை சற்றே தொல்லை செய்தது.. கண்களை திறக்க முடியாமல் திறந்து பார்த்தாள் மிதிலா.. ஆனாலும் அவளால் முடியவில்லை.. கண்கள் கூசியது..

“ என்ன இவ்வளோ வெளிச்சமா இருக்கு.. ரொம்ப நேரம் ஆச்சோ !!!” என்று எண்ணியபடி கடிகாரம் பார்த்தாள். அது மணி ஒன்பதை காட்டவும்   திடுக்கிட்டாள்..

அவளது திடுக்கிடல் ரகுநந்தனிடமும் தொற்றியது… “ என்ன டியர்….” என்று மேலும் அவளைஇறுக அணைத்தான்..

கணவனின் அணைப்பு அவளை கட்டிலில் சாய்த்தாலும் கடிகாரன் காட்டிய நேரம் அவளை எழவே தூண்டியது..

“ நந்தன்…” என்று அழைக்க திரும்பினாள், முதல் நாள் இரவு அவன் செய்த வேலையால் வெட்கம் தடுத்தது.

“ என்ன செய்வது ??” என்று யோசனையில் இருக்கையில் மிதிலாவின் போன் அலறியது.. எடுத்து பார்த்தால் கோகிலா தான்

அவசரமாய் எடுத்து “ அக்கா… நான்.. நாங்க.. நை.. நைட்டு லேப் ல படம் பார்த்தோம் கா.. தூங்க ரொம்ப நேரம் ஆச்சு… அதான்.. சாரி கா.. இன்னும் “ என்று அவள் என்னென்னவோ கூறி கிளறி மூடுகையில்

கோகிலா என்ன கூறினாரோ வாயடைத்து போய் போனை வைத்தாள்..

“ நான் சொன்னது நம்ப முடியாமலா இருக்கு.. ச்சே ரொம்ப உளரிட்டேனோ…” என்று தன்னை தானே நொந்த படி மீண்டும் கணவன் முகம் நோக்கினாள்..

“ ஹப்பப்பா !!!! நேத்து இந்த வெள்ளைக்காரனுக்கு வந்த கோவமென்ன?? அப்புறம் வந்த….“ என்று நினைக்கும் பொழுதே அவள் முகம் சிவந்தது.. அவளது முகம் சிவந்தாலும் மனமோ முதல் நாள் இரவு நடந்ததை நினைத்து பார்த்தது..

ரகுநந்தன் அப்படி ஒரு கேள்வி கேட்கவுமே மிதிலாவிற்கு பகீரென்றது..

“ அப்போ அந்த நந்தினியோட மாமா வந்து பேசலைனா நீ நந்தினி ஓட அண்ணனை கல்யாணம் பண்ணிருப்ப அப்படிதானே ??” என்று நந்தன் கேட்கவும் மிதிலா விக்கிதான் போனாள்..

இதற்கு என்ன பதில் கூற முடியும்.. இந்தியாவில், அதுவும் தமிழ் நாட்டில் எத்தனை தான் படித்து முன்னேறியிருந்தாலும் ஒரு பெண் வயதுக்கு வந்ததும் அடுத்த சில ஆண்டுகளிலேயே திருமண பேச்சுதானே நடக்கிறது.. பெற்றோர்கள் சும்மா இருந்தாலும் சொந்த பந்தங்கள் வெறுமென இருக்கின்றதா என்ன ??

“ என்ன உன் பொண்ணுக்கு எதுவும் வரன் பாக்கலையா??” “ நம்ம சொந்தத்தில நல்ல பையன் இருக்கான்” “ வயித்துல ஏன் நெருப்பை கட்டிட்டு இருக்க, காலாகாலத்தில கடமையை முடிக்க வேணாமா ??” என்று பெண்ணை பெற்ற பெற்றவர்களிடம் கேட்காதவர்கள் யாரவது இருப்பரா என்ன ??

ஆனால் இதெல்லாம் வெளிநாட்டில் வளர்ந்த இவனுக்கு சொன்னால் புரியுமா என்ன ??

“ பதில் பேசு மிது.. “ என்று அதட்டினான்..

மிதிலாவிற்கு எரிச்சல் வந்துவிட்டது.. முகத்தை சுளித்தாள்.. “ என்ன மிது நான் கேட்கிறேன் பதில் பேசாமல் இருந்தா என்ன அர்த்தம் ??”

“ பதில் சொல்ல விரும்பலைன்னு அர்த்தம் “ என்றால் பட்டென்று..

முதல் முறையாக மிதிலா அவனை எதிர்த்து பேசுகிறாள்.. ரகுநந்தனுக்கு இது போதாதா ?? அவ்வளவு தான்

“ ஓ !!! அப்போ உனக்கு என் மேல இவ்வளோ தான் பாசம் அப்படிதானே மிது?? என்னிக்கோ சம்பந்தம் பேசி வந்த அவங்களை பத்தி கேட்டா நீ என்மேலேயே கோவமா பேசுவியா ??” என்று அவனும் அதட்டினான்..

அவளும் பதிலுக்கு “ அதை தான் நானும் சொல்றேன், அவங்க என்னிக்கோ சம்பந்தம் பேசி வந்தாங்க, ஆனா அது நடக்கலையே. இப்போ ஏன் இந்த பேசுன்னு கேட்கிறேன்.. இங்க பாருங்க நான்தான் வீட்டில பொண்ணுங்கன்னு இருந்தா நாலு பேரு கேட்க தான் செய்வாங்க.. ஆனா நம்ம அதையே பிடிச்சு தொங்க கூடாது “ என்றாள் சற்றே எரிச்சல் மிகுந்த குரலில்..

“நீ சொல்றது எல்லாம் சரிதான் மிது.. ஆனா.. ஆனா நீ இது மாதிரி எல்லாம் என்கிட்டே பேசினது இல்லையே.. இப்போ மட்டும் ஏன் இந்த பேச்சு வரவும் இப்படி கோவமா பேசுற ??” என்று தெளிவாய் அவளை குழப்பினான்..

“ இவனுக்கு என்னதான் பிரச்சனை? புரிந்து பேசுகிறானா ?? இல்லையா “ என்று ஆத்திரமாய் வந்தது மிதிலாவிற்கு..

“ ஆமா இந்த பேச்சு எனக்கு பிடிக்கலை நந்தன்.. அதான் இப்படி கோவமா பேச வருது.. சொல்ல போனா இதெல்லாம் ஒரு பேச்சே இல்லை.. உங்களுக்கு ஏன் இது புரியலை..” என்று சலித்துக்கொண்டாள்..

“ சரி விடு.. ஒன்னு மட்டும் கேட்கிறேன், நான் என் பழைய காதல் பத்தி சொன்னேன்ல.. அப்போ நீ .. நீயும் இது பத்தி சொல்லிருக்கணும்ல.. “ என்றான் அர்த்தங்கெட்ட தனமாய்..

“ வாட் !!! என்ன பேசுறிங்க நந்தன் நீங்க… ஓ !!! மை காட்…. நந்தினி அண்ணன் என்னை விரும்பினதுக்கும், நீங்களும் அந்த லிசியும் லவ் பண்ணதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.. சி…. நந்தினி அண்ணனுக்கு இப்போ கல்யாணம் கூட ஆகிடுச்சு.. அப்படி இருக்கும் போது இதை பத்தி பேசுறதே தப்பு…” அவள் குரல் உடைந்தது..

என்ன சொல்லி இவனை சரி செய்வது.. புரிந்து பேசினால் சரி ஆனால் இவனோ இப்படி பேசுகிறானே ?? கடவுளே.. இவனை இப்படி ஒவ்வொரு விசயத்திற்கும் சமாதானம் செய்து செய்து ஓய்ந்துவிடுவேன் போலவே  என்று எண்ணினாள்..

இதற்குமேல் நான் இவன் முன் இருந்தால் வேறு ஏதாவது பேசிவிடுவேன் என்று எழுந்து பால்கனியில் நின்றுகொண்டாள்..  அவன் அந்த ரகுநந்தன் இதற்குமேல் ஒருவார்த்தை ஏதாவது பேசினால் கூட மிதிலா தனக்கு இருக்கும் பொறுமையை எல்லாம் விடுத்தது அவனை ஏதாவது சாடிவிடுவாள்.. அத்துணை ஆத்திரம் அவளுக்குள்..

“ சின்ன பையனுக்கு எடுத்து சொல்ற மாதிரி சொல்லிட்டு இருக்கேன்.. ச்சே…” என்று அவளை கடிந்துக்கொண்டாள்..

மிதிலா பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே எழுந்து செல்லவும் முதலில் ரகுநந்தனுக்கு கோவம் தான் வந்தது.. ஆனாலும் அவளிடம் கோவமாய் பேச எதுவோ தடுத்தது..

என்றும் இப்படி நடந்துகொள்ள மாட்டாள் ஆனால் இன்று இப்படி பேசுகிறாள் என்றால் என் மீது தான் தவறோ என்று யோசித்தான்.. சில நொடிகளே போதுமானதாய் இருந்தது அவனுக்கு.. தான் பேசியது அர்த்தமற்ற ஒன்று என புரிய..

“ச்சே ராக்கி என்ன முட்டாள் தனம் பண்ணிருக்க நீ ?? இப்படிதான் அறிவுகெட்ட தனமா பேசி வைப்பியா.. மிது உன்னை வெறுத்துட்டா அப்புறம் என்ன பண்ணுவ நீ ?? பாரு அவ கோவமாய் இருக்கா… “ என்று அவன் மனமே அவனுக்கு எடுத்து கூறியது..

ஆனாலும் அவனது ஈகோ மிதிலாவை சமாதானம் செய்ய தடுத்தது.. “ இப்போ என்ன நான் தப்பா கேட்டேன்.. இதுகூட என் பொண்டாட்டி கிட்ட நான் கேட்க கூடாதா ?? அந்த உரிமை கூட எனக்கு இல்லையா ??” என்று அவனை போட்டு நன்றாய் வறுத்து எடுத்தது.. 

தான் செய்தது தவறு என்று அவனுக்கு தெரியும் ஆனாலும் மனதில் ஒரு பிடிவாதம் நான் இது கூட என் மனைவியிடம் கேட்கக்கூடாதா என்று.. அதற்கு அவனது மனமே பதிலும் சொல்லியது..

அவள் உன் மனைவிதானே பிறகு என்ன ?? உனக்கு அவளிடம் இருக்கும் உரிமைகள் எல்லாம் அவளுக்கு உன்னிடம் இருகிறதே.. உன்னை எப்படி அவள் எல்லா விசயத்திற்கும் வந்து சமாதானம் செய்கிறாள் அது போல தானே அவளுக்கும்..

மிதிலா தன்னிடம் பேசாமல் போனது அவனுக்கு இப்பொழுது கஷ்டமாய் இருந்தது.. ஏனோ அவனுக்கு அவள் வேண்டும் போல இருந்தது. மெல்ல எழுந்து சென்று அவள் அருகில் நின்றான்..

ரகுநந்தன் தன் பிடிவாதத்தை விடுத்து எழுந்து வந்ததே மிதிலாவிற்கு ஆச்சரியமாய் இருந்தது.. ஆனாலும் அவனை திரும்பி கூட பார்க்கவில்லை..

கரிய வானத்தை வெறித்து பார்த்தபடி நின்று இருந்தாள்.. மிதிலாவிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லாததை கண்ட நந்தன் மெல்ல அவள்புரம் நகர்ந்து நின்றான். அதற்கும் அவளிடம் அசைவு இல்லை..

“ மிது “ மெல்ல அழைத்தான்.. ஆனால் அவளோ தனக்கும் இதற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லையென்று நின்று இருந்தாள்..

அவனுக்கு இதற்குமேல பொறுமை இருக்குமா ?? மிது என்று அவளது கைகளை பற்றினான்.. வெடுக்கென்று தன் கைகளை உருவிக்கொண்டாள் மிதிலா..

“ என்ன மிது நீ இப்படி பண்ற ??” என்றான் பரிதாபமாய்.. அவனுக்கு நிஜமாகவே அவளை என்ன சொல்லி சரி செய்வது என்று தெரியவில்லை..

நான் என்ன செய்தேன் என்பது போல பார்த்தாள் மிதிலா.. அவன் நின்றதுமே அவள் மனம் பாதி கோவத்தை இழந்திருந்தது.. இதில் அவன் முகம் பார்க்கவும் மீதியும் துளைந்து போனது.. ஆனாலும் அதை எல்லாம் காட்டாமல் வெறுமென அவனை பார்த்தாள்..

“ நான் பேசுனது தப்புதான் மிது.. எனக்கு அதெல்லாம் புரியல.. அதுக்காக நீ இப்படி என்னை விட்டு வருவியா என்ன ??” என்றான் அவளது கைகளை இறுக பற்றி..

அப்பொழுதும் அமைதியாய் தான் இருந்தாள் மிதிலா.. “ என்ன மிது டியர் ஏதாவது பேசேன் “ அவன் குரல் இறங்கியிருந்தது.. மிதிலாவின் முக திருப்பலை நிஜமாகவே ரகுநந்தனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை..

“ என்ன பேச ???”

“ எதாவது பேசு பேபி… யுவர் சைலன்ட் கில்ஸ் மீ…” என்றான் நிஜமாகவே.. அவளோ அவனது விழிகளையே பார்த்தாள்.. மெல்ல பேச ஆரம்பித்தாள்,

“ உங்களை இப்போதான் எனக்கு தெரியும் நந்தன்.. நீங்க கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டப்போ, மில்லோட இன்சார்ஜ் கேட்டப்போ மறுபேச்சு பேசாம நான் சரி சொல்லிருக்கேன் ஏன் தெரியுமா உங்க மேல எனக்கு இந்த நம்பிக்கை.. ஆனா இப்போ பார்த்தா அந்த நம்பிக்கை உங்களுக்கு என்மேல இல்லையோனு தோணுது..” அவள் குரலில் வலி வேதனை.. 

“ஐயோ !! மிது என்ன இது நம்பிக்கை அது இதுன்னு எல்லாம் பேசிட்டு.. நான்.. நான் என்ன உன் மேல நம்பிக்கை இல்லாம பேசிட்டேன் சொல்லு டியர்.. இங்க பாரு எனக்கு இந்த மாதிரி பேச்சு இதெல்லாம் புதுசு.. நா.. நானும் ஏதோ குழப்பத்தில பேசிட்டேன் ப்ளீஸ் டியர்.. நீ நீ இப்படி எல்லாம் நினைக்காத..” என்று அவளது முகத்தை தன் கைகளில் ஏந்திக்கொண்டான்..

அவன் முகத்தில் தெரிந்த தவிப்பு மிதிலாவிற்கு மனதில் ஏதோ ஒரு நிம்மதியை கொடுத்தது… நேசம் இல்லாமல் இந்த தவிப்பு வருமா ?? இந்த துடிப்பு, இந்த பதட்டம் நேசமில்லாத நெஞ்சத்தில் தோன்றுமா ?? என் நந்தனுக்கு என் மீது நேசம், பாசம், காதல் எல்லாம் இருக்கிறது.. ஒருவேளை அது அவனுக்கே தெரியவில்லையோ என்னவோ??

இருந்துவிட்டு போகட்டும்.. எனக்கு தெரிகிறதே… என் நந்தனின் கண்களில் தெரிகின்ற தவிப்பு, முகத்தில் தெரியும் பதட்டம், நான் அவனிடம்  முகம் திருப்புவது கூட அவனால் பொறுக்க முடியவில்லை.. இதெல்லாம், இவையனைத்தும் எனக்கு புரிகின்றதே அது போதாதா ???

மிதிலாவின் மனதின் ஓடியே இவ்வெண்ணங்கள் அவளது முகத்தில் பிரதிபலித்தது.. கண்கள் லேசாய் கலங்கியது.. ரகுநந்தனுகோ அவள் வருத்தத்தில் அழுகிறாள் போல என்று நினைத்தான்..

அவளது கண்ணீர் நிறைந்த விழிகள் அவனை ஏதோ செய்தது.. “ மிது ப்ளீஸ் அழுகாத “ என்று அவளை தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டான்.. அவளும் வாகாய் சாய்ந்து கொண்டாள்..

“ சாரி டியர்.. என்னால தானே.. ப்ளீஸ் மா அழாத… “ என்றான் மென்மையாய்.. அவனது மென்மை மிதிலாவின் நெஞ்சை தொட்டது..

“ம்ம்.. இட்ஸ் ஓகே…” என்று கூறி கண்களை துடைத்துக்கொண்டாள்.. அவளை பொறுத்த வரைக்கும் இப்பொழுதும் கூட ரகுநந்தன் அடம் பிடிக்கும் குழந்தையாய் தான் தெரிந்தான்.

“ம்ம்ச் இப்போ ஏன் நகந்து போற ?? இங்கயே இரு “ என்று கூறி மீண்டும் அணைத்துக்கொண்டான்..

“ ஸ்ஸ்!! நந்தன் என்ன இது நம்ம பால்கனில இருக்கோம்.. யாரும் பாக்க போறாங்கப்பா!!! “ என்றபடியே விலகினாள்..

“ ஓ !! பேபி.. நீ ஏன் அடுத்தவங்கள பத்தி நினைக்கிற?? இப்போ நீ நினைக்கவேண்டியது எல்லாம் என்னை பத்தி மட்டும் “ என்றவனின் அணைப்பு இறுகியது.. அவளுக்கும் இப்படி அவனோடு ஒன்றி நிற்பது நன்றாய் தான் இருந்தது..

ஒருவேளை ஊடல் வந்தால் தான் கூடல் வருமோ ?? என்றோ எதிலோ படித்து இப்பொழுது நினைவு வந்தது அவளுக்கு.. மெல்ல நகைத்துக்கொண்டாள்..

“ ஏன் மிது ?? எனக்கும் சொன்னா நானும் சிரிப்பேனே…” என்றார் ரகுநந்தன்..

இதை என்னவென்று அவனுக்கு விளக்குவது… திரு திருவென முழித்தாள் மிதிலா.. “ சொல்லு மிதுகுட்டி.. என்ன சிரிப்பு.. எதோ இருக்கு “ என்றான் பிடிவாதமாய்..

“ ஹா !! ஒன்னுமில்லையே… எதுவுமே இல்லை.. சும்மா சிரிச்சேன்.. அவ்வளோ தான்.. சரி சரி வாங்க நேரம் ஆகுது.. பாருங்க லேசா சாரல் வேற அடிக்கிது “என்று அவனை அங்கிருந்து கிளப்ப முயன்றாள்..

“ அட என் மிது டார்லிங்… சிரிப்பின் காரணத்தை மறைக்க இது ஒரு வழியா ?? ஹ்ம்ம் பெரிய புயல் மழையே வந்தாலும் நீ சொன்னாதான் வருவேன்” கைகளை கட்டிக்கொண்டு நின்றேவிட்டான்..

“ அட கடவுளே.. மறுபடியும் இவனிடம் ஒரு போராட்டமா ??” என்று எண்ணினாள் மிதிலா.. ஆனால் இந்த போராட்டம் சந்தோசத்தை அல்லவா கொடுக்கிறது..

“ ப்ளீஸ் நந்தன் சொன்னா கேளுங்க.. உள்ள வாங்க போலாம்” என்று அவனை இழுத்தாள்.. ம்ம்ஹும் கைகள் தான் வலித்தது..

“ நீ சொல்லு.. நீ வெட்கப்பட்டு சிரிக்கிற அளவுக்கு ஏதோ நினைச்சு சிரிச்சிருக்க அதான் உன் முகம் கூட லைட்டா ரெட்டிஸ்ஸா இருக்கு.. டெல் மீ மிது “ என்று கூறி அவளது முன் நெற்றியில் முட்டி நின்றான்..

சும்மாவே கூற தயக்கம் இதில் அவன் இப்படி உரசிக்கொண்டு நின்றால் எப்படி சொல்வாள்.. “ ம்ம் கமான் டெல் மீ மிது “ என்றவனின் அணைப்பு வேறு இறுகியது..

மிதிலாவிற்கோ வார்த்தைகளை வரவில்லை.. அவனது அணைப்பிலும், லேசான சாரலினால் வரும் கூதல் காற்றிலும் அவளது தேகம் சிலிர்த்தது… அவளது உடலில் ஒரு நடுக்கம் ஓடியதை இருவருமே உணர்ந்தனர்..

அவளது சிலிர்ப்பும் நடுக்கமும் ரகுநந்தனை ரசிக்க வைத்தது.. “ மிது மை பேபி ….” என்று இன்னும் இறுக அணைத்து அவளது கழுத்தில் முகம் புதைத்தான்.. மிதிலாவின் கரங்களும் கூட அவனை அணைத்துக்கொண்டது..

“ சொல்லு மிதுகுட்டி “ என்று இன்னும் கேட்டுக்கொண்டு தான் இருந்தான்.. மிதிலாவிற்கு முன்னிருந்த தயக்கம் இப்பொழுது இல்லை.. மெல்ல எழும்பி தன் மனதில் நினைத்ததை கூறினாள்..

“ ஹா !!!! ஊடல்…. கூடல்… வாட்ஸ் தி மீனிங் டியர் “என்று கேட்டவனை பார்த்து மிதிலாவிற்கு முகத்தில் ஈ ஆடவில்லை..

“ அட ராமா !!! இதற்கும் நான் விளக்கம் கொடுக்க வேண்டுமா ??? இதை நான் சொல்லாமலே இருந்திருக்கலாம் போலவே” அவனையே பார்த்து நின்றுவிட்டாள்..

“ சி டியர் நீ எதோ ரொமாண்டிக்கா தான் சொல்றன்னு தெரியுது.. பட் எனக்கு தமிழ் பேச நல்லா தெரியும்.. பட் எழுத படிக்க கொஞ்சம் சிரமம் தான்.. அதுவும் இல்லாம இந்த டீப் வோர்ட்ஸ் எல்லாம் தெரியாது..” என்றான் பாவமாய்..

“ அது… அது ஒண்ணுமில்லை நந்தன்.. சும்மாதான்.. வாங்க நம்ம உள்ள போகலாம்..” மறுபடியும் தன் பல்லவியை ஆரம்பித்தாள்..

“ நோ !!! எனக்கு இப்போ தெரிஞ்சே அகனும்.. நீ சொல்லித்தான் அகனும்..”

“ம்ம்” என்று யோசித்தவள் மெல்ல விளக்கினாள்.. அவன் கேட்டு முடிக்கும் போது அறைக்குள் ஓடியேவிட்டாள்.. அர்த்தம் புரிந்தவன் சும்மா இருப்பான என்ன ??

“ ஓய் !! மிது நில்லு நில்லுன்னு சொல்றேன்ல..” என்று துரத்திக்கொண்டு ஓடினான். சிறிது நேரம் அங்கே ஓட்டபந்தயம் தான் நடந்தது..

“ ஹேய் டியர்.. ஒழுங்கா நீயே கிட்ட வந்திடு… நானா பிடிச்சா நல்லது இல்லை..”

“ ஹா !! ஏன் ?? என்ன செய்விங்க ??”

“ ம்ம்ச்… நில்லு மிது… இப்போ ஏன் இப்படி சுத்தி சுத்தி ஓடுற… என்ன செய்வேன்னு சொல்ல எல்லாம் முடியாது.. செய்யதான் முடியும் டியர்.. “ என்று கண்ணடித்தான்..

“ ஐயோ !! பேச்சை பார்…”

“ பேச்சை எல்லாம் பார்க்க முடியாது கேட்கத்தான் முடியும்…” பதிலுக்கு பதில் சளைக்காமல் கூறினான்..

“ இதில் ஒன்னும் குறைச்சல் இல்லை…” என்று கூறியவளை எட்டி பிடித்தான்..

“ எப்படி!!! மாட்டினையா ??? இப்போ சொல்லு வேற எதில் குறைச்சலாம்???” புருவம் உயர்த்தினான்.. மயங்கித்தான் போனாள் மிதிலா… அந்த மயக்கம் அவனையும் தொற்றிகொண்டது..

நிலமகள் மீது தான் கொண்ட காதலை மழையாய் உணர்த்தியது நீல வானம்.. பூமியும் குளிர்ந்து… மகிழ்ந்தது… நிறைந்தது..

அதுபோல மிதிலாவின் மனமும், ரகுநந்தனின் மனமும் ஒருவரின் அருகாமையில், காதலில், காதலின் அடுத்த பாடத்தில் தங்களை மறந்து லயித்து, ஒருவருக்குள் ஒருவரை தொலைத்து, தங்கள காதலில் மூழ்கி உலகம் மறந்து, உறவை மட்டுமே நினைத்து கலந்திருந்தனர்… 

 மிதிலாவிற்கு நேற்று நடந்த இந்த நிகழ்வுகள் எல்லாம் முகத்தில் செம்மையை கொடுத்தது.. வைத்த கண் வாங்காமல் இன்னும் தன் நந்தனையே பார்த்தபடி இருந்தாள்“ என்ன பொண்டாட்டி சைட் அடிக்கிறையா ???” என்று கேட்டபடி அவளது கன்னத்தில் இதழ் பதித்தான் ரகுநந்தன்..

“ அட இவன் விழித்துவிட்டானா??” என்று தனக்கு தானே கேட்டு கொண்டாள் மிதிலா.. அதிர்ந்து பார்த்தாள்..

“ டியர் நான் அப்போவே முளிச்சிடேன்.. நீ வேற என்னை ஆசையா பார்த்தியா.. அதான் பார்க்கட்டுமேன்னு விட்டேன்… ஆனா நீ என்னவோ முடிக்கிற மாதிரி தெரியலை அதான்“ என்று கூறி கண்ணடித்தான்.. மிதிலாவிற்கோ அவனது முகம் பார்க்கவே வெட்கமாய் இருந்தது..

வேண்டுமென்றே பேச்சை மாற்றி “ சரி சரி நேரம் ஆச்சு நந்தன்… “ என்று கூறி எழும்பினாள்..

அவள் எழுந்த வேகத்தில் அவன் மிதிலாவின் கைகளை பிடித்து இழுத்திருந்தான்.. மீண்டும் மெத்தை மேல் தான் விழுந்தாள்..

“ என்ன நந்தன் இது?? கோகிலாக்கா போன் பண்ணிட்டாங்க.. நான் என்னென்னவோ சொல்லி சமாளிச்சேன்.. விடுங்க நான் போகணும் “ என்று சினுங்குபவளை விழி அகலாமல் பார்த்தான் ரகுநந்தன்..

அவன் பார்வை கூறிய செய்தி புரிந்தாலும் மிதிலா “ நந்தன், நான் போகணும் விடுங்கப்பா.. நல்ல பையன் தானே “ என்று சிணுங்கினாள்..

“ நான் நல்ல பையன்னு நான் சொன்னேனா மிது குட்டி “ என்று அவளது கழுத்தில் முகம் புதைத்தான்.. அவனது அணைப்பு அவளை சிலிர்க்க வைத்தாலும் வேண்டுமென்றே

“ சரி சரி நீங்க கெட்ட பையன் தான்.. இப்போ எனக்கு வேலை இருக்கு..” என்று நகர பார்த்தாள்..

“ ஓ !! நான் கெட்ட பையனா ?? சரி அப்போ இந்த கெட்ட பையன் கொடுத்த கிஸ்ஸை எல்லாம் திருப்பி கொடு “ என்று காதல் கணக்கு பேசினான் நந்தன்.. அவளுக்கு சிரிப்பு தான் வந்தது..

அவளது சிரிப்பையே சம்மதமாய் ஏற்று மீண்டும் ஒரு காதல் கணக்கெழுதினான் ரகுநந்தன்..

மீண்டும் அலைபேசி அடித்ததில் இருவரும் விலகினார்… சலித்துக்கொண்டே அதை எடுத்து காதில் வைத்தான்.. இது தான் சமயம் என்று மிதிலா ஓடிவிட்டாள்..

அவளை பிடிக்கவா ?? இல்லை பேசவா?? என்று ஒரு நொடி குழம்பியவன் மெல்ல சிரித்தபடி கைபேசியில் பேச ஆரம்பித்தான்.. பேசியது விநாயகம் வக்கீல் தான்..

“ சொல்லுங்க அங்கிள்…”

“ ஹ்ம்ம் இன்னிக்கேவா…?? ஓ !! சாரி நேத்து சொன்னேன்ல… சரி கூட்டிட்டு வாங்க..”

..

“ இல்லை வீட்டுகே கூப்பிட்டு வாங்க.. அப்போதான் பேச வசதியா இருக்கும்..பாட்டியும் பேச நல்லா இருக்கும்”

“ சரிங்க அங்கிள் “ வைத்துவிட்டான்..

“ இதுவேறு ஒரு புது பிரச்சனையா ?? இந்த சொத்தை எல்லாம் இத்தனை சேர்த்துவைக்க இவங்களுக்கு யார் தான் சொன்னது.. எல்லாம் அவங்க இஷ்டத்திற்கு சேர்க்கவேண்டியது.. பிறகு இருப்பவர்கள் தலையில் கட்டி உயிரை வாங்குவது.. முதலில் ஜெகதா பாட்டி.. இப்பொழுது அம்மாவின் அப்பா… கடவுளே… “ என்று கடவுளை துணைக்கு அழைத்தவாறு குளிக்க சென்றான் ரகுநந்தன்..

அங்கே விசாலமோ குறுக்கும் நெடுக்குமாய் நடந்துக்கொண்டு இருந்தார்.. அவர் மனமோ கொதித்து போய் இருந்தது..

“ இத்தனை வருஷம் நான் ஆண்ட இந்த சொத்து இப்போ வந்த அந்த பொடியன் கிட்ட கொடுக்கணுமா ?? அதுவும் ஜெகதாவோட பேரனுக்கு.. என் பிறந்த வீட்டு சொத்து.. நான் ஏன் கொடுக்கணும்.. இதில் அவன் அம்மாக்கு என்ன உரிமை இருக்கோ அதே மாதிரி எனக்கும் இருக்குதானே “ என்று தனக்கு தானே கேட்டுகொண்டார்..

“ இந்த வக்கீலை எல்லாம் நம்பவே முடியாது.. எதுனாலும் நேருக்கு நேர் தான்.. நானா இல்லை அந்த பொடியனா ?? உயில்ல என்னவேனா இருக்கட்டும்.. யாரோட முடிவும் என்னை கட்டுபடுத்தாது.. இதை இந்த உயிலை எழுதியதும் என் தம்பி என்கிட்டே சொல்லி இருந்தா நானே கூட சரின்னு சொல்லிருப்பேன்.. ஆனா.. ஆனா அவன் கூட என்னை பயன்படுத்திகிட்டான்.”

“ இவன் சொத்தை எல்லாம் இத்தனை வருசமா பாதுகாத்து வைக்க மட்டும் நான்.. அதை அனுபவிக்க மட்டும் வேறு யாரோ?? அதுவும் என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல்.. ச்சே என்ன ஒரு நம்பிக்கை மோசடி… “ சுவரில் ஓங்கி குத்தினார்..

“ அந்த வக்கீல் என்ன பேசுறது.. நானே.. நானே இப்போ ஜெகதா வீட்டுக்கு போறேன்.. எதுனாலும் முகத்திற்கு நேரா கேட்டிட்டு வரேன்… கேட்கிறது என்ன நான் சொல்றதை அவங்க தான் கேட்கணும். அதிலும் அந்த ஜெகதா எதை சொன்னா என் வழிக்கு வருவான்னு நல்லா தெரியும்.” சூளுரைத்துக்கொண்டார்..

“ ஜீவா… ஏய் ஜீவா…” மருமகளை அழைத்தார்..

“ அத்தை…” பாவம் அவருக்கு குரலே எழும்பவில்லை..

“ என்ன பண்ற ?? கூப்பிட்டா வர முடியாதா ?? சரி சரி ட்ரைவரை கார் எடுக்க சொல்லு… நான் வெளிய போகணும் “ முகத்தில் அத்தனை அழுத்தம் விசாலாத்திற்கு..

“ ம்ம் சரிங்க அத்தை…” பாவமாய் நகர்ந்தது அந்த ஜீவன்…

தன் பேத்தியின் முகத்தில் தெரிந்த பூரிப்பும், செம்மையும் ஜெகதாவிற்கு மனதில் நிம்மதி கொடுத்தது.. கோகிலாவை பார்த்து அர்த்தமாய் புன்னகைத்தார்.. இருவரும் தன்னை பார்ப்பதும் பிறகு புன்னகைத்ததும் மிதிலாவின் கண்களுக்கு தெரிந்ததுதான் இருந்தாலும் பேச்சு கொடுத்து வீணாய் அவர்களின் கிண்டலுக்கு ஆளாவோம் என்று வேறு வேலை பார்ப்பது போல திரும்பிக்கொண்டாள்..

 கோகிலாவோ “ அப்புறம் மிதிலா என்ன படம் பார்த்திங்க??? கதை சொல்லேன்.. நானும் தெரிஞ்சுக்கிறேன் “ என்று வேண்டுமென்றே அவளை வம்பிளுதார்.. அந்நேரம் பார்த்து சரியாய் ரகுநந்தனும் வந்து சேர்ந்தான்..

“ ஹாய் பாட்டி…” என்று வந்து ஜெகதாவை கட்டிக்கொண்டான்..

“ என்ன நந்து பையா.. ஒரே குஷியா இருக்க ?? என்ன காரணம்” மெல்ல புன்னகைத்தபடி வினவினார் ஜெகதா..

“ ஹா!!! அதெல்லாம் ஒன்னுமில்லையே… என்ன மிது டியர் அப்படிதானே “ என்று அவனும் தன் பங்கிற்க்கு மிதிலாவை சீண்டினான்..

“ உங்களுக்கு வேற வேலை இல்லை நந்தன்… சும்மா இருங்க “ என்று யாருக்கும் தெரியாதபடி அவனை கிள்ளினாள்..

“ ஆ !!! அய்யோ !!! பாட்டி…. அக்கா….. இவ என்னை கிள்ளுரா….” என்று கத்தினான்..

“ ஐயோ !! இவன் என் மானத்தை வாங்குறானே…” என்று படபடத்தவள் வேகமாய் அவனது வாயில் கை வைத்து மூடினாள்..

இவர்களது இந்த அலம்பலை பார்த்து  கோகிலாவும் ஜெகதாவும் நகர்ந்துவிட்டனர்.. “ ஹ்ம்ம் பாரு டியர்.. நீ என்னை இப்படி அப்படி பண்றதை பார்த்து பாட்டியும், கோகிலாக்காவும் வெட்கப்பட்டு போறாங்க…. எனக்கு கூட வெட்கமா வருது டியர் “ என்று வாயில் விரல் வைத்து கடித்தான் நந்தன்..

“ ஐயோ !! நந்தன் என்ன இவ்வளோ சேட்டை பண்றீங்க.. சும்மா இருங்கப்பா.. சும்மாவே கோகிலாக்கா லேட்டா வந்ததுக்கு என்னை கிண்டல் பண்ணாங்க..” என்று சிணுங்கினாள்..

“ என்ன கிண்டல் பண்ணாங்களா..??? என்ன தைரியம் ??? இரு இரு என்ன கிண்டல் பண்ணாங்கன்னு நானே கேட்கிறேன்..” என்று வேகமாய் கிளம்பியவனை வேகமாய் தடுத்தாள் மிதிலா..

“அய்யா !! சாமி.. நீங்க எதுவும் கேட்க வேண்டாம்…. சும்மா இருந்தாலே போதும்.. “

“ அப்படியா டியர்… நான் சும்மா இருந்தா என் பொண்டாட்டிக்கு பிடிக்காதே.. என்ன செய்ய?? சரி இப்படியே சும்மா இருக்கேன்“ என்று கூறியபடியே அவளை அணைத்தான்..

“ அட நந்தன்.. விடுங்க.. என்ன இது நடு ஹால்ல.. விடுங்க நந்தன் யாராவது வரபோறாங்க… ப்ளீஸ்…” என்று கெஞ்சியவளை விடாமல் அடம் பிடித்தான் ரகுநந்தன்…                                    

             

                                                                

                   

 

Advertisement