Advertisement

நேசம் – 16

நேரம் காலை ஏழு மணி… மிதிலாவும் ரகுநந்தனும் இன்னும் தூங்கி எழவில்லை.. சாதாரணமாகவே மிதிலாவிற்கு எழ மனம் வராது.. அதிலும் ரகுநந்தனின் அணைப்பில் உறங்கியவள் கண்விழிப்பாளா என்ன ??

அலாரம் அடிக்கும் சத்தம் கேட்டு லேசாய் கண் விழித்தவள் மணி ஏழு என்பதை உணர்ந்து

 “ ம்ம்ச் ஏழு தானா?? நான் எப்போ இவ்வளோ சீக்கிரம் எழுந்தேன் ???” என்று முனங்கியபடியே அலாரத்தை அமர்த்தாமல் ரகுநந்தனின் அருகில் வைத்துவிட்டு ஒரு தலையனையை எடுத்து தன் காதுகளோடு சேர்த்து முகத்தையும் மூடி உறங்கிவிட்டாள்..

திடீரென்று காது பக்கத்தில் சத்தம் கேட்கவும் அடித்து பிடித்து விழித்தவன் வேகமாய் போனை எடுத்து அலாரத்தை அமர்த்தினான்.. அவனுக்கு இன்னும் படபடப்பு குறையவில்லை… சிறிது நேரம் தன்னை சமன்படுதிக்கொண்டு,

“ நைட்டு போனை நான் அந்த பக்கம் தானே வைச்சிட்டு தூங்கினேன்.. பின்ன எப்படி இங்க வந்தது ??” என்று யோசித்தவனுக்கு அப்பொழுது தான் தன் அருகில் படுத்திருந்தவள் நினைவு வந்தது..

“ ஓ !! கல்யாணம் ஆகிடுச்சுல.. ஒரு செகண்ட் அதே நியாபகம் இல்லை.. எல்லாம் இவ வேலையா தான் இருக்கும்.. என் தூக்கத்தை கெடுத்துட்டு தூங்குறதை பாரு.. “ என்று எண்ணியவன் “ மிது !!!!” என்று அவளை அழைத்தான்…

ம்ம்ஹும் எந்த பதிலும் இல்லை… மெல்ல அவள் பக்கம் நகர்ந்து “ மிது குட்டி!!! “ என்றான் அதற்கும் பதில் இல்லை..

“ அட என்ன டா இது!!!! “ என்று எண்ணியவன் அவள் முகம் மறைத்திருந்த தலையணையை எடுத்தான்..

“ ம்ம்ம் !!! என்ன நந்தன்.. இன்னும் கொஞ்சம் நேரம்.. ப்ளீஸ்….” என்று கூறியபடி மீண்டும் புரண்டு படுத்துவிட்டாள்.. ரகுநந்தனோ தன்னையே நொந்துக்கொண்டான்..

“ சினிமால ஹிரோயின் கல்யாணம் ஆன மறுநாள் அழகா தலைக்கு குளிச்சு, கொண்டை போட்டு, வெட்கப்பட்டுகிட்டே கையில காப்பியோட வந்து எழுப்புற மாதிரி காட்டுறது எல்லாம் பொய் போல.. “ என்று எண்ணினான்..

இவன் அசையாமல் அப்படியே இருப்பதை உணர்ந்தாளோ என்னவோ திரும்பாமலே “ நந்தன், இவ்வளோ நேரமாகியும் நம்ம வெளிய போகம இருந்தா எதா நினைப்பாங்க…..” என்று அவள் கூறி முடிக்கவில்லை

“ ஆமா டியர், சீக்கிரம் ரெடி ஆகி எனக்கு காபி கொண்டு வா.. கமான் கமான்” என்றான் ஆசையாக,

“ அட!!!! நீங்க தான் எழுந்தாச்சுல, அதுனால நீங்க போலாம்.. யாரவது ஒருத்தர் வெளிய போனா போதும் யாரும் ஒன்னும் நினைக்க மாட்டாங்க.. இன்னும் பத்து நிமிஷம் நான் தூங்குவேன் “ என்று மறுபடியும் இப்புறம் புரண்டு படுத்துக்கொண்டாள்..

தன் நிலையை எண்ணி நொந்தவன் “ ஹ்ம்ம் கிளாக் கூட ஒரே டைரக்சன்ல சுத்தும்.. இவ வித விதமா சுத்துறாளே.. இத்தனை நாளா இது எனக்கு தெரியாம போச்சே!!!! நல்ல வேலை நைட்டு நம்மை எத்தி தள்ளி விடலை… அந்த மட்டும் நான் பிழைத்தேன்” என்று கூறியபடி குளிக்க சென்றுவிட்டான்..

குளித்து, உடைமாற்றி தயாராய் வந்து பார்த்தவன் இன்னும் மிதிலா அப்படியே இருப்பதை கண்டு என்ன செய்வது என்று யோசித்தான்.. அதே நேரம் சரியாக கதவு வேறு தட்டப்பட்டது..

மீண்டும் மனத்திரையில் கதாநாயகி, கலைந்த புடவையையும், கேசத்தையும் அவசர அவசரமாய் சரி செய்துகொண்டு, லேசாய் சிவந்த முகத்துடன் கதவை மெல்ல திறப்பது போல… தலையில் அடித்துக்கொண்டான்..

“ இங்க வந்ததில இருந்து ரொம்ப படம் பார்த்து கேட்டு போயிட்டேன்” என்று முனங்கியவாறே கதவை திறந்தான் கோகிலா தான் நின்றிருந்தார்..

மிதிலா தான் கதவு திறப்பாள் என்று நினைத்தவருக்கு ரகுநந்தனை கண்டு ஒரு சிறு திடுக்கிடல், உடனே சுதாரித்து மெதுவாய் “ மிதிலா ???!!!” என்றார் கேள்வியாய்..

அவனோ உள்ளே பார்க்கும் படி கை நீட்டினான்.. கோகிலாவிற்கு ஒருநொடி என்னவோ ஏதோ என்று ஆகிவிட்டது.. பின் பார்த்தவருக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.. ஆடாமல் அசையமால் உறக்கம் கலையாமல் இருந்தாள் மிதிலா..

அறைக்குள்ளே செல்லாமல் “ நீங்க வாங்க தம்பி காபிப போட்டு குடுக்கிறேன். வந்து மிதிலாவை எழுப்பி விடுங்க.. இவ இப்படி தான் தூக்கம் தான் முக்கியம் இவளுக்கு.. காபி வாசனை வந்தா எழுந்திடுவா, நீங்க குடிச்சிட்டு அப்படியே மிதிக்கும் கொண்டு வந்து குடுங்க, பாட்டி கோவிலுக்கு போகணும்னு சொன்னாங்க” என்று கூறிக்கொண்டே நடந்தவரை அமைதியாய் பின் தொடர்ந்தான் நந்தன்..

கோகிலா கூறியது போல அவர் கொடுத்த காபியை பருகிவிட்டு, மிதிலாக்கும் எடுத்துவந்தான்.. ஜெகதாவிற்கு இவனை பார்த்து சிரிப்பு வேறு.. ஆனால் எதுவும் தெரியாதவர் போல இருந்துவிட்டார்.. ரகுநந்தனுக்கு நிச்சயம் தெரியும் தான் வந்தபிறகு கோகிலாவும், பாட்டியும் கிண்டல் செய்வார்கள் என்று.. ஆனால் முதல் நாளே மிதிலாவை என்ன கூற முடியும்..

கையில் காபியுடன் தன் மனைவியை எழுப்பினான் “ மிது… இட்ஸ் டூ லேட்.. வேக் அப்…. “

“ ஹ்ம்ம் மணி எத்தனை….!!!!!!!!” என்றாள் கண் விழிக்காமல்..

“ நியர்லி இட்ஸ் எய்ட்…..”

“ வாட்!!!!! எட்டா !!!! என்ன நந்தன் இது சீக்கிரம் எழுப்ப வேண்டாமா ???? பாருங்க எவ்வளோ நேரம் தூங்கிட்டேன்… போச்சு முதல் நாளே பாட்டி என்னை காய்ச்சி எடுக்க போறாங்க…” என்று அடித்து பிடித்து எழுந்தவள் அவன் தயாராகி நிற்பதை பார்த்து கேள்வியாய் நோக்கினாள்..

அதன் பிறகே அவளுக்கு நடந்தது எல்லாம் நினைவு வந்தது.. சற்றே அசடு வழிந்து “  சோ !! ஸ்வீட் அப் யு.. எனக்காக காபியெல்லாம் கொண்டு வந்திருக்கிங்க.. “ என்று அவன் முகம் பாராது காபியை குடிதவள் வேகமாய் குளியலறைக்குள் நுழைந்துகொண்டாள்.. நின்றால் அவன் ஏதாவது கூறுவானே..

மனதிற்குள்  “ பாவம் முதல் நாளே ரொம்ப படுத்துறோமோ!!!” என்று எண்ணியபடி அவளுக் தயாராகி கீழே வந்தாள்..

கோகிலா அடக்கப்பட்ட சிரிப்புடன் தன் வேலையை பார்த்துகொண்டு இருந்தார்.. ஜெகதாவும் பேரனும் எதோ பேசிக்கொண்டு இருந்தனர்..

“ பாட்டி குட் மார்னிங்… அக்கா காபி எ ஒன்!!!!” என்று சொல்லியபடி அமர்ந்தவளை ஜெகதா ஆராய்வது போல பார்த்தார்..

“ என்ன பாட்டி ???!!!” என்று கேட்டவளை

“ ஹ்ம்ம் ஒண்ணுமில்ல மிதிலா, நல்ல தூக்கமா கண்ணா !!!!” என்றார்

“ ஹ்ம்ம் எஸ் பாட்டி சரி தூக்கம்.. எப்போ தூங்கினேன்னு கூட தெரியல.. இல்லை நந்தன்… “ என்று பேச்சில் அவனையும் இழுத்தாள்..

“ கிறுக்கு கிறுக்கு, இவங்க எதுக்கு கேட்கிறாங்கன்னு கூட தெரியாம என்ன சொல்லிட்டு இருக்கா ????” என்று எண்ணியவன் பாட்டியின் பின்னே சற்றே சாய்ந்து மிதிலாவிற்கு ஏதோ சைகை செய்தான்..

ஆனால் மிதிலாவோ “ என்ன நந்தன், என்னப்பா சொல்றிங்க ??? ஐ கான்ட் அண்டர்ஸ்டாண்ட்.. சத்தமா சொல்லுங்க ???” எனவும் அவனுக்கு தலையில் அடித்துகொள்ளலாம் போல வந்தது..

ஜெகதா நந்தனை திரும்பி பார்க்கவும் “ அது ஒண்ணுமில்லை பாட்டி…… அது…” என்று இழுக்க மட்டும்  தான் முடிந்தது அவனால்.. ஜெகதாவிற்கு இவர்கள் இருவரின் சிரிப்பே மன நிறைவை கொடுத்தது..

“ சரி சரி எழுந்ததே லேட், ரெண்டு பேரும் சீக்கிரம் சாப்பிட்டிட்டு கிளம்பி வாங்க கோவிலுக்கு போகணும்…. “ என்றார் பொதுவாய்..

மறுபேச்சின்றி இருவரும் ஜெகதா கூறியதை செய்தனர்.. மிதிலாவிற்கோ தான் தாமதமாய் எழுந்து வந்ததற்கு பாட்டி திட்டமல் இருந்ததே நிம்மதியாய் இருந்து..

இருவரும் அமைதியாய் உண்டுவிட்டு மீண்டும் தங்கள் அறைக்கு வந்தனர்.. மிதிலாவின் உடைகள் எல்லாம் நந்தனின் அறைக்கு மாற்றப்பட்டு இருந்தது,,

“ இதெல்லாம் எப்போடா நடந்தது???!!!” என்று யோசித்துக்கொண்டே என்ன சேலை கட்டலாம் என்று கப்போர்டை திறந்து பார்த்துகொண்டு இருந்தாள்.. நந்தனும் அவளை தான் பார்த்துகொண்டு இருந்தான்..

“ ஹ்ம்ம் இப்போதைக்கு இவ செலக்ட் பண்ணமாட்டா” என்று யோசித்தவன் வேகமாய் அவளை நகர்த்தி இவனே உடையை தேர்ந்தெடுத்தான்..

“ இனிமே நான் தான் உனக்கு டிரஸ் செலக்ட் செய்வேன் மிது.. அதே மாதிரி நீ தான் எனக்கு ட்ரெஸ் எடுத்து வைக்கணும்.. ஆமா நீ ஏன் இப்படி ட்ரெஸ் பண்ற ??? கொஞ்சம் கூட சகிக்கலை” என்றான் அவள் பக்கம் திரும்பாமல்..

முதலில் நான் தான் உனக்கு உடை தேர்வு செய்வேன் என்று அவன் கூறியதும் மிதிலாவிற்கு மனம் மகிழ்ச்சிதான் அடைந்தது, எனக்கும் நீ தான் உடை எடுத்து வைக்கவேண்டும் என்று கூறியபொழுது இன்னும் அதிகமானது.

ஆனால் அவன் கூறிய கடைசி வார்த்தைகள் பிடிக்கவில்லை.. பிடிக்கவில்லை என்பதைவிட மனதுக்கு ஒருமாதிரி இருந்தது. அதை கொஞ்சம் இன்னும் நாசூக்காய் கூறி இருக்கலாம்..

அவளது உடைகளை எல்லாம் பார்த்தவன் “ ஹப்பா !!! இதென்ன மிது..  இப்படியெல்லாமா கலர்ல போடுவ..?? போறவன் எல்லாம் திரும்பி தான் பார்த்துட்டுபோவான்.. கொஞ்சம் கண் உறுத்தாத மாதிரி போடணும்…” என்று அவன் பாட்டிற்கு பேசியபடி ஒரு சேலையை தேர்ந்தெடுத்தான்…

அவன் கையில் கொடுத்தது நன்றாய் தான் இருந்தது ஆனால் அந்த நிறம் அவளுக்கு பிடிக்காதது அதுவும் இல்லாமல் ஆனால் அவன் பேச்சினால் மிதிலாவின் மனதில் அது பதியவில்லை.. இதையே இவன் கொஞ்சம் நல்ல விதமாய் கூறியிருந்தால் அவள் நிச்சயம் தவறாய் எண்ணியிருக்க மாட்டாள் தான்..

அமைதியாய் நின்று இருந்தாள்..

“ என்ன மிது அமைதியா இருக்க ??? இங்க பார் எனக்கு இந்த கலர்ல இப்படி ட்ரெஸ் பண்ணாதான் பிடிக்கும்.. இத்தனை நாள் தான் எப்படியோ போட்ட இனிமேலாவது நான் சொல்ற மாதிரி போடு  என்ன ??“ என்று மேற்கொண்டு விளக்கிக்கொண்டு இருந்தான்..

மிதிலாவிற்கு சும்மாவே தன் உடை விசயத்தில் யார் தலையிட்டாலும் பிடிக்காது. பிறர் கூறும் வகையிலும் அவள் அணிந்தது இல்லை தான்.. ஆனால் இன்று ரகுநந்தன் கூறுவது மனதிற்கு ஏனோ கஷ்டமாய் இருந்தது.. இத்தனை நாள் இவன் என்ன கவனித்தான்.. ??

அந்த உடைகளில் இருந்தபொழுது பார்த்து பிடித்து தானே என்னை திருமணம் செய்துள்ளான்?? இப்பொழுது மட்டும் என்னவாம் என்று இருந்தது.. ஆனால் முதல் நாளே அவனோடு வாக்குவாதம் எதற்கு என்று அமைதியாய் இருந்தாள்..

“ சீக்கிரம் மிது, கெட் ரெடி, அப்புறம் இப்படி எல்லாம் தலை சீவாதே, நான் சொல்ற மாதிரி இரு “ என்று அதற்கும் ஒரு விளக்கம் கொடுத்தான்.

மிதிலாவிற்கு முதலில் அவன் கூறுவது ஒருமாதிரி இருந்தாலும், பிறகு தன்னிடம் இதை எல்லாம் எதிர்பார்க்காமல் வேறு யாரிடம் எதிர்பார்ப்பான் என்று நினைத்து புன்னகைத்து கொண்டாள்.. காதல் மனம் வேறு எப்படி நினைக்கும்..

ஒருவழியாய் அவனுக்கும் உடை தேர்வு செய்து கொடுத்துவிட்டு இவளும் தயாராகி கண்ணாடி பார்த்தாள். ரகுநந்தன் தெரிவு செய்த உடையும், அவன் கூறியபடி  சீவியிருந்த விதமும் மிதிலாவின் அழகை சற்று மட்டுபடுத்தி காட்டியது போல இருந்தது..

அவளை மேலிருந்து கீழாய் பார்த்தவன்“ வாவ்!!!! டியர்… சுப்பர்… சிம்பிளி…. பார்த்தியா என் செலேக்சன்.. இப்போதான் நீ நான் எதிர்பார்க்கிற மாதிரி இருக்க” என்று தன் சட்டை காலரை வேறு தூக்கிவிட்டு கொண்டான்… அவனது மகிழ்வை பார்த்ததும் அது மிதிலாவிடமும் பிரதிபலித்தது..

“ என் நந்தனுக்கு பிடித்து இருந்தால் போதும் “ என்று எண்ணிக்கொண்டாள்..

மிதிலாவை பார்த்த கோகிலா  “ என்ன மிதிகுட்டி உனக்கு இந்த கலர் பிடிக்காதே, என்னை இந்த கலர் டல்லடிக்கும்ன்னு சொல்லுவ, அப்புறம் ஏன் கட்டுன???” என்றார்.. மிதிலா பதில் கூறுவதற்கு முன் ரகுநந்தன்

“ அக்கா, நான் தான் இந்த கலர் செலக்ட் பண்ணேன்…” என்று அழுத்தமாய் கூறினான்.. இதற்கு மேல் அங்கு யாரால் என்ன பேசமுடியும்..

ஜெகதா கோகிலாவிடம் எதுவும் பேசாதே என்று ஜாடை காட்டிவிட்டார்.. கோகிலாவும் அமைதியாய் இருந்துக்கொண்டார்..

இருவரும் தான் கோவிலுக்கு சென்று வந்தனர்.. முதல் நாள் இதே கோவிலில் வைத்துதான் ரகுநந்தன் மிதிலாவின் கழுத்தில் தாலி கட்டினான்.. புது பெண்ணாய், தன் கணவனோடு கோவிலுக்கு வந்தது மிதிலாவிற்கு புது மயக்கம் தந்தது.. அதுவும் அவள் நேசிக்கும் நந்தனோடு வந்தது..

ஆனால் அவளுக்கு மனதில் ஒரு எண்ணம் திடீரென்று தோன்றியது, முன்பு இருந்தது தான், ஆலையில் ஏற்பட்ட விபத்துக்கு பிறகு அதனை மறந்திருந்தாள் எனலாம்.. இப்பொழுது மீண்டும் தலை தூக்கியது அந்த உணர்வு..

எனக்கு இருக்கும் இதே உணர்வு போலத்தான் இவனுக்கும் இருக்குமா ?? இதே மகிழ்ச்சி, பெருமிதம், சந்தோஷம், இதெல்லாம் ??? என்று எண்ணினாள்..

எண்ணியவள் தன் கணவன் என்ற உரிமையோடு கேட்கவும் செய்தாள் ” ஏன் நந்தன், கல்யாணம் ஆகி முதல் தடவை இங்க வரோம், இந்த உணர்வு கொஞ்சம் வேற மாதிரி இது ஒருவிதமா சந்தோசமா இருக்குல ???” என்று கேட்டாள்..

அவனோ ஏதோ ஜோக் கேட்டவன் போல சிரித்துவிட்டான்.. இவன் ஏன் இப்படி சிரிக்கிறான் என்று நோக்கினாள்.. கோவிலில் அமர்ந்திருந்த ஒருசிலர் கூட திரும்பி பார்த்தனர்..

“ ஸ்ஸ்” என்று தன் சிரிப்பை தானே அடக்கி “ என்ன மிது இது ??? இப்படியெல்லாம் கூட நீ சைல்டிஷா திங் பண்ணுவியா?? எத்தனை வருசமா இந்த கோவிலுக்கு நீ வர?? நேத்து கூட இங்க தான் நம்ம கல்யாணம்.. ஒரே நாள்ல இந்த கோவில்ல எதுவும் மாறலை.. அப்புறம் என்ன உனக்கு இங்க வித்தியாசமான உணர்வு?? வந்த வேலையை பார்த்தோமா கிளம்பினமான்னு இருக்கனும் மிது..” என்று கூறினான்..

என்ன கூறுவான் என்று எதிர் பார்த்தவளுக்கு அவனது பதில் நிச்சமாய் ஏமாற்றம் தான்.. அதுவும் இப்படி முகத்திற்கு நேராய் கூறுவான் என்று சிறிதும் எண்ணவில்லை.. யோசனையை அவனையே நோக்கியபடி இருந்தாள்..

“ வெளிநாட்டில வளர்ந்ததுனால இவனுக்கு இப்படி எல்லாம் தோணாதோ?? “ என்று எண்ணியவள் “ ரொம்ப பிராங் டைப் போல, அதுசரி என்கிட்டே தான் இப்படி மனசில இருக்குறதை எல்லாம்  பேசமுடியும்.. மத்தவங்க கிட்ட இப்படி நடந்துக்க முடியுமா ???”என்று சரியாய் தவறாய் நினைத்தாள்..

“ என்ன மிது என்ன யோசனை ?? கிளம்பலாமா ??” எனவும்  பதில் எதுவும் கூறாமல் தலையை மட்டும் அசைத்தாள். அவள் முகத்தில் என்ன கண்டானோ அவளது கைகளை பிடித்து

“ மிது டியர்.. இந்த நிமிஷம் நான் தான் ரொம்ப ஹாப்பியான மனுஷன்.. நான் என் லைப்ல உன்னை பார்ப்பேன், கல்யாணம் செய்வேன்னு எல்லாம் நினைக்க கூட இல்லை.. ஆனா டியர் நிஜமா சொல்றேன் நீ இப்படி நான் சொல்றதை எல்லாம் கேட்டு, எனக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கும்போது ஐம் டூ ஹாப்பி.. “ என்று கூறியவனின் முகத்தை பார்த்தவளுக்கு அத்தனை நேரம் இருந்த கலக்கம் இருந்த இடம் தெரியவில்லை..

“ என்ன நந்தன் இது…..” என்று அவளும் அவனது கைகளை பற்றிக்கொண்டாள்..

“ நிஜம் தான் டார்லிங்… நீ எனக்கு பிடிச்சதை எல்லாம் மறுபேச்சு பேசாமல் செய்யும் போது, எனக்கு இன்னும் இன்னும்…” என்று கூறி நிறுத்தியவன் அவளது முகத்தையே பார்த்தான்..

“ இன்னும் இன்னும் உன்னை பிடித்திருக்கிறது என்று கூருவானோ??” என்று மிக ஆவலாய் மிதிலாவும் அவன் முகம் நோக்கினாள்,

“ இன்னும் இன்னும் நீ வேணும் போல இருக்கு மிது…” என்றான் அழுத்தமாய்.. இந்த அழுத்தமான குரலுக்கு என்ன அர்த்தம் என்று அவளுக்கு புரியவில்லை.. மீண்டும் மனதில் ஒரு நெருடல், வேண்டும் என்பதற்கும், பிடித்திருக்கிறது என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறதே..

நம்மிடம் இருக்கும் எல்லாமே நமக்கு பிடித்துதான் இருக்கிறது என்று சொல்ல முடியாதே.. எதோ ஒருசில தேவைக்காக கூட பிடிக்காத சிலதையும் நம்மோடு வைத்திருப்போம்.. ஒருவேலை அதுபோல தானோ நானும் ??? என்ற எண்ணம் மிதிலா என்ன முயன்றும் அவள் மனதில் தோன்றாமல் இல்லை..

வீட்டிற்கு வரும் வழியில் எல்லாம் இதே யோசனை தான்.. ஆனால் ரகுநந்தனோ அவளை சிறிதும் கண்டுகொள்ளவில்லை..

“ ச்சே நாம் ஏன் இப்படி யோசிக்கிறோம்.. நேத்து தான் கல்யாணம் ஆச்சு.. இன்னிக்கே எனக்கு இப்படியொரு யோசனை வரலாமா ??? ஹ்ம்ம் அப்போ என் நந்தன் மேல எனக்கு நம்பிக்கை இல்லாத மாதிரி தானே ஆகும்.. நோ, நோ ஹி லவ்ஸ் மீ.. அதை அவனுக்கு சொல்ல தெரியலை.. “ என்று மீண்டும் அவனுக்காக தன்னிடமே வாதாடிக்கொண்டாள்..      

இரண்டு நாட்கள் இப்படியே நகர்ந்தது மிதிலாவிற்கும் ரகுநந்தனிற்கும்.. இருவரும் வீட்டில் தான் இருந்தனர்.. அவ்வப்போது வெளியே சென்று வந்தனர்..

மிதிலாவை முழுவதுமாய் தனக்கு பிடித்தது போல இருக்க வைத்தான் ரகுநந்தன். அவனை பொருத்தவரைக்கும் அவனது பார்வை எதை பார்க்கிறதோ அதையே தான் மிதிலாவும் பார்க்கவேண்டும், என்ன நினைக்கிறானோ அதையே அவள் செயல்படுத்தவேண்டும்.. அவனது தேவைகளை பார்த்து பார்த்து கவனிக்கவேண்டும் இப்படி அவளுக்கு அவன் மட்டுமே உலகம் என்பது போல ஆக்கி வைத்துவிட்டான் இரண்டே நாட்களில்..

மிதிலாவுமே இதை எல்லாம் முழு மனதாய் தான் செய்தாள்.. அவளை பொருத்தவரைக்கும் அவனது காதல் கொண்ட மனது தன்னை எப்பொழுதும் நாடுகிறது என்று எண்ணினாள்.. பிறகு என் கணவனுக்கு நான் செய்கிறேன் என்று பெருமையாக கூட நினைத்துக்கொண்டாள்..

மூன்றாவது நாள் “ மிது இன்னிக்கு நீயும் நானும் மில்லுக்கு போகணும்.. சீக்கிரம் ரெடி ஆயிட்டு வா “ என்றான்..

ஜெகதா கூட கூறினார் ஒன்னும் ஒருவாரம் போகட்டும் பிறகு கூட செல்லலாம் என்று ஆனால் நந்தன் முற்றிலும் மறுத்துவிட்டான்..

“ நோ பாட்டி.. இனிமே வேலையை தள்ளி போடக்கூடாது… ஜஸ்ட் ஒன் வீக் மட்டும் மிது என்கூட வரட்டும் அப்புறம் உங்க பேத்தி உங்க கூடத்தான் இருப்பா “ என்று சிரித்தே சமாளித்துவிட்டான்..

இருவரும் கிளம்பி சென்ற பிறகு ஜெகதாவிற்கு மனம் ஏனோ ஒருவிதமாய் தவித்தது..

கோகிலாவை அழைத்து “ என்ன கோகி, இந்த பொண்ணு மிதிலா இவன் சொல்ற ஆட்டத்துக்கு எல்லாம் ஆடுறாளே? எத்தனை நாளுக்கு இப்படி இருக்க முடியும் சொல்லு… எனக்கு என்னவோ நம்ம கொஞ்சம் யோசிச்சு செய்திருக்கணும் போல இருக்கே “ என்றார் கவலையாய்..

கோகிலாவிற்குமே இதே எண்ணம் தான். அவரும் மிதிலாவையும் ரகுநந்தனையும் கவனித்துகொண்டு தானே இருந்தார்.. புதுமண தம்பதிகளுக்கும் அதிலும் விரும்பி திருமணம் செய்தவர்கள் நடந்துகொள்வது போலவா இவர்கள் நடந்து கொள்கிறார்கள என்று எண்ணினார்.. ஆனால் இதையெல்லாம் ஜெகதாவிடம் கூறினால் எங்கே அவரும் வீணாய் வருத்தபடுவார் என்று எண்ணி

“ அட அதெல்லாம் இல்லைமா.. வளர்ந்த பிள்ளைங்க அதான் நாசூக்கா இருக்காங்க.. கல்யாணத்துக்கு முன்னும் இங்கதானே இருந்தாங்க அதான் அதுங்களுக்கு  வித்தியாசம் தெரியாம இருக்குதுங்க…” என்று சமாதனம் செய்தார்..

மிதிலாவிற்கும் ரகுநந்தனிற்கும் ஆலையில் வேலை சரியாக இருந்தது.. அங்கு வேலை பார்த்தவர்கள் கூட  நினைத்தனர் திருமணம் ஆனவர்கள் போலவே இல்லையென்று… மதியம் வரை இருந்து ரகுநந்தனுக்கு எதை எதை எப்படி செய்யவேண்டும் என்று கூறினாள்..

அவள் நினைத்ததை விட நந்தன் வேகமாய் தான் இருந்தான்.. மிதிலாவிற்கே கூட இவனிடம் ஆலையை ஒப்படைத்தது நல்லதுதான் என்று எண்ணும் படி நடந்தான்..

இருவருமே ஒன்றாய் உண்டனர் மதியம்.. அதன் பிறகு நந்தன் பண்ணைக்கு கிளம்பவும் மிதிலா மாலை வரை இருந்துவிட்டு வீட்டிற்கு செல்வதாய் கூறினாள்.. ஆனால் ஏனோ இதற்கு அவன் சம்மதிக்கவில்லை..

“ வேண்டாம் மிது… கிளம்பு.. நான் உன்னை வீட்டில் விட்டு பண்ணைக்கு போகணும்.. அங்க ஒரு மணிநேரம் இருந்துட்டு திரும்ப இங்கவந்துட்டு தான் வீட்டுக்கு வருவேன்.. நீயும்  கிளம்பு “ என்றான்..

“ இல்லை நந்தன்…. ஒரு ஒன் ஹவர் தானே நீங்க வரும் வரைக்கும் நான் இருக்கேனே….” என்றாள்..

“ டூ வாட் ஐ சே….” என்று அழுத்தமாய் அவளை பார்த்து கூறியவனின் வார்த்தைகளை மீற முடிவதில்லை மிதிலாவாள்.. மனமே இல்லாமல் எழுந்துவந்தாள்..

“ நீங்க பண்ணைக்கு போங்க நந்தன்.. நான் வீட்டுக்கு போயிக்கிறேன்.. எத்தனை தடவை அலையணும் நீங்க “ என்று அவனுக்காக தான் கூறினாள் மிதிலா ஆனால் நந்தனோ

“ ஏன் நான் உன்னை வந்து விடக்கூடாதா???” என்றான்  அவன் குரலில் என்ன இருக்கிறது என்று அவளுக்கு புரியவில்லை.. புரியாமலே அவனை நோக்கினாள்.. அமைதியாய் காரை அமைதியாய் செலுத்திக்கொண்டு இருந்தான்.. அவனது முகம் இறுகி இருந்தது..

தான் மறுத்து பேசுவதால் வந்த கோவம் போல என்று எண்ணிக்கொண்டாள்.. ஆனாலும் இந்த சின்ன விசயத்தில் கூட நான் எதுவும் சொல்லக்கூடாதா?? என்றும் தோன்றியது அவளுக்கு..

“ என்னப்பா கோவமா !!!!??” என்றாள் மெல்ல…

“ ம்ம்ச் நத்திங் “ இதை தவிர வேறு எந்த பதிலும் இல்லை..

மிதிலாவுமே ஒன்றும் பொறுமையின் சிகரம் அல்லவே “ என்ன நந்தன் என்னன்னு சொன்னாதானே தெரியும்…” என்றாள் சற்றே வேகமாய்..

“ ஊப்ஸ்!!!! ஒண்ணுமில்லை மிது… “ என்றவன் அதன் பிறகு பழையபடி நன்றாய் தான் பேசினான்.. ஆனால் மிதிலாவிற்கு தான் மனதில் ஒரு மாதிரி இருந்தது..

வீட்டில் இறக்கிவிட்டு அவன் பண்ணைக்கு சென்றுவிட்டான்..

“ என்ன மிதிலா வந்துட்ட??” என்று ஜெகதா வினவினார்..

“ அட ஆமா பாட்டி… எல்லாம் உங்க பேரன் தான் வீட்டில விட்டிட்டு பண்ணைக்கு போயிருக்காங்க…” என்றால் சலிப்பாய்..

திருமணமான மூன்றாம் நாளே இப்படி ஒரு சலிப்பா??? நிச்சயமாய் எதோ சரியில்லை என்று தோன்றியது ஜெகதாவிற்கு… மிதிலாவையே ஒரு பார்த்தபடி இருந்தார்..

“ பாட்டி நான் உங்க மடியில படுத்துக்கவா??” என்று கேட்டபடி அவரது பதிலுக்கு காத்திராமல் வந்து படுத்தே கொண்டாள்…

ஜெகதாவும் அவளது தலையை தடவி “ என்ன மிதிகுட்டி… என்ன ஒரு மாதிரி இருக்க ?? வேற எதுவும் பிரச்சனையா டா ??” என்றார்

“ அதெல்லாம் ஒண்ணுமில்ல பாட்டி.. ஆனா அப்பப்போ உங்க பேரனை புரிஞ்சுக்க முடியல… அதான் பட் போக போக எல்லாம் சரி ஆகிடும்..” என்றாள் உள்ளதை மறைக்காது..

“ எல்லாருக்குமே கல்யாணம் ஆனா பிறகு இப்படிதான் இருக்கும் கண்ணம்மா.. எல்லாம் புரியுற மாதிரி இருக்கும் ஆனா சில நேரம் புரியாது.. ஆனா வாழ்க்கையோட சுவாரசியமே இதுல தான் இருக்கு.. ஒருத்தரை பத்தி முழுசா தெரிஞ்சிட்டா அதுல என்ன த்ரில் இருக்கு சொல்லு.. சில நேரம் புதுசா நடக்கிற சில விசயங்கள் தான் நம்மளை வாழ்கையை செலுத்த தூண்டுகோலா உதவும்…” என்று அறிவுரை கூறினார்..

மிதிலாவிற்கு மனம் இப்பொழுது கொஞ்சம் தெளிந்தது போல இருந்தது.. ஒன்றும் கூறாமல் அவரது மடியை கட்டிக்கொண்டாள்..

நந்தன் இந்த நேரத்தில் பண்ணைக்கு வருவான் என்று முகேஷிற்கு தெரியவில்லை.. அவன் யாருடனோ போன் பேசிக்கொண்டு இருந்தான்..

“ உனக்கு எத்தனை தரம் சொன்னாலும் அறிவே இல்லையா ??? இன்னும் கொஞ்ச நாளைக்கு இந்த பக்கம் வரவே வராதே.. விஷயம் கொஞ்ச நாளில அடங்கிடும்… அப்புறம் வா.. நானே உனக்கு இங்க ஒரு வேலை வாங்கி கொடுக்கிறேன் “ என்று படு காரசாரமாய் பேசிக்கொண்டு இருந்தான்..

எப்பொழுதும் ரகுநந்தன் மெல்ல தான் சுற்றி முற்றி என்ன வேலை நடக்கிறது என்று கவனித்தபடி வருவான்.. அவனது கவனம் எல்லாம் சுற்றுபுறத்தில் தான் இருக்கும்..

அப்படி வந்தவனுக்கு இந்த முகேஷின் பேச்சு காதில் விழுந்தது அதிசயமே இல்லை.. அதுவும் ரகுநந்தனின் அறையில் அமர்ந்துக்கொண்டே இப்படி பேசிக்கொண்டு இருந்தான்..

“ யாருகிட்ட இப்படி பேசுறான்?? ஒருவேளை அந்த சுகிர்தாவோ?? இல்லையே இது வேற மாதிரி இருக்கே…” என்று யோசித்தவன் பின்பு ஒன்றும் தெரியாதவன் போல உள்ளே வந்தான்..

நந்தனை கண்டதும் முகேஷிற்கு ஒரு நிமிடம் என்ன செய்வது என்று தெரியவில்லை..

“ சா… சார்… வா.. வாங்க….என்ன இந்த… இந்த நேரம்  ” என்று திக்கி திணறினான்..

“ அட என்ன முகேஷ் என்னை பார்த்தா கோஷ்ட் மாதிரி இருக்கா என்ன??? இப்படி முகம் எல்லாம் ஸ்வெட் ஆகுறது” என்று நக்கலாய் கேட்டபடி அமர்ந்தான்..

“ அதில்லை சார்.. நீங்க… இங்க.. இந்நேரத்தில…” என்று இழுத்தான்..                        

“ எஸ் நான் தான்… இங்க தான்… இந்நேரத்தில தான்.. ஏன் வர கூடாதா என்ன ???” என்றான் நந்தன் … மீண்டும் குரலில் ஒரு எகத்தாளம்..

சட்டென்று சுதாரித்த முகேஷ் “ அதுக்கென்ன சார் தாராளமா வரலாம்.. இங்க உங்க பண்ணை.. நீங்க முதலாளி.. எப்போ வேணா வரலாம் போகலாம்…” என்றான் ஏதோ ஜோக்கை சொல்வது போல..

அவனையே பார்த்தவன் “ அது சரி இந்நேரத்தில உங்களுக்கு என் ரூமில் என்ன வேலை முகேஷ் ???” எனக்கேட்கவும் தூக்கிவாரி போட்டது முகேஷிற்கு..

“ ஆ !! அது வந்து.. வந்து.. அதான் சார் நீங்க வந்துட்டிங்களான்னு பார்க்க வந்தேன்…அவ்வளோ தான் அவ்வளவே தான்.. நான்.. நான் கிளம்புறேன் சார்.. வேலை நிறைய இருக்கு….” என்றுதப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவிட்டான்..

அவன் செல்வதையே பார்த்த நந்தனுக்கு சிரிப்பு தான் வந்தது..

அதேநேரம் அங்கே விசாலத்தின் வீட்டில், விசாலத்தின் குடும்ப வக்கீல் வந்து பேசிக்கொண்டு இருந்தார்..

“ உயில்படி இப்படி தான் மா இருக்கு.. இதுக்கு வேற வழியே இல்லை.. எல்லாமே பக்காவா இருக்கு… இன்னும் ஒரு மாசத்தில நம்ம இதை செயல் படுத்தலைனா அப்புறம் கோர்ட்டில் இருந்து நோட்டிஸ் வரும்.. அப்புறம் விஷயம் ஊரு முழுசும் தெரியும்…” என்று மிக பவ்வியமாய் கூறிக்கொண்டு இருந்தார்..

விசாலமோ கோவத்தில் “ நான் என்ன நடக்க கூடாதுன்னு நினைச்சேனோ அது அப்படியே நடக்குது.. இத்தனை நாள் ஏன் இந்த உயில் பத்தி என்கிட்டே சொல்லவே இல்லை.. இப்போ ஒருமாசம் இருக்கும் போது வந்து சொன்னா எப்படி ?? “ என்று கர்ஜித்தார்…

“ இல்லைங்கம்மா…. அது…. “ என்று வக்கீல் தலையை சொரிந்தார்..

“ போங்க… போங்க போய் வேறு வழியிருக்கான்னு பாருங்க.. எதுக்கும் கூட இன்னொரு லாயரை வச்சு டிஸ்கஸ் பண்ணுங்க.. பதில் எனக்கு சாதகமா தான் இருக்கனும் புரியுதா” என்று கூறியவருக்கு சரி என்று சொல்வதை தவிர வேறு பதில் இல்லை அவரிடம்…                                

 

 

    

        

    

 

          

                      

            

                                                                                                

                 

      

                                         

                            

            

                                               

                            

 

 

Advertisement