Advertisement

நேசம் – 15

“ மாங்கல்யம் தந்துனானேனா மாமஜீவன ஹேதுனா

கண்டே பத்பனாமி சுபகே சஞ்சீவ சரதசதம்….. “

“ கெட்டிமேளம் கெட்டிமேளம்….” என்று அய்யர் கூறவும், சுற்றி இருந்த அனைவரும் அட்சதை தூவ, முப்பத்து முக்கோடி தேவர்களின் சாட்சியாக, கருவறையில் வீற்றிருந்த அம்மனை மையமாய் கொண்டு முகம் கொள்ளா சிரிப்புடன் மிதிலாவின் கழுத்தில் பொன் மஞ்சள் தாலியை கட்டினான் ரகுநந்தன்.. மிதிலாவின் முகத்தில் அத்தனை ஆனந்தம், சிரிப்பு சந்தோசம், வெட்கம் எல்லாம்..

இந்த காட்சியை பார்க்கும் பொழுது ஜெகதாவின் மனம் சந்தோஷத்தில் மிதந்தது.. கண்கள் தன்னை அறியாமல் கலங்கின.. கோகிலாவிற்கும் கூட கண்கள் பணித்தது..

பின்னே எத்தனை வருசமாய் மிதிலாவை பார்க்கிறார். அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்று வேண்டாத நாள் இல்லை..

இருவரும் ஜெகதாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர்.. மிதிலா கோகிலாவின் காலிலும் விழ போனாள்

“ அட மிதிகுட்டி என்ன இது…. நீங்க எப்பயும் சந்தோசமா தான் இருப்பிங்க சரியா டா “ என்று கூறி உச்சி முகர்ந்தார்..

“ பரவாயில்ல ஜெகதா நீ இத்தனை நாள் பட்ட கவலைக்கு எல்லாம் இப்போ பலன் கிடைச்சிடுச்சு… நல்ல விஷயம் பண்ணிருக்க ஜெகதா இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சு “ என்று உறவில் யாரோ கூறவும் ஜெகதாவின் முகத்தில் அத்தனை சந்தோசம்.. இதை பார்த்த மிதிலாவிற்கு மனதில் அத்தனை நிம்மதி..

அவர்களை பார்த்த ரகுநந்தன், மிதிலாவின் கரங்களை நானும் உனக்கு இருக்கிறேன் என்று உணர்த்த பிடித்தவன் தான் அதன் பின் விடவே இல்லை.. முதலில் கோவிலை சுற்றிவர தான் பற்றி இருக்கிறான் என்று எண்ணியிருந்த மிதிலா அதன் பின்னும் அவன் கைகளை விடவில்லை என்று உணர்ந்து

“ நந்தன் என்ன இது… ??!!! எல்லாரும் பார்க்கிறாங்க” என்று இருவரின் கரங்களை பார்த்து அவனை கேட்டாள்..

“ ச்சு!!! மிது பேபி இனிமே இதுக்கு எல்லாம் நீ தடை சொல்ல முடியாது செல்லம்… என் பொண்டாட்டி நான் பிடிக்கிறேன் உனக்கு என்ன வந்தது..??” என்றான் கிண்டலாய் ஒரு பார்வை பார்த்து..

“ அது சரி அப்போ நான் யாராம் ???” என்றாள் சலுகையாய்..

“ம்ம்ம்ம்…….!!!!!!!! நீ……” என்று யோசித்தவன் மெல்ல அவளது காதுகளில் எதுவோ கூறவும் அவ்வளோ தான் மிதிலாவின் முகம் சிவந்துவிட்டது..

“ச்சி!!! உங்கட்ட போய் கேட்டேன் பாருங்க… கோவில்ல இருந்துகிட்டு என்ன பேச்சு “ என்று முகம் திருப்பிகொண்டாள்..

மேற்கொண்டு அவனது முகம் பார்க்க கூட அவளுக்கு கூச்சமாய் இருந்தது.. அவன் கூறியதை கேட்டு இன்னும் கூட ஒரு தவிப்பு இருப்பதை வெகு நேரம் கழித்தும் உணரத்தான் செய்தாள்..

ஆனால் அவளை அப்படியே விடுவானா ரகுநந்தன், வீட்டிற்கு வந்து விளக்கேற்றி, பால், பழம் உண்டு என்று அனைத்து சடங்கிலும் அவளை சீண்டிக்கொண்டே தான் இருந்தான்..

இத்தனை நாட்கள் என்ன, இத்தனை வருசமாய் மிதிலா ஆடி, ஓடி, சுற்றி திரிந்து, வளைய வந்த வீடுதான் ஆனால் இன்று அவளுக்கு இன்னும் ஒரு ஒட்டுதலை கொடுத்தது.. இது என் வீடு என்ற எண்ணம் மாறி என் கணவன் வீடு என்ற எண்ணம் கொடுத்தது.. அதுவே அவளுக்கு இன்னும் பூரிப்பை கொடுத்தது..       

மிதிலா பொறுத்து பொறுத்து பார்த்தாள்.. “நந்தன் கொஞ்சம் சும்மா தான் இருங்களேன்.. பாருங்க எல்லாம் நம்மையே பார்க்கிறாங்க…” என்று அவனை அடக்க பார்த்தாள்..

“ ம்ம்ச் பார்த்தா பார்க்கட்டும்.. நம்ம என்ன ஜஸ்ட் பேசிட்டு தான் இருக்கோம்.. நீ பாரின் வந்து பாரு பப்ளிக்கா என்னென்ன நடக்குதுன்னு… “ என்று அவன் விளக்க முற்படவும் கையெடுத்து கும்பிட்டுவிட்டாள்

“ அய்யா !! சாமி நான் தெரியாம சொல்லிட்டேன்… நீங்க என்னவோ பண்ணுங்க..” என்றவளிடம்

“ அட என்ன மிது இப்படி இவ்வளோ சீக்கிரம் பெர்மிசன் கொடுத்துட்ட??? அப்போ நான் என்ன வேணா பண்ணலாமா ??? அப்போ யாரு பார்த்தாலும் உனக்கு கவலை இல்லையா  ???” என்றான் ஒரு மார்க்கமாய்..

அத்தனை பேர் சூழ்ந்திருக்கையில் இவர்கள் பேசுவது யார் காதிலும் விழாது என்றாலும் முக மாறுதல்கள் கூடவா தெரியாது அதனால் மிதிலா தான் பெரும் தவிப்பிற்கு ஆளானாள்..

வெட்கம் என்ற பெயரில் அமைதியாய் அமர்ந்துக்கொண்டாள்.. சிறிது நேரம் கழித்து, வந்தவர்கள் எல்லாம் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்கு ஓய்வு எடுக்க சென்றனர்.. மாலை தானே வரவேற்பு..

மிதிலாவிற்குமே சற்று ஓய்வு எடுத்தால் நல்லது என்று இருந்தது.. முன் தினம் சுகிர்தாவால் ஏற்பட்ட கலாட்டா, இரவு சரியான தூக்கம் இன்மை, இது போதாது என்று திருமணத்தை எண்ணியே மனதில் இயல்பாய் தோன்றும் பயம் இதெல்லாம் அவளை அசதியுற செய்தது..

நேற்று வரை தன்னிஷ்டத்திற்கு இந்த வீட்டில் அலைந்து திரிந்தவள் தான். ஆனால் இன்று அனைத்துமே மாறியதை போல உணர்ந்தாள்.

சென்று ஓய்வு எடுப்பதா வேண்டாமா ??? எங்கே செல்வது?? தன் அறைக்கா ?? இல்லை ரகுநந்தனின் அறைக்கா ?? இப்படி ஆயிரம் கேள்விகள் அவள் மனதில் வளம் வந்தான.. இதை கோகிலா, ஜெகதா இருவரும் உணர்ந்தே இருந்தனர் போல..

“ மிதிம்மா போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு டா… மதியம் நாங்க எழுப்பும் போது எழுந்தா போதும்” என்று ஜெகதா கூறவுமே ரகுநந்தன்

“ ரொம்ப தேங்க்ஸ் பாட்டி, வா மிது போலாம் “ என்று அவளது கைகளை பிடித்து எழுப்பினான் நந்தன் வேகமாய் ..

கோகிலா சிரித்துக்கொண்டே “ தம்பி மிதி அவ ரூம்க்கு போய் ரெஸ்ட் எடுக்கட்டும் நீங்க உங்க ரூம்க்கு போங்க…” என்றார் மெல்ல.. மிதிலாவிற்கோ இவன் படுத்தும் பாட்டில் சங்கடம் பிடுங்கி தின்றது..

“ அட என்ன கோகிலாக்கா இப்படி சொல்றிங்க??? இப்போ நாங்க கல்யாணம் பண்ணிகிட்டோம் அப்புறம் ஏன் அவ ரூம்க்கு போகணும் ???” என்றான் அப்பாவியாய்..

இதற்கு கோகிலா என்ன பதில் கூற என்று கேட்கும் விதமாய் ஜெகதாவின் முகம் பார்க்க,  ஜெகதா “ அடேய் நந்து… அவ உன் மனைவி தான் யாரும் இல்லைன்னு சொல்லலை… நேத்து இருந்து ரெண்டு பேருமே சரியான தூக்கம் இருக்காது.. போய் அவங்கவங்க ரூமில தூங்குங்க…

ரகுநந்தன் முகம் போன போக்கை பார்க்கவேண்டுமே.. மிதிலாவிற்கு ஒருபுறம் சிரிப்பை வேறு அடக்க முடியவில்லை.. அவனை பார்த்து சிரித்தவாறே அறைக்குள் சென்றுவிட்டாள்..

“ சிரி சிரி நல்லா சிரி… என்கிட்டே தானே வரணும் அப்போ பார்த்துக்கிறேன்.. என்னை பார்த்தா கிண்டலா இருக்கா மிது….” என்று அவளை செல்லமாய் கடிந்தவாறே அவனும் சென்றுவிட்டான்..

மிதிலாவிற்கு கண்கள் மூடினாலும் உறக்கம் வரவில்லை.. இனம் புரியாத உணர்வொன்று அவளை போட்டு படுத்தியது.. வெறுமெனே கண்களை மூடி படுத்தவளுக்கு நந்தனின் யோசனை வந்தது..

“ நமக்கு இப்படி இருக்கே ஒருவேளை அவனுக்கும்.. இல்லை இல்லை அவர்.. ம்ம்ம் இனிமே இப்படிதான் நினைக்கணும்.. அவருக்கும் இப்படிதான் இருக்குமோ?? இதே டென்சன் இதே மாதிரி ஒரு படபடப்பு…” என்று யோசித்தாள்..

ஆனால் அவள் எண்ணத்தின் நாயகனோ மிக மிக மகிழ்ச்சியாக தன் நண்பன் சதிஸோடு அரட்டையில் இருந்தான்..

“ டேய் மச்சி…. ஐம் டூ ஹாப்பி டா.. இவ்வளோ சீக்கிரம் நீ பேமிலி மேன் ஆயிடுவன்னு கொஞ்சம் கூட நினைக்கவே இல்லை ராக்கி.. மை ஹார்டி விஷஸ் டா… அண்ட் ஐம் சிரியஷ்லி சேயிங், மிதிலா உன் வைப் நீ தான் இன்னும் நல்லா பார்த்துக்கணும் “ என்று ரகுவின் நண்பனாய் மட்டும் அல்லாமல் மிதிலாவின் தோழனாகவும் பேசினான் சதிஸ்..

“ ஹா ஹா !!! தேங்க்ஸ் எ லாட் மச்சி…. நீ சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.. ஷி இஸ் மைன்… ஹியர் ஆப்டர் அவளுக்கு எல்லாமே நான் தான்.. சோ நான் ரொம்பவே நல்லா பார்த்துப்பேன்…” என்று வாக்கு கொடுத்தான் தன் நண்பனுக்கு…

அதன் பிறகு இன்னும் சிறிது நேரம் பேசியபின் முதல் நாள் சுகிர்தா வந்து செய்த அத்தனை கலேபரத்தையும் சதிஸிடம் கூறவும் அதிர்ந்தேவிட்டான் அவன்..

“ ஹே !!! என்ன ராக்கி சொல்ற?? இப்படியும் கூட இருப்பாங்களா?? பட் மிதிலா இஸ் ரியலி கிரேட் டா மச்சி.. எப்படி எவ்வளோ பிரில்லியண்ட்டா ஹான்டில் பண்ணிருக்காங்க.. சூப்பர்ப் டா.. “ என்று பாராட்டியவன்

“ ஆமா ராக்கி மிதிலா இந்த அளவுக்கு உன்மேல பாசமா, நம்பிக்கையா இருக்குறதுக்கு நீ என்னடா பண்ணுன?? எனக்கு தெரிஞ்சு நீ அப்படி ஒன்னும் ரொம்ப சாப்ட் கிடையாது.. போனதில இருந்து உனக்கும் மிதிலாக்கும் அப்படி ஒன்னும் நல்ல சீன்ஸ் இல்லை.. பின்ன எப்படி டா லவ்வு…………………??????” என்று சந்தேகமாய் இழுத்தான்..

இதை கேட்டு முதலில் பலமாய் சிரித்த ரகுநந்தன் “ ஹா ஹா !!!! மச்சி வாட் யு ஆர் சேயிங்??? லவ்வா???!!!!!! ஓ !!! மை காட்!!!! “ என்று கேட்டு மீண்டும் சிரித்தான்..

சதிஸிற்க்கு இதை கேட்டு திக்கென்றது.. அவன மனதில் ஆயிரம் கேள்விகள் எழும்பின.. நண்பன் என்ற உரிமையில் தன் மனதில் தோன்றிய அத்தனை கேள்விகளையும் கேட்டான்..

“ ஹே !! பின்னே ஏன் டா கல்யாணம் பண்ண ?? லவ் இல்லைனா ஏன் டா மேரி மீன்னு கேட்ட?? இது அந்த பொண்ணுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்?? அதை விட ஒருத்தர் மேல விருப்பமே இல்லாம எப்படி டா அவங்க கூட வாழ முடியும்.. சி ராக்கி நம்ம வெளிநாட்டில வளரந்தவங்களா இருக்கலாம்.. பட் வி ஆர் இந்தியன்ஸ்.. நம்ம தாட்ஸ் எல்லாம் அப்படித்தான் இருக்கனும்…” என்று மிக நீளமாய் பேச ஆரம்பித்துவிட்டான்…

அவன் பேசி முடிக்கட்டும் என்று பொறுமையாய் காத்திருந்த ரகுநந்தன் “ ஷ்ஷ்!!! எப்போ இருந்து சதிஸ் நீ இப்படி பேச ஆரம்பிச்ச??? ஹப்பா !!!! முடியல.. லுக் சதிஸ்.. என்னைய பொருத்தவரைக்கும் லவ் மேல இருந்த நம்பிக்கை போயிடுச்சு.. போதும் ஒருத்தியை நான் லவ் பண்ணி பட்டது…. அப்புறம் இன்னொன்னு உலகத்துல எல்லாரும் காதலிச்சு தான் கல்யாணம் பண்றாங்களா இல்லையே ??? நமக்கு அமையுற வாழ்கையில நம்மை அப்படியே பிக்ஸ் பண்ணிட்டு வாழ்கைய நகர்த்திட்டு போய்கிட்டே இருக்கனும். அது தான் புத்திசாலிக்கு அழகு”

“ அப்புறம் நீ கேட்டியே ஒரு கேள்வி ஒருத்தரை பிடிக்காம எப்படி அவங்க கூட வாழ்றதுன்னு,  மிதிலாவை பிடிக்கலைன்னு நான் சொல்லவே இல்லையே.. சி மிதுவை கல்யாணம் பண்ணனும்ன்னு முடிவு எடுத்த அந்த செகண்ட்ல இருந்து அவளை என் லைப் பார்ட்டனரா நான் பிக்ஸ் பண்ணிட்டேன்.. அவளும் ஹேப்பியா தான் இருக்கா!! சோ இதுல எங்க வந்தது இந்தியன் தாட்ஸ் எல்லாம்.. “ என்றான்

சதிஸிற்கு கேட்கவே குழப்பமாய் இருந்தது.. “ இதென்ன டா இது இவன் ஏதோ வேலைக்கு ஆள் பிக்ஸ் பண்ற மாதிரி பேசிட்டு இருக்கான்.. “ என்று எண்ணியவன்

இன்று தான் திருமணம் முடிந்து உள்ளது, இன்றே வேறு எதையும் கேட்டு குழப்பக்கூடாது, மிதிலாவின் அன்பில் நிச்சயம் இவன் மனம் மாறும் என்ற நம்பிக்கையில் மேற்கொண்டு பேச்சை வளர்க்காமல் முடித்தான்..

சதிஸின் மனம் ரகுநந்தனுக்காகவும், மிதிலாவிற்காகவும் ஆண்டவனை பிரார்த்தித்தது..

ஆனால் இதெல்லாம் எங்கே நம் நாயகனுக்கு புரிய போகிறது?? அவன் தன் அன்னையின் புகைப்படத்தை எடுத்து வைத்து பேசிக்கொண்டு இருந்தான்…

“ அம்மா !!! எனக்கு நல்லா தெரியும்.. இப்போ உங்க மனசு ரொம்ப நிம்மதியா இருக்கும்தானே….. உங்க விருப்பப்படி இங்கயே நான் எனக்கு ஒரு வாழ்கையை அமைச்சுகிட்டேன்… மிது ரொம்ப நல்ல பொண்ணு மா.. என்ன நீங்க இப்போ எங்ககூட இல்லை அது ஒன்னு தான் குறை.. எனக்கு இல்லை இல்லை எங்க ரெண்டு பேருக்கும் நீங்க பிளஸ் பண்ணனும்மா …” என்று மேற்கொண்டு இன்னும் பேசிக்கொண்டு போனான்..

அதன் பின் எப்பொழுது உறங்கினான் என்று அவனுக்கே தெரியாது.. கோகிலா தான் வந்து மதிய உணவிற்கு எழுப்பினார்.. எழுந்து வந்து பார்த்தவனுக்கு மிதிலாவும் அப்பொழுது தான் எழுந்து வந்தது கண்ணில் பட வழக்கம் போல தன் வேலையை ஆரம்பித்தான்..

“ என்ன டியர் ஒரே ட்ரீம்ஸா?? பாரு முகம் எல்லாம் எப்படி ரெட்டிஸா இருக்குன்னு…. அப்படி என்ன நினைச்ச ??? சொல் சொல் நானும் கொஞ்சம் சிவக்கிறேன்…” என்று கூறவும் மிதிலாவிற்கோ வெட்கம் பிடுங்கி தின்றது..

“ ஹேய் என்ன பேபி இப்படி இருந்தா நான் என்ன செய்யட்டும் நீயே சொல்லு.. ஜஸ்ட் பேசுறதுக்கு கூட வெட்கபட்டா எப்படிமா ??? அதுவும் நான் தப்பா கூட எதுவும் கேட்கலையே…. “ என்று மேற்கொண்டு அவளை இன்னும் பேசி பேசியே முகம் சிவக்க வைத்துகொண்டு இருந்தான்..

மிதிலாவோ இவன் இப்படி எல்லாம் பேசுவான் என்று சிறிதும் நினைக்கவில்லை.. ஆனாலும் அவன் கேட்பதற்கு எல்லாம் பதில் சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை.. அமைதியாய் இருந்தாலும் பதில் வாங்காமல் விடுவானா அவன் ??

“ நந்தன் ப்ளீஸ் போதும்!!!! நேத்து வரைக்கு நீங்க நல்ல பையனா இருந்திங்க.. இப்போ என்ன ??? கொஞ்சம் சும்மாதான் இருங்களேன், பாட்டி, கோகிலாக்கா எல்லாம் அங்க இருந்து நம்மை தான் பார்த்துட்டு இருக்காங்க… “ என்று சற்றே கண்டிப்பாய் கூறவும் தான் அடங்கி வழிக்கு வந்தான்..

ஆனாலும் அவன் பார்வை மட்டும் மிதிலாவை விட்டு நகரவில்லை.. கோகிலா அங்கிருந்தவாறே “ தம்பி கொஞ்சம் தட்டுல என்ன இருக்குனு பார்த்து சாப்பிடுங்க” என்று தன் பங்கிற்கு வாரிவிட்டு சென்றார்..

“ நான் என் பொண்டாட்டியை பார்க்கிறேன்… இவங்க எல்லாருக்கும் என்ன வந்தது… ஹ்ம்ம் நேரம் டா ராக்கி “ என்று முனங்கிக்கொண்டே உண்டான்.. மிதிலாவிற்கு அவனது புலம்பலை கேட்டு ஒருபக்கம் சிரிப்பு வேறு..

ஆனால் எங்கே தான் சிரித்தால் மீண்டும் ஆரம்பித்து விடுவான் என்று அமைதியாய் உண்டாள்.. இன்னும் சிறிது நேரத்தில் பார்லரில் இருந்து வந்துவிடுவார் அதன் பிறகு தயாராகவே நேரம் சரியாய் இருக்கும் என்று நேரத்தை கணக்கிட்ட படி இருந்தாள்..

ஆனால் ரகுநந்தனோ வேறு எண்ணிக்கொண்டு இருந்தான்.. அவன் முகத்தை கவனித்த மிதிலா

“ என்னப்பா !!! என்ன யோசனை ???” என்றாள்

“ ஹா !!! நத்திங் மிது…. சதிஸ்கிட்ட பேசினேன்.. ஜஸ்ட்.. ஜஸ்ட் அதை பத்தி யோசனை பண்ணிட்டு இருந்தேன்.. தட்ஸ் ஆல்…” என்று கூறி பேச்சை முடித்து எழுந்து சென்றுவிட்டான்..

அவன் செல்வதையே பார்த்தவளுக்கு தான் என்ன உணர்கிறோம் என்றே அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை.. தலையை உலுக்கிக்கொண்டு எழுந்து சென்றுவிட்டாள். அதன் பிறகு சிறிது நேரத்திலேயே அழகு நிலையத்தில் இருந்து மிதிலாவை அலங்கரிக்க வந்துவிட்டனர்..

அதன்பின் மிதிலாவிற்கு வேறு எந்த யோசனையும் ஓடவில்லை.. காலையில் கோவிலில் திருமணம் என்பதால் அத்தனை அலங்காரம் எல்லாம் எதுவும் வேண்டாம் என்று கூறிவிட்டாள்.. வெறுமெனே மஞ்சள் சேலையில், கூந்தலை தளர பின்னி பூ வைத்து தான் இருந்தாள்.. அதற்கே ரகுநந்தனின் பார்வை அவளை விட்டு நகரவில்லை..

இத்தனை அலங்காரத்தில் தன்னை அவன் பார்த்தால் என்ன செய்வான் என்று எண்ணும் பொழுதே அவளுக்கு மனதில் பட்டாம்பூச்சி பறந்தது..

இளம் ரோஜா நிற வண்ண பட்டு புடவையில், மணப்பெண் அலங்காரத்தில் தேவதையென ஜொலித்தாள் மிதிலா.. அவளுக்கு ஏற்ற ஜோடியாக ரகுநந்தன் முழு சூட்டில் கம்பீரமாய் இருந்தான்.. பார்த்தவர்கள் அத்தனை பேரும் இருவரின் ஜோடி பொருத்தம் பற்றி பேசினர். 

ஜெகதாவிற்கு இதை எல்லாம் காணும் பொழுது நெஞ்சம் மகிழ்ச்சியில் விம்மி தணிந்தது.. முகம் பெருமையில் பூரித்தது.. இவர்கள் இருவரின் வாழ்வையும் எண்ணி எத்தனை கலக்கம் கொண்டு இருந்தார்.. இன்று அந்த கலக்கம் எல்லாம் இருக்கும் இடம் தெரியவில்லை.. தனக்கு இன்னும் ஐந்து வயது குறைந்தது போல உணர்ந்தார்..

மாலை வரவேற்பு, தடபுடலாக வானவேடிக்கையுடன், இன்னிசை கச்சேரியுடன், பல வகை விருந்து சாப்பாட்டுடன் சிறப்பாய் நடந்தது.. முகேஷ் வேறு வழியில்லாமல் எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு பார்கவேண்டியதாய் இருந்தது..

மனதில் அத்தனை கடுப்பு அவனுக்கு. இருக்காதா பின்னே இத்தனை ஆண்டுகளாய் மிதிலாவை எப்படியாவது திருமணம் செய்துவிட வேண்டும் என்று துடித்தானே.. இன்று அவளது திருமணத்திற்கே அவன் வேலை செய்யவேண்டிய நிலைமை வந்ததை எண்ணி நொந்தான்..

“ ச்சே….!!!! ஒரு நிமிசத்தில அந்த சுகிர்தா அறிவு கேட்டவ எல்லாத்தையும் கெடுத்து விட்டுட்டா.. போட்ட திட்டம் மட்டும் சரியா நடந்து இருந்தா, இந்நேரம் அந்த ஜெகதம்மா பேரனை வீட்டை விட்டு துரத்தி இருக்கும், நான் மிதிலாவிற்கு வாழ்கை குடுக்கிறேன்னு சொல்லி மிதிலாவையும், சொத்தையும் என்வசம் கொண்டு வந்திருப்பேன்…” என்று மனதில் மருகிக்கொண்டு இருந்தான்..

முகேஷை பற்றி தெரியாதவனா ரகுநந்தன், அதனால் வேண்டும் என்று அவனை மேடைக்கு அழைப்பதும் ஏதாவது வேலை சொல்லி அவனை கீழே அனுப்புவதுமாக இருந்தான்… அதாவது நீ என்றுமே வேலையால் தான் முதலாளி ஆகா முடியாது என்று சொல்லாமல் சொல்லிகாட்டினான்.. இது மிதிலாவிற்கும் புரிந்தது, முகேஷிற்கும்….

“ டேய் என்னையவா இப்படி அலைய வைக்கிற… உனக்கு ஒருநாள் இருக்கு… “ என்று வன்மமாய் சூளுரைத்து கொண்டான்.. அவனுக்கு நந்தன் மிதிலாவின் முன் இவனை ஒரு வேலைக்காரனை போல நடத்துவது பிடிக்கவில்லை..

வரவேற்பு நிகழ்ச்சி எந்த குழப்பமும், பிரச்சனையும் இல்லாமல் அழகாய் நடந்து முடிந்தது.. இரவு வீட்டிற்கு வரும் போதும் மீண்டும் ஒருமுறை ஆரத்தி எடுத்தார் கோகிலா

நந்தன் “ அக்கா எத்தனை தரம் கா இப்படி ஆரத்தி எடுப்பிங்க, காலையில வேற எடுத்திங்களே!!! நாங்க என்ன இந்த வீட்டுக்கு புதுசா ???” என்று கேட்டபடி மிதிலாவின் கரங்களை விடாமல் பிடித்து உள்ளே அழைத்து வந்தான்..

அதற்கு கோகிலா பதில் கூறுமுன் மிதிலா மெல்ல நந்தனிடம் “ அதையே தான் நானும் கேட்கிறேன் நான் என்ன இங்க புதுசா, சின்ன பிள்ள மாதிரி கை பிடிச்சு கூட்டிவர??” என்றால் கேலியாய்..

சரி அவர்களுக்குள் பேசிக்கொள்ளட்டும் என்று கோகிலாவும் அவர்களுக்கு தனிமை கொடுத்து சென்றுவிட்டார்..

மிதிலாவை தன் கைகளுக்குள் நிறுத்தி“ ஹேய் என்ன பேபி !!! என்கிட்டே தனியா பேசணும்னா சொல்லி இருக்கலாமே, பாரு அக்கா தனியா போயிட்டாங்க.” என்று வேண்டுமென்றே அவளை சீண்டினான்..

“ உங்களை எல்லாம் திருத்தவே முடியாது “ என்பது போல ஒரு பார்த்தவளுக்கு அடுத்து என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை..   மீண்டும் குழப்பம் தன்னறைக்கு செல்வதா ??? இல்லை இங்கேயே இவனோட இருப்பதா??? குளித்தால் தேவலாம் போல இருந்தது மிதிலாவிற்கு.. ஆனாலும் ஏனோ அவனது கைகளுக்குள் இருந்து வெளிவர பிடிக்கவில்லை..

எதோ வேலையாக உள்ளே வந்த முகேஷின் கண்களில் இவர்கள் இருவரும் நின்றிருந்த கோலம் பட்டது.. சும்மாவே அவன் வெந்தது கொண்டு இருந்தான்.. இதில் கண்ணில் வேறு பார்த்தால், எரியும் நெருப்பில் நெய் ஊற்றிய கதை தான்..

அதன் பிறகு ஜெகதா வந்து இருவரையும் அவர்கள் அறைக்கு சென்று குளித்து புது உடை மாற்றி வர சொன்னார்… ரகுநந்தன் அறைக்குள் நுழைந்தவன் அசந்துவிட்டான்.. அத்தனை அழகாய் அவனது அறை அலங்கரிக்கப்பட்டு இருந்தது… மிதிலாவிற்கோ நேரம் ஆக ஆக நெஞ்சம் படபடவென்று அடிக்க ஆரம்பித்தது..

சற்று முன்னர் கூட அவனது அணைப்பில் இருந்தாள் தான் ஆனால் இப்பொழுது ஏனோ மனம் துடித்தது… வேண்டுமென்றே நேரத்தை கடத்தினாள்.. பயம் தான் போல… 

கோகிலா வந்து  “ மிதிகுட்டி எத்தனை நேரம் டிரஸ் மாத்த… சீக்கிரம் டா.. நல்ல நேரம் முடிய போது.. “ என்று கதவை தட்டினார்..

“ ஒரு அஞ்சு நிமிஷம் கா “ என்று பதில் அளித்தவள் பத்து நிமிடமாகியும் கதவை திறக்கவில்லை….

மீண்டும் கோகிலா வந்து கதவை தட்டினார் “ மிதிம்மா… இப்போ நீ கதவை திறக்க போறியா இல்லை தம்பிய வர சொல்லட்டுமா !!!!???” என்று அவர் செல்லமாய் மிரட்டவும் வேகமாய் கதவு திறந்து வெளியே வந்தாள்..

அவளை மேலிருந்து கீழே பார்த்தவரின் முகத்தில் அத்தனை சந்தோசம்.. ” அழகி டா மிதி நீ… உன் வாழ்க்கையும் அதே போல அழகாய் இருக்கும்.. இருக்கனும்.. “ என்று கூறி வாழ்த்தி அவளை ரகுநந்தனின் அறைக்கு அழைத்து சென்றார்..

“ ஏன் கோகிலாக்கா நானும் அவரும் இதே வீட்டில தான் இருக்கோம்.. அதென்ன நான் தான் அவங்க ரூம்க்கு போகனுமா ??? அவங்க என் ரூம்க்கு வரக்கூடாதா ??!!!” என்று மீண்டும் தன் இடக்கு பேச்சு வேலையை கோகிலாவிடம் தொடர்ந்தாள்..

“இந்த நேரத்தில கூட இவளுக்கு வாய் குறையுதா ???” என்று எண்ணிய கோகிலா பின் “ மிதிம்மா உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சு, இனிமே உனக்கு தம்பிக்குனு தனியா எதுவும் இல்லை.. எல்லாமே உங்களுக்கு பொதுவானது தான்.. சரியா.. பார்த்து நல்லபடியா நடந்துக்க டா… “ என்று அவளை நந்தனின் அறைக்குள் விட்டு சென்றுவிட்டார்..

மிதிலாவிற்கோ முன்னே எட்டு வைக்க கால்கள் வரவில்லை.. ரகுநந்தன் கதவு திறக்கும் ஒசைக்கேட்டு  இவள் பக்கம் திரும்பி பார்த்தான்.. பார்த்தவன் பக்கென்று சிரித்துவிட்டான்..

இருக்காதா பின்னே திருவிழாவில் காணமல் போன குழந்தை போல விழித்துக்கொண்டு இருந்தாள் மிதிலா..

“ ஹா ஹா!!!! டியர் என்ன இது இப்படி ஒரு ரொமாண்டிக் லுக் உன்கிட்ட நான் எதிர்பார்க்கவே இல்லை.. இப்படி எல்லாம் பார்த்து என்னை டெம்ப்ட் பண்ணாத!!!!” என்று மீண்டும் அவளை சீண்ட ஆரம்பித்தான்..

அவ்வளவு தான் மிதிலாவிற்கு அத்தனை நேரம் இருந்த பயம் போய் ” என்ன ??? நான் நான் உங்களை டெம்ப்ட் பண்றேனா ????” என்று கேட்ட படி வேகமாய் முன்னே வந்தாள்..

“ ஹா ஹா !! குட் இப்படிதான் வரணும். அதை விட்டு அப்படியே சிலை மாதிரி அட்டென்சன்ல நின்னிருந்தா எப்படி “ என்று கேட்டவாறு அவளது கைகளில் இருந்த பால் செம்பை வாங்கினான்..

அவள் இன்னும் அப்படியே இருப்பதை உணர்ந்து “ என்ன டியர் காலுக்கு விழ போறியா???!!! சீக்கிரம் விழுமா… நேரம் ஆகுதுல “ என்று வேண்டுமென்றே தன் இருகைகளையும் நீட்டினான்..               

அவள் புரியாமல் பார்த்தாள்.. “ என்ன என் கைய காலா நினைச்சு தொட்டு கும்பிடு.. ம்ம்ம் பாஸ்ட் மிது…” என்றான் கண்ணில் சிரிப்புடன்..

“ ச்சு!! என்னப்பா இது இப்ப கூட கிண்டல் பண்ணிட்டு…” என்று சலுகையாய் அவனது கைகளை தட்டிவிட்டாள்..

“ ஓ !! அப்போ கிண்டல் பண்ண கூடாதா ??? ஹ்ம்ம் வேற என்ன செய்யலாம்?? நீயே சொல்லேன்!! எனக்கு வேற இப்போதா கல்யாணம் ஆகிருக்கு.. எதுவும் தெரியாது இல்லையா ???!!!!” என்று பேச்சை வளர்த்தான்..

“ பேச்சை பார்”  என்று இருந்தது மிதிலாவிற்கு…

“ என்ன டியர் எதுவுமே சொல்லமாற்ற ???” என்றான் அவளை தன் மீது சாய்த்துக்கொண்டு..

“ என்ன சொல்லட்டும் !!!!” என்ன முயன்றும் சத்தமாய் பேசமுடியவில்லை அவளால்..

“ ஹ்ம்ம் !!!!!” சிறிது நேரம் யோசித்தவன் “ டார்லிங் சொல்லு…” என்றான்..

“வாட் !!!!!” அதிர்ந்து விழித்தாள்..

“ ஆமா மிது… நீ இதுவரைக்கும் ஒன் டைம் தான் டியர் சொல்லிருக்க, சோ இப்போ டார்லிங் சொல்லு…” என்றான் பிடிவாதமாய்..

“ அடக்கடவுளே”  என்று வந்தது மிதிலாவிற்கு..

“ ம்ம்ம் சொல்லு மிது டார்லிங்…” என்று அவளை இன்னும் இறுக்கினான்..

“ எனக்கு சொல்லணும் போல இருக்கும் போது தான் சொல்வேன் நந்தன்.. “ என்றால் அவளும் பிடிவாதமாய்..

“ ஹ்ம்ம் !! உனக்கு எப்போ அப்படி இருக்கும்???” சிறுவன் போல கேள்வி கேட்டான்..

“ கேள்வி கேட்கிற நேரமா இது ??!!” என்று நோந்துகொண்டவள்

“ தோணும் போது கண்டிப்பா கூப்பிடுவேன்… உங்களை சொல்லாம வேற யாரை சொல்ல போறேன் சொல்லுங்க.. “ என்று அவனை சமாதானம் செய்தாள்..

அரைகுறையாய் சரி சொன்னவன் “ சரி அப்போ ஒரு கிஸ் குடு போதும் !!!” என்றான்..

மிதிலாவிற்கோ இவனை இரண்டு அடி அடித்தால் கூட சரி என்றே இருந்தது.. அமைதியாய் இருந்தாள்..

“ கிஸ் குடு பேபி… இன்னிக்கு ஒரு கிஸ் போதும்.. வி நீட் எ டீப் ஸ்லீப் “

மிதிலா கேள்வியாய் நோக்கினாள்..

“ என்ன பார்க்கிற ?? நீ படம் பார்த்து ரொம்ப கேட்டு போயிட்ட.. பிரஸ்ட் நைட்ன்னா இன்னிக்கே எல்லாம் நடந்திடனுமா என்ன ?? முதல்ல நம்ம ரெண்டு பேரும் ஒரு கம்பார்ட் ஜோன்ல வருவோம் அப்புறம் நடக்க வேண்டியது தானாய் நடக்கும்.. அதுவும் இல்லாம டுடே வீ போத் ஆர் டூ டயர்ட்” என்றான்

மிதிலாவிற்குமே அவன் கூறுவது சரியென்று பட்டது.. மனதிற்கு பிடித்தமாய் கூட இருந்தது.. எத்தனை அழகாய் எடுத்து கூருகிறான்.. நிச்சயம் இவன் என்னை நன்றாய் வைத்துக்கொள்வான் என்ற எண்ணம் தோன்றியது.. எண்ணத்தில் பலனாய் அவனது கன்னத்தில் ஒரு முத்தமும் கிடைத்தது..

“ அட மிது குட்டி டூ பேட்!!! நான் கொஞ்சம் நல்லவன் தான் அதுக்காக இப்படி கன்னத்தில கொடுத்து எல்லாம் சீட் பண்ண கூடாது “ என்று கூறியவாறு அவளையும் அணைத்து அவளது இதழ்களையும் அணைத்தான்…

                                 

                 

                                                                                              

        

                                                     

 

Advertisement