சீதாராமன் சாப்பிடும் அறைக்கு வந்த போது அங்கு அகில ரூபனை தவிர மற்ற அனைவரும் அமர்ந்து இருந்தனர். அனிதாவின் பக்கத்தில் அமர்ந்து இருந்த நவீன் மட்டும் அனிதாவின் காதில் ஏதோ பேசிக் கொண்டு இருந்தான்.
சீதாராமனை பார்த்ததும் தங்கையிடம் பேசுவதை விட்டு விட்டு… பவனியம்மாவிடம்… “இன்னைக்கு என்னம்மா ப்ரேக் பாஸ்ட் …?” என்று கேட்டான்.
இந்த கேள்வியே அவன் ஏதோ பேச வேண்டுமே என்று தான் பேசுகிறான் என்று அங்கு இருந்த அனைவருக்கும் புரிந்து விட்டது.. அவ்வீடின் பொறுப்பு முழுவதும் பார்த்துக் கொள்வது தனட்சுமியும்…சகுந்தலம்மாவும் தான்…பவனியம்மா நாட்டை பார்க்க..ஆவ்வீடின் பெரியவர்கள் வீட்டை பார்த்துக் கொள்வர்..
எதற்க்கும் பவனியம்மாவை தொந்தரவு செய்யாது அவ்வீட்டின் மூத்தவர்கள் இருவரும் பார்த்துக் கொள்ள..இவன் இன்று புதியதாய் டிபன் என்ன என்று கேட்பதிலேயே இவன் ஏதோ பெரியதாய் அடிப்போடுகிறான் என்பதை புரிந்துக் கொண்ட சீதாராமன் இன்றே அனைத்தும் பேசி விட வேண்டும் என்று முடிவு செய்தவராய்…
பவனியம்மாவிடம்… “பவா அகிலா வரலையா…?” என்று கேட்டார்.
அதற்க்கு பவனியம்மா… “இதோ கூப்பிட ஆள் அனுப்பி இருக்கேன்.” என்று பவனியம்மா தன் கணவரிடம் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே தன் முழு நீள சட்டையை ஏற்றி விட்டவாறே அங்கு வந்து அமர்ந்தான் அகில ரூபன்..
தன் எதிரில் அமர்ந்து இருந்த நவீனையும்…அனிதாவையும் பார்த்து… “குட் மார்ன்னிங்…” என்று சிரித்த முகத்துடன் நேற்று நடந்ததிற்க்கு சிறிதும் வருந்தாது அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தான்..
பின் சமையலறை நோக்கி… “ லட்சுமியம்மா… என்ன எல்லோரும் வந்து உட்கார்ந்துட்டாங்க.இன்னும் நீங்க பரிமாற வரல.. சீக்கிரம்..” என்று சமையல் செய்யும் அம்மாவையும் ஏவி விட்டு பின் தன் தந்தையை நோக்கி ஒரு பார்வை பார்த்த வாறே..
“அப்புறம்…ம் சொல்லுங்க. என் கிட்ட சொல்ல ஏதாவது உங்க கிட்ட விசயம் இருக்கா…? உங்க இரண்டு பேர் முகத்தை பார்த்தா எனக்கு தெரிஞ்ச விசயம் உங்களுக்கு தெரிந்து விட்டதுன்னு தெரியுது..
ஆனா தெரிஞ்சும்..மனசு குத்தம்மா இப்படி உட்கார்ந்துட்டு இருக்கிங்கன்னா…. நிஜமா உங்க நெஞ்சு தைரியத்தை பாராட்டியே ஆகனும்.” என்று சொல்லி தன் கை தட்டியவன்..
தொடர்ந்து… “உங்க நெஞ்சு தைரியம் எவ்வளவு அளவு இருக்குன்னு நீங்க தான் முப்பது வருடம் முன்னவே நிருபிச்சிட்டிங்களே..இதுல நான் இப்போ தான் உங்களுக்கு புதுசா தைரியம் வந்தது போல பேசிட்டு இருக்கேன்..நான் ஒரு முட்டாள்…
நிஜமா நான் ரொம்ப பெரிய பெரிய இடியட் தான்… அதுவும் இந்த வீட்டில் பிறந்தவன் இந்த அளவுக்கு இடியட்டா இருந்து இருக்கேன்னா… நிஜமா எனக்கே இது ஆச்சரியம்மா இருக்கு..இதில் ஒன்றில் தான் எனக்கு தெரிஞ்ச உண்மை …
உண்மையா…? இல்ல பொய்யான்னு…? சந்தேகமா இருக்கு… அதுவும் உங்களோட இதோ இந்த வீட்டின் பெரிய மனிஷிங்க என்று சொல்லிட்டு இருக்க இவங்கல நினச்சா தான் இன்னும் இன்னும் ஆச்சரியம்.
ஆனா சரியா தான் சேர்ந்திங்க இரண்டு குடும்பமும்..வேறு வேறா இருந்து இருந்தா நீங்க பண்ண விசயத்துக்கு ஒரு குடும்பத்தில் இருக்க ஒருத்தருக்காவது மனிதாபிமானம் இருந்து இருந்தா….” என்று சொல்லிக் கொண்டு வந்தவன்.. பின் அவனே நிறுத்தியவனாய்…
“அது தான் இல்லேன்னு தெரிஞ்சிடுச்சே அப்புறம் என்ன வீண் பேச்சி…” என்று விட்டெறியாக அவன் பேசிய பேச்சை கேட்க கேட்க அந்த நால்வரும் கூனி குறுகி போய் விட்டனர்..
அதுவும் சீதாராமனுக்கும் பவனியம்மாவுக்கு இதற்க்கு அடுத்து வரும் பேச்சு..இல்லை தாங்கள் சொல்லும் உண்மை…அதை சொல்ல நினைக்கும் போதே உடல் முழுவதும் ஏதோ புழு ஊறுவது போல் இருந்தது..
அந்த வயதில் செய்த அனைத்தும் சரியாக இருக்க..இந்த வயதில் அதை நினைக்கும் போது..அதுவும் தான் பெற்ற குழந்தைகளின் எதிரில் அந்த உண்மை சொல்ல வேண்டுமா என்று யோசிக்கும் போதே இப்போதே தனக்கு சாவு வராதா என்று அந்த தாயுள்ளம் கதறியது..
தாயின் முகத்தை பார்த்த வாறே… “ அந்த உண்மை சொல்லி தான் ஆக வேண்டும்..தெரியாமல் செய்த தவறை மன்னிக்கலாம்.. ஆனால் தெரிந்தே திட்ட மிட்டு செய்த செயலுக்கு… அதை அவங்க அனுபவிச்சே ஆகவேண்டும்.” என்று அகில ரூபன் சொன்னான்.
இவ்வளவு நேரமும் அகில ரூபன் பேச பேச..பெரியவர்கள் யாராவது வாயை திறப்பார்கள் என்று அமைதியாக அகில ரூபனை பேச விட்டு கேட்டுக் கொண்டு இருந்த நவீன்… யாரும் பேச காணும் என்றதும்…
“ஏய் நிறுத்து ..நிறுத்து.. என்ன விட்டா பேசிட்டே இருக்க..என்ன சொன்ன…?என்ன சொன்ன..? இந்த வீட்டில் பிறந்தும்… நீ முட்டாளா இருக்கியா…? மண்டையில் நல்லா ஏத்திக்கடா..நீ இந்த வீட்டு பிள்ளையே இல்ல… முட்டாள்..முட்டாள்…” என்று அவன் கத்திக் கொண்டு இருந்த போது…
சீதாராமன் சொன்ன… “அவன் என் பிள்ளை..அவனும் என் பிள்ளை தான்.” என்று கத்தினார்.
அந்த கத்தலை கேட்ட நவீன்… “அது தான் தெரியுமே..எப்போ நீங்க இவனை தத்து பிள்ளையா பார்த்திங்க…இதோ இவனும் எனக்கு மகன் தான் மகன் தான்னு எனக்கும்.. அவனுக்கும்.. வித்தியாசம் தெரியாது வளர்த்திங்க… ஏன் இன்னும் கேட்டா என்னோட எல்லாத்திலும் அவனுக்கு தான் இந்த வீட்டில் முன்னுரிமை..… பார்த்திங்களா…இன்னைக்கு உங்களையே இந்த பேச்சு பேசுறான்..
உங்கல மட்டுமா… வயசுக்கு கூட மரியாதை தெரியாம பெரியவங்கல பேசுறான்…ஆனா நீங்க இங்க இப்போவும் அவன் தான் என் பிள்ளை என்பது போல பேசுறிங்க… அதுக்கு இவன் தகுதி இல்லாதவன்ப்பா…” என்று சொன்ன மகனின் பேச்சில் பெரிய மகன் முகத்தில் பெரிய ஒரு புன்னகை…
ஆனால் அது அனைவரும் முகத்திலும் இல்லை..சங்கடம் சங்கடம் மட்டுமே..அனிதா மட்டும் குழம்பிய முகத்தில் இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
தன் சின்ன அண்ணன் நவீனை போல் அல்லாது இதில் ஏதோ இருக்கிறது என்று அவள் உணர்ந்த சமயம் .தான் அமர்ந்து இருந்த இருக்கையை விட்டு எழுந்த பவனியம்மா…
“நவீன்….நவீன் உங்க அப்பா சொன்னது உண்மை…அவன் எங்களுக்கு தத்து பிள்ளை கிடையாது..எங்க உண்மையான வாரிசு..அதாவது உங்களுக்கு முன் எங்களுக்கு பிறந்த எங்க மூத்த மகன்…” என்று பவனியம்மா சொல்லிக் கொண்டு இருக்கும் போதே..இடையில் அகில ரூபன்..
நவீனை பார்த்து… “உனக்கு முன் மட்டும் இல்ல..இவங்க கல்யாணத்துக்கு முன் பிறந்தவன்.” என்ற அகில ரூபனின் பேச்சில் இத்தனை நேரம் பேசிய நவீனின் ஆவேச பேச்சு அடங்கியது..
.அதிர்ச்சி… பவனியம்மா சொன்ன அவன் உங்களுக்கு முன் எங்களுக்கு பிறந்த என் மூத்த மகன் என்ற பேச்சே அவனுக்கு அதிர்ச்சி என்றால்… அடுத்து அகில ரூபன் சொன்ன கல்யாணத்துக்கு முன் பிறந்தவன் என்ற பேச்சு அவனுக்கு பேரதிர்ச்சி என்று தான் சொல்ல வேண்டும்…
நவீன் மற்றும் அனிதாவின் அதிர்ச்சி தழுவிய முகத்தை பார்த்த பெற்றோர்கள் தலை நிமிர்ந்து அவர்களை பார்க்க முடியவிலை. எப்படி பார்ப்பார்கள்..வளர்ந்த பையன்கள் எதிரில் .மூன்று நாள் முன் மணம் முடித்த பெண்ணிடம்.. திருமணம் முன்னவே நான் கற்ப்பம் தரித்து விட்டேன்,,,என்பதை…
அதிர்ச்சியில் இருந்து விடுபட்ட நவீனும் அனிதாவும் அகில ரூபனின் முகத்தை அதிர்வுடன் பார்த்தனர்..இவ்வளவு நேரமும் நீதிமன்ற வளாகத்தில் பேசுவது போல் பேசிக் கொண்டு இருந்த அகில ரூபன்..எப்போது பவனியம்மா வாய் திறந்தாரோ இவன் வாய் மூடிக் கொண்டான்..
அதோடு அவன் தன் கைய் பேசியில் ஏதோ பார்ப்பதை பார்த்துக் கொண்டு இருப்பதை பார்த்து நவீனும் அனிதாவும் அதிர்ச்சியிடன் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்…
அகில ரூபன் தலை நிமிர்த்தாது… “என் முகத்தை பாக்குறத விட்டுட்டு உங்க அப்பா அம்மாவின் முகத்தை பாருங்க…இந்த விசயத்தை எப்படி உங்க முன் உங்களை பார்த்து சொல்றாங்கன்னு நான் பார்க்கனும்.”
தான் பார்த்துக் கொண்டு இருந்த கைய் பேசியை தன் உன் வைத்து விட்டு ஏதோ படம் பார்ப்பது போல் அமர்ந்து இருந்தவனை இப்போது நவீன் திட்ட வில்லை..திட்டவும் தோன்றவில்லை…
அகில ரூபன் சொன்னது போல் அவன் தன் தாய் தந்தை முகத்தை தான் பார்த்தான். அவர்கள் முகத்தில் தெரிந்த சங்கடத்தில் அவர்களை விட்டு தன் இரு பாட்டிமார்களின் பக்கம் தன் பார்வையை திருப்பிய நவீன்…
“பாட்டி உங்களுக்கு இது எல்லாம் தெரியுமா….?” அகில ரூபனை கை காட்டி நவீன் கேள்வி எழுப்பினான். “ அவன் கேள்விக்கு பதில் அளிக்க முடியாது..அவர்கள் இருவரும் தலை குனிந்து விட்டனர்…
“அவங்க எப்படி சொல்வாங்கப்பா….வயசுக்கு தகுந்தது போல நடந்து இருந்தா..இதோ இந்த வயதான காலத்தில் இப்படி தன் பேரன்கள் முன் தலை குனிந்து நின்று இருந்து இருக்க சூழ்நிலை வந்து இருக்காது.. ஆனா இவங்க தான்… புதுமையான முதியவர்கள் ஆயிற்றே…
கற்பம் என்று பெண் வந்து சொன்னா..மானம் ரோசம் பார்க்கிறவங்க பெண்ணை வெட்டி போடுவாங்க… இல்ல மானத்தோட எனக்கு என் பெண் மகன் தான் முக்கியம் என்று நினச்சா அவங்களுக்கு உடனே கல்யாணம் செய்து வெச்சிடுவாங்க..
ஆனா இவங்களுக்கு மானம் ரோசத்தோட மகள் மகனோட பதவி..தான் முக்கியம்…” என்று சொல்லிக் கொண்டே தான் அமர்ந்து இருந்த இருக்கையை விட்டு எழுந்தவன் அதை எட்டி உதைத்தான். அவனின் கோபம் ஆதாங்கம் அனைத்தையும் அந்த இருக்கை மீது காட்டியதால் அவனின் ஒரே உதையில் அது எங்கோ ஒரு மூலையில் சென்று விழ..இப்போது அனைவரும் அகில ரூபனை பயத்துடன் பார்த்தனர்…
பின் தன்னை ஒரு நிலைப்படுத்தியவனாய் அங்கிருந்த மற்றோரு இருக்கையில் அமர்ந்தவன்..
“ம் சொல்லுங்க..உங்க கதைய உங்க தெய்வீக பவித்ரமான கதையை சொல்லுங்க…” என்று அகில ரூபன் சொன்னதும்…
ஒரு பெரும் மூச்சை இழுத்து விட்ட சீதாராமன்… “அரசாங்கம் பிரச்சனை பற்றி பேச நான் ஒரு முறை பவானி அப்பாவை பார்க்க அவர் வீட்டுக்கு வரும் போது தான் நான் முதன் முதலா பவானியை பார்த்தேன்.
பார்த்ததும் எனக்கு பிடிச்சது..அதே தான் அவளுக்கும் என்று என் காதல் அவளிடம் சொல்லும் போது அவள் சொன்னாள்…அப்போ நான் இந்த பதவி ஏற்ற புதியது… “ என்று சொல்லிக் கொண்டு வந்த சீதாராமன் கொஞ்சம் தயங்கி பின்…
“எங்க பழக்கத்தில் அவள் கற்ப்பம் ஆயிட்டா…” என்று சீதாராமன் சொல்ல..நவீனும் அனிதாவும் அதிர்ச்சியுடம் தன் அம்மாவையும் அப்பாவையும் பார்த்தனர். அடுத்து யாரும் எதுவும் பேசவில்லை..அந்த இடமே அமைதியாகி விட்டது.
அவர்களுக்கு இப்போது தான் தன் தாய் தந்தையருடைய திருமணம் காதல் திருமணம் என்றே தெரியும்..இத்தனை நாள்..இல்லை இல்லை வருடங்கள்..இத்தனை வருடங்களாய் இவர்கள் திருமணம் பெரியவர்கள் பார்த்து நடந்தி வைத்தது என்று தான் நினைத்து இருந்தனர்.
சமயத்துக்கு அனிதா கூட தன் பாட்டிகளிடம்… “உங்க ரெண்டு பேருக்கு பிடித்ததினால் தானே எங்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும் திருமணம் செய்து வெச்சிட்டிங்க….?” என்று கிண்டலாய் கேட்கும் போது எல்லாம் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொண்டது.
அனிதா அந்த பார்வை பரிமாற்றத்தையும் பார்த்து…. “அப்போ நிஜமாவே உங்களுக்கு பிடிச்சதால் தான் எங்க அப்பா அமாவை சேர்த்து வெச்சிங்களா…?” என்று கேட்டு இருக்கிறாள். இப்போது அந்த பார்வை பரிமாற்றத்தின் அர்த்தம் விளங்குகிறது அனிதாவுக்கு..சங்கடம்..சங்கடத்துடன் ஒருவருக்கு ஒருவர் பார்த்து இருக்கின்றனர்.