Advertisement

அப்போது எல்லாம் அப்பாவோ..அம்மாவோ இருந்தால்.. “சும்மா இருக்க மாட்டியா…?என்ன எப்போ பார்த்தாலும் இந்த பேச்சு…?ஏதாவது உறுப்படியான வேலை இருந்தா பாருங்க…” என்று இந்த கிண்டல் பேச்சுக்கு அன்று சத்தம் போட்டது. இன்று அது எதற்க்கு என்று விளங்குவதாய்…
சிறிது நேரம் யாரும் எதுவும் பேசவில்லை…நவீன் தான்… “கல்யாணம் செய்துட்டிங்க தானே…?பின் ஏன் அண்ணாவை தத்து எடுத்திங்க..உங்க சொந்த பிள்ளை என்றே வளர்த்து இருக்கலாமே…? என்று நவீன் கேட்டது நியாயமான கேள்வி தான்.
ஆனால் அந்த நியாயஸ்த்தான் இந்த மூன்று நாளாய் அண்ணாவை அண்னா என்று கூப்பிடாது… பகையாளி போல் பார்ப்பதும் பேசவும் தானே செய்தான். நவீனின் அண்ணா என்ற பேச்சில் சட்டென்று அவனை திரும்பி பார்த்த அகில ரூபனின் பார்வையில் எள்ளல்…
தன் அண்ணனின் பார்வையை தாங்க முடியாது… “அண்ணா….” என்று ஏதோ பேச வந்த நவீனின் பேச்சை தன் கை கொண்டு வேண்டாம் என்று நிறுத்தியவன் தன் தாய் தந்தையரின் பக்கம் தன் பார்வையை செலுத்தினான்.
இப்போது பவானியம்மா தன் பேச்சை தொடர்ந்தார்… “ நான் கற்ப்பம் என்று  தெரிஞ்சது ராம் கிட்ட சொன்னேன்..அவரும் உடனே கல்யாணம் செய்துக்கலாம் என்று சொல்லி அவர் வீட்டில் எங்க விசயம் பேசி… பின் அது எங்க வீட்டுக்கு வரத்துக்குள்ள எனக்கு மூன்று மாசம் முடிவடைந்து நான்காம் மாசம் தொடங்கிடுச்சி…
அவங்க வீட்டில் என்னை பெண் கேட்க வருவதற்க்குள்ளவே என் அம்மா கண்டு பிடிச்சிட்டாங்க..பின் நான் எல்லாம் சொல்லி  எங்க அம்மா முதல்ல என்னை அடிச்சி பின் திட்டி..பின் வேறு என்ன செய்வது நான் அ[ப்பா கிட்ட சமயம் பார்த்து சொல்லுறேன் என்று அவர் காதுக்கு போகும் போது எனக்கு நான்கு மாதமும் முடிந்து விட்டது.
என் அப்பா இதை கேள்வி பட்டதும் என்னிடம் சொன்னது இது தான் .. “எதில் நிதானமா இருக்கனுமோ அதில் நீ அவசரப்பட்டுட்ட… எதில் உன் அவசரத்தை காட்டனுமோ அதில் நீ நிதானத்தை கடப்பிடிச்சிட்ட…” என்று என் வயிற்றை பார்த்து சொன்னார்.
அவர் என்னிடம் சொன்னது இது தான்… “சீதாராம் நல்ல நிலமையில் இருக்கார்..நம்ம இனம் இதை நீ முன்னவே சொல்லி இருந்து இருக்கலாம்..இல்லேன்னா நீ கற்ப்பம் என்று  தெரிஞ்ச உடனே சொல்லி இருந்தா அடுத்த முகூர்த்தத்திலேயே உங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் செய்து வெச்சி இருப்பேன்..ஆனா இப்போ…”
தன் வாழ்க்கையை கதை போல் சொல்லிக் கொண்டு  இருந்த பவனியம்மா அந்த காலத்துக்கே சென்று விட்டது போல் அவர் கண் ஒரு நிலையில் வெறித்து பார்த்து இருக்க..கண்ணீல் கர கர என்று கண்ணீர் துளிகள் விழுந்த வண்ணம்…
சொன்னது போல் அவர்  தன் தந்தை தன்னிடம் பேசியது இன்றும் படம் போல் அவர் முன் ஓடியது.. அதற்க்கு தான் ஒத்துக் கொண்டு இருக்க கூடாதோ..என்று  நினைக்கும் மனம்..
ஆனால் அன்றோ… தன் தந்தை பேச்சை கேட்ட பவானியம்மா … “அப்பா அப்போ அவருக்கு என்னை கட்டி கொடுக்க மாட்டிங்களா…?” என்று அதிர்ந்து போய் கேட்டார்.
பவானியின் வயிற்றை பார்த்த வாறு… “இது வரை வந்த பின் அவரை தானே உனக்கு கல்யாணம் செய்து கொடுக்க  முடியும்…” என்று தந்தை சொன்னதும் தான் பவானியின் மனது  அப்பாடி என்று  ஆசுவாசம் அடைந்தது.
ஆனால் அடுத்து அவர் சொன்ன திட்டம்… “இப்போ பண்ன முடியாது.” என்ற தந்தையின் பேச்சில்..
“அப்பா குழந்தை…” என்று பவானி கேட்டதற்க்கு..
“எதிலும் உனக்கு இந்த அவசரம் கூடாது பவானி..அதுவும் எனக்கு அடுத்து என் அரசியல் வாரிசு நீ எனும் போது.. எதையும் பார்த்து ஆராய்ந்து தான் பேசனும்..செய்யனும் என்று புரியுதா…?” என்ற தந்தையின் பேச்சுக்கு பவானி தலையாட்ட மட்டுமே அப்போதைக்கு முடிந்தது.
“நான் சொல்ற ஊரில் உனக்கு யாருக்கும் தெரியாது பிரசவம் நடக்கும்.. குழந்தை பிறந்ததும்..அதை அனாதை ஆசிரமத்தில்…”என்ற அவர் பேச்சை முடிக்க விடாது..
“அப்பா…” என்று பவானி அதிர்ந்து போய் கத்தி விட்டார்.
“இப்போ தானே நான் சொன்னேன்.. நிதானம் தேவை என்று…நான் முழுசா சொல்லி  முடிச்சிடறேன்.. உனக்கு இதில் விருப்பமோ இல்லையோ… நான் சொன்னதை தான் நீ கேட்டு ஆகனும் அவ்வளவு தான்.” என்று சொன்னவர்..
தொடர்ந்து… “ ஆசிரமத்தில் விடுறது என்பது எனக்கு கீழ் இருக்கும் ஆசிரமத்தில்..உன் குழந்தை நல்ல படி இருக்கும்…இந்த தேர்தல் எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியமானது..
அடுத்த முதலமைச்சர் நான் என்று தான் இருக்கு..இந்த சூழ்நிலையில் இது போல் என்று வெளியில் தெரிந்தால் அது என் முதலமைச்சர் கனவை தகர்த்து விடுவதோடு…நீ என் அரசியல் வாரிசு என்று நான் நினைக்கும் ஆசையும் புதைந்து விடும்.
.இப்போ அரசியல் கட்சி எல்லோர் பார்வையும் என் மீது தான் இருக்கு..எதிர் கட்சி மட்டும் இல்லாது என் கட்சியில் இருக்கும் சில பேரே என்னை எப்போ கவிழ்க்கலாம் என்று காத்துட்டு இருக்காங்க….இந்த மாதிரி சூழ்நிலையில் இது தெரிந்தால்..வீட்டையே இவர் ஒழுங்கா நிற்வகிக்க  தெரிய..இவர் எங்கே நாட்டை நிற்வகிக்க போறார்…என்று நாடு முழுவதும் பிராச்சாரமே செய்துடுவாங்க…
எனக்கு என் அரசியல் வாழ்க்கை ரொம்ப ரொம்ப முக்கியம்..அதே போல் என் அரசியல் வாரிசா நீ இருக்கனும்..இந்த  என்னுடைய இரண்டு  கனவும் நிறைவேறனும் என்றால்…
யாருக்கும் தெரியாத இடத்தில் உனக்கு பிரசவம் பார்த்து..அந்த குழந்தையை நம் கீழ் உள்ள ஆசிரமத்தில்  சேர்த்து பின் உங்களுக்கு ஊர் அறிய திருமணம் செய்த பின் உங்கள் திருமணத்தின் அன்றே..ஒரு குழந்தையை நாங்கள் தத்து எடுத்துக் கொள்கிறோம் என்று ஊடகத்திற்க்கு ஒரு அறிக்கை விட்டால்..
நம் குழந்தை நம் கையில்…என் கனவான அரசியல் நிஜத்தில் இருக்கும்..அதோடு அந்த த்தது விசயத்தில் நீ எங்கோ போய் விடுவே..நானும் தான்..பின் என் அடுத்து என்ன நான் இருக்கும் போதே உன்னை கட்சியில் உயரத்தில் தூக்கி வைத்து விடுகிறேன் பார்.” என்று கட்சியில் செய்யும் அரசியலை அவர் குடும்பத்தில் செயல் படுத்தினார்.
இதில் என்ன ஒரு கொடுமை என்றால்..இதை அனைவரும் ஏத்துக் கொண்டது தான்..சீதாராமனும்… “நாம் செய்தது தவறு..அந்த தவறுக்கு நம் குழந்தையை கொஞ்சம் காலம் பிரிந்து இருக்கிறோம் என்று நினைத்துக் கொள்ளலாம்…
உங்க அப்பா சொன்னது போல நம்ம குழந்தை நம் கிட்ட தானே வந்துடுது…இதில் நமக்கும் கொஞ்சம் நல்லது இருக்கு..நாம் செய்த தப்பு யாருக்கும் தெரியாது.” என்று அனைத்தும் திட்ட மிட்டு அதை செயல் படுத்தியும் முடித்து விட்டனர்..
பவானி அப்பா சொன்னது போல் அன்றைய ஊடகங்களில் இதே தான் பேச்சாய் இருந்தது… நீண்ட வருடங்கள் குழந்தை இல்லாதவர்களே தத்து எடுக்க யோசிக்கும் போது… திருமணத்தின் அன்றே சமூகம் பொறுப்போடு..
“தன்னால் முடியும் என்று நினைப்பவர்கள்  அனைவரும்  ஒரு குழந்தையை தத்து எடுத்தால் இந்த உலகத்தில் அனாதை என்று  யாரும் இருக்க மாட்டார்கள்.”
பவானியம்மா தத்து எடுத்த அன்று ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தது…எழுதியது தந்தை அதை  தன் வாய் மூலம் உலகத்திற்க்கு இந்த அரிய கருத்தை பரப்பியது நம் பவானியம்மா… அனைத்தும் முடிந்து இதோ இவர்களின் முன் பவானியம்மா அனைத்தும் சொல்லி முடிக்க…
நிஜமாக இதை ஏற்றுக் கொள்ள நவீனாலும் முடியவில்லை அனிதாவாலும் முடியவில்லை…நவீனின் கண் இரண்டும் சிவந்து  கோபம் தலைக்கு ஏற..
 “சீ…” என்று கத்தியவன் தன் முன் இருக்கும் உணவு பொருட்களை தட்டி விட்டவன்… …”ஆ….ஆ…ஆ…” என்று பெரும் குரல் எடுத்து கத்தினான்.
அவனின் செயல்களை அனைவரும் பயத்துடன் பார்த்தனர்..இவனிடம் இந்த செயலை யாரும் எதிர் பார்க்கவில்லை..அகில ரூபனே அவனை அதிசயத்துடன் தான் பார்த்தான்.
அனிதாவின் கண்ணீலோ நிற்க்காது கண்ணீர் வந்துக் கொண்டே இருந்தது..அவளாள் அதை துடைக்க கூட இல்லாது அப்படியே சிலை போல் அமர்ந்து விட்டாள்.
கத்தி முடித்த நவீன் அகில ரூபன் அருகில் சென்று… “சாரிண்ணா சாரி..என்ன மன்னிச்சிக்கண்ணா..இந்த மன்னிப்பு நான் கேட்டா எல்லாம் சரியாயிடும் என்பது இல்ல…ஆனா என்னால்  இப்போதைக்கு இதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது..” என்று சொன்னவன்…
பின் ஏதோ யோசித்தவனாய்… “இப்போதைக்கு முடியாது..ஆனா இனி நீங்க என்ன சொன்னாலும்..நான் கேட்ப்பேன் நான் கேட்பேன்… இது சத்தியம்..” என்று சொல்லிக் கொண்டே பிடித்திருந்த அவன் கை மீது தன் கை வைத்து சத்தியம் செய்தான்.
நவீன் பேச பேச எதுவும் எதிர் பேச்சு பேசாது கேட்டுக் கொண்டு இருந்த அகில ரூபன் நவீனின் கை தன் கை மீது வைத்ததும் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டவன்..
“நீ சொன்னது நிஜம் தானே..நான் என்ன சொன்னாலும் கேட்ப தானே…” என்று கேட்டதற்க்கு..
நவீன் ..”கேட்பேன்…”  என்பது போல் தலையாட்டினான்.
“ஸ்ரீமதி..” என்று ஆராம்பித்தவன்.. அவன் தன் பேச்சை முடிக்கவில்லை..
“நீங்க சொன்னது போல..இன்று மாலை பெண் கேட்டு போகலாம்…ஆ ஒன்று இவங்களோட தத்து பிள்ளையா இல்லை சொந்த பிள்ளையா…” என்று சொன்னான்.
அனிதாவும்.. “ஆமாம் அண்ணா..நான் கூட அவரே வந்து தான் என்னை அழச்சிட்டு போகனும்..அது வரை அங்கு போக கூடாதுன்னு தான் நினச்சிட்டு இருந்தேன்..ஆனா இப்போ ஈவினிங் நானும் வர்றேண்ணா…” என்று அனிதா சொன்னதும்ம்.
“நீ இப்படி இங்கு தனியா இருக்க நான் தான் காரணம்..அதனால உனக்கு வருத்தம் இல்லையா என் மேல்…” என்று கேட்டான்..
அதற்க்கு அனிதா… “மதியை  தான் கல்யாணம் செய்துப்பேன் என்று இவ்வளவு உறுதியா இருக்கிங்கன்னா கண்டிப்பா அதுக்கு ஒரு காரணம் இருக்கும்… அது காதல் என்று இல்ல வேறு ஏதோ ஒரு காரணம்.” என்று தன் பெரிய அண்ணன் முகம் பார்த்து அனிதா சொல்ல..
அவள் சொன்னது தான் உண்மை என்பது போல் அகில ரூபனின் கண்கள் ஒரு நிமிடம் மின்னியது…
 
 
 

Advertisement