Advertisement

அத்தியாயம்…8
அகில ரூபனின் பேச்சும் அங்கு நிலவிய சூழ்நிலையிலும்..தன் தங்கையை வைத்து நடந்த பேச்சை வார்த்தைளையும் கேட்ட அஷ்வத்துக்கு..அந்த நிமிடம் அந்த வீட்டில் இருந்து சென்று விடு ..அது தான் தனக்கு மரியாதை…
தன் தங்கைக்காக இப்படி ஒரு வாதம்..அதுவும் இங்கு கேட்க நேரிடும் என்று அஷ்வத் துளியும் எதிர் பார்க்கவில்லை.  திருமணத்தில் நவீன்  தன் தங்கையை ஆசையோடு பார்த்தான். அதை  அஷ்வத்தும் பார்த்தான் தான்.
தன் திருமணதின் அன்றும் தன் வாழ்க்கை துணையை காண ஒரு மனம் ஆவளோடு  மணமேடையில் அமர்ந்து காத்திருந்தாலும், சிறு வயது முதலே தன் தங்கை இருந்தால் எப்போதும் தன் தங்கை மீதும் ஒரு கண்ணை வைத்திருப்பான்.
அது அவன் சிறு வயது முதலான பழக்கம். மேலும் அப்பா சொன்ன.. “அவளுக்கு ஒன்றும் ஆக கூடாது… நீ தான் பத்திரமா  அவளை பாத்துக்கனும்.. உன்னை கொடுத்து தான் அவளை காப்பற்ற முடியும் என்றால்…நீ உன்னை கொடுக்க சிறிதும் யோசிக்க கூடாது.”
சிறு வயதில் தன்னுடைய மற்றொரு தங்கை. அதாவது ஸ்ரீமதி கூட ஒட்டி பிறந்த ஸ்ரீஷாவை  பரிகொடுத்த ஒரு வாரம் கழித்து… பதினான்கே வயதான தன்னிடம் வந்த தன் தந்தை பேசிய இப்பேச்சு… ஏன்…? எதற்க்கு…?என்னால் முடியுமா…? என்ன ஆபாத்து…? என்று  எதுவும் கேட்காது..
தன் தந்தையின் கைய் பற்றி… “எப்போதும் என் கவனம் அவளிடம் தான்பா இருக்கும்.” என்று சொன்னதை இன்று வரை கடைப்பிடிடுத்து வருகிறான்..
அதன் வழக்கத்துப்படி… மேடையில் அமர்ந்து அனிதாவுக்காக காத்திருந்தவன் தனக்கு பின்னால் தன் தங்கையின் குரல் கேட்கவும்…  கழுத்தில் கணத்த மாலை போட்டு இருந்ததால், முழுமையாக அவளை திரும்பி பார்க்க முடியவில்லை என்றாலும்..தன்னால் முடிந்த மட்டும் திரும்பி பார்த்தவனின் கண்ணில் பட்டது..
ஏதோ நவீன் கேட்க…. அதற்க்கு  ஸ்ரீமதி பதில் அளித்துக் கொண்டு இருந்ததை….நவீன் என்ன கேட்டான்..மதி என்ன பதில் சொன்னாள் என்று நாதஸ்வர ஓசையின் சத்தத்தில் அவனுக்கு கேட்கவில்லை.
ஆனால் மதி அவன் முகத்தை நேருக்கு நேராக பார்த்து பதில் அளித்ததில் அவளிடம் எந்த கள்ளமும் இல்லை.ஆனால் நவீனின் பார்வை..ஒரு ஆணாய் அவனால் உணர்ந்துக் கொள்ள முடிந்தது.. 
அந்த பார்வைக்கு ஈர்ப்பு என்று சொல்லலாம்..இல்லை ஆசை என்று பெயர் சூடலாம்…இல்லை காதலுக்கு முந்தைய நிலை என்று கூட சொல்லலாம். ஆனால் நவீனின் பார்வையில் வேறு தவறான எண்ணமும் இல்லை என்பதை புரிந்தவனாய்..
“சரி மூன்று  நாள் அவங்க வீட்டி,ல் தானே இருக்க போகிறோம். நவீனிடம் பேசலாம்..இது சரிப்படாது.” என்று.. படித்தவன் புரிந்துக் கொள்வான் என்று அஷ்வத் நினைத்துக் கொண்டான்..
அவனுக்கு அகில ரூபனை பற்றி அப்போது சிறிதும் யோசிக்கவில்லை..யோசிக்கும் படி அவன் பார்வை இல்லை..அதனால் அவனை பெரியதாக அஷ்வத் நினைக்கவில்லை.
ஆனால் இங்கு திருமணம் முடிந்த மறுநாள் அகில ரூபனின் செயல்கள்..இப்போதைய இந்த பேச்சுக்கள் கேட்க கேட்க….வேண்டாம் தான் இங்கு இருப்பது நல்லதுக்கு இல்லை.
அனிதாவிடம் இன்று வரவில்லை என்றால் என்றும் வராதே என்று சொன்னது எல்லாம் ஒரு கோபத்தில் தான்… அஷ்வத்துக்கு தங்கையின் மீது எந்த அளவுக்கு அக்கறை இருக்கிறதோ அதே அளவுக்கு அனிதாவின் மீது காதலும் இருக்கிறது.
இன்னும் தான் இங்கு இருந்தால் அனிதாவிடம் கோபத்தில் சொன்னது நிஜத்தில் ஆகி விடும்.. இங்கு இருந்து போவது தான் நல்லது என்று…
“நான் என் வீட்டுக்கு செல்கிறேன்.” என்று சொல்லி விட்டு தான் வீட்டில் உடுத்தி இருந்த உடையோடு வெளி வாசலை நோக்கி நடந்தவனின் பின்னால் அகில ரூபனின்…
“நாளைக்கு ஈவினிங் நாங்க வர்றோம் மச்சான்..அத்தை மாமாவிடம் சொல்லிடுங்க.” என்று சொல்லி விட்டு ஏதும் நடவாதது போல் தன் அறையை நோக்கி நடையை கட்டினான்.
அகில ரூபன் அனிதாவை கடந்து செல்லும் போது அவள் கண்களில் இருந்து வந்த கண்ணீரை துடைக்க அவனின்  கைகள் மேல் எழும்பினாலும், அதை அடக்கியவனாய் அவனின் அறைக்கு சென்று விட்டான்.
“பார்த்திங்களாப்பா பார்த்திங்களா.. இரண்டு நாள் முன்ன கல்யாணம் ஆனவ அழுதுட்டு இருக்கா…அதை பார்த்தும் அப்படியே போறான்…  அதான் சொந்த ரத்தமா இருந்தா தானே அந்த பாசம் வரும்.
இவ்வளவு நாளும் நம்ம மேல பாசமா இருந்தது எல்லாம் வேஷம்மா..வேஷம்… ஒரு நல்ல நிலைக்கு வர காத்திட்டு இருந்து இருக்கான்..இதோ வந்துட்டான் அவன் புத்திய காட்டிட்டான்…
நீங்க என்னை அடிச்சாலும் பரவாயில்ல..இது நான் சொல்லியே தான் ஆகனும்… எங்கோ எங்கேயோ பொறுக்கிட்டு இருக்க வேண்டியவனை கூட்டிட்டு வந்திங்களே.. அவனை இப்படியே தூக்கி வெச்சிட்டு ஆடினிங்கன்னா அவனாலே.. அவனால்  தான் உங்க சொந்த பெண் வாழ்க்கை  பாழாக போகுது பாருங்க…” என்று சொல்லி விட்டு கோபமாக நவீனும் தன் அறைக்கு சென்று விட்டான்.
அனிதாவின் அருகில் சென்ற பவனியம்மா… “அழாதேடா அழாதே…மாப்பிள்ளை அப்படி எல்லாம் உன்னை விட்டுடா மாட்டார். பயப்படாதே…” என்று மகளை சமாதானம் படுத்தி விட்டு தன் தோளில் சாய்த்துக் கொள்ள பார்த்தார்.
ஆம் பவனியம்மா தன் தோளில் மகளை சாய்க்கும் நினைக்கும் போதே அவரை விட்டு விலகிய அனிதா… “நான் பயப்படல..என் கணவர பத்தி எனக்கு தெரியும்..அவர் என்னை அவ்வளவு  ஈசிய வீடுடா மாட்டார்… அவர் தங்கை அவருக்கு எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு அவருக்கு நானும் முக்கியமுன்னு எனக்கு நல்லாவே தெரியும். ”
அப்போது எதற்க்கு இந்த அழுகை என்பது போல் பார்த்த தன் தாயிடம்… “இந்த அழுகை இத்தனை நாள்..இவர் மீதா இத்தனை  பாசம் வைத்திருந்தேன் என்று நினச்சி தான்… என்ன புரியவில்லையாம்மா…? புரியலையா…?இல்ல புரியாத மாதிரி நடிக்கிறிங்களா….? எல்லாம் உங்க தத்து  பிள்ளை அகில ரூபனை பத்தி தான்.” என்று  அனிதா கோபமாக சொன்னாள்.
அனிதாவின் கோபத்தில் நியாயம் இருந்தாலுமே சற்று தள்ளி அதாவது மகளின் அழுகையை பார்த்து சமாதானம் படுத்து என்று மனைவியை அனுப்பி விட்டு அவர்களை விட்டு கொஞ்சம் தள்ளி அமர்ந்து இதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த சீதாராமன்..
மகளின் பேச்சில்… “என்ன அனிதா பேச்சு.. அது என்ன அகில ரூபன் தத்து பிள்ளைன்னு தத்து பித்துன்னு உலறிட்டு இருக்க,..கொஞ்சம் பார்த்து பேசும்மா..உன் கோபம் எனக்கு புரியுது தான்..
ஆனால் கோபத்தில் நீயும் உன் அண்ணன்களை  போல வார்த்தைகளை விட்டு விடாதே…” என்று  சீதாராமன் தன் மகளை அதட்டினார்.
“உங்க மாப்பிள்ளை  என்னை இங்கேயே விட்டுட்டு போயும் …இப்போவும் உங்களுக்கு உங்க பெரிய  மகன் தான் முக்கியம் இல்ல…அப்பா எனக்கு சந்தேகமா இருக்கு…நாங்க உங்க பிள்ளைங்களா…? இல்ல உங்க பெரிய மகனான்னு….?” என்று  அனிதா தன் அப்பாவிடம் கோபமாக பேசும் போது…அகில ரூபன் எங்கயோ வெளியில் செல்ல அவர்களை  கடந்தான்.
அதுவும் அனிதா சொன்ன நாங்க உங்க சொந்த பிள்ளைங்களா…?இல்லை உங்க பெரிய மகனா…? என்று கேட்கும் போது..சரியாக அவர்கள் அருகில் வந்து விட்ட அகில ரூபன்..இந்த வார்த்தையை கேட்டுக் கொண்டே சீதாராமனை பார்த்து ஒரு இகழ்ச்சியாக ஒரு புன்னகை புரிந்து விட்டு செல்பவனை பார்த்து சீதாராமன் அந்த நிமிடமே பூமிக்கடியில் புதைந்து விட  கூடாதா….? என்று எண்ணினார்..
அகில ருபனின் இந்த இகழ்ச்சியான பார்வை சொன்னது..அவனுக்கு ஏதோ தெரிந்து விட்டது என்று… கடவுளே கடவுளே என்று மனதில் நினைத்த வாறு..இரண்டம் தளத்தில் இருக்கும் தன் அறைக்கு ஓடினார்..
பவனியம்மா அகில ரூபனின் இகழ்ச்சியான பார்வையை கவனிக்கவில்லையாதலால் கணவர் எதற்க்கு இப்படி ஓடுகிறார் என்று  புரியாது அவரும் அவர் பின் சென்றார்..
செல்லும் போதே நாம் இந்த இடத்தில் தன் பெண்ணை கொடுத்தது தவறோ என்று அவரால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
பவனியம்மா தங்கள் அறைக்குள் நுழையும் போது சீதாராமன் தன் பேசியில் ஏதோ அவசர பார்வையிட்டுக் கொண்டு இருந்தார். தன் மனைவியை பார்த்ததும் “பவா நாம அன்னைக்கு பேசிட்டு இருந்தோமே…அப்போ நேரம் எவ்வளவு….?” முதலும் இல்லாது முடிவும் இல்லாத சீதாராமன் கேள்வியில் குழம்பி போனார் பவனியம்மா..
“என்ன பேசினோம்…? எப்போ….?” என்று தன் மனைவி கேட்டதும் தான்  தன் தவறு புரிந்தவராய்…
“எனக்கு இருக்க டென்ஷனில்..” என்று சொன்னவர்… பின் தெளிவாய்… “அனிதா கல்யாணம் அன்று நம்ம வீட்டில் நடக்கும் அந்த சடங்கை எல்லாம் ஏற்பாடு செய்துட்டு நாம சாப்பிட்டு நம்ம அறைக்கு வந்து பேசினோமே அப்போ நேரம் என்ன பவ…?”
தன் கையில் பேசியை வைத்துக் கொண்டு அவர் கேட்கும் கேள்வியின் நோக்கம் புரிந்த பவனியம்மாவுக்கு நெஞ்சில் பாராம் கூடி போனது… அதன் தாக்கம் அவர் வார்த்தையில் எதிரொலித்து…. 
“ப…த்து பத்த…ரை இரு…க்கும்.” என்று ஒரு தோராயமாக தான் பவனியம்மா சொன்னார்.
“என்ன பவி..சரியா நேரம் சொல்…”  என்று தன் பேசியில் வரும் காட்சியில் நேரத்தை பார்த்து அதை கடத்திய வாறு  ஒரு எரிச்சலுடன் சொன்னர்.
ஏதோ யோசித்த பவனியம்மா… “பத்தே கால் பாருங்க.” என்ற மனைவியின் பேச்சுக்கு சரியாக தன் கைய் பேசியில்  தன் வீட்டில் அனைத்து பகுதியிலும் வைக்கப்பட்ட கேமிராவின் காட்சியை தன் பேசியில் பார்க்கும் மாறு வைத்திருந்தவர் சரியாக பத்தே கால் கடந்து ஒரு  சில நிமிடங்களில் தங்கள் தளத்திற்க்கு தன் மூத்த மகன் அகில ரூபன் வருவதும் தங்கள் அறையின் முன் கதவை தட்ட கை உயர்த்தியவனின் கை அந்தரத்தில் அப்படியே நின்று விடுவதும்…
நேரம் ஆக ஆக அகில ரூபனின் முகம் இறுக்கமாவதையும் …பின் தன் தலை மீது கை வைத்த வாறே… தங்கள் அறையின் முன் அப்படியே  மடிந்து அமர்ந்தவனின் கோலம் அதற்க்கு மேல் காண இயலாத அந்த பெற்றோர்கள் அந்த காணொலியை நிறுத்தி விட்டவர்கள் முகம் இப்போது துயரத்தையும் தான்டி பயம் அப்பட்டமாய் வெளிப்பட்டது.
அஷ்வத் சீதாராமன் வீட்டை விட்டு வெளி வந்ததும் தன் தந்தை தனக்காக நியமிக்கப்பட்ட பாதுகாவலனோடு கூடுதலாய் மேலும் இருவர் தன் பின் தொடர்வதை பார்த்ததும் அவன் முகத்தில் கசப்பான ஒரு புன்னகை வெளிப்பட்டது.
இந்த கூடுதல் பாதுகாப்பு அனிதாவின் கணவன் அதாவது முதலமைச்சரின் மருமகன் என்ற பந்தம் ஏற்ப்பட ஆராம்பிக்கும் போத… அதாவது  அவனின் நிச்சயம் முடிந்த இந்த மூன்று மாதமாய் தான்…
தன் மனைவி தன் பின்  வரவில்லை..தன் மனைவியால் வந்த பாதுகாவலன் தன் பின்… அதை நினைத்து அவன் மனம் கலங்க தான் செய்தது..ஆனால் இன்று தான் அங்கு இருந்தாள்….
இல்லை இந்த பேச்சுக்கு பிறகும் தான் முறையாய் நாளை தன் மனைவியோடு தன் வீட்டுக்கு வந்தாளோ..அவர்களின் பேச்சை நான் ஏற்றுக் கொள்வது போல் ஆகிவிடும்..
இதோ இந்த பாதுக்காப்பால் என் மனது பாதிப்புக்கு ஆளாகாது..ஆனால் இன்றைய இந்த பேச்சை செயல் படுத்தினால் கண்டிப்பாக இதோடு கூடுதல் பாதுகாப்பு தான் ஸ்ரீமதிக்கு கொடுப்பார்கள்… அதை கண்டிப்பாக அவளால் ஏற்றுக் கொள்ள முடியாது.
அப்பாவின் இந்த பாதுக்காப்பால் தானே அவள் சென்னையை விட்டு வெளி ஊரில் படித்தது..இதோ வேலையும் வெளி ஊரிலேயே அமைத்துக் கொண்டதும்.. அவள் வருங்கால வாழ்வும் வெளி ஊரில் தான் என்று அவள் நினைத்திருப்பாள்.. அதன் காரணமும் இந்த பாதுக்காப்பால் தான்.. ஸ்ரீமதி எப்போதும் தான் வெற்றி மாறனின் மகள் என்று வெளியில் சொல்ல மாட்டாள்.
சொல்ல பிடிக்கவில்லை என்ற அர்த்தம் இல்லை..சொன்னால் தனக்கு பாதுகாப்பு இல்லை..பின் அப்பா தன் பின் இங்கும் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்து விடுவார்..அது எதற்க்கு என்று…அப்பா பெயர் சொல்லும் சந்தர்ப்பத்தில் வெற்றி மாறன் என்று பெயரை மட்டும் சொல்லி அவர் பதவியை சொல்லாது விட்டு விடுவாள்.
அப்படி பட்டவளை இந்த வீட்டுக்கு மருமளாய் அவனால் நினைத்தும் பார்க்க முடியாத ஒன்று..அப்படி இருக்கும் போது தான் இப்போது செய்த செயல் தான் சரி என்று நினைத்தவனாய் தனியே தன் வீட்டுக்கு சென்றான்.
அப்போது தான் தன் மருத்துவமனையில் இருந்து வீடு வந்திருந்த புவனேஷ்வரி … “அஷ்வத்..இங்கு வந்து இருக்க….?” என்று பதட்டத்தில் என்ன  கேட்கிறோம் என்ரு தெரியாது அந்த தாய் கேட்டார்.
எதையும்தாங்கும் இதயம்தாய் தானே… அதனால் அஷ்வத  தன் கோபத்தை அனைத்தும் தன் தாய் மீது காட்டினான்.. “இது என்வீடு தானே இங்கு வராம எங்கபோக சொல்றிங்க…?” என்று கத்தியவன்..
பின் தன் தாய் முகத்தின் கசங்களில்… “சாரிம்மா சாரி ஏதோ கோபத்தில் கத்திட்டேன்.” என்று தன் தாயின் கை பிடித்து அஷ்வத் மன்னிப்பு கேட்டான்.
“பரவாயில்ல அஷ்வத்..நீ ஏதோ கோபத்தில் தான் கத்தினேன்னு தெரியுது…  அனிதா எங்கே..?.நீ எதுக்கு இங்கு வந்த..? நீங்க நாளை தானே வரதா இருந்தது…? இப்படி நீ தனியா அனிதாவை அங்கு விட்டுட்டு வந்த்து தப்பு அஷ்வத்..”
அனிதாவுக்கும் அஷ்வத்துக்கும் தான் ஏதோ பிரச்சனை.அதனால் தான் அவளை அங்கு விட்டு விட்டு இவன் மட்டும் தனியே இங்கு கிளம்பி வந்து விட்டான் என்று நினைத்தவராய் சொன்னார்.
“அனிதாவை நான் இங்கு கூட்டிட்டு வரனுமுன்னா நம்ம மதியை அங்கு விடனும்..என்ன மதிய அங்கு விட்டுட்டு அனிதாவை கூட்டிட்டு வரட்டுமா….?” என்று தன் தாயிடம் கேட்கும் போதே…
மகன் பேசுவதை கேட்டுக் கொண்டே அங்கு வந்த வெற்றி மாறன்… “யாருடா அப்படி சொன்னா…? யார் சொன்னா…? என் மகள் எங்கு இருக்க வேண்டும்..அது அவள் தான் முடிவு செய்யனும் வேறு யாருக்கும் அந்த உரிமை இல்ல…ஏன் எனக்கும் உன் அம்மாவுக்குமே அந்த உரிமை இல்லாத போது..
யாரு மதி அங்கு இருக்கனும் என்று சொன்னா…முதல்ல அவங்க பெண் அனிதாவே எங்கு இருக்கனும் என்று அவள் தான் முடிவு செய்யனும் வேறு யாரும் இல்ல..அப்படி இருக்கும் போது  பண்டை மாற்று போல இது என்னடா பேச்சு… இதை கேட்டு நீ அமைதியாவா வந்த….?” என்று கோபத்துடன் வெற்றி மாறன் தன் மகனிடம் கேட்டார்.
மகனின் பேச்சு தாய்க்கும் தான் புரியாது பின் புரிந்து இது என்னடா பேச்சு என்பது போல் தன் மகனை பார்த்தார். ஆனால் தந்தைக்கு மகனின் பேச்சு..மதி அங்கு இருந்தால் தான்  அனிதா இங்கு வருவாள் என்ற அந்த வார்த்தையே அவருக்கு அனைத்து அர்த்தத்தையும் கற்பித்து விட்டது.
வெற்றி மாறனுக்கு மகள் என்றால் அவ்வளவு பார்ப்பார்… மகளிடம் எப்போதும் கோபமான பேச்சு தான்.. அந்த கோபம் கூட அவளின் பாதுகாப்பு பொருட்டே தான் இருக்கும்…
மகள் என்றால் மனைவி என்று பார்க்க மாட்டார் மகன் என்றும் பார்க்க மாட்டார் அப்படி பட்டவரிடம் ஏதோ மாட்டை விலைக்கு பேசுவது போல்  இது என்ன பேச்சு… என்ற கோபத்தில்..
“அங்கு என்ன நடந்தது….?என்று அஷ்வத்திடம் கேட்டார்.
அஷ்வத்தும் இது நம்மை மீறி போகும் விசயம்..இன்று  இல்லை என்றாலும் நாளை இது அப்பாவுக்கு தெரிந்து விடும்… என்று அனைத்தும் ஒன்று விடாது  சொல்லி விட்டான்..
அனைத்தையுன் கேட்ட வெற்றி மாறன் கேட்டது…  “ அகிலனா இப்படி எல்லாம் பேசியது.” என்று பின்  தன் மீசையை முறுக்கிக் கொண்டே “வரட்டும் நாளை…” என்று சொன்னார்.
 

Advertisement