Advertisement

கணவனும் அண்ணனும் இருவரும் தன் வாழ்க்கையின் முடிவை அவர்கள் கையில் எடுத்துக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டு இருப்பதில் வாய் அடைத்து போனாள்.
அதுவும் தன் அண்ணனா இது…? இரண்டு நாள் முன் திருமணம் ஆன தங்கையின் வாழ்க்கை பற்றி கவலை படாது பேசுகிறான்..தன் பெரிய அண்ணன் இப்படி பட்டவன் இல்லையே…? என்று யோசித்தவள்..தங்கையின் பாசத்தயும் மீறி மதி மீது காதாலா…? ஆனால் இவன் பேச்சு காதல் போல் கூட தெரியவில்லையே..
அப்படியே காதலாய் இருந்தாலும்.தங்கை தம்பிக்கு மீறி தானே அவனுக்கு வேறு எதுவும்.. எங்கோ ஏதோ இடறுகிறது..என்று அனிதா இந்த சிந்தனையிலேயே இருக்க…தன் அஷ்வத் தன் பதிலுக்காக..அதாவது அகில ரூபன் சொன்ன என் தங்கை வர மாட்டாள் என்று சொன்னதற்கு..
“இல்லை நான் அவர் கூட தான் போவேன்.” என்று சொல்லுவாள் என்று அஷ்வத் அனிதா  முகத்தை பார்த்திருக்க…அவளோ தன் அண்ணனை பற்றிய சிந்தனையிலேயே அவள் அகில ரூபனின் முகத்தையே பார்த்திருந்தாள்.
“அப்போ அவள் தன் அண்ணன் போக சொன்னா தான் என் கூட  அவள் வருவாளா…?அப்படி அவன் அண்ணன் சொல்லி தான் என் கூட வரனும் என்றால் அவள் வரவே வேண்டாம்.” என்று முடிவு செய்தவனாய்…
அனிதாவிடம் இருந்து தன் பார்வையை அகில ரூபன் பக்கம் நகர்த்திய அஷ்வத்…  “அப்போ உங்க வீட்டு பெண் உங்க வீட்டிலே இருக்கட்டும்..எங்க வீட்டு பெண் எங்க  வீட்டிலே இருக்கட்டும்.” என்ற கணவனின் பேச்சில் தான் அனிதா சுயம் பெற்று வந்தவளாய்…
“என்னது நான் இந்த வீட்டு பெண்ணா….?” என்று ஆவேசமாக கேட்டவள்… தன் கழுத்தில் இருக்கும் தாலி கயிற்றை எடுத்து காட்டி… “இது எப்போ உங்க கைய்யால வாங்கினனே அப்போ இருந்து நான் தான் உங்க வீட்டு பெண்..” என்று இது வரை அனிதா பேசிய பேச்சில் மகிழ்ந்து போய் இருந்த அஷ்வத்..
அவள் அடுத்த பேச்சான… “உங்க தங்கை மதி தான் அடுத்த வீட்டு பெண்.” என்ற பேச்சில் அந்த மகிழ்ச்சி மறைந்து போயின..
“மதி எங்க வீட்டு பெண் இல்லேன்னா இந்த வீட்டு பெண்ணா…?”
அனிதா தன் தங்கையை இந்த வீட்டு பெண் ஆக்கும் முயற்ச்சியில் தான் பேசுகிறாள் என்று தவறாய் அர்த்தம் கற்ப்பித்து…. கேட்டான்.
அகில ரூபன் அஷ்வத் சொன்ன அந்த வார்த்தையையே தனக்கு சாதகமாக பயன் படுத்திக் கொண்டு … “அதை வெளிப்படையா வேற சொல்வாளா…? ஹூட்னஸ் ஆனவங்க இதை சட்டுன்னு புரிஞ்சிப்பாங்க…”
அகில ரூபனின் அனைத்து  வார்த்தையும் அஷ்வத்தின் தன் மானத்தை தாக்கி பேசுவதாகவே இருந்தது. அவள் பேச்சு தங்கையின் வாழ்க்கையை புதைக்கும் வகையாகவே இருந்தது,
இதை எல்லாம் ஏதும் பேசாது கேட்காது வீட்டு பெரியவர்கள் அமைதியாக இருப்பதை பார்த்த நவீன்… “என்னப்பா அவன் பாட்டுக்கு பேசிட்டே இருக்கான்..நீங்க பாட்டுக்கு அமைதியா இருக்கிங்க…அவன் ஒரு வீட்டு மாப்பிளையிடம் பேசுவது போலவா பேசுகிறான்… இவன் பேச்சு அனிதாவை பாதிக்கும் என்று தெரியாதவன் இல்ல.
.இவன் தெரிஞ்சே இப்படி பேசுறான் என்றால்.. அவள் வாழ்க்கை எப்படி போனால் அவனுக்கு கவலை இல்லை என்று தானே அர்த்தம்.. அது தானே சொந்த தங்கை என்றால் அந்த பாசம் இருக்கும்..இவன் எப்படி யாருக்கோ பிறந்தானோ….அது தான் பிறப்பு குணம் இப்போ சமயம் பார்த்து தலை தூக்குது..அது தான் சொல்வாங்க நாய…”
ஒரே சமயத்தில் பவனியம்மா “நவீன்..” என்றும்…தனலட்சுமி சகுந்தலம்மா ..சின்னவனே…” என்றும் கத்தினார்கள் என்றால்…
 சீதாராமன் … அவனை அடுத்து பேச விடாது  நவீனை அடித்து விட்டார்… 
“ஜாக்கிரதை யாரை பார்த்து என்ன பேச்சு பேசுற..அவன் தான் இந்த வீட்டு பெரிய மகன்..அது எப்போதும் மாறது. அதை முதல்ல கவனித்தில் வெச்சிக்கோ…”எப்போதும் பேசுவதே அதிராது பேசும் சீதாராமனின் குரல் இப்போது ஓங்கி ஒலித்தது… 
அகில ரூபனோ…ஒரு மாதிரியாக சிரித்துக் கொண்டு… “இப்போ எதுக்கு அவனை அடிக்கிறிங்க…அவன் சொல்ல வந்தது போல என் பிறப்பு ஈன பிறப்பாய் கூட இருக்கலாம் தானே… அவன் சொன்னது போல நாயை குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும்..அது அதை புத்திய காட்ட தானே செய்யும்.” என்று அகில ரூபன் பேச பேச சீதாராமன்..பவனியம்மா …இரு பாட்டிகளும் துடி துடித்து போனார்கள்.
“அப்பூ..அப்படி சொல்லாதே அப்பூ… அப்படி சொல்லாதே…” என்று கதறி அழுத தனலட்சுமி அகில ரூபனின் சட்டையை பற்றிய வாறே…கதறி அழுது விட்டார்.
அவர் அழுகையை பார்த்து அனைவருக்கும் கண்களில் கண்ணீர்…அஷ்வத்தின் முகம் கூட கசங்கி போய் விட்டது..இவ்வளவு நேரமும் அகில ரூபனின் ஒரு பேச்சு கூட சரியில்லாதது தான் பேசினான்..ஆனால் அவனை பற்றிய இப்பேச்சு மனது கணக்க தான் செய்தது…
ஆனால்  அவன் அடுத்து செய்த செயலில்… இவன் எல்லாம் என்ன மனிதன்..? என்ற  வகையாக தன் சட்டையில் இருந்து தனலட்சுமியின் கையை நாசுக்காக எடுத்து விட்டவன்…
“இந்த நடிப்பு எல்லாம் வேண்டாம்…” என்ற அந்த பேச்சை கேட்டு அஷ்வத்…அவனை புழுவை போல் பார்த்தான் என்றால்… நவீன்…
“அப்பா நீங்க என்னை அடித்தாலும் சரி இதை நான் சொல்லியே ஆக வேண்டும்..நிஜமா இவன் பிறப்பு நல்ல பிறப்பா இருக்காது…” என்று அவன் சொல்லி முடிக்கவும்..திரும்பவும் அவன் கன்னத்தில் பலமாக ஒரு கை தாக்கியது..
ஆனாக்ல் இந்த முறை நவீனின் கன்னத்தை பதம் பார்த்த கைக்கு சொந்தக்காரர் பவனியம்மா… “அவன் கிட்ட மன்னிப்பு கேள்..அவன் கிட்ட மன்னிப்பு  கேள்…” என்று கத்தினார்.
அதற்க்கு நவீன்… “கேட்க வில்லை என்றால்….” நவீனின் பேச்சும் கூட இப்போது கொஞ்சம் திமிறுக்கு மாறி இருநத்து.
இந்த வீட்டின் ரத்தம் என் உடம்பில் ஓடுகிறது…தத்து எடுத்து அனைத்து உரிமைகளையும் கொடுத்து வளர்த்தால்..அவன் நம்ம வீட்டு பெண் வாழ்க்கையை பாழாக்க  வழி செய்வான்..நான் பார்க்கும் பெண்ணையையே அவனும் பார்ப்பான்..அதை நான் கேட்டா என்னையே இவங்க அடிப்பாங்க..
பார்த்து விடலாம்…யார்..?நானா…?அவனா…? வீட்டில் அனைவரும் அவனுக்கு உரிமை கொடுத்த போதும் அவன் அதை எடுக்காது இருந்தான்..அதனால் தான் நவீன்  அகில ரூபனை பங்காளியா பார்க்காது இன்று வரை அண்ணனாகவே பார்த்து வந்தான்..
ஆம் இது வரை நவீனுக்கு அகில ரூபன் மீது எந்த வித விரோதமும் இருந்தது இல்லை..இன்னும் கேட்டால் அகில ரூபன் மீது ஒரு வித மரியாதை வைத்திருந்தான் என்று தான் சொல்ல வேண்டும். வீட்டில் அவனுக்கு அனைத்திலும் முன் உரிமை தான்…
அவன் விருப்பம் கேட்டு தான் அனைத்தும் நடக்கும்..ஆனால் அவன் விருப்பம் அனைத்தும் தன் விருப்பம் அதாவது நவீனுக்கு பிடித்ததாகவும்..அனிதாவுக்கு விருப்பமானதாகவும் தான் இருந்தது.
தாங்கள் சொல்லும் முன்னவே தங்களுக்காக அவன் அனைத்தும் தங்களுக்காக விட்டு கொடுத்ததை அவன் உணர்ந்து இருக்கிறான். அதுவும் தாங்கள் சொல்லாமலேயே..அவனின் விருப்பம் மருத்துவம் தான்..அதே படிப்பை தானும் தங்கையும் விரும்ப…அம்மா தன் அரசியல் தன்னோடு முடிந்ததா..என்ற அவர் கவலையை உணர்ந்து தனக்கு பிடிக்காத  அரசியலில் இறங்கினான்…
ஆம் அவர்கள் குடும்பம் அரசியல் குடும்பம்…பவனியம்மா அந்த குடும்பத்தின் மூன்றாவது அரசியல் வாரிசு என்று தான் சொல்ல வேண்டும்… வீட்டில் ஆண் வாரிசு இல்லை என்று பவனியம்மாவின் தந்தை சங்கரலிங்கம் தன் மகளையே அரசியலில் இறக்கினார்..
அரசியல் வாழ்க்கையில் கறை படியா மனிதன் சங்கரலிங்கத்தின் தந்தை..சங்கரலிங்கம் அவரின் காலத்திற்க்கு ஏற்ப அரசியல் செய்தார்.. அரசு பணத்தை மொத்தமாக  கொள்ளை அடிக்கவில்லை என்றாலும்… நான்கில் ஒரு பங்கு தன் கணக்கில் சேரும் படி பார்த்துக் கொள்வார்.
ஆனால் மக்களுக்கு செய்வதை நல்ல படியாக செய்து விடுவார்..அதனால் மக்களின் செல்வாக்கு பெற்று அவர் இறக்கும் போது முதலமைச்சராய்  தான் இறந்தார்…அது என்னவோ சந்கரலிங்கத்திற்க்கு அரசியல் என்பது தான் உடுத்தும் உடை போல் உணர்ந்தார்.
உடை உடுத்தாது எப்படி வெளியே, செல்ல முடியாதோ..அதே போல் தான் அரசியல் இல்லாது தான் இல்லை என்று தன் மகளுக்கு சிறு வயது முதலே அரசியலில் ஈடுப்படுத்தினார்… அவருக்கு ஆண் பெண் என்ற வேற்றுமை எல்லாம் இல்லை..
“நீ சாதிக்க பிறந்தவள்… நானாவது இத்தனை ஆண்டு அரசியலில் முதலமைச்சர் ஆனேன் ..ஆனால் நீ அப்படி இருக்க கூடாது.” என்று சொல்லி..பள்ளி பாடத்தோடு அரசியலில் இருக்கும் பிரச்சனை அதை கைய்யாளும் வகை..அதன் சூட்சுமம்…
எந்த இடத்தில் வளைந்து கொடுக்கனும்..எந்த இடத்தில் விட்டு கொடுக்கனும்..எந்த இடத்தில் நிமிர்ந்து நிற்க வேண்டும்…தான் கற்ற அனுபவ பாடத்தை சங்கரலிங்கம் தன் மகளுக்கு பாடமாகவே நடத்துவார். அதனால் என்னவோ பவனியம்மாவுக்கு அரசியல் என்பது  தன் குடும்பத்தின் கவுரவமாய் மனதில் படிந்து போய்..
பெரியவன் மருத்துவம் படிக்க அடி எடுத்து வைத்தால் அவனை தொடர்ந்து இருவரும் மருத்துவம் படிக்க நினைக்க…
“.பிள்ளைகளின் மீது  தங்கள் விருப்பத்தை திணிக்க கூடாது என்று” சீதாராமன் சொல்லி விட..சரி நம்மோடு அரசியல் வாழ்க்கை அஸ்த்தமணம் என்று நினைக்கும் போது தான் அகில ரூபன்..
பவனியம்மாவிடம்.. “முதலில் என்னை நம் கட்சியின் உறுப்பினர் ஆக்குங்க…” என்று அவர் முன் நின்றது..
அவனுக்கு அரசியல் பிடிக்காது என்று அவனை வளர்த்தவர்களுக்கு தெரியாதா… “வேண்டாம்.” என்று மறுத்தும் அவன் இதில் இறங்கியது பெற்றவர்களுக்காக மட்டுமே… இது நவீனுக்கும் தெரியும்…
“சாரிண்ணா..அது என்னவோ அந்த வெள்ள கோட் மேல எனக்கு ஒரு ஆசை.” என்று சொல்லும் போது அவன்  தோளை தட்டி விட்டு சென்றான்.
அகில ரூபன் எப்போதும் அப்படி தான் தனக்கு முதன் முதலாய் வாங்கி கொடுத்த பைக்கில் இருந்து கார் வரை…
“எனக்கு இது தா…” என்று நவீன் கேட்க தேவையில்லை..அவனின் பார்வை உணர்ந்தே கொடுத்து விடுவான்.
சீதாராமன்… “நீ ஆசை பட்டு கேட்டது அகிலா…” என்று சொன்னால் எதுவும் சொல்லாது புன்னகையுடன் அந்த இடத்தை  விட்டு சென்று விடுவான்..
அப்படி அனைத்தும் விட்டு கொடுத்தவன் இன்று தட்டி பறிக்க என்ன காரணமாய் இருக்கும் என்று வீட்டின் பெரியவர்கள் யோசிக்க..இளம் ரத்தமான நவீனோ… உரிமை குரல் கொடுத்து எதிர்த்து நின்றான்..
பார்க்கலாம்..உரிமை ஜெய்க்கிறதா…?உண்மை ஜெயிக்கிறதா என்று…

Advertisement