Advertisement

“இருக்கு நான் பார்த்ததுக்கும் அவங்க பார்ப்பதுக்கும் ஒன்று இல்ல.. நிறைய வித்தியாசம் இருக்கு… ஒன்னு…உன் சின்ன அண்ணன் என் தங்கச்சிய பார்க்குறது தெரிஞ்சே உன் பெரிய அண்ணன் பார்க்குறான்..உன் பெரிய அண்ணனுக்கு போட்டியா உன் சின்ன அண்ணன் முறச்சி பார்க்குறான்..
அப்புறம் நான் உன்னை பார்க்க காரணம்..நீயும் என்னை பார்த்த..ஆனா என் தங்கச்சி உங்க அண்ணன்களை  ஆசையா என்ன எந்த விதத்திலும் கூட தப்பா  ஒரு பார்வை பார்க்கவில்லை.” என்று தன் கணவன் சொன்ன அந்த வார்த்தை அனிதாவை பலமாக தாக்கியது.
“அப்போ நீங்க என்ன சொல்ல வர்றிங்க…?உங்க தங்கச்சி ஒழுக்கமான பெண்..நான் அப்படி இல்லேன்னா…?” என்று  அஷ்வத்திடம் கோ[பமாக கேட்கிறேன் என்று ஆராம்பித்த அவள் பேச்சி பாதியில் அழுகையுடன் தான் முடிந்தது.
அனிதா அழுவதை அஷ்வத்தால் தாங்கிக் கொள்ள முடியவில்லை..அதுவும் அவள் சொன்ன நான் ஒழுக்கமில்லாத பெண்ணா..?என்பது போல், அர்த்தம் கொண்டு பேசியதை தாங்க முடியாது…அவளை அணைத்துக் கொண்டான்.
அனிதா அவனின் அணைப்பில் இருந்து விடு பட போராடிய வாறே… “ஒன்னும் வேண்டாம். ஒன்னும் வேண்டாம்.” என்று அஷ்வத்தை தன்னிடம் இருந்து விலக்கி வைக்க முயன்றுக் கொண்டே இருந்தாள்.
ஆனால் அவள் முயற்ச்சி வீணாகியதே ஒழிய அஷ்வத்தை தன்னிடம்  இருந்து ஒரு இன்ச் கூட அனிதாவால் விலக்கி நிறுத்த முடியவில்லை. அதற்க்கும் அவன் மீதே கோபம் கொண்டவள்..அதன் முடிவாய் அவன் மார்பிலேயே சாய்ந்துக் கொண்டாள்.
“நான் எப்போ அனி அப்படி  சொன்னேன்…?என்ன பேசுறேன்னு புரிஞ்சி தான் பேசுறியா…?” என்று  கொஞ்சம் கோபமாக தான் கேட்டான்.
“நீங்க சொன்னதுக்கு மீனிங் அது தான் வருது..உன் தங்கச்சி என் அண்ணன்ங்களை  பார்க்கலே..ஆனால்  நான் உங்களை பார்த்தேன்னா என்ன அர்த்தம்…?” என்று திரும்பவும் கோபமாக கேட்கிறேன் என்ற பெயரில் அனிதா ஆதாங்கமாய் தான் கேட்டாள்.
“ நான் சொன்னதுக்கு இப்படி கூட அர்த்தம் ஆகும் அதாவது உனக்கான துணையா நீ என்னை நினைத்ததால் நீ என்னை பார்த்த..ஆனால் என் தங்கைக்கு அந்த மாதிரியான உணர்வு உன் அண்ணன்களை பார்த்து வரல..அது மாதிரியும் அர்த்தம் வரும்..நான் சொன்னது அந்த மீனிங்கில் தான்.” என்று அஷ்வத் சொன்னதும் தான் அனிதாவுக்கு ..
“ஆமாம் லே…” என்பது போல் உணர்ந்தாள்.
இருந்தும் அனிதா… “என் அண்ணன்களுக்கு என்ன குறை…? இவங்க போல மாப்பிள்ளை கிடைக்க உங்க தங்கச்சி கொடுத்து வெச்சி இருக்கனும்.”
இரு அண்ணன்களுக்கும் சகோதரியாய்.. தன் அண்ணன்கள் தான் எல்லா விதத்த்திலும் சிறந்தவர்கள் என்று சிறு வயது முதலே தன் தந்தை தன் சகோதரர்களை நாயகன் பிம்பத்தை மனதில் பதிய வைத்திருந்த அந்த அன்பு சகோதரி தன் இரு அண்ணன்களுக்காக கணவனிடம் வாதாடினாள்.
“முதல்ல அந்த பன்மை என் அண்ணன்கள்..அதை விடு…கேட்கவே ஒரு மாதிரி இருக்கு.. ” என்று சொன்ன அஷ்வத்..
“என் தங்கச்சி உங்க அண்ணனை பார்க்கலேன்னா உன் அண்ணன்களிடம் குறை இருக்குன்னு அர்த்தம் இல்ல..என் தங்கையின்  எதிர்ப்பார்ப்பு உன் அண்ணன் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.” என்று அஷ்வத் மிக தெளிவாக விளக்கினான்.
இனி ஒரு முறை இவள் இரு அண்ணன்களும் மாத்தி மாத்தி என் தங்கையை பார்க்க கூடாது..இவள் சொன்னால் அவர்கள் கேட்பார்கள்…என்று தான் பொறுமையாக அஷ்வத் தன் மனைவிக்கு விளக்கிக் கொண்டு இருந்தான்.
அதுவும் மட்டும் அல்லாது  இது இன்றோடு விடுபடும் உறவு கிடையாது.இந்த வீட்டின் மாப்பிள்ளை நான்..இங்கு வராது நான் இருக்க முடியாது. அதே போல் தான்  நாளை பின் ஏதாவது நல்லது கெட்டதுக்கு இரு குடும்பமும் ஒன்றாக பங்கு கொள்ளும் படி வரும்..அப்போது தன் தங்கையும் அந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் படி ஆகும். இது போல் விடளை பையன்கள் போல் பார்ப்பது  உறவு  முறைக்கு நல்லது இல்லை என்று தான் அஷ்வத் தன் மனைவிக்கு  விளக்கினான்.
அப்போதும் அனிதா.. “உங்க தங்கச்சியின் எதிர் பார்ப்பு தான் என்ன…?சொல்லுங்கலேன்..என் பெரிய அண்ணன் இந்த வயசுலேயே  கல்வித்துறை அமைச்சர்..என் சின்ன அண்ணன் மருத்துவர்.
அவர் எப்பளவு திறமை வாய்ந்த மருத்துவர் என்று ஒரு மருத்துவராய் உங்களுக்கே தெரிஞ்சி இருக்கும்… அப்படி இருக்க இவங்களோட கூடுதல் தகுதியா உங்க தங்கை வேறு என்ன எதிர் பார்க்கிறா…?” என்ற அனிதாவின் கேள்வியில்..
இவ்வளவு நேரமும் இழுத்து பிடித்திருந்த பொறுமை பறந்தோட… “தோ பார் சும்மா சும்மா உன் அண்ணன்களோடு என் தங்கையை இணச்சி  வெச்சி பேசாதே…அவள் வேறு வீட்டுக்கு வாழ வேண்டிய பெண்..இது போல் பேசி..ஏதாவது பிரச்சனைய உண்டு பண்ணிடாதே…
அவள் இந்த வீட்டுக்கு வர முடியாது வர மாட்டா..அது மட்டும்  நிச்சயம்…இது பத்தி  இனி நீ பேசக்கூடாது.” என்று சொல்லி விட்டு தன் மனைவியின் வாய் அடைத்த அஷ்வத்  தன் மாமனாரை பார்க்க கீழ் தளத்திற்க்கு செல்லும் போது..
அங்கும் தன் தங்கையின் பேச்சு தான் நடைப்பெற்றுக் கொண்டு இருந்தது…பேசியது நம் கல்வித்துறை அமைச்சர்..சங்கடத்துடன் கேட்டுக்  கொண்டு இருப்பது..
முதல் அமைச்சரும்…. கலெக்ட்டரும்…கோபத்துடன்  இடை இடையே நானும் இருக்கிறேன் என்று கத்திக் கொண்டு இருப்பது மருத்துவம்… எதுவும் செய்ய முடியாத சூழ்நிலை கைதியாய்… இனி இந்த குடும்பத்தின் நிம்மதியின் கெதி என்ன…?என்று ஒரு கைய்யாலக தனத்துடன் பார்த்துக் கொண்டு இருப்பது.. அந்த வீட்டின் மூத்த உறுப்பினர்கள்..தனலட்சுமி…. சகுந்தலம்மா…
அஷ்வத் தன் மனைவியிடம்.. “இனி இந்த வீட்டில் என் தங்கை பேச்சு வரக்கூடாது.” என்று சொல்லி விட்டு  கீழ் தளத்திற்க்கு வந்தால்..
அகில ரூபன்… “ அனிதாவை அவள் புருஷன் வீட்டுக்கு போகும் போது நாமும் போகலாம்.” என்று சொல்ல…
சீதாராமன்.. “இல்ல அகிலா அவங்க வந்து அழச்சிட்டு போகனும். அது தான் முறை.” என்று தங்கள் குடும்ப வழக்கத்தை சொன்னார்.
அப்போதும் அகில ரூபன் விடாது… “சரி காலை வந்து அவங்க  அழச்சிட்டு போகட்டும்..நாம ஈவினிங்  போகலாம்.” என்று பெரிய மகன்  சொல்வதை கேட்டதும் தான்.. பெரிய மகன் தங்கையை வழி அனுப்ப மட்டு போகலாம் என்று தங்களை அழைக்கவில்லை. இதில் வேறு ஏதோ காரணம் இருக்கிறது என்று யோசித்தவராய்..
அப்போது தான் அங்கு வந்த அஷ்வத்தை பார்த்து ஒரு தர்ம சங்ட்த்துடன் புன்னகை புரிந்தவராய்… “வாங்க அஷ்வத்.” என்று அழைத்தார் சீதாராமன்.
நாளை மகள் செல்கிறாளோ..அப்போது தானும் இல்லை. தன் மனைவியும் இல்லை..மூன்று நாளாய் கல்யாணம் முன்னிட்டு இருவரும் பணி நிமித்தமாய் வேறு எங்கும் செல்ல்  முடியாத சூழ்நிலை..
பவனியம்மா… “ஈவினிங் வந்தா நான் இருக்க பார்க்கிறேன்.” என்று மனைவி சொன்னதால் தான் சீதாராமன் தன் மகளிடம்  அஷ்வத்தை அழைத்து வர சொன்னது.
கேட்டு தான் பார்க்கலாமே… “உங்க வீட்டவர்களை மாலை வர முடியுமா…?என்று..” கேட்டு பார்க்க நினைத்தார். அவருக்கும் வெற்றி மாறன் புவனேஷ்வரியின் பணி நிமித்தமாய் இருக்கும் பணி சுமை தெரியுமே..அதனால் கேட்டு பார்க்க நினைத்து தான் அஷ்வத்தை அழைத்தது.
ஆனால் அஷ்வத் வரும் நேரம் இப்படி அனைவரும் ஒன்று கூடி  இருப்பர் என்று ஒரு வீட்டு தலைவனாய் சீதாராமன் எதிர் பார்க்கவில்லை.அதுவும் குடும்ப உறுப்பினர்களை கூட்டியது தன் பெரிய மகன் என்ற  போது…ஏதோ இருக்கு என்று தான் அவனின் இரண்டு நாள் செயல்கள் அவருக்கு உணர்த்தியது.. அவர் உணர்வு மெய்பிக்கும் வகையாக தான் அகில ரூபனின்  பேச்சும் இருந்தது.
இப்போது வீட்டு  மாப்பிள்ளை முன் இந்த பேச்சு பேச வேண்டுமா…?என்று எண்ணியவராய்… அகிலா..முதல்ல நாளை அனிதாவை அவள் மாமியார் வீட்டுக்கு அனுப்பலாம்.அதை பற்றி பேச தான் அஷ்வத்தை வர சொன்னேன்.” என்று அகில ரூபனின் பேச்சை இடை விட்டு தடுக்க பார்த்து…
அஷ்வத் பக்கம் திரும்பிய சீதாராமன்.. “அஷ்வத் உங்க அப்பா…” என்று சீதாராமனின் பேச்சை பாதியில் தடை செய்த அகில ரூபன்…
“அதை பத்தி தான் நானும் பேச வந்தேன்..நான் மாமா கிட்டேவும் அத்தை கிட்டேயும்..சாயங்கலாம் கூட்டிட்டு போங்க… நானும் உங்க கூட வர்றோம் என்று போன் பண்ணி சொல்லிட்டேன்.” என்று அகில ரூபன் சொன்னதும்..
அஷ்வத் அதிர்ந்து போய்… “எப்போ…?ஏன்…?” என்று அவன் இரு வார்த்தையில் கேட்டான் என்றால்..அகில ரூபனும்..  “ உங்களை அழச்சிட்டு போகவும்…எனக்கு பெண் கேட்கவும்…” என்ற அவன் வார்த்தையை கேட்டு மொத்த குடும்பமும் ஆடி போய் விட்டது..
எதிர் கட்சியில் இருப்பவர்களின் பார்வையை வைத்தே அவர்கள் என்ன கேட்க நினைக்கிறார்கள் என்று ஊகித்தவராய்..அடுத்து அவர்கள் கேள்வி கேட்க சந்தர்ப்பம் தராது  வாய் அடைக்க செய்யும் பவனியம்மா இப்போது தன் மகன் என்ன சொன்னான் என்று ஊகிக்கவே சிறிது நேரம் பிடித்தது.
நம் சீதாராமனோ இதை தன் மகனிடம் அவனின் செயல்களை வைத்து அவர் எதிர் பார்த்தார் தான்..ஆனால் இவ்வளவு சீக்கிரம்..அதுவும் அஷ்வத்திடமே நேராக கேட்பான் என்று அவர் எதிர் பார்க்கவில்லை… அவர் எதிர் பார்த்து இருக்க வேண்டுமோ என்ற வகையில் தான் அகில ரூபனின் அடுத்து அடுத்தான பேச்சுக்கள் இருந்தன…
“பெண் கேட்கவா….?யாருக்கு…?” என்று அஷ்வத்தும் ஏதோ முடிவு செய்தவனாய் தான் பேச ஆராம்பித்தான்..இனி இது போல் பேச்சு தன் தங்கையை வைத்து இவ்வீட்டில் பேச கூடாது  என்று.
அனிதா… “அஷ்வத்…” என்று ஏதோ பேச ஆராம்பிக்கும் போதே… 
“அனி உனக்கும் எனக்கும் இடையில் இதால் பிரச்சனை வேண்டாம்..இதில் நீ பேசாதே.” என்று அனிதாவின் வாயை அடைத்த அஷ்வத்.. இப்போ நீ பேசு என்பது போல் அகில ரூபனை பார்த்து நின்றான்.
அஷ்வத் நின்ற தோரணையையும்..அவன் தன்னை பார்த்த பார்வையும் பார்த்து அகில ரூபனுக்கு சிரிப்பு தான் வந்தது… ஆனால் அதை வெளி காட்டாது…
“இது என்ன கேள்வி…?” என்று அகில ரூபன் ஆராம்பிக்கும் போதே நவீன் இடையில்… “எனக்கு மதியை பிடித்து இருக்கு.” என்று அண்ணனுக்கு முன் அவன் முந்திக் கொண்டு சொல்லி விட்டான்.
“ம் உனக்கும் பிடிக்கலாம்….” என்று இழுத்து நிறுத்திய அகில ரூபன்..
“ஸ்ரீயை யாருக்கு தான் பிடிக்காது..அம்மாவுக்கு பிடிக்கும். அப்பாவுக்கு பிடிக்கும்..தோ நம்ம இரு பாட்டிகளுக்கும் பிடிக்கும் …அதே போல்  தான் உனக்கும் பிடித்து இருக்கு…” என்று நவீனின் பேச்சை ஒன்றும் இல்லாத ரகத்தில் சேர்த்த அகில ரூபன்.
அஷ்வத் பக்கம் திரும்பி… “எனக்கு தான் பெண் கேட்க..உன் தங்கையை.” என்று சொன்னான்.
 

Advertisement