Advertisement

அத்தியாயம்….6
அனைவரிடமும் விடைப்பெற்று காரில் சென்றுக் கொண்டு இருந்தார்கள் வெற்றி மாறன்  குடும்பத்தினர். எப்போதும் அவர்களின் கார் பயணம் என்பது அமைதி தான். இருந்தது இவர்கள் பயணமும் மகிழ்ச்சியுடன் இருந்தது. அது ஒரு சமயம். பதினான்கு வருடம் முன் காரில் ஏறும் போதே..
“நான் தான் முன்ன உட்காருவேன்.” என்று ஸ்ரீமதி அடம்பிடித்து  உட்கார வரும் போது அவளுக்கு முன்..
“நான் தான்..நான் தான்.” என்று சொல்லி அவள் அமர்ந்துக் கொள்வாள்.
அவள் என்று ஸ்ரீமதி நினைக்கும் போதே  அந்த குரலும், அவளின் சுறு சுறுப்பும் தான் அவளின் நினைவுக்கு  முதலில்  வரும். அவ்வளவு சுறு சுறுப்பானவள்..எதிலும் முதல்..இது தான் அவளின் தாரக மந்திரம் என்றே சொல்லலாம்..அதனால் தான் முதலாய் சென்று விட்டாள்.
இருவருக்கும் கார் பயணம் என்பது அவ்வளவு விருப்பமானது… அதுவும் முதல் இருக்கையில் அமர இருவருக்கும் அவ்வளவு போட்டி நடைப்பெறும்… 
புவனேஷ்வரி சொல்வார்… “ஏன்டி  ஸ்கூல் போகும் போது தினம் தினம்  இப்படி சண்டை போட்டுட்டு  ஸ்கூல் போறிங்க..ஒரு நாள் அவள் உட்காரட்டும். ஒரு நாள் நீ உட்கார்…” என்று தன்னிடம் அன்னை சொன்ன போது..
அன்று தான் சொன்ன வார்த்தை இன்றும் அவளுக்கு நியாபகத்தில்  இருக்கிறது.. “அம்மா போட்டியில் கிடைக்கும் பொருட்களுக்கோ இடத்துக்கோ தான் மதிப்பு அதிகம். வாரத்துக்கு ஒரு நாள் நான் முதல் இருக்கையில் அமர்ந்தால் கூட போதும்.. ஆனா அது நீங்க சொன்னது போல இருக்க கூடாது அவள் கிட்ட போட்டியில் வெற்றி பெற்று வாங்கினதா தான் இருக்கனும்.”
ஆம் நாளை யாருக்கு முதல் இருக்கை என்பதில் முதல் நாள் இரவே ஏதாவது போட்டி அவர்களுக்குள் வைத்துக் கொள்வார்கள்… உதாரணத்திற்க்கு இந்த பூண்டு..
சமையல்காரம்மா நாளைக்கு என்று உரித்து வைத்த பூண்டை இரு கை பிடி அளவு எடுத்து ஆளுக்கு ஒரு பிடி வைத்துக் கொள்வர்..
யார்..?அதை முதலில் சாப்பிட்டு முடிக்கிறார்களோ அவர்களுக்கே நாளை முன் இருக்கை என்று முடிவு செய்துக் கொண்டு இருவரும் பூண்டோடு வருவர்..
அவள் மட்டும் இரண்டு க்ளாஸில் தண்ணீரை கொண்டு வந்து ஒன்று அவள் பக்கமும் இன்னொன்று  தன் பக்கமும் நகர்த்தியதை பார்த்து .. “ஓ பூண்டு சாப்பிட்டா நாக்கு விறு விறுன்னு இருக்கும்லே..அது தான் தண்ணீர் கொண்டு வந்து வைத்து இருக்காள்.” என்று அன்று  தான் தவறாய் நினைத்து..
மூன்று பூண்டை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு நான் மென்றுக் கொண்டு இருக்க..அவளோ மாத்திரை சாப்பிடுவது போல் கையில் வைத்திருந்த பூண்டை அனைத்தையும் ஒரே சமயத்தில் வாயில் போட்டுக் கொண்டு தண்ணீர் ஊற்றியவள் ஒரே முழுங்காய் முழுங்கி விட்டு..
“நான் தான்..நான் தான்…” என்று  சொல்லி அன்று வெற்றி  பெற்றவளாய்  மறு நாள் முதல் இருக்கையில் அவளும் பின் இருக்கையில் தானும் அமர்ந்து போனது தான் அவளோடு நான் செய்த கடைசி பயணம்… முடிந்ததும் அன்றோடு அனைத்தும் முடிந்தது.
போட்டி இல்லை..பந்தையம் இல்லை..வெற்றி..தோல்வி இல்லை…சண்டையும் இல்லை அதற்க்கு பின் தாய் செய்து வைக்கும் சமாதானமும் இல்லை.   மொத்தத்தில் எதுவும் இல்லை என்று ஆக்கிய   அந்த காக்கி  உடை மீது…  முதலில் பயம்.. பின் கோபம் .
.பின் இதோ இப்போது கடைசியாக வெறுப்பில்  வந்து நிற்க்கிறது…அடுத்து என்னவோ.. என்று ஏதோ பழைய நினைவுகளில் சஞ்சரித்துக் கொண்டு வந்தவளின் சஞ்சலத்தை மேலும் கூட்டும் வகையாக வெற்றி மாறன்…
“உனக்கு மிஸ்டர் அகில ரூபனை தெரியுமா…?” என்ற கேட்டதற்க்கு..
அவர் முகத்தை பாராது… “எல்லோருக்கும் தான்  அவரை தெரியும்.” என்று  சொன்னவளை முறைத்து பார்த்த வெற்றி மாறன்..
“நான் பர்சனலா தெரியுமான்னு கேட்டேன்.” என்று திரும்பவும் கேட்கவும்..
“பர்சனலா எனக்கு அந்த வீட்டில் இருக்குறவங்க யாரையும் தெரியாது.” என்று சொன்னாள்.
இப்போது அகில ரூபனை பர்சனலா தெரியுமா…?கேட்டபவர். அப்புறம் நவீனை தெரியுமான்னு கேட்பார்..அது தான் அவர் கேட்பதற்க்கு முன் பதிலை சொல்லி விட்டாள்.
இவர் பர்சனலா தெரியுமா..?என்று  கேட்கும் படி தான் அவங்க செயல்கள் மொத்தமும் இருந்தது. ஒருத்தன் முன்னாடி உட்கார்ந்துட்டு பாரோ பாருன்னு பார்த்து வைத்தா..
இன்னொருத்தன் பக்கத்தில் உட்கார்ந்துட்டு பேசோ பேசோன்னு பேசி வைக்கிறான்..அதுவும்  கடைசியா ஒருத்தன் மதுவே நானே பிக்கப் செய்துக்குறேன் என்று சொல்வதும்ம்.
அதற்க்கு இன்னொருவன் ஹால் டிடையில்ஸ் ஐநோ என்பது போல…  “இப்போவே பெங்களூர் போறேன்னு.” சொல்றான். அந்த கல்வி…இருக்கானே கல்வியா அவன் ..?கல்வி இல்ல… களவி அந்த களவி ரொம்ப தான் பண்றான்… என்று மனதுக்குள் வறுத்தெடுத்துக் கொண்டு தன் இல்லம் சென்றதும்..
உடனே பெங்களூருக்கும் சென்று விட்டாள். தன்னை பைய்யோடு பார்த்ததும் தந்தை எப்போதும் போல் பேசிய பேச்சை எப்போதும் போல் காதில் வாங்காது சென்று விட்டாள்.
அவள் ஊருக்கு சென்றாலும், அவளாள் சீதாராமன் இல்லத்தில் கிளம்பிய பிரச்சனை  தீராது எப்போது இது பற்றி கிளம்பும்…என்று ஏதோ ஆட்டோ பாம் வெடிப்பது போல் ஒவ்வொரு வரும் ஒவ்வொரு வகையாக.. ஆவளோடும்…கோபத்தோடும்… பயத்தோடும் காத்துக் கொண்டு இருந்தனர்…இதே மனநிலையிலேயே குலதெய்வம் கோயிலுக்கும்  சென்று வந்து விட்டனர்…  
மூன்று நாள் பெண் வீட்டில் தான் இருக்க வேண்டும் என்ற முறை ஆதாலால்  அஷ்வத் அந்த வீட்டில் மூன்று நாட்கள் இருந்தான்..
இந்த மூன்று நாளும் ஒவ்வொரு நாளும் எங்கு செல்வது என்று முதலிலேயே அஷ்வத் அனிதாவோடு சேர்ந்து திட்டம் இட்டு இருந்தாலும்..அங்கு எல்லாம் போகாது வீட்டிலேயே இருந்து விட்டான்.
வீட்டில் என்றால் மற்றவர்களோடு கலந்து பேசி எல்லோரோடும் உறவை வளர்த்தான் என்று இல்லை. அனிதா அறையிலேயே இருந்துக் கொண்டான்.. அதே அறையிலேயே உணவை வர வழைத்து உட்கொண்டான்.
அனிதா … “ஏன் ரூமிலேயே அடஞ்சி இருக்கிங்க..வெளியில் வாங்க.. எங்க வீட்டு தோட்டம் அழகா இருக்கும். இல்ல நம்ம ப்ளான் செய்தது போல வெளியில் போகலாம்.” என்று அஷ்வத்தை அழைத்தாள்.
அதற்க்கு… “மூட்… இல்லை.” என்று மட்டும் சொல்லி விடுவான்.
ஆனால் இரவில் அதற்க்கு மட்டும்..நல்ல மூடில் இருப்பான்…இளமையின் உணர்வுகளை பரிமாறிக் கொள்ள தன் மனைவி..அழகுடன் பக்கத்தில் இருக்கும் போது…அதுவும் காதலியே மனைவியாக ஆன போது அவன் சும்மா இருக்க சன்யாசி இல்லையே.. இந்த காலத்தில் சன்யாசியே…
அப்படி இருக்க இரவில் துறவு மேற் கொள்ள  அவன் விரும்பாது…அவளை முற்றிலும் துறக்க செய்பவன்.. பகல் பொழுது மட்டும்…ஒரு புத்தகத்தை கையில் எடுத்துக் கொண்டு அமர்ந்து விடுவான். இப்படி தான் அஷ்வத்தின் மாமியார் விருந்து  மூன்றும்  நாளும் சென்றது.
நாளை அவன் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று வரும் போது மட்டும்… சீதாராமன்.. மகளிடம்… “மாப்பிள்ளை எங்மேம்மா…? அவரை  கூப்பிடு…கொஞ்சம் எங்களோடும் பழக விடும்மா.. அங்கு போனதும் உன் கூட தானே டைம் ஸ்பென் பண்ண போறார்.” என்று மாப்பிள்ளையை அழைத்து வர சொன்னார்.
அதை கேட்ட மகளுக்கு கூச்சம் பாதியும்..கோபம் மீதியுமாய் மின்தூக்கியின் மூலம்  தன் அறைக்கு வந்தாள். அவள் கோபத்திற்க்கு காரணம் அஷ்வத் கீழே வராது தான் மட்டும் மற்றவர்களுடன் இருந்தால்..அதுவும் திருமணம் முடிந்த மறு நாளே…இருந்தால் வீட்டில் இருப்பவர்கள் தவறாய் நினைக்க கூடும் என்று தான் அவளும்  அவன் கூடவே அறையிலேயே அடஞ்சி கிடந்தாள்.
என்ன கோபம் என்று அவளுக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. ஆனால் இதில் கோபப்பட என்ன இருக்கு…?என்று தான் அவளுக்கு புரியவில்லை…கேட்க வேண்டும்..இங்கு இல்லை அங்கு அவர்கள் வீட்டில் என்று நினைத்துக் கொண்டே தங்கள் அறைக்கு வந்த அனிதா..
தன் கணவனின் முகம் பாராது…  “அப்பா உங்கல கூப்பிடுறார்.” என்று சொன்னதற்க்கு..
“ஏன்..?” என்று கேட்டவன்..அவள் போலவே அவள் முகத்தை பாராது புத்தகத்தில் பார்வை பதித்துக் கொண்டே கேட்டான்.
அவன் பிடித்து இருந்த புத்தகத்தை பிடுங்கும் போதே… “அனி நான் படிச்சிட்டு இருக்கேன்.” என்று அவன் சொல்லும் போதே தலை கீழாய் இருந்த புத்தகத்தை படிக்கும் வாகா நேராக வைத்து அவனிடம் கொடுத்தவள்..
“இப்போ படிங்க..நான் அப்பா கிட்ட அவர் ஏதோ மும்முரமா படிக்கிறார்… அவர் படிச்சி முடிச்சிட்டு வருவாருன்னு சொல்லிக்கிறேன்.” என்று சொல்லிக் கொண்டே அந்த அறையை விட்டு செல்ல பார்த்தவளின் கை பற்றிய அஷ்வத்..
“இரு..இரு வர்றேன்.” என்று சொன்னான்.
அஷ்வத் பிடித்து இருந்த கையை பார்த்து… “பகலில் பிடிக்க மாட்டிங்கலே…?” என்று சொன்னதற்க்கு..
“பகலிலும் நீ எனக்கு மனைவி தான்டீ…” என்று அஷ்வத் சொன்னதற்க்கு…
“வேண்டாம் நான் ரொம்ப கோபமா இருக்கேன்..கோபத்தில் ஏதாவது பேசிட போறேன்.” என்று கோபமாக அனிதா பேசினாள்.
“ரொம்ப தான் பண்றே….கோச்சிக்க வேண்டியது நான்..ஆனா நீ கோச்சிட்டு இருக்க.” என்று அஷ்வத் சொன்னான்.
அதற்க்கு அனிதா… “ஏன்…?” என்று கேட்டதற்க்கு..
அவளை ஆழமான ஒரு பார்வை பார்த்துக் கொண்டே… “ஏன்னு உனக்கு தெரியாது…?” என்று கேட்டான்.
அதற்க்கும் அனிதா..”ஏன்..?என்று எனக்கு தெரியும்…உங்களுக்கு இதால் கோபம் ஏன்…?என்று தான் கேட்டேன்.” என்ற மனைவியின் பேச்சில் குழம்பி போய்…
“நீ புரிஞ்சி தான் பேசுறியா…?என் கண் முன்னவே உன் இரண்டு அண்ணனுங்களும் என் தங்கச்சியே சைட் அடிப்பாங்க..அதுவும் உன் பெரிய அண்ணன்..அவன்  ஒரு அமைச்சர் ..அவன் என் தங்கச்சி கிட்ட வழிஞ்சிட்டு இருக்கான்..நான் கோபப்பட கூடாது..
ஏன் கோபம் என்று என்னை கேட்ப….” என்று தன் கோபத்திற்க்கு உண்டான காரணத்தை அஷ்வத் விளக்கினான்.
“நீங்களும் முதலில் என்னை சைட் தான் அடிச்சிங்க..எனக்கும் ஒன்றுக்கு இரண்டு அண்ணன்கள் இருந்தாங்க…  அவங்க கோபப்பட்டு இருந்தா  இதோ நாம் இப்படி இது வரை வந்து இருக்க மாட்டோம்.” என்று அனிதா சொன்னதும்..
“நான் பார்த்ததும் அவங்க பார்ப்பதும் உனக்கு ஒன்னா தெரியுதா…?சொல் ஒன்றா…?” என்று கோபமாக கேட்டான்.
“இதில் என்ன வேறா இருக்கு…நீங்களும் என்னை பிடிச்சதால பார்த்திங்க..அவங்களும் பிடிச்சதாலே தான் உங்க தங்கச்சிய பார்த்தாங்க..இதில் என்ன வித்தியாசம் உங்க கண்ணுக்கு தெரிஞ்சது…?” என்று அனித எகத்தாளமாய் கேட்டாள்.

Advertisement