Advertisement

அத்தியாயம்…5
இந்த ஒரு நிலையில் தன் மகனை சீதாராமன் எதிர் பார்க்கவில்லை. அதுவும் ஸ்ரீமதி அவனின் நெருக்கத்தில் இருந்து விடு பட முயற்ச்சி செய்துக் கொண்டு இருப்பதும்..அதை அவன் உணராது போல் தன்னை நேர்க் கொண்டு பார்த்துக் கொண்டு நிற்க்கும் இந்த அகில ரூபன் ஒரு மகனாய் அவருக்கு புதுமையாக தெரிந்தான்.
அகில ரூபன் பார்க்கும் போதே ஒரு ஆண்மை  நிறைந்த தோற்றத்தில்   மாநிறத்தில் ஆறடி உயரத்துக்கு மேல் என்று சொல்ல கூடிய உயரத்தில் இருப்பான்.அவன் மற்றவர்களிடம் பேசும் தோரணையே கம்பீரம் என்பதா…?இல்லை  தீமிர் என்பதா…?அப்படி தான் மற்றவர்களின் கண்ணுக்கு தெரியும்.
.ஆனால் வீட்டில் அவன் தோரணையே வேறாக தான் இருக்கும்…சீதாராமன்  அகில ரூபனை ஒரு மகனாய் வீட்டிலும், ஒரு அதிகாரியாய் கல்வித்துறை அமைச்சர் என்று வெளியில் பார்க்கும் போது வெவ்வேறு தோரணையை அகில ரூபனிடம் சீதாராமன் பார்த்து இருக்கிறார்.
தனக்கு மட்டும் தான் தன் மகனின் இந்த செயல் வித்தியாசமாக தெரிகிறதா..?என்று அவர் சில சமயம் யோசிப்பது உண்டு..ஆனால் அது இல்லை என்று தன் மனைவி பவானியும்….
“ராம் அகிலா வீட்டில் இப்படி பொறுமையா அமைதியா நாம சொல்வதுக்கு எல்லாம் சரின்னு சொல்லிட்டு இருக்கான்..ஆனால் அவனை  ஒரு அரசியல் தலைவனாய் பேசிப்பாருங்க ராம்…
அப்போ மத்தவங்க இவன் பேச்சை கேட்டு தான் ஆக வேண்டும் என்ற தோரணையில் தாங்க அவன் பேச்சு எல்லாம்  இருக்கும்,…அதுவும் இவனிடம் வாயை திறக்க முடியாது வாய் அடைத்து இருப்பர்கள் எல்லாம் அரசியலில் இவனோடு அனுபவம் வாய்ந்தவர்கள்…” என்று தன் மனைவி தன்னிடம் சொல்லும் போது தான்  சீதாராமனுக்கு தான் நினைத்தது தவறு இல்லை சரி தான் என்று நினைத்துக் கொள்வார்.. கூடவே தன் மகனின் செயல் வெளியில் தான் இயல்பாய் இருக்கிறதோ என்றும்…
இப்போது அகில ரூபன் தன்னை பார்த்த அந்த பார்வை தோரணை எல்லாம் வெளியில் பார்க்கும் அந்த பிம்பம்  தான் தெரிந்தது அவருக்கு..எதோ மனதில் வித்தியாசமாய் தோன்றினாலும் அதை முகத்தில் காட்டாது…
“என்ன அகில் இங்கு இருக்க…?” என்று சீதாராமன் கேட்டதற்க்கு..
“ஏன் டாட் நான் இங்கு  வரக் கூடாதா…? என் வீட்டில் நான் எங்க வேண்டுமானலும் போகலாம் தானே…?” என்று அவன் சொல்ல..
“இல்ல அகிலா நான் ஏன் இங்கு வந்தேன்னு கேட்கல…?” என்று சொன்ன   சீதாராமன் பேச்சில் கொஞ்சம் தடுமாற்றம் தெரிந்தது..
அதுவும் அகில ரூபம் தன்னை.. “  டாட்..” என்று அழைத்த அந்த  விளிப்பு…ஏதோ இருக்கிறது என்று அவர் மனதுக்கு மீண்டும் மீண்டும் சொன்னது.
அதுவும் இது போல் எல்லாம் பேசாதவன்..அதுவும் மற்றவர்கள் முன் என்று நினைக்கும் போதே சீதாராமன் அகில ரூபனின் பக்கத்தில் நின்றுக் கொண்டு  இருந்த  ஸ்ரீமதியை பார்த்தார்.
அவளோ நெளிந்து கொண்டு அவனிடம் இருந்து விலக முயற்ச்சி செய்துக் கொண்டு இருந்தாள். அகில ரூபன் ஸ்ரீஈமதியை அணைக்க வில்லை…ஆனால் நெருக்கமாய் மிக நெருக்கமாய் மதியை வைத்துக் கொண்டு இருந்தான்.
ஸ்ரீமதியே அகில ரூபன் பக்கத்தில் நெருங்கி நின்றுக் கொண்டு இருந்தால் அது சீதாராமனுக்கு அவ்வளவு வித்தியாசமாக தெரிந்து இருக்காது. ஆனால் அவள் விலக முயற்ச்சிக்க இவன் விடாது பிடித்து வைத்திருப்பது தான் சீதாராமனுக்கோ என்னவோ போல் ஆனாது.
அதுவும் ஒரு தந்தையாய் தான் வந்த பின்னும்…அவளை விடாது இருப்பதும் அகில ரூபனின் இந்த மாறுப்பட்ட செயல் பாடுகளையும் பார்த்தவருக்கு இவன் என்னவோ மனதில் ஒரு முடிவு செய்து விட்டு தான் இவை அனைத்தையும் செய்கிறான் என்று நினைத்தவர்..
“அகில் மதிய விடு.” 
ஒரு பெரியவராய் ஒரு பெண்ணின் தந்தையாய் ஒரு பெண் விருப்பம் இல்லாது  இது போல் அவளை அருகில் பிடித்து வைத்திருப்பது தவறு என்ற நியாயமான எண்ணத்தில் சொன்னார்.
ஆனால்  அகில ரூபனோ… “ஏன்…?” என்று ஒரே வார்த்தையில்  சீதாராமனின் வாய் அடைத்தவன்.
ஸ்ரீமதியிடம்… “நான்  உன்னை  விழாமல் தானே பிடிச்சேன்..இப்போ எதுக்கு இப்படி நெளிஞ்ச்சிட்டு இருக்க….?” என்று அவளை பார்த்து கேட்டான்.
ஸ்ரீமதி முதலில் அவனின் மூச்சு காற்றிலும் அவன் நெருக்கத்திலும் அதிர்ச்சியாக என்ன என்று அவள் உணரும் முன்னவே தான் சீதாராமன் அந்த இடத்திற்க்கு வந்து விட்டார்.
அவர் வரும் முன் கோபத்தில் அவனிடம் இருந்து விடுபட முயற்ச்சி செய்துக் கொண்டு இருந்த ஸ்ரீமதி சீதாராமன் அந்த இடத்திற்க்கு வந்ததும், ஒரு வித கூச்சத்திலும், பின் அவர் ஏதாவது தவறாய் நினைத்துக் கொள்வாரோ என்ற பயத்திலும் அவனிடம் இருந்து விடு பட நினைத்தாள்.
ஆனால் அவளாள் முயற்சி மட்டுமே செய்ய முடிந்தது. சதாரணமாய் அவன்  அவளின் தோளை பற்றிக் கொண்டு இருப்பது போல் தெரிந்தாலும் அவன் பிடி இறுகி இருந்தது.அதனால் அவளாய் அவனை விட்டு விலக முடியாது நெளிய ஆராம்பித்து விட்டாள்.
ஒரு கட்டத்துக்கு மேல் சீதாராமனே… “மதியை விடு..” என்று சொல்லியும்.. அவன் கேட்ட.
“ஏன்..?” என்ற கேள்வியில் அதிர்ந்து போய் அவள் அகில ரூபன் முகத்தை பார்த்தாள்.
அதுவும் அவன் கேட்ட… “விழாமல் தானே தாங்கினேன். ஏன்  நெளிஞ்சிட்ட இருக்க..?” என்ற அவனின் கேள்வியில் இன்னும் அதிர்ந்து தான் போனாள்.
அந்த அதிர்ச்சி எல்லாம் ஒரு சில நொடி தான்… “நானே விழாமல் நின்னு இருப்பேன்..நான் ஒன்னும் அவ்வளவு வீக் எல்லாம் இல்ல…அப்புறம் ஒன்னு அப்படி விழாமல் பிடிச்சிங்க என்றாலும், ஒரு கட்டத்தில் என்னை விட்டு கொஞ்சம் விலகி விடனும்..இல்ல விலக்கி வைக்கனும்.” என்ற அவளின் விளக்கத்திற்க்கு..
மீண்டும் அவன்… “ஏன்…?” என்று  கேட்டு வைத்தான்.
என்ன கேள்வி என்பது போல் பார்த்த ஸ்ரீமதி  பின் கோபமாய்… “உங்க வீட்டுக்கு விருந்தாளியா வந்தவங்க கிட்ட இப்படி தான் பிகேவ் பண்ணுவிங்களா…?” என்று  கேட்டாள்.
அதற்க்கும் அகில ரூபன்.. “சேச்சே விருந்தாளி வந்தா எல்லாம் நான் இப்படி என்ன அங்கு இருக்க கூட மாட்டேன்.” என்று சொன்னவன்.
பின்… “ஆனா நீ இந்த வீட்டுக்கு விருந்தாளி இல்லையே…” என்று ஸ்ரீமதியிடம் சொன்னவன்..
தன் தந்தையை பார்த்து.. “டாட் நேத்து கூட மதிய பத்தி பேசிட்டு இருந்தோமே…இவள் சொந்தம் இல்ல பந்தம் என்று….” என்று  அகில ரூபன் தன் செயலுக்கு துணையாக தன் தந்தையையும் இதில் இழுத்து வைத்தான். ஸ்ரீமதிக்கு இப்போது கோபம் போய் இப்போது பயம் வர ஆராம்பித்து விட்டது..
என்னது பெரியவங்களே இதை பத்தி பேசினாங்களா…?அப்போ இப்போ உள்ளே அப்பா அம்மா இருக்காங்களே..அவங்க கிட்ட இது பத்தி பேசினா…? அய்யோ இந்த வீட்டுக்கு நானா….? என்று  ஸ்ரீமதி பதறி போனாள்.
சீதாராமனோ அகில ரூபன் சொன்ன நேத்து பேசினோம் என்ற அந்த வார்த்தையிலே ஆணி அடித்தது போல் நின்று விட்டார். நேற்று பேசியது யாருக்காக..ஆனால் இவன் என்ன இப்படி செய்கிறான்..
நவின் அகில ரூபன் சாப்பிடும் போது  ஸ்ரீமதியின் பக்கத்தில்  அமர்ந்ததை பாத்தே அவன் முகம் மாறி விட்டது..இப்போது இவன் செயலும் நடவடிக்கையும் பார்க்கும் போது ..கண்டிப்பாக இதை வைத்து வீட்டில் ஏதோ நடக்க போகிறது என்று  அவர் உள் மனம் அடித்து சொன்னது..
புவனேஷ்வரி  “மதி…” என்று அழைத்து கொண்டு அங்கு வரவும் தான் மதி அய்யோ என்று அவனிடம் இருந்து விடுபட விட்ட முயற்சியை மீண்டும் தொட முயற்ச்சி செய்த போது தான் அவன் அவளை  எப்போதோ விட்டு  விட்டான்
நான் தான் அவன் பக்கத்தில் இன்னும் உரசிக் கொண்டு நிற்க்கிறோம் என்று உணர்ந்தவளாய் அவசர அவசரமாய் அவனை விட்டு அவள் விலகி நின்றாள்.
ஸ்ரீமதியின் இந்த செயல்களை எல்லாம் பார்த்த அகில ரூபனுக்கு கொஞ்சம் சிரிப்பு வரும் போல் தான் இருந்தது..ஆனால் சிரிக்கவில்லை…
முகத்தை எப்போதும் போல் வைத்துக் கொண்டு… “என்ன ஸ்ரீ நான் விட்டும் கூட விலகாது இருக்க..இதில் டாட் வேற அவளை  விடுன்னு என் கிட்ட சொல்றார்…” என்று அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அந்த இடத்திற்க்கு புவ்வேஷ்வரி வந்து  விட்டார்.
வந்தவர் ஸ்ரீமதியிடம் … “மதி அப்பாவுக்கு அர்ஜெண்டா போகனுமாம்… கிளம்ப சொல்றார்.” என்று ஸ்ரீமதியிடம் சொன்னவர்..
சீதாராமனையும் அகில ரூபனையும் பார்த்து… “சாரி அவருக்கு அர்ஜெண்டா போகனுமாம்…இப்போவே நாங்க கிளம்பனும்.” என்று  புவனேஷ்வரி  ஸ்ரீமதியிடம் சொன்னதையே திரும்ப இவர்கர்களிடமும் சொன்னார்.
“ஒகேம்மா இந்த வேலைய பத்தி தான் எங்களுக்கு தெரியுமே…” என்று சீதாராமன் புவனேஷ்வரியிடம் பேசிக் கொண்டு இருந்தாலும், மனது ஏனோ சற்று முன் நடந்த விசயத்திலேயே நின்று விட்டது…
“அப்போ நாங்க  கிளம்புறோம்.” என்று  புவனேஷ்வரி கை கூப்பி விடை பெற..
அவர் கையை பற்றிக் கொண்ட அகில ரூபன்… “என்ன அத்தை பார்முலா பேசிட்டு… அதுவும் இது போல் எல்லாம்.” புவனேஷ்வரி கைய் கூப்பியதை சுட்டி காட்டி சொன்னவன்…
“டாடியை என்ன வைத்து கூப்பிடுவது என்று நீங்க திணறிங்கன்னு நினைக்கிறேன்..நீங்க டாடியை அண்ணன் என்ற முறை வைத்தே கூப்பிடுங்க..அதே போல் என் கிட்ட இந்த சம்பிராதாயம் பேச்சு வார்த்தை எல்லாம் வேண்டாம்..மாப்பிள்ளை என்றே என்னை கூப்பிடலாம்.” என்று அகில ரூபன் சொல்லவும்..
ஸ்ரீமதி… “அம்மா அப்பா அவசரமா போகனும் என்று சொன்னதா சொன்னிங்களே..வாங்க போகலாம் இல்லேன்னா அப்பா திட்டுவார்.” என்று புவனேஷ்வரியை அவசரப்படுத்திய  ஸ்ரீமதி அவரின்  கை பிடித்து இழுத்து சென்றாள்
புவனேஷ்வரி கணவனின் அவசரத்தை நினைத்து மகளுடன் சென்றாலும், மனதில் அகில ரூபன் சொன்ன மாப்பிள்ளை என்று சொன்னதே  மனதில் உழண்டு கொண்டு இருந்தது..
வெற்றி மாறன் குடும்பத்தினர் அனைவரிடமும் விடைபெற்று செல்லும் போது தனலட்சுமி புவனேஷ்வரியிடம் “நாளை குடும்பமா நாங்க குலதெய்வம் கோயிலுக்கு போறோம்..நீங்களும் வந்தா நல்லா இருக்கும்.” என்று தனலட்சுமி வெற்றி மாறன் குடும்பத்தை அழைத்தார்.
அதற்க்கு வெற்றி மாறன்.. “நாளைக்கு சீப் செகரட்டிரிக்கு போகனும்..என்னால  வர முடியாது.” என்று உடனே மறுத்து விட்டார்.
தனலட்சுமி புவனேஷ்வரியிடம் தன் பார்வையை செலுத்த… எப்படி மறுப்பது என்று கொஞ்சம் தயங்கினார். வீட்டின் பெரியவர் கூப்பிடுறார் எப்படி வர முடியாது என்று மூஞ்சியில் அடித்தது போல் சொல்வது என்று தயங்கியவரை பார்த்த பவனியம்மா..
“எனக்கு உங்க நிலை புரியுது புவனா… கல்யாணத்துக்கு என்றே நீங்க ஹாஸ்பிட்டல் போக முடியாம இருந்து இருக்கும்..அதனால பரவாயில்ல..” என்று அவர் சங்கடம் படாது தடுத்து விட்டார்.
ஆனால் நவின்… “அத்தை மதியை  வேணா அனுப்பி வைங்கலேன். நானே வந்து கூட்டிட்டு போறேன்.” என்று சொன்னதும்..
ஸ்ரீமதி வாய் திறப்பதற்க்குள்… “அவள் இப்போவே பெங்களூர் போறா… தெரிஞ்சவங்க யாரோ இறந்துட்டாங்க..அவங்களுக்கு இவளோட உதவி தேவையா இருக்கு.” என்ற கூடுதல் தகவலையும் சொன்ன அகில ரூபனை தான் அனைவரும் பார்த்திருந்தனர்.
அகில ரூபன் இது போல் உறவு என்று யார் வந்தாலும், அவர்கள் முன் அநாவசியமாக வந்து நிற்க மாட்டான். அவன்  சிறு வயது முதலே அது தான் அவன் பழக்கம்.
அதுவும் அவன் அரசியலில் இறங்கி பின் கேட்கவே வேண்டாம். நேரம் இல்லாததோடு வரும் உறவு முறையினர் ஏதாவது பேசுவதை கேட்டால்.. அவன் நறுக்கு தெரித்தார் போல் ஏதாவது சொல்ல தான் அவன் வாய் வரை  வார்த்தை வந்து விடும்.
ஆனால் வந்தவர்கள் ஒன்று தந்தைக்கு நெருங்கிய உறவாய் இருப்பர்..இல்லை தாய்க்கு..இவர்களை பேசினால் அது தன்  பெற்றோர்களை அவமதித்தது போல் என்று ஏதும் பேசாது கடந்து விடுவான்.
அவன் அரசியலுக்கு வந்ததும் ஒரு சிலர் சீதாராமனிடமோ பவனியம்மாவிடமோ… “உங்க  வாரிசு நவினை அரசிலுக்கு கொண்டு வந்து இருக்கலாம் இல்லையா…?ஒரு பேர் இருந்து இருக்கும்.” என்று வேண்டும் என்றே தான் சொல்வார்கள்.
பவனியம்மா… “இவனும் என் வாரிசு தான்.” என்று சொன்னால்…
அதற்க்கும் … “நான் சொந்த வாரிசை சொன்னேன்..சட்டப்படி இவனும் உங்க வாரிசு தான். அதான் கல்யாணம் அன்னைக்கே ஒரு வயது ஆன  இவனை சட்டப்படி தத்து எடுத்துட்டிங்களே…
என்னவோ பிள்ளையே பிறக்காதது போல..உங்களுக்கே அடுத்த வருடமே சிங்க குட்டியாட்டம் ஒர்  ஆம்பிள்ளை பிள்ளை வந்துட்டான்..அடுத்து இளவரசி மாதிரி பெண் குழந்தை.” என்று சொல்லி அங்கலாய்த்துக் கொண்டவர்கள்..
கூடவே… “சரி  தத்து தான் எடுத்திங்க. நம்ம சொந்தத்திலேயே  அப்போ எத்தனை  குழந்தைங்க இருந்தது. அதில் ஒன்னை எடுத்து இருக்கலாம்..ஏன் அப்போ என் மூன்றாம் மகனுக்கும் ஒரு வயது தான்..அவன் அகிலாவோட கொஞ்சம் நிறமா கூட இருந்தான்.”
இத்தனை சொத்தும் எவனோ ஊர் பெயர் தெரியாதவன் ஆள்வதா…?என்ற பொறாமையிலும், தன் மகனை  தத்து எடுத்து இருந்தால்…அவன் வசதியாக வாழ்வானே என்ற எண்ணத்திலும் தன் பொறுமலை கொட்டி தீர்த்து விட்டு செல்வது. அதனால் அகில ரூபன் யாரின் முன்னும்  அநாவசியமாக வரவும் மாட்டான் பேசவும் மாட்டான்.
அப்படி பட்டவன் இன்று வந்ததோடு இருந்து இதோ போகும் வரை வழி அனுப்பி வைக்கிறான்..ஸ்ரீமதியை பற்றி அனைத்தும் தெரிந்து வைத்து இருக்கிறான் என்று அவனை பார்த்திருந்தனர்.
ஸ்ரீமதியும்… “ஆமாம் ஆன்ட்டி நான் போய் ஆகனும்… எனக்கு தெரிந்தவங்க வயதான ஒருத்தர் இறந்துட்டார்…அவர் மனைவிக்கு ஒன்றும் தெரியாது. பசங்க எல்லாம் வெளி நாட்டில் இருக்காங்க..என் பிரண்ட் தான் அவங்களுக்கு துணையா இருக்கா..ஒட்டக்கு ஆள் தேவை நான் போய்  தான் ஆகனும்.” என்று அகில ரூபன் சொன்னது உண்மை என்பது  போல் தான் ஸ்ரீமதியின் பேச்சும் இருந்தது.
அகில ரூபனின் செயலை பார்த்து  அவன் வீட்டில் இருப்பவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி என்றால், நவினுக்கு ஆத்திரமாக இருந்தது.இது வரை ஸ்ரீமதியை பிடித்தம் அவளை தான் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும்..என்ற அந்த எண்ணம் எல்லாம் இல்லை.
பார்க்கலாம் பெண் அழகா இருக்கு…வீட்டில் பெரியவர்கள் பெண் பார்க்கும் போது நம்மிடம் புகைப்படம் காட்டினால்…நம் மனதுக்கு தோன்றுமே… அந்த எண்ணம். அந்த வயதுக்கே உரிய ஒரு பார்வை..
இன்று அவளை அந்த உடையிலும் அவள் சிரிப்பையும் பார்த்து பரவாயில்லை நல்லா தான் இருக்கா..வீட்டில் இருப்பவர்களுக்கும் இவளை பிடித்து இருக்கு..அதுவும் அம்மாவுக்கு… சரி கொஞ்சம் பழகி பார்த்து முடிவு எடுப்போம் என்று தான் இது வரை நினைத்திருந்தான்.
ஆனால் அகில ரூபனின் கவனம் ஸ்ரீமதியிடம் என்று தெரிந்ததும்..நான் நேற்றே அவளை பிடிப்பது போல் இருக்கு என்று தானே சொன்னேன்..இவனும் அப்போ அங்கு தானே இருந்தான்..
இப்போ என்ன அவளிடம் இவன் பேசுவது…?அதுவும் அவள் விசயம் அனைத்து தெரிந்து வைத்து இருக்கான். அதை நினைக்க நினைக்க தான் நவினுக்கு ஸ்ரீமதி வேண்டும் என்று மனது அடம் பிடிக்க ஆராம்பித்தது.
“சரிம்மா அப்போ பரவாயில்ல..வேலை இருக்குன்னா அதை தான் நாம முதல்ல பார்க்கனும்..நான் போகனும் என்று தான் இருக்கேன்…ஆனால் நான் காரில் போகும் போது கூட ஏதாவது ஒரு வேலை வந்தால் நான் ரிட்டன் தான் ஆகனும்.” என்று ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சராய் தன் வேலை பளுவை சொன்னார் பவனியம்மா…
இதை  அனைத்தும் பார்த்திருந்த அஷ்வத் வாய் திறக்கவில்லை… ஸ்ரீமதி போகும் போது தன் அண்ணன் பக்கம் பார்வையை திருப்பி போய் .. “வருகிறேன்.” என்பது போல் விடைப்பெற அப்போது தான் அவள் அருகில் வந்த அஷ்வத்…
“மனசுல எதையும் போட்டு குழப்பிக்காதே…ஊருக்கு போ நம்மை மீறி எதுவும் நடந்து விடாது.” என்று அகில ரூபனின் செயலை வைத்தும் தன் தங்கையின் குழம்பிய முகத்தை பார்த்தும் ஒரு அண்ணனாய் அவளுக்கு தைரியம் வழங்கினான்.
இதை அகில ருஇபன் ஒரு சிறு புன்னைகையோடு பார்த்துக் கொண்டு தான் இருந்தான்.
  
 
 

Advertisement