Advertisement

அத்தியாயம்…4
கீதா எப்படி சொல்வது…? எங்கு இருந்து ஆரம்பிப்பது….? என்று யோசிக்கும் போதே கிரிதரன்.. கிரிஜா ..பத்மினி… அங்கு இருந்து எழும் போதே கீதா தன்  இருபக்கமும்  அமர்ந்திருந்த பத்மினி கிரிஜாவின் கையை போக விடாது தடுத்து நிறுத்திய கீதா…
பத்மினியின்  பக்கத்தில் அமர்ந்திருந்த கிரிதரனை கண்ணால் பார்த்து போகாதிங்க  என்பது போல் சைகை செய்தாள். பின் ஏதோ முடிவு செய்தவளாய் … தன் எதிரில் அமர்ந்திருந்த குருமூர்த்தியை நேர்க் கொண்டு பார்த்தவளாய்…
“நீங்க சொன்னது உண்மை தான்..இங்கு நாளு பேர் முன்நிலையில் பேசவே நான் தயங்கினா…அத்தனை பேர் முன்நிலையில்  என்னால் எப்படி பேச முடியும்…?” என்று  கேட்டவள் பின்..
“நான் சின்ன வயசுல இருந்தே ரொம்ப பயந்தவள் என்பதால நான் எங்கேயும் அவ்வளவா வெளியில் போக மாட்டேன்..பள்ளி பின் கல்லூரி அவ்வளவு தான்..வெளி உலகம் என்பது அவ்வளவா கிடையாது..
அதனால தான் நான் கல்யாணம் ஆன புதியதில் அவரும் அவங்க அண்ணியும் பேசுவது கேட்க ஒரு மாதிரியா இருந்தாலும்,நாம் தான் கட்டுப்பட்டியா வளர்ந்துட்டோம்..இது போல் பேசுவது தப்பு இல்லையோ…?
அவர்கள் பேசுவதை கேட்டு ஒரு மாதிரியா இருந்தாலும், நானே இப்படி நினச்சி எனக்கு நானே என்னை சமாதானம் படுத்திக் கொண்டு இருந்தேன்.” என்று கீதா சொல்லிக் கொண்டே போனவளின் பேச்சை தடை செய்யும் விதமாய்…
 “என்ன மாதிரி பேசுவாங்க…?” என்று குருமூர்த்தி கேட்டான்.
கீதா என்ன தான் நீதி மன்றத்தில் அனைவரின் முன்னும் பேசி தானே ஆக வேண்டும்…அதனால் இவர்கள் இருக்கட்டும் என்று சொன்னாலும், இதை போல் பேசி பழக்கம் இல்லாதவள்..மற்றவர்கள் பேசினாலே முகம் சுழித்து அந்த இடத்தை விட்டு அகன்று விடுபவள்   இன்று இரு ஆண்கள் முன்நிலையில்  உடன் பிறந்த சகோதரியின் முன்நிலையில் பேச கூச்சமாக தான் இருந்தது..
ஆனாலும் சொல்லி தானே ஆக வேண்டும் என்று நினைக்கும் வேளயில் பத்மினியின் கை பற்றுதலில் அவளை திரும்பி பார்க்க..பத்மினியின் பார்வையில்  கீதா என்ன உணர்ந்தாளோ…குருமூர்த்தியிடம் சொல்ல ஆரம்பித்தாள்.
“ அவர் இது வரை அவங்க அண்ணியை அண்ணின்னு சொல்லி கூப்பிட்டதே கிடையாது.” என்று கீதா சொல்லி நிறுத்தியதும்…
“இது எல்லாம் ஒரு பெரிய விசயமா…? அண்ணி தன்னோட சின்ன வயசா இருந்தா  அப்படி ஒரு சிலர் கூப்பிட மாட்டாங்க.” என்று குருமூர்த்தி சொன்னதும்..
“ஓ அப்போ  அண்ணி சின்ன வயசா இருந்தா எப்படி எல்லாம் கூட பேசலாமா…? மாதவிலக்கு. பத்தி..கணவன் பக்கத்தில் இருக்க இவர் கிட்ட பேட் வாங்கிட்டு வான்னு சொல்றது..அப்புறம் என்ன என்னவோ அதை சொல்ல கூட எனக்கு கூசுது.” என்று கீதா சொன்னதுமே குருமூர்த்தி அமைதியாகி விட்டான்..
கீதா பேச பேச அவள் குரலின் ஆதாங்கமும், அந்த குரலின்  மாற்றமுமே அவளின்  வேதனை குருமூர்த்திக்கு புரிவதாய்…  பின் அதை பற்றி எதுவும் பேசாது..
“எப்போ நீங்க இது வேறு மாதிரி உறவு என்று முடிவு செய்திங்க…?” என்று குருமூர்த்தி  இப்போது நேரிடையாக விசயத்து வந்தான்.
“இரண்டு நாள் முன்ன நையிட்  எப்போவும் போல பால் எடுத்துட்டு வந்தேன்..அது என்னவோ அது குடிச்சா கொஞ்ச நேரத்தில் எல்லாம் தூக்கம் வந்துடுது…
கொஞ்ச நாளாவே என்னவோ ஏதோ எனக்கு தெரியாம இந்த வீட்டில் ஏதோ நடக்குதுன்னு என் மனசுக்கு தோனிட்டே இருந்தது அதனால அன்னைக்கு அந்த பாலை குடிக்காம .  வாஷ் பேஷனில் ஊத்திட்டேன். 
அது என்னவோ தினம்  தினம் அவர் என் பக்கத்தில் படுத்த உடன்  என் கிட்ட கேட்கும் முதல் கேள்வி … 
“பால் குடிச்சிட்டியா….?” என்பது தான். 
நான்.  “ குடிச்சிட்டேன் என்று சொல்லிட்டேன்.” என்று கீதா சொல்லிக் கொண்டு இருக்கும் போதே குருமூர்த்தி…
“உங்க உறவு எப்படி இருந்தது…?அதாவது நான் கேட்பது தாம்பத்தியம்..”என்று  குருமூர்த்தி கேட்கவும்…
“அது எல்லாம் நல்லா தான் போயிட்டு இருந்தது.” என்று கீதா சொன்னாள்.
“குழந்தை….” என்று குருமூர்த்தி அடுத்து தன் கேள்வி எழுப்பினான்.
“இல்ல இப்போ வேண்டாம் என்று சொல்லிட்டார்..அதனால…” என்று கீதா  சொல்லவும்…
குருமூர்த்தி திரும்பவும்… “நீங்க அதுக்கு ஒன்றும் ஆட்சேபனை  சொல்லலையா…?” என்று கேட்ட குருமூர்த்தி பின் அவனே…
“இல்ல நீங்களுமே இப்போதைக்கு  குழந்தை வேண்டாம் என்று நினச்சிட்டிங்களா…/?” என்று கேட்டான்.
“சார் எனக்கு ஐந்து வருடமா இடம் பார்த்துட்டு இருந்தாங்கன்னு சொன்னனே…இப்போ எனக்கு வயசு இருபத்தி எட்டு… இதே இருபத்தி ஒரு வயசுல கல்யாணம்  ஆகி இருந்தா..சரி ஒரு இரண்டு வருடம் போகட்டும் என்று கூட நினச்சி இருப்பேன்..
ஆனால் இருபத்தி எட்டு வயசுல கல்யாணம் ஆனா அடுத்து குழந்தை என்று தான் நினைக்க தோனும்.” என்று கீதா சொல்லவும்…
“அப்போ நீங்க இதை ஜெய் கிட்ட சொன்னிங்களா….?” என்று தான் ஒரு வக்கீல் என்று நிருபிக்கும் வகையில் குருமூர்த்தி மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பினான்.
“ஆ சொன்னேன்..ஆனா அவர் இரண்டு  வருடம் போகட்டும் என்று சொல்லிட்டார்.” என்று கீதா சொல்லும் போதே கீதாவின் மனது  ஒரு குழந்தையாவது இருந்து இருக்க கூடாதா…? என்று யோசித்த அடுத்த நொடி..இது போல் ஒருவனின் குழந்தையையை சுமக்கும் துர்பாக்கியம் என் கருவறைக்கு வேண்டாம் என்றும் நினைத்தது..
மனிதனின் மனம் குரங்கு தானே ஒரு பக்கம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசிக்கும்  அதே மனம் தான் இல்லை என்பதில் நிம்மதியும் அடைகிறது.
“ம் சொல்லுங்க அந்த நையிட் பால் குடிக்கல..அப்புறம்…” என்று குருமூர்த்தி கேட்க…
“கொஞ்ச நேரம் கழித்து அவர் வெளியில் போனார்.நான் தண்ணி குடிக்க தான் இருக்கும் என்று நினச்சி இருந்தேன்..ஆனால் ரொம்ப  நேரம் ஆகியும் வராது  போகவே.. நான் எங்க அறையில் இருந்து வெளியில் வந்து பார்த்தேன்.
அந்த வீடு டூப்ளக்ஸ் வீடு…எங்க அறை மாடியில் இருக்கும்…அவங்க அண்ணன் அறை கீழே இருக்கும்..கீழ் ஹாலில் இருந்து டிவி சத்தம் கேட்டது..நான் மேல இருந்து கீழே எட்டி பார்த்தேன்.
அங்கு அவர் அண்ணன் ஹாலில் டிவி பார்த்துட்டு இருந்தார்..மேல இருந்து பார்த்தா ஒரு பக்கம் தான் தெரியும்..சரி இவர் இந்த பக்கம் உட்கார்ந்துட்டு அவர் அண்ணன் கூட டிவி பார்க்குறார் போல..என்று அப்படி நினச்சிட்டு  இருக்கும் போது ஏனோ மனது முரண்டு  பிடித்தது..
நான் முழிச்சிட்டு இருக்கும் போது டிவி பார்க்க போய் இருக்கலாம்..இல்ல டிவி பார்த்துட்டு வந்து படுத்து இருக்கலாம்..ஆனா இவர் படுத்துட்டு நான் தூங்கிய பின் போனது ஏனோ என் மனசுக்கு ஒரு நெருடலா இருந்தது.
நானும் கீழே இறங்கி போனேன்..அவர்  அண்ணன் என்னை பார்க்கல… அவருடைய அன்ணன்  மட்டும் தான் டிவி  பார்த்துட்டு இருந்தார்… ஹாலுக்கு பின் பக்கம் தான் அவங்க அறை நான் அந்த பக்கம் போன போது கூட அவர் என்னை கவனிக்கல..
அவர் என்னை எதிர் பார்த்து இருந்தா கவனிச்சி இருப்பாரோ என்னவோ.. நான் அவர் அறை பக்கம் போக போக அந்த அறையில் இருந்து என் கணவரோட குரல் கேட்டுச்சி..
அவங்க அறையில் அந்த நேரத்தில் என் கணவரோட குரல்..கேட்டது தப்பு இல்ல..ஆனா அவர் அண்ணன் ஹாலில் இருக்க இவர் குரல் அவங்க அண்ணன் அறையில்  …
அப்போ கூட ஒரு சமயம் குழந்தைக்கு ஏதாவது உடம்புக்கு முடியலேயே என்று தான் முதலில் நினச்சேன்..ஆனா குழந்தைக்கு  உடம்புக்கு முடியாம இருந்தா… அந்த குழந்தையின் அப்பா இது போல் டிவி பார்த்துட்டு இருக்க முடியுமா…? என்று யோசித்த செகண்ட் என் மனசுக்கு ஏதோ தப்பா தோனுச்சி உடனே நான் அவர் அண்ணன் அறையின் கதவை தட்டினேன்,..
நான் கதவை தட்டினது அந்த டீவி சத்தத்தில் அவர் அண்ணன் காதுக்கு போகல ஆனா அறையில் இருந்தவங்க காதுக்கு போயிடுச்சி..
சட்டை இல்லாம அவர் என் முன் கதவு திறந்து வந்தது.. அவர் அண்ணி  புடவையைய்  மட்டும் சுத்திட்டு அவர் பின்னாடி வந்த கோலத்தை பார்த்தா சின்ன குழந்தைக்கு கூட தெரிஞ்சிடும் அங்கு என்ன நடந்தது என்று…” என்று கீதா சொல்ல சொல்ல  குருமூர்த்தியை தவிர கேட்ட அனைவரும் வாய் அடைத்து தான் போயினர்.
இது போல் நடக்குமா…? அண்ணன் வெளியில் காவல் காக்க… என்ன இது..? என்பது போல் யாரின் முகத்தையும் பார்க்க முடியாத  சூழல் தான் அங்கு நிலவியது.
“சேச்சே என்ன அசிங்கம்.. ஊனம் உள்ள ஒருத்தன் கூட தன் மனைவியை வேறு ஒருத்தன் பார்த்தாலே அவனை வெட்டி போட நினைப்பான்…ஆனா இவன்…” என்று கிரிதரன் கோபத்துடனும்…அருவெறுப்புடன் சொன்னான்.
பத்மினிக்கு தன் அக்கா ஏதோ ஒரு புதைக்குழிக்குள்  மாட்டியது போல் ஒரு உணர்வு… கிரிஜா தன் அண்ணன் இருந்ததால் எதுவும் பேசவில்லை. இல்லை என்றால் அவள் மனதில் இருக்கும் வண்ண வண்ணமான வார்த்தைகள் எல்லாம் வெளியில் கொட்டினால்  அவ்வளவு தான் என்பது போல் அந்த அளவுக்கு கீதாவின் கணவனையும் அவன் அண்ணன் அண்ணன் மனைவியையும் அசிங்க அசிங்கமாய் மனதில் திட்டிக் கொண்டு இருந்தாள்.
பின் கீதாவே… “என்னை அங்கு அவர் எதிர் பார்க்கல.. அவர் வாய் திறப்பதற்க்குள் அங்கு வந்த அவன் அண்ணன்… இவரிடம்… “பால்  கொடுக்கலையான்னு கேட்டான்.” அதுக்கு இவர் என்னிடம்..
“பால் குடிச்சேன்னு பொய்யா சொன்ன…?”
இப்போது அந்த வீட்டில் நான் பொய் சொன்ன அந்த பால் குடிச்சிது..அது தான் உலக மகா பாவ செயல் போல் அவன் பேசி வெச்சான். அதுக்கு அடுத்து அடுத்து அங்கு நடந்த அந்த பேச்சு..
நிஜமா இது போல இருப்பாங்களா…? என்று தோனும் அளவுக்கு தான் வார்த்தைகள் அவர்களிடம் இருந்து வந்தது..அந்த பத்தினி தெய்வம்… 
“எல்லாம் பேசிடுங்க..இது வளர்க்க தேவையில்லன்னு…”  ஏதும் நடவாதது போல கதவை அடச்சிட்டு அவங்க ரூமுக்குள்ள போயிட்டாங்க… அந்த அண்ணன் காரன்… என் கிட்ட..
“தோ பாரும்மா சட்டப்படி நீ தான் அவன் மனைவி. இதை  எல்லாம் கண்டுக்காம விட்டா நீ நினச்சி பார்க்காத வாழ்வு..என் சம்பாத்தியம்..உன் கணவன் சம்பாத்தியம் எங்க கிட்ட இருக்க சொத்து இத வெச்சிட்டு நீ நினச்சி பார்க்காத வாழ்வு வாழலாம் என்ன… என்று  சொன்னவன் கடைசியா…
“நான் என் தம்பி கிட்ட வேணா சொல்றேன்.. உனக்கும் உடனே ஒரு குழந்தை பிறக்கட்டும் என்று…” என்று அங்கு நடந்த பேச்சு வார்த்தைகளை  சொல்லிக் கொண்டு வந்த கீதா..
குருமூர்த்தியை பார்த்து.. “நிஜமா எனக்கு அங்கு இருக்க ஒவ்வொரு நொடியும் ஏதோ   சாக்கடையில் நிற்பது போல இருந்தது… அதுவும் கடைசியா..எனக்கு தாலி கட்டுனவன் சொல்றான்.. சுமாரா இருக்க உன்னை கட்டினது எதுக்காக..இது எல்லாம் கண்டும் காணம  போக தான்னு…”
எப்போ அவனை அவன் அண்ணி  ரூமில் இருந்து வந்ததை பார்த்தானே அப்பவே முடிவு செய்துட்டேன்.. இனி இவனோடு என் வாழ்வு முடிந்தது என்று… அந்த இரவு எந்த உடுப்பு போட்டுட்டு இருந்தனே அதுலேயே என்  வீட்டுக்கு  வந்து சேர்ந்துட்டேன்.” என்று கீதா அனைத்தும் சொல்லி முடித்தாள்.
கீதா சொன்னதை கேட்டதும்  கிரிஜா..பத்மினி கிரிதரன் ஆவேசப்பட்ட அளவுக்கு நம் குருமூர்த்தி ஆவேசம் எல்லாம் படவில்லை..கீதா சொன்னதை ஒரு  முறை திரும்பவும் நினைத்து பார்த்தவன்..
அவள் சொன்ன ஒரு விசயத்தில் ஒரு முறைக்கு இரு முறை திரும்ப திரும்ப அந்த வார்த்தையில் இருக்கும் அர்த்தத்தில் ஓ…என்று ஏதோ முடிவு செய்தவனாய்…
கீதாவிடம்… “ அவனிடம் நீங்க வாழ முடியாது…அது நிஜம் தானே..இதில் இருந்து நீங்க  பின் வாங்க மாட்டிங்களே…?” என்று  குருமூர்த்தி கீதாவிடம் கேட்டான்.
அதற்க்கு கீதா பதில் அளிக்கும் முன் பத்மினி… “என்ன சார் இது கேள்வி….? இது போல ஒரு வாழ்க்கையை எந்த பெண் வாழ்வா…?” என்று கேட்கும் போதே அந்த குரலில் அவ்வளவு ஆவேசம் தெரிந்தது…
“ஏன் வாழ மாட்டாங்க…? “ என்று கேட்ட குருமூர்த்தி பத்மினியின் முறைப்பில்…
“அந்த வீட்டில் வாழ்பவளும் ஒரு பெண் தானே….?”  என்று குருமூர்த்தி கேட்ட கேள்வியில் பத்மினி வாய் அடைத்து போனாள்..என்றால் அடுத்து  குருமூர்த்தி சொன்ன…
“இதில் இதோடு இன்னும்  பெருசா ஏதோ இருக்கு…” என்று சொல்லி அனைவரின் வயிற்றிலும் புளியையும்  கரைத்தான்.
 

Advertisement