Advertisement

இன்று என் இப்படி…?அதுவும் நேற்று நவின் பேசும் போது அகிலாவும் இருந்தானே….” வெற்றி மாறன்..புவனேஷ்வரியை தவிர அந்த விருந்து விருந்தாக இல்லாது மருந்தாக தான் அமைந்து விட்டது அனைவருக்குமே…
அகில ரூபனை பற்றி அறியாததால் வெற்றி மாறனுக்கும் அவர் மனைவிக்கும் அவனின் இந்த செயல்கள் வித்தியாசமாய் தெரியவில்லை… ஆனால் மற்றவர்கள்…
அதிலும் ஸ்ரீமதி..நேற்று வரை  என் முகத்தை ஆராய்ச்சி தானே செய்துட்டு இருந்தான்..இன்று என்ன ஆராய்ச்சியில் இருந்து ஆர்வத்துக்கு மாறி விட்டது… இது தொடர கூடாதே….என்று நினைத்தவள் அவன் வைத்த உணவை வேண்டும் என்றே தொட்டு கூட பாராத  சாப்பிட்டு விட்டு எழுந்தவளிடம்
புவனேஷ்வரி… “அவர் தான் நல்லா இருக்கும் என்று அவ்வளவு சொல்றார்லே ..கொஞ்சம் தான் சாப்பிட்டு பார்க்கிறது…?” என்று நேரம் காலம் தெரியாது புவனேஷ்வரி சொன்னார்.
 
அதற்க்கு… “பிடிக்கல…” என்று ஒரே வார்த்தையில் மதி பதில் அளிக்க…
“ஆனாலும் உனக்கு பிடிவாதம் ஜாஸ்திடி.” என்று அனைவரின் முன்னும் தன் மகள் தன் பேச்சை கேட்கவில்லையே என்ற கோபத்தில் சொன்னார்.
“உங்களுக்கு தான் என்னை பத்தி தெரியுமேமா..எனக்கு பிடிவாதம் அதிகம் தான்.” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே  ஸ்ரீமதியின் கைய் பேசி ஒலி எழுப்ப..
அனைவருக்கும் பொதுவாக… “மன்னிக்கனும்.” என்று சொல்லி விட்டு  கைய் பேசியை ஏற்றவர்.. கைய் கழுவியதும் பேசியை வைத்துக் கொண்டு எங்கு தனிமையில் சென்று பேசுவது என்று முழித்துக் கொண்டு இருக்கும் போது தனலட்சுமி…
“பின் பக்கம் தோட்டம் இருக்குமா..பேசிட்டு கொஞ்சம் காலார நடந்துட்டு  வாம்மா நல்லா இருக்கும்.” என்று சொன்னதோடு ஒரு வேலையாளை அழைத்தவர்…
அவரிடம்… “இவங்கல தோட்டத்துக்கு கூட்டிட்டு போ…” என்று சொன்ன தனலட்சுமியிடம் ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு அந்த வேலையாளோடு  தோட்ட்த்து பக்கம் சென்றுக் கொண்டு இருந்த ஸ்ரீமதியையே பார்த்துக் கொண்டு இருந்த தனலட்சுமியின் தோளை தொட்ட சகுந்தலாம்மா…
“உன் பயம் தான் எனக்கும் தனா… இந்த பெண்ணால் நம் வீட்டு நிம்மதி கெடுமோ என்று…” என்றூ தனலட்சுமி சொல்லாமலேயே அவரின் மனநிலையை புரிந்துக் கொண்டு பேசிய சகுந்தலம்மாவின் கைய் பற்றியவர்…
“நாம இருக்கும் வரை எதுவும் தப்பா நடந்துட கூடாது சக்கு.” என்று அவரும் தன் பங்குக்கு தன் ஆற்றாமையை  வெளியிட்டார்.
அங்கு உணவு மேடையிலோ புவனேஷ்வரியின் பேச்சுக்கு ஸ்ரீமதி  சொன்ன  “உங்களுக்கு தான் தெரியுமேமா எனக்கு தான் பிடிவாதம் அதிகம்.” என்ற வார்த்தையே அகில ரூபனின் காதில் எதிரொலித்துக் கொண்டே இருந்த்து.
அவன் மனது அவனிடம் கேட்ட கேள்வி… “உனக்கு பிடிவாதம் இருக்கா…?” அதற்க்கான பதில் அவனிடம்  தெரியவில்லை.
இது வரை இவ்வீட்டில் தனக்கு என்று எதையும்… “இது எனக்கு வேண்டும்.” என்று கேட்டது இல்லை. கேட்கும் நிலையில் அவ்வீட்டில் யாரும் அவனை வைத்துக் கொண்டதும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
தான் கேட்காத போது அது அவன் கையில் இருக்கும்..ஆனால் என்ன ஒன்று அனைத்தையும் அவன் தன் தம்பி தங்கைக்காக விட்டு கொடுத்து விடுவான்.
காரணம் தான்  பெத்த பிள்ளைகளோடு  தத்தெடுத்த தன்னிடம்  இவ்வீட்டில் இருப்பர்கள் காட்டிய அதிகப் படியான அந்த அன்பு …பாசம். இவை அனைத்தும் பார்த்து ஏனோ அவன் மனதில் நவின் அனிதாவின் உரிமையை  தான் தட்டி பறிப்பது போல் ஒரு உணர்வு..
இந்த உணர்வு தான் எப்போது தான் இவ்வீட்டின் வளர்ப்பு மகன் என்று தெரிந்ததோ அன்றில் இருந்தே அவன் மனதை அரிக்க ஆராம்பித்து விட்டது என்று சொல்லலாம்…  இதனால் எழுந்த குற்றவுணர்வில் தான் மெடிக்கல் படிக்க நினைத்த அவன் தம்பியும், தங்கையும்  மெடிக்கல் படிக்க ஆசை படுவதை பார்த்து..
தன் தந்தையிடம் தாய் சொன்ன… “ நம்ம வீட்டில் மூன்று மருத்துவர்கள் இருப்பது எனக்கு பெருமை தான் ராம்..ஆனால் இந்த வீட்டில் அரசியல் என்னோடு முடிந்து விட போகிறது என்று நினச்சா தான் என் மனச என்னமோ பண்ணுது ராம்.” என்று அன்று  பவனியம்மா சீதாராமினிடம் பேசியதை எதார்த்தமாய் அகில ரூபன் கேட்க நேரிட்டத்தில்..
அன்றே அவன் முடிவு செய்து விட்டான் ..தன் எதிர்க்காலம் அரசியல் என்று..அதன் முதல் படியாய் தனக்கு பிடித்த படிப்பை விட்டு பிடிக்காத அரசியலின் ஆராம்பமாய் தன் படிப்பை பொலிட்டிக்கல் சைன்ஸில் ஆராம்பித்து அடுத்து கட்சியின் உறுப்பினர்..அடுத்து அடுத்து இளைஞர் அணி தலைவன்.. பின் இதோ ஒரு  கல்வித்துறை அமைச்சராய்   வந்து நிற்க்கிறான்.
ஆனால் நேற்று இரவு தான்  அன்று போல் தாய் தந்தையின் பேச்சை  கேட்ட பின் தான் இத்தனை  வருடம் தான் பட்ட குற்றவுணர்ச்சிக்கு அர்த்தமே இல்லாது போய் விட்டது என்று உணர்ந்த அந்த கணமே முடிவு செய்து விட்டான்..
இனி அனைத்தும் தன் விருப்பமே இனி யாரையும் பார்க்க மாட்டேன்…அவர்கள் வாயில் இருந்தே உண்மை வர வேண்டும்.அதுவும் அனைவரும் முன்னே..என்று முடிவு செய்தவன்..
இதோ இன்று  இப்போது டெல்லியில் இருக்க வேண்டியவன்..வீட்டில் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறான்…எப்போதும் பெண்களிடம் இது போல் பேசி பழகாதவன்..அவன் வாழ்க்கை அரசியல் என்று அவன் முடிவு செய்த உடன்…அவன் தன் வாழ்க்கை பாதை இப்படி இவ்வாறு தான் செல்ல வேண்டும் என்று முடிவு செய்தவனாய் தான் ஒவ்வொரு படிக்கட்டாய் கடந்தான்.
தன் இருபதாவது வயதிலேயே இளைஞர் அணியில் சேர்ந்து பின் தலைவன்.. பின் அடுத்து அவன் அரசியலின் முன்னேற்றம் என்று சென்றுக் கொண்டு இருந்தானே ஒழிய அந்த வயதில் தரும் சின்ன சின்ன சந்தோஷங்களை கூட அனுபவிக்காது..தன் பாதை இது தான் என்று  சென்றவனை அது எல்லாம் ஒன்றுமே இல்லாது ஆக்கி விட்ட  தாய் தந்தையின்  நேற்றைய  பேச்சை கேட்க நேரிட்டத்தில்…
“அகிலா அகிலா…” 
எங்கோ பார்த்துக் கொண்டு ஏதோ நினைவில் முறைத்துக் கொண்டு இருந்த அகில ரூபனை தனலட்சுமி நிஜவுலகிற்க்கு வர வைத்தவர்..
“என்ன அகிலா ஒரு மாதிரி இருக்க…?உடம்பு ஏதாவது சரியில்லையா…?” என்று கேட்ட பாட்டிக்கு பதில் அளிக்காது அவரை  ஒரு பார்வை பார்த்துக் கொண்டே  கை கழுவியவன் ..ஸ்ரீமதி இருக்கும் இடத்திற்க்கு சென்று விட்டான்.
அகில ரூபன் தான் கேட்டதற்க்கு பதில் அளிக்காது தன்னை விளங்காத ஒரு பார்வை பார்த்துக் கொண்டு அதுவும் பின் பக்கம் தோட்டத்திற்க்கு சென்றவனையே  பார்த்திருந்த தனலட்சுமிக்கு..
“இது நம் பேரன் அகில ரூபன் தானா…?” என்ற சந்தேகம் எழுந்ததில் வியப்பு ஏதும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
நவுன் அனிதா கூட தமாஷ் என்ற பெயரில் ஏதாவது கலட்டாவில் மரியாதை இல்லாது ஒருமையில் பேசுவது.. தான் ஏதாவது கேட்டால்..
“உங்களுக்கு வேறு வேலையே இல்லை.” என்று சொல்லி விட்டு சென்று விடுவது என்று இருப்பார்கள்.
ஆனால் அகில ரூபன் இது வரை மரியாதை இல்லாது பேசியதே கிடையாது..என்ன வேலை இருந்தாலும்  தான் ஏதாவது கேட்டால் நின்று பதில் அளித்து விட்டு தான் செல்வான்.
ஆனால் இன்று எந்த வேலையும் இல்லாது போது தான் கேட்டதற்க்கு பதில் அளிக்கவில்லை என்றாலும் அந்த பார்வை..ஏதோ போல் இருந்தது. அதுவும் வீட்டிலே இல்லாதவன் இன்று வீட்டில் இருப்பது. இதோ இப்போது மது எங்கு இருக்கிறாளோ அங்கு செல்வது…ஆம் அகில ரூபன் தோட்டத்திற்க்கு சென்றது மதுவிடம் பேச தான்…
மதுவுக்கு தீபிகாவிடம் இருந்து தான் அழைப்பு/… இவள் “நான் இப்போ அண்ணன் மாமியார் வீட்டில் இருக்கேன். நான் வீட்டுக்கு போய் கூப்புடுறேன்” என்று  இவள் சொன்னதும் 
அவளிடம் இருந்து .. “கல்வி எப்படி இருக்கு…?” என்ற வார்த்தையை ஸ்ரீமதி எதிர் பார்க்க ஆனால் அவள் சொன்ன… “முக்கியமான விசயம்.” என்றதில் தான் தனியாக பேச இடம் பார்த்து இதோ தோட்டத்திற்க்கு வந்தது.
“ஆ சொல் தீபு என்ன ஏதாவது பிரச்சனையா…?” என்று ஸ்ரீமதி கேட்ட்தற்க்கு..
“பிரச்சனை தான். ஆனால் நமக்கு இல்ல உமா தாத்தாவுக்கு.” என்று சொன்னதும்..
“என்ன என்ன ஆச்சி அவருக்கு…?” என்று ஸ்ரீமதி கொஞ்சம் பதறி போய் தான் கேட்டாள்.
உமா தாத்தா என்பவரின் முழுப்பெயர் உமாபதி… எழுபத்தி ஐந்து வயதைடையவர் தன் மனைவியோடு தனியே தான் ஒரு ப்ளாட்டில் வசிக்கிறார். அவர் உடம்பில் இல்லாத வியாதி இல்லை. அதே தான்  எழுபது வயதை தொட்ட அவர் மனைவிக்கும்.
இவர்களின் ஓட்டலில் டோர் டெலிவரியும் உண்டு..தங்கள் ஓட்டலில் இருந்து  ஒரு ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இருந்தால் மட்டுமே வீட்டுக்கே கொண்டு போய் கொடுப்பது.
ஆனால் இந்த வயதான தம்பதியர்கள் ஒரு நாள் தங்கள் ஓட்டலுக்கு சாப்பிட வந்து விட்டு… தங்களிடம். தயங்கிய வாறு… உமாபதி தாத்தா சொன்ன …
 “வீட்டில் நாங்க மட்டும் தான் இருக்கோம்மா… எங்க பிள்ளைகள் வெளிநாட்டில் இருக்காங்க… இவளுக்கு முன்ன மாதிரி சமையல் கட்டில் நிக்க முடியல..அதனால வெளியில் இருந்து வர வழச்சி சாப்பிட்டோம்..
ஆனா அது எங்க உடம்புக்கு ஒத்துக்கல..சாப்[பாடு விரச்சிட்டு ஜீரணம் ஆகாமா…ரொம்ப கஷ்டப்பட்டுட்டோம்…திரும்ப  வீட்டில் செய்தா… ஒரு நாள் சமையல்கட்டிலேயே மயக்கம் வந்து விழுந்துட்டா… நானும் படுக்கையறையில் இருந்தேன்.
சாப்பாடு நேரத்துக்கு தான் வந்தேன் வந்து பார்த்தா..தோ விழுந்து கிடக்கா..ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போன போது டாக்டர்..இவங்களுக்கு ஹூட்ல ரொம்ப நேரம் நின்னா இப்படி தான் ஆகும்.
அதனால் இவங்கல சமைக்க எல்லாம் விடாதிங்கன்னு சொல்லிட்டார்.எனக்கோ சமைக்க தெரியாது  என் பிரண்ட் ஒருத்தர் சொன்னாங்க 
“இங்க சாப்பாடு வீட்டில் செய்வது போல இருக்குமுன்னு அது தான் இங்கு வந்து சாப்பிட்டு பார்த்தோம்..ரொம்ப பிடிச்சி இருக்கு..என்னோட என் மனைவிக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சி இருக்கு… வீட்டுக்கு வந்து கொடுக்க முடியுமான்னு கேட்டதற்க்கு ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் மட்டும் தான் சொல்லிட்டாங்க..
ஆனா என் வீடு இங்கு இருந்து எட்டு கிலோ மீட்டர் இருக்கும்.கேட்டதற்க்கு இல்ல முடியாதுன்னு சொல்லிட்டாங்க… நான் அந்த தொலைவுக்கு உண்டான பணம் கூட அதிகமா கொடுத்துடுறேன்..நீங்க கொஞ்சம் என் வீட்டுக்கு டோர் டெலிவிரி செய்தா நல்லா இருக்கும்.”
இவர்கள் இந்த ஒட்டல் ஆராம்பித்து மூன்று வருடம் கடந்து விட்ட நிலையில் ஆராம்பத்தில் கேட்டவர்களுக்கு மறுக்க முடியாது கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்..
டெலிவிரி பைய்யன்கள் வரவில்லை என்றால் சில சமயம் ஸ்ரீமதியோ தீபிகாவோ…இவர்கள் ஒட்டலின் இன்னொரு பங்குதாரார் ஆன..சுகன்யாவோ கொண்டு செல்வர்.
இந்த மூன்று வருட பழக்கத்தில் கஸ்ட்டமர் என்ற எல்லை தான்டி அவர்களுக்கு இடையே ஒரு பிணைப்பு ஏற்பட்டு இருந்தது..இப்போது அவர் இல்லை அவர் மனைவி என்ன செய்வார்..? என்று யோசித்தவளாய் ஸ்ரீமதி..
“தீபு நீ பாட்டிக்கு உதவியா அவங்க பிள்ளைங்க வர வரை அங்கேயே இரு..இதோ நான் இப்போவே கிளம்பி பெங்களூர் வந்துடுறேன்.” என்று  ஸ்ரீமதி சொன்னதும் தீபிகா..
“நான் இங்கு இருந்து தான் ஆகனும்..அவங்க பிள்ளைங்க வர வரை இல்லை…தாத்தாவை அடக்கம் செய்யும் வரை.” என்று தீபிகா சொன்னதும்..
“ஏன் அவங்க பசங்க வரல..தாத்தாவுக்கு பெண் ஒன்று பையன்கள் இரண்டு பேருன்னு சொல்லிட்டு இருப்பாங்கலே…” என்று ஸ்ரீமதி அதிர்ந்து போய் கேட்கவும்..
“பாட்டி கிட்ட நம்ப்ர் வாங்கி விசயத்தை சொன்னா…ம் இப்போ வர முடியாதாம் நீங்கலே எல்லாம் பார்த்துக்கோங்க…. உங்க அக்கவுண்ட் நம்பர் கொடுத்தா பணத்தை அனுப்பிடுறேன்னு சொன்னான்…” என்று சொல்லி தீபிகா வாய் மூடவில்லை.
“அதையும் நீயே வெச்சிக்க நானே பார்த்துக்குறேன்னு சொல்ல வேண்டியது  தானே…” என்று ஸ்ரீமதி தீபிகாவிடம் கோபமாக பேசிக் கொண்டு இருக்கும் போது தான் அகில ரூபன் அந்த இடத்திற்க்கு வந்தது.
“அதை தான் நான் அவன் கிட்ட  சொன்னேன். நீயே வெச்சிக்க உனக்கு உதவும் என்று..”
“சரியா சொன்ன..எப்படி தான் பெத்தவங்களின் கடைசி பயணத்துக்கு கூட   வர முடியாம  இருக்க முடியுதோ இவங்களால்…” என்று தன் ஆதாங்கத்தை கொட்டிய ஸ்ரீமதி..
“சரி தீபு நான் இங்கு சொல்லிட்டு வர்றேன்…” என்று சொல்லிக் கொண்டு வந்தவள்./
தன் கழுத்து பகுதியில் சூடான காற்று படவும்…பேசியை கூட அணைக்காது பயந்து போய் பின் பக்கம் பார்க்க..வெகு அருகில் மிக வெகு அருகில்  அகில ரூபன் நின்றுக் கொண்டு இருக்க..அவ்வளவு அருகில் அவனை பார்த்த அதிர்ச்சியில் விழ பார்த்தவளை..
“ஏய் பார்த்து  பார்த்து நான் தான் பயந்துட்டியா….?” என்று சொல்லிக் கொண்டு இடையின் நடுவில் கை விட்டு தன் அருகில் இழுத்துக் கொண்டவனின் இந்த செய்கையை அவள் மட்டும் அல்லாது  ஸ்ரீமதி அகில் இருவரும் இல்லாது எங்கு என்று தேடிவந்த சீதாராமன் கண்ணில்  அகில ரூபனின் செய்கை பட…அவரும் அதிர்ந்து தான் போய் விட்டார்.

Advertisement