Advertisement

அத்தியாயம்…4 
அகில ரூபன் ஸ்ரீமதியின் பக்கத்தில் அமர்ந்ததுமே அனைவரின் பார்வையும் அவன் பக்கமே…உட்கார்ந்தது மட்டும் அல்லாது அவன் சொன்ன  அந்த ஏஞ்சல் என்ற வார்த்தையை கேட்டதும் அகில ரூபனின் குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் மயக்கம் வராத குறை தான்.
அதுவும் அந்த வீட்டின் மூத்த உறுப்பினர்களான  சீதாராமனின் அன்னை சகுந்தலா அம்மாவும், பவனியம்மாவின் தனலட்சுமியும் அகில ரூபனின் செயலை பார்த்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து நின்றனர்
அதுவும் அவர்கள் இருவரும் அப்போது தான் அந்த இடத்திற்க்கே  சகுந்தலம்மாவின் அறையில் இருந்து இருவரும் ஒன்றாக வந்தனர்.
சகுந்தலாம்மாவுக்கும், தனலட்சுமிக்கும்  உறவு முறை என்னவோ சம்மந்தி முறை தான் .ஆனால் அவர்கள் இருவருக்கும் சம்மந்தி என்ற உறவையும் தான்டி ஒரு ஆழமான நட்பு இத்தனை வருடத்தில் வளர்ந்து  அவர்களுக்கிடையே ஒரு பிணைப்பை  ஏற்படுத்தி இருந்தது.
 சீதாராமனுக்கும்  பவனியம்மாவுக்கு திருமணம் ஆன தினத்தில் இருந்து  கூட்டுக் குடும்பமாய் தொடங்கிய அவர்களின் வாழ்க்கை இன்று வரை தொடர்கிறது… என்ன அப்போது பவனியம்மாவின் தந்தை வெங்கடேசன் உயிரோடு இருந்தார். இப்போது அவர் இல்லை என்ற குறையை தவிர அவ்வீட்டில் எந்த ஒரு குறையும் இல்லாது..வாழ்க்கை தெளிந்த நீரோடை போல் தான்  சென்று கொண்டு இருக்கிறது.
அந்த தெளிந்த நீரோடையை  தடுக்கும் அணைக்கட்டாய்  ஸ்ரீமதி இருப்பாளா.. ? இல்லை உறவுக்கு பாலத்தை அமைப்பாளா….? போக போக தான் தெரியும்…
சகுந்தலாம்மாவுக்கு, தனலட்சுமிக்கும் தனி தனியே அறைகள் இருந்தாலும், இருவரும் எப்போதும் யாராவது ஒருவர் அறையில் தான் இருப்பார்கள்.தூங்கும் போது மட்டுமே தனித்து உறங்குவர்..
அதை கூட வீட்டின் இளைய உறுப்பினர்கள்… “ஏன் தூங்கும் போது கூட நீங்க பிரியனும்.. ஒன்னாவே தூங்க வேண்டியது தானே..பாவம் சர்வெண்ட் இரண்டு அறையை சுத்தப்படுத்த வேண்டி இருக்கே…” என்று  அனிதா தான்  அவர்கள் இருவரையும் அவ்வப்போது கிண்டல் செய்துக் கொண்டு இருப்பாள்.
நவின் அவர்களின் கண் ஜாடைகளையும் மற்றவர்கள் ஏதாவது செய்தால், ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு அவர்களிடையே பேசாது கூட அந்த பார்வையிலேயே ஒருவர் நினைப்பதை மற்றவர் புரிந்துக் கொள்வது… இவர்களின் இந்த செயல்களை பார்த்து…. “ ரோமியோ ஜூலியட்…” என்று  தான் அழைப்பான்.
இன்றும் எப்போதும் போல் இருவரும் ஒரே அறையை விட்டு வெளி வந்த போது தான் அகில ரூபன் வீட்டின் உள் நுழைந்தது… வயதான இவர்கள் மெல்ல அடி எடுத்து நடந்து வருவதற்க்குள் தன் வேக நடையுடன் வந்தவன்  தன் தந்தை பக்கத்து இருக்கை காலியாக இருந்தும்.. அங்கு அமராது ஸ்ரீமதியின் பக்கத்தில் வந்து அமர்ந்ததே ஒரு ஆச்சரியம் என்றால்..
அடுத்து அவன் பேசிய வார்த்தையில் மயக்கம் போடும் நிலைக்கு தள்ளப்படாலும், அனைவரும் தன் மனத்திற்க்குள் .. “அகிலா ஒரு பெண் பக்கத்தில் தானே சென்று அமர்ந்தான்.” என்று அவர்கள் அச்சரியம் படும் போதே.. அவனின் ஏஞ்சல் என்ற வார்த்தையில் ஆச்சரியத்தில் இருந்து மயக்கத்திற்க்கு செல்ல பார்த்தனர்.
சகுந்தலம்மாவும், தனலட்சுமியும் ஒருவர் ஒருவரை பார்த்த பின் அந்த சூழ்நிலையை இலகுவாக்கும் பொருட்டு… “எப்போ வந்திங்க வெற்றி..” என்று  கேட்ட தனலட்சுமி..
புவனேஷ்வரியை பார்த்து… “இந்த புடவை ரொம்ப நல்லா இருக்கு புவனா..” என்று  புவனேஷ்வரியை பாராட்டி… சகுந்தலாவும் தனலட்சுமியும் எப்போதும் போல் அவர்கள் இருக்கையில் பக்கம் பக்கம் அமர்ந்துக் கொண்டனர்.
அகில ரூபனின் இச்செயல் வெற்றி மாறனுக்கோ புவனேஷ்வரிக்கோ வித்தியாசமாக தெரியாததால் சாதரணமாக இருந்தனர்… அனிதா தன் அண்ணனின் இச்செயலில் அதிர்ந்தாலும், ஒரக்கண்ணில் தன் கணவனை பார்த்தாள்.
அஷ்வத் தன் தாய் தந்தை போல் இல்லாது எப்போதும் அகில ரூபன் செலுத்தும் ஆராய்ச்சி பார்வையை இப்போது அவன் அகிலன் மேல் செலுத்த தொடங்கினான்.ஆணின் கண்ணோட்டமும், அவனின் பார்வையின் மாற்றமும் ஒரு ஆணாய் அவனுக்கு வித்தியாசமாய் தெரிந்ததால் அஷ்வத் அகிலனையே பார்த்திருக்க..
அனிதா… “அஷ்வத் அஷ்வத்…” என்ற அழைப்பில்..
“ம்…” என்று ஒரே எழுத்தில் தன் மனைவிக்கு பதில் அளித்தாலும், அவன் தன் பார்வையை அகில ரூபனை விட்டு நகர்த்தவில்லை.
நேற்றில் இருந்து தன் கழுத்தில் தாலி கட்டியதில் இருந்து தன்னை தவிர வேறு யாரையும்..ஏன் நேற்று அவன் தங்கையை அவன் தந்தை அனைவரின் முன் கத்தியும், கோபத்தில் அவன் தங்கை அங்கிருந்து சென்றும்… அவனின் கவனம் வேறு எங்கும் செல்லாது தன்னிடம் மட்டுமே நிலைத்து இருந்ததை அவள் அறிவாள் தானே..
ஆனால் இப்போது தான் அழைத்தும் தன்னை பாராது தன் தங்கையையும், தன் அண்ணனையுமே ஒரு ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருப்பதை பார்த்து இப்போது அனிதாவின் முகம் யோசனையில் ஆழ்ந்தது. நவினோ தன் அண்ணனின் செயலில் அதிர்ச்சி ஆச்சரியத்தோடு ஒரு பிடித்தமில்லா தன்மை தான் அவன் முகத்தில் தெரிந்தது… 
நேற்று அனிதாவின் சடங்கு தொட்டு அனைவரும் முழித்து இருந்து அனிதாவும், அஷ்வத்தும், அனிதாவின் அறைக்கு சென்ற பின் தான் அனைவரும் உணவருந்தவே அமர்ந்தனர்.
இது போல் வீட்டின் உறுப்பினர்கள் ஒன்றாக இருப்பது அறிதானது..அதனால்  இது போல் அனைவரும் வீட்டில் இருக்கும் நாளில் எவ்வளவு நேரம் ஆனாலும் ஒன்றாக அமர்ந்து தான் சாப்பிட வேண்டும் என்பது அவ்வீட்டில் எழுத படாத சட்டம் ஆகும்.
அதன் படி நேற்று உணவு உண்ண அனைவரும் அமர்ந்து இருக்கும் வேளயில் தான் தங்கள் தந்தை தன்னிடம்… “என்ன நவின் அந்த பெண் கிட்ட ரொம்ப நேரம் பேசிட்டு இருந்த போல..என்ன சொன்னா அப்பெண்….?” என்று சீதாராமன் கேட்டதும்..
நவின் உடனே… “என்னப்பா அப்பெண் அப்பெண் என்று  யாரோ போல சொல்லிட்டு இருக்கிங்க… நம்ம சொந்தம் தானே ஸ்ரீமதின்னு சொல்லுங்க.“ என்று நவின் சொன்னான்.
அதற்க்கு பவானியம்மா…“ஸ்ரீமதி சொந்தம் என்று எங்களுக்கும் தெரியும்பா..ஆனா நாங்க ஸ்ரீமதியைய்  சொந்தமா மட்டும் பார்க்கட்டுமா..?. இல்ல பந்தமா பார்க்கட்டுமா…?” அந்த கேள்வியில் ஒரு நிமிடம் குழம்பி பின் தெளிவுக்கு வந்த நவின்..
“பெண் அழகா இருக்கா..அமைதியாவும் இருக்கா..ஆனா படிப்பு…” என்று நவின் தன் பேச்சை பாதியில் இழுத்து நிறுத்தவும்..
அங்கு இருந்த இரு பெயரியவர்களில் ஒருவரா தனலட்சுமி… “ஏன்பா ஸ்ரீ படிப்புக்கு என்ன குறச்சல்…? இன்னும் கேட்டா ஸ்ரீ படிப்பு தான் மேன்மையான படிப்புன்னு நான் சொல்வேன்…எல்லோருக்கும் வயிற்றை காயாது பார்க்கும் தொழில்ப்பா… அது நல்லா இருந்தா தான் நம் ஆரோக்கியம் நல்லா இருக்கும்..” என்று  சொல்லிக் கொண்டு வந்த தனலட்சுமியை இடை மறித்து…
“அவன் எதுக்கு அந்த படிப்பை குறையா சொல்றான்னு உனக்கு புரியலையா தனா…உடல் ஆரோக்கியமா இருந்தா அவனுக்கு எங்கே வேலை..அதான் அதை மட்டம் தட்டுவது போல பேசுறான்.” என்று சகுந்தலா அம்மா சொல்ல..
இரு பாட்டிமார்கள் பேசி முடித்ததும்..”என்ன பேசிட்டிங்களா…?கொஞ்சம் கேப் விட கூடாதே..அப்படியே சைட்ல  புகுந்து உங்க இஷ்டத்துக்கு அதை  நிரப்பிட வேண்டியது… 
நான் ஸ்ரீமதி படிச்ச படிப்பு எல்லாம் மட்டம் என்று சொல்லலே..அவள் டுவெல்த்ல அவ்வளவு மார்க் எடுத்து இருக்கா..அந்த மார்க்குக்கு பணம் கொடுக்காமலேயே அவளுக்கு மெடிக்ல்க்கு சீட் கிடச்சி இருக்கும்.. ஏன் இவள் முட்டாள் தனமா இந்த படிப்பு எடுத்தா என்று தான் சொல்ல வந்தேன்.” என்று நவின் சொல்லி முடித்தான்.
அதற்க்கு பவனியம்மா…  “அப்போ கேட்டரிங் படிக்க குறைந்த மதிப்பெண்  எடுத்தவங்க மட்டும் தான் படிக்கனும்..அதிகம் மதிப்பெண் எடுத்தா மருத்துவம் பக்கம் போகனும்…சுமாரா படிக்கிறவங்க பொறியல்…. இது தான் உன் அட்டவணையா நவின்…” என்ற தாயின் கேள்வியில் தான் நவின் தன் தவறு உணர்ந்தான்.
“சாரிம்மா…” என்று தன் தவறை உணர்ந்த  நொடி அவன் தன் தாயிடம் மன்னிப்பு கேட்டான். இது தான் நவின் எது என்றாலும் வெளிப்படையாக பேசுவான் கேட்பான். தவறும் செய்ய கூடியவன் தான். அது தவறு என்று தெரியாமல் செய்பவன்..அது தெரிந்த நொடி இதோ இது போல் மன்னிப்பு கேட்டு விடுவான்.
ஆனால் இதற்க்கு எதிர் பதமானவன் தான்  அகில ரூபன்  அவன் நினைத்ததை கேட்க மாட்டான்…ஒரு சகஜ பேச்சு வார்த்தைகள் என்பது அவனிடம் இருக்காது கேட்டதற்க்கு பதில் அவ்வளவு தான்.
படிப்பு கூட அவன் பத்தாம் வகுப்பு முடிந்ததும்..அடுத்து என்ன  க்ரூல் என்று கேட்டதற்க்கு … “முதல் க்ரூப்…” என்று சொன்னவன் எடுத்து படித்தான்..அவன் படிக்கும் வேகத்தையும் அவன் எடுத்த மார்க்கையும், அவன் செயல்களை சிலதை பார்த்து  இவன் தன்னிடம் வந்து… 
“அடுத்து நான்  மெடிக்கல் படிக்கிறேன்.” என்று சொல்வான் என்று வீட்டில் அனைவரும் நினைத்து இருக்க அவன் அதற்க்கு எதிர் பதமாய்… “ வரலாறு அதிலும் அதில் அரசியல் சேர்ந்த பொலட்டிக்கல் சைன்ஸ் சேர்ந்த படிப்பை எடுத்து படித்து முடித்தான். பின் அவனின் அரசியல் பிரவேசம்…இப்படி யாரும் கணிக்க முடியாதவன் தான் அகில ரூபன்..
இப்படி இருதுருவங்களாய் தன் மகன்கள் இருபக்கம் அமர்ந்து இருக்க அதில் இளையன் பேச்சு காதில் விழுந்தாலும்… தலை நிமிராது சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் அகில ரூபனை பேச்சில் இழுக்கும் பொருட்டு..
பவனியம்மா… “என்ன அகிலா உன் இலாக்காவை பத்தி தான் பேசிட்டு இருக்கோம். நீ அதற்க்கு எதுவும் சொல்லாது அமைதியா இருக்க…?” என்று கேட்டதற்க்கு..
“இதை நீங்க சட்டமன்றத்தில் ஒரு விவாதமாய் பேச்சு வந்தா.. இதை பத்தி நான்  கண்டிப்பா பேசுவேன்.” என்று சொல்லி விட்டு அவன் தன் உண்ணும் வேலையை தொடர்ந்தான்.
இவன் இப்படி தான் என்பது போல் இருபாட்டிகளும் தன் சின்ன பேரனின் வாய் பிடுங்களில் ஈடுப்பட்டனர்… “அதெல்லாம் விடு..என்ன அந்த ஸ்ரீ கிட்டயே போய் நின்ன பேச்சை வளர்க்க பார்த்த என்ன விசயம்…?” என்று  பாட்டிகள் குறும்பாய் கேட்டனர்.
அதற்க்கு நவின்.. “தெரியல பாட்டி..ஆனா பெண் பிடிச்சா மாதிரி தான் இருக்கு.” என்பதை மறைமுகமாய்  அவன் நேற்றைய உணவின் போதே சொல்லி விட்டான்.
பின் அன்றைய இரவு முழுவதும் தன் மனதை ஆராயும் வேலை மட்டுமே அவனுக்கு..பின் பார்க்கலாம் நேற்று தானே பார்த்தேன்..எங்கு போயிட போறா…பிடிச்சி இருந்தா அடுத்த லெவலுக்கு போவோம் என்று அவன்  நினைத்தான்
அப்படி இருக்கும் போது இன்று ஸ்ரீமதியை பார்த்த உடன் அந்த கொஞ்சம் பிடித்தம் அதிகம் பிடித்தமைக்கு தாவி விட்டது. சரி இந்த அதிகம் பிடித்தம் காதலா…?பார்க்கலாம் என்று யோசனையுடன் அவளை பார்த்த வண்ணம் தான் நவின் ஸ்ரீமதியின் எதிர் புரம் வந்து அமர்ந்தது.
தன் அண்ணன் இந்த சமயம் வீட்டுக்கு வந்ததே அவன் யோசனையுடன்… “இவன் கல்யாணம் முடிந்த மறுநாள் டெல்லியில் ஏதோ வேலை இருக்கு என்று தானே அப்பாவிடம் சொல்லிக் கொண்டு இருந்தான். என்று அவன் நினைத்துக் கொண்டு இருக்கும் போதே..
வந்தவன் அனைவரையும் பார்த்து ஒரு புன்னகை புரிந்து விட்டு ஸ்ரீமதி பக்கத்தில் அமர்வான் என்று அவன் துளியும் நினைத்து பார்க்கவில்லை.அதுவும் அமர்வதோடு அவன் பேசிய அந்த பேச்சு தான்..ஏனோ மனதில் இது நல்லதுக்கு இல்லை என்று எடுத்துரைத்தது.
இப்படி அனைவரையும் வெவ்வேறு மனநிலைக்கு தள்ளிய அகில ரூபனோ சாவுகாசமாய் உணவை சாப்பிட்டுக் கொண்டே… ஸ்ரீமதியிடம்.. “இது நல்லா இருக்கும்.” என்று சொன்னதற்க்கு..
“இல்ல வேண்டாம் எனக்கு கத்திரிக்காயே பிடிக்காது.” என்று ஸ்ரீமதி மறுத்தும்… “சாப்பிடாம பிடிக்காதுன்னா எப்படி எங்க லஷ்மியம்மா அவ்வளவு நல்லா செய்வாங்க.” என்று சொல்லி ஸ்ரீமதி மறுத்த உணவை அவளுக்கு வலுக்கடாயமாக பரிமாறினான்.
கேட்ட்டிங் படித்தவளுக்கே உணவின் சுவையை விளக்கி விட்டு வேண்டாம் என்று சொல்லியும் தன் தட்டில் அதை வைத்தவனை முறைக்க முடியாது அந்த உணவையும் புவனேஷ்வரியும் முறைத்தவள்.இடையே தன் அண்ணனையும் முறைக்க மறக்கவில்லை.
இதை அனைத்தையும் ஆச்சரியம் என்பதோடு.. அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டு இருந்தனர் அவ்வீட்டில் இருந்த அனைவர்களும்..நேற்று தான் நவினுக்கு அப்பெண்ணை பிடித்து இருக்கிறது என்பது போல் பொதுவாக பேசிய பவனியம்மா தங்கள் அறையில் தன் கணவரிடம் இதை பற்றிய பேசி..
சீக்கிரம் அகிலாவுக்கு பெண் பார்க்கனும்..வயது முப்பதை கடந்து விட்டது..இந்த வயதில் நமக்கு இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகி விட்டோம் என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.
ஆனால் இன்று இப்படி அனைவரும் பார்க்க அந்த பெண் மீது  அவன் காட்டும் இந்த உரிமை..ஏனோ மனதுக்கு ஆலாரம் மணி அடித்தது. இந்த வீட்டின் நிம்மதி இதனால் கெட்டு போகுமா…?
பவனியம்மா ஸ்ரீமதியை பார்த்த உடன் தன் வீட்டுக்கு மருமகளாய் வந்தால் நன்றாக இருக்கும் என்று அவர் தான் முதலில் நினைத்தது… நவினின் நடவடிக்கையை வைத்து அது இளைய மருமகள் என்று நேற்று தான்  தன் கணவரிடம் பேசினார்.. இன்று தன் பெரிய  மகனின் இந்த செய்கைகள்…
அண்ணன் தம்பிக்குள் எதில் வேண்டும் என்றாலும் சண்டை வரலாம்..ஆனால் ஒரு பெண்ணுக்காக..அதுவும் தன் வீட்டில் அவருக்கு .. அதை பற்றி மேல நினைக்கவே ஒரு மாதிரியாக இருந்தது.எப்போதும் எதிலும் அனுசரித்து போவது என்பதி அகில ரூபன் தான்.அவனுக்கு என்று ஒன்று வாங்கினால் தம்பியின் கண் அந்த பொருளின் மீது ஆசையாக படிந்தால் கூட அவனிடம் அவன் கொடுத்து விடுவான்.
இவர் கூட… “அது உனக்கு என்று  தானே வாங்கியது அதை.ஏன் அவனுக்கு கொடுத்த…?” என்று கேட்டால்..
“சின்ன பையன் தானேம்மா…” என்று சொல்லும் போது அகில ரூபனுக்கு பத்து வயது தான்.அதுவும் இல்லாது இரண்டு பேருக்கு வயது வித்தியாசம் கூட அதிக்கம் இல்லை இரண்டே வயது மூத்தவன் அகில ரூபன்..அனைத்தையும் தன் தம்பி தங்கைக்காக விட்டு கொடுப்பான்.
  

Advertisement