Advertisement

“என்ன மாதிரி பெண்ணை வளர்ந்து வெச்சி இருக்க…எது சொன்னாலும் எது கேட்டாலும் அப்படியே நிக்குறது… இவ இப்படி நிற்குறதை  பார்க்கும் போது எல்லாம் இவள் என் மீது இருக்கும் பயத்தில் பதில் அளிக்காது இருக்காளா…?இல்லை அலட்சியத்தில் இருக்காளா…? எனக்கே சந்தேகமா இருக்கு… சொல்ற பேச்சை கேட்டிட்டு அந்த பெண் எப்படி இருந்தாள்…” என்று வெற்றி மாறன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே ஸ்ரீமதி சட்டென்று நிமிர்ந்து தன் தந்தையை பார்த்தாள்.
அதற்க்கும் வெற்றி மாறன்.. “இதோ இது போல தான் அப்போ அப்போ இப்படி பார்க்குறது..அவள் மனசுல என்ன நினச்சிட்டு பார்க்குறான்னு கூட எனக்கு புரிய மாட்டேங்குது… ஒரு அக்யூஸ்ட்ட  பார்த்த செகண்ட் அவன் கிட்ட தப்பு இருக்கா..?இல்லையான்னு…? அவன் பார்வை வெச்சே கண்டு பிடிச்சிடுவேன்.
ஆனால் பெத்த பெண்..என்னை என்ன மாதிரி நினைக்கிறா..?என்னை மாதிரி பார்க்குறான்னு இத்தனை வருஷம் கடந்தும் என்னால கண்டு பிடிக்க முடியல…” என்றும் இது போல் ஸ்ரீமதியிடம் பேசியில்லாத வெற்றி மாறன்  கடந்த ஒரு வாரமாய் இடைவிடாத அலுவல் காரணமாகவும்..
கடந்த  பதிநான்கு வருடமாய் தன் மகளின் செயலை நினைத்து நினைத்து மனதில் புழுங்கி  கொண்டு இருந்தவருக்கு இன்று வார்த்தைகளாய் தடித்து விழுந்தன.
அப்போதும் அவர் பேச்சுக்கு ஒன்று  இரண்டு தடவை வெற்றி மாறனின் முகத்தை பார்த்தாளே தவிர வாய் திறந்து அவர் பேச்சுக்கு…
“அப்படி இல்லை. என்றோ..இல்லை அப்படி தான் என்றோ…” ஒரு வார்த்தை கூட சொல்லாது  சிலை போல் அப்படியே நின்றுக் கொண்டு இருந்தாள். வெற்றி மாறனுக்கு தான் கத்தி கத்தி வாய் தொண்டை அடைத்து விட்டது போல் இருக்க தன் தொண்டையை  கணைத்து சரி செய்து விட்டு… 
“இப்போ எனக்கு உன்னிடம் பேச நேரம் இல்ல..ஊருக்கு அந்த ரோட்டு கடைய நீ இன்னைக்கே போய் நிலை நிறுத்தனும் என்று ஒரு அவசியமும் இல்ல..அதை இரண்டு நாள்  போய் கூட பார்த்துக்கலாம்..இன்று  மதியம்  எதிர் விருந்துக்கு சம்மந்தி வீட்டுல்  நம்மை எல்லோரையும்  அழச்சி இருக்காங்க..
நாம்  எல்லோரும் போய் தான் ஆகனும்..அதனால உன் பொண்ணை  கொஞ்சம் நல்லா ட்ரஸ் உடுத்திட்டு வர சொல்…இது போல்  சாயம் போனதை எல்லாம் போட்டு வந்து என் மானத்தை வாங்க போறா…
அப்படியே இப்பத்தி பொண்ணுங்க என்னம்மா வித விதமா கை பையை  எடுத்துட்டு வர்றாங்க..” என்று சொன்னவர்..
தன் மனைவியின் முகம் பார்த்து… “இப்போதைய  பொண்ணுங்க என்ன..நீயே உன் புடவைக்கு மேச்சிங்கா தானே உன் கிட்ட ஹான் பேக் இருக்கும்..அதில் ஒன்னை உன் பெண் கிட்ட கொடு..இது போல் ஜோல்னா பை எல்லாம் அங்கு எடுத்துட்டு வர வேண்டாம்.”
ஸ்ரீமதியின் இளம் நீல நிற ஜீனையும்..அதுக்கு தோதாக ப்ளாக் கலர் சர்ட் காலர் வைத்தது போல்  போட்டுக் கொண்டு தோளில் ஒரு ஜோல்னா பையை மாட்டி இருந்ததை சுட்டி காட்டி மகளின் மீது  காட்ட முடியாத தன் கோபத்தை மனைவி மீது காட்டி விட்டு சென்றார்.
“ஒரு இரண்டு நாள் இரு மதி…அண்ணன் கல்யாணத்துக்கு ஒரு தங்கையே முன் நாள் தான் வந்த..இதோ கல்யாணம் முடிஞ்ச அடுத்த நாளே கிளம்புறேன்னு வந்து நிக்குற… நீயே கொஞ்சம் யோசி டா.. யார் மீதோ இருக்கும் கோபத்தை ஏன் நீ எல்லோர் மீதும் காட்டுற…?அவர் சொல்வது போல என்ன ட்ரஸ் டீ இது…? வயசான நானே நல்லா ட்ரஸ் பண்றேன்… “ என்று  மேலும் புவனேஷ்வரி என்ன சொல்லி இருப்பாரோ…
“சரி சரி வர்றேன்..உங்க கணவர் கத்திட்டு போனதே காத அடச்சிட்டு இருக்கு..இதில் நீங்க வேற அதில் ஈயத்தை காசி ஊத்த வேண்டாம்.” என்று சொன்னவள்..
அன்னை தன்  உடை மீது செலுத்திய பார்வையில்… “நல்லா  ரொம்ப ரொம்ப நல்லாவே ட்ரஸ் பண்ணிட்டு வர்றேன்..நீங்களும் உங்க கணவரும் சொல்வது போல என் ட்ரஸ் சென்ஸ் எல்லாம் அவ்வளவு மோசம் எல்லாம் இல்ல..
இந்த ட்ரஸ் தான் ட்ராவலுக்கு ஏத்தது அது தான்   இதை எடுத்து உடுத்திக்கிட்டேன்.. இந்த பேக் இது தான் இப்போத்தைய ட்ரெண்டு…
இங்கு வந்தா எங்கேயும் வெளியில் போகாததால் வீட்டுக்கு இலகுவா இருப்பது போல போட்டுப்பேன்… அதனால இப்படி பேசுவாறா உங்க கணவர்.”
ஸ்ரீமதி வார்த்தைக்கு வார்த்தை உங்க கணவர் உங்க கணவர் என்று பேசிய பேச்சில் புவனேஷ்வரி… “என் கணவர் உனக்கு யாரு டீ…?” என்ற அந்த பேச்சுக்கு மட்டும் பதில் அளிக்காது தன் பெட்டிகளை தூக்கிக் கொண்டு தன் அறைக்குள் புகுந்துக் கொண்டாள்.
தன் கேள்விக்கு பதில் அளிக்காது செல்லும் தன் மகளின் முதுகை பார்த்த படி எப்போதும் போல் ஒரு பெரும் மூச்சை விட்டு விட்டு தன் அடுத்த வேலையான தன் மருத்துவமனையின் மூத்த மருத்துவரை அழைத்து..
“சில கட்டளைகளை பிறப்பித்தவர்… ஏதாவது எமர்ஜன்சி என்றால்  மட்டும் என்னை கூப்பிடுங்க…” என்று சொல்லி விட்டு தொலை பேசியை வைத்த புவனேஷ்வரி சாதரணமானவர் இல்லை..
சென்னையில் இருக்கும் உயர்ந்தர  மருத்துவமனையின் உடமை பட்டவர்..அதன் தலமை மருத்துவரும் இவரே…இவரின் தந்தையும் ஒரு மருத்துவர் தான்..இதயமருத்துவர்..அந்த இதயம் அடைத்தே தான் இறந்தார்..புவனேஷ்வரியும் மருத்துவர் என்பதாலும் .அவரின் ஒரே மகள் என்பதால் மருத்துவமனை இவரின் வசம்… மருத்துவமனையில் தன் ஆளுமையை நிலை நாட்டும் புவனேஷ்வரி..
வீட்டில் அக்மார்க் குடும்ப தலைவி..கணவருக்கும் மகளுக்கும் இடையே நடக்கும் இந்த பனி போரில் அதிகம் பாதிப்படைவது  என்னவோ புவனேஷ்வரி தான்.
தந்தையின் மிரட்டலோ..இல்லை தாயின் கெஞ்சலோ…ஸ்ரீமதி தன்னை  அழகாகவே அலங்கரித்து கண்ணாடி முன் நின்றாள்..சாதரணமாக அவள் தந்தை சொன்னது போல் அந்த சாயம் போன உடையிலேயே பார்க்க  அழகாக பளிச்சென்றே இருப்பாள்.
ஒரு தடவை பார்த்தால் பல தடவை திரும்பி பார்க்க வைக்கும் அழகு இல்லை என்றாலும், பார்த்த உடன் மநதில் படியும் முகம் தான் ஸ்ரீமதிக்கு…உயரமும் உயரத்துக்கு ஏற்ற அளவிலும் பார்க்க அழகாகவே இருப்பாள்.
பார்க்க பளிச்சென்ற நிறத்தில் இல்லா விட்டாலும்..மாநிறத்தில் அந்த சருமம் மினு மினுப்பில்  பார்க்க மிக அழகாகவே இருப்பாள்.
ஒரு சிலர் அவளை சட்டென்று பார்த்து விட்டு அவளின்  மங்கிய நிறத்தை பார்த்து அவளை சாதரணமாக கடந்தாலும், அவளை உற்று பார்த்தவர்களுக்கு அப்படி கடக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும்..
அந்த நிறத்தால் அவளின் சருமம் மினு மினு என்று  தெரிகிறதா…?இல்லை அவளின் சரும்மே  இயற்க்கையிலே மினு மினுப்பாய் இருக்கிறதா…?என்று யோசிக்கும் அளவுக்கு அவளின் முகம் மினு மினுப்பாக இருக்கும்.
அதிலும் அவள் கண்ணுக்கு மையிட்டால் அப்படி ஒரு அழகாய் தெரிவாள். ஆனால் அவள் மைய்யிட்டு பதினான்கு வருடம் ஆகிறது. மை அவளுக்கு பிடித்தமான ஒன்று..
 இதே அறையில் தான் நானும் அவளும் ஒன்றாக இக்காண்ணாடி முன் நின்று   இந்த மையிடுவதில் நடக்கும் போட்டி..தான் கையில் காஜலோடு கண்ணாடி முன் நின்றுக் கொண்டு மையிடும் வேளயில் அவள் தன் கையை அசைத்து விட..தானும் அப்படி செய்ய  இருவருக்கும் அப்படி ஒரு போட்டி நடைப்பெறும்.
ஆனால் இப்போது போட்டியிட அவள் இல்லை..ஆனால் கண்ணாடி முன் நின்றாளே அவள் முகமே என் முன் நிற்கிறது…அதையும் மீறி எப்படி கண்ணில் மை தீட்டுவது….? அதனால் அதை விட்டு விட்டாள்.
இன்று ஏனோ வைக்க ஆசையில் காஜலை எடுத்து கண்ணை விரித்து மை இட ஏதாவாக கண்ணாடியின் மிக அருகில் தன் முகத்தை கொண்டு சென்றவள் அந்த காஜலை கண் அருகில் கொண்டு செல்லும் போதே ஏனோ கையில் ஒரு நடுக்கம்… முகத்தில் வியர்வை துளிகள்..இதையும் மீறி இதற்க்கு மேல் நாம் முயற்ச்சித்தால்… ஏடா கூடமாக தான் முடியும் என்று கருத்தியவளாய்..
அந்த காஜலை தூக்கி போட்டவள்…உடை சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்தாள்.எலுமிச்சை நிறமும் கிளி பச்சை நிறமும் கலந்த அந்த சுடி அவளுக்கு அவ்வளவு  கச்சிதமாய் பொறுந்தி போனது. அதற்க்கு தோதாய் தன் அன்னை கொடுத்த கை பையை எடுத்துக் கொண்டு கீழே வரவும் ..வெற்றிமாறனும் புவனேஷ்வரியும் தயாராகி ஹாலில் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. 
தன் தந்தையை  காக்கி உடையில்லாது சாதரண கதருடையில் பார்த்தவளின் மனமோ… “என்ன இன்னைக்கு நாட்டை பாதுகாக்காமல் நம்மோட கிளம்பிட்டார்.
இவர் இல்லேன்னா இந்த சென்னை சிட்டியின் பாதுகாப்பு என்னத்துக்கு ஆகிறது…?” என்று மனதில் எள்ளலாய் நினைத்த வாறே ஸ்ரீமதி  தாயின் அருகில்  வந்து நின்றுக் கொண்டாள்.
படியில் இருந்து இறங்கி வரும் போதே தன் மகளின் உடையில் திருப்தி அடைந்தவரின் கண் முன் அவள் அருகில் மற்றொரு உருவம் கலங்கலாய் தோன்றி மறைந்தது… என்ன தான் நான் உறுதியானவன் என்று ஆயிரம்ன முறை தனக்கு தானே சொல்லிக் கொண்டாலும் வெற்றி மாறனுக்கு இந்த பிரம்மை  ஒரு தந்தையாய் அவரின் மனது ஒரு நிமிடம் துடித்து தான் அடங்கியது.
இவர்கள் காரின் முன்னும் பின்னும் இரு வாகனம் வர…அது தங்கள் பின்னோடு வருகிறதா…?என்று  அவ்வப்போது சரிப்பார்த்துக் கொண்டே தன் மனைவியிடம்…
“அஷ்வத் போன் செய்தானா…?” என்று கேள்வி எழுப்பினார்.
“இல்லேங்க…” என்ற புவனேஷ்வரியின் பதிலில் … ஒரு நிமிடம் யோசித்தவர்…
“நீ பண்ணியா…?” என்று கேட்டார்.
ஸ்ரீமதியே.. “இது என்ன கேள்வி…?” என்பது போல் தன் பேசியில் இருந்து தலை நிமிர்ந்து அவரை பார்த்தவள் திரும்பவும் தன் தலையை பேசிக்குள் நுழைத்துக் கொண்டாள்.
புவனேஷ்வரியும் இது என்ன கேள்வி என்பது போல் தன் கணவரை ஒரு பார்வை பார்த்தாலும்… தன் கணவனின் கேள்விக்கு பதிலாய்…  “நான் பண்ணலேங்க.” என்று சொன்னார்.
“ஏன்…” என்று வெற்றி மாறன் மீன்டும் ஒரு கேள்வி எழுப்ப..
இதற்க்கு என்ன பதில் சொல்வது என்று சிறிது நேரம் யோசித்த புவனேஷ்வரி தன் மகளின் பக்கம் தயங்கிய படி ஒரு பார்வை பார்த்த வாறே…
“மார்னிங் சம்மந்தியம்மா போன் செய்தாங்க. காலையில் ப்ரேக் பாஸ்ட்டுக்கே வந்துட சொல்லி.. நான் தான் உங்களுக்கு கொஞ்சம் வேலை இருக்குன்னு சொல்லிட்டு அனிதா இருந்தா கொஞ்சம் போனை கொடுக்க முடியுமா…? என்று கேட்டதற்க்கு..
“அவங்க இன்னும் எழுந்து கீழே வரலேன்னு சொன்னாங்க..அவங்க எனக்கு போன்  பண்ணும் போது  பதினொன்னு…” என்று புவனேஷ்வரி சொன்னதும் வெற்றி மாறனின் வாய் தன்னால் மூடிக் கொண்டது.
அவர்களின் கார் அந்த வீதியில் நுழையும் போதே எங்கும் காவல் தான்…இவர்களின் காரை பரிசோதனை செய்ய அருகில் வந்தவர்கள் காரில் வெற்றி மாறனை பார்த்து விட்டு… ஒரு சல்யூட் அடித்த வாறே தங்களின் காருக்கு  வழி விட்டு ஒதுங்க..
கார் கேட்டின் உள் நுழைந்ததும் அந்த காவல் இன்னும் பலத்தது போல் கையில் ஆயூதம் ஏந்தி  நின்று இருப்பவர்களை பார்த்தவளுக்கு ஏனோ நெஞ்சம் பட பட என்று அடித்துக் கொண்டது.
தன் அன்னை தன் கையை பிடித்து ஆறுதல் போல சொல்லவும் சூழ்நிலை கருதி தன்னை திடப்படுத்தியவளாய் கார் நின்றதும் காரை விட்டு கீழே இறங்கியதும் அவள் பக்க வாட்டில் தெரிந்த அந்த பூந்தோட்டத்தை பார்த்ததும் ஏனோ மனது கொஞ்சம் அமைதி அடைந்தது.
அவளின் அந்த கொஞ்சம்  அமைதியை கெடுக்கும் வகையாக சாப்பிடும்  போது அவளின் பக்கத்தில்  வந்தமர்ந்த கல்விதுறை… “ஹாய் ஏஞ்சல்…” என்ற அவனின் வார்த்தையிலும், அவனின் பார்வையிலும் மொத்தமாய் அவள் அமைதி கெட பிள்ளையார் சுழி இட்டது போல் ஒரு எண்ணம் அவளின் மனதில் தோன்றிய ஒரு உணர்வு அவளுக்கு எச்சரிக்கை செய்தது.
 
 

Advertisement