Advertisement

அத்தியாயம்…3
“என்ன இது அதிக பிரசங்கி தனம்…?” என்று அனைவருக்கும் கேட்கும் வகையில்  ஸ்ரீமதியை குரல் உயர்த்தி கத்திய வெற்றி மாறன்.. அவளுக்கு ஆதாரவாய் அவளின் தோள் பற்றி நின்றுக் கொண்டு இருந்த தீபிகாவை பார்த்து…
“இந்த பெண்ணை யார் இங்கு விட்டது…?” முதல்ல இந்த பெண் எப்படி கல்யாணத்திற்க்கு வந்தாங்க….?” என்று பாதுகாப்பை மேற் பார்வையிடும் ஒரு பாது காவலரை பிடித்து கத்தினார்.
அந்த காவலரோ தயங்கி தயங்கி …”சார் மேடமோட பிரண்ட்…” என்று சொன்னவரின் பார்வை  கல்வி துறை அழைச்சர் அகில ரூபன் பக்கம் சென்றது. இவர் தானே “ரொம்ப வேண்டிய பெண் என்று சொன்னார்.” என்ற நினைவில்.. 
அகில ரூபன்  அங்கு இருக்கும் மீடியாக்களை சட்டென்று அப்புறப்படுத்தி விட்டு…  வெற்றி மாறன் அருகில் வந்து அவர் தோள் பற்றியவனாய்..
“மாமா நான் தான் சொன்னேன்…அவங்க நெருங்கினவங்க என்று அதன் பின் தான் அவர் அவங்களே உள்ளே நுழைய அனுமதித்தார்.” என்று அந்த காவலாலியை காட்டி  சொன்னான்.
அதை கேட்ட நவின்… “அண்ணா உங்களுக்கு இவங்கல முன்னவே தெரியுமா…?” என்று தீபிகாவை காட்டி கேட்டதற்க்கு..
அகில ரூபன்.. “அஷ்வத் வீட்டுக்கு போன போது அங்கு  ஹாலில் இவங்க போட்டோ இருந்தது..அதான்…” என்று சொன்னான்.
நவின் வெற்றி மாறனை பார்த்து… “என்ன மாமா…? வீட்டில் ஹாலில் இவங்க போட்டோவை மாட்டிட்டு இவங்கல யாரு கல்யாணத்திற்க்கு அனுமதித்ததுன்னு கேட்குறிங்க…?” என்ற  நவினின் கேள்வி ..வெற்றி மாறனை குழப்பத்தில் ஆழ்த்தியது.
வெற்றி மாறன் மீண்டும் தீபிகாவை பார்த்தவர்.. இந்த பெண் போட்டோவா…? என்று அவர் யோசனையில் ஆழும்  போதே அகில ரூபன் திரும்பவும்..
“இவங்க போட்டோ தனியா எல்லாம் இல்ல..உங்க மகளோட இருக்கு க்ரூப் போட்டோவில் இவங்களும் இருப்பாங்க…” என்று அகில ரூபன் வெற்றி மாறனுக்கு விளக்கம் அளித்தான்.
அவனின் விளக்கத்தில் நவின் தன் அண்ணனை பார்த்தான் என்றால்…தீபிகாவும் அகில ரூபனை பார்த்தாள்… இருவரின் பார்வையிலும் ஒரே எண்ணம் தான்…
தீபிகா அந்த போட்டோவில்  தான் எங்கோ ஒரு மூலையில் தான் இருப்போம்..எப்படி தன்னை சரியாக கவனித்து இருக்கிறார் தன் ஹீரோ என்று சற்று முன் அனைவரின் முன்னும் தன்னை வெற்றி மாறன்..இந்த பெண்ணை யார் அனுமதித்தது என்று தன்னை அவமானம் படுத்தியது போல் பேசியது அனைத்தையும் மறந்தவளாய் அகில ரூபனை பார்த்து இருந்தாள். நவினும் அதே கண்ணோட்டத்தில் தான் பார்த்திருந்தாள்.
ஆனால் இந்த பார்வையை நீடிக்க விடாத ஸ்ரீமதி தீபிகாவின் கை பற்றியவளாய்..அனைவரிடமும் பொதுவாய்… “மன்னிச்சிக்கோங்க…” என்று மன்னிப்பு கேட்டவள்.. அவள் எதற்க்கு மன்னிப்பு கேட்டாள் என்று யோசித்து முடிப்பதற்க்குள் அவள் அங்கு இருந்து சென்று விட்டாள்.
அதற்க்கும் வெற்றி மாறன்… “பொறுப்பே இல்லாதவ…இப்படி தனியா போறாளே ஏதாவது ஆயிடுச்சின்னா…?” என்று தன் மகளை திட்டினாலும் தன் பேசி மூலம் தன் மகளுக்கு பாது காப்பு கொடுப்பதை அந்த தந்தை மறக்கவில்லை.
ஆசிரமத்தில் அனைத்தும் சரியாக நடந்து முடிந்ததும்..சீதாராமன்  வெற்றி மாறனிடம்.. “மகள் கிட்ட சத்தம் போடாம பேசுங்க சம்மந்தி..அதுவும் எல்லோர் எதிரிலும்…” என்று சொன்னவர்..
கூடவே… “அண்ணன் கல்யாணத்திற்க்கு அவள் பிரண்ட்ட கூப்பிட்டு இருக்கா…?இதில் தவறு என்ன இருக்கு…?” என்று சீதாராமன் கேட்டார்.
அதற்க்கு வெற்றி மாறன்.. “நான் அவ பிரண்ட்ட கூப்பிட வேண்டாமுன்னு நான் சொல்லலே.. சா…”
சார் என்று சொல்ல  வந்த வெற்றி மாறன் பின் சீதாராமனின் பார்வையில் …”நான் கூப்பிட வேண்டாமுன்னு சொல்லலே சம்மந்தி…யா…?ர் யார் வர்றாங்க..?அவங்க ஆதார் கார்டின் நகல்  எல்லாம் எனக்கு வேண்டும் என்று சொன்னேன்.
அப்போ எல்லாம்  நான் யாரையும் கூப்பிடும் ஐடியா இல்லேன்னு சொல்லிட்டு இப்போ  ஒரு பெண்ணை அழச்சிட்டு வந்து இருக்கா…அதுவும் இங்க வரை..ஒன்னு இருக்க ஒன்னு ஆகிட்டா..அப்புறம் என்ன செய்தும் பிரயோசனம் இல்ல சம்மந்தி.” என்று வெற்றி மாறன் விளக்கம் சீதாராமனுக்கு ஏற்றுக் கொள்ளும் படி தான் இருந்தது.
இருந்தும் சீதாராமன்… “இல்ல உங்க மகள் ரொம்ப வருத்தப்பட்டு போனது போல இருந்தது..நம்ம பதவி அதனால வரும் டென்ஷன் நமக்கு..ஆனால் உங்க மகள்  சின்ன  பெண் இல்லையா…?
ஒரு அண்ணனின் கல்யாணத்தில் நாம இப்படி இருக்கனும் என்று ஏதாவது அவங்களுக்கு ஐடியா இருந்து  இருக்கலாம்…நீங்க உங்க மகளோட பிரண்ட் ஐடி கார்ட் எல்லாம் கேட்டதும்..உங்க மகளுக்கு திருமணம் ஆர்ப்பாட்டம் எண்ணமே போய் இருக்கும் என்று எனக்கு தோனுது…”
சீதாராமன் சொன்னது போல தான் ஸ்ரீமதி தன் அண்ணன் திருமணம்..அதாவது இந்த இடம் இல்லாது..முதலிலேயே அவள் தன் அன்னையிடம் சொல்லி விட்டாள்… அண்ணனுக்கு பிறகு தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன் என்று…
அதன் படி அவள் அண்ணன் திருமணத்திற்க்கு ஆடையில் இருந்து உணவு பின் அதில் இடம் பெறும் கேளிக்கை என்று அவள் ஆயிரம் திட்டமிட்டு இருக்க..அவள் அண்ணன் காதல்..அதுவும் அவன் காதல் எல்லாம் லேசு பட்ட இடத்தில் இல்லை..
இந்த மாநிலத்தின் முதலமைச்சரின் மகளோடு… பெண் அனிதா தான் என்று தெரிந்ததுமே அவளின் உற்சாகம் பாதி குறைந்து விட்டது..மீதியை அவள் அப்பா கேட்ட ஆதார் கார்டில் போனது..பின் தன் ஆடையை கூட தன் அன்னை தான் தேர்ந்தெடுத்தது.
இவை அனைத்தையுமே ஒரு பார்வையாளனாய் அகில ரூபன்  கேட்டுக் கொண்டு இருந்தாலும்,  எதுவும் பேசவில்லை. ஆனால் நவின்… வெற்றி மாறனிடம்… “நீங்க எல்லோர்  எதிரிலும் மதியை திட்டி இருக்க கூடாது மாமா…” என்று சொன்னதை அகில ரூபன் ஒரு யோசனை பார்வையோடு தன் தம்பியை பார்த்தானே ஒழிய அப்போது கூட வாய் திறக்கவில்லை.
நவின் ஸ்ரீமதிக்கு ஆதாரவாய் பேசியதை கேட்டு நம் பவனியம்மா தன் கணவரை பார்த்தார். அப்போது சீதாராமனும் தன் மனைவியை பார்த்துக் கொண்டு இருக்க ..இருவரின் பார்வை பரிமாற்றத்தை பார்த்திருந்த அகில ரூபன் அப்போது கூட வாய் திறக்கவில்லை.
இப்படி எந்த கொண்டாட்டமும் இல்லாது அனிதா அஷ்வத் திருமணம் நடைப்பெற்றாலும் மணமக்கள் என்னவோ மகிழ்ச்சியாக தான் இருந்தனர். அன்றைய சடங்கு பெண் வீடு என்று சொல்லி விட அஷ்வத் அகில ரூபன் வீட்டுக்கு சென்று விட்டான்.
இதை கேள்வி பட்டு யார் மகிழ்ந்தார்களோ இல்லையோ நம் ஸ்ரீமதிக்கு நிம்மதியாகி விட்டது.தன் வீட்டில் அந்த சடங்கை வைத்தால் அண்ணி மட்டுமே வருவார்கள் கூடவே பாதுகாப்பு என்ற பெயரில் வீட்டை சுற்றி இருக்கும் அந்த காகித உடையை பார்த்தாலே அவள் நிம்மதி மொத்தமாய் போய் விடும்.
அதனால் நிம்மதியடைந்தாள்…இந்த நிம்மதி எத்தனை நாள்…?அவளுக்கு அவளே கேள்வி எழுப்பியவள் கூடவே நான் நாளையே பெங்களூர் சென்று விடுவேன்..நான் இங்கு இல்லாத போது காவல் துறை என்ன…?ராணுவ துறையே காவல் இருக்கட்டும் எனக்கு என்ன என்று நினைத்துக் கொண்டவளாய்..உறங்கியவள்..
விடிந்தும் விடியாத அந்த காலை பொழுதினிலேயே  தன் அன்னையிடம்… “அம்மா நான் பெங்களூர் போகிறேன்.” என்று  பெட்டி படுக்கையுடன் தன் முன் வந்து நிற்பவளை என்ன சொல்லி தடுத்து நிறுத்துவது என்ற யோசனையில் தன் கையை பிசைந்துக் கொண்டு இருந்தார் புவனேஷ்வரி.
எப்போதும் போல் சரியான நேரத்தில் அங்கு வந்த வெற்றி மாறன் ஸ்ரீமதியின் அருகில் இருந்த பெட்டிகளை பார்த்து விட்டு… “எங்கே போற…?” என்று கேள்வி எழுப்பினார்.
தாயிடம் தலை நிமிர்ந்து… “நான் பெங்களூர் போகிறேன்.” என்று நெஞ்சி நிமிர்த்தி சொன்னது போல் தன் தந்தையிடம் சொல்லவில்லை என்றாலும்..தலை குனிந்த வாறு… “நான் ஊருக்கு போகனும்பா.” என்று ஸ்ரீமதி சொன்னது தான் தாமதம்… 
“உன் மனசுல நீ என்ன நினச்சிட்டு இருக்க…?உன் இஷ்டத்துக்கு ஆடுற….?தோ இப்போ நான் உன்னை கத்துவதை பார்த்து ஆள் ஆளுக்கு எனக்கு அட்வைஸ் பண்றாங்க..பெண் கிட்ட அன்பா பேசுன்னு…நான் பேச மாட்டேன்னா சொல்றேன்.. ஆனா என் பேச்சை கேட்க  நீ என் கிட்ட காது கொடுத்தா தானே… இதோ பூமிக்கடியில் ஏதோ புதையல் இருப்பது போல நான் வந்தாலே தலை குனிஞ்சிக்குற…” என்று எப்போதும் போல் கத்திய வெற்றி மாறன்…
“எனக்கு புரியல மதி..நான் என்ன தப்பு செய்தேன் என்று…” தான் அணிந்து இருந்த சீருடைய காண்பித்து…
“இதுக்கு உண்மையா இருக்கனும் என்று நினைப்பது தப்பா….?” என்ற தந்தையின் கேள்வில் தான் ஸ்ரீமதி தலை நிமிர்ந்து அவர் கண்ணை பார்த்தாள்.
அந்த பார்வை அவருக்கு எதை உணர்த்த முயன்றதோ..இல்லை முயன்று முடியாமல் போனதோ…மகளின் பார்வையில் தன் பேச்சை தடை பட நிறுத்தியவர்..
இவ்வளவு பேசியதற்க்கு தன் மகள் ஏதாவது பேசுவாள்…குறைந்த பட்சம் தன்னிடம் சண்டையாவது இடுவாள்  என்று மதியின் முகத்தை பார்த்திருக்க…
ஸ்ரீமதியின் கண்களோ. தன் தந்தையின்  முகத்தையே ஒரு நிமிடம் கூர்ந்து பார்த்தவள் பின் கீழ் இறங்கி அவர்  உடுத்தி இருந்த அந்த காக்கி உடையை பார்த்ததும்..புருவ சுழிப்புடன் தன் பார்வையை மீண்டும் தாழ்த்திக் கொண்டாள்.
அதை பார்த்த வெற்றி மாறனுக்கு இன்னும் இன்னும் கோபம் அதிகரிக்க தான் செய்தது…
“பார்க்கிறவங்க எல்லாம் என்னை கொடுமைக்காரன் போல பாக்குறாங்க..நான் வீட்டிலும் போலீசா நடந்துக்கிறேன்னாம்..ஆனால் நீ தான் என்னை அனுதினமும் கொடுமை படுத்துறேன்னு அவங்களுக்கு எங்கே தெரியப்போகுது..
தோ ஊரில் பெங்களூர் சிட்டி கம்புயூட்டர் சிட்டியில் நீ ஓட்டல் வெச்சி நடத்துற…நீ எடுத்த மார்க்குக்கு காசு கொடுக்காமலேயே  உனக்கு டாக்டர் சீட் கிடச்சி இருக்கும்..ஆனால் நீ கேட்டரிங் தான் போவேன்னு எங்க விருப்பத்தை மீறி படிச்ச.. அதுவும் இந்த படிப்புக்கு டெல்லி…
சரி படிச்சி முடிச்சி இங்கு ஏதாவது செய்வ..இல்ல நல்ல நட்சத்திர ஒட்டலில் நான் உனக்கு சீப் குக்கா சேர்த்து விடுறேன்னு சொன்னதற்க்கு நான் என் பிரண்சோட சேர்ந்து பெங்களூரில் சொந்தமா  ஓட்டல்  ஆராம்பிக்க போறோன்னு சொன்னதற்க்கு..
சரி நீ சொந்தமா ஆராம்பி..அது என்ன பெங்களூர் இங்கேயே ஆராம்பின்னு சொன்னேன்..அதையாவது கேட்டியா…? ஏதோ ரோடு கடை மாதிரி சின்னதா…அதுல மூணு பார்ட்னர்..என் மானத்தை வாங்கியே ஆகனும் என்று ஏதாவது கங்கணம்  கட்டிட்டு இருக்கியான்னு எனக்கு தெரியல…” என்று இத்தனை நாள் கோபத்தை தவறு தவறு இத்தனை ஆண்டு கோபத்தை  வார்த்தைகளாய் கொட்டினார்.
அப்போது கூட ஸ்ரீமதி வாய் திறந்து ஒரு வார்த்தை பேசாது அமைதியாகவே நின்று இருக்க…  பின் தன் மகள் மீது இருக்கும் கோபத்தை தன் மனைவி  மீது காட்டினார்.

Advertisement