Advertisement

அத்தியாயம்….23
பவானியம்மாவின் தந்தை காலத்து முதலே  இருந்த அந்த  கட்சியின் மூத்த தலைவர்கள் ஒரு சிலர், அகில ரூபனிடம்…
“அம்மா எதுக்கு தம்பி இப்படி அனைத்தையும் விட்டு ஒதுங்கி போயிட்டாங்க…?” என்று கேட்டனர்கள்..
அவர்கள் கேள்வியில், அவர்கள் இப்படி அனைத்தையும் விட்டு சென்று விட்டனரே என்ற ஆதங்கம் இருந்ததா..? . இல்லை எதற்க்கு என்று தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் இருந்ததா…? என்று  தெரியவில்லை…
ஆனால் அக் கட்சியின் மூத்த உறுப்பினர் அகில ரூபனின் தாத்தா காலத்தில் இருந்தே இருந்தவர்கள் வயதில் மூத்தவர்கள் கேட்ட கேள்விக்கு…
“ அவங்களுக்கு இந்த மீடியா பரப்பரப்பு இல்லாத வாழ்க்கை வாழனும் என்று கொஞ்ச நாளாவே சொல்லிட்டு இருந்தாங்க..
அது என்னவோ தங்கை கல்யாணம் ஆன உடன் அவங்க இப்படி சட்டுன்னு முடிவு எடுப்பாங்கன்னு  நாங்க யாருமே நினச்சி கூட பார்க்கல… “ என்ற அகில ரூபனின் பேச்சை யாரும் நம்பவில்லை என்றாலும் அதை மறுத்து பேசாது..
“அப்படியா…? “ என்று மட்டும் ஆமாம் சாமி போட்டனர்..
அரசியலில் இது எல்லாம் சகஜம் என்பது போல் அரசியல்வாதிகள் பேசுவது  நம்பமுடியாததாக இருந்தாலும், நம்பி தான் ஆக வேண்டும்..இல்லை என்றால் அங்கு எல்லாம் காலம்  தள்ள முடியாது.
அதுவும் கட்சியின் மூத்தவர்களுக்கு  இது எல்லாம் தெரியாமல் இருக்கும்மா…? தெரிந்தே ஒன்றும் சொல்லாது தன் பக்கத்தில் அமர்ந்து இருந்தவரிடம்..
“அந்த அம்மாவுக்கு மீடியா..இந்த பதவி புகழ் இது எல்லாம் பிடிக்காம ஒதுங்கிட்டாங்களாம்.. கேட்குறவங்க எல்லாம் முட்டாள் பசங்க பாரு..
அந்த பொம்பள   பதவிக்காகவே இந்த பையனை தத்து எடுத்து ஓட்டா மாத்தின பொம்பள… அந்த பொம்பளைக்கு பதவி வேண்டாம் என்று ஒதுங்கி இவரை அந்த இடத்தில் இருக்க வெச்சிட்டாங்கலாம்.. “ என்று அந்த மூத்த உறுப்பினர் சொல்ல..
கேட்டுக் கொண்டு இருந்த  அந்த கட்சியின் மற்றொரு உறுப்பினரோ…
“ம் அந்த பொம்பள…எந்த பையனை வெச்சி வாக்கு வாங்குச்சோ..அதே பையன் இந்த பொம்பளைய அரசியல் வாழ்க்கையில் இருந்தே கல்த்தா கொடுத்துட்டு அந்த இடத்தில் அவன் அமர இருக்கான் பாரு..அது தான் தெய்வம்  இருக்கான்யா… “ என்று சிலாகித்துக் கொண்டு பேசினார்.
இதோ இப்போது பவானியம்மாவை பொம்பள பொம்பளை என்று பேசும் இந்த வாய்கள் தான் அந்த அம்மா பதவியில் இருக்கும் போது …
தெய்வம் போல் அவர்கள் காலடியில் வீழ்ந்து போய் கிடந்தது… அவர்கள் முன்…
“நீங்க  ஒரு தெய்வத்தாய். அரசியலின் விடிவெள்ளி..நம் கட்சிக்கு ஒரு மணிமகுடம்…” என்று இதே வாயால் தான் அன்று புகழ்ந்து தள்ளி பேசியது..
ஆனால் இன்று… ஒருவருக்கு பதவியும், செல்வாக்கும் இல்லாது போய் விட்டால் அவர்களின் மதிப்பு இதோ இப்போது பேசினார்களே பொம்பளை அதே தான்..
அதுவும்  அகில ரூபன் பவானியம்மாவின் நிஜமான தத்து பிள்ளை என்று  நம்பும் போதே இந்த பேச்சு என்றால், நிஜம் தெரிந்தால்.. இந்த பதவிக்காக தான் இத்தனை மோதல்கள்..
இதோ அந்த பதவிக்காக தான்..முதலில் பெற்றோர்கள் கனவு என்று நன்றி கடனுக்காக  அரசியலுக்குள் நுழைந்த அகில ரூபன்..இதோ இப்போது அதை தக்க வைத்துக் கொள்ளவும்..
அதோடு உயர்ந்த பதவி அதாவது முதலமைச்சர் பதவிக்காக இதோ இப்போ பேசும்  மேடை பேச்சான…
“ என் தாயை பற்றி உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை… இந்த கட்சிக்காகவும் நாட்டு  மக்களுக்காகவும், அவர் பாடுபட்டது உங்கள் அனைவருக்கும் தெரியும்.. அதை நான் சொல்வதை விட நீங்கள் உணர்ந்து இருக்கிங்க..
அதனால நான் உணர்ந்த விசயத்தை உங்களிடம்  சொல்ல விரும்புகிறேன் என்பதை விட… அவர்களின் பெருந்தன்மையை சொல்ல கடமை பட்டு இருக்கிறேன் என்று சொன்னால்  அது சரியாக இருக்கும்.
நான் உணர்ந்தது என்ன…? நான்  அவர்களுக்கு ஒரு தத்து  பிள்ளையாக இருந்தாலும்,  என்னை ஒரு முத்து பிள்ளையாக தான் பார்த்துக் கொண்டார்கள்..
அதற்க்கு சான்று..இதோ நான் உங்கள்  முன் முதலமைச்சர் பதவிக்காக  பேசிக் கொண்டு இருப்பது.. சொந்த பிள்ளைகள் இருவர் இருக்க…அரசியல் வாரிசாய் அவர்கள் என்னை ஆக்கியதில் இருந்தே தெரிய வேண்டாமா…? அவர்கள் எப்படி பட்டவர்கள் என்று…
தத்து பிள்ளையான நான் அவர்கள் என்னை நடத்தியல் உணரவில்லை..அனைவரும் சொல்ல கேட்டு தான் எனக்கு தெரியும்… அப்படி பட்ட தெய்வதாய் பவானியம்மா..
அவர்கள் வழிகாட்டுதலோடு உங்கள் முன் நான் இருப்பதில் நான் மிக பெருமையாக உணர்க்கிறேன்… நான் அம்மாவிடம் கேட்டேன் ..நீங்களே முதலமைச்சர் பதவியில் இருக்கலாமே..உங்கள் பின் நான் இருக்கிறேன் என்று..
அதற்க்கு அவர்கள் என்னிடம் சொன்னது…
“ என் தந்தை இருக்கும் போது நான் வந்தேன்.. என் மக்கள் என்னை ஏற்றுக் கொண்டார்கள்… என் மீது அவர்கள் வைத்த அன்பு  உன்னையும் ஏற்றுக் கொள்ளும் என்ற  நம்பிக்கை எனக்கு இருக்கிறது… நீ நில். என்று சொன்னதோடு இதோ உங்கள் முன் என்னை நிற்க்கவும் வைத்து விட்டார்கள்…
எனக்கு நம்பிக்கை இருக்கிறது..என் அம்மாவின் இடத்தில் என்னை பார்ப்பிற்கள் என்று… நான் இன்று கல்வி அமைச்சராய் இருக்கலாம் நாளை  முதலமைச்சராய் ஆகலாம்
அடுத்து முதல் மந்திரியாக கூட நீங்கள் அனைவரும் சேர்ந்து என்னை அமர வைக்கலாம்..ஏன் என்றால் உங்களோட அன்பு.. என் அன்னை மீது நீங்கள் வைத்த அந்த மதிப்பு  அத்தகையது என்று எனக்கு தெரியும்…
இத்தனை பாக்கியம் செய்த நான்..அந்த புன்னியவதி  உங்கள் அனைவருக்கும் தாயான அவர்கள் வயிற்றில் பிறக்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லையே என்று நான் நினைக்கும் போதே… “
அகில ரூபனின் கண்கள் கலங்க அதை நாசுக்காய் துடைத்துக் கொண்டே பேசிய அவனின் பேச்சை தொலைக்காட்சி வழியாக அனைவரும் பார்த்துக் கொண்டு இருந்தனர்..
அந்த பார்வையாளர்கள் வரிசையில்…
குக்கிராமத்தில் வசித்த பவானியம்மா  சீதாராமன் அகில ரூபனின் பேச்சை கேட்க கேட்க.. இவன் நமக்கு மேல் வந்து விடுவான் என்றே நினைத்திருந்தனர்..
இதோ பிடிக்காது பிடிக்காது என்று அரசியலுக்கு வந்த இவன் அந்த பதவிக்காக இவ்வளவு பேசும் போது… அடுத்து நினைக்காது கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொண்டனர்..
சென்னையில் அடுத்த வாரம்  நவீன் அஷ்வத் திருமணத்துக்காக  அகில ரூபனின் குடும்பம் திருமண வேலையில் மூழ்கி இருந்தாலும், அன்று அகில ரூபனின் தேர்தலுக்காக அவன் பேசிய பேச்சை கேட்க..
வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் அந்த ஹாலில் சேர்ந்து இருக்க…கையில் சிற்றுண்டியோடு வந்து அமர்ந்த மதி..தன் கணவனின் பேச்சில்..
வாயில் வைத்த அந்த உணவை முழுங்க முடியாது விக்கித்து அமர்ந்து விட… அனிதா தான்..
“ இது உங்களுக்கு புதுசு,.. எங்களுக்கு இது பழசு… என்ன ஒன்னு போன தேர்தலில் அம்மா கப்சா விட்டதை கேட்டேன் இப்போ அண்ணன்..ஆனால் இவர் பேசுறது அப்பா அப்பா…அதுவும் தெய்வத்தாய்..அவங்க வயிற்றில் பிறக்காதது கடவுளே கடவுளே…” என்று சொல்லி மேல் நோக்கி கடவுளை அழைத்தாள்..
அகில ரூபனின்  பேச்சை கேட்ட தீபிகா பக்கத்தில் அமர்ந்து இருந்த அஷ்வத்திடம்  “ என்ன அண்ணா இது…?” என்று கேட்க..
“ ம் என்ன பண்றது..இது போல் ஏமாத்து குடும்பத்தில் நானும் என் தங்கையும் மாட்டிக் கொண்டோம் என்று பார்த்தால்..என் தங்கை கூட பழகின பாவத்துக்கு நீயும் மாட்டினியே அது நினைத்தால் தாம்மா…” என்று சொல்லிக் கொண்டே வராத கண்ணீரை துடைத்து விட்டுக் கொண்டவனின் மண்டையில் ஒரு அடி விழ..
தீபிகாவின்  இந்த பக்கத்தில் அமர்ந்து இருந்த நவீன்  தான் அஷ்வத்தை அடுத்தது…
 தன் தங்கையை பார்த்து…
“ நீ மச்சானை சரியா கவனிக்கிறது இல்லேன்னு நினைக்கிறேன்..  இதே மதியை பார்.. அவர் பேச்சு எல்லாம் வெளியில் மட்டும் தான் வீட்டில் …” என்று சொல்லிக் கொண்டு வந்த நவீன் தன் வாயை பொத்திக் கொண்டு  ..
“ மதி கிட்ட ட்ரைனிங் எடு…” என்று இங்கு இப்படி பேச்சு நடைப்பெற்றுக் கொண்டு இருக்க…
கட்சிக்கு பாதுகாப்புக் கொடுத்துக் கொண்டு இருந்த வெற்றி மாறன்.. எப்போதும் பாதுகாப்பு சரியாக இருக்கிறதா,  என்று மட்டும் பார்த்து  சென்று விடும் அவர் ..
இன்று முக்கியமானவர்களின் மேடை பேச்சு இருப்பதால், அவர் அங்கேயே இருந்தார்.. இருந்தவர் காதுக்கு அகில ரூபனின் பேச்சும், கண்ணுக்கு அகில ரூபனின் கண் கலங்கிய காட்சியும் தெரிய…
“நம்ம மருமகன் முழுஅரசியல் வாதியாகவே ஆகிட்டான்.. இனி அவருக்கு அரசியலில் நல்ல எதிர்க்காலம் இருக்கிறது…” 
எப்போதும் அவர் நினைக்கும், அவரின்  கண்ணுக்கு தெரியாத எதிரி..அதாவது மதியின் பாதுகாப்புக்கு அவளின் வாழ் நாள் முழுவதும் கவலை இல்லை என்ற தெளிவோடு அங்கு இருந்து சென்றார்…
திருமண பட்டு புடவை எடுக்க சென்னையில்  புகழ் வாய்ந்த ஜவுளிகடை என்பதை விட கடல் என்று  சொன்னால் சரியாக இருக்கும்… ஆனால் அந்த கடலில் யாரும் இல்லாது அகில ரூபனின் குடும்ப உறுப்பினர் மட்டுமே அங்கு இருந்தனர்..
நேரம் இரவு பதினொன்று…
“பேய்க்கு புடவை எடுக்கும் நேரத்தில் எனக்கு புடவை எடுக்க வந்து இருக்கோம்.. “ என்று  தீபிகா நவீனிடம் சொல்ல…
பக்கத்தில் இதை கேட்டுக் கொண்டு இருந்த மதியோ… “அப்போ சரியான நேரத்துக்கு தான் வந்து இருக்கோம் என்று நவீனிடம் சொல்ல..
கடவுளே இதற்க்கு என்ன ரியாக்க்ஷன் கொடுக்க வேண்டும் என்று தெரியாது இரண்டு கட்டானாக தலையை இரு பக்கமும்  ஆட்டி வைத்தான்..
இதை பார்த்த அஷ்வத்… “ மாப்பிள்ளை உனக்கு கல்யாணம் செய்யும் அனைத்து தகுதியும் வந்து விட்டது…இனி நீ பிழைத்துக் கொள்வாய்… “ என்று சொல்ல..
தீபிகாவின் முறைத்த பார்வையை பார்த்துக் கொண்டே…
“எங்கேடா பிழைக்க வைக்கிறிங்க… அண்ணன் தங்கை இரண்டு பேரும் சேர்ந்து எனக்கு ஆப்பு தானேடா வைக்கிறிங்க… “ என்று நினைத்தவன் வாய் திறந்து சொல்லவில்லை.
ஏன் வாயை திறக்கிறான் மூச்… மாநிலத்திற்க்கு தான் அகில ரூபன் முதலமைச்சர் வீட்டுக்கு மதி தான்..
மதியை ஏதாவது சொன்னால் நமக்கு மிதி தான் என்று நன்கு உணர்ந்தவனாய் நவீன் வாய் திறக்காது இருக்க..
அஷ்வத்தோ… “என்ன மாப்பிள்ளை கம்முன்னு இருக்க…” என்று அவனை சீண்ட…
வடிவேலு பாணியில்… “அடித்தாலும் நான் வாயை திறக்க  மாட்டேன்…” என்ற முறையை பின் பற்றி தலையை மட்டும் ஆட்டி வைத்தான்..
தீபிகாவுக்கு அரக்கு கலரில் பட்டுப்புடவை எடுக்க… அனைவருக்கும் அதே நிறம் என்று முடிவு செய்து எடுத்தனர்..
என்ன ஒன்று விலை தீபிகாவுக்கு கிராண்டாகவும் மற்றவர்களுக்கு வேறு மாதிரியும் எடுத்தனர்..
அகில ரூபன்  எடுத்த புடவையை தன் மனைவின்  மீது போட்டு பார்த்து விட்டு..
“ உனக்கு தான் ஸ்ரீ இந்த புடவை நல்லா இருக்கு..” என்று சொல்லிக் விட்டு தன் மனைவியின் அழகை ரசிக்க..
அகில ரூபனின் இருபக்கம் நின்றுக் கொண்டு இருந்த நவீனும் அஷ்வத்தும்..
“  இந்த பேச்சை எப்படி எடுத்துக்குறது… இந்த மேடையில் பேசுறிங்களே அப்படியா…?”
பாவம் அகில ரூபன் அரசியல் வாழ்க்கையில் பேசும் பேச்சையும், அவன் தன் மனைவியிடம் பேசும் உண்மையான பேச்சையும் இணைத்து பேசி அவனை ஒரு வழியாக்கி கொண்டு இருந்தனர்..
“ ஸ்ரீம்மா என் அரசியல் பேச்சு வேறு.. என் வாழ்க்கை பேச்சு வேறு.. இவனுங்க பேசுவதை நீ நம்பாதே..நம்மை பார்த்து இவனுங்க பொறாமை  படுறாங்க..”  என்று சொல்லிக் கொண்டே அப்போது தான் கற்பம்  என்று உறுதி செய்த தன் மனைவியின் மணி வயிற்றின் மீது கை வைத்தான்..
இதை எல்லாம் புவனேஷ்வரியும், வெற்றி மாறனும் ஒரு புன் சிரிப்போடு பார்த்துக் கொண்டு இருந்தனர்… 
******************************************************************************************************
இதோடு இருபதாவது அத்தியாயத்தில் வரும் மூன்று மாதம் கழித்து வரும் எழுத்துக்களை இணைத்துக் கொள்ளுங்கள் வாசகர்களே..
                நிறைவு….
 

Advertisement